அத்தியாயம் 4
அனு அவன் கீழே தூக்கி போட்ட வேகத்தில் பொத்தென்று தரையில் வந்து விழுந்தாள் இருமல் வேறு நிற்காமல் வந்து கொண்டே இருந்தது கண்கள் இரண்டும் கலங்க ஆரம்பித்தது அழுது கொண்டே இருந்தவளுக்கு தன் தந்தையின் நினைவு வேறு வந்தது ஒரு நகக்கீறல் கூட தன் மீது படாமல் தன்னை பொத்தி பொத்தி பார்த்து கொண்டு இருந்தாரே இப்படி ஒருவனிடம் வந்து மாட்டி கொண்டோமே என்று நினைத்து அழுது கொண்டே இருந்தாள்.
வில்லாளன் அவளின் தலை முடியை கொத்தாக பிடித்தவன் “நீயே நினைச்சாலும் உன்னால இங்கே இருந்து தப்பிச்சு போக முடியாது டி நான் நினைச்சா மட்டும் தான் உன்னால இங்கே இருந்து வெளியே போக முடியும் ஒழுங்கா சொல்ற படி கேட்டு நடந்தா உன்னை உங்க அப்பன் கிட்ட கூட்டிட்டு போவேன் இல்லை இந்த ஜென்மம் முழுக்க நீ இங்கே தான் கிடந்து சாகனும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
அனு விடாமல் அழுது கொண்டே அமர்ந்து இருந்தாள் பழைய நினைவுகள் எல்லாம் நிழலாடியது சோர்ந்து போய் அந்த மண் தரையில் படுத்திருக்க அந்த குடிசையின் கதவை திறந்து கொண்டு காலை வந்த அதே பெண் அங்கே வந்தாள்.
அவள் கையில் இருந்த சாப்பிடும் தட்டை போன்ற மண்ணால் செய்யப்பட்ட சட்டியில் ஏதோ சாப்பாடு எடுத்து வந்திருந்தாள்.
“ஏய் பொண்ணு எழுந்து சாப்பிடு” என்று அவள் கூற அனு “எனக்கு வேண்டாம்” என்று அந்த சட்டியை தள்ளிவிட போக அந்த பெண் அதை கையில் எடுத்து கொண்டாள்.
“நீ இப்போ சாப்பிடலைன்னா உனக்கு அடுத்த வர ஒரு வாரத்துக்கு எந்த சாப்பாடும் கொடுக்க மாட்டாங்க ஒழுங்கா சாப்பிடு” என்றாள்.
அனு அவள் கூறியதை கேட்டு பயந்தவள் இங்கிருந்து தப்பிப்பதற்க்காகவாது உடலில் தேம்பு வேண்டும் என்று நினைத்தவள் அவளிடம் இருந்த சாப்பாட்டை எதுவும் பேசாமல் தன் கையில் வாங்கி கொண்டு வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள் அவளுக்குமே பசியாக தான் இருந்தது காட்டில் ஓடி ஓடி களைத்து போய் இருந்தாள்.
அனு சாப்பிடுவதையே பார்த்து கொண்டிருந்தாள் அந்த பெண்
அவளை நிமிர்ந்து பார்த்த அனு
“உன் பெயர் என்ன?” என்று அவளிடம் கேட்டாள் “அல்லி” என்றாள் அவள் பதிலுக்கு.
அனு அவளிடம் பேசிக்கொண்டே சாப்பிட அவளுக்கு புரை ஏற ஆரம்பித்தது இருமிக் கொண்டே இருக்க அல்லி எழுந்து சென்று அந்த வீட்டின் மூலையில் இருந்த பானையில் தண்ணீர் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள்.
அனு அந்த தண்ணீர் பானையை வாங்கி வேக வேகமாக குடித்தவள் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.
அனு சாப்பிட்டு முடிக்க அவளிடம் இருந்து பானையை வாங்கி கொண்டு கிளம்ப போனாள்
“அல்லி உன்னை பார்த்தா நல்ல பொண்ணா தெரியுது உன் கிட்ட ஒன்னு கேட்க்கவா” என்று கேட்டாள்.
