ATM Tamil Romantic Novels

என்னை உனக்குள் தொலைத்தேனடி

 

அத்தியாயம் – 12

 

 

வள்ளி தனது மன உளைச்சலால் மனதில் உள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன்

உடல் தன்னையும் அறியாமல் கோபத்தில் சிவக்க துவங்கியது. 

 

 

தன்னுடைய படிப்பை பற்றியும் தனது அம்மாவின் ஆசையை பற்றியும் கூறியதை கேட்டவன் தன்னுடைய படிப்பின் ஏக்கமும் சேர்ந்து கொள்ள அவளை எப்படியாவது நன்றாக படிக்க வைக்கும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மனதில் உறுதியாக நினைத்துக் கொண்டிருந்தான். 

 

 

அடுத்து அவள் கூறிய ராகேஷ் பற்றிய தகவல்களை கேட்டவன் ஏற்கனவே அவளது தோழி கலையரசியின் வாய்மூலம் கேட்டாலும் இன்று வள்ளியின் உணர்விலும் குரலிலும் கேட்டதில் 

அவனை கொன்று போடும் அளவிற்கு கண்மண் தெரியாத அளவுக்கு கோபம் அவனை சூழ்ந்து கொண்டது.

 

 

நேற்று நடந்ததை வைத்து பார்க்கும் போது ராகேஷ் இத்துடன் இதை நிறுத்திக் கொள்வான் என்ற நம்பிக்கை அழகருக்கு இல்லை அவனது அனுபவ அறிவும் அதையே எடுத்துக் கொடுக்க முதலில் வள்ளியை காப்பாற்றும் முடிவிற்கு வந்தான். 

 

 

வள்ளி தனது உணர்வுகளை கொட்டும் போது கண்களில் இருந்தும் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது அதை பார்த்தவன் மனதிற்குள் பிசைய தனது கைகளை எடுத்து வள்ளியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். 

 

 

அவள் பேசும் போதே தனக்கு அப்பா அம்மா இல்லை என்பதை கூறினாலும் அதில் இருந்த வருத்தம் தன்னையும் தாக்கியதில் சற்றென்று ஒரு முடிவை எடுத்து வள்ளியை பார்த்து “ நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று கேட்டுவிட்டான்.

 

 

அவன் கேட்டதை ஒரு நொடி கவனிக்காமல் விட்டவள் ஏதோ தன் காதில் தான் தவறாக விழுந்து விட்டதோ என்று எண்ணி அவனை பார்த்தாள்.

 

 

சற்றென்று காரின் வேகத்தை குறைத்து ஒரு ஓரமாக நிப்பாட்டியவன் நன்றாக திரும்பி வள்ளியையும் தன்னை பார்க்க செய்தவன் மீண்டும் அவளிடம் மிகவும் உறுதியாக “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று கேட்டான்.

 

 

அவன் கூறுவதை கேட்டவள் கண்களில் இருந்து வந்த கண்ணீர் கூட நின்று விட கண்கள் வியப்பில் விரிந்து நீங்கள் கூறுவது நிஜமா என்ற பார்வையிலேயே அவனைப் பார்த்தாள்.

 

 

அதை கண்டவன் அவளுடைய நிலையில் இருந்து யோசித்து அது அவளுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் என்று நினைத்தவன் தான் கூறியதை முதலில் உணர்ந்து கொள்ளட்டும் அதன் பிறகு மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம் என்று அமைதி காத்தான். 

 

 

அதிர்சியிலிருந்து வெளியே வந்தவள் “ என்ன திடீர்னு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறீங்க” என்று கேட்டாள்.

 

 

“நேத்து நடந்ததை பத்தி நீ என்ன நினைக்கிற” என்றான்.

 

 

“அதான் நீங்க சொன்னீங்களே ராகேஷ் கொடுத்த அந்த தண்ணி பாட்டில் போதை மருந்து கலந்து இருந்ததில் வந்த சோதனையில் நம்ம ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டோம்னு இது நம்ம ரெண்டு பேரும் தெரிஞ்சே செய்த தப்பு தான்” என்றாள்.

