அத்தியாயம் 6
காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
“எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை அளிக்க, தன் இருகைகளையும் மார்பிற்கு குறுக்காக வைத்துக் கொண்டு, தன்னை மறைக்க முயன்றவள், அவன் புறம் அல்லாது, திரும்பி நின்றாள்.
“வேணாம்.. இங்க வேணாம்.. ப்ளீஸ்..” என்றவளின் கண்ணில் பழைய நினைவுகள் வந்தே போக,
“அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல..” என்றவன் பின்புறமிருந்து அவளை அணைக்க, மெய் சிலிர்த்தது அவளுக்கு. மூன்று வருடங்களுக்கு முன், இவ்வணைப்பில் தான் மயங்கி நின்றது ஞாபகத்திற்கு வந்தது. அவனது கைகள் அவளது இடையை அளக்க, கூசிச் சுருங்கியது அவளது தேகம். அவனது முகத்தாடை, அவளது தோளில் வைத்து தேய்க்க, உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவனது இதழ்கள் அவளது தோள் வளைவில் அழுத்தமாக பதிய, அவளோ கூச்சம் தாங்காது, தனது இதழை கடித்துக் கொண்டாள். அவனது மீசை முடி குத்த, மீண்டும் மீண்டும் மெய்சிலிர்த்தது. அவனது மூச்சுக் காற்று பின்னங்கழுத்தில் அறைந்து மோத, நிற்க தள்ளாடினாள் மாது. அவனது கைகள் முன்னேறி, அவளது கைகளோடு இணைந்தன. தன் உயிர் பொக்கிஷங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் கைகளை எடுத்தவன், அதன் விரல் நுனியில் இருந்து முத்தக் கவிதை வடிக்க, அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் மங்கை. அவளது செவ்விதழ்களை விரல்களால் அவன் வருட, அவனது தொடுகை அவளது உள்ளாங்கால் விரல் வரை மின்சாரம் போல் பாய்ந்தது. அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன், படுக்கையை நெருங்க, அவனது முகத்தையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஆணிடம் இருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன? சொந்த வீடா? காரா? பணமா? சொத்துக்களா? இல்லையே.. உன்னுடன் எப்போதும் நானிருப்பேன்.. என்ற பக்கத்துணையைத் தானே! ஒவ்வொரு ஆணும் தன் மனைவி தன்னையை தோழியாக, சக மனுஷியாக நடத்தினாளே போதுமே.. அவனுடன் இறுதி வரை, சாவையும் தாண்டி வருவாளே.. ஆனால், அவனோ, தன் குடும்பத்திற்காக, தனக்காக அவள் மாற வேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறான்? அவள் செய்யாத ஒன்றை செய்தாளென்று ஊரும் உறவும் கூறும் போது, இல்லை என் மனைவியைப் பற்றி நீ பேசாதே.. என்று கூறியிருந்தால், அவர்களுக்குள் மூன்று வருட பிரிவு வந்திருக்காதே.. இறுதியாக அவனை விட்டு அவள் பிரிய வேண்டும் என்று முடிவெடுத்தது எதனால்? அந்த காட்சி அவளது கண் முன்னே தோன்ற, இதுவரை அவனது தொடுகைக்கு குழைந்து போயிருந்த தேகம், இரும்பாக இறுகியது. இதுவரை சுகமாக தெரிந்த, அவனது அணைப்பு, இப்போது சுடுகோலாக சுட்டது. அவனிடம் இருந்து விலக முயன்றவளை இறுக அணைத்தவன, அவளது காதோரம்,
