ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

8

 

 குலை வாழைத் தோரணம் கட்ட வண்ண விளக்குகள் அலங்காரமிட, வாசலில் பந்தல் பாந்தமாக பொருந்த… விருந்தினர் வருகை உபச்சாரம்…  நலங்கு சடங்கு என  ஒரு வாரமாகவே திலோத்தமாவின் திருமண விழாக் கலைக் கட்டியது…

 

இந்த பக்கம் தையல் நாயகி என்ன சும்மாவா புள்ளி கோலத்துக்கே புரட்சி செய்தவர்  கல்யாணத்தை மட்டும் சும்மாவா செய்வார்… நீ இரண்டு வாழை மரம் கட்டுறியா நான் வாசலுக்கு ஒரு வாழை மரம் கட்டுறேன் நீ சீரியல் செட்டு போட்டா நான் விண்மீனையே விலைக்கு வாங்கி வீதி முழுக்க தோரணம் கட்டுவேன்… நீ வெறும் மைக் செட்டு தான போட்ட நான் சபா கச்சேரியே வைக்கிறேன் பாரு… என ஊரையே இவர்கள் வீட்டு திருமணத்தை பற்றி பேசும் படி  டாம்பீகமாக ஏற்பாடு செய்தார்…

 

 இவ்வளவு ஆர்ப்பாட்டமாக ஏற்பாடுகளை செய்த தையல் நாயகிக்கு  ஒரே ஒரு குறை… அது என்னவென்றால் திலோத்தமாவுக்கு குறித்த முகூர்த்தத்தில் அவரது மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை என்பதே…

 

 இவரது எண்ணமோ அல்லது விதியின் விளையாட்டோ… அவர் பார்த்த மாப்பிள்ளைக்கும் அந்த முகூர்த்த நாள் சேரவில்லை… சரி அந்த நாள் இல்லாவிட்டாலும் அதற்கு முன்பே ஏதாவது முகூர்த்தம்  இருக்குதா என்றால் அதுவும் அவர் விருப்பம் படி அமையவில்லை… எனவே விதியே என்று திலோத்தமாவின் திருமண முகூர்த்தம் கழித்து ஒரு நாள் பிறகு வரும் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என மாப்பிள்ளை வீட்டார் முடிவாக சொல்லிவிட மறுக்க முடியாமல் போனது தையல்நாயகியால்…

 

மேனகைக்கு முன் திலோத்தமாவின் திருமணம் என்பது தையல்நாயகிக்கு கொடுக்கு கொட்டியது போல் சுருக்கு என்று இருந்தாலும்… வெளி காட்டிக்கொள்ளவில்லை…

 

இதோ வருகிறான்…?? அதோ வருகிறான்…? அவன் வரட்டும் உங்களுக்கு இருக்குது!!! அவன் வந்தா என்ன ஆகுமோ…??? என்ன செய்ய போறானோ…?? என  ஆளுக்கு ஏற்றபடி  அவர்களின் எண்ணத்தை ஆக்கிரமித்த நாயகன் கிரிதரன் ஒருவழியாக இந்தியா வந்து இறங்கினான்… சென்னை வந்து இறங்கியவனை விமான நிலையத்திற்க்கு சென்று அழைத்து வரும்படி வண்டியை அனுப்பி வைத்திருந்தார் தையல் நாயகி…

 

 அவரே நேர சென்று அழைத்து வரத்தான்  ஆசை ஆனால் இங்கு திருமண ஏற்பாடுகள் எல்லாம் அவர் தலையில் அல்லவா விடிந்து விட்டது… எனவே மகன் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து  காத்து இருந்தார்…

 

ஐந்து வருடங்கள் முழுதாக இந்த மண்ணுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பே அற்று போனது… ஊரையும் உறவையும் விட்டு நாடோடிகளாக பறக்கும் பறவைக்கு அல்லவா சொந்த மண்ணின் அருமை தெரியும்… ஊரில் எவ்வளவோ மாற்றங்கள் எதுவுமே அவன் கருத்தில் படவில்லை… அவன் கருத்தில் பட்டது எல்லாம் பரத் திலோத்தமாவின் திருமண பிளக்ஸ் பேனர்கள் தான்… திரும்பிய பக்கம் எங்கும் அவர்கள் முகங்கள்… அதை கண்டவன் எப்படி உணர்கிறான் என்பதை பிரதிபலிக்கும் அவன் கண்கள் அங்கில்லை ஏதே கண்ணு இல்லையா??? அப்போ குருடனா??? கேக்காதீங்க மக்கா கண்ணாடி போட்டு இருக்கான்னு சொல்ல வந்தேன்… விலையுயர்ந்த அந்த கூலர்ஸ் அவன் அகத்தையும் சேர்த்தே மறைக்க உதவியது என்பது தான் மெய்…

 

