உ
அத்தியாயம் – 11
அவன் வாங்கி வந்த உணவை உண்ட பிறகு தான் வள்ளிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது நேற்று காலை உண்டது அதுவும் கொஞ்சமாக அதனால் உடல் செயல் இழந்தது போல் இருக்க
அதுவரை ஒன்றும் புரியாமல் இருந்தவள் உணவு உள்ளே சென்று கொஞ்சம் தெம்பளிக்க இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலை புரிய ஆரம்பித்தது.
நேற்று நடந்ததும் தியாகத்திற்கு வர அதில் என்ன செய்வது என்று புரியாமல் சட்டென்று பாத்ரூமிற்குள் சென்றவள் அதுவரை கட்டுக்குள் வைத்திருந்த அழுகை கட்டுப் பாட்டையும் மீறி வெள்ளமென வர ஆரம்பித்து.
‘ என்ன பண்ணி வச்சிருக்கேன் நான் கண்டிப்பா தப்பான பொண்ணா தான் என்னை நினைப்பாரு நான் எப்படி எல்லாத்திற்கும் சம்மதித்தேன்.
இதுவரை இப்படி ஒரு எண்ணம் நமக்கு வந்தது இல்லையே ஆனா இப்போ எல்லாமே முடிந்து போயிடுச்சே என்று கதறி அழ மட்டுமே முடிந்தது’.
இந்த நிலைமையில் கூட தவறு தன் மேல் இருக்கும் என்று எண்ணினால் அவளால் அழகரை வேறு ஒரு கோணத்தில் யோசித்து கூட பார்க்க முடியாமல் இருந்தால் அது எதனால் என்பதை இப்போதே யோசித்து இருந்தால் பின்வரும் பிரச்சனைகளில் இருந்து அவள் தப்பித்து இருந்திருப்பாள்.
விதி ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் இருந்து யாரால்தான் தப்பித்து அதை வென்று விட முடியும் முக்கால்வாசிப்பேர் அதன் ஆட்டத்தில் பலியாகி தான் போகிறார்கள் அதில் வள்ளியும் சேர்ந்து விடுவாளோ பதில் காலத்தின் கையில் தான் உள்ளது.
வெளியில் அமர்ந்து இருந்த அழகரால் அதற்கு மேல் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியவில்லை வள்ளி சென்று ரொம்ப நேரம் ஆகவும் மனதில் ஒரு மாதிரி குற்ற உணர்வும் சேர்ந்து கொள்ள அவளை நேருக்கு நேர் பார்க்கவும் தயக்கமாகவே இருந்தது.
இதுவரை அழகர் தன் வாழ்க்கையில் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை சந்தித்ததே இல்லை எனலாம் அந்த அளவிற்கு அவன் தன்னை அனைத்திலும் மெருகேற்றிக் கொண்டான்.
இப்பொழுது அந்த சிறு பெண்ணின் முகத்தை பார்த்து பேசக்கூட மிகவும் தயக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது ஆனால் அவள் சென்று வெகு நேரம் ஆகிவிட்டதால் உள்ளே ஏதேனும் செய்து கொண்டாளோ என்ற பயம் இருக்கவே ஒரு நொடி என்ன செய்வதென்று புரியாமல் நின்றவன்.
பின்பு எதைப்பற்றியும் யோசிக்காமல் நேராக சென்று பாத்ரூம் கதவை தட்ட ஆரம்பித்து விட்டான்.
“ வள்ளி என்ன பண்ற சீக்கிரம் வா” என்றான் கதவை தட்டிக் கொண்டே அதற்கு அவளிடம் பதில் இல்லாமல் போகவே மீண்டும் மீண்டும் தட்ட ஆரம்பித்தான்.
அதில் ஒருவாரு தன்னை தேற்றிக்கொண்ட வள்ளியும் பதில் கொடுக்க முயற்சிக்க ஆனால் அவள் விடாத அழுகையினால் அவளது குரல் நம்மனா நமன போட ஆரம்பித்து விட்டது.
