அத்தியாயம் 2
வெளியே காரில் அவனுக்காக காத்திருந்தான் அவனின் பி. ஏ பிரதாப் அவனுடன் இருந்த டிரைவர் அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
“நம்ம அஜய் சாருக்கு என்ன ஆச்சு சார் ஏன் கொஞ்ச நாள்லா ஒரு மாதிரி இருக்காரு இப்போ ஹாஸ்பிட்டல் வேற போய்ருக்காரு” என்று கேட்க பிரதாப் தன் கையில் இருந்த மொபைலை பார்த்து கொண்டே “அதெல்லாம் உனக்கு எதுக்கு மாசம் பொறந்தா சம்பளம் வருதா பெரிய இடத்து விஷயத்துல எல்லாம் தலையிடாத வந்தோமா வேலையை பார்த்தோமான்னு போயிட்டே இரு” என்றான்.
அதே நேரம் அஜய்யும் அங்கே வர இருவரும் அமைதியாகிவிட்டனர் அதன் பின் அஜய் தன் வீட்டிற்க்கு சென்றான் அவன் வீட்டின் உள்ளே நுழையும் போதே அவன் முன் அவனின் தாய் லதா பெரிய பூசணிக்காயுடன் வந்தார்
“தம்பி அங்கேயே நில்லு ஊர் கண்ணே உன் மேல தான்” என்று கூறிக் கொண்டே திருஷ்டி சுத்த ஆரம்பித்தார் “மம்மி எனக்கு எதுக்கு இதெல்லாம்” என்று அவன் கேட்க “உனக்கு எதுவும் தெரியாது நீ சும்மா நில்லு டா” என்றவர் முழுதாக சுற்றி முடித்து “இப்போ உள்ளே போ” என்றார்.
அஜய் நடந்து வீட்டின் உள்ளே வர அவனின் தந்தை கிருஷ்ணன் அவனை மகிழ்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்தவர் “உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அஜய்” என்று கூற அவனோ ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்துவிட்டு மேலே தன் அறைக்கு நடந்து சென்றான்.
கிருஷ்ணனும் இவனுக்கு என்னவாயிற்று என்பதை போல் பார்த்து வைத்தார் மறுநாளில் இருந்து எப்போதும் போல் ஷூட்டிங் செல்ல ஆரம்பித்தான் அஜய் வாரத்தில் ஒரு முறை தவறாமல் கவுன்சிலிங் சென்றுவிடுவான் இப்படியே நாட்கள் நகர்ந்தன.
பணம் செல்வாக்கு புகழ் என்று அனைத்தும் இருந்தும் மனதில் நிம்மதி இல்லாமல் உறக்கம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தான் அஜய்
நாளுக்கு நாள் அவனின் நிலை இன்னும் மோசமாகியதே தவிர குறைந்த பாடில்லை தினமும் இரவு உறங்க முடியாமல் மொட்டை மாடிக்கு ஒரு இரண்டு மணி நேரம் தன் மனதை கலைக்க கால் வலிக்க நடந்துவிட்டு தான் வந்து படுப்பான் அதை அவன் தாய் தந்தையும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.
அன்று இரவு அஜய் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்தான் அவனின் தாய் லதா அவனுக்காக ஹாலில் அமர்ந்து காத்திருந்தார்
“என்ன மம்மி நீ இன்னும் தூங்கலையா” என்று கேட்க
“இல்லை டா கண்ணா உனக்கு ரெண்டு மூணு வரன் வந்துருக்கு
இதுல யாரை பிடிச்சிருக்குன்னு சொன்னா பேசி முடிச்சிடலாம்” என்றார்.
அவன் இப்போது இருக்கும் நிலையில் திருமணத்தை பற்றியே அவன் யோசிக்கவேயில்லை
அவர் கையில் இருந்த புகைப்படங்களை கோபத்துடன் ஒரு பார்வை பார்த்தவன்
“எனக்கு யாரையும் பிடிக்கலை மம்மி” என்று கூறிவிட்டு மேலே செல்ல போக “அஜய் உனக்கு எதாவது பிரச்சனையா எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட சொல்லு டா” என்று கேட்டார் லதா.
“மம்மி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போக
“பிரச்சனை எதுவும் இல்லாம தான் தினமும் நைட் மொட்டை மாடியில நடந்துட்டு வரியா” என்று அவர் கேட்க
“மம்மி பிளீஸ் என் கிட்ட இப்போதைக்கு எதுவும் கேட்க்காதிங்க” என்று கூறியவன் அவர் மறுவார்த்தை பேசும் முன்னே விறுவிறுவென மேலே தன் அறைக்கு நடந்து சென்றுவிட்டான்.
லதாவுக்கு ஒன்றும் புரியவில்லை தன் மகன் ஏன் இப்படி இருக்கிறான்
அவனுக்கு என்னவாயிற்று யாரிடம் கேட்பது என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தார்.
