ATM Tamil Romantic Novels

காதல் தேவதா 12,13

அத்தியாயம் 12

 

சந்தோசம் ஆராதனாவை ஏதோ வேண்டாத ஒரு உயிரினத்தை பார்ப்பதை போன்று பார்த்து கொண்டு இருந்தார். 

 

“பண்ணையாரே இது உங்க பேத்தி தான உங்க வீட்டு பிள்ளை தான அவளை கூடவா நீங்க நம்ப மாட்டிங்க அவள் எப்படி என் வீட்டுக்கு வந்தான்னு கூட எனக்கு தெரியாது சத்தியமா நாங்க எந்த தப்பும் பண்ணல அதுவும் இல்லாம அந்த புள்ளை வயசு என்ன என் வயசு என்ன எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுறிங்களே” என்று தர்மன் சொக்கநாதனிடம் கேட்டான். 

 

ஆனால் அவரோ அவனை ஒரு துளி அளவு கூட நம்பவில்லை அப்போது அந்த கூட்டத்தை விலக்கி கொண்டு சக்திவேல் அங்கே வந்தான் ஆராதனா அரைகுறை ஆடையுடன் அழுது கொண்டே நிற்பதை பார்த்தவனின் கண்கள் தர்மனின் புறம் திரும்பியது. 

 

தர்மன் வெறும் பனியன் மற்றும் வேட்டியுடன் நின்றிருக்க அவனை பார்த்த சக்திவேலுக்கு கோபம் வந்து விட அவனை அடிக்க கையை ஓங்கி கொண்டு செல்ல தர்மன் அவன் கையை பிடித்து தடுத்தான். 

 

அதில் கோபமடைந்த சக்திவேல்

“என் வீட்டு பிள்ளையை கெடுத்துட்டு எவ்வளவு தெனாவட்டா நிற்க்குற” என்று கேட்டு கொண்டே மறுகையால் தர்மனின் கன்னத்தில் ஓங்கி குத்தினான். 

 

தர்மன் பதிலுக்கு சக்திவேலை அடிக்க சொக்கநாதனின் அங்காளி பங்காளிகள் அனைவரும் ஒன்று கூடி தர்மனை அடிக்க போக தர்மன் 

அனைவரிடமும் ஒரே ஆளாக மல்லுக்கட்டி கொண்டு நின்று இருந்தான். 

 

ஆராதனா எல்லோரும் சேர்ந்து தர்மனை அடிக்க செல்வதை பார்த்தவளுக்கு மனம் பொறுக்காமல் “எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறிங்களா அவரு பாவம் அவரு மேல எந்த தப்பும் இல்லை” என்று அந்த வீடே அதிரும் படி கத்தினாள். 

 

அனைவரும் தர்மனை அடிப்பதை நிறுத்திவிட்டு அவளை வேடிக்கை பார்க்க சுற்றி இருந்த பெண்கள் கூட்டம் “ஆனாலும் ஒரு பொம்பளை பிள்ளைக்கு இவ்வளவு திமிரு ஆகாது டி சுத்தி இத்தனை ஆம்பளைங்க இருக்காக அவங்களுக்கு மத்தியில அரைகுறையா நின்னுக்கிட்டு எப்படி எதிர்த்து பேசுது பாரு டி” என்று கூறினர். 

 

அதைக் கேட்ட சொக்கநாதனுக்கு ஆராதனா மீது இன்னமும் கோபம் அதிகரிக்க அவள் அருகில் வந்து கன்னத்தில் ஒரு அறைவிட்டார் 

அவர் கையில் இருந்த மோதிரம் கிழித்து அவள் உதட்டின் ஓரம் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது அதை கூட கண்டுகொள்ளாமல்

“என்ன டி அவன் கூட படுத்த பாசமா

தே***** எவன் கூட வேணும்னாலும் ஊர் மே*** வருவ உன்னை பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா” என்று அவளை கெட்ட வார்த்தையில் திட்ட தர்மனுக்கு கோபம் வந்துவிட்டது. 

 

தர்மன் அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றவன் பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த தன் தாயின் தாலியை கையில் எடுத்தவன் அதை ஒரு முறை தன் கையில் வைத்து பார்த்தவன் ஒரு முடிவுடன் வெளியே வந்தான் 

அவனை அங்கிருந்த அனைவரும் அதிரச்சியுடன் பார்த்தனர். 

