ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

 

 

அத்தியாயம் – 3

 

 

சற்றென்று பேருந்து குழுங்கி நின்றதில் அனைவரும் என்ன என்று பார்க்க அங்கே ஒருவன் மற்றொருவனை அடித்துக்கொண்டு இருந்ததை பார்த்தவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

 

 

அமலா டீச்சர்ருக்கும் வள்ளிக்கும் இது புதுசாக இருக்க அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் அவர் என்னவென்று விசாரிக்க வள்ளி இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.

 

 

அப்பெண்மணியோ அந்த நேரத்து பொழுதுபோக்காக இவர் கேட்டதே போதும் என்று தனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்ல தொடங்கிவிட்டார்.

 

 

அதாவது என்னவென்றால் ஆறடி உயரத்தில் மாநிறமாக அய்யனார் கணக்காக இருப்பவன் பெயர் அழகர் என்றும் காளவாசல் முதல் மாட்டுத்தாவணி வரை மொத்த மதுரையையும் தனது கைக்குள் வைத்திருப்பவன். 

 

 

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் செய்து வருபவன் என்றும் மதுரையில் சுற்றி எங்கு எந்த பஞ்சாயத்து என்றாலும் அங்கே அழகரை தான் முதலில் அழைப்பார்கள் அவனுடைய முடிவு எப்போதும் ஒரு நிலையை சார்ந்திருக்காமல் நியாயமாக இருப்பதால் அனைத்து இடங்களுக்கும் அவனை தவறாமல் அழைத்து விடுவார்கள். 

 

 

அதற்காக அவனை ஏமாந்தவன் என்றும் எண்ணிவிட முடியாத அளவிற்கு காசு கொடுக்கும் போதே ஒரு தேதியை அவனிடம் கூறிவிட வேண்டும்.

 

 

அதற்கான கையெழுத்து முறைப்படி அவனது ஆட்கள் வாங்கி விடுவார்கள் அதற்கு ஒரு நாள் தாமதம் ஆனாலும் அவனது நடவடிக்கையை வேறு மாதிரியாக இருக்கும் அந்த அளவிற்கு தொழிலில் மிகவும் காராக இருப்பவன்.

 

 

சுயம்புவாக வளர்ந்து வந்தவனாக இருந்தாலும் வட்டி தொழில் செய்தாலும் சுய ஒழுக்கத்தில் அவனை மிஞ்சயாரும் கிடையாது

எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் பெண்கள் விஷயத்திலும் ராமனாக இருப்பவன்.

 

 

அவனது ஏரியாவில் உள்ள பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அவனது வீட்டு கதவை எந்த நேரம் வேண்டுமானலும் தட்டும் உரிமை அவர்களுக்கு உண்டு.

 

மதுரையை பொறுத்தவரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு அழகரின் தயவு கண்டிப்பாக வேண்டும் அந்த அளவிற்கு அழகரின் ஆட்சி அங்கு கொடி கட்டி பறந்தது.

 

இதை அனைத்தையும் அருகில் இருக்கும் பெண் பேசும்போது பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த டீச்சர் “ நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் இப்படி ரோட்டில் வைத்து துரத்தி அடிக்கிறது எல்லாம் ரவுடிசம் இல்லையா”

 

 

“இல்லங்க அழகர் வந்து கண்டிப்பா ரோட்டில் வைத்து அடிக்கிறான் அப்படின்னா இவன் வந்து பொண்ணுங்க விஷயத்துல ஏதாவது சில்மிஷன் பண்ணி இருப்பான் அதான் அவனை விரட்டிக்கிட்டு இருக்கான்” என்று தனக்குத் தெரிந்ததை கூறிக் கொண்டிருந்தார்.

 

 

 

பஸ் முழுவதுமே கொஞ்ச நேரத்திற்கு இதே பேச்சு பொருளாக தான் போய்க்கொண்டிருந்தது. 

 

 

இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டு பின் உறங்கி எழவும் காலையில் சென்னையில் வந்து சேரவும் சரியாக இருந்தது அருகில் இருந்த அவரது தோழியின் வீட்டிற்கு சென்ற இருவரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு பின்புறப்பட்டு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு சென்றனர். 

