அத்தியாயம் 1
திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரம் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தை விட்டு சற்று தள்ளி நிறுத்தப்பட்ட பேருந்தை நோக்கி ஓடி வந்தவள், முந்தியடித்துக் கொண்டு ஏறினாள் பாரதி. நெருக்கியடித்து முன்னே சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தவளின் காதில்,
“ஹேய் பாரு.. ஹேய்.. இங்க.. இங்க.. பாரு..” என்றக் குரல் ஒலிக்க, குரல் வந்த திசையை நோக்கித் திரும்பியவளின் விழிகளில் விழுந்தாள் சந்தியா. அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் அதே நிறுத்தத்தில் இறங்கி செல்ல, தனது கைப்பையை வைத்து இடம் பிடித்தவள், தனது தோழியை தன்னருகே வந்து அமருமாறு சைகை செய்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, அக்ஷயாவின் அருகில் வந்தருமர்ந்தாள் பாரதி.
“இன்னும் ரெண்டு நாள்ல ஆன்லைன் டே இருக்கு.. இன்னும் எந்த ஒர்க்கும் செஞ்சு முடிக்கல.. இன்னைக்கு நாம ஒர்க்கை டையத்துக்குள்ள முடிக்கல? நம்ம ரெண்டு பேரையும் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடுவாங்க..”
“நானா உன்னைய வேலை செய்யாம ஊர்
சுத்த சொன்னேன்?”
அம்மா தாயே! தெய்வமே.. இந்த கைய காலா நினைச்சு கேட்குறேன்.. இன்னைக்கு ஈவினிங் ஏழு மணி வரை இருந்து முடிச்சுக் கொடுத்துட்டு போம்மா.. ப்ளீஸ்..”
“ஏய் சந்தியா.. என்ன விளையாடுறியா? என் பொண்ணு வீட்டுல தனியா இருப்பா.. ஆறு மணிக்குலாம்.. ஸ்கூல் பஸ் வந்துடும்.. உன் ஆட்டதுக்கு நான் வரலம்மா.. இந்த வேலையில்லேனா.. தள்ளுவண்டி போட்டாவது பிழைச்சுக்குவேன்.. என் பிள்ளை இல்லேனா.. எனக்கு வாழ்க்கையே இல்ல..”
“ஏய் ப்ளீஸ்யா.. உன்னை விட்டா எனக்கு யாருடி இருக்கா? உனக்கு மறந்து போச்சா?”
“மூணு வருஷத்துக்கு முன்னாடி கார் ஆக்ஸிடென்ட் ஆனப்போ.. நீ தான் உன் ரத்தத்தை கொடுத்து என்னைய காப்பாத்துன.. அந்த நன்றிக்காகவாவது இந்த உதவியை செய்மா.. இன்னைன்னா நான் கொடுத்த அஞ்சு லிட்டர் ரத்தத்தை திருப்பிக் கொடு.. அதானே? தயவு செஞ்சு அந்த டயலாக்கை சொல்லாத.. எனக்கு மனப்பாடமாகிடுச்சு.. நீ கொடுக்குற டார்ச்சரையெல்லாம் பார்க்கும்போது, அந்த ஒரு பாட்டில் ரத்தத்தை உடனே கொடுக்கணும் போல தோணுது.. ஒரு பாட்டில் ஒரு லிட்டராச்சு.. ஒரு லிட்டர் மூணு லிட்டராச்சு.. இப்போ அஞ்சு லிட்டராகிடுச்சு.. ஒரு மனிஷன் உடம்ல ஓடுறதே அஞ்சரை லிட்டர் ரத்தம் தான்.. ஆனா, நீ அஞ்சு லிட்டர் ரத்தம் கொடுத்தேன்னு சொல்லுறப் பாரு.. பொய் பேசுவதில் திலகம்னு உனக்கு ஒரு பட்டமே கொடுக்கலாம்..”
“ப்ளீஸ்யா.. இந்த வொர்க்கை மட்டும் முடிச்சுக் கொடுத்துடுப்பா.. மயூரியை என் கண்ணுக்குள்ள வைச்சு நான் பார்த்துக்குறேன்..” என்று கெஞ்சியவளை தவிர்க்க முடியாது,
“சரி, இந்த ஒரு தடவை உனக்காக செஞ்சு கொடுக்குறேன்..” என்ற பாரதியை “தாங்க் யூ..” என்றவாறு தோளோடு அணைத்துக் கொண்டாள் சந்தியா.
“சீக்கிரம்.. டைம்மாச்சு.. ஓடு.. ஓடு.. இல்ல அந்த சோடாப்புட்டி கேட்டை புட்டிடுவான்.. அப்புறம் லேட் நோட்ல சைன் பண்ணணும்..”
