ATM Tamil Romantic Novels

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் : 02

மூச்சைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடி வந்த தன் மகளைப் பார்த்த மஹா கையில் கரண்டியுடன் கோபமாக நின்று இருந்தார்.

“எதுக்கு டி இவ்ளோ லேட்டு…?” என்று கரண்டியை காற்றில் ஆட்டிக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கேட்க…

 

“பஸ் வரலை அதான் ஆட்டோப் பிடித்து வந்தேன்… இதுக்கு எதுக்கு நீ வழிய மறிச்சிட்டு இருக்கம்மா… விடு நான் போய் பிரெஷ்அப் ஆகுறேன்…” என்று அவரைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட்டவளை விநோதமாகப் பார்த்தார் மஹாலட்சுமி.

 

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை… இயல்பை மீறிய ஒரு பயம் பதட்டம் அவள் முகத்தில் என்று அவருக்கு புரிந்து இருந்தது. ஆனால் ஏன்…? என்று சற்று குழப்பம் மேலிட்டாலும், அவளின் இந்த செயல் சற்று மனதை  உறுத்தியது.

“வேறு ஏதும் பிரச்சனையாக இருக்குமோ…?” என்ற கலக்கம் வேறு மனதில் பிறக்க…

 

வேகமாக படுக்கை அறைக்குள் நுழைந்தவர்… “ஆதிரா…?” என்று குரல் கொடுக்க…

 

அவள் அறைக்குள் இல்லை… குளியல் அறைக்குள் இருப்பாள் போலும்… தண்ணீர் குழாயில்  இருந்து திறந்து விட்டு விழும் சத்தம் மட்டும் அவர் காதில் விழுந்தது.

 அறை உள்ளே வாயைப் பொத்திக் கொண்டு கதறி அழுதாள் ஆதிரா. 

முதல் முறை ஒரு கொலையை நேரில் கண்டதன் விளைவு… ரத்த நாளங்கள் உறைய செய்யும் அளவிற்கு கொடூரமாக கிடந்தது.

 

ஒன்றும் அறியாத அப்பாவி அந்த ஆட்டோ டிரைவர் பிணமாக திறந்த விழிகள் மூடாமல் முகம் முழுவதும் ரத்தம் வடிய பார்க்கவே அவ்வளவு பயமாக இருந்தது.

 

ஒரே மூச்சாக அழுது தீர்த்தவளுக்கு அந்த சம்பவம் துளி கூட கண்ணிலிருந்து மறையவில்லை மாறாக மீண்டும் மீண்டும் தோன்ற  தேம்பித் தேம்பி அழுதாள்.

 

ஆதிரா உள்ளே சென்று கால் மணி நேரம் கடந்தும் இன்னும் வெளியே வராததால் அவள் தாய் மஹாலட்சுமியின் தான் ஏனோ என்னவோ ஏதோ என்று பதறினார்.

 வேகமாக குளியல் அறையின் அருகில்  சென்று கதவைத் தட்ட அப்போதுதான் சுய உணர்வு பெற்றவளாக மெல்ல திரும்பி கதவை வெறித்துப் பார்த்தாள்.

 

 கதவை தட்டும் சத்தமும்  தாயின் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் செவிகளில் எட்ட மூளையில் போய் பதிந்தது.

 

 அப்போதுதான் ரொம்ப நேரம் பாத்ரூமில் இருந்து விட்டோம் போலையே என்று அவசர அவசரமாக முகத்தை கழுவியவள்…  அழுத கண்ணீர் கோடுகள் தெரியாமல் இருக்க முகத்தில் அழுந்த சோப்பை போட்டு கழுவினாள்.

 

 பட்டென்று பாத்ரூம் கதவை திறந்து… “என்ன மஹா வேணும்…?” சற்று சுருதி குறைந்த குரலில்.

 

“பாத்ரூம் போய் எவ்ளோ நேரம் ஆகுது… கதவை தட்டிட்டே இருக்கேன்… ஒரு பதிலும் இல்லாமல் இருக்க…என்ன டி பிரச்சனை…?”  என்றவரின் முகத்தில் தீவிரம்.

