ATM Tamil Romantic Novels

என் இனிய ராட்சஷனே 6

அத்தியாயம் 6

 

இளமதி மயங்கி கீழே விழ “அம்மாடி நான் பெத்த மகளே” என்று சின்னப்பொண்ணு பதறி கொண்டே அவளை பிடித்து கொண்டார் சிவகாமி தண்ணீரை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளிக்க மதி பயத்துடன் கண் விழித்தாள் சுற்றி இருந்தவர்கள் அவளையே பார்க்க அவளின் கண்கள் கலங்கியது. 

 

மதி அழுது கொண்டே இருக்க அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் அவளையே வேடிக்கை பார்க்க “எல்லாரும் போய் சாப்பிடுங்க” என்று சிவகாமி அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தார் அவரின் கணவர் ராமசாமி இடிந்து போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தார். 

 

அதேநேரம் கருப்பன் தன் தோட்டத்தில் இருந்த கல் மேடையில் வந்து அமர்ந்திருந்தான் அவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி இருந்தது அப்போது அங்கே வந்த திலக்  “என்ன மச்சான் முகூர்த்த நேரம் வந்துடுச்சு இன்னும் கிளம்பாம இருக்க என்ன நேத்து நைட் ஒரே மஜாவா” என்று கேட்டு கொண்டே கண்ணடிக்க அவன் கேட்ட அடுத்த நொடி அவனை போட்டு அடி வெளுக்க ஆரம்பித்தான் கருப்பன். 

 

“டேய் எதுக்கு டா என்னை அடிக்குற சொல்லிட்டு அடியேன் டா” என்று அவன் கத்தி கதற “எல்லாம் உன்னால தான் டா மயிரு சும்மா இருந்தவனை உசுப்பேத்தி எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க” என்று கத்திக் கொண்டே அவனை இன்னும் அடி வெளுக்க ஆரம்பித்தான். 

 

“மச்சான் தயவு செஞ்சு என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டு அடி டா” என்று அவன் காலை பிடித்து கெஞ்ச 

கருப்பன் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க திலக் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான் “டேய் நான் கல்யாண பொண்ணு கூட தான டா இருக்க சொன்னேன் அந்த அளவுக்கு கூடவா டா உனக்கு வித்தியாசம் தெரியலை” என்று கேட்டான். 

 

“டேய் நாயே நேத்து சரியான போதை ரூம்ல லைட் வேற இல்லை 

அந்த மாத்திரையை போட்டதும் எனக்கே என்ன நடந்ததுன்னு தெரியலை” என்றான் “சரி நீ தான் போதையில இருந்த அந்த பொண்ணு தெளிவா தான இருந்துருக்கும் தள்ளிவிட்டுட்டு ஓடி போக வேண்டியது தான” என்றான். 

 

“டேய் அவளுக்கும் நீ கொடுத்த மாத்திரையை கொடுத்துட்டேன் டா” என்றான் கருப்பன் உடனே திலக் அவனை முறைத்து பார்க்க

 “டேய் சத்தியமா அது நந்தினின்னு நினைச்சு தான் டா கொடுத்தேன் இருட்டுல தெரியலை அவளும் என்னை மாதிரி தான் இருந்துருப்பா பாவம் என் மேல தான் தப்பு” என்றான் உண்மையான வருத்தத்துடன் “இரக்கம் இப்போ இரக்கப்பட்டு என்ன பண்ண அப்புறம் என்ன தான் ஆச்சு” என்று கேட்டான். 

 

கருப்பன் சற்று நேரத்துக்கு முன்பு நடந்த அனைத்தையும் கூறி முடிக்க

“அடப்பாவி தாலியே கட்டிட்டியா எதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான” என்றான் திலக். 

 

“டேய் என் மேல தான் தப்பு அதுக்காக அவளை அப்படியே விட்டுட்டு போக சொல்றியா” என்றான் கோபத்துடன் கருப்பன். 

 

“இதெல்லாம் நல்லா பேசு கல்யாணத்துக்கு முன்னாடியே பர்ஸ்ட் நைட் கொண்டாடி இருக்க நாட்டி பாய்” என்றான் சிரித்து கொண்டே அவன் கன்னத்தை கிள்ளி வைக்க. 

 

“வலிக்குது கையை எடு டா” என்றான் கருப்பன் எரிச்சலுடன் “என்ன டா கன்னத்துல மார்க்லாம் இருக்கு லவ் பைட்டா நீ நடத்து மச்சி” என்று சிரிக்க

“இப்போ நீ வாயை மூடல உன் மூஞ்சியை பெத்துருவேன் டா நந்தினியை எப்படி சமாளிக்க போறேன்னு தான் எனக்கு தெரியலை” என்றான் வருத்தத்துடன். 