கார் வந்துடுச்சி எக்கோ ஓடிவா ஓடிவா நம்ம கிரி தம்பி ஓடி வந்திடுச்சு…என உறவு பெண்ணின் உரத்த குரலில் துள்ளி ஓடி வந்தார் தையல் நாயகி கையில் ஆலம் எடுக்க தட்டு…

 

கார் அந்த சிமெண்ட் சாலையில் சறுக்கி கொண்டு வந்து சடன் பிரேக் போட்டு கீர்ச் என நின்றது…

 

கார் வந்து நின்றதும் அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவருமே கிரிதரனை காண ஆவலாக கூடினர்…ஊரை விட்டு ஓடி போனவன் எப்படி இருக்கான்…?? என்ன ஆனான்…?? என அடுத்தவன் கதை தெரிஞ்சிக்க ஆளாய் துடித்தனர்…

 

அவர்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஜம் என்று குதித்து இறங்கினான் கிரிதரன்…  ஒடிசலான தேகம் மறைந்து திடக்காத்திரமான உடல் கட்டும், பருவ மீசை மறைந்து புல்லு கட்டு மீசையும், மொத்தத்தில் விடலை பையன் கிரிதரன் மறைந்து அங்கு கட்டிளம் காளையாக வந்து நின்ற கிரிதரனை கண்டு அங்கு அனைவரும் வாயை பிளந்தனர்… பின்னே ஊரை விட்டு ஓடி போனவன் ஒண்ணுத்துக்கும் உதவாது திரும்பி வருவான் என எதிர்பார்த்தவர்களுக்கு… இப்படி வெளிநாட்டில் இருந்து வசதியாக திரும்பி வந்தால் காந்துமா இல்லையா.. அதுவும் அவன் சூப்பர் மாடல் போல் வந்து இறங்கினால் உள்ளே கிடந்து அவியுதே… குற்றம் குறை சொல்லி கொத்தி எடுக்கலாம் என்று பார்த்தால் அதற்கு வழியே இல்லாது அல்லவா வளர்ந்து நிற்கிறான்… 

 

ஆஆ என வாய் பிளந்து நின்ற கூட்டத்தின் புகைச்சலை கூட்டவே ஸ்டைலாக கண்ணாடியை கழற்றியவன்… தன் கர்வப் பார்வையை சுற்றி சுழல விட அவன் வட்டத்தில் வந்து விழுந்தது எதிர் வீட்டு ஜன்னல்… அங்கிருந்து யாரோ அவனை கவனிப்பது போன்ற உணர்வு சட்டென்று திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை… நிமிடத்திற்கும் அதிகமாகவே  அங்கு கண்களை பதித்தவன் மீண்டும் பார்வை திருப்பிக் கொண்டதும் தான் நிம்மதி பெரு மூச்சு விட்டது  திரைக்கு பின்னால் பதுங்கி கொண்ட அந்த உருவம்… வேற யாரு நம்ம திலோத்தமா தான் சரியா கண்டு பிடிச்சி இருந்தா உங்களுக்கு ஒரு சபாஷ்…

 

நீண்ட நாள் கழித்து மகனை பார்த்த சந்தோசத்தில் கை கால் புரியாது திண்டாடினார் தையல் நாயகி…

 

“ஏய்யா ராசா கிரி ராஜா எம்புட்டு நாள் ஆச்சு உன்னை இந்த கண்ணாரப் பார்த்து ஆளே இப்படி மாறி போயிட்டியே… என்னங்கடி அங்க நின்னு குசு குசுன்னு கிட்டு நல்லா வந்து கிட்ட பாருங்க எந்த வாய் எல்லாம் என் புள்ளைய உருப்பட மாட்டான்னு கரிச்சிக் கொட்டுச்சோ அந்த வாய்க்கு எல்லாம் மண்ணு அள்ளி போடுற மாதிரி என் புள்ள வெளிநாட்டுக்கு போய் ராஜா மாதிரி திரும்பி வந்து இருக்கான்… அடியே நல்லாக் கேட்டுக்கோங்கடி என் புள்ள இனி இங்க தான் இருப்பான்… அன்னைக்கு நாக்கு மேல பல்லு போட்டு பேசின வாய் எல்லாம் இப்ப வாங்கடி…என வரிந்து கட்டிக் கொண்டு தையல் நாயகி கோதாவில் இறங்கினார்… பல வருஷ காண்டு அவருக்கு 

 

 “அம்மா.??? ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கேன்.!!! என்னை இப்படியே வாசல்ல நிக்க வச்சு திருப்பி அனுப்ப போறீயா??? உள்ளக் கூப்பிடுற எண்ணம் இருக்கா.???இல்லையா.???”என கிரிதரன் போட்ட அமயத்தில் அடங்கி போனார் தையல் நாயகி…

 