 

அவள் எதிர்ப்பார்த்தக் கேள்வி தான் என்றாலும் டக்கென்று பதில் சொல்ல முடியவில்லை ஆதிராவால்… “அது ஒன்னும் இல்லம்மா…  ஒரு கொலையை நேரில் பார்த்தேன் அதான் முதன் முதலில் பார்த்ததும் ஒரு நொடி ஒரு மாறி ஆகிட்டு.” என்று பாதி உண்மையை மட்டும் சொன்னாள். அவளுக்கு தன் தாயிடம் பொய் சொல்லிப் பழக்கம் இல்லை தான்… அதனாலே பாதிப் பொய்யை மட்டும் சொன்னாள். முழு உண்மையும் சொன்னால் என்ன நடக்கும் என்று அவளுக்குத் தான் நன்றாக தெரியுமே…? தாய் தன்னை மேலும் படிக்க விடமாட்டாள், யாரோ ஒரு கொலைகாரனுக்காக அம்மா பயந்து கொண்டு தன் படிப்புக்கு நாமம் போட்டுவிட்டால் என்ற பயத்திலே  கமுக்கென்று வாயை மூடிக்கொண்டாள்.

ஆனால் ஆதிரா அறியாத ஒன்று. இன்று அவரிடம் மறைத்ததற்காக அவர் பல நாட்கள் எண்ணி வருந்தப்போகிறாள் என்று.

 

மஹாலக்ஷ்மியின் புருவம் ஒரு முறை சுருங்கியது அதன் பின்பு அவர் எதுவும் பேசவில்லை. “இதப்பத்தி எல்லாம் யோசிக்காத ஆதிரா…வந்து டீயாவது குடி.” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் வேலையை கவனிக்க சென்று விட்டார்.

 

இவளும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் சமையல் அறைக்குள் ஓரமாக போடப்பட்டு இருந்த டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அதற்குள் மஹாலட்சுமி சூடான இஞ்சி ஏலக்காய் டீயும் கூடவே அவளுக்கு பிடித்த கீரை போண்டாவும் சுட்டு கொண்டு அவள் அருகில் வைக்கவும் இன்று நடந்த கொடூர சம்பவங்கள் எல்லாம் மூளையின் பின்னுக்கு தள்ளப்பட்டு நமக்கு சோறு தான் முக்கியம் என்பது போல ஒரு போண்டாவை வாயில் உள்ளே தள்ள… அனாவசியமாக கரடி போல் அவன் நியாபகம் வந்து தொலைத்தான். கூடவே இன்னொரும் நியாபகம் வந்தது அவனுக்கு எப்படி என் பெயர் தெரியும்…? அதுவும் ஆட்டோவில் பாதியில் தானே வந்து ஏறினான் அப்படி இருக்க என் வீட்டு விலாசமும் எப்படித் தெரியும் என்ற போது மேலும் அதிர்ந்தாள். உள்ளே தள்ளிய போண்டா வேறு தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள “எக்” என்று விலுக்கென்று அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் பெண்ணவள்.

 

அவளின் அதிர்ச்சி கலந்த முகத்தைப் பார்த்த மஹா  ஒரு நொடி புரியாத பார்வையை அவள் மீது செலுத்தி…” என்ன ஆச்சு ஆதிரா… போண்டாவை கொஞ்சம் மெதுவாக தான் உள்ளே தள்ளேன்… இப்படி பேய் அறைந்த மாதிரி பார்வை வேறு பார்த்துட்டு இருக்க..? இந்தா தண்ணியை குடி…” என்று நீர் போத்த்தலை அவள் கையில் திணித்தார்.

 

அவள் தாயின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையிலா அவள் இப்போது இருக்கிறாள். அதே அதிர்ச்சி கலந்த பாவனை ஒரு துளியேனும் மாறாமல் தாயை நோக்கினாள். போத்தலில் இருந்த நீர் முழுமையாக குடித்து முடித்து விட்டு… “அம்மா எனக்கு பயமாக இருக்கு…” என்று சொன்னவளுக்கு சற்று கைகள் கூட நடுங்கியது. கையில் அவசரமாக எடுத்த  டீ  வேறு டமார் என்று தரையில் கொட்டியது.

 

“என்ன பண்ணிட்ட ஆதிரா… இதை வேறு நான் சுத்தம் செய்யணுமா…?” என்று ஆத்திரத்தை முகத்தை காட்டியவர்… நீ தான் இதை சுத்தம் பண்ணி வைக்குற…?” என்று சொல்லி விட்டு கையில் ஒரு துணியை திணிக்கவும் அவளுக்கு கோவம் பொங்கி விட்டது. “நான் என்ன பேசிக் கொண்டு இருக்கிறேன் நீ என்னம்மா இப்படி பேசுற…? என் நிலைமை உனக்கு புரியதா இல்லையா…?” என்று கத்தினாள்.  

