ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 25,26

25

 

 

அன்று மாலை.. ஆராதனா ஒருபுறம் அமைதியாக யோசனையோடு அமர்ந்திருக்க ஆரனும் அன்று வேலைக்கு போகாமல் அனைத்தையும் வீட்டிலிருந்து லேப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தான். 

 

 

பிரஷ்ஷாக குளியல் போட்டு மிதமான அலங்காரத்தோடு வந்த மயூரி அண்ணன் தங்கை இருவரையும் பார்த்துவிட்டு தன் போல ஒரு பாடலை ஹம் செய்துகொண்டே கிச்சனுக்கு செல்வதும் ஏதோ செய்வதும் பின்பு ஹாலில் இங்கேயும் அங்கேயும் உலாத்திக்கொண்டே இருந்தாள். வேலை செய்வது போல பாராமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன்.

 

 

காலையில் அவன் கடந்தகாலத்தை கூறி முடித்தவுடன் வெறித்தவாறு சற்று நேரம் அமர்ந்திருந்தவள் உள்ளே அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். இருவரும் ஒவ்வொரு அறையில் இருக்க மதிய சாப்பாட்டுக்கு தான் ஆரன் இருவரையும் அழைத்து சாப்பிட வைத்தான். சாப்பிட்டு விட்டு இரு பெண்களும் மீண்டும் அறைக்குள் அடைந்து கொண்டனர். இவர்களை விட்டுப் போக போக முடியாமல் வீட்டிலிருந்தே தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன். இருவருக்கும் நடந்த முடிந்த நிகழ்ச்சிகளை கிரகிக்க சிறிது நேரம் கொடுத்திருந்தான்.

 

 

ஆனால் மயூரியின் இந்த புத்துணர்ச்சியான முகம்..

புதுதாலி மின்னிய சங்கு கழுத்து….

புதுசாக இன்றைய சேலை என்று

புது மனைவியை அருகே சென்று ஆலாபனை செய்ய முடியாமல் எட்டி இருந்தே கண்களால் பருகிக் கொண்டிருந்தான் ஆரன். 

 

 

அவனின் பார்வை மாற்றத்தை புரிந்தாலும் உதட்டுக்குள் ரகசிய சிரிப்போடு தன் வேலையை செய்து கொண்டிருந்தாள் மயூரி. இருவருக்கும் ஆளுக்கு ஒரு காபியை கொடுத்துவிட்டு ஆராதனா அருகில் அமர்ந்து கொண்டாள்.

 

 

“ஆரா.. நான் அண்ணனை பார்க்க போறேன்! நீ வரியா?” என்று கேட்க குடித்துக்கொண்டிருந்த காபி ஆராதனாவுக்கு புரை ஏறியது. “பார்த்து.. பார்த்து.? மெதுவா!!” என்று அவள் தலையை தட்டினான் மயூயிக்கு முன் விரைந்து வந்த ஆரன்.

 

 

“வரியா? வரலையா?” என்றவள் திரும்ப கேட்க.. ஆரா அண்ணனின் முகத்தை பார்க்க.. அவனோ மீண்டும் லேப்டாப்புக்குள் தலையை புதைத்துக் கொண்டான் நெருப்புக்கோழி போல..

 

 

“இருக்கத்தானே செய்யும்.. நேத்து கேட்ட ஃப்ளாஷ்பேக்குடைய எஃபெக்ட்டு!! பரவால்ல.. நாமெல்லாம் அண்ணனுக்கு கட்டுப்பட்ட பாசமுள்ள தங்கச்சிங்க தான்..” என்று பெருமூச்சு விட்டவள் ஓரக்கண்ணால் ஆராதனாவை பார்த்தாள், அவள் முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று!! அவளோ கலங்கிய விழிகள் மறைத்தபடி அந்த காபியை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

 

“பாரு அண்ணின்னு மரியாதை கொஞ்சமாவது இருக்கா உனக்கு? பதில் கூட பேச மாட்டேங்குற.. ம்ம்ம்.. இருடி இரு.. உங்க அண்ண நாளைக்கு வேலைக்கு போகட்டும் அதுக்கு அப்புறம் இந்த அண்ணியோட கொடுமையை நீ பாக்க போற..” என்று சிலிர்த்துக் கொண்டு எழுந்தாள் மயூரி. 

 

 

‘நீ என்னை கொடுமை செய்யப் போகிறாயா?’ என்று அலட்சியமாக ஆராதனா பார்க்க..

 

“கண்டிப்பா பண்ணுவேன் நாத்தனாரே!! டிவில சீரியல் போட்டுவிட்டு காலையில் இருந்து நைட்டு வரைக்கும் உன்ன கதற கதற பார்க்க வைப்பேன்.. 

 

பர்கர் பீட்சானு வாங்கி கொடுத்து உன்னை ட்ரம் சைசுக்கு மாத்திடுவேன்..

 

இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்ன தெரியுமா?

நானே என் கையால கஷ்டப்பட்டு சமைச்சு உன்ன மூணு வேளையும் சாப்பிட வைப்பேன்.. 

 

நைட்டு தினமும் உன் பக்கத்துல படுத்து உன்னை தூங்கவிடாமல் பண்றது தான் டி.. ஆகச்சிறந்த கொடுமை!!” என்றதும் இப்பொழுது ஆரனுக்கு புரை ஏறியது.

 

இதுவரை அவள் கொடுமைகளை பட்டியலிட்ட போது விரிந்திருந்த ஆராவின் சிரிப்பு.. கடைசியாக மயூரி சொன்னதும் அதற்கு அண்ணனுக்கு புரை ஏறியதும் அடக்கமாட்டாமல் வெடித்து சிரித்தாள் ஆராதனா.

 

 

இருவரும் சிறிது நேரம் அவள் சிரிப்பை ஆசையோடு பார்த்தார்கள். கண்களில் கண்ணீர் வர சிரித்தவள் “ஓடிப் போ டி ராட்சசி.. அந்தக் கடைசியா சொன்ன ஆகச்சிறந்த கொடுமையை எனக்கு பண்றதை விட்டுட்டு எங்க அண்ணனுக்கு பண்ணு!!” என்று அவள் கூற..

 

 

“இது உங்க அண்ணனுக்கு கொடுமையா? ஆனாலும் இவ்வளவு சப்போட்டு ஆகாதடி உங்க அண்ணனுக்கு” என்று அவள் கன்னத்தில் குத்திய மயூரி “சரி சரி நீ உங்க அண்ணனை பத்திரமா பாத்துக்கோ.. நான் எங்க அண்ணனை பார்த்துட்டு வரேன்!!” என்று ஆரன் அவளை திரும்பிப் பார்ப்பான் என்று அவனையே பார்க்க..

 

‘நீ ஏதாவது செய்து கொள்!!’ என்றவாறு அவன் தன் வேலையில் மூழ்கி விட.. டங்கு டங்கு என்று நடையுடன் அவன் அருகே சென்றவள் அவன் கையிலிருந்த லேப்டாப்பை பிடுங்கி ஓரம் வைத்து “பொண்டாட்டி வெளியில போகணும்னு சொன்னா.. புருஷன் தான் டிரைவர் வேலை பார்க்கணும்! தெரியுமா?” என்றாள்.

 

 

“எனக்கு வேலை இருக்கு! நீயே வேணா ஓட்டிகிட்டு போ!!” என்றவன் கார் சாவியை அவளிடம் தூக்கி போட.. “யாருக்கு வேணும் உங்க டப்பா காரு.. நான் என் வெஸ்பாவை எடுத்துட்டு போறேன்!” என்றதும் அவன் ஆச்சரியமாக பார்க்க..

 

“பென்னி உபயம்” என்றவள் வெஸ்பா சாவியை விரலில் சுழற்றியபடி ஆரனை பார்த்து கண்ணடித்துவிட்டு தன் அண்ணன் நிமிலனைப் பார்க்க சென்றாள் மயூரி இந்திராக்ஷி.

 

 

மருத்துவமனையில் ஒட்டுமொத்த நிமிலனின் குடும்பமே அப்பொழுது அங்கே தான் இருந்தது. வத்சலா மகனின் கையை வருடியவாறு அழுது அழுது சோர்ந்து போயிருந்தார்.