அல்லியும் அவளை என்ன என்பதை போல் பார்க்க “அது… இவன் யாரு ஏன் என்னை கடத்தி வச்சிருக்கான் எப்போ என் வீட்டுக்கு என்னை அனுப்புவான் உனக்கு எதாவது தெரியுமா” என்று அவள் கேட்க
அதுவரை சாதரணமாக இருந்த அல்லியின் முகம் மாற ஆரம்பித்தது
“எனக்கு எதுவும் தெரியாது” என்று வெடுக்கென்று பதில் கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள்.
அனு முகம் அல்லியின் பேச்சில் வாடி போனது உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்ந்து போய் இருந்தாள் தான் இங்கிருந்து தப்பிக்க வழியே கிடைக்காதா என்று நினைத்து அழுது கொண்டே இருந்தாள்.
அதே நேரம் ரகுநந்தன் ஒரு இடம் கூட விடாமல் தன் மகளை தேடி அலைந்து கொண்டு இருந்தார் அவர் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருந்த ஒட்டு மொத்த காவல் நிலையத்துக்கும் அனுவின் புகைப்படம் அனுப்பப்பட்டு இருந்தது ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அவர் வீட்டில் சோர்ந்து போய் அமர்ந்திருக்க அங்கே பிரதீப் வந்தான் அவனை பார்த்தவர்
“அனுவை பத்தி எதாவது தகவல் தெரிஞ்சிதா பிரதீப்” என்று அவர் கேட்க “இல்லை மாமா ஒரு தடயமும் யாருக்கும் கிடைக்கலை என்ன பண்றதுன்னே தெரியலை” என்றான் சோர்ந்து போன முகத்துடன்.
அப்போது ரகுவின் நண்பர் பாஸ்கர் அங்கே வந்தார் ரகு கவலையுடன் அமர்ந்து இருப்பதை பார்த்தவர்
“ரகு அனுவை கண்டுபிடிக்க என் கிட்ட ஒரு வழி இருக்கு” என்றார்.
ரகு உடனே ஆர்வத்துடன் “என்னன்னு சொல்லு பாஸ்கர் என் பொண்ணை கண்டுபிடிச்சா மட்டும் போதும்” என்றார்.
“என்னோட அக்கா பையன் ஆரோன் ஐ.பி.எஸ் ஆபிசரா ஆந்திரால இருக்கான் அவனை அனுவோட கேஸ்சை டீல் பண்ண சொல்லலாம்ன்னு நினைக்கிறேன் அவன் இதுக்கு கரெக்டா இருப்பான்னு எனக்கு தோனுது ” என்றார்.
“டேய் பாஸ்கர் உடனே அவனை வர சொல்லு டா என் பொண்ணு உயிரோட கிடைச்சா மட்டும் போதும் டா” என்றார் கண்கள் கலங்க
“சரி டா இன்னைக்கே நான் அவனை சென்னைக்கு வர சொல்றேன் நீ ஒன்னும் கவலைப்படாத அனு கிடைச்சிருவா” என்றார் பாஸ்கர் ஆறுதலாக அவரின் கைப்பிடித்து.
குடிசையில் இருந்து வெளியே வந்து நின்று கொண்டு இருந்தான் வில்லாளன் தன் கோபம் சற்றும் குறையாமல் சாரல் மழையை போன்று கொட்டும் பனியில் அசையாமல் வெற்றும்புடன் நின்றிருந்தவனுக்கு அந்த குளிர் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை அவன் மனக்கண்ணில் ஏதேதோ பழைய நினைவுகள் நிழலாடியது.
அப்போது அல்லி அவனை கடந்து அனுவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல போக “அல்லி அவள் சாப்பிட்டாளா” என்று கேட்டான்.
