அத்தியாயம் 5
“அப்போ நம்ம என்கேஜ்மெண்ட் ப்ரோக்ராம்? அது அவ்வளவு தானா?”
“அனிதா.. புரிஞ்சுக்கோ.. அவ கிடைக்காதப்பவே இந்த என்கேஜ்மெண்ட்டுக்கு நான் ஒத்துக்கல.. இப்போ என்னோட வொய்ஃப், அப்புறம் பொண்ணு.. ரெண்டு பேரும் திரும்பி வந்துட்டாங்க.. எனக்குன்னு குடும்பம் இருக்கு.. உனக்கும் இதே மாதிரி உனக்கு ஒரு நல்ல குடும்பம் அமையும்.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சுடு..”
“ஆதி.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..”
“இங்கப்பாரு அனிதா.. ஒரு ப்ரெண்டா.. இந்த வீட்டுல நீ எத்தனை நாள் வேணா தங்கிக்கலாம்.. பட், என்னோட மனைவியாகணும்னு மட்டும் நினைச்சுக்கூட பார்த்திராத.. இன்னைக்கும் என்னைக்கும் பாரதி தான் என்னோட மனைவி.. அப்புறம் உன்னோட லக்கேஜ் எல்லாத்தையும், மாடில வைக்க சொல்லிருக்கேன்.. சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. ஈவினிங் வந்து உன்னைய பார்க்குறேன்” என்றவன் அவளை உணவு மேஜையில் விட்டுவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றான்.
“க்கும்.. இப்ப தான் இவ வரணுமா? ஒரு வாரம் கழிச்சு வந்திருந்தா.. எங்களோட என்கேஜ்மெண்டே முடிஞ்சுருக்கும்..”
“அதே தான் நானும் சொல்றேன்.. வர்றவ உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன உடனே வந்துருக்கலாம்.. இப்படி இடையில வந்து, உங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர விடாம பண்ணிட்டா..” என்ற வடிவழகியின் தோளில் சாய்ந்து கொண்டாள் அனிதா.
“ஆண்டி.. எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.. ஆதியை நான் அஞ்சு வருஷமா லவ் பண்றேன்.. இந்த பாரதி மட்டும் குறுக்க வராம இருந்திருந்தா.. இந்நேரம் எங்களுக்கு கல்யாணமாகி இருக்கும்.. அந்த குழந்தை.. அந்த குழந்தை.. எங்க ரெண்டு பேருக்கும் பிறந்திருக்கும்.. எல்லாமே இவளால கெட்டுப் போச்சு..”
“ப்ச்.. கவலைப்படாத அனிதா.. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்.. அப்படியெல்லாம் உன்னைய விட்டுடுவோமா? நீ எதுக்கும் கவலைப்படாத.. நான் இங்க இருக்குற வரைக்கும்.. அவளை ஆதித்யாவோட சேர்ந்து வாழவிட மாட்டேன்.. என் அக்காக்கிட்ட விட்டதை இவக்கிட்ட விட மாட்டேன்..”
“ஆண்டி?”
“ஒன்னுமில்ல.. இது பழைய கதை.. நீ.. உன்.. ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு.. நான் அவ எதுக்கு இங்க திரும்பி வந்துருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்..”
“ஓகே.. ஆண்டி..” என்று தன் அறையை நோக்கிச் சென்றவளை குரோதத்துடன் பார்த்தார் வடிவழகி.
“என் தம்பியை வளைச்சுப் போட்டு, இந்த சொத்து எல்லாத்துக்கும் ஓனராக பார்க்குறாங்க.. நடக்காது.. நீங்க நினைக்குறது எதுவும் நடக்கவே நடக்காது.. நடக்கவும் விடமாட்டேன்..” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, வள்ளியம்மையை காணச் சென்றார்.