 

 

மெய்யறிவு சிறிது நேரம் இவனைப் பார்த்து விட்டு மீண்டும் வேதவள்ளியை பார்க்க சென்றுவிட, நிரஞ்சன் நிமிலனின் கட்டிலில் ஓரமாக அமர்ந்து இருக்க, மோகனவள்ளி தான் விடாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

 

 

“போனவளே நெனச்சி எதுக்கு நீ இப்படி செஞ்சுகிட்ட நிமிலா? இப்படி நினைக்கிற அவ என்ன அவ்வளவு பெரிய ரதியா என்ன?” என்று கேட்டவருக்கு தெரியும் அவள் ரதியின் புதல்வி என்று!!

 

 

“இதுக்குத்தான் நான் அப்பவே தலபாட அடிச்சுகிட்டேன். பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்து இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்குமா?” என்று அவருக்கு “ம்மா.. சும்மா நச்சு நச்சுனு இதையே பேசாத மா.. எப்படி இருந்தாலும் மயூரி என்ன கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா.. எனக்குமே அப்படி ஒரு எண்ணம் இல்லவே இல்லை. நீ பாட்டுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதே!! இதோட ரஞ்சனி மாப்பிள்ளை இதை கேட்டா அவளுக்கு தான் கஷ்டம் புரியுதா? வார்த்தை அடக்கமா பேசு!! வளவளன்னு பேசிக்கிட்டு.. இப்போ எதுக்கு எல்லாரும் கூடி வந்திருக்கீங்க? அவனுக்கு ஒன்னும் இல்ல.. சரியாயிற்று தானே!! வீட்டை பார்க்க கிளம்புங்க!!” என்று சத்தம் போட்டான் நிரஞ்சன்.

 

 

அவனுக்கும் நேற்று நிமலனை அப்படி பார்த்தது மனம் துடித்து தான் போனது. அதன் பிறகு நிமிலனிடம் சண்டை போட “தற்கொலை எல்லாம் செய்யவில்லை டா.. கோவத்துல டீபாயை குத்தினேன். அது.. கையைக் கழிச்சிருச்சு” என்று நினைக்கிறேன் நிரஞ்சனை பார்க்காமலே கூறினான். ஆனால் அவன் நினைத்திருந்தால் மயங்கும் போது கூட யாரையாவது அழைத்து இருந்திருக்கலாம் போனின் மூலம் அதை செய்யாததே அவனின் மன நிலையை எடுத்துக் காட்டியது நிரஞ்சனுக்கு. அப்போது குருபரனும் அங்கே தான் இருந்தார்.

 

கண்களை இறுக்க மூடியிருக்க.. அவரின் கண்களுக்குள் வந்து ஆர்ப்பரித்தார் விஜயேந்திரனின் தங்கை ஜெயவதனா!!

 

அன்று அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்க.. இன்று தன் முன்னே தன் மகனின் இந்த தற்கொலை முயற்சி அவரின் மனதில் தைத்தது.

 

 

மற்ற வீட்டுப் பெண்ணின் மீது இறங்காத மனம்.. தன் சொந்த தங்கையை கணவனிடம் இருந்து பிரித்து வைத்தபோது அடங்காத வன்மம்.. இன்று தன் மகனுக்கு ஒன்று என்றதும் ஆட்டம் கண்டது!!

 

 

காலம் பூமராங்!!

முன்னே நீ செய்த பாவங்கள் அனைத்தும் இரட்டிப்பாய் உன் கண்முன்னே வந்து உன்னை கருவறுக்க செய்யும் என்பது குருபரன் விஷயத்தில் உண்மை!!

 

 

அவர் பாவம் செய்த இரு பெண்களின் உருவமாய் வந்து பிறந்தனர் மயூரியும் ஆராதனாவும்.

மயூரி எப்படி தன் அத்தை தேவரதியின் மறுபிம்பமாக இருந்தாளோ.. அதேபோலத்தான் ஆராதனாவும் அவளது அத்தை ஜெயவதனாவின் மறு பிம்பம்.

 

 

சிறுவயதிலேயே மயூரியின் அந்த இதழுக்கு அடியில் இருக்கும் மச்சத்தை பார்க்கும்போதே குருபரனுக்கு உள்ளுக்குள் ஒரு அச்சம். அதனால் மனைவியிடம் சொல்லி அதை அதிகம் தெரியாமல் பெண்ணுக்கு அலங்கரித்து விடுமாறு கூற.. அதையே மயூரி இந்நாள் வரையும் கடைபிடித்தாள். ஆரன் அதை கண்டுபிடிக்கும் போது அவளுக்கு அவ்வளவு ஆச்சரியம்!!

 

 

மச்சத்தை மறைக்க முடிந்த அவரால் அவர் செய்த பாவத்தின் மிச்சத்தை மறக்கமுடியவில்லை!! 

 

வளர்ந்து நின்றது இருவரின் உருவங்களாய்.. 

மகள் மருமகள் உறவாய்..

 

 

வீட்டில் உள்ளவர்களுக்கு தேவரதி என்ற ஒரு பெண் இருந்ததாகவே காட்டக் கூடாது ஏனென்றால் நாள பின்ன ஆராதனாவுக்கு அவள் அனாதை என்று தெரிந்தால் மனது கஷ்டப்படும் என்று ஏதேதோ கூறி ரதியின் படத்தை வீட்டை விட்டு நீக்கிவிட்டார் குருபரன். அதனால் பிள்ளைகள் யாருக்கும் அப்படி ஒருவரும் இருந்தார் என்பதே தெரியாமல் போனது. 

 

 

நிழற்படங்கள் இல்லாமல் போனால் என்ன? நிஜத்தில் உருவங்களாய் வலய வந்தனர், ரதியும் வதனாவும் அந்த வீட்டுக்குள் மயூரி ஆராதனாவின் தோற்றத்தில்..

 

 

எந்தப் பெண் மீது தான் ஆசைப்பட்டு திருமணம் முடிக்க முடியாமல் போனதோ அதே பெண்ணின் அச்சா இருக்கும் ஆராதனைவை தன் மகனுக்கு திருமணம் முடித்து அவன் சந்தோஷமாக வாழ்வதை பார்க்க ஆவலாய் காத்திருந்தார் குருபரன்.

 

அதேநேரம் மகளையும் தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஒருத்தருக்கு பெண்ணைக் கொடுத்து மற்றவரிடமிருந்து பெண்ணை எடுப்பேன் என்றார் அவர்.. குருபரன் திட்டத்தை அனைத்தையும் தகர்த்து இருந்தான் ஆரன்!!

 

 

தன் மன எண்ணங்களில் உழன்று கொண்டு கண் மூடி அமர்ந்திருந்தார் குருபரன். இப்போது மகன் சோர்ந்து கண்களை சுற்றி கருவளையம் இருக்க ஏதோ வியாதிக்காரனை போல இருக்கும் தோற்றத்தை காண சகிக்கவில்லை அவருக்கு.

 

 

அந்நேரத்தில் தான் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தாள் மயூரி இந்திராக்ஷி ஆரன்!!

 

 

வந்தவளை அனைவரும் ஆச்சரியமாக பார்க்க.. நேராக அண்ணனிடம் சென்றவள் அண்ணன் என்றும் பாராமல் ஓங்கி ஓர் அறை அறைந்தாள். “லூசா நீ? அவ கல்யாணம் வேண்டாம்னு ஏன் போனா எதுக்கு போனா எல்லாம் யோசிக்க மாட்டியா? உடனே சூசைட் அட்டெம்ப்ட் பண்ணுவியா? படிச்சவன் தானே நீ? யோசி!! என்ன ஏது நடந்ததுனு கேளு,.. அதை விட்டுட்டு இத்தாதண்டி உடம்ப வச்சுக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல படுத்திருக்க.. வெட்கமா இல்ல உனக்கு?” என்று அண்ணனை அவள் சாட அவளின் இந்த பரிமாணத்தில் கன்னத்தைத் கையில் பிடித்தவாறு தங்கையைப் பார்த்து இருந்தான் நிமிலன்.

 

 

“நீ ஏண்டி இங்க வந்த? நாங்கல்லாம் முக்கியமில்லை என்று எவனோ ஒரு அனாதை பய பின்னாடியே போன தானே.. இப்ப எதுக்கு இங்கே வந்த? போடி வெளியில..” என்று மோகனா அவள் மீது பாய..