“வாயை மூடிட்டு வேகமா வா சந்தியா.. சும்மா தோணத்தோணன்னு பேசிட்டே இருக்க..” என்றவாறு ஓடியவந்து அலுவலகத்திற்கு முன்னே இருந்த பயோமெட்ரிக்கில் முகத்தை காட்டியவளின் முன்னே நோட்டை நீட்டினார் முகுந்தன். அப்பள்ளியில் அட்டெண்டராக பணிபுரிபவர்.
“ஒரு நிமிஷம் லேட்..” என்றவாறே இருவரின் முன்னிலையிலும் லேட் புக்கை நீட்ட,
“இந்த ஸ்கூலுக்கே ஓனர்னு நினைப்பு?! ஒரு நிமிஷந்தானேடா லேட்.. அதுக்கு என்னடா என் சம்பளத்துல கை வைக்குறீங்க.. காலைல ஒரு நிமிஷம் லேட்டுன்னு சைன் வாங்குறீங்களேடா.. ஈவினிங் என்னைக்காவது சீக்கிரம் அனுப்பிருக்கீங்களா? கரெக்டா கிளம்புறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் இப்பவே முடிக்கணும்னு சொல்லி வொர்க் கொடுப்பீங்க.. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லடா..” என்று முணுமுணுத்த சந்தியாவின் குரலை சரியாக கேட்காத முகுந்தனோ,
“அஅஅ.. என்ன மேடம் சொன்னீங்க?” என்றவாறே திரும்பினார் ஐம்பது வயதான முகுந்தன்.
“அஅஅ.. ஒன்னுமில்ல சார்.. சும்மா.. இவக்கிட்ட பேசிட்டுருந்தேன்..”
“பேசுவதெல்லாம் இருக்கட்டும்.. மேல முதல் மாடில டீச்சர்ஸ்கு மீட்டிங் போயிட்டுருக்கு.. சீக்கிரம் போங்க.. அப்புறம் அதுக்கும் திட்டு வாங்கப் போறீங்க?!”
“சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்..” என்ற பாரதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே முதல் மாடியை நோக்கி ஓடினாள் சந்தியா.
“ஒரு நிமிஷம் லேட்டுக்கு அரை நாள் சம்பளம் கட் பண்ண போறான்.. அவனுக்கு போய் தாங்க்ஸ் சொல்ற.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?”
“இல்லைன்னு தான் நினைக்குறேன்.. இல்லேன்னா சந்தியாவுக்கு போய் ப்ரெண்டா இருப்பேனா?”
“ஹஹஹஹ.. இவ்வளவு சிரிச்சா போதுமா?” என்ற சந்தியா மூச்சு வாங்க ஏற, அவளுக்கு முன்னே வேகமாக ஏறிக் கொண்டிருந்தாள் பாரதி.
“ஹேய் கொஞ்சம் மெதுவா போவேன்.. என்னால ஏற முடியல..”
“சந்தியா.. கொஞ்சம் ஃபாஸ்டா வா.. இல்லேன்னா எல்லோருக்கும் முன்னாடி நாம வாங்கிக் கட்டிக்குவோம்..”
“நீ மட்டும் எப்படி ஃபாஸ்டா ஏறுற? ஒரு குழந்தை பெத்தும் ரொம்ப ஸ்லிம்மா.. அழகா இருக்க? உன்னைப் பார்த்தா கல்யாணமாகி குழந்தை பெத்து மாதிரியே தெரியல.. அவ்ளோ அழகா இருக்க.. ஆமா.. நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது.. உன் புருஷந்தான் உன்னைய வேணாம்னு சொல்லிட்டான்ல?” என்ற சந்தியாவின் குரலுக்கு அப்படியே சிலையாய் நின்ற பாரதி, மெல்ல திரும்பினாள். தீர்க்கமான குரலில்,
“என்னோட பெர்சனல் லைஃபைப் பத்தி எதுவும் கேட்கவோ பேசவோ கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல?” என்று கேட்க, அவளது குரலில் இருந்த இறுக்கத்தை உணர்ந்த சந்தியா,
“சாரி.. சாரி.. சோ சாரி.. நான் தெரியாம.. ப்ளீஸ்.. மனசுல எதுவும் வைச்சுக்காத..” என்ற சமாதானப்படுத்த முயல, இறுகிய முகத்துடன் வேக வேகமாக படிகளில் ஏறி முதல் தளத்தை அடைந்தவளை பின் தொடர்ந்து ஓடி வந்தாள் சந்தியா. அங்கிருந்த கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்ட பாரதி, பள்ளியின் முதல்வர் பேசுவதை கவனிக்கத் தொடங்கினாள். அவளது அருகில் வந்து நின்ற சந்தியா,
“பாரு.. ப்ளீஸ்.. சாரி..” என்று அஸ்கி குரலில் கிசுகிசுக்க, “ஸ்ஸ்ஸ்ஸுஸுஸு..” என்று தன் இதழில் விரல் வைத்து, அமைதியாக இருக்குமாறு சைகை செய்தாள் பாரதி.
