அத்தியாயம் 16
அஜய் வந்து படுக்கையில் படுத்தவனுக்கு தன் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி ஏதோ ஒரு நிம்மதி கிடைத்ததை போல் உணர்ந்தான் அவன் பக்கத்தில் அவனின் மேல் சட்டை ஒன்று கிடந்தது அன்று மல்லிகா இங்கிருந்து செல்லும் முன் அணிந்திருந்த சட்டை அது அதை எடுத்து தன் மேலே போட்டு கொண்டவன் நிம்மதியாக கண்ணை மூடினான்.
தன் தவிப்பு வருத்தம் என்று மொத்தத்துக்கு காரணம் அவள் ஒருத்தி தான் என்பதை இப்போது தான் உணர்ந்தான் அவன் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது
“நான் உங்களை காதலிக்கிறேன்” என்று அழுத விழிகளுடன் அவள் கூறியது நினைவுக்கு வந்தது.
காதலிப்பதை விட காதலிக்கப்படுவது தரும் சுகம் ஆளாதி அதை தான் இப்போது அஜய் உணர்ந்து அனுபவித்து கொண்டு இருந்தான் ‘எனக்கு அவள் வேணும் அவள் மட்டும் தான் வேணும்’ என்று நினைத்து கொண்டு இருந்தான்.
மண்டபத்தில் பெண் வீட்டாரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அஜய்யின் பெற்றோர் திண்டாடி கொண்டு இருந்தனர்
அங்கிருந்த அனைவரும் அவர்களை கேள்வி கணைகளால் குத்தி கிழித்து கொண்டு இருந்தனர்.
அஜய்யின் அம்மா லதா நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டார்
பிரதாப் அவரை மருத்துவமனையில் அனுமதித்தவன் அஜயை போனில் அழைத்து விஷயத்தை கூறினான்.
அதே நேரம் ரோசியின் இல்லம் இரவு வேளை ஆண்கள் வரிசையாக வந்து அவர்களுக்கு பிடித்த பெண்களை அழைத்து சென்றனர்.
மல்லிகாவின் அக்காவை வேறோருவனுடன் மும்பைக்கு அனுப்பியிருந்தார் ரோசி அதனால் மல்லிகாவுக்கு அழுது புலம்பக் கூட யாரும் இல்லை தனியே அறையில் காலை கட்டிக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள்.
அப்போது அவளின் அறை கதவு திறக்கப்பட்டது யார் என்று நிமிர்ந்து பார்க்க அங்கு யாரோ ஒரு ஆடவன் அந்த அறையின் உள்ளே வந்து கதவை மூடினான் “யார் நீ” என்று பயத்துடன் மல்லிகா கேட்க “இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் உன் புருஷன் அப்படின்னு நினைச்சு என்னை சந்தோஷப்படுத்து” என்றான் அவன் தன் மேல் சட்டையை கழட்டி ஆணியில் மாட்டி விட்டு அவள் அருகில் நெருங்கி வர
“டேய் வெளியே போ டா” என்று மல்லிகா பத்ரகாளியாக மாறி தன் கண்ணில் ரெளத்திரத்துடன் கத்தினாள்.
“ஒழுங்கா வா டி” என்று அவள் அருகில் இன்னும் நெருங்கி வந்து அவளின் கைப்பிடித்து இழுக்க
மல்லிகாவுக்கு பயத்தில் கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது
“வேண்டாம் என்னை விட்டுரு நான் பிள்ளைத்தாச்சு பொண்ணு வயித்துல என் அஞ்சு மாச குழந்தை இருக்கு” என்றாள் தேம்பலுடன் அதை கேட்டவன் உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல் அவள் கையில் இருந்த தன் கையை எடுத்துக் கொண்டான் ஆணியில் மாட்டியிருந்த சட்டையை போட்டு கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தான்.
ரோசி வெளியே சோபாவில் அமர்ந்து இருந்தவர் “என்ன சார் அதுக்குள்ள வெளியே வந்துட்டிங்க” என்று வாயில் வெற்றிலையை மடித்து வைத்து மென்று கொண்டே கேட்டார்.
“ஒழுங்கா என் பணத்த கொடு மா” என்க ரோசி அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவர் “கொடுத்த பணத்தை எல்லாம் கொடுக்க முடியாது என்ன நடந்துச்சுன்னு சொல்லு” என்றார் கரார்ராக.