“மயூரிக்காக..” என்று கூற, சர்வமும் அடங்கியது. தன் குழந்தைக்காக என்று நினைத்து படுத்திருந்தவளின் உடல், மரக்கட்டையாக மாற, அவளது மாற்றத்தை உணர்ந்தவனுக்கு கோபம் வந்தது. தான் என்ன செய்துவிட்டோம் என்று, இவள் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று தான் நினைத்தான். ஆனால், அவனுக்கு தெரியாத ஒன்று, பெண் என்பவள் மகாசக்தி.. அவளாக நினைத்தால் ஒழிய, வேறு யாராலும் அவளது உணர்வுகளை தூண்ட முடியாது. அவளது கன்னத்தை மென்மையாக பற்றியவன்,
“வேற எதையும் நினைக்காத.. நீ மட்டும் தான் என் மனைவி.. உன்னை தவிர வேற யாரையும் இது வரைக்கும் மனசால கூட, நான் நினைச்சதில்ல.. எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்.. என் மேல நீ வைச்சிருக்கும் காதல்.. அது ரொம்ப பிடிக்கும்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என்று கூறியவாறே முன்னேற, அவளது உடலும் தளர்ந்து, அவனுடன் குழையத் தொடங்கியது. அவளது மனதில் தோன்றிய எண்ணங்களை வலுக்கட்டாயமாக தள்ளி வைத்தாள். இப்போது அவள் கண் முன்னே இருப்பது, அவளது ஆதித்யா கரிகாலன்.. யாரை சிறு வயதில் இருந்து, நெஞ்சில் வடித்து, வாழ்ந்து வந்தாளோ.. அதே ஆதித்யா கரிகாலன்.. அவளுக்கு மட்டுமே சொந்தமானவன்.. அவளை மடி தாங்கி வளர்த்தவன்.. அவளுக்காக வாழ்பவன்.. அவனுக்காக தன்னை கொடுப்பதில் மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள். மெய்யோடு மெய் சேர்த்து, உயிரோடு உயிர் கோர்த்து, சில வருடங்களானாலும், அவளது பெண்மை, அவனுக்கு இன்பமே கொடுத்தது. அள்ள அள்ள குறையாதது அட்சய பாத்திரம் மட்டும் தானா? மங்கையவளின் தேகமும், ஆண்டவன் அள்ள அள்ள குறையாத சுகத்தை அவனுக்கு வழங்கியது. உடலில் இருக்கும் ஆடை களைந்து, கலைத்து புதிய உயிருக்கு வித்திட்ட, இருவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, ஆதித்யா கரிகாலனின் கைப்பேசி அழைத்தது. அதனை எடுத்து காதில் வைத்தவன், தன் அருகில், தன் கையணைப்பில் உடலெல்லாம் வியர்த்து, உறங்கிக் கொண்டிருப்பவை பார்த்தான். அவளை எழுப்ப மனமில்லாது எழுப்பினான்.
“திவி.. திவி..”
“ம்ம்..”
“சீக்கிரம்.. எந்திரிச்சு.. குளிச்சு, கிளம்பு..”
“ஏன்? எதுக்கு? பாப்பா? பாப்பாக்கு என்ன?”
“ப்ச்.. பாப்பாக்கு ஒன்னுமில்ல.. வடிவக்கா படியில இருந்து உருண்டு விழுந்துட்டாங்களாம்.. அனிதா போன் பண்ணா.. அவளை போய் பார்க்கணும்.. கிளம்பு..”
“ப்ச்.. அவ்வளவு தானா? நான் கூட என்னமோ? ஏதோன்னு பயந்துட்டேன்.. எனக்கு தூக்கம் வருது.. நான் வரலை..”
“ப்ச்.. உன்னைய எப்படி நான் தனியா விட்டு போறது?”
“அப்போ.. என்னைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.. நான் பாப்பாவை பார்த்துக்குறேன்.. நீங்க போய் அவளை பார்த்துக்கோங்க..”
“கொஞ்சமாவது மனசாட்சியோட பேசு.. அவங்க தான் உன்னைய சின்ன வயசுல இருந்து, தூக்கி வளர்த்திருக்காங்க.. அவங்க உன்னோட சித்தி.. அதையும் மனசுல வைச்சுக்கோ..”
“அது மனசுல இருக்குறனால தான் வரலைங்குறேன்.. உங்களுக்கு வேணும்னா நீங்க போங்க.. என்னைய எதுக்கு, சும்மா துணைக்கு கூப்பிடுறீங்க..”