அதை சரி செய்து கொண்டு அவள் பதில் பேசும் முன்பு வெளியே இருந்த அழகர் பதற்றத்தில் கதவை வேகமாக தட்ட ஆரம்பித்து விட்டான்.
சட்டென்று வந்தவள் கதவை உடனடியாக திறக்கவும் அதுவரை வெளியே வேகமாக தட்டிக் கொண்டிருந்தவன் திடீரென்று கதவு திறக்கப்படவும் சற்று சமநிலையற்று அவள் மேலேயே விழுந்து விட்டான்.
அவளும் இதை எதிர்பார்க்காமல் இருக்க அவனது பாரம் அவளால் தாங்க முடியாமல் இருவரும் சேர்ந்தே விழ பார்க்க சட்டென்று நொடியில் சுதாரித்துக் கொண்டவன்.
அவளது இடையை இறுக்கமாக பற்றி தன்னையும் நிதானப்படுத்திக் கொண்டவன் மற்றொரு கையால் பாத்ரூம் கதவை பற்றி தங்களை நிலை நிறுத்திக்கொண்டான்.
திடீரென்று நடந்துவிட்டால் நிகழ்வாழ் அதுவரை அதிர்ச்சியில் நின்று இருந்தவள் சற்றென்று அழகரின் கையை தட்டி விட்டு பாத்ரூமில் விட்டு வெளியே வந்து விட்டாள்.
தனது கையை தட்டி விடவும் அழகருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது நேற்று நடந்ததை பற்றியும் இப்போதைய சம்பவத்தை பற்றியும் அவளிடம் தெளிவாக பேசி ஒரு முடிவு எடுக்கும் உறுதியுடன் அங்கிருந்து வந்தான்.
அவன் பேசுவதை இப்பெழுது கேட்கும் மனநிலையில் அவள் இல்லை என்று அவளது முகமும் வீங்கிய இமைகளும் அவனுக்கு சங்கதி கூற தன்னை பற்றி மோசாமாக நினைத்து விட்டாளோ என்ற பயமும் அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை.
அதை இங்கு இப்பொழுது பேசுவதற்கு உண்டான கால சூழ்நிலையும் அமையாமல் போகவே அங்கு இருந்து கிளம்பும் முடிவுக்கு வந்தவன்.
அவளை பார்த்து “ நீ இப்ப கொஞ்சம் ஓகே னா இங்க இருந்துகிளம்பலாம்” என்று கூறினான்.
அதற்கும் அவள் தலையை மட்டும் அசைக்கவே அவனாலும் அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியாமல் வெளியே கிளம்பியவன் பின்னாடியே இவளும் சென்றாள்.
பின் இருவரும் ரிஷப்சன் சென்று ரூமை செக் அவுட் செய்து கிளம்ப மேலும் அரைமணி நேரம் சென்றது அவள் எங்கு இருக்கிறோம் என்று சுற்றி பார்த்துக்கொண்டே வந்தாள்.
அவளின் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே வந்தவன் கார் அருகில் வந்தவுடன் பின்னே சென்று ஏற முயன்றவளை தடுத்தவன் சற்று கடினமான மறுக்க முடியாத குரலில் அவளை முன்னே உட்கார சொன்னான்.
அதற்கும் அவள் எதுவும் கூறாமல் அவன் சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளை போல் எதுவும் கூறாமல் முன்னே வந்து உட்கார்ந்து கொண்டாள்.
அதை பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள் என்று அவனுக்குள் முனுக்கென்று ஒரு கோபமும் ஆண் என்கிற ஈகோவும் தலை தூக்க அதன் பின் எதுவும் பேசாமல் காரை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்றான்.
இரு பக்கம் ஜன்னலின் வழியாக வெண்ணிலாவின் வருகையும் ஊத காற்றையும் தவிர வேற எதுவும் அந்த காரினுள் நுழைய அனுமதி தரவில்லை இருவரும் அப்படியே இருக்க அமைதியாக சென்று கொண்டு இருந்தது அந்த கார் பயணம்.