“ம்ம்” என்று பதில் கூறிவிட்டு அவள் அவன் முகத்தை கூட பார்க்காமல் அங்கிருந்து செல்ல போக
“என்னை மன்னிச்சிடு அல்லி” என்று அவன் அல்லியிடம் மன்னிப்பு கேட்க
“ஏமார்ந்து போறது எனக்கு ஒன்னும் புதுசுல்ல” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அனு அப்போது தான் குடிசையில் இருந்து வெளியே வந்தாள் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவளுக்கு இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.
அனு அங்கேயே இருளில் பனியில் உலவிக் கொண்டு இருந்தாள் குளிர் அதிகமாக இருக்க தான் அணிந்திருந்த நூல் புடவையை போர்த்தி கொண்டே யோசித்து கொண்டு இருந்தாள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது ஒன்று மட்டுமே ‘இங்கே இருப்பவர்கள் அனைவரும் வேறு மொழியில் பேச இவன் ஒருவன் மட்டும் தெளிவாக தமிழ் பேசுகிறான் ஒரு வேளை இவன் காட்டுவாசி இல்லையா’ என்று நினைத்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.
அதுமட்டுமல்ல சுற்றிலும் எத்தனை வீடுகள் இருக்கின்றன என்பதையும் தன் மனதில் குறித்து கொண்டாள்.
அனு யோசைனையுடன் நடந்து கொண்டிருக்க அப்போது அவள் காலின் மீது ஏதோ ஊர்வதை போல இருக்க என்னவென்று குனிந்து பார்த்தாள் வெளியே தீப்பந்தம் எரிந்து கொண்டிருந்தது அந்த வெளிச்சத்தில் பார்க்க அவள் காலின் மேலே ஒரு மலைப்பாம்பு ஒன்று ஏறி அவள் உடலின் மீது ஏற முயன்று கொண்டிருந்தது.
அதை பார்த்த அனுவின் வாயில் இருந்து கத்துவதற்க்கு முயற்சி செய்ய வார்த்தையை வரவில்லை பயத்துடன் நின்று கொண்டு இருந்தவள் தடுமாறி கீழே விழுந்தாள்.
அந்த பெரிய மலைப்பாம்பு இன்னும் வசதியாக அவள் மீது ஏறி அவளின் வயிற்றை தாண்டி மார்பில் ஏறி நின்று அவளின் முகத்தை பார்த்தது.
வில்லாளன் அந்த பக்கம் திரும்பி நின்றிருந்ததால் அவன் அவளை பார்க்கவில்லை அனு பயத்துடன் அந்த பாம்பை பார்த்தவள் “பாம்பு பாம்பு டேய் காட்டன் பாம்பு டா வா வந்து என்னை காப்பாத்து” என்று பயத்தில் கத்தி அவனை அழைத்தவள் தலையை இடம் வலமாக ஆட்டி கொண்டே இருக்க
அந்த பாம்பு அவளை தன் இரட்டை நாக்கால் கொத்த போகும் சமயம்.
வில்லாளன் அவளின் சத்தம் கேட்டு திரும்பியவன் அவள் மேல் பாம்பு இருப்பதை பார்த்து பதறி அடித்து கொண்டு அவள் அருகில் ஓடினான்.
அவள் மேல் இருந்த மலைப்பாம்பின் கருத்தை பிடித்து அவள் மேல் இருந்து அசால்ட்டாக தூக்கி பார்த்தான் அந்த விஷம் கக்கும் மலைப்பாம்பு தன் நாக்கை நீட்டி விட்டால் உன்னை குத்தி விஷத்தை உன் உடலில் விதைப்பேன் என்பதை போல் தன் நாக்கை நீட்டி பார்க்க
வில்லாளன் அவ்வளவு பெரிய பாம்பை பார்த்தும் சற்றும் அசராமல் அதை கண் இமைக்காமல் பார்த்து கொண்டே நின்றிருந்தவன் அதை தூக்கி கொண்டு சென்று அங்கிருந்த காட்டில்விட்டான்.
அனு பதறி அடித்து கொண்டு பயத்துடன் அந்த குடிசை வீட்டின் உள்ளே ஓடி நடுக்கத்துடனே அமர்ந்து இருந்தாள்.
