ATM Tamil Romantic Novels

யாரார்க்கு யாரடி உறவு 14

அத்தியாயம் 14

 

ஆதித்யா கரிகாலனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மயூரியின் உடலில் தடுப்பு ஊசியின் மூலம் செலுத்தினார் அர்ஜுன். தடுப்பு ஊசி செலுத்தப்பட்டமயூரியை வள்ளியம்மையிடம் விட்டு விட்டு தன்னை பார்க்கவருமாறு அர்ஜுன் அழைக்க, திவ்ய பாரதிக்கு புரிந்துவிட்டது எதனால் என்று.. 

 

 

“லுக் ஆதி அண்ட் திவ்யா.. இந்த ஸ்டெம் செல்கள் மயூரியோட உடம்புல புது செல்கள் உருவாக்க எப்படியும் ரெண்டுல இருந்து நாலு வாரங்கள் ஆகும்.. ஆனா, இது அவளை முழுமையாக குணமாக்கும்னு சொல்ல முடியாது.. ஆனா, அவளோட பழைய செல்கள் டெவலப்பாகாம தடுக்கும்.. மயூரியோட தம்பியோ.. இல்ல தங்கச்சியோ தான் அவளை நூறு சதவீதம் காப்பாத்த முடியும்.. நம்மக்கிட்ட இப்போ ரொம்ப நேரம்‌ இல்லை.. சோ..”

 

 

“புரியுது அங்கிள்.. எங்களுக்கும் இது நல்லாவே தெரியும்.. நாங்க பார்த்துக்குறோம்..”

 

 

“திவ்யா.. ஆதி.. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க.. அட்வெஸ் பண்றேன்னு நினைக்காதீங்க.. குழந்தைங்க‌ நம்மளுக்கு ஒரு வரம்.. எல்லோருக்கும் அது கிடைக்காது.. ரெண்டாவது குழந்தை பெத்துக்க முடிவு செஞ்சுட்டீங்கன்னா.. குழந்தைங்களுக்காக சேர்ந்து வாழ முயற்சி பண்ணுங்க.. நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்குற மாதிரி.. நடந்த ஒவ்வொரு சம்பத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும்.. பேசி தீர்க்க முடியாத பிரச்சினைன்னு எதுவுமில்லை.. ஓகே.. மயூரியை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்.. பட், டேவிட்டோட கண்காணிப்புல தான் இருப்பா..” என்ற அர்ஜுனிடம் சரியெனும் விதமாக தலையாட்டியவாறே திவ்யபாரதி அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல,

 

 

“இத்தனை வருஷமா திவியை பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்.. இனிமே அவ என்னோட பொறுப்பு.. அவளைப் பற்றி நீங்க கவலைப்பட வேணாம்..” என்ற ஆதித்யா கரிகாலனை கூர்மையாக பார்த்த அர்ஜுன்,

 

 