 

வேக நடையுடன் ஆராதனா அருகில் சென்று அவள் கழுத்தில் தாலியை கட்டினான் சக்திவேல் ஓடிவந்து அவன் கையை பிடித்து இழுக்க 

தர்மன் அவன் பலத்துக்கு ஆணி அடித்ததை போல் அதே இடத்தில் அசையாமல் நின்றவன் அவள் கழுத்தில் முழுதாக மூன்று முடிச்சிட்டு முடித்த பின் தான் 

தன் கையை கீழே இறக்கினான். 

 

ஆராதனா தர்மனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே நின்றிருக்க

அவள் தோள் மீது கைப்போட்டு 

“என் பொண்டாட்டி இவள் இது என் வீடு இங்கே நான் அவள் கூட படுப்பேன் இன்னும் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் எவனாவது இதுக்கு மேல இங்கே வந்து நின்னு என்கிட்ட கேள்வி கேட்டிங்க இல்லை அவளை ஒரு வார்த்தை தப்பா பேசுனிங்க வெட்டி வீசிட்டு போயிட்டே இருப்பேன் எல்லாரும் வெளியே போங்கய்யா வந்துடானுக நியாயம் பேச” என்றான் கோபத்துடன். 

 

“என்ன டி பொசுக்குன்னு தாலியை கட்டிப்புட்டான்” என்று கூட்டத்தில் இருந்த ஒருத்தி கேட்க “இவ்வளவு நாள் உள்ளே ரகசியமா இருந்துருக்கும் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சே என்ன பண்ண முடியும் அதேன்” என்றாள். 

 

இப்போது அவர்களுக்கு இடையேயான தொடர்பு உண்மை என்று ஊருக்கே தெரிந்துவிட்டது. 

 

சக்திவேல் என்ன கூறுவது என்று தெரியாமல் வாயடைத்துப் போய் நின்றிருந்தான். 

 

“எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க இனிமே அவள் என் பேத்தியும் இல்லை என் பொண்ணுக்கு மகளும் இல்லை எனக்கு ஒரே ஒரு பேரன் மட்டும் தான் வேலா வா போலாம்” என்று அழைத்தார். 

 

அனைவரும் அங்கிருந்து செல்ல போக கடைசியாக தேவி மட்டும் அங்கே நின்றிருந்தவர் “உன்னை எப்படியெல்லாம் வளர்த்தோம் இப்படி கெட்டு சீரழிஞ்சி போய் நிற்க்குறியே பாவி” என்று அழுது புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றார். 

 

ஆராதனா செய்வதறியாமல் தலைகுனிந்து அழுது கொண்டே அங்கேயே நின்றிருந்தாள். 

 

தர்மனின் வீட்டில் இருந்து அனைவரும் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தனர் அவர்களை பார்த்த நாகலிங்கம் என்ன நடந்தது என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தான். 

 

அவர்கள் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க ‘அவள் எப்படி உயிரோட வந்தா’ என்று அதிர்ச்சியடைந்தவன் அதை எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக நின்றவன் சக்திவேலின் வாடிய முகத்தை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சந்தோசம் தாளவில்லை அவனை சீண்டி பார்க்க வேண்டும் என்று தோன்ற 

தன் பக்கத்தில் இருந்த பசுபதியிடம் பேச்சு கொடுப்பதை போல் பேச ஆரம்பித்தான். 

 

“அட வெட்கம் கெட்டவனுங்களா இப்படி ஒரு பெண்ணை பெத்து வச்சிட்டு தான் அன்னைக்கு என் கிட்ட அந்த பேச்சு பேசுனானுங்களா

நல்ல வேளை நான் தப்பிச்சிட்டன் போல டா” என்றான் நாகலிங்கம். 

 

“அட ஆமா அண்ணே நீ தங்கம் அது தகரம் அண்ணே” என்றான் பசுபதி. 

 

சக்திவேலின் உடல் கோபத்தில் இறுகி போனது அவனை அடிக்க போக செக்கநாதன் அவன் கையை பிடித்து கொண்டவர் எதுவும் வேண்டாம் என்று தலையசைத்தார். 