 

 

அவளின் தெளிவான பார்வையில் சற்றென்று அவனது புருவம் வியப்பில் உச்சி மேட்டிற்கு சென்று வந்தது. 

 

 

தனது மனதினுள் ‘ பரவால்ல சின்ன பொண்ணுன்னு நினைச்சேன் கொஞ்சம் பக்குவமா தான் இருக்கிறான் தன்னை பற்றி சொல்லி புரிஞ்சுகிட்டு அதுக்கப்புறம் முடிவை கரெக்டா எடுப்போம்’ என்று நினைத்துக்கொண்டான்.

 

 

அவன் இப்படி நினைத்துக் கொண்டிருக்க என்னதான் பக்குவமான பொண்ணாக இருந்தாலும் அதற்குண்டான வயது தன்னிடம் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அவனைப் பார்த்து 

 

 

“நேத்து அப்படி நடந்ததுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிற முடிவு நீங்க எடுத்து இருக்கீங்க அப்படின்னா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்று கூறினாள்.

 

 

“ நான் உன்கிட்ட அப்படி சொன்னேனா நேத்து நடந்ததுக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன்னு” என்று கூற

 

 

அவள் புரியாத பார்வை பார்க்க அதைக் கண்டவன் தெளிவாக தான் எடுத்திருக்கும் முடிவை விளக்க ஆரம்பித்தான்.

 

“ முதல் விஷயம் அந்த ராகேஷ் உன்னை இனியும் சும்மா விடுவான் என்ற நம்பிக்கை எனக்கு இல்ல

 

கண்டிப்பா நம்ம ஊருக்கு போனதுக்கு அப்புறம் ஏதாவது கோலாரான வேலை பார்க்கத்தான் செய்வான் அவன் கிட்ட இருந்து எப்படி நீ தப்பிப்ப 

 

அதோட அவன் கிட்ட பணமும் இருக்கு ஆள் பலமும் இருக்கு அவன்கிட்ட இருந்து தப்பிக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது அதோட நான் எப்படி இந்த காருக்குள்ள வந்தேன்னு நீ நினைக்கிற 

 

 

என்ன போடுறதுக்கு ஆள் அனுப்பினான் அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்து இது அவனோட காருனே தெரியாம ஏறி ரொம்ப தூரம் வந்துட்டேன் அதுக்கப்புறம் தான் தெரியும் அவன் உன்னையும் கடத்திட்டு வந்த விஷயமே 

 

அதோட வாழ்க்கையில விதி நமக்கு வச்ச டிவிஸ்ட் அந்த தண்ணி பாட்டில் அதை நம்ம குடிக்காம இருந்திருந்தாலும் நமக்குள்ள ஒண்ணுமே நடக்கலைன்னாலும் உன் பிரண்டு வந்து கேட்டதுக்கு அப்புறம் உன்னை பாதுகாக்கிற பொறுப்பை நான் ஏத்துக்கிட்டேன் 

 

நேத்து என்ன மீறி நான் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாலும் என்னோட மனசு இறுதி வர நீ தான் என் வாழ்க்கையில அப்படி என்ற உறுதியான முடிவ எடுத்ததுக்கு அப்புறம்தான் நான் உன்ன எடுத்துக்கிட்டேன். 

 

அதனால தேவையில்லாம எதைப்பத்தியும் யோசிக்காமல் கண்டதையும் உலறாமல் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா என்ற முடிவை யோசித்து எடு” என்றான்.

 

அவளோ மீண்டும் குழப்பமாகவே 

“அப்போ அந்த ராகேஷ் என்னை ஏதாவது பண்ணிடுவானு பயந்து தான் என்ன கல்யாணம் பண்ணிக்க போறீங்களா” என்று உலற ஆரம்பித்தாள்.

 

அதை கேட்டு அவளின் தலையில் கொட்டுவைத்தவன் மனசுல ‘தனது நெற்றியில் தானே அடித்துக் கொண்டு இப்படிப்பட்ட அதிசய பிறவி எல்லாம் நம்ம கல்யாணம் பண்ணிக்கணுமாடா’ என்று எண்ணியவன் அவளைப் பார்த்து முறைக்க ஆரம்பித்து விட்டான்.

