ATM Tamil Romantic Novels

4 இத இதமாய் கொன்றாயடி

 

4 – இத இதமாய் கொன்றாயடி

 

 

 

 

    வசந்தா சொன்னதும்,”முடியாதம்மா… அவளை எல்லாம கட்டிக்க முடியாது. அவள கண்ணாலம் பண்ணிக்கற நேரம் நல்ல பாழுங்கிணற பார்த்து விழுந்து சாவலாம்…”

 

வசந்தா,”அப்படி எல்லாம் சொல்லாதப்பா… நா சொல்றத செத்த கேளுப்பா…” வர என்ன சொல்ல வருகிறார் என கேட்காமல் அவரின் பேச்சை இடைமறித்து,”நீ அவள் பத்தி எதுவும் சொல்லாதம்மா… நா கேட்கற மூடில்ல…” 

 

அவரும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். அவனும் தன்னிலையில் இருந்தவே இறங்கவேயில்லை.

 

“அவள் கட்டிக்கற எண்ணமே எல்லாம் எனக்கில்ல… அதனால அவளுக்கு வேற மாப்ள பார்த்து கட்டி வைக்க சொல்லுங்க… எனக்கு வயலுக்கு நேரமாச்சுமா… நா கிளம்புறேனுமா…” சொல்லிவிட்டு சென்றான்.

 

வசந்தா இவனை கல்யாணத்திற்கு எப்படி சம்மதிக்க வைப்பது, என்ன செய்வது புரியாமல் முழித்தார். இவர் இப்படி இருக்கையில், மகிழ்விழியை விடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பினர். வீட்டுக்கு போனதும் மகிழ்விழியை குளிக்க அனுப்பிவிட்டு மந்தாகினி வேலாயுதத்தை பார்த்து குளித்துட்டு வந்தவுடன் அவளிடம் பேசு என கண் ஜாடையாக சொன்னார். சரி என தலையாடினார வேலாயுதம்.

 

மகிழ்விழி வந்ததும் மந்தாகினியிடம் சொன்னது போல் வேலாயுதம் பேச்சை ஆரம்பித்தார். “மகிழு… தமிழ் தம்பிய பத்தி என்ன நனக்கிற… “

 

மகிழ் ஒன்றும் சொல்லாமல் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டாள். வேலாயுதம் மகிழ் முகத்தை கடுமையாக வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு,”இப்படி பேசாமல் இருந்தால் எப்படிம்மா… தமிழு பத்தி உம் மனசுல இருக்கறத சொன்னா தான நாங்க தெரிஞ்சுக்க முடியும்…” என்றார்.

 

மகிழோ,”அந்த வெட்டிபயல பத்தி சொல்ல என்ன இருக்குது…” என்று சொன்னாள்.

 

“என்னம்மா… இப்படி பேசற.. அவருக்கு வயல் இருக்குது… உரக்கட வச்சிருக்காரு… அவர போயி வெட்டிபயல்னு சொல்றியேம்மா…” அங்கலாய்ப்புடன் கேட்டார்.

 

“ஆயிரம் சோழி இருந்தாலும் பொட்டச்சிக பின்னாடி சுத்தறவனய வெட்டிபயலனு சொல்லாம என்ன வேற என்னனு சொல்வாங்க…” பழித்துப் பேசினாள்.

 

மந்தாகினிக்கோ மனதில் கோபம் சுறு சுறுவென்று ஏறிக் கொண்டே போனது.  

 

அதை எல்லாம் பார்க்காமல் மகிழோ,”பொம்பள பொறுக்கி… எவளாவது ஆட்டிகிட்டு வந்தா அவள பின்னாடியே போயிடுவான். அவன பத்தி இப்ப எதுக்கு பேச்சு…”

 

மந்தாகினியோ கோபம் இருந்த போதும் பொறுமைக் காத்தார். வேலாயுதமோ,”இல்ல… மாப்ளய உனக்கு பேசி முடிச்சிருக்கோம்… அதான் உம்கிட்ட ஒரு வார்த்த கேட்டுகிட்டு நிச்சயம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்…” என்று சொன்னவுடன்,”நா எல்லாம் அந்த பொம்பபொறுக்கியலாம் கட்டிக்க முடியாது.”வெறி எடுத்தாற் போல் கத்தினாள்.

 

மந்தாகினிக்கு பொறுமை எல்லைக் கடந்தது. மிகவும் கோபமாக,”அந்த தம்பிய பார்த்து பொம்பளபொறுக்கினு சொல்ற… நாக்கு அழுகி போயிடும்டீ…” 

 

மகிழ்விழியோ நக்கலாக,”அந்த தொம்பிய தான் சொல்றே…” என்று சொன்னாள்.

 

“குடிப்புட்டு கூத்தியா வீட்ல விழுந்து கிடக்கறா… எத வச்சு அவர பொம்பளபொறுக்கினு சொல்ற…”

 

“கூத்தியா வீட்ல விழுந்து கிடந்தா தான் பொம்பளபொறுக்கியா… பொம்பள பின்னாடி சுத்தறவன் எல்லாம் பொம்பளபொறுக்கி தான்…”

 

“அவரு எங்க பொம்பள பின்னாடி சுத்தறாரு… பொம்பளங்க தான் அவரு பின்னாடி சுத்தறாங்க… அதுக்கு அவரு என்ன பண்ணுவார்.”