“இங்கப்பாருங்க.. இது நம்ம இருபத்தைந்தாவது ஆண்டு விழா, ஃபேமஸ் பிஸ்னஸ்மேக்னட் தான் ச்சீஃப் கெஸ்டா வர்றாரு.. அண்ட் ட்யூட்டி அலார்ட்மெண்ட்படி அவங்கவங்க டீமோட நில்லுங்க.. ரெப்ரெஷ்மெண்ட் டீம்.. இங்க வாங்க..” என்றதும்
“போ.. போ.. முன்னாடி போ..” என்றவாறு பாரதியை முன்னால் தள்ளினாள் சந்தியா.
“பாரதி.. கெஸ்டை வெல்கம் பண்றதுல இருந்து அவரை செண்டாஃப் பண்ற வரைக்கும் எல்லாத்தையும் உன்னோட டீம்மேட்ஸ் தான் பார்த்துக்கணும்.. இதுல எந்த மிஸ்டேக்ஸும் வந்துடக்கூடாது..”
“கண்டிப்பா மேம்.. நாங்க கவனமா இருப்போம்..” என்ற சந்தியாவை பார்த்தவர், அவளது அருகில் நின்றிருந்த பாரதியை பார்த்து,
“இதோ பார் பாரதி.. நான் உன்னையத் தான் நம்புறேன்..” என்றுவிட்டு மற்ற குழுவினரிடம் சென்று பேசிக் கொண்டிருக்க,
“இப்போக்கூட அந்த கிங் கோப்ராவோட கண்ணுல நான் படவேயில்ல.. நீ மட்டும் தான் தெரியுற..” என்று குறை பட்டு கொண்டாள் சந்தியா.
“ப்ச்.. கொஞ்சம் பேசாம இருக்கியா?!” என்றவாறு திரும்பிய பாரதியின் கைப்பேசி சிணுங்க,
“நீ இன்னைக்கு மொபைல் சப்மிட் பண்ணலையா?” என்ற சந்தியாவிற்கு பதிலளிக்க முடியாது, அங்கிருந்து தனது நடனகுழு இருக்கும் அறைக்கு சென்றிருந்தாள். தனது அலையலையான கூந்தலை தூக்கி கொண்டையிட்டவள், தான் அணிந்திருந்த துப்பாட்டாவை கழற்றி நாட்டியத்திற்கு ஏதுவாக அணிந்து கொண்டாள். தனது அழைப்பேசியில் இருக்கும் பாடலை ஒலிக்க வைத்தவள், அதற்கேற்றார் போல் நடனமாட தொடங்க, அவளை பின் தொடர்ந்து மாணவிகளும் நடனமாடத் தொடங்கினர்.
“அவ்ளோ தான் முடிஞ்சுது.. இனிமே நீங்களா தான் ப்ராக்டிஸ் பண்ணணும்.. ம்ம்.. டைம் ஆறாகிடுச்சு.. கிளம்புங்க.. நாளைக்கு ப்ராக்டிஸ் பண்ணுவோம்..” என்றவள் தனது ஆடையை சரிசெய்து கொண்டு பள்ளியிலிருந்து வெளியே வர, சட்டென மழை பொழியத் தொடங்க, தன் கைப்பையை எடுத்து தலையில் வைத்தவாறு அங்கிருந்து ஓடத் தொடங்கியிருந்தாள் பாரதி.
“ஹேய் அங்கப்பாரு.. அது திவி மாதிரி இருக்கு..”
“ப்ச்.. சும்மா பொய் சொல்லாத..”
“ப்ராமிஸா.. அங்கப்பாரு.. அந்தப் பொண்ணு அப்படியே திவி மாதிரியே இருக்கா..”
“திவியா? அவளா? சான்ஸே இல்ல.. அதெப்படி மூணு வருஷத்துக்கு செத்துப் போனவ திரும்பி வர முடியும்? நீ வேற யாரையாவது பார்த்துட்டு சும்மா உளறாத..”
“நான் உளறப் போறேன்?! நீயே பாரு.. அந்தப் பொண்ணு.. திவி தான்..” என்றவன் கை நீட்டிய திசையைப் பார்த்த பெண்ணின் கண்ணில் திவி தெரியவில்லை. அங்கே அப்பெண் நின்று கொண்டிருந்த இடம் வெற்றிடமாக இருக்க,
“ப்ச்.. அதுக்குள்ள அந்த பொண்ணு எங்க போனா?” என்றவன் தன் கார் ஸ்டீரிங்கை அழுத்த,
“அப்படி ஒருத்தி இருந்தாத்தானே? நீ இன்னும் அந்த திவியை மறக்கலைன்னு நினைக்குறேன்.. அதான் மூணு வருஷங்கழிச்சும், அவ உருவம் மாதிரியே தெரியுது உனக்கு..” என்றவள் கூற, காரினை பேருந்திற்கு எதிர்ப்புறம் திருப்பியவாறு அங்கிருந்து சென்றிருந்தனர் அவ்விருவரும்..