“அன்னைக்கு ட்ரெயின் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு கேள்விபட்ட உடனே நீ வந்த நிலைமையை பார்த்தப்போது, உன்கிட்ட திவ்யாவைப் பற்றி சொல்லலாம்னு தான் நினைச்சேன்.. பட், அவக்கிட்ட சத்தியம் பண்ணிருந்தேனே.. அதை என்னால மீற முடியலை.. அதனால் தான் அவ இறந்துட்டதா உன்கிட்ட பொய் வேண்டியதாகிடுச்சு.. அது என்னோட தொழில் தர்மத்துக்கு எதிரானதுன்னு எனக்கு தெரியும்.. பட், அவளை யாரோ ஃபாலோ பண்ற மாதிரி தோணுச்சு.. அதான் உன்கிட்ட அவளைப் பற்றி எதுவுமே சொல்லல.. எப்போ உன் மகளுக்காக எதுவேணா செய்ய துணிஞ்சியோ.. அப்பவே நீ அவங்க ரெண்டு பேரையும் எந்த அளவுக்கு நேசிக்கிறன்னு புரிஞ்சுக்கிட்டேன்.. ஆனா, திவ்யாவை பத்திரமா பார்த்துக்கோ.. அன்னைக்கு எங்க கண்ணுல விழுந்ததுனால அவளை பாதுகாப்பா வைச்சுருந்தோம்.. ஒருவேளை எங்க கண்ணுல படலேனா? அது மட்டுமில்லாம மயூரி பிறந்தப்போ, அவளை யாரோ கிட்னாப் பண்ண ட்ரை பண்ணாங்க.. என்னால முடிஞ்ச வரைக்கும் அவங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு கொடுத்தேன்.. ஆனா, அவங்க யாருன்னு என்னால் கண்டுபிடிக்க முடியலை.. வெளிநாடு போனப்போ என் வொய்ஃப்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு.. அதனால் அவங்களை என்னால அடிக்கடி வந்து பார்க்க முடியாம போயிடுச்சு.. அவங்களை பத்திரமா பார்த்துக்கோ.. கிட்னாப் கும்பலை கண்டுபிடிச்சுடு.. இல்லேன்னா.. என்னைக்கு இருந்தாலும் அவங்களுக்கு ஆபத்து தான்..” என்று கூற, புருவங்கள் முடிஞ்சிட, யோசனையுடன் விடைபெற்றார் ஆதித்யா கரிகாலன். மயூரியின் உடைமைகளை பேக்கில் எடுத்து வைத்தவள், அவளை தன் கையில் ஏந்திக் கொள்ள முயல, அவளிடம் இருந்து வலிய இருகரங்கள் மயூரியை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டன. 

 

 

“மிஸ்டர்.. ஆதி..” என்ற திவ்யபாரதியை கூர்ந்து பார்த்தவன், 

 

 

“சொல்லுங்க மிஸ்ஸஸ் ஆதி..” என்று கேட்க, திகைத்து முகத்தை சட்டென மறைத்துக் கொண்டு,

 

 

“உங்களுக்கு இப்ப தான் போன் மாரோ எடுத்துருக்காங்க.. உங்களால மயூவை தூக்க முடியாது.. அவளை என்கிட்ட கொடுங்க..” என்றவள் அவன் முன் மயூரியை வாங்க கை நீட்ட, ஆச்சரியமாக அவளை பார்த்தான் ஆதித்யா கரிகாலன். 

 

 

“இது எப்படி உனக்கு?”

 

 

“இது பெரிய சிதம்பர ரகசியம்?! மயூரிக்கு ட்ரீட்மெண்ட் பண்ணணும்னா.. அது‌ அவளோட டிஎன்ஏவோட சம்பந்தப்பட்டவங்களை வைச்சு தான் பண்ண முடியும்.. அவளோட டிஎன்ஏ உங்களைத் தவிர வேற யாருக்கு பொருந்தும்? இது கூட தெரியாத முட்டாள்னு‌ நினைச்சீங்களா?”

 

 

“இல்லம்மா.. உன்னைய போய் முட்டாள் லிஸ்ட்ல சேர்க்க முடியுமா? எதுவுமே சொல்லாம.. நீ இறந்து போயிட்டேன்னு என்னையவே முட்டாளாக்குன நீ.. முட்டாள்னு நான் எப்படி நினைப்பேன்? நான் தான் முட்டாள்.. போதுமா? பெத்த பிள்ளைய தூக்க முடியாத அளவுக்கு.. இன்னும் என்னோட நிலைமை மோசமாகலை.. போகலாமா?” என்றவன் தன் மகளை ஒருபுறம் கையில் ஏந்தியவாறு, அவளை மற்றோரு கையில் பிடித்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினான். கார் பார்க்கிங்கிற்கு அழைத்து வந்தவன்,

 

 

“என்னோட அசிஸ்டென்ட்.. பாப்பாவோட திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடுவான்.. நாம வெளியில சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போகலாம்..” என்று கூறியவாறே கார் கதவை திறந்து விட, அவனை முறைத்துக் கொண்டே முன்னிருக்கையில் அமர்ந்தாள் திவ்யபாரதி. மறுபுறம் வந்து, காரில் அவன் ஏறும் நிமிடம் அவனுடைய கைப்பேசி அவனை அழைக்க, மயூரியை திவ்யபாரதியிடம் கொடுத்தவன்,

