12)
- ஆர். வி ன்னு சொன்னேன்… என்றாள் அசால்டாக…
திரும்புடி!! அப்போ உன் முதுகில் இருக்க டேட்டுல என் பெயர் தான் இருக்கா?”
“ஆமா!!”
“அப்போ நீ என்னை லவ் பண்ணுறியா டி…”என்றான் ஆசையாக …
“இல்லியே!!” என்றாள்
“ஏ… என்ன டி ஒரே குழம்பும் படியாக ஆக இருக்கு… என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்…
மீனாக்ஷி அத்தை தான், உன்ன பத்தி என்கிட்ட சொன்னாங்க….”
எனக்கு மலர்ன்னு ஒரு தங்கச்சி இருந்தா… அவ பதினெட்டு வயசு இருக்கும் போதே… உங்க அப்பா கூட ஓடி போய்விட்டாள் என்று… இப்போ அந்த குடும்பம் உடன்குடியில் இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்…ஆனால் உங்களை பார்க்க இந்த வீட்டை மீறி போக முடியாதுன்னு வருத்தப்பட்டாங்க… அதான் உன்ன கண்டுபிடிச்சு அத்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும் என்று…… அதுக்கு தான் உன் பின்னாடியே வந்தேன்…கொஞ்சம் நாள் கழித்து தான் நானும், கௌதமும் சங்கரன் வீட்டுக்குள் உளவு பார்க்க நம்பிக்கை ஆன ஆள் தேடிட்டு இருந்தோம்…. அதான் உன்னை… என்று அத்தோடு நிறுத்தி அவன் முகம் பார்த்தாள்…
அவன் கண்கள் அக்னி ஜுவாலை போல் உக்கிரமாக முறைத்து கொண்டிருந்தது…
சரி சரி!! அதை விடு… நான் இந்த டேட்டு போட்டதற்கு இன்னொரு காரணம் நீ… “
“என்னது?…” என்றான் ஆச்சிரியமாக…
கௌதம் நிஞ்ஜாகாக போட…நான் உன் பேருல இருக்க இரண்டாவது, நாலாவது எழுத்த மட்டும் போட்டேன்…
“யார்க்கும் சந்தேகம் வந்திட கூடாதுல்ல… “
“அடி கள்ளி!!”
“நான் உன்ன பார்க்கிறதுக்காக தினம் தினம் அந்த சுடலை மாடன் கோவில்க்கு வருவேன்….
நீயே ஒரு நாள், நான் தான் சரவண பெருமாள் தம்பி பொண்ணு என்று தெரிஞ்சதும் கடத்திட்டு போன… அப்போ கூட நான், என் டிரைவர்…. நீ என்ன கடத்துறது கண்டுபிடிச்சிட கூடாதுன்னு தான் கடவுள் கிட்ட கூட வேண்டினேன் தெரியுமா?”
“உளவு வேலைக்கு தான் இவ்ளோ மெனக்கெடலா?”
“இல்ல!! இல்ல!!… அப்போ எனக்கு அத்தை கிட்ட உன்ன சேர்த்து வைக்கணும்…பிறகு நான் உன்ன பத்தி தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பாக தான் என்று…”
“ஓ…”
மலர் அத்தை பையனை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொன்னாங்க… அதான்… வருங்கால புருசன் பத்தி நாலு விவரம் தெரிஞ்சுக்கலாம் என்று… அந்த நாலு நாள் எனக்கு வித்தியாசமாக இருந்தது…
வேற உலகத்திலே பறந்த மாதிரி…
அப்படியா!!…என்று அவளை மடியில் அமர்த்தி… அவள் பேசுவதை ஆசையாக கேட்டு கொண்டே மெல்லிடையை வருடி… இதுக்கு தான் டி புடவை கட்ட சொல்லுறது என்று சற்று அழுத்தி பிசைய… அவள் தனங்கள் மெல்ல ஏறி இறங்கி மூச்சு வாங்கி கொண்டிருந்தது… “வேண்டாம்” என்றாள் கிணற்றுக்குள் ஒலித்த குரலில்… மெல்ல அவள் காதை நாக்கின் நுனியால் வருடி…
“வேண்டாமா!!…” என்றான் மோகம் கலந்த குரலில்…
“நமக்கு கல்யாணம் ஆகலை… அதுனால வேண்டாமே…”
“சரி!! இப்போ வேண்டாம்
ஓகே வா!!…”என்று எழுந்து கொண்டான்….