***********************************************
“எல்லாம் தயரா இருக்கா? நீங்க எல்லோரும் ரெடியாயிருக்கீங்களா? சீஃப் கெஸ்ட் வந்துட்டுருக்காரு..”
“ரெடி.. மேம்.. எல்லாமே ரெடியாயிருக்கு.. நான் நம்ம டீமோட ஸ்கூல் வாசல்ல தான் இருக்கேன்..” என்று தன் அழைப்பேசியவளின் முன்னே மின்னலென வந்து நின்றது அந்த உயர்ரக வாகனம். கருப்பு நிற ரோல்ஸ் ராயல் கோஸ்ட் கார் கதவை திறந்தவன், தனது நீண்ட நெடிய கால்களை வெளியே வைக்க, மினுமினுத்தது அவனது ஷு. காற்றில் கருமேகமென அலைபாயும் முடி, கண்களின் காந்த அலை, கூரான நாசி அதின் கீழிருக்கும் முறுக்கு மீசை, இரும்பென இறுகிப் போயிருக்கும் சிக்ஸ் பேக் தேகமாய், கன்னியரின் கனவு கண்ணனாக, கட்டிளங்காளையாக, கருப்பு நிற கோட் சூட்டுடன் நின்றவனின் முன்னே, இளம் ரோஜா வண்ண காட்டன் புடவையில், அன்று மலர்ந்த ரோஜாவாக, கையில் ரோஜா பூங்கொத்துடன் நின்றிருந்த பாரதியின் விழிகள் அதிர்ச்சியில் அசையாது நிற்க, அவளது இதழ்கள் மட்டும் முணங்கின, “ஆதித்யா கரிகாலன்..” என்று..
யாரிவன்? ஆதித்யாவின் வருகை பாரதியின் வாழ்க்கைக்கு வசந்தமா? பாலைவனமா?
அத்தியாயம் 2
“ஹலோ மிஸ்டர்.. ஆதித்யா கரிகாலன்.. வெல்கம் டூ அவர் ஸ்கூல்..” என்றவாறு சந்தியா அவன் மீது பன்னீர் தூவ, அத்துளிகள் அருகில் நின்றிருந்த பாரதியின் மீது பட்டதும் நிகழ் உலகத்திற்கு வந்திருந்தாள். கண்களை சிமிட்டி, தனது உணர்வுகளை உள்ளடக்கியவள்,
“வெல்கம்.. ச.. சசச.. சார்..” என்று கூற,
“இந்தாங்க சந்தானம் எடுத்துக்கோங்க சார்..” என்ற மாணவிக்கு பதிலாக திரும்பி தன் அருகில் நிற்கும் பாரதியை பார்த்தான் ஆதித்யா கரிகாலன். அதனை புரிந்து கொண்ட பாரதியோ, அம்மாணவியின் கையில் இருந்த சந்தனக்கின்னத்தை தன் கையில் ஏந்தியபடி ஆதித்யாவின் முன்னே நீட்ட, அவளது உயரத்திற்கு குனிந்தவன், தனது நெற்றி முடியை ஒதுக்கி அவளின் முன்னே காட்ட,
“க்கும்.. சீக்கிரம்.. எல்லோரும் உன்னையே பார்த்துட்டுருக்காங்க..” என்ற சந்தியாவின் கிசுகிசுப்பான குரலில், தனது மூச்சை இழுத்து மெல்ல வெளியிட்டவள், வலுக்கட்டாயமாக தனது முகத்தில் சிரிப்பை வரவழைத்தாள்.
“வெல்கம் சார்..” என்றவாறே அவனது நெற்றியில் சந்தனம் வைத்தவள், தட்டில் இருந்த பூவை அவனது தலையில் போட்டு,
“ப்ளீஸ்.. கம்..” என்றவள், அவனை உள்ளே செல்லுமாறு தனது இரு கைகளையும் உள் புறமாக நீட்ட, தன் கோர்ட் பாக்கெட்டில் இருந்து கருப்பு நிற கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டவன்,
“அண்ட் யூ?” என்று கேட்க, தன் பற்களை கடித்தவாறே,
“ஷ்யர் சார்..” என்றவாறு அவனுடன் இணைந்து பள்ளிக்குள் சென்றாள். தனதருகே நடந்து வந்தவளின் காதருகே குனிந்தவன்,
“எப்படியிருக்க?” என்று கேட்க,
“நான் ரொம்ப நல்லாருக்கேன் சார்..” என்றவளின் கால் சற்று தடுமாற, அவள் கீழே விழாமல் இருக்க அவளது கையைப் பிடித்து கொண்டவனை தீயாய் பார்த்தவள், அவனது கையை உதற, தனது தோள்களை குலுக்கிக் கொண்டு அவளை விட்டு வேகமாக முன்னே நடக்க, அவனைத் தொடர்ந்து அவனது பாதுகாவலர்களும் பின்னே செல்ல, அவனைச் சுற்றி பாதுகாப்பு வளையம் தானாக உருவானது. அவளால் அப்பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, உள்ளே செல்வது அசாத்தியம் என்பதை புரிந்து கொண்டவளுக்கு, இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் சுருக்கென குத்தியது.