“ஏய்.. உன்னை..” என்றவன் கோபமாக பேசிக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் கைப்பேசி சிணுங்க, அதனை எடுத்து காதில் வைத்தவன்,
“ஓகே.. நான் டேவிட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்.. நீங்க கிளம்பி போங்க.. நாங்க பின்னாடியே வர்றோம்..” என்று பதில் அளித்து விட்டு,
“சீக்கிரம் கிளம்பு..” என்று உத்தரவிட்டு, கிளம்பச் சென்றான். அவனது விருப்பத்திற்கு மாறாக இங்கு எதுவும் நடக்காதே! அவனை வாயிற்குள் வசைபாடியபடியே தானும் அவனுடன் கிளம்பினாள். மருத்துவமனைக்குள் கார் நுழைந்ததுமே, தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள். வடிவழகியிருக்கும் அறை வந்ததும் வாசலிலேயே நின்று கொண்டாள். ஏனென்று கேள்வியாக பார்த்தவனுக்கு,
“நீங்க மட்டும் போங்க.. நான் வரல..” என்று எங்கோ பார்த்தவாறு பதில் அளித்தவளின் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அவர்கள் உள்ளே நுழைந்ததும்,
“மாமாஆஆஆ..” என்று அழுதவாறே ஓடிவந்து, அவனது மார்பினில் சாய்ந்து கொண்டாள் வைஷ்ணவி. அதுவரை இறுக்கமாக பற்றியிருந்த பாரதியின் கையை, சட்டென விட்டவன், தன் மார்பினில் அழுது கொண்டிருந்தவளை தாங்கி பிடிக்கலானான். அதை பார்த்தவளுக்கு அவன் மீதான, அவநம்பிக்கை இன்னும் அதிகமானது.
“இவரும்.. சராசரி ஆம்பிளை தானே? கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வாப்பாட்டி வைச்சுக்க தானே செய்வாரு.. இவரைப் போயி நம்பினியே? உனக்கு எத்தனை தடவை பட்டாலும் புத்தியே வராது..” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், அவனிடம் இருந்து மெல்ல விலகி, அறைக்கு வெளியே வந்தாள். முகத்தில் வெறுப்புடன் செல்லும் பாரதியை, ஓரக்கண்ணால் பார்த்திருந்த வைஷ்ணவியின் இதழோரம் மின்னி மறைந்தது புன்னகை. ஆதித்யா கரிகாலனிற்கு தான் தூக்கி வளர்த்த அக்கா மகளை தாங்குவது ஒன்றும் புதிதாக தோன்றவில்லை.. அவனை பொறுத்தவரை அனிதாவும் வைஷ்ணவியும் ஒரே மாதிரி தான். ஆனால் பாரதி, அவள் அவனுக்கு அக்கா மகளாக இருந்தாலும், அவளுடன் அவனுக்கு ஏற்படும் உணர்வு, இதுவரை யாரிடமும் தோன்றவில்லை.. தோன்ற போவதுவுமில்லை.. ஆனால், பனமரத்திற்கு கீழ்நின்று பாலை குடித்தாலும், கள்ளை தான் குடித்தான் என்று சாதிக்கும் உலகமிது.. அப்படிப்பட்ட உலகில் தான் இன்னமும் சீதைக்கேற்ற ராமனாக தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க முடியுமா? அப்படியே நிரூபிக்க முயன்றாலும் உலகம் நம்புமா? உலகம் நம்புவது இருக்கட்டும், முதலில் பாரதி நம்புவாளா? அதற்கு அவன் ஆஞ்சநேயரை போல் தன் இதயத்தை திறந்து காட்ட
வேண்டுமே? அதை செய்வானா இரும்பு இதயம் கொண்ட ஆதித்யா கரிகாலன்?