 

அதன் பின் எதுவும் பேசாமல் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்

சொக்கநாதனின் வீடே ஏதோ எழவு வீட்டை போல் இருந்தது அனைவரும் வந்து துக்கம் விசாரித்து விட்டு சென்றனர். 

 

சக்திவேல் தன் அறையில் தலையில் கைக் கொடுத்து கொண்டே படுத்திருந்தான் அப்போது வள்ளி அந்த அறையின் உள்ளே வந்தவள்

“ஐயா காபி” என்று எடுத்து வர

“நான் உன் கிட்ட இப்போ காபி கேட்டனா டி வெளியே போ டி” என்று அவளை திட்டி துரத்திவிட்டான். 

 

அவளோ அவன் கோபத்தை பார்த்து பயத்துடன் காபியை எடுத்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள். 

 

சக்திவேலின் மனதில் ஒரு வகையில் இந்த திருமணம் நின்றது சந்தோசமாக தான் இருந்தது இனி தன்னை யாரும் தொல்லை செய்ய மாட்டார்கள் என்று

இருந்தாலும் ஆராதனாவை நினைத்து தான் வருத்தமாக இருந்தது. 

 

“பாவி இப்படி அசிங்கப்படுத்திட்டு போய்ட்டாளே என் மகனுக்கு கட்டி வைக்னும்ன்னு எவ்வளோ ஆசையோட இருந்தேன்” என்று புலம்பி கொண்டு இருந்தார் சந்தோசம். 

 

ஆராதானாவின் தந்தை ஒரு படி மேலே போய் தேவியை அடிக்க ஆரம்பித்துவிட்டார் “ஒரு பொம்பளை பிள்ளையை ஒழுங்கா வளர்க்க துப்பு இல்லை” என்று அவரை அடிக்க சக்திவேல் சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து ஓடி வந்தவன் அவரை தடுத்தான்

“மாமா அவள் அப்படி பண்ணினதுக்கு அக்கா என்ன பண்ணுவாங்க” என்று கோபத்துடன் கேட்க “மாப்பிள்ளை நாங்க பெங்களூர் கிளம்புறோம்” என்றார். 

 

“என்ன மாமா” என்றான் சக்திவேல் அதிர்ச்சியுடன்

“போதும் மாப்பிள்ளை இந்த ஊருக்கு வந்து அசிங்கப்பட்டது எனக்கு இருக்க ஒரு பையனையாவது உருப்படியா வளர்க்கனும்ன்னு நினைக்கிறேன் கிளம்புங்க போலாம்” என்க

தேவியும் வினய்யும் அழுது கொண்டே தங்கள் உடமைகளை எடுத்து வந்தனர். 

 

மூவரும் கிளம்பி நிற்க சொக்கநாதன்-சந்தோசம் இருவரில் ஒருவர் கூட அவர்களை அங்கே இருக்கும் படி கேட்கவில்லை 

“மாப்பிள்ளை இனிமே திருவிழாவுக்கு வாங்கன்னு எங்களை கூப்பிடாத போதும் நாங்க அசிங்கப்பட்டது” என்று அவர்களை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார். 

 

சக்திவேல் செய்வதறியாமல் கவலையுடன் நின்றிருந்தான். 

 

தர்மனின் இல்லம்… 

 

தர்மன் இடிந்து அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டான் ஆராதனா அழுது கொண்டே நின்றிருந்தாள். 

 

ஆராதனா தைரியமான துணிச்சலான பெண் தான் ஆனால் அவளின் தாய் தந்தையே அவளை நம்பாத போது பாவம் அவள் மனமுடைந்து போனாள். 

 

தர்மனுக்கு அவளிடம் என்ன பேசுவது என்ன கேட்பது என்று கூட தெரியவில்லை இத்தனை வருடத்தில் ஒரு பெண்ணை கூட நிமிர்ந்து பார்க்காதவன் மீது திடீரென இப்படி ஒரு பழியை சுமத்தினால் அவனும் என்ன செய்வான். 

 

அவன் தன் தலையில் கை வைத்து கொண்டு நேற்று என்ன நடந்தது என்று யோசிக்க ஆரம்பித்தான்

வேலை முடித்து பம்பு செட்டிற்க்கு சென்றது அங்கே ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது மட்டும் நினைவில் வந்தது. 