 

அப்போது தண்டோரா போடும் ஒருவன் மேளம் அடித்து கொண்டே ஊரின் மத்தியில் வந்து நின்றான் அந்த சத்தத்தில் இருவரும் அங்கே பார்த்தனர்

“ஊர் மக்கள் எல்லாருக்கும் ஒரு அறிவிப்பு பெரியப்பொண்ணு-சுந்தரமூர்த்தியும் நம்ம ஊர் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி மேலையும் அவரு அக்கா மகள் இளமதி மேலையும் பிராது கொடுத்துருக்காங்க பத்து மணிக்கு பஞ்சாயத்து கூடுது ஊர் ஜனங்க எல்லாரும் அரசமரத்தடிக்கு வாங்க” என்று கூறிவிட்டு மேளத்தை தட்டிக் கொண்டே அங்கிருந்து நடந்து சென்றான். 

 

கருப்பனும் திலக் இதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்க “மாப்பிள்ளை இப்போ என்ன பண்றது” என்று கேட்டான் திலக் கருப்பனை பார்த்து “என்ன பண்றது எதுவா இருந்தாலும் சமாளிச்சு தான் ஆகனும் வா” என்று கூறிவிட்டு வீட்டின் உள்ளே வந்தவன் தன் அறைக்கு செல்ல அங்கே இளமதி உடை மாற்றிவிட்டு பேயறைந்ததை போல் அமர்ந்திருந்தாள். 

 

அவளை பார்த்து கொண்டே உள்ளே வந்த கருப்பன் “திலக் நீ கொஞ்ச நேரம் வெளியே இரு” என்று கூற அவனும் வெளியே சென்றான் கருப்பன் உடனே கதவை மூடி தாழிட்டான் இளமதியின் அருகில் சென்றான் “ம்க்கும்” என்க அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

 

“இந்த பாரு கண்ணு இதுக்கு முன்னாடி நீ எப்படி வேணும்னாலும் இருந்துருக்கலாம் இனி நீ இந்த கருப்பனோட பொண்டாட்டி” என்க இளமதி அவனை முறைத்து பார்த்தாள். 

 

“ஆமா இனி நீ தான் என் பொண்டாட்டி நான் தான் உன் புருசன் இனி வர போற பிரச்சனை எல்லாத்தையும் நாம சேர்ந்து தான் சமாளிக்கனும்” என்றான்

“நீங்க ஒன்னும் எனக்கு புருசன் இல்லை

கழுத்துல தாலி கட்டிட்டா நீங்க என் புருஷனா” என்றாள் இளமதி கோபத்துடன். 

 

“நான் ஒன்னும் உன்னை பிடிச்சிலாம் உன் கழுத்துல தாலி கட்டல எல்லாரும் நம்ம ரெண்டு பேரை பத்தி தப்பா பேசுனாங்க அவங்க வாயை அடைக்க தான் தாலி கட்டினேன்” என்றான். 

 

“அப்புறம் நேத்து எதுக்கு என் கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டிங்க” என்றாள் குரல் உயர்த்தி “அது நந்தினி தான் வந்துருக்கான்னு நினைச்சு அப்படி நடந்துக்கிட்டேன்” என்றான் தடுமாற்றத்துடன் கருப்பன் அவளை பார்க்க முடியாமல் சுவற்றை பார்த்து கொண்டே கூறினான். 

 

இளமதி அவனை நம்பாத ஒரு பார்வை பார்க்க “நான் உண்மையை தான் சொல்றேன் இத்தனை வருசமா நீ இங்கே தான இருக்கே உன்னை தப்பான ஒரு பார்வை பார்த்துருக்கனா சொல்லு என் மனசுல அவள் ஒருத்தி மட்டும் தான் இருக்கா” என்றான். 

 

அவன் பேச்சில் இளமதிக்கு கோபம் வர அவனை முறைத்து பார்த்தாள் அதற்க்குள் அந்த அறையின் கதவு தட்டப்பட கருப்பன் சென்று கதவை திறந்தான் அங்கே சிவகாமி தான் நின்றிருந்தார் “டேய் என்ன டா பண்ற கதவை மூடிட்டு” என்றார். 

 

“பேசிட்டு இருந்தேன் மா” என்றான் கருப்பன் பதிலுக்கு சிவகாமி உள்ளே மதியை எட்டி பார்த்தவர் “ஊமைச்சி மாதிரி இருந்துக்கிட்டு செப்பு சிலை மாதிரி இருக்க என் மகனையே வளைச்சு போட்டுட்டாளே” என்க மதி அவரை முறைத்து பார்த்தவள் “நான் ஒன்னும் உங்க மகனை வளைச்சு போடலை” என்றாள் அவரை பார்த்து கோபத்துடன். 

 

“என்ன டி வாய் ரொம்ப நீளுது என் மகனை கட்டிக்கிட்ட திமிரா” என்றார் சிவகாமி பதிலுக்கு எகிறி கொண்டே அதற்க்குள் அங்கே வந்த திலக் “மாப்பிள்ளை உன்னையும் தங்கச்சியையும் பஞ்சாயத்துல கூப்பிடுறாங்க” என்றான். 