 

 

“உஷ்!! சத்தம் போடக்கூடாது!! இது ஹாஸ்பிடல் தெரியும்தானே?” என்று கண்களை உருத்து அவரை அடக்கியவள், சுற்றியுள்ளவர்களையும் ஒரு பார்வை பார்த்து “நான் எதுக்கு வெளியில போகணும்? நான் என் அண்ணனை பார்க்க வந்திருக்கேன். அவன் என்னை போக சொல்லட்டும் இல்ல எங்க அம்மா சொல்லட்டும். நான் போறேன்.. வேற யாரும் சொல்லவும் இங்கே உரிமை கிடையாது” என்றாள் தந்தையை பார்த்துக்கொண்டே..

 

“ஏன் இல்லை? இது என் அண்ணன் பையன். எங்க உறவே வேணான்னு ஓடிப்போன ஒருத்தி எல்லாம் வந்து நாட்டாம பண்ண கூடாது. ஓட்ட நறுக்கி விடுவேன்” என்று மோகனாவும் விடாமல் பேச..

 

 

“நான் ஒன்னும் ஊர் பேர் தெரியாதவனை கல்யாணம் பண்ணிக்கலையே? அத்தை பையன் நல்லா கேளுங்க!! என் சொந்த அத்தை வேதரதி.. அவங்க பையன் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்ற அவளின் பேச்சில் குடும்பம் மொத்தமும் அதிர்ந்து அவளை பார்க்க.. நிமிலனுக்கும் நிரஞ்சனுக்கும் இது புதிய செய்தி அல்லவா? இருவரும் வியப்புடன் அவளை பார்த்தனர்.

 

 

மோகனா இதற்கு பதில் சொல்ல முடியாமல் கையை பிசைந்து கொண்டு அமர.. அதுவரை சோகமாக அமர்ந்திருந்த தெய்வானை அம்மாள் எழுந்து வந்து அவள் கையை பிடித்து “என் ரதி பையனா அவன்? என் பேரனா? நெஜமாதான் சொல்றியா? உனக்கு தெரியுமா?” என்று படபடத்தார்.

 

 

“ஏன் தெரியாம? அவர் யாருன்னு தெரியும்!! ஆராதனா யாருன்னு தெரியும்!! இங்கு இருக்கிற நீங்களும் யாருன்னு தெரியும்?” என்றாள் கடைசி வார்த்தை அலட்சியமாக..

 

“ஆரன்!! அவன் ரதி பையன் தானே? அவன் கண்ண பார்த்தே நான் நெனச்சேன்!” என்றவாறு தட்டுத்தடுமாறி உள்ளே வந்தார் வேதவள்ளி. அப்போதுதான் கண்விழித்தவரிடம் மெய்யறிவு நிமிலனை பற்றி கூற அண்ணன் மகனை காண ஓடி வந்துவிட்டார் தன் உடல் நிலையையும் கவலை கொள்ளாது.. 

 

 

அனைவரும் வேதவள்ளியே ஆச்சரியமாக பார்த்தனர். “ஆமா அப்பா இறந்த போது ரதி வந்து இருந்தா இல்லையா? அப்போ அவனை நான் பார்த்தேன். அவங்க அப்பாவை விட்டு யார்ட்டையும் வரல அவன்.. அவன் கண்களை பார்த்து எனக்கு அவ்வளவு ஒரு ஆச்சரியம்!! அதான் நேத்து கல்யாணத்துல பார்த்தவுடன் எனக்கு.. எனக்கு.. என்னால.. ரதி..” என்று அதற்கு மேல் பேச முடியாமல் தழுதழுத்தார்.

 

 

“எப்படி? எப்படி? இப்போ தான் உங்களுக்கு பாசம் பொங்கி வருதா? இத்தனை வருஷமா எங்க போனது அந்த பாசம்? ஏன் அப்படி ஒருத்தர் இருக்குறதை எல்லாம் ஞாபகம் வச்சு இருந்திங்களா இல்ல.. இல்ல. தானே!! இல்ல இறந்துபோன ரதி அத்த பத்தி தான் எங்களுக்கு எல்லாம் நீங்க சொல்லி இருந்தீங்களா? இப்ப என்ன பாசம் எல்லாம் வேஷம்!!” என்று பொங்கினாள்.

 

மெல்ல நடந்து வந்து மயூரியின் கைகளை பற்றிக் கொண்ட வேதவள்ளி “நான் செய்த ஒரே தப்பு என் அண்ணன் பேச்சைக்கேட்டு வீட்டோ இருக்க ஒத்துக் கொண்டது மட்டும்தான் மயூம்மா.. வேறு எதுவும் செய்யல.. கல்யாணமாகி கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா எங்களுக்கு குழந்தை கிடையாது. அதுக்கு மேல பிறக்கும்னு நம்பிக்கை இல்ல.. குழந்தை இல்லாத வலி.. பார்க்குறவங்க கேட்கும் போது உள்ள வலி.. முடியல அதை தாங்க.. அந்த நிலையில ரதி வாழ்க்கையில் என்ன நடந்தது எங்களுக்கு தெரியாது. ஆனா அவ புருஷன விட்டு இங்கே வந்து இருந்த போது நான் பேச எவ்வளவோ ட்ரை பண்ணினேன். அவ யாரையும் பக்கத்திலேயே அண்ட விடல.. எப்பொழுதும் எதுவோ யோசனையோடு இருப்பா.. 

 

 

நானும் அவளும் குணத்திலும் உருவத்திலும் வேறாக இருந்தாலும் எங்களுக்குள் நல்ல புரிதல் அன்பு இருக்கும். ஆனால் அவ காதலித்து அதிலிருந்து என்கிட்டே எதுவுமே சொல்லாமல் மறைச்சிட்டா.. வீட்டில் இருந்த அந்த ஆறு மாசம் கூட என்கிட்டயும் மத்தவங்க கிட்ட ஒரு வார்த்தை பேசமாட்டா.. சாப்பிடுவது கூட ஏதோ பேருக்கு சாப்பிட்டு அப்படியே சிந்தனையுடைய தான் இருப்பா.. ஆராதனா பிறக்கும்போதே கொஞ்சம் சத்து குறைவான பிள்ளைதான். கடவுளே இல்லை இல்லை என் ரதி எனக்கு கொடுத்த பிள்ளை.. தாய் பாசம் கண்ணை மறைக்க அவளை நாங்க எங்க பிள்ளையை வளர்க்க நினைச்சு தான் அண்ணன் சொன்ன வீட்டோடு மாப்பிள்ளை இருக்க சம்மதிச்சோம். அதேநேரம் ரதியை பத்தி யார்கிட்டயும் பேசாமல் தவிர்த்திட்டோம்.. அதைத்தவிர நாங்க வேறு ஏதும் செய்யவில்லை மயூ மா” என்று அவள் கலங்கி மருமகளிடம் கேட்டார்.

 

 

“நீங்கள் எப்படி அத்த வக்கீலுக்கு படிச்சீங்க?” என்ற கேள்வியில் திகைத்தனர் வீட்டில் உள்ள மற்றவர்கள்..

 

“பெரியம்மா நீங்க லாயரா?” என்று அதிர்ச்சியோடு நிரஞ்சன் கேட்க அதையே கண்களில் பிரதிபலித்தான் நிமிலன்.

 

ஆமாம் என்று தலை குனிந்தவர் “எனக்கு ஆராதனா உடல்நலம் தான் முக்கியம் என் வேலையை விட.. அதேநேரம் அவ்வளவு அதிகம் படித்து என் தங்கையை ஒரு கொடுமைக்காரன் கிட்ட இருந்து காப்பாதாத முடியல என்கிற ஒரு மனக்குமுறல்.. இதெல்லாம் சேர்ந்துதான் நான் பிராக்டீஸ் செய்யல.. நான் செய்யலைன்னா என்னடா அதற்கு பதில் தான் உன்னை லாயரா உருவாக்கி இருக்கிறேனே!!” என்று பெருமிதத்தோடு மகனின் கன்னம் வருடினார் வேதவள்ளி.

 

 

‘என்ன மனுஷன் இவர்? படித்தும் பண்பட்ட அறிவு இருந்தும் அதை சரியான நேரத்தில் உபயோகிக்காமல் பாசம் என்னும் கண்ணாடி அணிந்து கொண்டு இப்படி தண்டித்து விட்டனரே ஆரனையுப் மாமாவையும் என்று மனதுக்குள் குமுறினாள்‌ மயூரி.

 

 

அடுத்தகணம் வெடித்து சிதறினாள் “யாரு கொடுமைக்காரர்கள் என் மாமா வா? என் மாமா வா?” என்று குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் பார்த்தவள் கடைசியாக அவளது கண்கள் நிலைத்தது குருபரனிடம்..