“ஹேய்.. வா.. வா.. நாம தான் ஹாஸ்பிட்டாலிட்டி டீம்.. சீக்கிரம் டின்னரும் நாம தான் அரேஞ்ச் பண்ணணும்.. வா.. வா..” என்றவாறே சந்தியா ஒருபுறம் இழுக்க, அவள் இழுத்து இழுப்பிற்கு சென்றாள் பாரதி. முழு நிகழ்ச்சியும் முடியும் வரை பொம்மை போல் தன் வேலைகளை செய்யத் தொடங்கியவளின் அழைப்பேசி சிணுங்க, அதனை எடுத்து காதில் வைத்தவளின் கை கால்கள் நடுங்கத் தொடங்கியது. அவளது முகப்பாவனைப் பார்த்த சந்தியா,
“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க, அதற்கு ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள், பள்ளி முதல்வரைச் காண அவரது அறைக்குச் சென்றாள்.
“எக்ஸ்கியூஸ் மீ மேம்.. மே ஐ கமின்..” என்று உள்ளே நுழைந்தவளின் கண் முன்னே கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்திருந்த ஆதித்யா கரிகாலன் படவே, சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாது, வாயிற்குள் முழுங்கினாள் பாரதி.
“வாட் மிஸ் பாரதி?! எனி ப்ராப்ளம்? என்று கேட்டவருக்கு இல்லையென தலையாட்டியவள்,
“மேம்.. டின்னர் இஸ் ரெடி..” என்று கூற, ஆதித்யா கரிகாலனைப் பார்த்தவர்,
“சார்.. ப்ளீஸ்.. கம் வித் அஸ்.. எங்கக்கூட டின்னர் சாப்பிடிங்கன்னா.. எங்களுக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்..” என்று கூற,
“சாரி மேம்.. எனக்கும் உங்க எல்லோர்கூடவும் டின்னர் சாப்பிடணும்னு தான் ஆசையாயிருக்கு.. பட், ஐம் சோ சாரி.. எனக்கு அட்ஜெண்ட்டா.. கொஞ்சம் போகணும்..” என்றவாறு எழுந்து கொள்ள முயற்சி செய்ய, அதே நேரத்தில் தட்டில் ஜுஸ் க்ளாஸுடன் நுழைந்தாள் சந்தியா.
“சார்.. ப்ளீஸ்.. இந்த ஜூஸையாவது குடிங்க சார்..” என்றவாறே தட்டினை அவன் முன்னே நீட்ட, அதன் வாசனையை உணர்ந்த பாரதி,
“இது பைனாப்பிள் ஜூஸா?” என்று மெல்ல கேட்க,
“ம்ம்.. ஆமா..” என்று கிசுகிசுத்தாள் சந்தியா.
“நாம் ஆரெஞ்ச் ஜூஸ் தானே ரெடி பண்ணோம்?!”
“அது.. அது வந்து.. கீழ கொட்டிடுச்சு..” என்று மெல்லிய குரலில் கூறிய சந்தியாவை முறைத்துப் பார்த்தவள்,
“அந்தத் தட்டை என்கிட்ட கொடு..” என்ற பாரதி,
“சாரி மேம்.. ரெண்டே நிமிஷம்.. நான் வேற ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்..” என்றவாறே திரும்ப,
“பரவாயில்ல.. அந்த ஜூஸையே கொடுங்க.. நான் சீக்கிரம் குடிச்சுட்டு கிளம்புறேன்..” என்றவன் ஜூஸை எடுப்பதற்காக தட்டை நோக்கி கை நீட்ட,
“இல்ல.. வேணாம்.. இது பைனாப்பிள் ஜூஸ்.. உங்களுக்கு ஒத்துக்காது..” என்று அவனிடம் ஜூஸை கொடுக்காது, அதனை மறைத்தவளை புரியாது திகைத்துப் பார்த்தனர் அங்கிருந்த அனைவரும்.
“இல்ல.. இவருக்கு பைனாப்பிள் ஜூஸ்.. ஒத்துக்காதுன்னு கூகுள்.. ஆமா.. கூகுள்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..”