 

“இப்போ எதுக்கு டி சத்தம் போட்டு ஊரை கூட்டுற…? அப்படி என்ன பெரிய நிலைமை, ஒரு கொலை அது உன் கண் முன்னாடி நடந்து போச்சு…? இது ஒரு விஷயமா என்ன…?” என்று பதில் சற்று கோபம் கனன்ற குரல் தான் அதில் ஒரு வித அலட்சியம் இருந்தது.

 

“அம்மா உனக்கு மனசாட்சியே இல்லையா…? ஒரு உயிர் என் கண் முன்னாடியே போய் இருக்குன்னு சொல்லுறேன் ஆனால் நீ இப்படி பேசுற…?” என்றவளுக்கு தாயின் பேச்சில் சிறு வெறுப்பு கூட உண்டாகி விட்டது.

 

இப்போதும் அந்த தாயின் முகத்தில் எந்த மாற்றமும் வந்ததாக தெரியவில்லை. ப்ச் என்ற சலித்த பாவனையுடன் தான் மீண்டும் தன் பேச்சை தொடங்கினார் அவர். “இங்க பாரு. என் கண் முன்னாடியே என் குடும்பத்தை யாரோ  கொன்று ரத்த வெள்ளத்தில் மிதக்குறதைப் பார்த்தவ நான் … அப்போ நீ சின்ன பொண்ணு ஆதிரா…உனக்கு ஒன்னும் தெரியாது… அதெல்லாம் பார்த்தப் பிறகு இது எல்லாம் கேட்டாலோ பார்த்தாலோ என் மனம் கல்லாக போய்விட்டது.” என்று சொன்னவருக்கு முகம் இறுகிப் போய் இருந்தது.

 

“ம்மா… சாரிம்மா… நான் தான் ஏதோ…ம்…தப்பு…சாரிம்மா…” என்று அவள் கையைப் பிடிக்க… அதை மெல்ல விலக்கிவிட்டு… “நான் போய் குலாப் ஜாமுனுக்கு ஜீரா ஊறிவிட்டதா…?” என்று போய் பார்கிறேன் என்று சொல்லி விட்டு இன்னொரு அறைக்கு சென்றுவிட்டார்.

 

தாயின் மனதில் புதைந்து இருப்பது பழைய நிகழ்ச்சிகளாக இருந்த போதும் அதன் காயம் இன்னும் ஆறவில்லை என்பது அவளுக்கு நன்றாக தெரிந்த இருந்த போதிலும் வீணாக புண்ணை மீண்டும் கிளறி விட்டுடோமோ…?  என்ற போது தாய்க்காக அவள் மனம் பறிதவித்தது. “ச்சை… இது தான் அவசரக்குடுக்கை என்பது போல…” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஆதிரா.

 

அவள் மனதில் ஓரமாக அவன் வந்து போனான். அவன் தான் வேறு யார் …? அந்த வெள்ளை பழுப்பு நிற கண்களுக்கு சொந்தக்காரன். அவனுக்கு எப்படி என்னைத் தெரியும் அதுவும் என் வீட்டு விலாசமும் தெரியும் என்று வண்டு போல மண்டைக்குள் குடைய, அதை அவ்வளவு எளிதாக மனதில் இருந்து ஒதுக்க முடியாமல் திண்டாடிப் போனாள்.

 

ஒரு வழியாக இரவு உணவு நேரமும் வந்து விட… அப்போதும் வெளியே வரவில்லை மஹாலக்ஷ்மி. அவள் சென்ற அறை உள் தாழ்பாள் இட்டு பூட்டி இருந்தது. கதவின் அருகே சென்று தட்டலாம் என்று கையை நீட்ட… வேண்டாம் என்றது ஒரு மனது. தாய்க்குள் பழைய நினைவுகள் இவ்வளவு பாதிப்பா…? என்று தானும் கலங்கினாள் ஆதிரா. அவரை ஏனோ தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் சமையல் அறைக்குள் சென்று தானே சமைக்க தொடங்கினாள்.