அத்தியாயம் 7
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட தன் மகளை வெளியில் இருந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. தான் ஆசையாக ஈன்ற மகளுக்கு திவ்ய பாரதி என்று பெயரிட்டார் வளர்மதி. வீடு, கம்பெனி மற்றும் குடும்பம் என்று அனைத்தையும் அழகாக பார்த்துக் கொண்டார். ஹரிதாஸ் தன் மனைவி வளர்மதி மீதும் மகள் திவ்ய பாரதியின் மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்தார். யார் கண் பட்டதோ, அழகான தேன் கூடு கல் வீசியது போல் கலைந்து போனது வடிவழகியின் வருகையால். வடிவழகியும் வளர்மதியும் வள்ளியம்மை பெற்றெடுத்த இருமலர்கள். சிறு வயதில் இருந்தே வடிவழகிக்கு வளர்மதியின் மீது சிறு பொறாமை உண்டு. வளர்மதிக்கு என்று வள்ளியம்மை எது வாங்கினாலும், அதை உடனே தனக்கு வேண்டும் என்று அடம்பிடிப்பார். கிடைத்து விட்டால், ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல் அதனை மீண்டும் வளர்மதியிடமே கொடுத்து விடுவார். கிடைக்கவில்லையென்றால் அதை வழுக்கட்டாயமாக அடைய முயற்சிப்பார், அதுவும் முடியவில்லை என்றால் அப்பொருளை யாருக்கும் கிடைக்காது அழித்துவிடுவார். அவரது இந்த பழக்கம் வளர்மதியின் மீது, நாளாக நாளாக குரோதமாக வளர்ந்தது. வளர்மதிக்கு கிடைக்கும் அனைத்தும் தனக்கு கிடைக்க வேண்டியதாக நினைத்தார். அவரை போட்டியாளராக நினைத்து, அவரிடம் இருப்பதை எல்லாம் அடைய நினைத்தார். வளர்மதியின் அழகான குடும்பத்தை தனதாக்கிக் கொள்ள நினைத்தார். வளர்மதிக்கு தெரியாது, அவரது சாப்பாட்டில் மெல்ல கொள்ளும் விஷத்தை கலந்தார். தன் தங்கையை முழுவதுமாக நம்பிய வளர்மதியோ, தான் இறக்கும் தருவாயில், திருடன் கையிலேயே சாவியை கொடுத்தது போல், ஹரிதாஸையும் திவ்யபாரதியையும் அவரிடமே ஒப்படைத்து விட்டு சென்றார். முதலில் ஹரிதாஸின் கவனத்தை தன்பக்கம் இழுப்பதற்காக, திவ்யபாரதியின் மீது அன்பை பொழிந்தவர், வைஷ்ணவியை கருவுற்ற பிறகு, மெல்ல குடும்பச் சூழலை தன் பக்கம் திருப்பி கொண்டார். ஹரிதாஸின் முன்னால் திவ்யபாரதியோடு பாசமாக இருப்பதாக நடிப்பவர், அவர் வீட்டில் இல்லாத நேரம், வேலைக்காரியை விட கீழாக நடத்தத் தொடங்கினார். அறிந்தோ அறியாமலோ வள்ளியம்மை செய்த ஒரே காரியம், ஆதித்யா கரிகாலனின் விருப்பத்திற்கேற்ப வடிவழகியோடு அமெரிக்காவிற்கு சென்றது. வளர்மதியின் நினைவாக, திவ்ய பாரதியை, தன் வீட்டில் வைத்துக் கொண்டார். உள்ளூரில் திவ்ய பாரதியை ஏதேனும் கொடுமை செய்தால், வளர்மதியின் விசுவாசிகளின் மூலம், அது தன் கணவருக்கு தெரிந்து விடுமோ, என்ற பயத்தில் தன் கணவருடன் அமெரிக்காவிற்கு வந்து குடியேறிய இருந்தார் வடிவழகி. பல இன்னலுக்கு மத்தியில் வளர்ந்து கொண்டிருந்த திவ்யபாரதிக்கு பக்கபலமாக இருந்தது ஆதித்யா கரிகாலன் மட்டுமே. அவன் மட்டும் இல்லாவிட்டால் திவ்யபாரதி இறந்த இடத்தில் இன்று பெரிய ஆலமரமே முளைத்திருக்கும். தன் தாயை நினைத்து அழுபவளை தன் மடியில் போட்டு