இதய சிறை – 04
அரவிந்த் நடு இரவின் அந்த ஏகாந்த தனிமையில் ஒரு ஃபுல் பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு…. மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து கொண்டு தன் போக்கில் சிந்தித்து கொண்டிருந்தான்.
ஆல்கஹால் போதையை விட அவன் ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிந்த மாதுவின் தெளியாத போதையே சுழன்றடித்தது.
அவன் எண்ணம் எல்லாம் “பைங்கிளி!!….
என்னை பற்றி தெரிந்தும் முழுவதுமாக ஏற்று கொள்வாளா….?
தன் செயல்களால் அவளுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இருக்குமா….?” என்று பலவாறு அவன் மனம் சிந்தித்து கொண்டு இருந்தது.
அப்போது மாடி படிகளில் சத்தம் கேட்கவே….
பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க…. இவனை பார்க்க அவன் நண்பன் தாஸ் மேலே ஏறி வந்து கொண்டிருந்தான்.
“வாடா!!…. இப்போ தான் வீட்டுக்கு அட்ரஸ் தெரியுதா….” என்றான் அரவிந்த்.
“என்ன மச்சான்….இப்படி சொல்லிட்ட….நீ வீட்டில் எப்போ இருப்பேன்னே தெரியலை….”
அது கிடக்கட்டும் நீ இன்னிக்கு கீழுர் சில்க் வீட்டுக்கு போகலையா….?” எனச் சொல்லி கொண்டே நாற்காலியில் அவனுக்கு எதிரில் அமர்ந்தான்.
சிகரெட்டின் புகையை உள்ளிழுத்து சுருள் சுருளாக புகை விட்டு கொண்டே…. “இன்னைக்கு போகல டா அவ வீட்டுக்கு….
இப்ப எல்லாம் அங்க போகவே பிடிக்கல டா மச்சான்…. மனம் முழுவதும் ஏதோ வெறுமையாக இருக்கு…”
“எப்படி இல்லாமல் இருக்கும் மச்சான்….உன் ஆள் தான் தூத்துக்குடி வந்திறங்கி ரெண்டு நாள் ஆச்சே….” என்றான் அவன் மன நிலை அறிய ஆவலாக.
அதில் ஒரு நிமிடம் சற்று தயங்கியவன்…. தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு…. “அவ எப்படி இருக்கா மச்சான்….?” என்றவனின் குரல் மென்மையாக ஒலித்தது.
“பார்ரா….!! இவனுக்கு இப்படி எல்லாம் கேட்க கூட தெரியுமா….” என்று சற்று விநோதமாகவே பார்த்தான் அவன் நண்பன் தாஸ்.
“யாரை சொல்ற மச்சான்” என ஒன்றும் தெரியாதவன் போலவே கேட்டான்.
“பட்ச்!! தெரிஞ்சுக்கிட்டே தெரியாத மாதிரி பண்ணதா டா….
நான் வேற யாரை கேட்க போறேன்…. பைங்கிளிய தான் டா….”
என்று சொன்னவனின் முகம் சற்று மலர்ந்ததோ….
“ஓஹோ!! அந்த மேடமா…. அவங்க வீட்டில் நான் இருக்கும் போது அவ ஆள் மடியில தூங்கிட்டு இருந்தா மச்சான்.…” என தோளில் கையை போட்டு கொண்டு வேண்டுமென்றே வெறுப்பு ஏற்றினான்.
தாஸின் கையை தட்டி விட்டு…. “டேய்!! எனச் சட்டையை பிடித்து…. நான் தான் அவளுக்கு எல்லாமே புரிஞ்சுதா….” என்றவனின் கண்கள் ரௌத்திரத்தில் மின்னியது.
“கூல் டா….அவ உனக்கு தான் சரியா….”
“அவள் எனக்கு கிடைப்பா தானடா….!!” என ஏக்கம் கலந்த குரலில் யாசிக்கும் தன் நண்பனுக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என தெரியாமல் முழித்தவன்.
“விடு மச்சான்…. ஏதும் யோசிக்காத…. ஃப்ரீயாக விடு…. லேட் ஆகிடுச்சு டா இப்போவே….போய் தூங்கு மச்சான்…”
“ம்ம்….” என அணைத்து கொண்டே….“நீயும் இங்கேயே இன்னைக்கு ஸ்டே பண்ணு டா…. இவளோ லேட் ஆக போக வேணாம்….”
