ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா – 13

 

தர்ஷினி தனக்கு கொடுத்த ரூமில் தனது தங்கையிடம் மித்திரனை அடித்ததை பற்றி கூறிக் கொண்டிருக்கையில் ரூமிற்கு வந்த பிரியா இவர்கள் பேசுவதை கேட்டுஅதிர்ச்சியில் நின்று விட்டாள்.

 

 

“என்ன தர்ஷினி சொல்ற”என்ற பிரியாவின் குரலை கேட்டு இப்போது அதிர்வது அக்கா தங்கை இருவரின் முறை ஆகிற்று தர்ஷனியும் மனதில் “ஐயோ இவங்க நம்ம பேசுனது எல்லாத்தையும் கேட்டுட்டாங்களான்னு தெரியலையே” என்று மனதில் நினைத்துக் கொண்டு பிரியாவை பார்த்தவள் “என்னக்கா எப்ப வந்தீங்க” என்று கேட்டாள்.

 

 

“நீ இப்ப என்ன சொல்லிக்கிட்டு இருந்த” என்று பிரியா கேட்கவும் அக்கா தங்கை இருவரும் திரு திரு என்று முழித்துக் கொண்டிருந்தார்கள். 

 

 

பின் அவரே “என்னப்பா ரெண்டு பேரும் ரொம்ப அமைதியா இருக்கீங்க” என்றாள் “இல்லக்கா நீங்க ஏதோ கேட்டீங்களே அதைத்தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றாள் தர்ஷினி. 

 

 

“இல்ல நம்ம மித்ரனா இப்படின்னு கேட்டேன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னானே கடைசில கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நேரத்தில் உன் இடுப்பை கிள்ளி வைக்கிற அளவுக்கு மாறிட்டானே என்ற அதிர்ச்சி தான் எனக்கு” என்றாள்.

 

 

அதை கேட்டவுடன் தான் இருவருக்கும் மூச்சே வந்தது “அப்பாடி நம்ம அடிச்சது தெரியாது அவன் நம்மள கிள்ளுனது தெரிஞ்சு தான் இந்த அளவுக்கு அதிர்ச்சியாக இருக்காங்களா நான் கூட ரொம்ப பயந்துட்டேன்” என்று அருகில் இருந்த தனது தங்கையிடம் மெதுவாக கூறினாள்.

 

 

இவளது நிம்மதிக்கு ஆயுள் மிகவும் கம்மி என்பதை போல் வேறு ஒருபுறம் இருந்து இவர்கள் பேசிய அனைத்தையும் மித்ரன் கேட்டுவிட்டு தனது அறைக்கு சென்று விட்டான். 

 

 

பின் பிரியா தர்ஷனாவிடம் “உன்னை உங்க அம்மா கூப்பிடுகிறார்கள்” என்று கூறி அவளை வெளியே அனுப்பிவிட்டு தர்ஷினியிடம் வந்தவள் அங்கிருந்த கபோர்ட்டில் இருந்து எடுத்த ஒரு வெண்பட்டு புடவையை அவளின் கையில் கொடுத்து “குளிச்சிட்டு இதை கட்டிக்கோ” என்று கூறினாள்.

 

 

அதை கேட்டவளோ ‘ஐயையோ நான் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு தடவை குளிக்கிறதே பெரிய விஷயம் இதுல மறுபடியும் வேற குளிக்கனுமா அது மட்டும் போதாதுன்னு இந்த புடவையை நானே கட்டிக்கணுமா எனக்கு தான் புடவையே கட்ட தெரியாதே இப்ப என்ன பண்றது அந்த அக்கா கிட்ட கேட்கவும் கூச்சமாக இருக்கே’ என்று அவரை பார்த்துக்கொண்டே தனது மனதில் பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

“என்ன தர்ஷினி எதுக்கு இப்ப என்னை இவ்வளவு அதிர்ச்சியா பார்த்துகிட்டு இருக்கிற” என்று கேட்டாள் “அது ஒன்னும் இல்லக்கா எனக்கு புடவை கட்ட தெரியாது அம்மா தான் காலையிலயும் இப்பயும் கட்டி விட்டாங்க” என்ற உண்மையை உடைத்து கூறிவிட்டாள்.

