ATM Tamil Romantic Novels

காதல் தேவதா 7

அத்தியாயம் 7

 

வள்ளி பையுடன் வீட்டின் உள்ளே நுழைய அவளை பார்த்த அவளின் பெரியம்மா “என்ன இது கொடு” என்று அவள் கையில் இருந்த பையை பிடுங்கி பார்த்தார். 

 

அதில் மூன்று செட் ரெடிமேட் தாவணி பாவடை அதற்க்கு ஏற்றார் போன்று ரவிக்கை இருக்க “என்ன டி இது யாரு கொடுத்தா” என்று அவளிடம் கேட்க உடனே வள்ளி திருதிருவென முழிக்க ஆரம்பித்தாள். 

 

“அடியேய் உன் கிட்ட தான் கேட்க்குறேன் யார் கொடுத்தா” என்று மறுபடியும் கேட்க 

“அது… அது…பண்ணையார் அம்மா தான் கொடுத்தாங்க திருவிழாவுக்கு போட்டுக்க சொல்லி” என்றாள் பயத்துடனே. 

 

“ஓஹோ அதை முன்னாடியே சொல்ல வேண்டியது தான எதுக்கு இப்படி பேய் முழி முழிக்குற போ” என்று அவள் கையில் அந்த பையை கொடுத்தார். 

 

மறுநாளில் இருந்து திருவிழா வேலைகள் அனைத்தும் கோலாகலமாக ஆரம்பமானது ஊரில் உள்ள தெருக்களின் மூலைகள் எங்கும் ரேடியோ செட் பல்புகள் கட்டி சாமி ஊர்வலம் வருவதற்க்கு தெருவை ஒழுங்குப்படுத்தி என ஏற்பாடுகள் அனைத்தும் பலமாக இருந்தது. 

 

ஊரில் ஒவ்வொரு தெருவில் உள்ள மக்கள் அவர்களின் முறைப்படி அம்மனுக்கு அலங்காரம் பூஜை அதற்க்கான செலவுகள் அனைத்தையும் பார்த்து கொண்டனர். 

 

அன்று மஞ்சள் நீர் ஊரில் உள்ள முறை பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடவர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி விளையாடிக் கொண்டு இருந்தனர். 

 

தெருவில் இருந்த அனைவரும் சிதறி ஓடிக்கொண்டு இருந்தனர்

ஆராதனா தன் தம்பி வினய்யுடன் ஊர் சுற்ற வழக்கம் போல் கிளம்பி தன் அறையில் இருந்து நீல நிற ஜீன்ஸ் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து வெளியில் வந்தாள். 

 

அவளை பார்த்த சந்தோசம் “ஆரு இன்னைக்கு வெளியே போகாத எவனாவது உன் மேல மஞ்சள் தண்ணீயை ஊத்திட போறனுக” என்றார். 

 

“பாட்டி என் மேல மஞ்சள் தண்ணீ ஊத்துற அளவுக்கு இங்கே யாருக்கும் தைரியம் இல்லை நான் சொக்கநாதன் தாத்தா பேத்தி” என்றாள். 

 

அவள் பேச்சை கேட்ட வினய் வாயில் கை வைத்து சிரிக்க ஆரம்பித்தான்

“டேய் என்ன டா சிரிக்குற” என்றாள் தன் இடுப்பில் கை வைத்து கொண்டே “உண்மையை நினைச்சேன் சிரிச்சேன்” என்க

“டேய் மக்கு வினய் நான் எப்படி வெளியே போறனோ அப்படியே வீட்டுக்கு திரும்ப வர முடியும் வேணும்னா பந்தயம் வச்சிக்கிலாமா” என்று கேட்டாள். 

 

“சரி டி 500 ரூபா பந்தயம் நீ போய்ட்டு அப்படியே வந்தா நான் கொடுக்குறேன்” என்றான் வினய் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே 

“ஓகே நான் போறேன் பாட்டி பாய்” என்றாள் ஆராதனா. 