“இல்ல மச்சான்…. அம்மா தேடுவாங்க…. சரியா தூங்கிருக்கவும் மாட்டாங்க…. அதனால் நான் வீட்டுக்கே போய்றேனே….பை டா….” என சொல்லிக் கொண்டே விரைந்து கிளம்பினான்.
மாடியில் இருந்து கீழே இறங்கி செல்பவனை பார்த்து….உனக்காக ஒரு ஜீவன் இன்னும் தூங்காமல் காத்துகிட்டாவது இருக்கே…. ஆனா எனக்கு என்று பெருமூச்சு விட்டவன்…. இலட்சக்கணக்கில் தண்ணியாக செலவு செய்து கட்டின வீட்டை வெறுமையாக பார்த்தான்.பல லட்சங்களை விழுங்கிய ஆடம்பர பொருட்கள் கூட மதிப்பில்லாமல் போனது அன்புக்காக ஏங்கும் மனதிற்கு முன்னால்…
அவன் தாய் தந்தையின் நினைவு வர அவர்கள் போட்டோவை கட்டிக் கொண்டவன்.
“ஐ மிஸ் யூ ம்மா!!”
“எனக்கும் நான் தூங்கினேன்னா, சாப்பிட்டேனான்னு கேக்க, எனக்காக தூங்காமல் காத்திருக்கிற உறவு வேணும் அம்மா…” என நெடு நேரம் எதேதோ புலம்பி கொண்டே தரையில் சாய்ந்து அமர்ந்தான்.
வீட்டு வாசலை அடைந்த தாஸ்…. “அவ கிடைக்க மாட்டான்னு தெரிஞ்சும் இவன் ஏன்….இப்படி பண்றான்…”
(ஏசுவே இவன் கல்யாணம் பண்ணி சந்தோசமாக வாழ ஏதாவது ஏற்பாடு பண்ணு பா… என மனது தாளாமல் வேண்டிக்கொண்டது)
அவன் வேண்டுதல் கடவுள் காதில் விழுந்து விட்டது போலும்.
அடுத்த நாள் அவள்…. அவன் பெட் ரூமில் மிருதுவான பஞ்சு மெத்தையில் துயில் கொண்டிருந்தாள்.
இங்கு நம் நாயகியோ, சந்தோசப்படுவதா இல்லை துக்கப்படுவதா என்று பிரித்தறியாத நிலையில் ரெண்டுக்கும் சேர்த்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள்.
ஆம்…. அவள் பெரியப்பா… அவளிடம் கொடுத்த கவரில் இருந்தது ஆடிட்டர் படிப்பதற்கான ஃபார்ம்…இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் வீட்டில் பெண்களை படிக்க வைப்பார்கள். ஆனால் ஊர் விட்டு எங்கும் வெளியே சென்று படிக்க முடியாது. இளம் வயதிலேயே பெரும்பாலும் திருமணம் முடிவாகி விடும். பதினெட்டு வயதில் திருமணம் நடந்து விடும்…. அதன் பிறகு அப்பெண்ணை படிக்க வைப்பது எல்லாம் அவள் கணவன் செயல்.
அவன் மேற்படிப்பு மாஸ்டர் படித்தவன் ஆக இருந்தால் பெண்களை பேச்சுலர் வரை படிக்க அனுமதிப்பார்கள்….அவனை விட ஒரு படி மேலே இருக்க பெரும்பாலும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. இதே நிலைமை தான் நம் நாயகிக்கும் நேர்ந்தது.
அவளுக்கு நிச்சயம் செய்யவிருக்கிற மாப்பிள்ளை ஒரு மொடா குடிகாரன், பெண் பித்தன். பிறகு ஏன் சம்மந்தம் என்றால் கோடியில் சொத்து, தொழில் பாட்னர் வேறு, காலேஜ் போகாமலே மேனேஜ்மெண்டை மிரட்டி வாங்கிய பட்டம் என்று அருமை பெருமைகளை அள்ளி விடலாம்.