 

 

“பின்ன யாரு அன்று அவன்.. இன்று அவன் பிள்ளை!!” என்று மோகனவள்ளி இகழ்ச்சியாக கூற..

 

 

“அவன் இவன் பேசினீங்க.. அத்தைனு கூட பாக்க மாட்டேன்..” என்று விரலை உயர்த்தி பத்திரம் காட்டியவள், “என்ன நடந்ததுனு தெரியாமல் உங்க இஷ்டத்துக்கு பேசக்கூடாது.. முதல் நடந்த உண்மை என்னன்னு தெரிஞ்சுக்குங்க” என்றவள், “அதோ இருக்காரே இந்த வீட்டோட தல வாரிசு.. பெரிய மனுஷன்..” என்று ஆரம்பித்து ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடித்தாள்.

 

“இப்ப சொல்லுங்க? யாரு யாருக்கு பாவம் செய்தது? யாரு யாரை பழி வாங்கியது? யாரு வன்மம் பாராட்டியது? ஒரு பெண் இல்ல இரண்டு பெண்களோடு வாழ்வே யாரு கெடுத்தா?” என்று கோபத்தில் கொந்தளித்தவள், “இனி இந்த வீட்டு பக்கம் நான் வரமாட்டேன்!!” என்று விடுவிடுவென்று வாசலை நோக்கி சென்றால் மயூரி கோபமாக.. வேகமாக..

 

 

 

மனதில் கோபம் தீரும் வரை அவளது வண்டியை உதை உதை என்று உதைத்தாள் மயூரி. அதுவோ அனைத்து உதையையும் பொறுமையாக வாங்கிக்கொண்டு நின்றது ஸ்டார்ட் ஆகாமல்..

 

 

“நீயும் என்ன படுத்தற இல்லை..” என்று அதனிடம் கோபம் காட்ட அவள் கையிலிருந்து ஸ்கூட்டியை மற்றொரு முரட்டு கை பிடுங்க, திரும்பி பார்க்க அங்கே “வண்டில சாவியை சொறுக்குனா மட்டும் பத்தாது.. ஆன் செய்யணும்னு மயூ பேபி” என்று கிண்டல் குரலில் கூறியவன், அதனை செய்து ஸ்டார்ட் செய்ய இப்போது வண்டி உறுமிக் கொண்டு நின்றது.. 

 

ஒரு அசட்டு சிரிப்புடன் அவனைப் பார்க்க “ஏறு!!” என்றவனை விழிவிரித்து அதிசயமாக பார்த்தாள்.  

 

“நீங்க வரிங்களா? அதுவும் ஸ்கூட்டில?” என்று கேட்க.. 

 

“ஏறுடி.. ரொம்ப பண்ணாம!!” என்றான் சிரித்தவாறு..

 

சிலுசிலுவென ஈர காற்று வீச..

சாரலென பொழியும் மழையில்.. நனைந்தபடி பைக்கை செலுத்தினான் ஆரன். அவன் முதுகில் தன் மார்பை அழுத்தியப்படி அணைத்து உட்கார்ந்திருந்தாள் மயூரி. இருவர் மீதும் மழைத் துளிகள் பன்னீரென தூவ.. அவள் முகம் நிமிர்த்தி அதனை உள் வாங்கி ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

”க்ளைமெட் நல்லா இருக்கு.. இல்லையா அத்தூ?” என பின்னால் இருந்து கேட்டாள்.

 

”அத்தூ வா? என்னது புதுசா இருக்கு” என்றான் அவள் அழைத்ததை ரசித்தபடி ஆனால் குரலில் காட்டாமல்..

 

“அத்தை பையன் அத்தான் இல்லையா.. நான் ஷார்ட்டா அத்தூனு கூப்பிடுறேன்.. நீங்க புல்லா நனையுறிங்க அத்தூ” என்றவள் முந்தானையை எடுத்து அவனுக்கும் அவளுக்கும் சேர்த்து பிடித்துக் கொள்ள..

 

”விடு மயூ.. நனைஞ்சா பரவால்ல.. முடிஞ்சவரை சீக்கிரமா போய்டலாம்!”

 

”நீங்க இதெல்லாம் ஓட்டியிருக்க மாட்டீங்க இல்லையா? பாவம் அத்தூ நீங்க.. ஆனாலும் சோ ஸ்வீட்!!” என்று கொஞ்சியவாறு சொன்னாள்.

 

“இனி இதையும் பழகிக்கணும் போல?” என்றான்.

 

மழை குளிருக்கு கொஞ்சம் கதகதப்பா இருந்தது இருவரின் நெருக்கமும் இருவருக்குள்ளும்..

 

“எப்படியும்.. நனைஞ்சுட்டுதான் வீட்டுக்கு போகப்போறோம் என் தலையிலிருந்து உன் புடவையை எடுத்திடு” என்றான்.

 

மழை அதற்குள் சடசடவென்று அதிகமாக பொழிய ஆரம்பிக்க.. “அப்பவே சொன்னேன் காரை எடுத்துட்டு போனு.. கேட்டியா நீ?” என்று அவளை கடித்தவாறு அருகில் இருக்கும் ஒரு மரத்துக்கு அடியில் வண்டியை நிறுத்தி அவளை இழுத்துக் கொண்டு அங்கே சென்றான்.

 

 

“மழை இப்படி வரும்னு தெரியுமா எனக்கு? ஆனாலும் செடியூல்டா இருக்க முடியாது அத்தூ.. அப்பப்போ இந்த மாதிரி சின்ன சின்ன சர்ப்ரைஸ் எல்லாம் அனுபவிக்கணும்!! ரொம்ப எல்லாம் ஆராயக் கூடாது!!” என்றாள் மழையில் மரத்திலிருந்து விழுந்த மழைத் தண்ணீரை கையால் தட்டி தட்டி விளையாண்டப்படி…

 

 

மழைத் தண்ணீர் அவள் முகமெங்கும் தெறிக்க.. 

உடலோடு ஒட்டிய புடவையின் அவள் அங்கங்களை அங்கங்கே அவனுக்கு காட்ட.. வளைந்து நெளிந்து சென்ற நெளிவுகளும் ஏற்ற இறக்கங்களும் குழைவுகளும் அவனுக்கு தாபத்தை ஏற்றி மோகன ராகம் பாட அழைத்தது அந்த இருள் கவ்விய வேளையில்..

 

 

உள்ளுக்குள் ஆசை இருந்த போதும் அந்தக் காரியத்தைச் செய்ய அவன் மனம் சற்றே யோசித்தது பொது வெளியை நினைத்து.. ஆனாலும் அவள் மீண்டும் மீண்டும் அந்த மழைநீரில் விளையாட, அவள் முகத்தில் தெளித்த நீரில் பன்னீரில் நனைந்த ரோஜாவென அவள் முகமும்.. அதில் கனிந்த ஈர இதழ்களும் அவனை அழைக்க தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளை இழுத்து அணைத்தவன் இதழ்களை கொய்திருந்தான்.

 

 

26

 

மயூரி சென்று விட்டாலும் இங்கே ஆரனுக்குப் பொறுக்கவில்லை அவளை தனியாக அனுப்பி வைத்தது. ஏற்கனவே குருபரனை பற்றி தெரிந்தது தானே அன்று தன் அன்னையை பிரித்தவன் ஆயிற்றே.. இன்று மயூரிக்கு ஏதேனும் அப்படி நடந்து விடுமோ? என்று மனம் சஞ்சலப்பட்டு கொண்டே இருந்தது அவனுக்கு.

 

 

ஆராதனாவும் நிமிலனைக் காண தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள். வெளியே சொல்லவில்லை என்றாலும் அவளின் மனம் குமுறல்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிய அண்ணனிடம் சொல்ல தயங்கி பயந்து அமர்ந்திருந்தவளை கண்டவனுக்கும் நெஞ்சம் பிசைந்தது.

 

 

என்னதான் குருபரனை பழிவாங்க என்று நிமிலனின் கல்யாணத்தை நிறுத்தி இருந்தாலும், அதில் பாதிக்கப்பட்டது தங்கையும் தானே!! ஆனால் இதையெல்லாம் முன்னமே பார்லரில் சந்தித்து அவளிடம் கூறிவிட்டே தான் ஆரன் செய்தான்.

இருந்தாலும்…

 

இந்தப் பெண்ணும்.. அவள் மனதும்..

விசித்திரமானது!!

ஒன்றுக்கொன்று முரணானது!!