“ப்ச்.. இவ்வளவு இறக்கம் வேணாம்.. இன்னும் கொஞ்சம் தூக்கிக் காட்டுப்பா.. என் பேத்தி ஊர்ல இருந்து வந்துட்டா.. அவளுக்கு ஊஞ்சல் ஆடுறதுனா ரொம்ப பிடிக்கும்.. சாயங்காலம் அவ தோட்டத்துக்கு வர்றப்போ.. ஊஞ்சல் ரெடியாகியிருக்கணும்.. அந்த சின்னக்குட்டிக்கு தனியா அங்க ஊஞ்சல் போடு.. சீக்கிரம்.. அப்புறம் செண்பகம் கிட்ட சொல்லி, காய்கறி சூப் வைக்க சொல்லு.. அவ ரொம்ப மெலிவாயிருக்கா.. அவப் பிறந்ததுல இருந்து, இப்ப வரைக்கும் பசிக்குதுன்னு வாய் விட்டு கேட்கவே மாட்டா..”
“அம்மா.. அம்மா ஆஆஆஆ..”
“எதுக்குடி கத்துற? இங்க தானே இருக்கேன்.. எங்கேயோ சந்திர மண்டலத்துக்கு போயிட்ட மாதிரி.. இந்த கத்து.. கத்துற?”
“அப்புறம் கத்தாம என்ன பண்ண சொல்றீங்க? அவளை வீட்டுகுள்ள விட்டது மட்டுமில்லாம.. இப்போ அவளுக்காக ஊஞ்சல் வேற கட்டி வைக்குறீங்க? அனிதா ஆதியை கல்யாணம் பண்ணிக்க அஞ்சு வருஷமா போராடுறா.. நீங்களும் அவ ஆதியை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டீங்க.. இப்ப.. இவளை பார்த்ததும் அவளை வேண்டாம்னு சொல்லிட்டீங்க.. இது உங்ககளுக்கே நியாயமா இருக்கா?”
“யாருக்காகவும் என் பேத்தியோட வாழ்க்கையை நான் அழிக்க மாட்டேன்.. நான்.. என் பொண்ணுக்கு சத்தியம் பண்ணி கொடுத்துருக்கேன்.. என் பேத்தியை விட எனக்கு வேற யாரும் முக்கியமில்ல..”
“அப்போ.. என் பொண்ணு? அவளும் உங்களுக்கு ஒரு பேத்தி தானே? அவளை ஏன் ஆதியோட கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொன்னீங்க.. இவ என்ன உசத்தி? என் பொண்ணு என்ன மட்டம்? சொல்லுங்கம்மா.. எதுக்கு உங்களுக்கு இப்படியொரு ஓரவஞ்சனை?”
“உனக்கென்ன பைத்தியமா? அவங்க ரெண்டு பேரும் என்னோட பேத்திங்க.. அவங்களை எப்படி நான் பிரிச்சு பார்ப்பேன்? உன் அக்கா.. உனக்காக என்ன பண்ணான்னு மறந்துட்டியா? அவ பொண்ணு.. உன்னோட பொண்ணு மாதிரி தானே? ஏன் இப்படி எல்லாம் யோசிக்குற?”
“என்னதான் அவ என் அக்கா பொண்ணா இருந்தாலும்.. அவ என் பொண்ணாக முடியாது.. உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாக முடியாது.. அவ என்னைக்கும் என்னோட பொண்ணாக முடியாது..”
“ஸ்ஸ்ஸ்ஸுஸுஸு.. இப்ப எதுக்கு கத்துற? நம்மளை சுத்தி வேலைப்பார்க்குறவங்க இருக்காங்க.. நீ முதல்ல வீட்டுக்குள்ள வந்து பேசு.. இங்க வைச்சு கத்தாத..”
“போதும்.. நான் இங்க வந்து இருந்ததும் போதும்.. நீங்க உங்க பேத்தியை தலைல தூக்கி வைச்சு கொஞ்சுறதை பார்த்ததும் போதும்.. நான் வீட்டுக்கே கிளம்புறேன்..”
“ப்ச்.. கோபப்படாத வடிவு.. சரி வா.. உனக்கு என் கையாலேயே ஏதாவது செஞ்சு தர்றேன்.. உனக்கு பசின்னு வந்தா, கோபமும் வந்துரும்.. வா..” என்ற வள்ளியம்மை, வடிவழகியின் கையைப் பிடித்து தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, அங்கே அவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்தான் மருத்துவரான டேவிட்.
“ஹாய்.. ஆண்டி.. எப்படியிருக்கீங்க?”