அங்கு வீட்டில் இதை பற்றி அறிந்த கௌதம் ருத்ர தாண்டவம் ஆடி தீர்த்து விட்டான். கடைசியில் ஒன்றும் பலிக்க வில்லை….
வேறு மாப்பிள்ளை என்றால் படிப்பை மறந்து விட வேண்டும் என தனுவின் லட்சியத்தில் கை வைக்கவும்…. இருவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர். அவள் வேகமாக சென்று தந்தையை கட்டிப்பிடித்து…
“இந்த திருமணத்தில் எனக்கு சம்மந்தம் இல்லப்பா….பெரியப்பா கிட்ட சொல்லி நிறுத்துங்கப்பா” என தேம்பி தேம்பி அழுதாள்.
தன் செல்ல மகள் இப்படி கண்ணீர் வடிப்பதை பொறுக்க முடியாமல்….
இது வரை தன் அண்ணனை எதிர்த்து பேசாதவரோ….
முதல் முதலாக தன் மகளுகாக வாயை திறக்க போகவும்…. அதை உணர்ந்த சரவண பெருமாள்…. “என்ன டா தம்பி? இந்த குடும்பத்திற்காக என் வியர்வையை இரத்தம் போல் சிந்தி காப்பாத்திட்டு வரேன்…. உன் மகளுக்கு நான் நல்லது தான் செய்வேன் என நீ நம்புற தானே….இளங்காளை மாறி துள்ளுற பசங்க எல்லாம் ஒரு குழந்தை ஆனவுடன் சரி ஆகிடுவாங்க. தொழில்ல அவன் தில்லாலங்கடி…. நம்ம கைகுள்ள தான் இருக்க போறான்…. நம்ம பொண்ணை ஒன்னும் செய்ய முடியாது…. எல்லாம் தெரிஞ்சு தான் இந்த சம்மந்தம் பேசுறேன்….உன் மகள் விஷயத்தில் எனக்கு உரிமை இல்லை என்றால் இப்போவே சொல்லி விடு….
இராமனுக்கு லஷ்மன் போல இருக்க நீ…. இப்படி என்னை எதிர்த்து பேச ஆரம்பிப்பன்னு நினைக்கல தம்பி……” என நடிப்பில் ஆஸ்கார் வாங்கும் சரவண பெருமாளுக்கு சொல்லியா தர வேண்டும். எமோஷனல் ஆக பேசியே தன் வழிக்கு வர வைத்து விட்டார்.(நீ ராமன் என சொன்னா உண்மையான ராமன் அவரே தன் கழுத்தில் தூக்கு மாட்டி செத்திடுவார் டா….)
தனுவை திரும்பி பார்த்து….நான் சொன்னதற்கு ஒத்து கொண்டால்….
நீ நினைத்த ஆடிட்டர் படிப்பாவது உனக்கு கிடைக்கும்….அதை விட்டு விட்டு அடம் பிடித்து துள்ளினீர்கள் என்றால் நட்டம் உங்களுக்கு தான் என எச்சரித்து விட்டு வேட்டியை மடித்து கொண்டு உள்ளே சென்று விட்டார்.
அவள் தாயும் கண்ணை கசக்கி கொண்டு…. “தனு உன்னை இருபது வயது வரை கல்யாணம் செய்யாமல் விட்டு வைத்து, கோவையில படிக்க வச்சது எல்லாம் நம் வீட்டில் யாருக்கும் கிடைச்சதில்ல….
நீ ஆச பட்ட மாறி ஆடிட்டர் ஆகிடலாம்….ஒத்துக்கோ….”
எனப் பேசிப்பேசி கரைக்க முயன்றார்.
“ஏனம்மா!! நான் இப்படி ஒருத்தனை கல்யாணம் கட்டிக்கிறது உனக்கு சந்தோசமா…?”
“நான் கஷ்டப்படனும்னு தான் நீங்களும் அப்பாவும் ஆசைப்படுறீங்களா…?”
என்று கண்கள் சிவக்க வேதனை அப்பட்டமாக தெரியும் விழிகளோடு கேட்டாள்.
அவரோ பதில் சொல்ல நா எழாமல்…. அது…. அத்…. இல்ல மா…. என உலற….