உடனே சமாளித்து கொண்டு நான் ஒரு கூறு கெட்ட சிறுக்கி புள்ளைய வாசல்லே நிக்க வச்சி பேசிட்டு இருக்கேன்… செத்த இரு ராசா வெளிநாட்டிலிருந்து வந்திருக்க இந்த ஊர் சிறுக்கி கண்ணெல்லாம் உன் மேல தான் இருக்கும்… நீ அப்படியே நில் நான் திருஷ்டி கழிச்சுக்கிறேன் என்றவர் கொண்டு வந்த ஆரத்தியை கிரிதரனுக்கு சுற்றினார்…

 

அவனோ அதை தடுத்தவாறு கொஞ்சம் இருங்க… என் கூடவந்தவங்களுக்கும் சேர்த்தே சுத்துங்க என கார் கண்ணாடியை காட்டி இறங்கும் படி சமிக்ஞை கொடுக்க… காரை விட்டு இறங்கினர் ஆங்கிலேயர்கள் பாணியில் உடைய அணிந்த தாயும் மகனும்… உடை மட்டுமல்ல அவர்களும் வெளி நாட்டவர்கள் தான் என விளக்கி சொன்னது அவர்கள் தோற்றம்…

 

வெள்ளாவில் வைத்து வெளுத்தாலும் கிட்டாத தந்த நிறத்தில் தாயும்…மகனுக்கு கொஞ்சமாக அவளது சாயலும் கூடவே இந்திய வம்சத்தை சேர்ந்தவன் நான் என பறை சாற்றியது அவனது முடியும் நிறமும்…

 

இது என்னடி வெள்ளக் கார பொண்ணு கூட்டி வந்து இருக்கான்… ஏய் இவன் வெளிநாட்டு வேலைக்கு மட்டும் போகலை போல இந்த வெள்ளைக் கார பொண்ணை இழுத்துக்குனு வரத்தான் போனான் போல என அதுவரை வாய் பார்த்து இருந்த பெண்கள்…வாய் பேச ஆரம்பிக்கவும் விறைப்பாகி விட்டார் நாயகி…

 

“உங்க வெந்த வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்கடி…என்னனு தெரியாம ஆளாளுக்கு பேசிக்கிட்டு…போங்கடி அப்பால வந்துட்டாளுக என அவர்களை அடக்கினாலும் நாயகியின் மனதுக்குள் அடித்து கொண்டு தான் இருந்தது… எங்க இருந்து இந்த சிறுக்கிய இழுத்துக்கிட்டு வந்தான் பையன் வேற இருக்கே… அவனுடையதா??? அப்படினா எனக்கு பேரன் ஒரு வெள்ளைகாரி பெத்த மகனா??? நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா மாப்பிள்ளை வீட்டுக்கு என்ன பதில் சொல்வேன் என ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் படை எடுக்க அத்தனையும் சமாளித்து கொண்டு மூவருக்குமாக ஆரத்தி எடுத்தார் தையல் நாயகி…

 

இப்போ நம்ம வாய அடக்கினாலும் ஊரு வாய அடக்க முடியுமா…என அவர்கள் வம்பு பேசி கலைந்து செல்வதை கையால் ஆகா  தனத்துடன் பார்த்து நிற்க மட்டுமே அவரால் முடிந்தது…

 

 வம்பளந்த படி திரும்பி சென்ற பெண்களை சொடக்கிட்டு அழைத்த கிரிதரன்… இவள் யாருனு உங்களுக்கு தெரியணும் அவ்வளவு தான இருந்து எல்லாம் நல்லா கேட்டுட்டு போங்க… இவள் இந்த ஊருக்கு வந்த வெளிநாட்டு மருமகள் இவன் இந்த மண்ணின் மைந்தன் போதுமா…இப்போ போய் சந்தோசமா புறணி பேசுங்க… எப்ப எவன் கிடைப்பான்னு அலைய வேண்டியது…வகை தொகையா ஒருத்தன் கிடைச்சா அவனை கிண்டி கிட்னி புடுங்க வேண்டியது… இப்படி இருக்கிற வரைக்கும் இந்த ஊரும் மாற போறதில்ல இந்த நாடும் தேற போறதில்ல…என அவர்களை பழித்து விட்டு அவங்கள கண்டுக்காத நீ வா எலினா என அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி உள்ளே அழைத்துச் சென்றான்…

 

 ஏற்கனவே கலங்கி போனவர் மகன் சொன்ன செய்தியை கேட்டு ஆடிவிட்டார் தையல் நாயகி… அவர் ஒன்று நினைத்திருக்க அவர் மகன் அதில் மண்ணை அள்ளி போட்டு விடுவான் போலவே… இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற முடிவோடு அவர்கள் பின்னோடு சென்றார்… அவர் எண்ணம் பலிக்குமா??? வாய்ப்பே இல்லை…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top