“ஃபைன் ஆண்டி.. ஆமா.. ஆதித்யா வீட்டுல இருக்கானா?”
“ஆமா.. மேல.. அவன் ரூம்ல தான் இருக்கான்..”
“ஓகே.. ஆண்டி.. நான் அவனை போய் பார்த்துட்டு வர்றேன்..”
“டேவிட்.. சாப்பிட வாப்பா..”
“இல்ல.. ஆண்டி.. நான் அவனை பார்த்துட்டு வந்து, சாப்பிட்டுக்குறேன்..” என்ற டேவிட் இரண்டிரண்டு படிகளாக தாவி, மாடியில் இருக்கும் ஆதித்யா கரிகாலனின் அறைக்குச் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சியில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“பாரதி.. கதவை திற.. எவ்வளவு நேரமா தட்டிட்டுருக்கேன்.. காது கேட்கலையா? கதவைத் திற.. இங்கப்பாரு.. கதவை உடைக்க அஞ்சு நிமிஷம் ஆகாது.. ஆனா, பாப்பா பயந்துருவான்னு தான் பார்க்குறேன்.. கதவைத் திற..” என்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தவனை பார்த்த டேவிட் அடக்க முடியாது சிரித்து சத்தமாக சிரித்து விட, திரும்பிப் பார்த்த ஆதித்யா கரிகாலன் முறைத்துப் பார்க்கலானான்.
“என்னடா சிரிப்பு? என்னைய பார்த்தா கிண்டலா இருக்கா?”
“பின்ன.. ஒரு மில்லினியர்.. பல மல்டி நேஷனல் கம்பெனியோட சிஇஓ.. பிஸ்னஸ் மேக்னெட்.. இரும்பு இதயம்னு பெயரெடுத்த.. தி க்ரேட் ஆதித்யா கரிகாலன்.. இப்படி அவனோட பொண்டாட்டிக்கிட்ட ரூம் கதவை திறக்கச் சொல்லி கெஞ்சிட்டுருக்கான்.. இதை பார்க்கும்போது.. அப்பப்பா.. இந்த கண்கொள்ளாக் காட்சியா இருக்கே!”
“வாயை மூடுடா.. வந்த வேலையைப் பாரு..” என்று டேவிட்டுக்கு பதிலளித்தவன்,
“பாரதி.. மயூரியைப் பார்க்க டாக்டர் வந்துருக்காரு.. ப்ளீஸ் இப்பவாவது கதவைத் திற..” என்றவன் கத்திய மறு நொடி, சொர்க்கவாசல் போல் கதவு திறக்கப்பட்டது.
“டாக்டர் வந்துருக்காரா?” என்றவாறு வெளியே எட்டிப்பார்த்தவளை கோபத்தோடு பார்த்திருந்தான் ஆதித்யா கரிகாலன்.
“டேவிட் வந்துருக்கான்.. பாப்பாவை செக்கப் பண்ணணும்..” என்றவன் இறுகிய முகத்துடன் கூற, கதவை விட்டு விலகி நின்றாள் பாரதி.
“பாப்பா தூங்குறா..”
“பரவாயில்ல.. நான் பார்த்துக்குறேன்..” என்ற டேவிட், மயூரியின் அருகில் சென்று, அவளை சோதனை செய்ய,
“ஓ.. மை காட்.. ஆதி.. குழந்தைக்கு காய்ச்சலடிக்குடி.. உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்..” என்ற டேவிட் மயூரியை தூக்க முயல,
“என்னது அவளுக்கு காய்ச்சலா? இப்ப வரைக்கும் செக் பண்ணேன்னே.. அப்படி ஒன்னும் தெரியலையே..” என்றவாறு ஓடி வந்தவளை கோபத்தில் முறைத்த ஆதித்யா கரிகாலன்,
“நீ என்னைக்குத் தான் கவனமா இருந்திருக்க? இதுல கதவை பூட்டிக்கிட்டு திறக்க மாட்டேன்னு சத்தியாக்கிரகம் பண்ண..” என்றவன் மயூரியை தனது கையில் ஏந்திக் கொள்ள,
“இல்ல.. அது.. நான்.. ப்ளீஸ் நானும் கூட வர்றேன்?” என்று அழுதவாறே அவர்களை பின் தொடர்ந்து வீட்டிற்கு வெளியே வந்தாள். காரின் பின் சீட்டில் மயூரியை படுக்க வைத்தவன், கண்ணில் கண்ணீருடன் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தவளை பார்த்தவன்,
“என்ன பார்க்குற? வண்டில ஏறு.. அதுக்கு தனியா சொல்லணுமா?” என்று சீறியவன், அவள் வண்டியில் ஏறி அமர்ந்து, மயூயியை தன் மடியில் வைத்துக் கொண்டதும், தானும் ஏறி காரினை ஓட்டத் தொடங்கினான்.