 

 

“ட்டூ மினிட்ஸ்.. இப்போ வந்துடுறேன்..” என்றவாறு அங்கிருந்து சிறிது தூரம் சென்று, கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, அவள் அமர்ந்திருந்த காரை நோக்கி வேகமாக பாய்ந்து வந்தது அந்த உயர்ரக வாகனம். சட்டென திரும்பிப் பார்த்தவளின் விழிகள் நிலைகுத்தி நிற்க, என்னசெய்வதென்று மறந்து போய் அமர்ந்திருந்தாள். எதார்த்தமாக திரும்பிப் பார்த்த ஆதித்யா கரிகாலனின் கண்ணில் பாய்ந்து வரும் வாகனம் பட்டதும், வேகமாக காரின் அருகில் வந்தவன், திவ்ய பாரதியுடன் சேர்த்து, மயூரியையும் வெளியே இழுத்த மறுநிமிடம், அவர்கள் இருந்த கார் உயர்ரக வாகனத்தால் இடிக்கப்பட்டு, தூரம் சென்று உருண்டு விழ, தன் மேல் விழுந்து கிடந்த இருவரையும் இறுக்கி அணைத்துக் கொண்டான் ஆதித்யா கரிகாலன். வாகனம் பாய்ந்து வந்த அந்தக் கணம், அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திவ்ய பாரதி மற்றும் மயூரியின் உயிர் அபாயத்தில் இருப்பது அவனை பதற்றமடையச் செய்தது. அவர்கள் உயிரைக் காப்பாற்றவேண்டிய அவசர உணர்வும், ஒரு நிமிஷம் கூட இழக்கக்கூடாது என்ற துடிப்பும் ஏற்பட்டது. இருவரையும் இறுக்கி அணைத்துக் கொள்வதன் மூலம், தன்னால் முடிந்த அளவு பாதுகாப்பும், அன்பும் அவர்களுக்கு தர முயன்றான். அதில் நம்பிக்கை, அச்சம், வேதனை மற்றும் அன்பு எல்லாம் கலந்து இருந்தது. தன் மார்பில் மயூரியோடு ஒன்றி இருந்தவளின் முகத்தை கரங்களில் ஏந்தியவன், அவளுக்கு ஏதேனும் அடிபட்டிருக்கின்றதா என்று பார்க்க, அவளோ பயம் சற்றும் விலகாது அவனது கழுத்தினை இறுக பற்றிக் கொண்டாள். தாயின் பயம் சேவையும் தாக்கியதோ?! மயூரியும் தன் தந்தையின் மார்பில் முகம் புதைத்திருக்க, தனது அசிஸ்டென்ட்டை அழைத்தவன், மற்றொரு வாகனத்தை அங்கு அனுப்புமாறு பணித்தான். தனது காவல்துறை நண்பனான சத்யாவிற்கு அழைத்து நடந்ததை சொன்னவன், அதைப் பற்றிய முழு விவரமும் அன்றிரவிற்குள் வேண்டுமென ஆணையிட்டான். தன் மனைவி மற்றும் மகளை தன்னுடைய காரில் பத்திரமாக ஏற்றியவன், அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பும் வரை, தூரமாக நின்றிருந்த முகமூடி அணிந்த உருவம், அவர்களைப் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் யாருக்கோ அனுப்பிக் கொண்டிருந்தது. யாரிவன்? எதற்காக திவ்ய பாரதியை ஆதித்யா கரிகாலனின் கன் முன்னால் கொலை செய்ய முயன்றான். அழகு, ஆத்திரம், அறிவு, வீரம் — இவை அனைத்தும் ஒரே உருவத்தில் கலந்துப் பெற்றவன் ஆதித்யா கரிகாலன். அவனையே ஒரு நிமிடம் கதி கலங்க வைத்துவிட்டது அந்த விபத்து. மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் அவன் கண்முன்னால் வந்து போனது. அவள் சென்ற ரயில் விபத்துக்குள்ளானது என்ற தகவல் அறிந்த போது, அவன் துடித்த துடிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதே போன்ற உணர்வை இப்போதும் உணர்கின்றான். தனது கைப்பேசியை எடுத்தவன் சத்யாவை அழைத்து தப்பிச் சென்றவனைப் பற்றி விசாரிக்கலானான். 