திடீர் என்று அவன் கையை பிடித்து… அது வந்து சாரி என்றாள் மெதுவாக…
அவன் இதழ் பிரித்து சிரித்து.நெற்றியில் இதழ் பதித்தான், விடு பைங்கிளி
கிணற்று தண்ணிய யார் அடிச்சிட்டு போக போறா!!… நீ இப்படி பேசுவதே எனக்கு அதிசயம் தான்… ஆனா இவ்வளவு திருட்டு வேலையும் பண்ணிட்டு அமுக்கினி மாதிரி இருந்திருக்க பாரு அதான் நம்ப முடியல… பொண்ணுங்க மனசு ஆழம்ன்னு சொல்லுவாங்க… அது ஓசோன் படலம் வரைக்கும்
தோண்டினாலும் கண்டுபிடிக்க முடியாது போல….”
ஹீ ஹி!!
உன்ன நான் கோவில்ல பார்த்த அப்போவே கண்டுபிடிச்சிட்டேன் நீ யார் என்று…
“எப்படி?”
“ஏன் தெரியுமா… நீ எங்க அம்மா ஜாடை டி “என்றான் கன்னத்தில் முத்தம் இட்டு… நீ வேற நகத்தை கடிச்சு யாரையோ தேடிட்டு இருந்தியா… அது நான் தான் தெரிஞ்ச பிறகு தான் உன்னை கடத்தி என் கூடவே வச்சுக்கலாம் என்று நெனச்சேன்… உன் வீட்டிலையும் உன்ன நெனச்சு பதறுவாங்க… ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் என்று யோசிச்சேன்…
உன்ன பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது அப்போ… நீ என்ன பண்ற எதுவுமே… எனக்கு தெரிஞ்சது எல்லாம் நீ அந்த வீட்டு பொண்ணு என்பது தான்… என் வீட்டுக்கு உள்ளே முதல் முதல்ல ஒரு பொண்ணு எவ்ளோ சந்தோசம் தெரியுமா?…
நான் சாகுற வரைக்கும் நீ என் மடியிலே கிடக்கணும் என்று மட்டும் தான் தோணுச்சு…
நீ வச்சு கொடுத்த மீன் குழம்பு, நம்ம ஊர் முழுக்க உன் கை பிடிச்சு சுத்துனது எல்லாமே…. எனக்கு என் வாழ்க்கைய உன்னோட ஆச பட்டு வாழ கத்து கொடுத்தது டி… செங்கல் சூளையில கூட இருக்க பிடிக்காமல் உன்னை பார்க்க பைத்தியம் மாதிரி ஓடி வருவேன் தெரியுமா…
இப்போது நீ என் மடியில இருக்கும் போது கூட என்னால…. நான் உன்ன கூட்டிட்டு வந்து கொடுமை பண்ணனும்ன்னு தான் நினைத்தேன்…. ஆனால் முடியலடி… என் பலமும் நீ தான், என் பலவீனமும் நீ தான் டி… என்றான் அவள் கன்னதை தாங்கி கொண்டே… குளம் கட்டிய விழிகளோடு, என்ன மன்னிச்சிடு… என்றாள் குற்ற உணர்வோடு…
நான் உன்ன பார்க்க கோவிலுக்கு வராமல் இருந்திருந்தால் எல்லாமே சரியாக போயிருக்கும்… நான் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று கண்ணீர் விட்டு அழுதாள்…
“நாட்டில் மழை கொட்டுதோ இல்லியோ பொண்ணுங்க கண்ணுல மட்டும் விடாம கொட்டுது…!!” என்றான் குறும்பாய்…
“அட சீ போ!!”… என்றாள் சின்ன சிரிப்புடன்…
அவள் கண்களை துடைத்து…
“அழாத பைங்கிளி!!…”
நான் தான் உன்னை அன்று காமராஜர் கல்லூரியில் பார்த்து விட்டு…உனக்கு இருபது வயது இருக்கும் என்று நானே முடிவு கட்டிவிட்டேன்…
உன்னிடம் உன்னை பற்றி கேட்டு தெரிந்து கொல்லாதது தப்பு தான்…
“எப்படி நீங்க அப்படி நினைக்கலாம்…” என்றாள் அவன் தலையை பிடித்து ஆட்டி கொண்டே…
எல்லாம் உன் வீட்டு ஆட்கள் கொடுத்த சாப்பாடும் அதனால் ஏற்பட்ட வளர்ச்சி… என்னை மேலும் சிந்திக்க விட வில்லை பெண்ணே!!…
“அடப்பாவி!!…உன்னை இன்று, நீ என்கையில் செத்த டா…”
“அடியே !! போதும் போதும்…”
“ம்ம்!!”… என்றாள் முறைத்து கொண்டே…
அங்கு கௌதம் வேகமாக காரை செலுத்தியதால் எதிரில் வந்த காரில் மோதி உயிருக்கு போராடி கொண்டிருந்தா
ன்…
கௌதம் பிழைப்பானா?
ஆரதிப்பாள்!!!