“உடனே ஐசியூ வார்ல சேர்க்கணும்..” என்ற டேவிட், அதற்கு மேல் நிலைமையை தன் கையில் எடுத்துக் கொள்ள, அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே அமர்ந்திருந்தனர் இருவரும். மயூரியை சோதித்து விட்டு வெளியே வந்த டேவிட்,
“ஆதி.. நான் உங்க ரெண்டு பேர்கூடவும் தனியா பேசணும்.. வாங்க..” என்று கூறிவிட்டு செல்ல, உடலெல்லாம் வேர்த்து, இதயம் அதன் அளவையும் மீறி துடிப்பது போல் துடிக்க, ஒரு எட்டு வைத்தவளின் கால்கள் தள்ளாட, அவளது கைகளை இறுக பிடித்துக் கொண்டன மற்றொரு கைவிரல்கள். அந்த கைப்பிடியில் இருந்த அழுத்தம், ஒருவிதமான ஆறுதலையும் தைரியத்தையும் தர, அவனோடு சேர்ந்து நடக்கலானாள் பாரதி.
“ப்ளீஸ்.. ரெண்டு பேரும் உட்காருங்க..”
“டேவிட்.. நீயும் எங்களை பயமுறுத்தாதே.. மயூரி இப்ப எப்படி இருக்கா?”
“நான் உங்களை பயமுறுத்தல.. மயூரி இப்ப இயர்லி ஸ்டேஜ்ல தான் இருக்கா.. இது அவ உடம்பு முழுசும் பரவாம இருக்க.. என்னால பார்த்துக்க முடியும்.. ஆனா, நீங்க எனக்கு உதவி பண்ணியாகணும்..”
“என்ன பண்ணணும்?” என்று இருவரும் ஒரு சேர ஒரே குரலில் கேட்க,
“சீக்கிரமே நீங்க ரெண்டு பேரும் இன்னொரு குழந்தை பெத்துக்கணும்.. இன்னொருத்தர் கிட்ட இருந்து பொருத்தும் செல் மேட்சாகலைன்னா.. அது இன்னமும் ஆபத்துல போய் முடியும்.. ஆனா, ஒரே ஜெனிடிக் பொருந்தும் செல்கள் சுலபமா பேசென்டோட உடல்ல புதிய ரத்தக்கணுக்களை இல்லேன்னா, பாதிக்கப்பட்ட செல்களை மாற்றிடும்.. சோ, இப்போ முடிவு உங்க கைல..” என்ற டேவிட்டை பார்த்த பாரதி, ஆதித்யாவை திரும்பி பார்க்க,
“இன்னும் என்ன பார்க்குற கிளம்பு என் கூட..” என்று எழுந்தவன், டேவிட்டை திரும்பி பார்த்து,
“மயூரியை நீ நல்லா பார்த்துக்கோ.. நாங்க இப்ப வந்துடுறோம்.. “ என்றவன் பாரதியை தரதரவென கார் பார்க்கிங் ஏரியாவிற்கு இழுத்துக் கொண்டு வந்தவன், தனது காருக்கு சென்றான்.
“ஏறு..” என்றவன் அவளை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ள,
“இப்ப நாம எங்க போறோம்?” என்று கேட்டவளுக்கு,
“முக்கியமான இடத்துக்கு..” என்றவன் அழைத்துச் சென்ற
இடத்தில் தப்பிக்க வழியாது, திருதிருவென முழித்தவாறு நின்றிருந்தாள் பாரதி.
இனி பாரதியின் நிலையென்னவாகும்?
👌👌👌👌👌👌👌👌👌👌
super sis
super sis….