 

 

“சத்யா அவன் யாருன்னு தெரிஞ்சதா?” 

 

 

“ஆளை பிடிச்சிட்டோம்.. அவனோட போனை செக் பண்ணப்போ.. யாருக்கோ மெஸேஜ் அப்புறம் போட்டோஸ் அனுப்பிருகான்.. அது யாருன்னு அந்த நம்பரை ட்ரேஸ் பண்ணிட்டுருக்கோம்.. சீக்கிரம் கண்டுபிடிச்சுருவோம்..”

 

 

“இடிச்சவன்?”

 

 

“உயிரோட தான் இருக்கான்..”

 

 

“உயிரோட மட்டும் தான் இருக்கானா?”

 

 

“நான் அவனை பிடிச்சப்போ.. ரொம்ப க்ரிட்டில் கண்டிஷன்ல தான் இருந்தான்.. இப்பவும் அப்படியே தான் இருக்கான்.. அவன் கண்ணு முழிச்சாத்தான்.. அவனுக்கு இந்த வேலையை கொடுத்தவன் யாருன்னு தெளிவா சொல்ல முடியும்.. இவனை கண்காணிக்க ஆள் ஏற்பாடு பண்ணிருக்கேன். கண்ணு முழிச்ச உடனே, உனக்கு தகவல் சொல்றேன்..” 

 

 

“ஓகே டா..” என்றவனின் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது. கோபமாக தனது அறையின் உள்ளே இருக்கும் அலுவலக அறைக்குள் அமர்ந்து இருந்தவனின் காதில், திவ்ய பாரதியின் கால் கொலுசொலி விழ, வெளியே எழுந்து வந்தான். மயூரியில்லாது உள்ளே நுழைந்தவளை கேள்வியாக பார்த்தவனிடம்,

 

 

“பாப்பா.. பாட்டிக்கிட்ட தூங்குறா..” என்று கூறியவள், கட்டிலில் இருக்கும் போர்வையையும் தவையணையையும் எடுத்து கீழே போட்டு தூங்குவதற்கு தயாராக புருவம் சுருக்கினான் ஆதித்யா கரிகாலன். மாலையில் ஏற்பட்ட சம்பவத்திற்கு பிறகு, அவனிடம் சரியாக முகம் கொடுத்து பேசாது, ஒதுங்கி செல்பவளை குழப்பமாக பார்த்தான். 

 

 

‘நான் இப்போ.. என்ன பண்ணேன்னு இவ மூஞ்சியை தூக்கி வைச்சுட்டு திரியுறா?’ என்றவன் மனதுக்குள் கேள்வி எழ, அவளருகில் சென்றான். தனக்கு முதுகு காட்டி, ஒருபக்கமாக தரையில் போர்வை விரித்து படுத்திருந்தவளின் அருகில் தானும் படுத்துக் கொண்டான். அப்போதும் அவள், அவன்புறம் திரும்பவில்லை. அவள் இடையை அவனது கைகள் சுற்றி வளைக்க, அதனை தட்டிவிட்டாள் திவ்ய பாரதி. அவளது காதோரம் இதழ்கள் உரச, அவனது மூச்சுக்காற்று கன்னத்தில் பட, 

 

 

“ஆர் யூ கன்சிவ்?” என்று கேட்க, அவனது கையை தன் மேல் இருந்து எடுத்து விட்டவள்,

 

 

“நோ.. ஜஸ்ட் வெயிட் ஃபார் த்ரி டேஸ்..” என்று கூற,

 

 

“வாட்? நாம் சேர்ந்து பதினைந்து நாளாச்சு.. இன்னும் கன்சிவ்வாகலையா?” என்று திகைத்து போய் கேட்டவனை எழுந்து அமர்ந்து முறைத்துப் பார்த்தவள்,