 

அவன் உள்ளே சென்று பார்க்கும் போது அவனை தலையில் வேகமாக யாரோ அடித்தது கூட நினைவுக்கு வந்தது

உடனே எழுந்து நின்றவன் 

ஆராதனா அருகில் வந்தான் “இந்தா புள்ளை அந்த பம்பு செட்டில் நேத்து நைட் கேட்ட அழுகுரல் உன்னோடது தான” என்று கேட்டான் தர்மன். 

 

ஆராதனா அழுது கொண்டே ஆமாம் என்று தலையை ஆட்டினாள் “யாரு உன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினா சொல்லு புள்ளை அங்கே என்ன நடந்தது” என்று கேட்டவன் அவளின் தோளில் கை வைத்து உலுக்கினான். 

 

“தெரியலை யாரோ ரெண்டு பேர் அங்கே என்னை கடத்திட்டு போனாங்க அதுல ஒருத்தன் என் கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான் அப்போ தான் நீங்க அங்கே வந்திங்க அதுக்கு பிறகு நான் மயங்கிட்டேன் அப்புறம் என்ன நடந்தது நான் எப்படி இங்கே வந்தேன் எனக்கு எதுவும் நியாபகம் இல்லை” என்றாள் அழுது கொண்டே. 

 

“நல்லா ரோசனை பண்ணி பாரு புள்ளை அவன் முகத்தை பார்த்தியா நீ” என்று கேட்டான் தர்மன். 

 

“அய்யோ எனக்கு எதுவும் நியாபகம் இல்லை பிளீஸ் என்னை விட்டிருங்க எனக்கு எதுவும் தெரியாது திரும்ப திரும்ப அதையே கேட்டு என்னை கொல்லாதிங்க” என்றாள் அழுகையுடனே தர்மனுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருக்க அதற்க்கு மேல் அவளிடம் எதுவும் அவன் கேட்கவில்லை. 

 

அவள் அதே அரைகுறை ஆடையுடன் இருப்பதை பார்த்தவனுக்கு மனம் கேட்கவில்லை உள்ளே சென்று பீரோவில் இருந்த தன் தாயின் புடவையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். 

 

“இந்தா புள்ளை இதை கட்டிக்க 

நான் உன் மானத்தை காப்பத்த தான் உன் கழுத்துல இந்த தாலியை கட்டுனேன் ஆனா கல்யாணம் ஒன்னும் விளையாட்டு காரியம் இல்லை” என்றான். 

 

ஆராதனா அவன் கூறியதற்க்கு எந்த பதிலும் கூறாமல் அந்த புடவையை தன் கையில் வைத்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். 

 

அத்தியாயம் 13

 

“இந்தா புள்ளை நான் சொல்றதை காதுல வாங்குறியா இல்லையா நீ” என்று தர்மன் அவளிடம் கேட்க ஆராதானா கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் அவளின் கலங்கிய கண்களை பார்த்தவனுக்கு அவளின் வலி ஏதோ புரிவதை போன்ற ஒரு உணர்வு அவள் இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது அவளிடம் எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தவன். 

 

“புள்ளை உன் பெயர் கூட எனக்கு சரியா நியாபகம் இல்லை உன் மானத்தை காப்பாத்த தான் உன் விருப்பத்தை கூட கேட்க்காம தாலி கட்டிட்டேன் 

என்னால ஒரு பொண்ணு அசிங்கப்பட்டு நிற்கறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியல 

என்னை மன்னிச்சிடு” என்றான். 

 

“நீங்க ஏன் என் கிட்ட மன்னிப்பு கேட்க்குறிங்க என் அம்மா அப்பாவே என்னை நம்பல நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் என் கழுத்துல நீங்க தாலி கட்டலன்னா அவங்க இன்னும் என்னவெல்லாம் என்னை அசிங்கப்படுத்தி பேசியிருப்பாங்கன்னு என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல” என்றாள் அழுது கொண்டே. 

 

“நம்ம ரெண்டு பேரையும் இப்படி ஒரு கோலத்துல பார்த்தா யாரு தான் தப்பா நினைக்க மாட்டாங்க போய் அந்த புடவையை கட்டிக்க” என்றான். 

 

ஆராதானா அழுத விழிகளுடன் “எனக்கு புடவை கட்ட தெரியாது” என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவளை பார்த்த தர்மன்

“இங்கனயே இரு இதோ இப்போ வரேன்” என்று தன் சட்டையை எடுத்து மாட்டி கொண்டு வெளியே சென்றான். 