“கூகுளைப் பார்த்து நீ தெரிஞ்சுக்கிட்ட? ரைட்?” என்றவனுக்கு ஆமென் தலையாட்டினாள் பாரதி.
“பாரு.. நேத்து நைட்டு வரைக்கும், இவர் நம்ம ப்ரொபோஸல் எதையும் அக்செப்ட் பண்ணவேயில்ல.. இன்விடேஷன்ல கூட நாம் அவரோட நேம் போடவேயில்ல.. அப்படியிருக்கும் போது, நீ எப்படி இவரைப் பத்தி தெரிஞ்சருக்க முடியும்?” என்று சந்தியா கேட்க திருதிருத்தாள் பாரதி.
“அது.. அது வந்து..” என்றவளின் கைப்பேசி சிணுங்க, அதனைப் பார்த்தவளின் முகம் பரப்பரப்பாக,
“மேம்.. இப்போ நான் உடனே கிளம்பணும்.. ப்ளீஸ்.. நான் கிளம்பட்டுமா?” என்றவளின் முகத்தைப் பார்த்தவன்,
“ஓகே மேம்.. அப்புறம் பார்க்கலாம்.. நான் கொஞ்சம் அட்ஜெண்ட்டா கிளம்புறேன்..” என்றவன் அங்கிருந்து எழுந்து கொண்டவன், சிறிது தூரம் சென்றதும், மெல்ல திரும்பி,
“மிஸ். பாரதி..” என்றவன்,
“நான் மிஸ்னு சொல்லலாம்ல?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க,
“இல்ல.. இவ மிஸஸ் பாரதி.. இவளுக்கு கல்யாணமாகி மூணு வருஷமாகிடுச்சு..” என்ற சந்தியாவிற்கு, “ஓஹோ..” என்று பதிலளித்தவன்,
“மிஸஸ் பாரதி.. நான் போற வழில உங்களை ட்ராப் பண்றேன்.. என்கூட வாங்க..” என்று விட்டு முன்னே செல்ல,
“நோ.. தாங்க் யூ சார்..” என்றவளின் தோளில் கை வைத்த சந்தியா,
“இங்குப் பாரு.. பாரு.. உனக்கு என்னப் பிரச்சினைன்னு எனக்கு தெரியாது.. ஆனா, ஏதோ சீரியஸ்ஸான விஷயம்னு மட்டும் புரியுது.. அவர் கூட போனா சீக்கிரம் போய் இறங்கிடுவ.. இப்போவே மணி பத்து.. இதுக்கு மேல நீ பஸ் ஸ்டாப் போயி, பஸ் பிடிச்சு போகுறதுக்குள்ள, ரொம்ப லேட்டாகிடும்.. நீ சார் கூடவே கிளம்பு.. உன்னோட ஹேண்ட்பாக்கை நான் எடுத்துட்டு வர்றேன்..” என்றவாறே பாரதியை ஆதித்யா கரிகாலனுடன் தள்ளிக் கொண்டு செல்ல, மறுக்க முடியாது, நடந்தாள் பாரதி. ஏதோ ஒரு மாணவியின் மூலம், பாரதியின் கைப்பையை எடுத்து வரச் செய்த சந்தியா, அதனை பாரதியின் கையில் கொடுத்து,
“வீட்டுக்கு போனதும் போன் பண்ணு..” என்றவாறே, அவளை ஆதித்யா கரிகாலனின் வாகனத்தில் ஏற்றி விட்டாள். சிறிது தூரம் சென்றதும் ஆதித்யா கரிகாலனின் கார் சட்டென நிற்க, என்னவென்று பார்த்தாள் பாரதி.
“தீபன்.. நீ நம்ம பாடிகார்ட்ஸோட வண்டில வா.. கார் கீயை என்கிட்ட கொடு..” என்று கார் சாவியை அவனிடம் இருந்து கேட்டு வாங்கிய ஆதித்யா, பின் சீட்டின் புறமாய் திரும்பி,
“நான் ஒன்னும் உனக்கு டிரைவரில்ல.. கொஞ்சம் மேடம்.. முன்னாடி வந்து உட்காருறீங்களா?” என்று கேட்க, காரை விட்டு கீழே இறங்கிய பாரதி, வேக வேகமாக பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கத் தொடங்க, இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன், துண்டை மடித்து தோளில் போடுவது போல், அவளை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு, அந்த ஆளில்லாத ரோட்டில் நடந்து வந்தவன், காருக்குள் திணித்து கதவை அடைத்தவன், மறுபுறம் வந்து ஏறினான் ஆதித்யா கரிகாலன்.
“விடுங்க.. என்னை விடுங்கன்னு சொல்றேன்ல..”
“வாயை மூடப் போறியா? இல்ல.. மூட வைக்கவா?”
“என்னைய விடுங்க.. இப்ப அர்ஜெண்டா வீட்டுக்கு போகணும்.. ப்ளீஸ்..”