வில்லாளன் அந்த குடிசையின் உள்ளே வந்தவன் “இப்போ புரியுதா நீ இந்த காட்டுல இருந்து தப்பிக்னும்ன்னு நினைச்சா இந்த மாதிரி நூற்றுக்கணக்கான பாம்பை கடந்து தான் வெளியே போக முடியும்” என்று கூற அவளுக்கு குப்பென்று அந்த குளிரிலும் பயத்தில் வியர்த்து வடிய ஆரம்பித்தது.
அப்போது அந்த குடிசையின் உள்ளே இரண்டு நடுத்தர வயது பெண்கள் வந்தனர் அவர்கள் வில்லாளனிடம் ஏதோ கூற அவன் வெளியே சென்றுவிட்டான்.
அவர்கள் அனுவின் அருகில் வந்து அவளுக்கு புடவை மாற்றி விட போக
“இல்லை நானே மாத்திக்கிறேன்” என்று அவள் தன் புடவையை கெட்டியாக பிடித்து கொண்டாள்.
அந்த பெண்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள
அனு அவர்களுக்கு சைகையில் பதில் கூறினாள் உடனே தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு அவளை பார்த்து சிரிக்க அவர்கள் பேசிய எதுவும் அவளுக்கு புரியவில்லை.
அவர்கள் கொடுத்த ஆடையை தடுப்பில் சென்று மாற்றி கொண்டு வர அவர்கள் அவளை எங்கோ அழைத்து சென்றனர் “என்னை எங்கே கூட்டிட்டு போறிங்க” என்று அவள் எவ்வளவு கேட்டும் அவர்கள் பதில் கூறவேயில்லை.
நான்கு பெரிய மூங்கில் மரக்கைகளால் உருவாக்கப்பட்டு கட்டப்பட்ட ஒரு உயரமான குடிசையின் மேலே அவளை அழைத்து சென்றனர்.
மூங்கிலால் ஆன படிகட்டில் அவர்களுடன் ஏறி குடிசையின் உள்ளே சென்று அனுவை அமர வைத்துவிட்டு அவர்கள் கீழே இறங்கி சென்றனர் “என்னை தனியா விட்டுட்டு எங்கே போறிங்க” என்று அவள் எவ்வளவு கேட்டும் அவர்கள் பதில் கூறாமலேயே சென்றுவிட்டனர்.
அனு அங்கே சுற்றி முற்றி பார்க்க படுக்க படுக்கைக்கு பக்கத்தில் சாப்பிட தேன் கிழங்குகளும் இருந்தன சுற்றிலும் இருளாக இருக்க மண்விளக்கு ஒன்று எரிந்து கொண்டு இருந்தது
உயரமாக இருந்ததால் சில்லென்ற காற்று வீசி கொண்டு இருந்தது வெளியே தூரத்தில் நரி எங்கோ உலையிடும் சத்தம் கேட்க அவளோ பயத்துடன் அமர்ந்து இருந்தாள்.
அங்கே மூங்கில் படிகட்டில் ஏறி வில்லாளன் மேலே வந்தான் அவன் கையில் இருந்த பானையில் எதையோ குடித்து கொண்டே வந்து கொண்டிருந்தான் அவன் கண்கள் சிவந்து வேறு இருந்தது.
அவனை பார்த்து பயந்தவள் “ஏய் நாம மட்டும் ஏன் இங்கே தனியா இருக்கோம்” என்று அச்சத்துடனே கேட்டாள்.
அவன் அவளை அடித்து உண்பதை போல் பார்த்தவன் “இதுக்கு பெயர் தலைக்கட்டு வீடு புதுசா கல்யாணம் ஆனவங்க முதல் ராத்திரி கொண்டாட வருவாங்க நமக்கும் இன்னைக்கு முதல் ராத்திரி” என்று அவளை மையலுடன் பார்த்துக் கொண்டே கூற அனுவின் முகம் பேயறைந்ததை போல் ஆனது.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Paravalaye ipo la takku taaku nu ud varuthu 🤩