 

அவன் வீட்டை சுற்றி வயல்வெளியாக இருந்ததால் அங்கே வயலில் வேலை செய்து கொண்டு இருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியை புடவை கட்ட அழைத்து வந்தான். 

 

அவரும் வீட்டின் உள்ளே வந்தவர் 

ஆராதானா அருகில் சென்று “வா தாயி நான் புடவை கட்டி விடுறேன்” என்று அவளை அறையின் உள்ளே அழைத்து சென்று புடவை கட்ட ஆரம்பித்தார். 

 

ஆராதானாவின் அழுத விழிகளை பார்த்த அந்த பெண்மணி “மனசு கலங்காத தாயி தர்மனை மாதிரி ஒரு புருசன் கிடைக்க நீ ஏழெழு ஜென்மத்துக்கும் புண்ணியம் பண்ணிருக்கனும் ஊர்ல யாருக்காவது ஒரு பிரச்சனைனா முதல் ஆள வந்து நிற்க்கும் இந்த தம்பி பெயர்ல மட்டும் இல்லை குணத்துலையும் தர்மன் தான் தங்கமான மனுசன் தாய் தகப்பன் இல்லாதது நீ தான் தாயா இருந்து அரவணைக்கனும்” என்று அவன் அருமை பெருமைகளை கூறிக்கொண்டு புடவை கட்டி முடித்தவர். 

 

அவளை வெளியே அழைத்து வந்தார்

தர்மன் அங்கே தான் நின்றிருந்தான்

அந்த பெண்மணியின் கையில் ஒரு நூறு ரூபாய் தாளை கொடுக்க போக 

“வேண்டாம் ராசா நீயே வச்சிக்க நீ எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்க” என்று கூறிவிட்டு பணத்தை கையில் வாங்காமல் அந்த பெண்மணி வெளியே சென்றார். 

 

அவர் சென்ற பின் தர்மன் மீண்டும் ஆராதானாவிடம் வந்தவன் “உன்னை கெடுக்க முயற்சி பண்ணினவனோட அடையாளம் ஏதாச்சும் நியாபகம் இருக்கா புள்ளை” என்று தர்மன் கேட்டான். 

 

“எனக்கு எதுவும் நியாபகம் இல்லை” என்றாள் மீண்டும் அழுது கொண்டே ஆராதானா அவள் எதையோ மறைக்கிறாள் என்பது மட்டும் தர்மனுக்கு விளங்கியது “சரி நீ போய் படுத்து தூங்கு நான் வெளியே போய்ட்டு வரேன்” என்று கிளம்ப போக

“பிளீஸ் இங்கேயே இருங்களேன் எனக்கு பயமா இருக்கு” என்க

“இதோ இப்போ வந்துடுவேன் நீ கதவை அடைச்சிட்டு தூங்கு இது என் வீடு என்னை மீறி இந்த வீட்டு வாசற்படியை கூட எவனாலையும் மிதிக்க முடியாது போ போய் தூங்கு வரேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். 

 

ஆராதானா எதற்காக தர்மனிடம் நாகலிங்கத்தை பற்றி கூற மறுக்கிறாள் என்பதை அவள் ஒருத்தி மட்டுமே அறிவாளி. 

 

சக்திவேலின் இல்லம்… 

 

அன்று வயலில் வேலை நடந்து கொண்டு இருந்ததால் அதை பார்ப்பதற்காக சக்திவேல் கிளம்பி வீட்டை விட்டு வெளியே வந்தான். 

 

அங்கே வளையல்க்காரன் ஒருவன் வந்து நிற்க அவனிடம் வள்ளி கண்ணாடி வளையல் வாங்கி கொண்டிருந்தாள். 

 

அந்த வளையல்க்காரன் பார்வை வள்ளியிடம் மையலுடன் படிந்து கொண்டிருந்தது அதை வள்ளி கவனிக்கவில்லை ஆனால் சக்திவேல் அவனை கவனித்து கொண்டு தான் இருந்தான் வேண்டுமென்றே இறுக்கமான கண்ணாடி வளையலை கொடுத்தான். 