 

“ஆரு சொன்னா கேளு வேண்டாம்” என்று அவர் எவ்வளவு கூறியும் கேட்காமல் அவள் வெளியே சென்றாள். 

 

ஆராதனா தன் முழங்கை சட்டையை மடித்து விட்டு கொண்டே கெத்தாக தெருவில் நடந்து செல்ல அவளை பார்த்த இரண்டு சிறுவர்கள் அவள் மீது தண்ணீர் ஊற்ற ஓடி வர அவள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள் வேகமாக தலைத்தெறிக்க ஓடியவள் எதிரே வந்த தர்மனின் மீது வேகமாக மோதிவிட்டாள். 

 

ஆராதனா மோதிய வேகத்தில் கீழே விழ போக தர்மன் அவளின் இடையில் கைக்கொடுத்து பிடித்து கொண்டான். 

 

ஆராதனா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டே நிற்க தர்மன் பதட்டத்துடன் “என்னாச்சு புள்ளை ஏன் இப்படி ஓடி வர” என்று கேட்டான். 

 

அவளோ பயத்துடன் தன் பின்னே ஓடி வந்த சிறுவர்கள் இருவரை கைக் காட்டினாள் தர்மன் யார் என்று எட்டி பார்த்தவன் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு முறைத்தவன் “டேய் போங்க டா” என்று மிரட்ட

“தர்மா அண்ணா அண்ணியா சரி தான் ம்ம்..” என்று கூறிக் கொண்டே அங்கேயே இருவரையும் வேடிக்கை பார்த்து கொண்டே நின்றிருக்க 

“போங்க டா” என்று தர்மன் மீண்டும் மிரட்ட அந்த சிறுவர்கள் அங்கிருந்து ஓடினர். 

 

ஆராதனாவை தன்னிடமிருந்து விடுவித்த தர்மன் “இந்தா புள்ளை பத்திரமா வீடு போய் சேரு இங்கெல்லாம் நிற்காத” என்று கூறினான் 

“நான் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் 

போறனே என் தம்பியும் நானும் பெட் கட்டியிருக்கோம்” என்றாள் உதட்டை சுழித்து கொண்டே. 

 

தர்மன் அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல போக 

ஆராதனா அவனின் கையை பிடித்து கொண்டாள் “பிளீஸ் என் மேலே யாராவது தண்ணீ ஊத்திட போறாங்க என்னை வீட்ல மட்டும் கொஞ்சம் விட்டுறிங்களா பிளீஸ் உங்க கூட இருந்தா நான் ரொம்ப சேஃப்பா பீல் பண்ணுவேன்” என்றாள். 

 

தர்மன் யோசித்து கொண்டே நிற்க ஆராதானா “பிளீஸ்” என்றாள் கண்ணை சுருக்கி கொண்டே

“சரி வா” என்று அவளை தன்னுடன் அழைத்து சென்றான். 

 

தெருவில் இருந்தவர்கள் அவர்கள் இருவரும் ஜோடியாக வருவதை வித்தியாசமாக பார்த்தனர் 

தர்மனுக்கு பயந்து கொண்டே அவள் அருகில் யாரும் நெருங்கவில்லை. 

 

ஆராதனாவுக்கு ஒரே சந்தோசம் போட்டியில் தான் தன் ஜெயிக்க போகிறோம் என்று சிரித்த முகமாக நடந்து வந்தாள். 

 

ஆராதனாவை அவள் வீட்டின் வாசலில் விட்ட தர்மன் அங்கிருந்து கிளம்ப போக “தேங்க்ஸ் பீம் பாய்” என்று கூறிவிட்டு அங்கிருந்து உள்ளே ஓடினாள். 

 

சொக்கநாதன் இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே இருந்தவர் ஆராதனா உள்ளே நுழைய “ஆரு நில்லு எங்கே போய்ட்டு வர” என்று கேட்டார். 