 

அடுத்த அறை மணி நேரத்தில் சுட சுட தோசையும் அதற்கு புதினா சட்னியும் வைத்தாள். புதினா சட்னி மஹாலக்ஷ்மிக்கு அவ்ளோ பிரியம் அதனாலே அவள் மனதை குளுமைப் படுத்த அவள் செய்த சிறு முயற்சி. அதற்கு பலன் இல்லாமல் போகவில்லை. அறையை விட்டு வெளிய வந்த அவள் தாய் நேராக கையை கழுவிவிட்டு வந்து நாற்காலியில் அமர… வேக வேகமாக தட்டை எடுத்து அவள் முன் வைத்து சுட சுட நான்கு தோசையும் வார்த்து அவள் தட்டில் வைத்தாள் கூடவே அவருக்கு பிடித்த புதினா சட்னியுடன்.

அதைக் கண்டதும் தாயின் முகத்தில் சிறு புன்னகை கீற்று. அதோடு ஆதிராவையும் உண்ட வைத்தப் பிறகு தான் எழுந்து சென்று தனது அறைக்குள் புகுந்து கொண்டாள் மஹாலட்சுமி.

கதவருகே போகும் போது சற்று நடையை நிறுத்தி அவளை திரும்பிப் பார்த்தவர்… உனக்கு பரீட்சை எல்லாம் முடிந்தது தானே…?”

 

“ஆமாம்ம்மா… இனி வெறும் வகுப்பு மட்டும் தான்.”

 

“சரி ஒரு இரண்டு நாளுக்கு லீவ் போட்டு விடு.”

 

“ஹான்…சரி…” என்று தலை ஆட்டியவளுக்கு பெரும் ஆச்சரியம் தான். வகுப்புக்கு மட்டம் போடுவது, அனாவசிய லீவ் எதுவுமே மஹாலக்ஷ்மிக்குப் பிடிக்காது. பள்ளி, கல்லூரிகளில் அவள் தான் நூறு சதவீத அட்டேண்டன்ஸ் வாங்குவாள். அப்படி இருக்க இப்போது லீவ் போடு. என்று சொன்னால் ஆச்சரியமாக இராதா…? கூடவே அதிசயமும் தான். 

ஆனால் அந்த லீவ் கண்டிப்பாக முக்கியமான விஷயமாகத் தான் இருக்க வேண்டும்  என்று மட்டும் புரிந்தது. ஆனால் அது என்னவாக இருக்கக் கூடும் என்பது தான் அவளால் யூகிக்க முடியவில்லை.

 

அறைக்குள் வந்து மெத்தையில் சாய்ந்தவளுக்கு ஏனோ தூக்கம் வராமல் போகவே ஒரு நாவலை எடுத்துப் புரட்டலானாள். சிறிது நேரத்தில் அவள் அறைக்குள் யாரோ வருவது போன்ற ஒரு அரவம் கேட்க… வந்தவன் வேறு யாரும் அல்ல…அவன் தான் அந்த வெள்ளை பழுப்பு விழிகளுக்கு சொந்தக்காரன் மீண்டும் வந்தான் அவன் கண்கள் மட்டும் இப்போது அவளுக்கு நன்றாக தெரிந்தது. அப்பப்பா என்ன கூர்மை என்று அதிசயக்கும் போதே அவன் முகம் அவள் முகத்திற்கு நேராக இருந்தது. கூர்மையான விழிகள் இப்போது கத்தியை அவள் கண்களில் சொருகினாற் போன்ற ஒரு பிரமை. மெல்ல அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்தவன்…” வெல்கம் டு ஹெல்…” என்ற குரல் அசரீரி போல் ஒலித்த குரல் கேட்ட உடனே அவள் கண்கள் முழிப்பு தட்டிவிட்டது. நெஞ்சு தடதடக்க கன்னத்தை வேகமாக தடவியவளுக்கு எந்த குறுகுறுப்பும் ஏற்பட்டது போல் தோன்றவில்லை. ஆனால் அந்த வார்த்தை…? அது என்ன…? என்று ஒரு திடிக்கிடல். அது அவள் கண்ட கனவு என்று புரிந்து கொள்வதற்கே ஐந்து நிமிடம் கடந்து போய் இருந்தது.  வேகமாக எழுந்து முதலில் விளக்கை போட்டு விட்டு அறையை சுற்றி முற்றி தேடினாள். யாரும் இருப்பது போன்ற எந்த அறிகுறியும் இல்லை. திரை சீலையை நன்றாக இழுத்து மூடி விட்டு வந்து மெத்தையில் அமர்ந்தவளுக்கு இனியும் தூக்கம் வருமா என்ன…?  பயம் மட்டும் நெஞ்சுகுழி முழுவதும் பரவிக் கிடந்தது. அந்த அரக்கன் ஏன் என் கனவிலும் வந்து இம்சை செய்து தொலைக்கிறான். குரங்கை நினையாதே மனமே என்றால் அது தான் அடிக்கடி மனதில் வந்து போவது போல நாள் முழுவதும் அந்த பழுப்பு விழிகள் தான் வந்து போயின. அவளுக்கு இன்னும் ஒன்றும் தோன்றியது. அவன் கண்கள் மட்டும் தான் அவளுக்கு தெரியும் என்பதால் தான் அது மட்டும் கனவில் தோன்றி இருக்கிறது என்ற மட்டும் புரிந்தது அவளுக்கு. “ச்சீ… இனி இந்த ஜென்மத்தில் நான் அவனை சந்திக்கக் கூடாது கடவுளே…!” என்று வேண்டுதல் வைத்தவளுக்கு அவன் மீது அதீதே வெறுப்பே  உண்டாகி இருந்தது.