 

 

 

அனைத்து விஷயத்தையும் அமலா டீச்சரே பார்த்துக் கொண்டதால் வள்ளிக்கு இத பத்தின பெரிதாக கருத்துக்கள் இல்லை என்பதால் அவருடைய செயல்களுக்கு உடன்பட்டு அப்படியே செய்தாள்.

 

 

பத்து மணி போல் கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு சென்றவர்கள் அங்கு இவளின் மார்க்கை குறித்து பொறியியல் பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து அதுவும் மதுரையில் அவர்கள் விரும்பிய கல்லூரியிலேயே கிடைக்க மிகவும் திருப்தியுடன் வள்ளியை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினார்.

 

 

சென்னையையும் அங்குள்ள ஆட்களையும் பார்த்தவள் தனக்கு இந்த மாதிரி இடங்கள் எல்லாம் பொருந்துமா என்று சந்தேகமே வந்து விட்டது ஆனாலும் படிக்க வேண்டும் என்ற உந்துதல் சக்தி உள்ளுக்குள் இயக்கிக் கொண்டிருக்க அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என்று தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டு இருந்தால் வள்ளி.

 

 

அமலா டீச்சர் எப்பவும் வள்ளியை தனது மகளைப் போலவே கருதுவதால் அவள் படிப்பிற்கு செய்யும் ஒவ்வொரு வேலையையும் மிகுந்த ஈடுபாட்டோடும் ஆர்வமோடும் செய்தார்.

 

 

மீண்டும் மதுரைக்கு அழைத்து வந்து அவர்கள் கேட்ட கல்லூரியில் அட்மிஷன் போட்டு தங்குவதற்கு கல்லூரி ஹாஸ்டலில் இடம் பார்த்து சேர்த்த பின்பே அவர்களால் மூச்சு விட முடிந்தது.

 

 

அட்மிஷன் போடும்போதே அமலா டீச்சர் வள்ளியை பற்றிய அனைத்து தகவல்களையும் கூறி ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க இவளது மார்க்கை பார்த்த கல்லூரி நிர்வாகமும் தங்களால் முயன்ற முயற்சியாக இங்கு தனியார் தொண்டு நிறுவனங்களால் ஸ்காலர்ஷிப் எக்ஸாம் நடைபெறுவதாகவும் அதில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் அடுத்த நான்கு வருடத்திற்கு அவர்களே கல்லூரி கட்டணத்தை செலுத்துவதை பற்றியும் கூறினார்கள்.

 

 

அங்கு இருக்கும் மேனேஜ்மென்டில் இருப்பவர் “ நீங்க நல்ல நேரத்துக்கு தான் வந்து இருக்கீங்க அந்த எக்ஸாம் இன்னும் ரெண்டு நாள்ல இருக்க அதுல கலந்துகிட்டு நல்ல மார்க் வாங்க வேண்டியது உங்களோட பொறுப்பு” என்று கூறி ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ அவர்களிடம் நீட்டினார். 

 

 

நன்றி கூறி அதைப் பெற்றுக் கொண்டவர்கள் உடனடியாகவே அனைத்து தகவல்களையும் அதில் நிரப்பி சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து விட்டு வந்தனர்.

 

 

இரண்டு நாட்கள் இங்கேயே தங்க வேண்டும் என்பது இருவரும் யோசித்துக் கொண்டே வர “ டீச்சர் நீங்க எப்படி ரெண்டு நாள் தங்கறது ஊருல என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே”

 

 

“ அதெல்லாம் ஒன்னும் இல்ல வள்ளி பேசிக்கலாம் ஊரு தலைவர் கிட்ட இது உனக்கு கிடைச்சா அருமையான வாய்ப்பு அதை கெட்டியா புடிச்சுக்க வேண்டியதுதான் உன்னோட பொறுப்பு”

 

 

“ கண்டிப்பா டீச்சர் பரீட்சை எல்லாம் நல்லா எழுதிடுவேன் இப்ப எங்க தங்கறதுன்றது தான் யோசிக்கிறேன்”

 

 

“அத பத்தி நீ ஏன் கவலைப்படுற இங்க என்னோட இன்னொரு பிரண்டு வேலை பார்க்கிறார்கள் அவர்களிடம் எந்த ஹோட்டல் நல்லா இருக்கும் நான் போன் பண்ணி கேட்டுட்டு வரேன் நீ பத்திரமா இங்கேயே நில்லு” என்று கூறி சென்றார்.