 

தானேதான் பழிவாங்க துடிக்கும் ஆனால் அதில் காயம்பட்டவர்களை நினைத்து தானே வருந்தும்!!

 

துணிச்சலாக துணிகரமாக பல சாகசங்களை புரியும்.. ஆனால் அன்பு என்ற ஆயுதத்தின் முன் கோழையாய் சுருண்டு விழுந்து மடியும்!!

 

ஆக சக்திகளை பல பெற்றிடினும்

அடுப்பும் ஊதும் பாசத்திற்கு பயந்து!!

 

நிமிர்ந்து நின்று ஒரு பார்வை.. ஒரு கோப பார்வை.. பார்த்தாலே அகிலமே நடுங்கும். ஆனால் அந்த ஒற்றை பார்வை வெளிப்படுத்த தயங்கும்!!

 

இந்த குணங்கள் தான்.. மென்மையான வேதரதி ஆகட்டும்.. ஆளுமையான வேதவள்ளி ஆகட்டும்..

 சாதாரண ஜெயவதனா ஆகட்டும்..

இந்த குணங்கள் தான் அவங்களை முடங்கிப்போக செய்தது.

 

 

கணவன் மகன் மீது கொண்ட நேசத்தால் ரதியும்.. பெறாத மகள் மீது கொண்ட பாசத்தால் வேதவள்ளியும்.. அவசொல்லுக்கு பயந்த வதனாவும்.. தைரியமாக அந்த ஆணை நிமிர்ந்து ஒற்றைப் பார்வை பார்த்து அடக்கி இருந்தால் இன்று கதையே மாறிப் போயிருக்கும்.

 

விதி கூட குருபரனின்‌ சதியும் விளையாடியது அவர்களது வாழ்க்கையில்..

 

 

ஆனால் மீண்டும் குருபரன் அதேபோல இவ்விரு பெண்களின் வாழ்க்கையில் விளையாட ஆரன் அனுமதிக்க மாட்டான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், நிமிர்ந்து “ஆரா!!” என்று கையை விரித்து அழைக்க.. உதடு துடிக்க நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கண்ணீர் வழிய.. ஓடிவந்து அண்ணனை அணைத்துக் கொண்டாள் கதறலோடு..

 

அவள் அகத்தில் அடங்கிக் கிடந்த வேதனை துக்கம் பயம் பொங்கி வர மனது விட்டு அழுதாள்.

அவளை அணைத்து ஆறுதல் சொல்லி கண்ணீர் துடைத்து அவளுக்கு தண்ணீர் கொடுத்து அவளை சமாதானம் செய்தான்‌ ஆரன்.

 

அப்போதும் நிமலனை பார்க்க வேண்டுமென அவள் வாய் திறக்கவில்லை. 

 

“நிமிலனை பார்க்கப் போவோமா? என்று அவன் கேட்க விழிவிரித்து பார்த்தவளின் கண்களில் அத்துணை நேசம் நிமிலன் மீது.. அத்துணை பாசம் கேட்காமலேயே புரிந்து கொண்ட அண்ணன் மீது..

 

வேக வேகமாக அவள் தலையை ஆட்ட.. அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தவன் உள்ளே வர விருப்பமில்லை. “நீ மட்டும் போய் பார்த்துட்டு வா.. நான் இங்கே வெயிட் பண்றேன்” என்று ரூம் அருகில் அவர்கள் செல்லவும் அங்கே மயூரியின் கோபமான பேச்சைக் கேட்டு இருவரும் அப்படியே நிற்க.. தான் ஆட வேண்டிய அசுர ஆட்டத்தை அசுரியாய் அவள் ஆடியதை கண்ணில் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன்.

 

அதுவும் தன் தந்தைக்கு ஆதரவாக அவள் பேசிய பேச்சும்.. அவள் தந்தையே ஆனாலும் தவறு செய்தவனை அனைத்து பேர் முன்னிலையிலும் காட்டி கொடுத்தைக்கண்டு அப்படி ஒரு நிம்மதி அவனுக்கு. 

 

 

உருவத்தில் தன் அன்னையை போல இருந்தாலும் குணத்தில் அவரைப் போல எங்கே பாசத்திற்கு கட்டுண்டு விழுந்திடுவாளோ என்று நினைத்தவனை.. அப்படியல்ல என நிரூபித்தவளை பார்த்தவனுக்கு காதல் கரைபுரண்டு வந்தது.

 

 

ஆராதனாவை பார்க்க அவள் தன் கண்களால் நிமிலனின் உடல் நலத்தை அவதானித்தபடி இருந்தவள், வேதவள்ளியின் பேச்சை கேட்க கேட்க அவளுக்கு மனம் ரணமானது.

 

 

தனக்காக அவர் பார்த்து பார்த்து செய்ததை நினைக்க அழுகை பொங்க.. “அண்ணா வீட்டுக்கு போகலாம் இதுக்கு மேல என்னால இருக்க முடியாது.. அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்று அவனை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று அவள் நடக்க அவளை மட்டும் காரில் அனுப்பி வைத்தவன் அங்கே பார்க்கிங்கில் மயூரி வருகைக்காக காத்திருந்தான்.

 

 

கோபத்தில் முகம் சிவக்க எங்கே தடுக்கி விழுந்து விடுமோ என்று ஒரு கையால் கொசுவத்தை தூக்கி பிடித்தபடி வேகமாக வந்த மயூரியை பார்த்தவனுக்கு மையல் வந்தது.

அப்பவே அவளை முத்தமிட தோன்றிய எண்ணத்தை கட்டுப்படுத்திவன் இதோ மரத்தடியில் செயலாக்கி கொண்டிருந்தான்.

 

 

தையலின் கிறக்கமாகப் பார்வை மன்னவனின் தாபத்தை தூண்ட செய்ய… நாக்கை நீட்டி தன் உதடுகளில் அவளின் சுவையை தடவிச் சுவைத்தவன், நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். ஈரம் காயாத மோகன முகத்துடன் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

 

“ஏய் ராட்சசி.. என்னை ஏன்டி இப்படி கொல்லுற?” என்றான் அவளின் இதழ்களை இழுத்தவாறு..

 

 

“நானா கொல்லுறேன்? நீங்க தான் அத்தூ..” எனறு செல்லமாக சிணுங்கினாள்.

 

“மயூ பேபி.. நீதான் என்னை கொல்லுற, அதுவும் என்னை மீறி இப்படி பொது இடத்துலே நடக்க வைச்சிட்ட டி ராட்சசி” என்று சிணுங்கியவளின் இடையைச் சுற்றி வளைத்து இறுக்கினான்.

 

நெருக்கத்தில் நின்றவளின் கன்னங்களில், மூக்கில், உதட்டில் என்று அவன் எண்ணிலடங்கா முத்தங்களை வாரி வழங்க.. அவள் கண்களை மூடிக் கிறங்கினாள். 

 

சட்டென்று அவனை தள்ளியவள் “இதுக்கு மேல இங்க வேண்டாம்!!” என்று வெட்கத்தோடு அவன் முகம் பார்க்க நாணி தலையை குனிந்து கொள்ள.. சன்னமாக விசிலடித்தபடி 

தூரல் போட்டுக்கொண்டிருந்த மழையில் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

 

ஏற்கனவே ஆராதனா உறங்க சென்றிருக்க.. இவர்கள் வீட்டினுள் உள்ளே நுழையும் போதே, மிதமான இரவு விளக்கில் வீடு இருந்தது.

 

மயக்கும் புன்னகையோடு மயூரி முன்னே செல்ல.. அவளை விழுங்கும் பார்வையோடு பின்னே சென்றான் ஆரன். அறைக்குள் நுழைந்ததும் வாரி அணைக்க வந்தவனின் கைகளுக்கு சிக்காமல் குளியலறைக்குள் புகுந்து கலகலத்து சிரித்தாள் மயூரி.

 

குறுக்காக தலையாட்டி சிரித்தவனின் இதழ்களில் அப்பட்டமான வெட்க புன்னகை வழிந்தோட.. பெருகி வந்த மோகத்தையும்.. அடக்கமுடியாத தாபத்தையும் சிகையை கோதி அடக்கியவன் மற்றொரு அறையில் குளிக்க சென்றான்.

 

 

மயூரி கூந்தலை டவலால் உலர்த்திக்கொண்டே மெல்ல வெளியில் பார்க்க.. ஆரன் அங்கே அறையில் இல்லாததை நினைத்து பெருமூச்சு விட்டவள், வெண்ணிற பூந்துவாலைவோடு வெண்தந்த அங்கங்கள் அரைகுறையாக தெரிய குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.