 

 

“ அவ்வளவு தானே இந்த புடவையை நானே உனக்கு கட்டி விடுறேன் நீ போய் முதலில் குளித்துவிட்டு வா” என்று பாத்ரூமை நோக்கி அனுப்பி விட்டார். 

 

 

இங்கு புடவையை மடிப்பு எடுத்துக் கொண்டிருந்த பிரியாவை தேடிக்கொண்டு வந்தா கமலாவும் “பிரியமா தர்ஷினிக்கு கொஞ்சம் நகையும், மல்லிகை பூவும் எடுத்துட்டு வந்து இருக்கேன் இதை எல்லாம் வைத்து அவளை ரெடி பண்ணிவிடு நான் போய் பால் சொம்பு எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று கூறி சென்றார்.

 

 

குளித்துவிட்டு பாத்ரூமிலேயே பிளவுஸையும், பாவாடையையும் கட்டிக்கொண்டு மேலே துண்டை போத்திக்கொண்டு வெளியே வந்தவளை கண்ட பிரியாவோ “சரி தர்ஷினி துண்டை மேலே இருந்து எடு நான் உனக்கு புடவையை பிளீட் எடுத்து ரெடியா வச்சிருக்கேன் அப்படியே கட்டி விட்டுடறேன்” என்றார்.

 

 

“அது அக்கா இப்படியே கட்டி விடுங்கள் எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு” என்றவளை கண்ட பிரியாவும் “என்னது துண்ட மேல போத்திகிட்டு புடவை கட்டிக்கனுமா கூச்சமா வேற இருக்கா அதெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தான் அதுக்கப்புறம் இந்த புடவை எங்கே போகும் என்று தெரியாது நீ சொல்ற கூச்சமும் எங்க போகும்னு தெரியாது” என்றார்.

 

 

அதைக் கேட்ட தர்ஷினியின் முகமோ வெளியே குங்குமமாக சிவந்துவிட்டது ஆனாலும் உள்ளுக்குள் அவள் செய்த காரியத்தால் மிகவும் படபடப்பாகவும் பயமாகவும் இருக்க வெளியே காண்பிக்காமல் நின்று கொண்டிருந்தாள்.

 

 

“சரி சரி வா சீக்கிரம் கட்டி விடுகிறேன்” என்று கூறி புடவையை அழகாக ஏற்கனவே மடிப்பு எடுத்து வைத்ததை அவளுக்கு பாந்தமாக கட்டி விட்டுக் கொண்டிருக்கையில் இடுப்பில் இருந்த கை விரல்களின் சிவந்த தடத்தைதை பார்த்தவள் மித்ரனின் முரட்டுத்தனத்தை கண்டு தர்ஷினியை பார்த்து குறும்பு புன்னகை செய்தாள்.

 

 

பின் தலையில் நெருக்கமாக தொடுத்த மல்லிகை பூவும் மெல்லிய வைர நகைகளும் முகத்திற்கு லேசான மேக்கப்பும் அஞ்சன விழிகளுக்கு கண்மை விட்டு நெற்றியில் ஒரே ஒரு கல் பொட்டும் அதற்கு மேலே சிறிது சந்தனமும் வைத்து தர்ஷினியை தேவதையாக ரெடி செய்து விட்டாள்.

 

 

இங்கே இவளை தயார் செய்து முடிக்கவும் கதவை தள்ளிக் கொண்டு பெரியவர்கள் அனைவரும் வரவும் நேரம் சரியாக இருந்தது அனைவரையும் பார்த்து தலையை கீழே குனிந்தவளை கண்ட அப்பத்தான் “என்னோட பேத்தி எவ்வளவு அழகா இருக்கா என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று அவளை நெட்டி முறித்தார்.