“அந்த பொண்ணு பிள்ளைத்தாச்சு பொண்ணு அதுக் கிட்ட போய் என்னை அனுப்பியிருக்க உனக்கெல்லாம் அசிங்கமா இல்லை நீயும் ஒரு பொம்பளை தான” என்று அவன் கேட்க ரோசிக்கு உடனே கோபம் வந்துவிட “இந்தா உன் காசு பொறுக்கிட்டு போ ஓவரா போசாத” என்று அவன் முகத்தில் தூக்கி எறிய அவனும் அவன் பணத்தை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
இப்போது அவரின் கோபம் மொத்தமும் மல்லிகாவிடம் செல்ல
தலையை கொண்டை போட்டுக் கொண்டு உள்ளே சென்றவர் மல்லிகாவின் முடியை கொத்தாக பிடித்து இழுத்து
“எழவெடுத்த மூதேவி போய் காசு பார்த்துட்டு வாடின்னு அனுப்பி வச்சா வயித்தையா நிரப்பிட்டு வந்து நிக்குற” என்று கேட்டுக் கொண்டே அவளின் இரு கன்னத்திலும் நாலு அறைவிட மல்லிகா அழுதுகொண்டே நின்றிருந்தாள்.
“அம்மா இது என் பிள்ளை தான நான் பெத்து என் கூடவே வச்சு வளர்த்துக்குறனே” என்றாள்
தேம்பலுடன் “ஏன் டி மூதேவி இங்க இருக்கவங்களுக்கே சோறு போட முடியலை இதுல நீ பெத்த சனியனுக்கு வேற நான் சோறு போடனுமா” என்று அவளின் முடியை பிடித்து இன்னும் வலிக்க இழுத்து சென்று ஒரு தனி அறையில் அடைத்து வைத்து பூட்டினார்.
அங்கே சுற்றி இருந்த பெண்கள் மல்லிகாவை பாவமாக பார்க்க அவர்கள் யாரையும் ரோசி கண்டு கொள்ளவேயில்லை.
“டேய் எவன்டா அங்கே” என்று குரல் கொடுக்க ஒரு தடியன் ஓடி வந்து அவரின் பக்கத்தில் நின்றான்
“சொல்லுங்க அக்கா” என்று கூற
“டேய் அந்த பிள்ளை கலைக்கிற டாக்டரை கையோடு கூட்டிட்டு வா டா” என்று வெற்றிலையை மென்று கொண்டு கூற.
“இதோ போறேன் அக்கா” என்று அவனும் அவரை அழைக்க சென்றான் அப்போது ரோசியின் அருகில் வந்த ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர்
“ரோசி வயித்தை பார்த்தா அஞ்சு மாச பிள்ளை மாதிரி தெரியுது இப்போ கலைச்சா மல்லிகா உயிருக்கு கூட ஆபத்தா முடியும் ஏற்கனவே போன மாசம் ஒரு பொண்ணு இப்படி தான் செத்துச்சு
என்ன தான் இருந்தாலும் உன் மகள் யோசிச்சு முடிவு பண்ணு” என்றார்.
“சந்தையில விலை போகாத மாடு இருந்து என்ன பண்ண போகுது கறிக்காவது உதவட்டும்” என்றார் எச்சிலை துப்பிவிட்டு வாயில் வெற்றிலையை மென்று கொண்டே.
‘இவள்லெல்லாம் பெண் தானா’ என்பதை போல் என்று ஒரு பார்வை பார்த்த அந்த பெண்மணி அமைதியாக சென்றுவிட்டார்.
அங்கிருந்த அனைவரும் மருத்துவர் வருவதற்காக காத்திருக்க அந்த பெண்மணி மட்டும் பின் வாசல் வழியாக மல்லிகா இருந்த அறைக்குள் சென்றார்.
மல்லிகா அவரை பார்த்து பயந்து கத்த போக “ஏய் கத்தாத நான் தான் சரசு” என்று அவளின் வாயை முடியவர் அவளின் வயிற்றில் தன் கை வைத்து கண் கலங்கியவர்
“இங்கிருந்து எங்கேயாவது தப்பிச்சு போய்டு நீ இங்கே இருந்தா உன் அம்மா உன்னையும் உன் பிள்ளையையும் கொன்னுடுவா” என்றார்.
“நான் எங்கே போவேன் எனக்கு யாரையும் தெரியாதே” என்று அவள் கண்ணீர் வடிக்க சரசு தன் இடுப்பில் இருந்த கைப்பேசியை எடுத்து அவளிடம் கொடுத்தார் இதுல எங்க அம்மா நம்பர் இருக்கு அவங்க கிட்ட எப்படியாவது போய்டு நான் எல்லாத்தையும் அவங்க கிட்ட சொல்லிட்டேன் சீக்கிரமா இங்கே இருந்து கிளம்பு” என்று அவளின் கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து அனுப்பினார்.
அதன் பின் சாதாரணமாக வந்து நின்று கொண்டார் மருத்துவ பெண்மணி வந்தவுடன் கதவை திறந்து உள்ளே வர மல்லிகா அங்கு இல்லை என்றவுடன் அங்கிருந்து அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது “சின்ன சிறுக்கி என் கிட்ட இருந்தே தப்பிச்சு போய்ட்டாளா அவளை சும்மா விடாதிங்க டா எங்கே இருந்தாலும் அவள் மயிறை பிடிச்சு இழுத்துட்டு வாங்க டா” என்று கத்தினார்.