“நீ என்ன செய்வம்மா…. வ்விடு”
என்று சொல்லிக் கொண்டே வேறு வழி இல்லாமல் விறு விறுவென ரூமில் சென்று கதவை சாற்றி விட்டு கௌதமின் மடியில் சாய்ந்து அழுது அழுது கடைசியில் தூங்கியும் விட்டாள்.
தனுஜாவிற்கு பார்த்த மாப்பிள்ளை வீரபாண்டியோ…. மது மாது போதையில் தன்னை மறந்து மூழ்கி கொண்டிருந்தான்.
“ஹே வீரு….” நீ உன் பிசினஸ் பார்ட்னர் பொண்ண கட்டிக்கிட்டா நான் எங்க போறது என்றாள் அவன் நெஞ்சில் தலை வைத்து கொண்டே ஒரு பெண் கேட்டாள்.
அவள் அங்கங்களை அளந்துகொண்டே…. “அவளை கண் இருக்கவன் கட்டுவானா….அவள் ஆளும் மூஞ்சும் பொண்ணுனா உன்னை மாறி தக்காளியாக மின்ன வேண்டாமா…. சாக்கடைக்குள்ள இருந்து எழுந்த வந்த மாறி மூஞ்சி அவள்…. எல்லாம் என் விதி…. சொத்துக்காக என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு……”என பெருமூச்சு விட்டு மீண்டும் அந்த வட நாட்டு பெண்ணுடன் மூழ்கினான்.
கதிரவன் தன் ஒளிகளை பூமிக்கு அனுப்பி தன் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தது. பெட்டில் இருந்து நம் நாயகி கண் விழித்து பார்க்கும் போது அறையே வேறு மாதிரி காட்சி அளிக்க ஒரு நிமிடம் இது கனவா இல்லை நினைவா என பிரித்தறிக்க முடியாத நிலைமையில் அந்த இந்திர லோகம் போல இருந்த அறையின் அழகை ரசித்து கொண்டிருந்தாள்.
மறுநிமிடம் தான் கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்து “ஐயோ!! அம்மா!!…. ஹெல்ப் ஹெல்ப்!!” என்று கத்தி கூச்சல் போடவும்….
யாரும் கதவை திறந்ததாக தெரியவில்லை….சாவி துவாரத்தில் ஒற்றை கண்ணை சுருக்கி பார்க்கவும் ஒன்றும் புலப்படாமல் போகவே….
அறையை சுற்றி சுற்றி நடந்தவளுக்கு வேறு எங்கும் தப்பிக்க மார்கம் இல்லை என்பதை உணர்ந்து…. அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
சிறிது நேரம் கழித்து பசி வேறு வயிற்றை கிள்ளவும்…. அறையின் ஃப்ரிட்ஜில் உள்ள பழங்களை சாப்பிட்டு விட்டு…. தனக்கு பிடித்த கார்ட்டூனை டி.வியில் பார்க்க ஆரம்பித்தாள்.
இதை எல்லாம் அவ்வறையில் பொருத்தப்பட்டு இருந்த கேமரா வழியாக கண்ட நாயகனோ…. கடத்தப்பட்டிருக்கிறோம் என்கிற அறிவு கூட இல்லால் யாருக்கு வைத்த விருந்தோன்னு கவலையே இல்லாம டிவி பார்த்திட்டு இருக்காளே என்று யோசிக்காமல் இல்லை.
அறையில் நேரத்திற்கு சாப்பாடும் துணி மணியும் ஒரு பெண் கொண்டு வரவும்…. எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டாள். அவர்களை கேட்டாலும் ஒன்றும் சொல்ல போவதில்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்…. வீணாக கவலைப்படுவதை விட நடப்பதை என்னவென்று பார்ப்போம் என அவள் எப்பொழுதும் போல சாப்பிட்டு விட்டு இரண்டு நாள் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்.
இரவு ஒரு மணிக்கு, அரவிந்த் அவள் அறைக்குள் வந்து அவளை நெருங்கி வந்தான்…. அவனின் பூட்ஸ் சத்தம் காதை கிழித்து கொண்டு கேட்டது அவள் செவிகளில்…. உடனே க
ண் விழித்து கத்த வாயைத் திறக்கும் முன் அவள் இதழை கவ்வி சுவைத்து கொண்டிருந்தான்.
ஆராதிக்க வருவாள்!!!