 

 

மகா தர்ஷினியை பார்த்து “எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்று கூறினார் அதன்படியே தனித்தனியாக தர்ஷினி அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

 

 

கமலா அவளின் கையில் பால் சொம்பை கொடுத்து “தர்ஷினிமா என் பையன் கொஞ்சம் கோபக்காரன்தான் ஆனா ரொம்ப நல்லவன் அதனால அவனோட கோபத்தை நீ தான் கொஞ்சம் அனுசரிச்சு போகணும்” என்று கேட்டுக் கொண்டார்.

 

 

அவளும் மனதில் ‘ஆமா இவங்க பையன் ரொம்ப கோபக்காரன் ஆனா உன்னா என்னை கை நீட்டி அடிப்பான் நான் வாங்கிட்டு சும்மா இருக்கணுமா அன்னைக்கு கன்னத்தில் கொடுத்த மாதிரி அடிச்சானா நம்ம அவனை தூக்கி போட்டு மிதிச்சிட வேண்டியதுதான் அதைக் கேட்ட அவளது மனசாட்சியோ ஆமா அவன நீ தூக்கி போட்டு மிதிப்ப என்று அவளையே காரிதுப்பியது’.

 

 

இவள் இப்படி நினைத்து கொண்டிருக்க அவளுக்கு போதுமான அறிவுரையை வாரி வழங்கினார்கள்.

 அனைவரும் இறுதியாக அப்பத்தா பேசியது மட்டுமே காதில் விழுந்தது ‘ எதே பேரன், பேத்தி வேணுமா நானே இப்பதான் ஸ்கூல் முடித்தேன் இந்த விஷயம் முதல்ல அவங்க பேரன் கிட்ட போய் சொல்லனும் அவ்வளவுதான், என்று எண்ணிக் கொண்டாள். 

 

 

இவள் மனதில் பேசுவதை கண்டுகொண்ட பிரியாவும் தர்ஷனியின் அருகில் வந்து அவளது காதில் “என்ன இவங்க எல்லாரும் அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க நீ மித்ரன் கூட கனவுல இருக்கியா இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை கொண்டு போய் ரூம்ல விட்டுருவோம் அப்புறம் நிஜத்திலும் எல்லாம் நடக்கும்” என்றாள்.

 

 

 

‘ஐயோ இவங்க வேற அடல்ட் கன்டென்டா பேசுறாங்களே அவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டானே’என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியில் சிரித்து வைத்தாள்.

 

 

 

“உனக்கு இதை நினைத்து ஏதாவது பயமா இருக்கா ஏதாவது என்கிட்ட டவுட் கேளு நான் சொல்லி தரேன்” என்றாள்.

 

 

 

 

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அக்கா” என்று அடக்கமாக கூறியவள் மனதில் ‘அதெல்லாம் பார்த்து பேசி பழகி கல்யாணம் பண்ண உங்களுக்கு அந்த பயம் இருக்கும் நமக்கு தான் இன்னைக்கு எதுவுமே கிடையாதுனு தெரியுமே நம்ம ஏன் தேவையில்லாம பயப்படனும் என்ற தைரியத்தில் அவள் அமைதியாகவே இருந்தாள் இதை நினைத்து வேறு எந்த பயமும் அவளிடம் இருக்கவும் இல்லை.

 

 

 

அனைத்தும் முடிந்து மாடியில் இருக்கும் மித்ரனின் அறைக்கு தர்ஷினியே ப்ரியா அழைத்துக் கொண்டு சென்றவள் இந்த தளம் முழுவதும் மித்ரன் உடையது என்று கூறிவிட்டு அங்கிருக்கும் மித்திரனின் அறையை சுட்டிக்காட்டி விட்டு தனது அறைக்கு சென்று விட்டாள்.