 

வேறு அறையில் குளிக்க சென்றிருப்பானாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே.. வார்ட்ரோபில் தன் துணிகளை எடுக்க, அவள் கரத்திலிருந்து துணி பிடுங்கப்படுவதை கண்டு அதிர்ச்சியுடன் திரும்பியவளின் முன் முட்டி நின்றான் ஆரன் வெற்று மார்பை விடைத்தப்படி..

 

அவனின் சூடான மூச்சுக்காற்று அவள் தேகத்தில் பட்டு அவளை தகிக்க வைக்க.. உணர்ச்சி பிடியில் தத்தளித்தவள் இப்பொழுது உணர்ச்சிப் பிழம்பாக மாறி வெடிக்கத் தயாராக, தன் கீழிதழை மேற் பற்களால் கடித்து அவனைப் பார்க்க முடியாமல் தயங்கி முயங்கி நிற்க..

 

அவளது கன்னங்களை பற்றி கீழிதழை விடுவித்தான் அவள் பற்களில் இருந்து.. தன் இதழ்களை கொண்டு.. அந்தோ பாவம்!! அவள் மேற்பற்களில் இருந்து விடுதலை பெற்று கீழுதடோ அவனது முரட்டு இதழ்களுக்குள் சிக்கிக்கொண்டது.

காப்பாற்றப் போன அவளது மேலுதடும் பலியாகின அவனது பற்களுக்கு..

 

இதழ்களுக்குள்ளே இதழ்கள்..

இடைகளின் இறுகிய அணைத்தல்..

வன் மார்பில் பெண் மார்பு நசுங்கல்..

கைகளின் தடையற்ற ஊரல்..

என தாப பெருக்கில் இருவரும் பொங்க..

 

 

அவள் இடுப்பை இறுக்கி பிடித்தபடி அவளை தூக்கியவனை பார்த்தவவளின் முகம் சூடாகியிருந்தது. கண்களை மூடியபடி சயனத்திருந்தாள் அவன் கிடத்திய மெத்தையில்.. அவன் கன்னத்தில் தன் மிருதுவான கன்னத்தை தேய்த்தாள். குட்டி குட்டி

முத்தங்கள் இட்டாள்.

 

அதில் தூண்டப்பட்ட ஆரனோ அணங்கவளின் மெல்லிய கழுத்தை கவ்வி இழுத்து சுவைத்தான். அவள் கழுத்தில் இருந்து வீசிய சோப்புடன் கூடிய பெண்ணின் மணம் அவனை கிறங்க வைத்தது. 

 

அவன் விரல்கள் அவள் இடுப்பை இறுக்கி பிடித்து கசக்க.. அவளின் கை அவன் கையைப் பற்றி தடுக்க.. இடுப்பில் லேசாக அவன் கிள்ள..

 

“ஸ்ஸ்ஆ” என்று கிறக்கத்துடன் சிணுங்கினாள் பெண்.

“முரடா” என்று பட்டம் வழங்க, சிரிப்புடன் அவளின் மிருதுவான இடுப்பில் இருந்த கையை மெல்ல நகர்த்தி முன்னால் கொண்டு வந்து அவளின் நாபியில் விரலால் கோலம் போட.. மென்மையாக விரலை விட்டு சுழற்ற.. அவள் சுணங்கி சிலிர்த்து முனகினாள். விரல்கள் இங்கே விளையாட.. இதழ்களோ அவள் கழுத்தை விடுத்து மார்பின் மத்தியில் முத்தமிட்டன. அவள் மார்பில் பேருக்கு இருந்த பூந்துவாலையை தன் முகத்தால் தள்ளியவன், அமுத கலசங்களை கொள்ளையிட ஆரம்பித்தான் கள்ளனாக.‌.

 

மெல்ல மெல்ல அவனது கொள்ளையடித்தல் மெது மெதுவாக முன்னேறி உடலின் அங்கங்களை சுவைத்து ரசித்து கூடலுக்கு செல்ல..

மயூரியின் கரங்கள் ஆரனின் முதுகைத் தழுவி இறுக்கின. கிறங்கி மூடிய கண்களைத் திறந்து அவனைப் பாரத்தாள் மோகம் ஏறிய கண்களோடு.. அதனை தன் தாப பார்வையால் விழுங்கியவன் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆட்கொண்டான்.

 

 

முதல் கூடல் முடிந்து அவளது நெஞ்சத்தை மஞ்சமாக்கி துயில் கொண்டவனின் கேசத்தை கலைத்து நெற்றியில் முத்தமிட.. மெல்ல தலையை தூக்கி அவளை பார்த்தவன் கண்களில் அத்துணை காதல் வழிந்தது.

 

 

இதுவரை வாய் வார்த்தைகளால் சொல்லாத காதலை தன் உணர்வாலும் உறவாலும் காட்டிக்கொண்டிருந்தான் ஆரன். சொன்னால்தான் காதலா என்ன? என்று அவனைப் புரிந்து கொண்டவள் அவனிடத்தில் காதலை சொல்ல கேட்கவே இல்லை..

 

“நீ சொல்லவில்லை என்றால் போகிறது நானே சொல்கிறேன் ஆயிரம் முறை உனக்கும் சேர்த்து” என்று நினைத்தவள் “ஐ லவ் யூ அத்தூ” என்று கூற, அவளை கூர்ந்து பார்த்து “கேட்கல!!” என்றான். அவளும் சிறிது சத்தமாக “ஐ லவ் யூ!!” என்று கூற, கேட்கவில்லை என்றான் சிரிப்போடு.. இன்னும் சத்தமாக அறையே அதிரும்படி “ஐ லவ் யூ அத்தூ!!!” என்றவள் அலற.. அந்த அலறல் ஒலி சென்று இறங்கிய இடம் அவனது இதழ்கள்.

 

 

அந்த முத்தத்தின் முடிவில் மீண்டும் அவளை ஆட்கொண்டான் ஆரன்.

ஒவ்வொரு முறை கூடல் முடிவிலும் அவள் காதல் மிகுதியில் “ஐ லவ் யூ அத்தூ” என்று கூற.. கனிந்த இதழ்களை சுவைக்க ஆரம்பிப்பவன் அடுத்த கட்டம் கூடலை நோக்கி சென்றிருக்கும்.

 

 

இப்படியாக செல்ல.. விடியும் பொழுது மற்றொரு கூடலை முடித்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து “எங்கே இப்போது சொல்..” என்று கண்கள் மின்ன கேட்க.. அவள் வாயை இரு கைகளால் பொத்தி மாட்டேன் என்பது போல தலையசைத்தாள். அவள் இதழ் சொல்ல நினைத்ததை கண்கள் சொல்ல.. மெல்ல எக்கி கண்களில் அவன் முத்தமிட “அச்சோ போச்சு.. இனிமே ஐ லவ் யூ என்ற வார்த்தையை கண்ணால கூட உங்க கிட்ட சொல்ல மாட்டேன் ஆள விடுங்க அத்தூ” என்றவள் அவனை முன்னேற விடாமல் இழுத்து அணைத்து அடுத்த நிமிடம் உறங்கி விட்டாள்.

 

 

படுத்த நிமிடமே உறங்கிய தன்னவளை பார்த்தவன் சிரித்தபடி இந்நொடி அவள் கேட்க நினைத்த காதலை “ஐ லவ் யூ மயூ!!” என்று நுதலில் முத்தமிட்டு கூறினான்.

 

 

காலையில் அசந்து தூங்கியவன் முதுகில் ஏதோ சுகமான சுமை உணர சட்டென்று திரும்பாமல் கைதொட்டு பார்க்க அங்கே அவன் முதுகை பஞ்சனையாக்கி படுத்திருந்தாள் அவனின் சரிபாதி..

 

 

இவளை.. என்று சிரித்தபடி புரண்டு அவளின் மேல் படர்ந்திருந்தான்.

மூக்கோடு மூக்கை உரசி காதல் மொழிகள் பேச உதடுகளை இணைக்கும் சமயத்தில் மீண்டும் அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது.

 

 

ஆராதனாவின் குரல் அழுத்தமாக “அண்ணா.. அண்ணா..” என்று கூடவே அதில் பதற்றமும்..