தூக்க வைப்பான். பசித்தவளுக்கு உணவூட்டுவான். அவளது பிறந்த நாளை ஞாபகம் வைத்து, அவளுக்கு பரிசுகள் வழங்குவான். பள்ளியில் யாரும் அவளை எதுவும் சொல்லிவிடாதவாறு பக்கபலமாக இருந்தான். இரட்டை சடையில், பாவாடை சட்டையில் சுற்றித் திரிந்தவளுக்கு பாதுகாப்பு வளையமாய் இருந்தவனும் அவனே.. அவளுக்கும் ஆதித்யாவிற்கும் ஏழு வயது இடைவேளி இருக்க, அவளுடைய காடியனாக, அவளை தனது பொறுப்பிற்குள்ளவளாக நினைத்து, அரவணைத்துக் கொண்டான் ஆதித்யா கரிகாலன். அவளுக்கு செய்யும் அனைத்தையும் தன் அக்கா வளர்மதிக்கு செய்யும் பிரதிபலனாக நினைத்தான். அவளை சுற்றியே எப்போதும் இருக்கும் அவனது நினைவுகள். அவளது வாழ்வின் அனைத்து இடங்களிலும் ஆதித்யாவின் பெயர் நீக்கமற நிறைந்திருக்கலானது. அவனது வாழ்விலும் மனதிலும் திவ்ய பாரதியே நிறைந்திருந்தாள். வள்ளியம்மையை பொறுத்தவரை திவ்யபாரதியும் வைஷ்ணவியும் ஒன்று தான்.. இருவரின் மீதும் சரிசமமாக பாசம் வைத்திருந்தார். ஆனால், ஆதித்யாவிற்கோ, வைஷ்ணவியின் மீது பாசம் இருந்தாலும், அதை விட அதிகமாக திவ்யபாரதியின் மீது பாசமும் அக்கறையும் கொண்டிருந்தான்.. அவளால் தான் அவனது உலகம் சுழன்றது. இதை பார்க்க பார்க்க, வடிவழகிக்கு திவ்யபாரதியின் மீது இருந்த பொறாமையும் குரோதமும் இன்னும் அதிகமானது. வைஷ்ணவிக்கு திவ்யபாரதியின் மீதிருந்த போட்டி, வன்மமாக மாறியது. ஆதித்யா கரிகாலன் இல்லாத நேரத்தில், திவ்ய பாரதியை யாருக்கும் தெரியாது கொடுமைகள் செய்ய ஆரம்பித்தார். வைஷ்ணவியோ அவளை அடிமையாக நடத்தினாள். இவர்களுக்கு பயந்தே, பெரும்பாலும் திவ்யபாரதி வள்ளியம்மையுடன் அவரது வீட்டில் தான் இருப்பாள். ஆதித்யா கரிகாலன் வெளியூர் செல்ல நேரிடும் போது மட்டுமே வடிவழகியின் வீட்டிற்கு செல்வாள். பொழிவுடன் தந்தை வீட்டிற்கு செல்லும் திவ்ய பாரதி, மீண்டும் ஆதித்யா கரிகாலனின் வீட்டிற்கு வரும் போது, பொலிவிழந்து, உடல் மெலிந்து காணப்படுவாள். இதனை கவனித்த ஆதித்யா கரிகாலன், அவளை வடிவழகியுடன் அவர்களது வீட்டிற்கு அனுப்பாது, தன்னுடனே வைத்துக் கொள்ள தொடங்கினான். அவளது ஏழு வயதில் தன்னோடு அமெரிக்கா அழைத்துச் சென்ற வடிவழகி, ஆதித்யா கரிகாலனும் வள்ளியம்மையும் தன்னுடனே வருவார்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திவ்யபாரதிக்கு பாதுகாப்பு வளையமாக மாறுவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தான் இறந்தும், தன் மகளை ஆதித்யா கரிகாலனின் மூலம், வளர்மதி பாதுகாப்பதாக நினைத்தார். சரியான நேரத்திற்காக காத்திருக்கலானார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஆதித்யா கரிகாலன், தனது பதினெட்டு வயதிலேயே தனது பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்திருந்தான். சரியாக அதே நேரத்தில், பருவம் எய்தவளுக்கு தாய்மாமனாக இருந்து செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தான். யாருடன் பழக வேண்டும், யாரிடம் இருந்து எட்டி நிற்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவனுக்கு தெரியவில்லை, அவனை அவள் உயிரில் செதுக்கி வைத்திருக்கிறாள் என்று..