 

“சும்மா அவுட்டிங் தாத்தா” என்றாள்

“ஆரு அவன் கூட பேசுற வேலையெல்லாம் வச்சிக்காத” என்றார் உர் என்று முகத்தை வைத்து கொண்டே “யார் கூட தாத்தா” 

“அதான் அந்த தர்மன் கூட அவனே ஒரு காட்டுப்பய” என்றார். 

 

“ஏன் தாத்தா” என்றாள் அவள் துடுக்காக “தாத்தா சொன்னா கேளு எல்லாம் உன் நல்லதுக்காக தான் சொல்றேன்” என்று கூறிவிட்டு சென்றார். 

 

ஆராதனா யோசனையுடனே உள்ளே சென்றாள். 

 

சக்திவேல் ஏதோ வேலை விஷயமாக வெளியே சென்று வந்தவன் இரவு தான் வீடு வந்து சேர்ந்தான் தன் வீட்டின் பின் வாசலில் இருந்த குளியலறையில் இருந்து குளித்துவிட்டு வெளியில் வந்து கொண்டு இருந்தான். 

 

தலைக்கு குளித்துவிட்டு ஈர தலையை துண்டால் துடைத்து கொண்டே வெள்ளை நிற கையில்லா பனியன் அணிந்து நடந்து வந்து கொண்டிருந்தான். 

 

அவன் எதிரே அழுக்கு பாத்திரங்களை எடுத்து கொண்டு வள்ளி நடந்து வந்து கொண்டிருந்தாள் நேற்று அவன் வாங்கி தந்த அடர் நீல நிற தாவணியை தான் அணிந்து இருந்தாள். 

 

பாவடையையும் முந்தானையையும் இடையில் தூக்கி சொருகி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். 

 

வள்ளியை பார்த்த சக்திவேலின் பார்வை அவளின் தாவணி விலகி தெரிந்த இடைக்கு சென்றது. 

 

புதிதாக கட்டிய தாவணி வேறு அவளுக்கு அடங்காமல் அவளின் முன்னெழில்களை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டி கொண்டு இருக்க சக்திவேலுக்கு கோபம் வந்துவிட்டது. 

 

வள்ளி அவனை பார்த்து கொண்டே பயத்துடன் வந்தவள் அழுக்கு பாத்திரங்களை பாத்திரம் விளக்கும் இடத்தில் வைத்து விட்டு அங்கிருந்து ஓட போக அவளின் கையை பிடித்து கொண்டான் சக்திவேல். 

 

அவர்களின் வீட்டின் பின்புறம் குளியலைறை கழிவறை இரண்டும் இருக்க முழுதாக தென்னை மரங்கள் நிறைய செடிகள் வேறு இருந்ததால் ஓரளவு இருட்டாக தான் இருந்தது. 

 

சக்திவேல் அவளை ஒரு மரத்தின் பின்னை இழுத்து சென்றவன் 

“ஏன் டி எந்த உடுப்பு போட்டாலும் 

ஒழுங்கா போட மாட்டியா எப்போ எவனை மயக்கலாம்ன்னு தான் காட்டிக்கிட்டு இருப்பியா” என்று கோபத்துடன் கூற வள்ளி ஒன்றும் புரியாமல் பேய் முழி முழித்து வைக்க. 

 

“அப்படியே ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரியே பார்ப்பா” என்று சக்திவேல் கூறியவன் அவளின் மேலே இருந்த தாவணியை தன் கையால் இழுத்து அவளின் முன்னெழில்களை முழுதாக மறைத்து இழுத்துவிட்டான். 

 

அவளின் இடையில் கை வைத்து “என்ன டி இது” என்று கேட்டு கொண்டே அவளின் இடையை அழுத்தி பிடிக்க

அவனின் சில்லென்ற கை அவளின் இடையில் பட்டவுடன் முதல் முறையாக அவளுள் ஏதோ செய்தது

அவனுடைய நெருக்கத்தில் அவன் மீது இருந்து வந்த குளியல் சோப்பின் நறுமணம் அவளின் நாசியை அடைந்தது முத்தமிடும் தூரத்தில் தான் அவன் நின்றிருந்தான். 