 

 

 

அவன் இருக்கும் அறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலே தர்ஷினியின் மனம் இதுவரை இல்லாத அளவிற்கு பயம் சூழ்ந்து கொண்டது இப்படியே யோசித்துக் கொண்டு அங்கேயே எவ்வளவு நேரம் நின்று இருப்பாளோ பிறகு மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல பிரியா சுட்டிக்காட்டிய அறைக்கு சென்றவள் கதவை இருமுறை தட்டினாள்.

 

 

 

எந்தவித பதிலும் இல்லாத காரணத்தினால் கதவை கைக்கு கொண்டு மெல்ல தள்ளிப் பார்த்தாள் கதவு திறந்து கொண்டது உள்ளே சென்றவள் அந்த அறையின் பிரம்மாண்டத்தை கண்டு கொள்ளாமல் இவ்வளவு பெரிய அறையையும் மிகவும் சுத்தமாக வைத்திருப்பதை கண்டு வாயை பிளந்து கொண்டு நின்று விட்டாள்.

 

 

 

‘என்ன இந்த ரூம் இவ்வளவு கிளீனா இருக்கு இவன் இந்த ரூமை யூஸ் பண்ணுவானா மாட்டானா நம்ம ரூமையும் இந்த ரூமையும் கம்பேர் கூட பண்ணி பார்க்க முடியாது போல இருக்கே’ என்று எண்ணிக் கொண்டிருந்தால்.

 

 

 

அவள் உள்ளே நுழைந்ததில் இருந்தே அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன் இவள் இப்போதைக்கு திரும்ப மாட்டாள் எண்ணிக்கொண்டு அவள் அருகில் வந்தான்.

 

 

 

அவன் வந்ததை பார்த்தவள் அவன் பேசுவதற்கு முன்பே தன்னை திடப்படுத்திக்கொண்டு தர்ஷினியே பேச ஆரம்பித்துவிட்டாள் “ இங்க பாரு இது எப்படி உனக்கு புடிக்காத கல்யாணமோ அதே மாதிரி எனக்கும் உன்னை பிடிக்கலை இது எனக்கும் பிடிக்காத கல்யாணம்தான் அதனால நீ உன்னோட எல்லை கோட்டோட இருந்துகோ நான் என்னோடதில் இருந்து இருக்கிறேன் வெளியில தான் நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி இந்த ரூமுக்கு வந்துட்டா நீ வேற நான் வேற அதனால என்னை விட்டு தள்ளியே இரு” என்று அவனை மிரட்டி கொண்டிருந்தாள். 

 

 

 

இவள் பேச ஆரம்பிக்கும் போதே லூசு ஏதோ உளறுகிறது என்ற மைண்ட் செட்டில் இருந்தவன் இவள் இப்படி கூறவும் கோபம் தலைக்கு ஏற ஆரம்பித்துவிட்டது அதில் “ இருக்க மாட்டேன் நீ என்ன பண்ணுவ” என்று கோபத்துடன் கேட்கவும் அதற்கு தர்ஷனியும் “இன்னைக்கு காலைல வாங்குன அடியை நீ மறந்து இருக்க மாட்டேன் நினைக்கிறேன்” என்று கூறவும்.

 

 

அவ்வளவு நேரம் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவன் அவள் கூறிய வார்த்தைகளில் தனது நிதானத்தை இழந்தவன் தர்ஷினியை ஓங்கி ஒரு அடி அடித்ததில் கையில் வைத்திருந்த பால் மொத்தமாக கீழே சிந்தி அவளும் சுத்திக் கொண்டு கீழே விழுந்தாள்.

 

 

 

கீழே விழுந்த அவளை அப்படியே விட மனம் இன்றி அவளின் அருகில் சென்றவன் அப்படியே அவள் மீது படர ஆரம்பித்து விட்டான் கோபத்தில் மனம் அறிவு இரண்டும் சொல்கின்ற பேச்சை கேட்காமல் தர்ஷினியின் மேல் படுத்து இருந்தவன் அழ தயாராக இருந்த உதடு துடித்துக் கொண்டிருந்த

து அதில் தனது உதட்டை தர்ஷினியின் உதடுகளோடு பொருத்தி வன்முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top