 

 

அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை அருகில் வந்த டீச்சர் “வள்ளி கவலைப்படாத என் பிரண்டு கிட்ட பேசிட்டேன் அவள் அவங்க வீட்டிலேயே தங்கியிருக்கலாம் அப்படின்னு சொல்லி சொல்லிட்டா நம்ம எக்ஸாம் முடிச்சிட்டு உடனே ஊருக்கு கிளம்பி போயிருவோம்” என்றார்.

 

 

 

இருவரும் கிளம்பி அவரது தோழி கொடுத்த வீட்டு முகவரியை கண்டுபிடித்து ஆட்டோவில் சென்று இறங்கினர்.

 

 

அங்கு இருக்கும் அவரது மாமியார் வள்ளியை பார்த்து முகத்தை சுழிக்க அதை கவனித்த இருவருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தனர்.

 

 

உடனடியாக அங்கே வந்த அவரது கணவர் “அம்மா” என்று அழைத்து அவரது கருத்தை மாற்றும் பொருட்டு இந்த பொண்ணு தான் பிளஸ் டூவில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருக்கு அன்னைக்கு நியூஸ் பேப்பர்ல கூட உங்களிடம் காமிச்சேனே அது இந்த பொண்ணு தான் என்று கூற 

 

 

அதன் பிறகு அந்த அம்மாவின் பார்வையில் மாற்றம் வந்தாலும் அதை காண்பித்து கொள்ளாமல் சட்டென்று அங்கு இருந்து சென்று விட்டார்.

 

 

அதைக் கண்டு வள்ளிக்கு மனதில் மீண்டும் ஒருமுறை படிப்பின் முக்கியத்துவம் வந்து உணர்த்திவிட்டு சென்றது படிப்பு மட்டும்தான் தனது வாழ்க்கையே மாற்றும் கருவியாக எண்ணிக் கொண்டவள் அதை தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டாள். 

 

 

அன்று ஒரு நாள் மட்டும் இரவு அங்கு தங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டாள் அங்கு இருக்கும் நவீன வசதிகளும் அதை கையாளும் முறைகளையும் தெரியாமல் தடுமாற்றத்துடன் அந்த இரவை கடந்து வந்தாள்.

 

 

மறுநாள் காலையில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு நேராக காலேஜ் சென்றவர்கள் அங்கு இருக்கும் அனைத்து வழிமுறைகளையும் முடித்து விட்டு பரிச்சையை முடித்து அதற்கான முடிவை உடனே தெரிந்து கொண்டனர்.

 

“ எனக்கு தெரியும் வள்ளி உனக்கு கண்டிப்பாக ஸ்காலர்ஷிப் கடைக்கும்” என்று கூறியவர் சந்தோஷத்தில் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

 

அனைத்தையும் முடித்து ஒருமாதம் கழித்து காலேஜ் தொடங்கும்போது சேர்ந்து கொள்வதாக கூறி அவர்களது ஊருக்கு சென்றனர்.

 

 

அன்று காலையில் எழுந்த சின்னு கண்ணீர் மழையில் நனைத்துக்கொண்டு இருந்தாள் வள்ளியை இன்று வள்ளி காலேஜ் ஜாயின் பண்ணும் முதல் நாள் ஆகையால் அனைத்தையும் ரெடி பண்ணி இருக்கும்போது உதவுகிறேன் என்று பேர் சொல்லிக் கொண்டு வந்த சின்னு அழுது கொண்டே இருந்தாள்.