 

“ நீ என்ன பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க அவனுக்கு பயந்தலாம் நான் கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சுட்டியா” என்று கோபமாக கேட்டான்.

 

தனது தலையை தடவிக் கொண்டவள் “ எதுக்கு இப்ப தலையில கொட்டுறீங்க வலிக்குது தெரியுமா” என்றாள்.

 

“எனக்கு இருக்க கடுப்புக்கு உன்ன தலையில கொட்டுனதோட விட்டுட்டேனு நினைச்சுக்கோ இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது இவ்வளவு தூரம் சொல்றேன் திரும்பத் திரும்ப சின்ன பிள்ளைன்னு நிரூபிச்சுகிட்டே இருக்க” என்றான்.

 

அதில் ரோசம் வரப்பற்றவள் முணுமுணுப்பாக “ நான் சின்ன புள்ளன்னு நேற்று இவருக்கு தெரியலையா” என்றாள்.

 

அவனது பாம்பு காதிற்கு அதுவும் கேட்டு விட அதைப்பற்றி எதுவும் கூறாமல் மீண்டும் கல்யாண பேச்சை ஆரம்பித்தான். 

 

“ இங்க பாரு வள்ளி இப்ப நான் சொல்றது தான் கடைசி தெளிவா கேட்டுக்கோ என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டான்.

 

அவளோ “ நீங்க ரொம்ப நல்லவரு” என்றாள்.

 

அவனோ மனதினில் “இவ என்ன என்ன ரொம்ப நல்லவன்னு சொல்றா டேய் நீ நல்லவன் பண்ற காரியத்தை யாடா நேத்து பண்ணி வச்சிருக்க ஆனாலும் அவ உன்ன நல்ல பண்றாடா” என்று தன் மனதில் தன்னை பற்றி யோசித்தவன் அவள் தன்னையே பார்க்கவும்.

 

“ இங்க பாருமா நான் நல்லவன் எல்லாம் கிடையாது அதுக்காக மோசமானவனும் கிடையாது என்னோட தொழில் வட்டி தொழில் கட்ட பஞ்சாயத்து அதனால அதுக்கு ஏத்தபடி தான் நான் இருப்பேன் 

 

எப்ப நாளும் எனக்கு எது வேணாலும் நடக்கலாம் என்ன பிடிக்காதவங்க ஆயிரம் பேர் இந்த மதுரையில சுத்திட்டு இருக்காங்க எப்ப என்ன போட்டு தள்ளுவானு எனக்கே தெரியாது 

 

அந்த ஒரு காரணத்தினால நான் கல்யாணமே பண்ணாம ஒண்டிக்கட்டையாவே வாழ்ந்து முடிச்சிடலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் 

 

ஆனா விதிவசத்துல இப்ப நீ என் பொண்டாட்டியா ஆகிட்ட தாலி கட்டல நாளும் அதுக்கும் மேல உள்ள உரிமையை நான் உன் மேல எடுத்துக்கிட்டேன் அதனால நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவோம்” என்றான்.

 

“ சரி நீங்க இவ்வளவு சொல்றதுனால நாம் கல்யாணம் பண்ணிக்குவோம்” என்றாள்.

 

அவள் சொல்வதை கேட்டவன் பின்பு அவளை பற்றி அறிந்து கொள்ள அவளது ஊரை பற்றியும் அங்கு இருப்பவர்கள் பற்றியும் கேட்டான்.

 

தனது ஊரை பற்றி கேட்கவும் இது வரை நடந்த அனைத்தையும் மறந்தாள் கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற முடிவை எடுத்தவுடன் இவன் தன்னவன் தனக்கு மட்டுமே சொந்தமானவன் அப்பா அம்மா இறப்பிற்கு பிறகு தன் மீதுள்ள அனைத்து உரிமையும் அவனுக்கே அவனுக்காது என்ற எண்ணம் தோன்றவே அவளைப் பற்றிய அனைத்தையும் கூற ஆரம்பித்தாள்.