 

 

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மயூரி கூட அந்த குரலில் திடுக்கிட்டு விழித்தவள், தன் மேலிருந்த ஆரனை தள்ளி விட்டு “அவளை நீங்க போய் பாருங்க” என்றவள் போர்வையோடு குளிலறைக்குள் நுழைந்தாள். இவனும் அவசரமாக உடை அணிந்து கதவை திறக்க நேற்று போல் இல்லாமல் இன்று பயங்கரமாக அழுது கொண்டிருந்தாள் ஆராதனா..

 

 

“என்னாச்சு ஆரா.. என்னாச்சு?” என்று கேட்க..

 

“அண்ணா.. அவரு.. அத்தான்” என்று அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் மீண்டும் அழுகையில் கரைய..

 

 

“ம்ப்ச்.. ஆராஆஆஆ இப்படி அழுதுட்டே இருந்தா எனக்கு என்ன புரியும்? சொல்ல போறியா இல்லையா?” என்று அவள் இரு தோள்களையும் அழுத்தமாக பிடித்து உலுக்கி அவன் கேட்க..

 

 

“அண்ணா.. அத்தான்..” என்று குளரியவள் ஹாலில் நின்று கொண்டிருந்த நிரஞ்சனை கையை காட்டினாள்.

 

 

அதுவரை ஆரனிடம் சகஜமாக பேசியவன், அவனுக்கு தன் குடும்பத்தால் நேர்ந்த கஷ்டத்திற்கு பிறகு முகம்கொடுத்து பார்க்கவே திணற.. “என்னாச்சு நிரஞ்சன்?” என்று அதட்டலாக கேட்டவனிடம் நேற்று மயூரி சென்று பிறகு நடந்ததை கூறினான்.

 

 

மயூரி சென்றபிறகு அங்கே ஊசி விழுந்தால்கூட கேட்கும் அளவு அவ்வளவு அமைதி “ஐயோ என் பொண்ண நானே கொன்னுடேனே..” என்று தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் தெய்வானை அம்மாள். அதன் பிறகு மற்றவர்கள் சுயநினைவுக்கு வர, அனைவரும் குருபரனை ஒரு அற்ப புழுவைப் போல அருவருப்பாய் பார்த்தார்கள்.

 

 

நிமிலன் ஆரனை இதுவரைக்கும் தொழில் எதிரியாகவும் தன் வாழ்க்கையை கொடுத்ததாகவும் மட்டுமே நினைத்து இருக்க.. நேற்று அவன் வார்த்தையில் இந்த குடும்பத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட இருப்பான் என்று நினைத்திருந்தான். ஆனால் தன் சொந்த அத்தை மகன் என்று அவன் எண்ணிப் பார்க்கவில்லை. கூடவே அவன் வாழ்வில் அன்னை இல்லாமல் தங்கையையும் பிரிந்து தனித்து வாழ்ந்ததற்கு காரணம் தன் தந்தையை என்று எண்ணும்போது அப்படி ஒரு சீற்றம் நிமிலனிடம்..

 

 

தன் கையில் ஓடிக்கொண்டிருந்த ட்ரிப்ஸை ஒரே இழு, இழுத்து அகற்றியவன் ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாது தூர தூக்கி போட்டவன் தந்தையின் முன்னே இரு கைகளையும் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றான்.

 

எல்லா அப்பாக்களுக்கும் தன் பிள்ளைகள் தன்னை ஹீரோ இமேஜில் பார்ப்பது தான் பிடிக்கும்!! தன் மகன் முன்னே குற்றவாளியாகவும் தப்பு செய்தவனாகவும் இருக்கப் பிரியப்படப் மாட்டார்கள். குருபரனுக்கும் இப்போது நிலைமை அப்படித்தான்.. மகன் முன் தலை குனிந்திருக்க பெரும் அவமானமாக இருந்தது. ஏற்கனவே மகள் வார்த்தையால் சாட்டையாய் அடித்து விட்டாள். இனி மகன் என்ன செய்வானோ? என்று மனம் பதைபதைக்க.. வார்த்தைகள் பஞ்சமாக.. கண்களை மட்டும் மேலே உயர்த்தி “நிமிலா..” என்றவரின் முன் கையை நீட்டி பேசாதே என்று தடுத்தவன்..

 

 

“ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான் இப்ப எனக்கு தெரியணும்? மயூரி சொன்னது எல்லாம் உண்மையா? பொய்யா?” என்று தந்தை வாயால் தெளிவுப்படுத்திக் கொள்ள நினைத்தான்.

 

 

பதில் சொல்ல முடியாமல் தலையை மட்டும் அவர் அசைக்க..

 

 

ச்சீ.. என்றவன், “என் அம்மா கூட ஒழுங்கா வாழ்ந்தியானு எனக்கு தெரியல!!” அவரை உதறிவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

 

தெய்வானை அம்மாள் அரற்றிக் கொண்டே இருந்தார். “பாவி நானாவது கேட்டு இருக்கணும். என் பொண்ணுக்கிட்ட‌.. என் பொண்ணு ஒதுங்கி ஒதுங்கிப் போனது மனசுல உள்ள அவ புருஷனால ஏற்பட்ட பாதிப்புனு நினைத்திருந்தேனே.. கடைசில நம்ம குடும்பத்தை அழிக்க ஒரு கோடாரிகாம்பை நம்ம வீட்டிலேயே வளர்த்தது தெரியாம போச்சே!!” என்று இரவெல்லாம் புலம்பி புலம்பி சோர்ந்து போனார்.

 

 

மோகனவள்ளிக்கு அண்ணனின் இந்த பரிமாணத்தில் அதிர்ச்சியே!! அவர் ஆசைப்பட்டது இந்த குடும்பத்தோடு குடும்பமாக இருக்க தானே ஒழிய அழிக்க அல்ல!! ஆராதனாவை கூட அந்த குடும்பத்து பையனுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்று எண்ணி இருந்தாரே ஒழிய.. வேறு யாருக்கோ அல்ல!! 

 

தங்கள் கூட வளர்ந்த சகோதரியை தன்னுடைய வன்மத்தால் சகோதரன் செய்தது ஏற்க முடியாமல் தவித்தனர் இரு சகோதரிகளும்…

 

 

“நாமாவது அவளிடம் பேசி இருக்கலாமே.. நாமாவது அவளிடம் என்னவென்று கேட்டு இருக்கலாமே..” என்று கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமாய் இறந்த போன சகோதரி நினைத்து பரிதவித்தனர் இருவரும். 

 

பேசி பேசி தங்கள் ஆற்றாமையை தீர்த்துக்கொள்ள ராகவனும் மெய்யறிவும் தான் இருவரையும் சமாதானப்படுத்த.‌.. அங்கே நிமிலனை நெருங்க முடியாமல் தவித்தான் நிரஞ்சன்.

 

 

யாரோ ஒருவன் என்னிடத்தில் வந்து தொல்லை கொண்டு இருக்கிறான் என்று நான் கோபத்தில் கொந்தளிக்க.. அவன் என் உறவாய் இருந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி பூமராங் போல எனக்கு திரும்பி விட்டது. இந்நிலையில் நான் செய்ய வேண்டும் என்று யோசித்தான். காலையில் தன் உடுப்புகளையும் சர்டிபிகேட் மட்டும் எடுத்துக்கொண்டு வெளிநாட்டில் வேலை தேடி போவதாக வந்து நின்றவனை பார்த்து மொத்த குடும்பமே ஆடி போனது.

 

 

வத்சலா மகனிடம் ஓடிவந்து “நீயும் என்னை விட்டு போயிடாத நிமிலா..” எவ்வளவு கெஞ்சியும் யாருக்கும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

 

 

“இவர் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்தி.. தங்கையை கணவனிடமிருந்து பிரித்து.. இரு பெண்களும் இழைத்த அநீதிக்கு ஆரன் திரும்பக் கொடுத்துவிட்டான். ஆனால் பெற்று பிள்ளையை பிரிந்த என் அத்தைக்கும் மாமாவுக்கும் நான் எதுவும் செய்ய வேண்டாமா? இனி காலம் முழுவதும் இவருக்கு பிள்ளைகள் இல்லாமல் அனாதையாய் கிடக்கட்டும்!! உறவுக்கும் அன்புக்கும் ஏங்கி தவிக்கட்டும்!! உண்மையான பாசத்துக்கும் நேசத்துக்கும் ஏங்கட்டும்!!” என்றான்.

 

“இவருக்கு பிள்ளையா பிறந்ததனால் அன்னைக்கு விஜயேந்திரர் மாமா அனுபவித்த அதே வலியை.. இன்று நான் அனுபவிக்கிறேன் என் ஆராவை பிரிந்து!!” என்று கண்ணீர் வழிய நின்ற நிமிலனை பார்த்த குடும்பத்தினருக்கு மனது வலித்தது.