“இப்ப உன்னைய விட்டா.. திரும்பவும் உன்னைய தேட விட்டுடுவ.. மூணு வருஷம்.. மூணு வருஷம் டி.. நான் என்ன பண்ணேன்னு எனக்கு இந்த தண்டனை? நான் உனக்கு என்ன குறை வைச்சேன்? எதுக்காக டி இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?”
“நீங்க பேசுற எதையும் கேட்குற நிலைமைல நான் இப்போ இல்ல.. ப்ளீஸ்.. என்னைய விடுங்க..”
“நான் பேசுறது உனக்கு புரியலையா? புரியாதுடி.. உனக்கு சுத்தமான புரியாது டி.. மூணு வருஷம்.. ஆயிரத்து தொண்ணூற்றி ஐந்து நாட்கள்.. பைத்தியம் மாதிரி திரிச்சேன்டி..” என்றவன் காரினை கோபமாக கிளப்ப,
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என்னைய விட்டுடுங்க.. ப்ளீஸ்.. ஏன்னா.. ஏன்னா?” என்று திணறியவளின் புறம் திரும்பியவன்,
“சொல்லு.. ஏன்? ஏன்? ஏன் இப்படி பண்ண? சொல்லு..” என்று கத்த,
“நான்.. நான்.. இப்போ எதுவும் சொல்ல முடியாது.. தயவு செஞ்சு நான் இப்போ வீட்டுக்கு போகணும்..” என்று கெஞ்சியவளை கூர்ந்து பார்த்தவன்,
“காரணம்?” என்று கேட்க,
“காரணமா? காரணம் வேணும் இல்ல? மூணு வருஷத்துக்கு முன்னாடி நீங்க ஒன்னுமே பண்ணல இல்ல? நீங்க ஒன்னுமே பண்ணாம வீட்டை விட்டு ஓடுறதுக்கு நான் லூசு பாருங்க.. ப்ச்.. இப்போ பழசெல்லாம் எதுக்கு? என்னைய இறக்கி விடுங்க..” என்றவனின் கார் ஒரு வீட்டின் வாசலில் போய் நிற்க, எட்டிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
“இது.. இது..”
“ உன்னோட வீடு தான்..”
“அதெப்படி உங்களுக்கு தெரியும்?”
“இப்போ அது ரொம்ப முக்கியமா?” என்றவன் காரினை அவளது வீட்டு வாசலில் நிறுத்திய மறு நொடி, காரில் இருந்து குதித்து இறங்க முயன்றவளின் கையைப் பிடித்து தடுத்தவன்,
“மயூரி இங்க இல்ல..” என்று கூற, ஒரு நிமிடம் அவளது மூச்சு நின்று போனது.
“நீ.. நீ.. நீங்க என்ன சொல்றீங்க?”
“மயூரி இப்போ.. இங்க.. இல்ல..”
“அவளை.. அவளை.. என்னப் பண்ணீங்க? சொல்லுங்க.. அவ எங்க? என் பொண்ணை நீங்க என்னப் பண்ணீங்க?”
“அவ இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்கா.. டோண்ட் ஒர்ரி.. ட்ரீட்மெண்ட் போயிட்டுருக்கு..”
“ஹாஸ்பிட்டல்யா? அவ மயங்கி விழுந்ததாத் தானே சொன்னாங்க..”
“ம்ம்.. ஆமா..”
“என் பொண்ணுக்கு என்னாச்சு? சொல்லுங்க.. என் பொண்ணுக்கு என்னாச்சு?”
“அவ உன் பொண்ணா? அப்போ எனக்கு? சொல்லு.. அப்போ நான் யாரு? அரை நாள் நான் நம்ம பொண்ணை மறைச்சு வைச்சதையே உன்னால தாங்க முடியல.. மூணு வருஷம் முழுசா மூணு வருஷம்.. என் பொண்ணு கூட எனக்கு இருந்த மூணு வருஷத்தை திருடிருக்க.. உன்னை என்ன பண்ணலாம்?”
“மயூரி உங்கப் பொண்ணு தான்னு என்ன நிச்சயம்? ம்ம்.. சொல்லுங்க.. அவ உங்கப் பொண்ணுன்னு எனீன நிச்சயம்?”
“நீ பேசுறப் பேச்சுக்கு அப்படியே ஒன்னு வைச்சா என்னன்னு தோணுது.. ஏன்டி.. உன்னோட மூணு வருஷ ஜாதகத்தையே புரட்டிப் போட்டிருக்கேன்.. என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டுருக்க? மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே ஆதித்யா கரிகாலன், இப்பவும் இருப்பேன்னு நினைச்சியா? அப்போ என்னைய ஈசியா ஏமாத்துன மாதிரி இப்பவும் ஏமாத்தலாம்னு பார்க்குறியா?”