 

 

“அது என்னோட தப்பில்லையே?” என்றவள் அங்கிருந்து எழுந்து பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமர, அவள் பின்னோடு சென்றவன்,

 

 

“அப்போ நான் தான் காரணமா?” என்று கேட்க,

 

 

“எனக்கெப்படி தெரியும்? முதல் தடவையிலேயே அப்பாவானவரு.. இப்போ.. ஏன் ஆக முடியலை? நீங்க எங்கெங்கு எல்லாம் ஆட்டம் போட்டீங்களோ? யாருக்கு தெரியும்? என்னமோ.. நீங்க என் ஒருத்திக்கூட மட்டும் இருந்த மாதிரி பேசுறீங்க?” என்று‌ கோபத்தில் கத்தியவளின் தோளைப் பிடித்து தன்னைப் பார்த்தவாறு திருப்பியவன்,

 

 

“ஆமா.. நீ ஒருத்தி மட்டும் தான் எனக்கு.. அப்படின்னு நான் சொன்னா நீ நம்புவியா?” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காது, வெளியே செல்ல, சிறிது நேரம் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள், எப்போது அதில் படுத்து உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது போயிற்று. கண் விழித்துப் பார்த்தவள், அவளது தலை தலையணையில் இருப்பதை உணர்ந்தாள். அவளது அடிவயிற்றில் ஹாட் பேக் வைத்து, போர்வையால் மூடியிருப்பதை உணர்ந்தவளுக்கு, பழைய ஞாபகங்கள் கண் முன்னே வந்து போனது. மெல்ல எழுந்தவள் அறைக்குள் வர, 

 

 

“மேம்.. சார்.. உங்களுக்கு சூப் கொடுக்க சொன்னாரு..” என்றவாறே சமையல்கார பெண்மணி, அங்கிருக்கும் மேஜையில் சிறிய கப்பை வைத்து விட்டு செல்ல, அதனை எடுத்து வாயில் வைத்தவளுக்கு தெரிந்து போனது, அதை யார் செய்திருப்பார் என்று.. 

 

 

“இத்தனை பட்டும் இந்த பாழாய் போன் மனசுக்கு வெட்கமே இல்லாம.. உன்னையே சுத்தி.. சுத்தி.. வருதே மாமா..” என்றவளின் கண்ணில் கண்ணீர் வழிய, அதனை துடைக்க வேண்டும் என்று கூட தோன்றாது, சூப்பைக் குடிக்க தொடங்கியவளுக்கு தெரியவில்லை, இங்கு பல பெண்கள் இப்படித் தான் என்று.. என்னதான் பல சூடு பட்டாலும் பாழாய் போன் பெண்களின் மனம் கேட்பதில்லை.. தன்னவனைச் சுற்றியே அவர்களது நினைவிருக்கும் என்று.. ஆனால் மன்னவனோ.. அன்று போல் இன்றும் அவளது நிழலாக, அவளுக்கு தோல் கொடுக்கும் தோழனாக.. தடுப்பு சுவராக.. அவளோடு தொடந்து கொண்டிருக்கும் ஆதித்யா கரிகாலனைப் பற்றி என்று அறிவாயோ? 

 

 

பெண்ணின் மனம் வெளிப்படையான அன்பை விரும்பும்…

 

ஆனால் ஆண்மகனின் அன்போ – மெளனத்தில் புதைந்திருக்கும்.

 

அவனைச் சத்தமாகச் சொல்ல வைக்க அவளால் மட்டுமே முடியும்..

 

பொதுவாக அவன் செய்கைகளில் தான் அதைப் காட்டுவான்.

 

வார்த்தைகள் அவனுக்குப் பழக்கமில்லை…

 

ஆனால் உணர்வுகளோ – ஆழமானவை. இதை என்று பேதையவள் அறிந்து கொள்வாளோ?

 

 

உண்மையான அன்பு ஒரு மனதிலும், மறைந்திருக்கும் அன்பு இன்னொரு மனதிலும்… இரண்டும் சந்திக்கும்போது தான் மறக்கமுடியாத பாசம் உருவாகும்! அது என்று நிகழுமோ? 