 

 

குருபரனுக்கோ வெளியே சொல்ல முடியாத வலி. மகனின் அந்தக் கோலத்தைக் காண பிடிக்காதவர் “மன்னிச்சிடு நிமிலா..” என்று அவன் அருகே செல்ல.. அவர் கைகளை உதறியவன் வீட்டை விட்டு வேகமாக வெளியேறி விட்டான்.

 

 

“காலம் சென்ற மன்னிப்பு எதற்கும் உபயோகப்படாத குப்பை போல தான்.. மன்னிப்பு அது மனதார உணர்ந்து இருந்தீங்கன்னா கேட்க வேண்டியவங்க கிட்ட போய் கேளுங்க” என்று அவரை உதாசீனப்படுத்தி செல்ல.. தப்பு செய்த போது இருந்த திமிரும் நிமிர்வும் மிடுக்கும் இப்பொழுது காணாமல் போக.. 

மயங்கி விழுந்தவரின் கையும் காலும் வேறு வேறு பக்கம் இழுத்தது.

 

 

நிரஞ்சன் அனைத்தையும் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மயூரி குளித்துவிட்டு வந்திருக்க,..

 

 

“அண்ணா எங்கே போனான்?” என்று அவனிடம் கேட்க.. “தெரியல மயூ” என்று அழுகாத குறையாக நின்று கொண்டிருந்தான் நிரஞ்சன்.

 

 

இந்த குடும்பத்தை பழிவாங்க.. தன் தந்தைக்கு நேர்ந்ததற்கு அதே வலியை.. அதே ரணத்தை.. திருப்பிக் கொடுக்க தான் வந்திருந்தான். ஆனால் ஆராதனாவின் காதல் அவனே எதிர்பார்க்காதது நிமிலன் மீது.. அதேபோல்தான் மயூரி மீதான அவன் காதலும்..

 

 

“ஆரன்.. ஆரா..” என்று மெதுவான குளறலான அழைப்பில் இருவரும் திரும்பி பார்க்க.. அங்கே விஜயேந்திரன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். இருவரும் விரைந்து அவரிடம் செல்ல..

 

 

“நிமிலனை போய் கூட்டிட்டு வா ஆரன்.. வேண்டாம்.. நானும் உன் அம்மாவும் அனுபவித்த அதே வலியை என் மகளும் அனுபவிக்க வேண்டாம்.. அவ திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக பல காலம் வாழ வேண்டும்..”

 

சரி என்றவன் அதன்பின் நிரஞ்சனோடு ஆராதனா ஒரு காரிலும்.. மயூரி ஆரனோடு ஒரு காரிலும் விரைந்தனர். போகும்போதே கடைசியாக நிமிலனின் செல்போன் டவரை தனது ஆட்கள் மூலமாக கண்டுபிடிக்கச் சொல்லி எந்த ஏரியா என்று கண்டுபிடிக்க அது விமான நிலையத்தை காட்டியது..

 

 

ஆம் நிமிலன் விமான நிலையத்தில் தான் அமர்ந்திருந்தான் மனம் முழுவதும் தன் ஆராதனாவின் மீதான காதலை தேக்கி வைத்துக் கொண்டு..

 

 

ஆனால் தன்னை தேடி வந்த ஆரனை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

குற்றவுணர்வு கொள்ள மெல்ல நிமிர்ந்து ஆரனை பார்க்க..

 

“இந்த மாதிரி பார்க்குறதை முதல்ல நிறுத்து.. உண்மையா உங்க குடும்பம் வலியும் அவமானமும் அனுபவிக்கனும் நினைத்து தான் வந்தேன். ஆனால் அந்த குடும்பம் தான் எனக்கு ஒரு அழகான மனைவியையும்.. என் தங்கைக்கு நிறைவான ஒரு வாழ்க்கையும் தரப்போகுறது என்கிற போது, நான் ஏன் அந்த குடும்பத்தை மன்னிக்க கூடாது?? வாழ்வது ஒருமுறைதான் அந்த வாழ்வு நம் மனதுக்குப் பிடித்த இணையோடு நன்றாக வாழ்ந்து பார்ப்போமே!! அதற்காக உன் அப்பாவை மன்னிக்கிற அளவு எல்லாம் நான் மாமனிதன் கிடையாது.. என் வாழ்விலும் என் தங்கையின் வாழ்விலும் அவர் எந்த இடத்திலும் அதாவது தாய்மாமன் மாமனார் என்று உறவு முறையில் அவர் வரவே கூடாது.. வரவும் மாட்டார்!!” என்றான் கோபத்தோடு..

 

” உன் அப்பாவுக்கு தண்டனை கொடுக்கிற சரி.. ஏன் என் தங்கைக்கு தண்டனை கொடுக்கிற நிமிலா?” என்று கேட்டான்.

 

“ஆனாலும் எனக்கு மனசு உறுத்த தான் செய்யுது ஆரன்.. என்னால் பழைய ஞாபகங்களை விடுத்து அவளோடு வாழ முடியுமா தெரியல.. அதான் இங்க இருக்க எனக்கு முடியல.. ஆஸ்திரேலியா போறேன்” என்றான்.

 

 

“என்னது ஆஸ்திரேலியா வா??” என்று அதற்குள் வந்திருந்த ஆராதனா அதிர்ந்து கேட்க..

 

 

தலையசைத்தான் ஆமாம் என்று. அவன் விமானத்திற்கான அழைப்பு வர.. அனைவரையும் பார்த்து தலையசைத்தவன், தங்கையின் அருகே சென்று தோளோடு அவளை அணைத்து விடுவித்துவிட்டு விடுவிடுவென்று சென்றான்.

 

 

“ஜியாயா….” இது ஆரன்.

 

“வந்தேன்…!!”

 

“எனக்கு நிமிலன் திரும்ப வரனும்.. அட் எனி காஸ்ட்!!” என்றான் ஆரன் உறுமலோடு..

 

“சத்திய சோதனை.. கேரக்டர்ஸ் எல்லாம் கேங்ஸ்டர்ஸ் மாதிரி மிரட்டுறானுங்க..” மை புலம்பல்..

 

ஓடினேன்.. ஓடினேன்.. ஓடிப்போய் அந்த நெடியவனை பிடித்தேன் மூச்சு வாங்க..

 

“இங்க பாரு நிமிலா நீ ஆஸ்திரேலியா எல்லாம் போக வேணாம்..”

 

“ஏனோ..?!”

 

‘அங்கு ஒருத்தன் விரட்டுகிறானு சொல்லவா முடியும்? அவ்வ்!!’

 

“ஏற்கனவே ஆஸ்திரேலியாவுல ஒரு கேங்கை இறக்கி வைத்து இருக்கேன். அதான் நம்ம நந்தன் அண்ட் கோ.. கூடவே மருது அண்ட் கோ.‌.. இதுல நீயும் வேறையா.. என்னால மிடில..” 

 

 

“யார் வேணா? எங்க வேணா இருக்கட்டும்.. நான் ஆஸ்திரேலியா போவது உறுதி” இது நிமிலன்.

 

 

‘என்ன பேசினாலும் சரிவர மாட்டேங்கிறானே? கடைசியா நம்ம ஆயுதத்தை எடுத்து விட வேண்டியதுதான்’ 

“நீ ஆஸ்திரேலியா போனேனா உனக்கு ரோம் பார்ட் வைக்க மாட்டேன்.. சிங்கிளா சிங்கி அடிக்கனும்” 

 

 

என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் முன்னே இரண்டு அடி வைத்தான். பின் நின்று திரும்பி என்னை பார்த்து “நிஜமாகவே வைக்க மாட்டியா?” என்றான்

.

 

 

“மாட்டவே மாட்டேண்டா.. மங்கூஸ் மண்டையா..” என்றதும்,

 

 

“ஓடிப் போயிடு ஜியா!!” என்று கோபமாக உறுமியவன், “ஆராஆஆஆ” என்று கூவலோடு தன் காதலை நோக்கி ஓடினான் நிமிலன்.

 

“அப்பாடி.. நான் எஸ்கேப்!!”

 

 

“ஹலோ‌‌.. அப்ப அந்த ரோம்..”

 

“அடேய்களா.. வரும் டா.. ஃபைனல் எபியோட..”

 

விடு ஜூட்…

 

3 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 25,26”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top