தொழில் காரணமாக எங்கு சென்றாலும், திவ்ய பாரதிக்கு பாதுகாவலனாக இருந்தான் ஆதித்யா கரிகாலன். இதனைப் பார்த்து பொறுக்க முடியாத வடிவழகி, ஆதித்யா கரிகாலனின் இருபத்தியைந்து வயதில், அவனது திருமணத்தைப் பற்றி பேச, ஆதித்யா கரிகாலனின் கண் முன்னே வந்து போனது திவ்ய பாரதியின் முகம் தான். பின்னர் அவளது வயதை பற்றி நினைத்தவன், தன்னைத் தானே திட்டிக் கொண்டான். தனது திருமணத்திற்குப் பிறகு, அவளை நன்றாக பார்த்துக் கொள்ள முடியுமா? என்ற கவலையே அவளைப் பற்றி தான் நினைக்கக் காரணம் என தனக்குள் எண்ணிக் கொண்டான். அவனோடு சிறு வயதில் இருந்தே ஒரே வகுப்பில் பயின்ற அனிதாவிற்கும் அவனுக்கும் மணமுடிக்கவென்று வள்ளியம்மை முடிவு செய்து, திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்க, யாரையோ திருமணம் செய்வதற்கு பதிலாக, தன்னோடு சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்த அனிதாவை திருமணம் செய்வது நல்லதென நினைத்தான். அனிதா, திவ்யபாரதி தன்னுடன் இருப்பதற்கு தடை விதிக்க மாட்டாள் என நம்பினான். ஆனால், ஆதித்யாவின் திருமணத் தகவலைக் கேட்ட, திவ்யபாரதிக்கோ திக்கென்றானது. மலர்ந்த பூவையும் மங்கையின் காதலையும் மறைக்க முடியுமா? எப்படி தன் மனதில் இருப்பதை தன் மாமனுக்கு தெரிவிப்பது என்றெண்ணியவளுக்கு, அதனை அவனிடம் கூறத் தான் தைரியம் வரவில்லை. எங்கே தன் மனதில் இருப்பதை கூறினால், தன்னை வீட்டை விட்டு அனுப்பிவிடுவானோ? தன்னோடு பேசமாட்டானோ? என்ற ஐயம் எழ, மேலும் பதினெட்டு வயதான திவ்யபாரதியை அவன் ஏற்றுக் கொள்வானா? அவனது கம்பீரமும் நிமிர்ந்த நடையும், சிரித்த முகமும், தெளிவாக முடிவெடுக்கும் பண்பும், தேவைப்படும் இடத்தில் இரக்கப்படுபவனின் உறுத்தாத மற்றும் உறுதியான பார்வையும், தொலைநோக்கு சிந்தனையும், கண்ணியமான நடத்தையும், மற்றவரை புரிந்துகொள்ளும் தன்மையும் பல கன்னிப் பெண்களின் மனதில் கனவு நாயகனாக உலா வரச் செய்ய, அவனது உலகைப் பற்றிய புரிதல்,
சூழ்நிலையை கையாளும் திறன்,
கோபத்தை கட்டுப்படுத்தும் வீரம்,
ரசிக்கும்படியான நகைச்சுவை, இவை யாவும் சற்று அதிகமாகவே இருக்கும், அவனுக்கு அவள் ஏற்றவளா? என்ற ஐயத்தை அவளுக்கு வரவழைத்தது. அவனை பார்த்து கொண்டிருந்தால் போதும் என்று எண்ணிருந்தவளுக்கு ஆதித்யா கரிகாலனின் திருமணம் இடியாய் வந்து இறங்கியது. உணர்வுவடிவழகிக்கு பயந்து தன் மன எண்ணங்களை தனக்குள் வைத்து புதைத்துக் கொண்டு வளர்ந்தவளுக்கு, அவனை இழக்கவும் மனம் வரவில்லை. திருமணத்திற்காக ஆதித்யா கரிகாலனினுடன் அனைவரும் வள்ளியம்மையின் சொந்த ஊரான சிவகங்கை சீமைக்கு வந்திறங்க, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. நடக்கும் அனைத்தையும் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த