இருவரும் இரு வேறு மனநிலையில் பயணித்துக் கொண்டிருந்தனர் அழகருக்கும் குற்ற உணர்வு, கோபமும் மன அழுத்தத்தை தந்து கொண்டே இருந்தது.
இருந்தும் அதையும் மீறி அவளிடம் தன்னைப் பற்றி கூற வேண்டும் என்ற எண்ணம் அதிகபடியாக இருந்தது அது ஏனேன்று அவனுக்கே புரியாத ஒரு சூழ்நிலையில் இருந்தான்.
வள்ளிக்கோ தன் மீது தான் தவறு என்றும் தானா இப்படி என்ற குற்ற உணர்வில் அவனை பார்க்க கூட தயங்கி அப்படியே இருந்தாள்.
யாரு இதைப் பற்றி முதலில் பேசுவது என்ற போட்டியில் இருவருமே அமைதியாக இருக்க இதற்கு மேல் தன்னால் தனது மன அழுத்தத்தை தாங்க முடியாது என்ற மன நிலையில் அழகரே முதற்கட்ட நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தான்.
அதுவரை காரை செலுத்துவதில் ரோட்டில் கவனத்தை வைத்திருந்தவன் மெதுவாக அவளை திரும்பி பார்த்தான்.
அவளோ நீண்ட நேரமாக சாலையை வெறித்துக் கொண்டே இருந்தாள் கண்களோ கலங்கிய படியே இருந்தது.
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் பின் அவளை பார்த்து தொண்டையை செருமி “ உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” என்றான்.
அவனை திரும்பி பார்த்தவள் தனது கண்ணீரை மறைத்துக்கொண்டு கண்களில் கலக்கத்துடன் அவனை பார்க்க அதை பார்த்தவன் ஒரு நொடி தடுமாறித்தான் போய்விட்டான்.
பின் தன்னை சமாளித்துக்கொண்டு “ இத பத்தி எப்படி பேசுறதுனு கூட எனக்கு தெரியல நேத்து நடந்ததுக்கு முழு பொறுப்பையும் நானே எடுத்துக்கிறேன்.
நான் இப்படி ஒரு பொண்ணு கிட்ட இவ்வளவு உரிமை எடுத்துக்குவேன்னு கனவுல கூட நினைச்சி பாக்கல என்னை மன்னிச்சிடு” என்று கூறிக்கொண்டிருந்தவன் அவள் இடையில் ஏதோ பேச வரவும் அதை தடுத்து நான் முழுசா பேசிமுடிச்சுடுறேன் வள்ளி என்று கூறியவன்.
“ நான் பண்ணினது எதுவும் சரி கிடையாது அதுக்கு என்ன தண்டனை வேண்டுணாலும் குடு நான் ஏத்துக்குறேன்”.
“ நான் ஒரு வார்த்தை சொன்னேன் நேத்து நைட்டு என்னை நம்பி ரூம்மிற்கு வா என்று ஆனா அந்த நம்பிக்கையை நானே கெடுத்துப்பேன்னு சத்தியமா நினைக்கவே இல்லை என்னை மனிச்சிடுமா” என்றான் மிகவும் குற்ற உணர்ச்சியுடன்.
அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவள்
“ இல்லங்க உங்க மேல மட்டும் தப்பு சொல்ல முடியாது இதுக்கு நானும் பொறுப்பு நேத்து என்ன நடந்துச்சுனே தெரியல நானா இப்படி என்று இன்னும் கூட என்னால் நம்ப முடியல” என்றாள்.