மறுநாள் அஜய் மற்றும் படப்பிடிப்பு குழு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி ஒன்றை படமாக்க அனைவரும் கடற்கரை ஒன்றுக்கு சென்றிருந்தனர்.
அஜய் தன் கேரவனில் இருந்து கிளம்பி வர இயக்குநர் அவனிடம் காட்சியை பற்றி விளக்கி கூற ஆரம்பித்தார்.
“அஜய் சாரி சீன் என்னன்னா ஹீரோயின் நீங்க அவங்க காதலை எத்துக்கலன்னு காதல் தோல்வியால மனம் உடைஞ்சு போய் கடல்ல விழுந்து சாக போறாங்க நீங்க அவன் பின்னாடி ஓடி போய் அவங்களை காப்பாத்தி டைலாக் பேசிட்டு அவங்க லிப்ஸ்ல கிஸ் பண்ணனும் இது தான் சீன்” என்று அவனிடம் விளக்க கூற அவனும் பதிலுக்கு சரி என தலையை ஆட்டினான்.
இயக்குனர் “ரோல் கேமரா ஆக்ஷன்” என்று கூற அந்த கதாநாயகி தண்ணீரில் விழ போக அஜய் அவளின் பின்னே ஓடிச் சென்று காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தான் “மேகா நீ இல்லன்னா நான் செத்துடுவேன் டி
நான் சும்மா தான் உன்னை பிடிக்கலைன்னு சொன்னேன் சாரி ஐ லவ் யூ டி” என்று கூறிக்கொண்டே கண்ணீர் விட்டு அவளை இறுக அணைத்தவன் அவள் அருகில் நெருங்கி அவளின் இதழில் முத்தமிட போனான் அவளின் ஈர உடை அவளின் அங்க வளைவுகளில் அவனின் கண்கள் அவனை அறியாமல் சென்றது.
‘இது தவறு’ என்று அவன் மனது எவ்வளவு கூறினாலும் அதை கேட்க்கும் மனநிலையில் அவன் இல்லை அந்த கதாநாயகியை இன்னும் நெருங்கி அவளின் இதழில் உண்மையாகவே முத்தமிட ஆரம்பித்தான் இதை சற்றும் எதிர்ப்பாராக்காத அந்த கதாநாயகி அவனை விலக்கி தள்ள பார்க்க அவனோ விடாமல் அவளை முத்தமிட டைரக்டர் “அஜய் சார் என்ன பண்ணுறிங்க” என்று கத்த அவன் காதில் எதுவும் விழுந்த பாடில்லை.
அந்த கதாநாயகி அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளியவள் அஜய்யின் கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்தாள் அதுவும் அங்கிருந்த கேமராவில் படமாக்கப்பட்டது
“பொறுக்கி” என்று அழுது கொண்டே அங்கிருந்து ஓடினாள்.
அவள் அறைந்த பின் தான் அஜய்க்கு சுயநினைவே வந்தது
அவனின் பி. ஏ பிரதாப்பும் அதிர்ச்சியுடன் இவை அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தான் அவன் மட்டுமல்ல அங்கிருந்த ஐம்பதுக்கு மேற்பட்டோர் இதை பார்த்து கொண்டும் தங்கள் மொபைலில் படம் பிடித்துக் கொண்டனர்.
அஜய் அவமானத்தில் கூனி குறுகி போய் நின்றிருந்தான் “என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே”என்று வருத்தத்துடன் கூறிவிட்டு “பேக்அப்” என்று கத்தினார் டைரக்டர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த காட்சி காட்டு தீயென ஊடகங்களில் பரவியது நெட்டிசன்கள் அஜய்யை போட்டு வருத்தெடுக்க ஆரம்பித்தனர் மாதர் சங்கங்கள் அவனுக்கு எதிராக போராட ஆரம்பித்தனர் அவனின் வீட்டு வாசலில் அவனுடைய உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
அஜய் தன் அறையில் இருந்து சோர்ந்த முகத்துடன் கீழே இறங்கி வர அவன் வீட்டு டிவியில் பெண் ஒருவர் அவனை பற்றி அவதூறாக பேசிக் கொண்டு இருந்தார்
“இந்த மாதிரி ஆளுங்களால தான் பெண்கள் இன்னும் வெளியே வராமையே இருக்காங்க ரொம்ப நல்லவன் மாதிரி வேஷம் போட்டானே பொறுக்கி இதனால தான் அந்த ஷில்பா பொண்ணு இவனை விட்டு போயிருக்கும் போல நான் கூட அந்த பொண்ணை தப்பா நினைச்சிட்டேன்” என்று ஆவேசமாக பேசிக் கொண்டு இருந்தார்.
இதை டிவியில் பார்த்து அவனின் தாய் லதா கண்ணீர் வடித்து கொண்டு இருக்க அவனின் தந்தை அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தார்.