 

இன்னும் அழுத்தி பிடித்து கொண்டே “என்ன டி இது” என்று மீண்டும் கோபத்துடன் கேட்டவன் அவளின் தாவணியை கீழே இழுத்துவிட்டான் “ஒழுங்கா தாவணி கட்டி பழகு இல்லை தோலை உருச்சிடுவேன்” என்று அவளை முறைத்து கொண்டே கூறியவன் அங்கிருந்து சென்றான். 

 

வள்ளி ஏதோ பிடித்து வைத்த பிள்ளையாரை போன்று பயத்துடன் அங்கேயே நின்றிருந்தாள் அவன் சில்லிட்ட கை அவள் உடலில் பட்டவுடன் அவளுள் ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு மாற்றம் என்னவென்று அவளுக்கே தெரியவில்லை. 

 

தன் அறைக்கு வந்த சக்திவேல் “இப்படி தான் கண்டதை காட்டி அன்னைக்கு மயக்குனா போல சரியான ஆள் மயக்கி” என்று திட்டிவிட்டு உடை மாற்ற ஆரம்பித்தான். 

 

மறுநாள் நாகலிங்கம் சொக்கநாதன் வீட்டின் வாசலில் தன் சொந்தபந்தங்கள் புடை சூழ தாம்பூல தட்டுடன் வந்து நின்றான். 

 

“என்னங்க வீட்ல யாரு சொக்கநாதன் ஐயா” என்று குரல் கொடுக்க அவன் குரல் கேட்டு முதலில் சந்தோசம் தான் வெளியில் வந்தார் அவனை பார்த்த சந்தோசத்திற்க்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் வீட்டிற்க்கு வந்தவர்களை அவமதிக்க கூடாது என்று நற்பண்பிற்க்காக 

“வாங்க வா பா நாகலிங்கம்” என்று அழைக்க அனைவரும் உள்ளே வந்தனர். 

 

வீட்டின் நடுவில் வந்து அனைவரும் அமர நாகலிங்கம் சட்டமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். 

 

ஆராதனா அவளின் பெற்றோர் என வீட்டில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டு ஹாலிற்க்கு வந்தனர். 

 

ஆராதனா பெற்றோரை பார்த்து நாகலிங்கம் “வணக்கம் அக்கா மாமா” என்று கையெடுத்து கும்பிட அவர்களும் பதிலுக்கு என்றும் புரியாமல் கையெடுத்து கும்பிட்டனர். 

 

“என்னங்க இங்கே வாங்க” என்று சொக்கநாதனை சந்தோசம் குரல் கொடுத்து அழைத்தார் அவரும் அறையில் இருந்து வெளியில் வர

“வாங்க வணக்கம் பெரியப்பா” என்றான் நாகலிங்கம். 

 

“வணக்கம் நாகலிங்கம் என்ன எல்லாரும் வந்திருக்கிங்க” என்று அவர் கேட்க

“எல்லாம் நல்ல விசயமா தான் வந்துருக்கோம் மாமா” என்றார் நாகலிங்கத்தின் தாய் முத்தம்மாள். 

 

சொக்கநாதன் ஒன்றும் புரியாமல் அனைவரையும் பார்த்தவர்

“என்ன விஷயம் முத்தம்மா” என்று கேட்டார். 

 

“அது ஒன்னும் இல்லை மாமா உன் பேத்தியை நாகலிங்கத்துக்கு பொண்ணு கேட்டு வந்துருக்கோம்” என்றார் சிரித்து கொண்டே முத்தம்மாள். 

 

அவர் கூறியதை கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “காதல் தேவதா 7”

  1. Super sema super super super super super super super super super super next episode fasta podunga pls ❤❤❤❤❤💜💜💜💜💜💛💛💛💛💛💚💚💚💚💚

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top