“யார்.. யாரை ஏமாத்துனா? மூணு வருஷத்துக்கு முன்னாடி ஏமாந்தது நானா? நீங்களா? ப்ச்.. இப்ப இதைப் பத்தி பேசுறதுக்கெல்லாம் நேரமில்லை.. என் பொண்ணை நான் பார்க்கணும்.. ப்ளீஸ் என்னைய கூட்டிட்டு போங்க.. ப்ளீஸ்..” என்று அழுதவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,
“சரி.. வா.. போகலாம்..” என்றவனை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவனுக்கு மாபெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. மருத்துவர் கூறியதைக் கேட்டதும் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் பாரதி.
அப்படி மயூரிக்கு என்னவானது? மயூரியை மீட்டெடுப்பார்களா? பிரியும் படி அவர்களது வாழ்க்கையில் என்ன நேர்ந்தது?
அத்தியாயம் 3
“டாக்டர்.. என் பொண்ணு..”
“யாரு?”
“மயூரி.. அவ தான் என் பொண்ணு..”
“ஓ.. மயூரி.. அந்த ரெண்டு வயசு பொண்ணு?”
“ஆமா.. அவளுக்கு என்னாச்சு டாக்டர்?”
“ஒன்னுமில்ல பதட்டப்படாதீங்க.. இங்கப்பாருங்க மிஸ்ஸஸ். ஆதித்யா.. இப்பத்தான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும்..”
“டாக்டர்? எனக்கு ஒன்னுமே புரியல.. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க.. ப்ளீஸ்..”
“ஹலோ டாக்டர்..”
“ஹலோ.. மிஸ்டர். ஆதித்யா கரிகாலன்.. ப்ளீஸ்.. சிட்டவுன்..”
“தாங்க் யூ டாக்டர்.. அப்புறம் எங்க பொண்ணு.. இப்போ எப்படி இருக்கா? எனி இம்ப்ரூவ்மெண்ட்?”
“ம்ம்.. பெட்டர் நவ்.. ஆனா, இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்..”
“டாக்டர்.. ப்ளீஸ்.. இங்க நடக்குது கொஞ்சம் சொல்றீங்களா? என் பொண்ணுக்கு என்னாச்சு?”
“மயூரிக்கு வந்திருப்பது கேன்சர்.. இயர்லி ஸ்டேஜ்..”
“வாட்? என் பொண்ணுக்கு கேன்சரா? அவ.. அவ.. சின்ன பொண்ணு.. வெறும் ரெண்டு கால் வயசு தான் ஆகுது..”
“இங்கப்பாருங்க மிஸ்ஸஸ் ஆதித்யா.. இப்போ கேன்சருங்குறது பிறந்த குழந்தைக்கு கூட வருது.. பட், இயர்லி ஸ்டேஜ்ல கண்டுபிடிச்சு.. ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டோம்னா.. க்யூராக வாய்ப்பிருக்கு..”
“இதை க்யூர் பண்ண நான் என்ன பண்ணனும்? சொல்லுங்க டாக்டர்..”
“நான் இல்ல.. நாங்க..”
“புரியல டாக்டர்..”
“இது ஒரு ஜெனிட்டிக் செல் வகையான நோய்.. சோ, இதை சி.பி.டி. முறையில க்யூர் பண்ண போறோம்..”
“சோ, கோர்ட் ப்ளட் ட்ராஸ்ப்ளான்ட்?”
“எக்ஸாக்ட்லி.. மிஸ்டர். ஆதித்யா..”
“டாக்டர்.. அதென்ன சி.பி.டி. முறை?”
“அது.. தொப்புள் கொடியின் இரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து புதிய செல்களை உருவாக்குறது.. இதுல ஹெச்.எல்.ஏ மேட்சாகுறது ரொம்ப முக்கியம்..”
“தொப்புள் கொடில இருந்தா? ஹெச்.எல்.ஏ மேட்சாகணுமா? அதெப்படி? யாராவது டொனேட் பண்ணுவாங்களா?”
“மிஸஸ் ஆதித்யா.. இந்த கேன்சரை குழந்தையோட டி என் ஏவோட மேட்ச் ஆகுறவங்களால தான் க்யூர் பண்ண முடியும்.. அதாவது குழந்தையோட சிபிலிங்க்ஸோட செல்களின் ஜெனிடிக் மரபுகள் (HLA) கூட மேட்சாகணும்..”
“அப்படினா நாங்க..”
“அஃப்கோர்ஸ்.. இன்னும் பத்து மாசத்துல.. மயூரிக்கு சிபிலிங்க் வேணும்.. அதுவும் உங்க ரெண்டு பேரோட டிஎன்ஏவோட..”
“டாக்டர்.. அதுவரைக்கும் மயூரியோட ஹெல்த்?”
“டோண்ட
ethu already upload pannitigga next epi podugga