அப்பாவி உயிர்களைக் கொல்லும் மிருகம், அரக்கன், ராட்சசன்… இன்னும் இவனால் எத்தனை உயிர்கள் பழியாகப் போகிறதோ…? என்று பதறிய அந்த நொடி தான் அந்த மும்பை நகரத்தில் இன்னொரு உயிர் பலியாகிக் கொண்டு இருந்தது அது மகாராஷ்டிரா மாநிலத்தின் மந்திரியின் உயிர். 

 

ஆள் அரவம் அற்ற பாழடைந்த குடோனில் ஆந்தை அலறலுடன் இன்னொரு அலறலும் சற்று அதிகமாகவே கேட்டது.

“வ்வேண்டாம்… வ்வேண்டா… என்னை விட்டுடு… இனி இந்த தப்பு நடக்காது…” என்று அவன் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டு இருக்க… அதை கிஞ்சித்தும் காதில் கொள்ளாமல் சைலன்செர் பொருத்திய துப்பாக்கியை மந்திரியின் முன் நீட்ட… அவர் மேலும் வெலவெலத்துப் போனார். 

“என்ன விட்டுடு எனக்கு குழந்தை குட்டிகள் எல்லாம் இருக்கு.” என்று திட்ட திட்ட கை எடுத்து கும்பிட்டவரை ஒரு பார்வை பார்த்தனே ஒழிய வேறு எந்த மாற்றமும் அவனிடம் இல்லை…  

மீண்டும் அவரின் நெற்றிப் பொட்டில் அந்த துப்பாக்கியை அழுத்தி வைத்தவன் லோடு செய்ய… அதிலே அவருக்கு பாதி ஹார்ட் அட்டாக் வந்து விட்டு இருந்தது.

ஆனால் அவன் மேலும் எதுவும் செய்யவில்லை…ஏதோ யோசனை செய்தவனாக தன் அருகில் இருந்தவனை அழைத்து காதில் கிசுகிசுத்தான்.

அடுத்த ஒரு நிமிடத்தில் ஒரு மொபைல் எடுத்து வீடியோ அவனுக்கு காட்ட அடுத்த நிமிடம் அதிர்ந்து போனார் மந்திரி. இதை அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

அது வரை என்னை விட்டுவிடு விட்டு விடு என்று கெஞ்சிய மனிதர் என்னை கொன்று விடு கொன்று விடு என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.

 

அவன் இதழ்கள் கோணலாக வளைந்தது. “அவ்ளோ தானே பண்ணிட்டாப் போச்சு…?” என்று துப்பாக்கியை தடவியவன்… திரும்பி தன் ஆட்களைப் பார்த்தான். அவன் சொல்ல வந்த செய்தி புரிந்தவர்களாக தலை அசைத்து ஒரு கம்பியில் மந்திரியின் கை கால்களைக் கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து அவன் அடியாள் அடைக்கப் போக… வேண்டாம் என்று சைகையால் தடுத்தவன்… மந்திரியின் முன் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் கையில் சிகரெட்டுடன்.