 

வள்ளி தன் கையில் அந்த வளையலை போட முடியாமல் தவித்து கொண்டே இருக்க அந்த வளையல்க்காரன் “கொடு நான் போட்டு விடுறேன்” என்று வழிந்து கொண்டே அவளின் கையை பிடித்து தடவி கொண்டே அவளின் முகத்தை பார்த்து கொண்டே வளையலை போட ஆரம்பித்தான். 

 

இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த சக்திவேலுக்கு கோபம் அதிகரித்தது விறுவிறுவென அவர்கள் அருகில் நடந்து சென்றவன் கோபத்துடன் அந்த வளையல்க்காரன் கையை பிடித்து வளைத்தான் “யோவ் யாரு யா நீ எதுக்கு என் கையை பிடிக்குற வலிக்குது விடு யா” என்று அவன் கத்தி கொண்டே இருக்க

“நீ யாரு டா அவளுக்கு வளையல் போட்டு விட இனி எந்த பொண்ணுக்காவது வளையல் போட்டு விடுறதை பார்த்தேன் தோளை உருச்சிடுவேன்” என்று அவனை திட்டி கொண்டே அடித்து துரத்திவிட்டான். 

 

அங்கிருந்தவர்கள் அனைவரும் சக்திவேலை பார்க்க அவன் வள்ளியின் 

அருகில் வந்து சத்தமே இல்லாமல் “ஏய் தோப்பு வீட்டுக்கு வா டி” என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். 

 

வள்ளியும் பயந்து கொண்டே அங்கே சென்றாள் சக்திவேல் அவள் வந்த வழியில் இல்லாமல் வேறு வழியாக தோப்பு வீட்டுக்குள் வந்தான். 

 

வள்ளி அவனுக்காக பயத்துடன் காத்து கொண்டே இருந்தாள்

சக்திவேல் கோபத்துடன் உள்ளே வந்தவன் அவளின் கையை கெட்டியாக பிடித்து “ஏன் டி நீ என்ன பால்வாடி பாப்பா வா அவன் வழிஞ்சிக்கிட்டே வளையல் போடுறான் நீயும் இளிச்சிட்டு இருக்க” என்றான். 

 

“அது.. அது.. வளையல் இறுக்கமா இருந்துச்சு அதான் அவுக போட்டு விட்டாக” என்றாள் பயத்துடன் அந்த கண்ணாடி வளையலை கையில் வைத்துக் கொண்டே

“இங்கே பாரு டி உனக்கு வளையல் போட்டு விடுறது இன்னும் எதுவா இருந்தாலும் என் கிட்ட மட்டும் தான் கேட்கனும் வேற எவன் கிட்டையும் கேட்க கூடாது புரியுதா கொடு” என்று அவள் கையில் இருந்து கண்ணாடி வளையலை பிடுங்கினான். 

 

அவளின் கையை பிடித்து தானே வளையலை போட்டு விட ஆரம்பித்தான் அந்த வளையல் இறுக்கமாக இருக்க அவள் வலியில் முகம் சுழித்து கொண்டே கையை காட்டினாள். 

 

“ஆ வலிக்குது” என்று கத்தி விட 

“என்ன டி நான் போட்டா வலிக்குது அவன் போட்டா மட்டும் இனிக்குதோ” என்று கேட்டு கொண்டே வளையல் அனைத்தையும் போட்டு முடித்தான். 

 

இறுதியாக வள்ளியின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது அவளின் இடையில் கைக் கொடுத்து தன் உடலோடு இறுக்கியவன் “ரொம்ப வலிக்குதா டி” என்று சத்தமில்லாமல் அவளின் கையை பிடித்து தடவி கொண்டே கேட்டான். 

 

அவளோ “ஆமாம்” என்று சிறுபிள்ளை போன்று உதட்டை பிதுக்கி கொண்டே கூற அடுத்த நொடி அவளின் உதடுகள் சக்திவேலின் வசமானது 

அவளின் கீழ் உதட்டை கவ்வி மென்று விழுங்க ஆரம்பித்தான் தன் நாவை அவளின் இதழின் உள்ளே நுழைந்து அவளின் நாவோடு சண்டையிட்டு அவளின் உதடுகளை சத்தத்துடன் ரூசி பார்த்து அவளின் உமிழ்நீரை மென்று விழுங்கி ஆவேசத்துடன் முத்தமிட்டு அவளை திக்குமுக்காட வைத்தான். 