“ இல்லமா இப்படி நடந்ததுக்கு நம்ம ரெண்டு பேருமே பொறுப்பு தான் ஆனால் இதுக்கு மூல காரணம் அந்த ராகேஷ் தான்”
“என்ன சொல்றீங்க ராகேஷ்ஷா அவன் கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன் நான் நிம்மதியா இருந்தேன் நீங்க வேற எல்லாத்துகும் காரணமே ராகேஷ் தான் சொல்றீங்க”
“ ஆமாமா நேத்து அந்த தண்ணிய குடிக்கிற வரைக்கும் எதுவும் மாறல எல்லாம் சரியா தான் இருந்துச்சு அந்த தண்ணிய உனக்கு குடுத்துட்டு மிச்ச தண்ணிய நான் குடிச்சேன் பாரு அதுல தான் அவன் ஏதோ கலந்திருக்கான்”
“தண்ணில கலந்திருக்கானா ஆனா நார்மலா தான இருந்தது என்ன கலந்துருந்துசு தண்ணி குடிச்ச அப்புறம் ஒன்னும் வித்தியாசமும் தெரியலையே”
“அந்த ட்ரக்ஸ் அப்படித்தான் இதைப்பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா இதுல நானே மாட்டிப்பேனு இப்பதான் எனக்கு தெரியுது”
“அவன் உன்ன கடத்தி கூட்டிட்டு போயி இந்த தண்ணிய அவனும் குடிச்சு உன்னையும் குடிக்க வச்சு மித்த எல்லாத்தையும் சுமூகமா முடிச்சுக்கலாம்னு நெனச்சி இருக்கான் ஆனா கடவுள் வழிய மாத்தி அமைச்சுட்டாரு” என்றான்.
அவன் கூறிய செய்தியில் வள்ளிக்கு ஒன்றும் புரியவில்லை அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
ஒரு கையால் அவள் அப்படி அமர்ந்திருப்பதை கண்டு அவளை கலைத்தவன் என்ன என்று பார்க்க அதற்கு அங்கு வள்ளியும் அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் மொத்தமாக கொட்ட ஆரம்பித்து விட்டது.
“நான் என்னங்க தப்பு பண்ணேன் படிக்கணும்னு ஆசைப்பட்டது ஒரு குத்தமா அது எங்க சமூகத்தையே உயர்த்தும் எங்க அம்மா சொல்லியிருந்தாங்க அதோட நான் படிக்கணும்ன்றது எங்க அம்மாவோட கடைசி ஆசை அதை நிறைவேற்றுவதற்கு தான் நான் போராடுறேன்” என்றாள்.
அதை கேட்டவனுக்கும் தன்னுடைய படிப்பு தடைபட்டாலும் தனக்கு படிப்பின் மீது ஏற்பட்ட ஏக்கமும் ஒரு நொடி வந்து செல்ல தான் அவளை படிக்க வைத்து ஆக வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுத்துக் கொண்டான்.
மீண்டும் அவள் பேச ஆரம்பித்தாள் “ அந்த ராகேஷ் என்கிட்ட முதல் நாள் சொல்லியே தாங்க சொன்னான் உனக்கு அப்பா அம்மா என்று யாரும் கிடையாது அதனால என்னோட முடிவுக்கு நீ சம்மதித்தே ஆகணும்னு அவ்வளவு உறுதியா சொன்னான்”
“ நானும் அவன சமாளிச்சுக்கலாம்னு தப்பா எடை போட்டுட்டேன் ஆனா அது என்னை கடத்தும் அளவுக்கு வந்து நிக்கும் நான் நினைக்கவே இல்ல” என்று கண்ணீர் மல்க கூறினாள்.
அவள் பேச பேச கேட்டவனின் உடல் ஒரு நொடி இறுக்கமாக மாறியது அவனது கோபம் கைகளில் பிடித்த இருந்த காரின் ஸ்ரீயரிங்கில் அவனது இறுக்கம் தெரிய கார் வேகமாக சென்றது.
இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன் அடுத்து அவன் கூறிய செய்திகள் வள்ளியின் கண்கள் வெளியே தெரித்து விடும் அளவுக்கு விரிந்து அதிர்ச்சியில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதையை பற்றிய கருத்துகளை கமெண்டில் கூறுங்கள் நட்புகளே
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