 

 

“ இப்ப என்ன புள்ள லீவு கிடைக்கும்போதெல்லாம் இங்க வந்துடறேன் நானு அதுக்காக இப்படி அழுதுகிட்டே இருப்பியா”

 

 

“இல்ல புள்ள என்னால தாங்கிக்கவே முடியல நாலு வருஷம் எப்படி எல்லாம் உன்னை விட்டு இருக்க போறேன்னு தெரியல”

 

“கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும் போக போக பழகிடும் நாலு வருஷம் நாலு நிமிஷமா போயிரும் நீ ஒன்னும் கவலைப்படாதே” இன்று ஆறுதல் கூறி தேற்றினாள்..

 

 

தனக்கும் உள்ளுக்குள்ளே கலங்கினாலும் சிறுவயதிலிருந்து ஒன்றாகவே சுற்றித்திரிந்த சின்னுவை தேற்றுவதே இப்பொழுது முதல் காரியமாகப்பட்டது.

 

 

சற்று நேரத்தில் அமலா டீச்சர் வந்துவிட பின் அனைத்தும் வேகமாக சுழன்றது அங்கிருந்த அவனைவரையும் கண்ணீருடன் நன்றி சொல்லி விடைபெற்று அவருடன் கிளம்பி மதுரையில் உள்ள பொறியியல் காலேஜில் சேர்த்து விட்டு ஹாஸ்டலிலும் கொண்டு போய்விட்டு வார்டனிடம் கொஞ்சம் பார்த்துக்கொள்ள சொல்லி கூறிவிட்டே சென்றார்.

 

 

 

அவர் இப்படி அவசரமாக கிளம்பவும் காரணம் இருந்தது இன்று அவரின் கீழ் செயல்படும் வகுப்புகளுக்கு இன்ஸ்பெக்ஷன் வருவதால் கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். 

 

 

அப்படியும் வள்ளி தான் போய் சேர்ந்து கொள்வதாக கூறியும் விட மனமில்லாதவராக அவசரமாக வந்து அனைத்தையும் பார்த்து திருப்தி பட்டு கொண்டே வள்ளியை சேர்த்து விட்டு சென்றார்.

 

 

தனக்காக இவ்வளவு செய்யும் இவரை நினைத்து வள்ளி வியக்காத நாளே இல்லை எதிர்காலத்தில் தாமும் எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் தன்னால் முடிந்த உதவியை தனது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

 

முதல் நாள் கல்லூரியும் சரி காலேஜ் ஹாஸ்டலிலும் சரி அவளால் சற்றும் பொருந்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அவளது ரூமில் இவளுடன் சேர்த்து மொத்தம் மூன்று பேர் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

 

 

முதலில் ரூமிற்கு சென்று நுழையும் போதே இவளை மேலேயும் கீழேயும் பார்த்தவர்கள் பின் அப்படி ஒருவள் தங்களது ரூமில் இல்லாதது போலவே நடந்து கொண்டனர். 

 

 

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தவள் கிளாஸ் ரூமிலும் இவளை ஒதுக்கி வைக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

 

 

பின் தன் மனநிலையை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனத்தை செலுத்தி அந்த மாதம் வந்த தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பின் தான் அனைவரின் பார்வையும் கொஞ்சம் மாற்றமானது. 

 

 

ஆனாலும் இவளிடம் வந்து யாரும் பேசவும் இல்லை இவளும் யார் கூடவும் பேசாமல் அமைதியாகவே காலேஜுக்கு சென்று வந்து கொண்டிருந்தாள். 

 

 

இவளது ரூமில் இருந்த இரண்டு பேரில் ஒருத்தருக்கு மெடிக்கல் சீட்டு கிடைத்து விட்டதால் இதை விட்டுவிட்டு அடுத்ததில் சேர சென்று விட்டாள். 

 

 

அதனால் தற்போது அந்த இடத்திற்கு வேறு ஒரு மாணவி இன்று வருகிறாள் அவளும் இப்போது இருப்பவர்கள் போலவே இருந்து

விட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே கதவை திறந்தவள் அங்கே நின்று இருந்தவளை கண்டு ஒரு நொடி அதிர்ந்து நின்று விட்டாள். 

 

 

கதை பற்றிய கருத்துக்களை கமெண்டில் என்னிடம் பகிரவும் நட்புகளே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “என்னை உனக்குள் தொலைத்தேனடி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top