வடிவழகிக்கு தன் மகள் வைஷ்ணவியை ஆதித்யா கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை வந்தது. திருமணத்திற்கு முன்னால் நடந்த பேச்சுலர் பார்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். தன் பதினெழு வயது மகள் என்றும் பாராது, குடிபோதையில் இருக்கும் ஆதித்யா கரிகாலனின் அறைக்கு, கையில் சாப்பாட்டை கொடுத்து அனுப்பி வைத்தார். பிறப்பில் இருந்தே சோம்பேறியாக வளர்க்கப்பட்டிருந்த வைஷ்ணவியோ, தாய் தனக்கு கொடுத்த வேலையை திவ்ய பாரதியிடம் ஒப்படைத்து விட்டு தனதறைக்கு சென்றிருக்க, தனது தாய் மாமனை தனியாக பார்க்கும் ஆவலில் சாப்பாட்டை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவளுக்கு, அறை முழுவதும் இருட்டாக இருக்க பயம் தொற்றிக் கொண்டது. சிறு வயதில் இருந்து, அவளுக்கு வழங்கப்படும் தண்டனைகளில் ஒன்று, இருட்டு அறையில் அடைக்கப்படுவது. அதன் ஞாபகம் வருபவள் சாப்பாட்டு தட்டை முழுவதுமாக தவறவிட்டாள். பயந்து, வேர்த்து விறுவிறுத்து போனவள் கால் இடறி கட்டிலில் விழ, தன் மேல் பூ பந்து போல் வந்து விழுந்தவளை பொம்மையென இறுக்கி அணைத்துக் கொண்டான் ஆதித்யா கரிகாலன். உள்ளே சென்றிருந்த மதுவுடன் மங்கையவளின் பெண்மை அதிக போதையை கொடுக்க, தன்னையும் மறந்து, அவளோடு இணைய தொடங்கினான். போதையில் இருந்தாலும் அவனது உதடுகள் ‘திவி..’ என்று முணுமுணுக்க, அவனோடு மேலும் ஒன்றினாள் பாவை. போதையில் இருக்கும் ஆதித்யாவின் ஆழ் மனதில், திவ்யாவின் பெண்மை வாசம் நிறைந்திருக்க, தன் கண்ணை திறந்து பார்த்தவனின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தன. வயது வித்தியாசம் மற்றும் தூக்கி வளர்த்த பெண் என்ற நினைவில், உயிரில் கலந்திருந்தவளை விலக்கி வைத்திருந்தவனின் கண் முன்னே தோன்றிய தேவதைப்பெண்ணை, இனி விடவே மாட்டேன் என்பது போல் இறுக்கி அணைத்துக் கொண்டான். மழையில் நனையும் கோழி குஞ்சிற்கு கதகதப்பாக இருக்கும் இறக்கையை போல் அவனது அணைப்பு தோன்ற, முதலில் அவனுடன் ஒன்ற தொடங்கியவள், அவனது கைகள் எல்லை மீறுவதை உணர்ந்து, அவனிடம் இருந்து விலக முயன்றாள். ஆனால், முடியவில்லை. தேனை உறிஞ்சும் வண்டாக மாறியவன், அவளை கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் சுவைக்க தொடங்கியிருந்தான். அவனை மட்டுமே நெஞ்சில் சுமந்திருந்தவளுக்கு, அவன் கொடுக்கும் சுக வேதனை பெரியதாக தெரியவில்லை. பதினெட்டு வயது சிறு பெண் தன் மனதில் நிறைந்திருந்தவனுக்காக தன்னையே கொடுத்தாள். அவளது பெண்மை அவனுக்குள் இருக்கும் மோகத்தை தூண்டியதோ? மீட்டாத வீணை லயத்தோடு மீட்டும் கலைஞன் ஆனான். போதையில் அவளோடு இணைந்தவனுக்கு அவளது காதல் புரியந்ததோ? அவளது உடலோடு உயிராக கலந்தான். விடியற்காலையில் தனக்காக நிச்சயிக்கப்பட்டிருந்தவளின் கழுத்தில் தாலி கட்டயிருந்தவன், அதற்கு முன் தினம் வேறு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதை ஊரார் பார்த்தால் என்ன நடக்கும்?