 

மந்திரிக்கு அவன் தன்னை என்ன செய்யப் போகிறான் என்ற பயம். அவன் காட்டிய வீடியோவை பார்த்தப் பிறகு இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று அவர் எண்ணினாலும் அவனின் இந்த நிதானம் ஏதோ வயிற்றுகுள் பயப்பந்தை உருளச் செய்தது.

 

நிதானமாக புகையை உள் இழுத்தப் படி சுருள் சுருளாக வெளியே விட்டவன் ஒரு தலையை சாய்த்து எதிரில் நின்றவனை பார்த்தப் பார்வையை கண்டு மந்திரி இன்னும் சாகாமல் இருந்ததே அதிசயம் தான்.

 

ஒரே ஒரு விசில்… எங்கு இருந்தோ ஆள் உயரத்திற்கு இருந்த இரண்டு வெறி நாய்கள் மந்திரியை நோக்கிப் பாய்ந்து வந்தன.

 

அந்த நாய்களின் கோர ராட்சச பற்களில் சிக்கியது மந்திரியின் சதைகள். அவரை கடித்துக் குதற ரத்தம் தரையில் வழிந்து ஓடியது. அவரின் எலும்புகளை கடித்து அங்காங்கே வீசியது. அவர் வலி தாங்க இயலாது  ஐயோ அம்மா என்ற அலறல் மட்டும்  அந்த குடோன் முழுவதும் எதிர் ஒலித்தது.அரை மணி நேரக் கதறலை எதோ சங்கீதம் போல் கேட்டுக் கொண்டே இருந்தவன் மூன்று சிகரெட்டை பொறுமையாக ஊதித் தள்ளிக் கொண்டு இருந்தான். இமை விலகாமல் மந்திரியின் மரணத்தை கண் குளிர கண்டது போன்ற ஒரு தோற்றம். புன்னகை ஒரு நொடியேனும் மறையாத உதடுகள். மந்திரியின் அலறல் மெல்ல மெல்ல அடங்கியது. உயிர் ஊசல் ஆடிக் கொண்டு இருந்தது.

 

இப்போது தான் மெல்ல எழுந்தவன் மந்திரியை நோக்கி அடி எடுத்து வைத்து… தன் சூ அணிந்த கால்களால் அவரின் கழுத்தை அழுந்த மிதிக்க  அதில் அவர் உயிர் பிரிந்தும் போய் இருந்தது. 

 

“டிச்போஸ்” என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் அவன் உதிர்க்கவில்லை.

 

இங்க நடந்த அனைத்தையும் வீடியோ வழியாக லைவில் இன்னும் முக்கிய சிலப் பேருக்கு ஒளிபரப்ப… அவர்களுக்கு பயத்தில் நெஞ்சில் நீர் வற்றிப் போய்விட்டது.

 

தன் அருகில் தயக்கமாக நின்று கொண்டு இருந்தவனைப் பார்த்து… நீ இங்க ஏன் வந்தாய்…? என்பது போன்ற ஒரு அனல் பார்வையை வீசினான்.

 

அதைப் புரிந்து கொண்டவனோ… “இவன் செய்தது ஒன்னும் பெரிது இல்லையே அண்ணா…?” என்றவன் அந்த வார்த்தையை சொல்லி முடிக்கும் முன்பே எச்சில் விழுங்கினான்.

 

“எனக்கு துரோகம் பண்ணனும்னு நினைப்பு வந்தது இல்லையா…? அது ஒன்று போதாது இவன் செத்துப் போக…” என்றான் அலட்சியமாக.

 

“இதை லைவில் பார்த்துக் கொண்டு இருக்கிற மற்றவர்களுக்கும் இனி நான் புரிய வைக்க வேண்டியதில்லை. இனி அந்த நினைப்புக் கூட அவர்களுக்கு வராது.” என்றவனின் கூற்று உண்மை தான் என்று புரிந்தது.

 

அதற்கு மேல் அவன் எதுவும் பேசாமல்  மௌனித்துப் போனான். தன் தம்பியின் மௌனத்தைக் கண்டு தோளில் மெல்ல தட்டி விட்டு காரை நோக்கி நடந்தான் அந்த அரக்கன்.

 

இவனுக்கும் ஆதிராவுக்கும் என்ன தொடர்பு…?

 

மோகம் தொடரும்…

3 thoughts on “மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top