 

“ என்னோட ஊரு கொடைக்கானல் பக்கத்துல இருக்க சின்ன மலை கிராமம் எங்க அப்பா அம்மா நானுன்னு எங்க கூட்டுக்குள்ள மூணு பேரும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தோம்.

 

 ஆனால் திடீர்னு எங்க அப்பா இறந்துட்டாரு அப்பா இறந்த சோகத்துல அம்மாவும் இறந்துட்டாங்க அம்மா கடைசியாக இறக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்ட ஒரே ஒரு விஷயம் தான் கேட்டுக்கிட்டாங்க.

 

 

 கண்டிப்பா நீ படிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு அதனால நான் ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன் அதுக்கு ரொம்ப உதவி செஞ்சது என்னோட அமலா டீச்சர் தான் எங்க குடிசையில நான் தனியா தான் இருந்தேன் காலைல ஸ்கூல் போயிட்டு வந்துட்டு சாயங்காலம் ஊர் தலைவர் வீட்ல வேலை செஞ்சு சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட்டு என்னோட குடிசைல நான் படுத்துக்குவேன்.

 

 

இப்படித்தான் நான் பிளஸ் டூவில ஸ்டேட் பஸ்ட் வந்தேன் அதுக்கு அப்புறம் ஊர் தலைவரும் அமலா டீச்சரும் என்னோட மாமாவும் உதவி பண்ணி இப்ப இங்க மதுர காலேஜ்ல படிச்சிட்டு இருக்கேன் என்ன பத்தி சொல்லனும்னா இது தான் என்னோட கதை” என்றாள்.

 

அவள் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டு இருந்தவன்.

 

சற்று நேரம் தனது யோசனையில் ஆழ்ந்து விட்டான் அவன் அமைதியாக இருக்கவும் அவளும் தனது மவுனத்தை தத்தெடுத்துக்கொண்டாள்.

 

அவன் யோசித்துக் கொண்டு வர அவனது எண்ணங்கள் எதுவும் புரியாமல் திரும்பத் திரும்ப அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு வந்தாள்.

 

அதைப் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தவன் பின் தனக்குள் ஒரு உறுதியான முடிவை எடுத்தவன். 

 

அவளைப் பார்த்து “ சரி நீ சொன்னதெல்லாம் எனக்கு புரிஞ்சுச்சு இப்ப நம்ம கல்யாணத்தை உன்னோட படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் வச்சுக்கலாம் நீ படிக்கிறது தான் இப்ப ரொம்ப முக்கியம் அதுக்கு தேவையான எல்லாத்தையும் இனிமே நான் பாத்துக்குறேன்.

 

உன்னோட வேலை இனிமே நல்லா படிக்கிறது மட்டும்தான் நல்லபடியா படிச்சு உங்க அம்மாவோட ஆசையா நிறைவேற்றுனதுக்கு அப்புறம் உனக்கு உதவி செஞ்ச எல்லாரையும் கூப்பிட்டு நம்ம சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூறினான்.

 

அவனுடைய அந்த முடிவு அவளுக்கும் ஏற்கும் படியாக இருக்க சரி என்று சம்மதித்தாள் அதனால் இருவரும் இன்னும் இரண்டு வருட படிப்பை முடித்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவை சேர்ந்து எடுத்தனர்.

 

அதன்படி இப்போது ஊருக்கு போய் சேர்ந்ததுக்கு அப்புறம் அவளை பழையபடி ஹாஸ்டலில் விட்டு விட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வது என்ற முடிவை எடுத்துக்கொண்டான்.

 

அவர்கள் மட்டும் இப்படி முடிவெடுத்துக் கொண்டால் போதுமா விதி அவளின் ஹாஸ்டலில் வாசலில் வைத்து தனது விளையாட்டை விளையாட காத்துக் கொண்டிருந்தது.

 

கமெண்ட் பீளீஸ் நட்புகளே 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “என்னை உனக்குள் தொலைத்தேனடி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top