 

அவன் கைகள் அவளின் வெற்றிடையில் நுழைந்து அந்த கொத்து சதைகளை பிடித்து கசக்க ஆரம்பித்தது. 

 

சக்திவேல் தன் வேட்கையை அடக்க முடியாமல் திண்டாடி தவித்தவன் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் அவன் இதழ்கள் மெல்ல மெல்ல கீழே இறங்கி வர அந்த நேரம் தோப்பு வீட்டின் கதவை யாரோ வெளியில் இருந்து தட்டினர். 

 

அவன் இருந்த மயக்கத்தில் எதையும் காதில் கூட வாங்காமல் அவளுடன் மேலும் மேலும் இணங்க ஆரம்பித்தான். 

 

மீண்டும் கதவு வேகமாக தட்டப்பட அப்போது தான் சுயநினைவுக்கு வந்து பதட்டத்துடன் அவளிடமிருந்து விலகினான். 

 

வள்ளியின் கைப்பிடித்து இழுத்து சென்று அந்ந வீட்டின் படுக்கையறையில் விட்டவன் 

வெளியே சென்று கதவை திறந்தான். 

 

அவன் வீட்டு வேலைக்காரன் மாரி தான் நின்றிருந்தான் “என்ன மாரி” என்று கேட்க “ஐயா பெரியய்யா உங்களை வீட்டுக்கு வர சொன்னாரு” என்றான். 

 

“நீ போ மாரி நான் வரேன்” என்றான் சக்திவேல். 

 

மாரி அங்கிருந்து செல்லும் வரை அங்கேயே நின்றிருந்தவன் அவன் சென்ற பின் கதவைடத்துவிட்டு உள்ளே வந்தான். 

 

வள்ளி இருந்த அறையின் உள்ளே சென்றான் அவள் பயந்து போய் அங்கே நின்றிருக்க “ஏய் உனக்குலாம் அறிவேயில்லையா டி பொம்பளை புள்ளை தான நீ எதுக்கு டி என் முன்னாடி வந்து மயக்குற சரியான ஆள் மயக்கியா இருப்பா போல” என்று புலம்ப

“நான் எதுவும் பண்ணல நீங்க தான் 

என் உதட்டை கடிச்சு வச்சிங்க” என்றாள் அப்பாவியாக. 

 

“ஒன்னும் தெரியாத பாப்பா பத்து மணிக்கு போட்டாலாம் தாப்பாள் நடிக்காத டி போ டி வீட்டுக்கு இனி என் முன்னாடி வந்த தொலைச்சிருவேன்” என்றான். 

 

வள்ளியும் சரி என தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து பயந்து ஓடினாள். 

 

அவள் சும்மா இருந்தாலும் இவன் சும்மா இருக்க மாட்டான் போல… 

 

அதேநேரம் தர்மனின் வீட்டில் ஆராதானா நன்கு உறங்கி கொண்டிருந்தாள் தர்மன் இருவருக்கும் இரவு உணவை ஹோட்டலில் வாங்கி கொண்டு தன் புல்லட்டில் வந்து இறங்கினான். 

 

வீட்டின் உள்ளே வந்தவன் சாப்பாட்டை வைத்துவிட்டு ஆராதானா அருகில் வந்து அவளை எழுப்ப வர அவளோ ஏதோ கனவு கண்டிருப்பாள் போல “அம்மா” என்று அலறி அடித்து கொண்டு எழுந்தவள் 

கண்ணை திறந்து பார்த்தாள் அவள் அருகில் தர்மன் நிற்க கட்டிலில் இருந்து துள்ளி இறங்கியவள் அவனை இறுக அணைத்து கொண்டாள். 

 

“புள்ளை என்னாச்சு கெட்ட கனா ஏதாச்சும் கண்டியா” என்று கேட்டு கொண்டே இருக்க அவள் எந்த பதிலும் கூறாமல் நடுக்கத்துடனே அவனை இன்னும் இன்னும் இறுக அணைத்து கொண்டாள். 

 

அவள் உடல் பயத்தில் நடுங்குவதை பார்த்த தர்மன் அவளை அணைத்து அசுவாசப்படுத்த ஆரம்பித்தான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “காதல் தேவதா 12,13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top