 

 

“டேய்.. என்னடா.. ஒரு மாதிரி இருக்க? எதுலயாவது பணத்தைப் போட்டு லாஸ் ஆகிட்டியா?”

 

 

“ப்ச்..”

 

 

“சும்மா சொல்லு ஆதி.. ஆனா.. நீ அதுக்கு எல்லாம் அசைஞ்சு கொடுக்குற ஆளில்லயே..”

 

 

“தில்லி இன்னும் ப்ரக்னென்ட் ஆகலை..”

 

 

“ஓகே.. சோ?”

 

 

“ப்ச்.. என்ன இப்படி கேட்குற? எவ்வளவு சீக்கிரம் அவ ப்ரெக்னன்ட் ஆகுறாளோ.. அவ்வளவு மயூரிக்கு நல்லது தானே?”

 

 

“உண்மையை சொல்லு.. மயூரிக்காக தான் திவிக் கூட சேர நினைக்கிறியா?”

 

 

“…”

 

 

“ஏன்டா.. அமைதியாகிட்ட? உண்மையை சொல்லு..”

 

 

“?”

 

 

“எனக்கு தெரியும்.. நீ சின்ன வயசுல இருந்தே அவளை மட்டும் தான் மனசுல வைச்சு சுமக்குறேன்னு.. அதை அவர்கிட்ட சொல்லித் தொலையேன்.. எதுக்கு உனக்குள்ளே வைச்சு இப்படி மருகுற?”

 

 

“சொன்னா புரிஞ்சுப்பாளா? போடா..”

 

 

“சரி.. அவ புரிஞ்சுக்குற மாதிரி சொல்லு..”

 

 

“ப்ச்.. நீ வேற.. எதுக்கெடுத்தாலும் மூச்சை தூக்கி இவ்வளோ நீளத்து வைச்சுக்குறா.. நான் பார்த்த.. நான் வளர்த்த திவி.. இவ இல்லையோன்னு தோணுது..”

 

 

“கண்டிப்பா இவ இல்ல..”

 

 

“என்னடா சொல்ற?”

 

 

“ஆமா.. இந்த நிவி உன்னோட பொண்டாட்டி.. அப்போ அதுக்கேத்த மாதிரி அவளும் கெத்து காட்டுவாள்ல? அதுவும் தி க்ரேட் ஆதித்யா கரிகாலனோட பொண்டாட்டி.. திமிரும் தெனாவட்டும் கொஞ்சம் கூடத் தானே இருக்கம்?”

 

 

“இப்படியே நீ அவளுக்கு கொம்பு சீவி விடுடா..”

 

 

“இப்ப எதுக்கு என்னையத் தேடி.. இந்த அர்த்த ராத்திரியில் வந்து புலம்பிக்கிட்டு இருக்க.. காரணம் சொல்லு..”

 

 

“முதல் தடவையிலேயே மயூரி வந்துட்டா.. ஆனா.. ஒரு மாசம் ஆகியும் இன்னும் எதுவும் வரலையே.. தினமும் பண்றோம்.. சில நாட்கள்ல நிறைய தடவை பண்றோம்.. பட் ரிசல்ட் ஜீரோ.. அதான்.. என்கிட்ட ஏதாவது குறை இருக்குமோன்னு உன்னைய பார்க்க வந்தேன்..”

 

 

“டேய்.. டேய்.. நான் ஏதாவது சொல்லிடப் போறேன்.. உடலும் உள்ளமும் சேர்ந்தாத் தான்டா.. குழந்தை பிறக்கும்.. நீ என்ன நினைக்குற? நிவி பிள்ளை பெத்துக் கொடுக்குற மிஷின்னா?”

 

 

“ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் இல்ல.. நான் அப்படியெல்லாம் நினைக்கல.. ஆனா, என்கிட்ட ஏதாவது குறையிருந்தா.. அதை சரி செய்யணும்னு நினைக்கிறேன்..”