 

“வரேன் இரு டா” என்றவன் உள்ளே சென்று சட்டையை மாட்டிக் கொண்டு இளமதியை அழைத்து சென்றான் இருவரும் அவன் புல்லட்டில் வந்து இறங்க ஊரே அவர்களை தான் வேடிக்கை பார்த்தது நந்தினி அவர்கள் இருவரையும் கண்களாலேயே எரித்து கொண்டிருந்தாள். 

 

ஊரே அங்கே கூடி நிற்க கருப்பன் இளமதியுடன் கூட்டத்தின் உள்ளே வந்து நின்றான். 

 

மரத்தடியில் ஊர் பெரியவர்கள் ஒரு நான்கு பேர் பெரிய பெரிய மீசையுடன் அரசமரத்தின் அடியில் அமர்ந்து இருந்தனர் முதலாவதாக நடுவில் அமர்ந்து இருந்த பெரியவர் பேச ஆரம்பித்தார். 

 

சின்னபபொண்ணு, ராமசாமி, சிவகாமி அனைவரும் அங்கு வந்து நின்றனர் 

“என்ன பா தம்பி கருப்பா நீயே இப்படி ஒரு காரியத்தை பண்ணலாமா ஒரு பொண்ணு கூட பரிசம் போட்டுட்டு இன்னொரு பொண்ணு கூட இருக்கலாமா பாவம் அந்த பிள்ளை நந்தனி இனி அது வாழ்க்கை என்ன ஆகும்” என்றார். 

 

“ஐயா நான் பண்ணுனது தப்பு தான் அதுக்காக நான் உங்க எல்லார் கிட்டையும் மன்னிப்பு கேட்க்குறேன் எனக்கு இந்த புள்ளையை தான் பிடிச்சிருக்கு அதை யாருக்கும் தெரியாம மறைச்சது என் தப்பு தான்” என்று மதியை பார்த்து கூற. 

 

“அவரு பொய் சொல்றாரு இவள் தான் என் மாமாவை ஏமார்த்தி என்னவோ பண்ணியிருக்கா அவருக்கு என்ன தான் பிடிக்கும்” என்றாள் நந்தினி அழுகையுடனே. 

 

அவளின் கண்ணீரை பார்த்த கருப்பனின் மனம் வலித்தாலும் தன் மனதை கல்லாக்கி கொண்டு “நான் என் சின்ன அக்கா பொண்ணை தான் விரும்புனேன் நந்தினிக்கு நான் துரோகம் பண்ணினது உண்மை தான் அதுக்காக நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்” என்றான். 

 

“மாமா என்னை பார்த்து சொல்லுங்க என்னை பிடிக்கலைன்னு” என்றாள் 

நந்தினி அவனை பார்த்து கொண்டே

கருப்பன் ஒரு கணம் தடுமாறி தன் மனதை திடப்படுத்தி கொண்டு தைரியமாக அவளை பார்த்தவன் “எனக்கு இவளை தான் பிடிச்சிருக்கு என்னை மன்னிச்சிடு நந்தினி” என்றான் அடுத்த கணம் நந்தினி மனம் உடைந்து போய் தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். 

 

பெரியப்பொண்ணு மதியை முறைத்து பார்த்தவர் “நந்தினி அழாத மா” என்று அவளை சமாதானப்படுத்த 

“சரி பா கருப்பன் அவர் தப்பை ஒத்துக்கிட்டதால என்ன தண்டனை கொடுக்கலாம்ன்னு பொண்ணு வீட்டுக்காரங்க சொல்லுங்க” என்று கேட்டார் ஊர் பெரியவர். 

 

நந்தினி அழுது கொண்டே எழுந்து நின்றவள் கருப்பனை முறைத்து பார்த்து கொண்டே “எதுவும் பண்ண வேண்டாம்,

மாமா நீங்க என்னை காதலிச்சது வேணும்ன்னா பெய்யா இருக்ககலாம் ஆனா நான் உங்களை உயிருக்கு உயிரா தான் காதலிச்சேன், என் வாழ்க்கையை என் கிட்ட இருந்து பறிச்சிக்கிட்டல்ல உன்னை மட்டும் சும்மா விட மாட்டேன் டி” என்று மதியை முறைத்து பார்த்து கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றாள். 

 

அவள் பார்வையை பார்த்த சின்னப் பொண்ணுவின் உடலில் உதறல் ஏற்ப்பட்டது கண்டிப்பாக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பது மட்டும் தோன்றியது. 

 

“அப்புறம் என்ன பா எல்லாரும் கிளம்புங்க” என்று கூற அங்கிருந்தவர்ககள் “இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தைன்னு கூப்பிட்டு விசாரிக்க வேற செய்யுறாங்க இதை அவங்க குடும்பத்துலையே பேசி தீர்த்துக்க வேண்டி தான” என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்து அனைவரும் சென்றனர். 

 

“என் மகளையே அழ வச்சிட்டிங்கல்ல நீங்க நல்லாவே இருக்க மாட்டிங்க டி நாசமா தான் போவிங்க” என்று தரையில் இருந்து மண்ணை வாரி விசிறி அடித்துவிட்டு சென்றார் பெரியப்பொண்ணு. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “என் இனிய ராட்சஷனே 6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top