அவரின் ஆட்கள் நான்கு மூலைக்கு ஓடினர் மெயின் ரோடுக்கு வந்த மல்லிகா அங்கு பேருந்து வர அதில் ஏறி சென்றுவிட்டாள் ஆட்கள் இங்கும் அங்கும் ஓடி அவளை தேட அவள் எங்கும் கிடைக்கவில்லை.
மருத்துவமனையில் தன் தாய்க்காக பதட்டத்துடன் வெளியே காத்திருந்தான் அஜய் மருத்துவர் வெளியே வர அவனும் அவன் தந்தையும் மருத்துவர் அருகில் சென்றனர்.
“மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்துருக்கு அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க இனிமே கொஞ்சம் கவனமா பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டு சென்றார்.
மருத்துவர் கூறியதை கேட்ட அஜய்யின் மனம் கலங்கியது இவை அனைத்துக்கும் தான் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவனை குத்தி கிழித்தது.
மறுநாள் காலை லதாவை டிஸ்சார்ஜ் செய்தனர் அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவன் தாயை கவனிப்பதிலேயே சென்றது
அஜய்க்கு இன்றாவது தன்னவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழ தன் காரை எடுத்து கொண்டு மல்லிகாவை பார்க்க சென்றான்.
அவளை தேடி நான் வந்திருக்கிறேன் என்றாள் என்ன நினைப்பாள் அவள் முகம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்துடன் அவளை பார்க்க ஆர்வமாக சென்றான்.
அஜய் காரிலிருந்து இறங்கியவன்
உள்ளே செல்ல போக “யோவ் அங்கேயே நில்லு நீயெல்லாம் பெரிய மனுஷன் தானா” என்று ரோசி கத்தினார்.
அஜய் உடனே அதிர்வுடன் அவரை பார்த்தவன் “என்ன நடந்துச்சு ஏன் இப்படி கத்துறிங்க” என்று கேட்டான்.
“உன்னை நம்பி அனுப்புனா என் பொண்ணு வயித்தை நிரப்பி அனுப்பியிருக்கியே நீயெல்லாம் நல்லா இருப்பியா இனி அதை கலைக்க எவன் செலவு பண்றது” என்று கேட்டார்.
“நீங்க என்ன சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியலையே” என்று அவன் கேட்க “மல்லிகா மாசமா இருக்கா
ஒன்னு இல்லை ரெண்டு இல்லை முழுசா அஞ்சு மாசம் கொஞ்சமாவது கவனமா இருக்க வேண்டாம்” என்று கத்தி கொண்டு இருக்க அஜய்க்கு சந்தோசம் தாளவில்லை.
தன் முன் இருந்த ரோசியை இடித்து தள்ளிவிட்டு வீட்டின் உள்ளே ஓடியவன் “மல்லிகா மல்லிகா” என்று கத்தி கொண்டு ஒவ்வொரு அறையாக தேடி பார்க்க அவள் எங்கேயும் இல்லை.
“யோவ் அவள் உள்ளே இல்லை ஓடி போய்ட்டா” என்று ரோசி சாதரணமாக கூற அஜய்க்கு கோபம் வந்து அவரின் கழுத்தை பிடித்து சுவரோடு சுவராக சாய்த்தவன் “சொல்லு அவளை என்ன பண்ணின” என்று கேட்க அவரின் அடியாட்கள் ஓடி வந்து அவனை பிடித்து தடுக்க அவனின் பலத்துக்கு அவனை அசைக்க கூட முடியவில்லை.
இன்னும் வேகமாக அவரின் கழுத்தை பிடித்து நெறித்தவன்
“சொல்லு அவள் எங்கே அவளை என்ன பண்ணின” என்று மீண்டும் கேட்டான்.
“அவள்…உண்மையாவே… ஓடி தான் போய்ட்டா ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்கே போனன்னு தெரியலை நாங்களும் தேடிட்டு தான் இருக்கோம்” என்று மூச்சு வாங்க கூறினார்.
அதன் பின் தான் அவரின் கழுத்தில் இருந்தே கையை எடுத்தான் அஜய்
“உங்க யாருக்காவது அவள் எங்கே போனான்னு தெரியுமா பிளீஸ் சொல்லுங்க” என்று கேட்க அங்கிருந்த யாரும் வாயவே திறக்கவில்லை ரோசிக்கு பயந்து நின்றிருந்தனர்
“உண்மையிலேயே எங்க யாருக்கும் எதுவும் தெரியாது” என்றார் சரஸ்வதி.
Appadaa malliha eppidiyo thappittchhu poitta