 

 

“அப்போ.. பொசிஷன் மாத்திப்பாரு..”

 

 

“ஆன் லைன்ல காட்டுற அத்தனை பொசிஷனையும் மாற்றி, மாற்றி ட்ரை பண்ணிட்டோம்.”

 

 

“நீ மாற்றி மாற்றி ட்ரை பண்ண சரி.. அதுக்கு அவளோட ரியாக்ஷன் என்னன்னு நோட் பண்ணியா?”

 

 

“அது?”

 

 

“இப்பப்பார்.. அவ மேலே உனக்கு எவ்வளவு அன்பு.. பாசம்.. காதல்.. மோகம் இருக்குன்னு அவளுக்கு புரிய வை.. உன்னோட அன்பை மிச்சம் மீதி வைக்காம எல்லாத்தையும் கொடு.. அது போதும்.. அடுத்த மாசமே.. நீ‌ ரெண்டாவது தடவை அப்பா ஆகலைன்னா.. நீ என்னைய வந்து கேளு..”

 

 

“அப்படிங்குற?”

 

 

“போடா.. போய் முயற்சிப் பண்ணி பாரு.. ஆல் தி பெஸ்ட்..” என்ற டேவிட்டிற்கு புன்னகையை பதிலளித்த ஆதித்யா கரிகாலன், நேரே வீட்டுக்கு கிளம்பினான். நேரே வீட்டிற்கு வந்தவன், மயூரியிடம் விளையாடி விட்டு நேரே தனது அறைக்குள் நுழைந்தான். அப்போது தான் குளியலறைக்குள் இருந்து வெளியே வந்த திவ்ய பாரதியை பார்த்ததும், அவனது கண்கள் பளிச்சிட்டன. அவளை இழுத்து அணைக்க துடித்தவன், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு குளியலறை நோக்கி விரைந்தான். ஜில்லென்று தன் மீது விழுந்த நீர் துளிகள் யாவும் நெருப்பு கோளமாக உணர்ந்தான். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன் வெளியே வர, ட்ரெஸிங் டேபிளில் அமர்ந்து தனது முடியை ஹெர் ட்ரையரால் காய வைத்துக் கொண்டிருந்தவளை கண்டான். அவளது கையில் இருந்த ஹெர் ட்ரையரை தன் கையில் வாங்கியவன், அவளது முடியை மெல்ல பிரித்து காய வைக்கத் தொடங்க, அவளோ தன் கண்ணிமைக்காது, தன்னவனை தன் எதிரே இருக்கும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்ல அவளது காதின் அருகில் குனிந்து முத்தமிட்டவன், அவளது கழுத்து வளைவை நோக்கி முன்னேற, அவள் மனதில் ஓர் இமையாத குளிர்ச்சி பரவி, மனதுள் மறைந்த சிரிப்பொன்று அவளது இதழில் விளைந்தது.. அவன் மேல் அவளுக்கு இருந்த கோபம், அவனது மென்மையான நடைமுறையால், இந்த ஒரு மாதத்தில் பெருமளவு குறைந்திருந்தது. அவளது குளிர்ந்த இதழை விரலால் வருடியவனுக்கு

 

உள்ளத்தில் உண்டானது ஒரு சிறு பூகம்பம். சொல்லாத வார்த்தைகள், சொல்லிக்கொள்ளாத ஆசைகள்

 

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மௌனங்களாக உருமாறின. அவளது பின்னங்கழுத்தில் கோலமிட்டு செல்லும் இதழ்களும்,

 

குத்தும் மீசையும், அதனால் கூசி சுருங்கும் அவளது மேனியும் —

 

வானம் மழையைக் காட்டும் முன்பே,

 

அவள் உடல் சொல்லி விடும் அதே வார்த்தையை.. காதல் சொல்லும் வார்த்தைக்கு அப்பாற்பட்டது என்பதை.. முதல் முறை மயக்கத்தில் இருந்தவன், இரண்டாம் முறை தனது சுய கட்டுப்பாட்டை இழந்தவன், இப்பொழுது அவளை பூஜிக்கும் மலராக.. கண்ணாடி குவளையாக கையாளத் தொடங்கினான். அவளை தன் கையில் மாலையென அள்ளியவன், கட்டிலில் மென்மையாக கிடத்த, 