அவனை பார்த்தவுடன் இருவரும் டிவியை நிறுத்தினர் அஜய் அவர்கள் முகத்தை கூட பார்க்க முடியாமல் தன் காரை எடுத்து பிரபல பார் ஒன்றுக்கு சென்றான் தன் சுயநினைவை இழக்கும் வரை குடித்தான் நேரே
மருத்துவர் வேல்முருகன் வீட்டுக்கு சென்றான்.
அவன் உள்ளே வருவதை பார்த்தவர்
“சாரி அஜய் நானும் விஷயத்தை கேள்விப்பட்டேன்” என்று கூற
“அங்கிள் நீங்க சரியாகிடும்ன்னு சொன்னதால தான நானும் சும்மா இருந்தேன் இப்போ ஊரே என்னை பொம்பளை பொறுக்கின்னு சொல்லது இனி நீங்க எதுவும் பண்ண வேண்டாம் நானே என் வாழ்க்கையை பார்த்துக்குறேன்” என்று கூறியவிட்டு வெளியே செல்ல அவன் பின்னே ஓடிவந்தார் வேல்முருகன் ஆனால் அவரை அவன் கண்டுகொள்ளவேயில்லை மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டான்.
மீண்டும் அதே பார்க்கு வந்து தன்னிலை மறக்கும் அளவுக்கு குடித்து கொண்டு இருக்க அவன் அருகில் நைசாக ஒருவன் வந்தான் “சார் பொண்ணு எதாவது வேணுமா” என்று கேட்க அஜய் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன்
“ம்ம்” என்றான்.
“என் கூட வாங்க சார் ஹிந்தி,மராத்தி,தமிழ்,தெலுங்கு, மலையாளம் எல்லாம் வித விதமா ரக ரகமா இருக்கு” என்று கூற அஜய் அவனுடன் சென்றான் அவன் தன் காரில் ஏறி அந்த புரோக்கரை பின் தொடர்ந்தான்.
அவன் நேரே அஜய்யை அழைத்து சென்றது நகரின் எல்லையில் அமைந்துள்ள ஒரு ஒதுக்கு புற பங்களாவுக்கு தான் அஜய் உள்ளே வர “எல்லாரும் வாங்க கஸ்டமர் வந்துருக்காங்க” என்று கூற வித விதமான பெண்கள் அனைவரும் அங்கே வந்து நின்றனர்.
இறுதியாக ஒரு 50 வயதுக்கு மேல் இருக்கும் ஒரு பெண்மணி ஒருவர் வந்து சோபாவில் நடுநாயகமாக அமர்ந்தார் அந்த புரோக்கர் அவரின் அருகில் ஓடியவன் “ரோசி அக்கா இன்னைக்கு இவரு தான் கஸ்டமர் சார் ரொம்ப பெரிய இடம்” என்றான்.
அஜய் அங்கிருந்த அனைவரையும் பார்த்தனுக்கு ஏனோ அவன் மனதுக்கு யாரையும் பிடிக்கவில்லை
“இங்கே வேற ஏதாவது பொண்ணு இருக்கா” என்று கேட்க ரோசி அவனை பார்த்து முறைத்தார்
“நீ என்ன சார் படம் எடுக்கவா பொண்ணு கேட்க்குற ஒரு ராத்திரிக்கு தான என் பொண்ணுங்க இவ்வளவு தான் இதுல எதாவது ஒன்னை கூட்டிட்டு போ சார்” என்றார் கோபத்துடன் வாயில் வெற்றிலையை மென்று கொண்டே.
“சார் எதாவது ஒன்னை பாருங்க ரோசி அக்கா கோவப்படுது” என்றான்
புரோக்கர் அப்போது சிறுபிள்ளை போல பாவடை சட்டை அணிந்து கொண்டு ஒருத்தி அங்கு வந்தாள் அவள் ரோசி அருகில் சென்று “அம்மா சாக்லேட்டை பிரிச்சி கொடு” என்று கேட்டாள் அவள் வாயில் ஏற்கனவே ஒரு சாக்லேட் இருக்க அவள் வாய் முழுக்க சாக்லேட் அப்பி இருந்தது.
“ஏய் ஒரு நாளைக்கு எத்தனை சாக்லேட் சாப்பிடுவ டி பல்லு சொத்தை வரும் போ” என்று ரோசி கூற “எனக்கு சாக்லேட் வேணும்” என்று அவள் அடம்பிடிக்க
அஜய் அவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான்
ஆண்கள் அணியும் தொள தொளவென்று இருந்த மேல்சட்டை ஒன்றை அணிந்து இருந்தாள் பாவடை ஒன்றை அணிந்து கொண்டு தலையை கொண்டையிட்டு இருந்தாள் ஒரு கையில் பாதி சாப்பிட்ட சாக்லேட் இருக்க இன்னொரு கையில் முழு சாக்லேட் பிரிக்காமல் இருந்தது அதை தான் ரோசியிடம் நீட்டி கொண்டு இருந்தாள்
“எனக்கு இந்த பொண்ணு வேணும்” என்றான் அஜய் அவளை பார்த்துக் கொண்டே.