 

 

“பகல்ல வேணாம்.. என்னால் முடியாது..” என்று வெட்கம் கலந்து கூறியவள் அணிந்திருந்த புடவையை கலைந்தவன்,

 

 

“எனக்கு நீ வேணும்..” என்று கூறி, அவளை முகத்தை தன் கையில் ஏந்தி, தன் கண்களை நேருக்கு நேராக காணச் செய்தவன்,

 

 

“இத்தனை வருஷமும் உன்னையத் தவிர, எனக்கு வேறு எந்த பொண்ணு கூடவும் தொடர்பில்ல.. நீ மட்டும் தான்.. நான் சாகும் வரைக்கும்.. செத்த பின்பும் நீ‌ மட்டும் தான்..” என்று கூற, 

 

 

“எனக்கும் நீ மட்டும் தான் மாமா.. உன்னையத் தவிர எனக்கும் வேறு நினைவில்லை.. பிறந்ததுல இருந்து நீ மட்டும் தான் எனக்கு..” என்றவள் கூற, அவளது இதழை கவ்வி சிறைபிடித்தான் ஆதித்யா கரிகாலன். அவனது வேகத்தில் மோகமுள் வைத்த மலராக பேதையவள் திணற,

 

 

“மெல்ல.. மெல்ல.. கொஞ்சம் பொறுத்து மாமா..” என்றவளின் மாமா என்னும் வார்த்தை உன்மத்தம் பிடிக்கப் செய்ய, அவளை அணு அணுவாக கொள்ளையடித்தான். அவனுள் புதைந்து கிடந்த காதலும் காமமும் போட்டிப் போட்டுக் கொண்டு வெளிப்பட, இருவருக்கும் இடையே இருந்த சண்டைகள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் பின்னுக்கு செல்லப்பட்டன. மயூரியின் ட்ரீட்மெண்ட்டிற்காக தான் இருவரும் இணைகின்றனர், என்பதை மறந்து, தங்களுக்குள் இருக்கும் அன்பை, அருகாமையை, ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் இழந்திருக்கின்றனர் என்பதை அவர்களது அணைப்பும் முத்தங்களும் செல்ல சிணுங்கல்களும் அவர்களது அறையின் சுவரில் கூட விழுந்து நிழலாகக் கூறியது.. அவர்களது காதலை.. இதயங்கள் இரண்டும் போது அங்கே வார்த்தைகள் எதற்கு? பிரிந்த இரு இதயங்கள், தங்களது உடல் மொழியில் பேசும் போது வாய்மொழி எதற்கு? மதியம் தொடங்கிய அவர்களது தேடல் நள்ளிரவு தாண்டியும் முடியவில்லை. தன் கையில் கிடைத்த அற்புத மலரின் தேனை வண்டென மன்னவன் அள்ளி.. அள்ளி பருக, கின்னத்தில் ஏந்தி, தன்னிடம் இருக்கும் தேனை திகட்டாது.. அள்ளி.. அள்ளி அளித்தாள் மங்கையவள். குழந்தை பிறப்பு ஒரு மாயம், உணர்வின் இசை, உயிரின் ராகம்! உடலின் சங்கமம் ஒரு வாசல்,

 

ஆழ்ந்த பாசம் தான் அதன் சாத்தல். ஒரு கணம் போதும் உயிர் உருவாக,

 

சிற்பிக்குள் விழும் முத்தாக.. அன்பில்லா சங்

கமம் என்றும் வெறும் நாடகமே.. உணர்வுள்ள இசை தான், வாழ்க்கையின் விதை தான்! எரிமலையின் மேல் போர்த்தியிருக்கும் பனியைப் போல் அவனிடம் இருக்கும் தற்போதைய நெருக்கத்தைத் தாண்டி.. அவனுடன் வாழ்நாள் முழுவதும் இணைவாரா திவ்ய பாரதி?

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top