 

“பொம்ளங்க அவரு பின்னாடி சுத்தறாங்களோ… இல்ல அவன் பொம்ளங்க பின்னாடிய சுத்தறானோ என்னவோ…அவன் எனக்கு வேணாம்…”

 

“ஏன்டி எடுப்படவளே… உனக்கு உத்தமராசா மாதிரி மாப்ளயா ஒருத்தன் வந்தா தான் கட்டிப்பேனு இருந்தா… இந்த ஜென்மத்துல கண்ணாலம் நடக்காது…”

 

“அப்படி அவன கட்டிக்கற நேரம் காலம் பூரா கன்னியா இருப்பேன்…” என்று சீற்றத்துடன் சொன்னாள்.

 

மந்தாகினியோ உச்சகட்ட கோபத்தில்”உன்ன சும்மாஒ விட்டா தான கன்னியா இருப்ப… உன்க்கு தமிழ் தான் மாப்ள… உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க…”

 

“மருந்துய குடிச்சுறுவேன்…”என்று மிரட்டினாள்.

 

“உனக்கு ஒரு மருந்திருந்தா… எங்களுக்கு குடிக்க ஒரு மருந்து இருக்கதா என்ன…” என்று பதிலுக்கு மந்தாகினி மிரட்டினார். 

 

மருந்தையை குடிக்கிறேன் சொன்னால் பயந்து போய் விட்டு விடுவார்கள் என்று தப்புகணக்கு போட்டு மிரட்டினால்… பதிலுக்கு அவரும் அதே போல் மிரட்டுவார் என எதிர்பார்க்கவில்லை.

 

வேறுவழி இல்லாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தரை அதிர அதிர உள்ளே நடந்துப் போனாள். 

 

“கொழுப்ப பாரு… இவ மருந்த குடிப்பாளாம்… குடிப்பாளாம் குடிப்பா… நா ஏமாந்துகிறே…”

 

“ஒரு போடு போட்ட பாரு… அப்படி போடு… நீ சொன்னது தான் கரெக்ட்… அவள எல்லாம் அப்படி தான் அடக்கனும்…” என்று வேலாயுதம் சொன்னார்.

 

“அவள அடக்கி என்ன பண்றது… இன்னும் அவ கண்ணாலத்திற்கு ஒத்துக்கல…”

 

“ஒத்துக்குவா… ஒத்துக்கமா எங்க போவா… சரி நா தோப்புக்கு போறேன்… அவள பத்திரமா பார்த்துக்கோ…” சொல்லிவிட்டு வேலாயுதம் தோப்பிற்கு கிளம்பினார்.

 

புருஷன் சொன்ன மாதிரியே மகள் மேல ஒரு கண் வைத்துக் கொண்டு மந்தாகினியும் வேலையைப் பார்த்தார்.மகிழ்விழியும் நம்மளை மீறி என்ன செய்வார்கள் என்று திமிராகவே இருந்தாள். இப்படியே அன்றைய பொழுது சுமூகமாகவே சென்றது.

 

இங்கோ தமிழ் வீட்டிலோ தமிழ் மதியம் சாப்பிட வந்தான். வசந்தா தமிழை எப்படி கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என்ற யோசனையில் நேரமானது கூட தெரியாமல் இருந்தார். கடிகாரத்தில் மணி ஒன்று என அடித்தது சுயத்திற்கு வந்தார். பிறகு அவசர அவசரமாக சாதம் வைத்து ரசம் மட்டுமே வைத்தார். 

 

“ம்மா… சாப்பாடு எடுத்து வை… நா கைகால் கழுவிட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு புழக்கடைப் பக்கம் 

போனான்

 

அவன் குரல் கேட்டதும் எழுந்து அப்பளம் பொரிக்கச் சென்றார். சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்து எல்லாம் திறந்துப் பார்த்தான். வெறும் ரசம் வைத்து சாதம் வடிந்திருந்தார். ரசத்தைப் பார்த்தும் கோபம் வந்து,”ஏம்மா… ரசம் மட்டும் வச்சிருக்க… நா என்ன காய்ச்சல்காரனா…” என்று சத்தம் போட்டான்.

 

அவன் சத்தம் போட்டதில் சினம் உச்சிக்கு ஏறிவிட்டது. உடனே,”நானும் மனுசி தானடா… எனக்கு உடம்பை ஆணிலய அடிச்சு வச்சிருக்குது… வீட்டுக்கு ஒரு மருமகள கூட்டியாந்து விட்டுட்டு பொறுப்ப எல்லாம் அவகிட்ட ஒப்படச்சுட்டு நா அக்கடானு ஒரு மூலைலனு உட்கார்ந்துக்குவேன்…” என்று புலம்பினார்.

 

என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்துப் போனதால் பேச்சை மாற்றி,”உனக்கு என்ன வயசாயிடுச்சுனு இந்த மாதிரி எல்லாம் பேசாதே… நீ ராசாத்தியாட்டம் இந்த வீட்டை ஆளுவ பாரு…” என்றான்.

 

நாம என்ன சொல்ல வருகிறோம் இவன்பேச்சை மாற்றுகிறான் என்று புரிந்துக் கொண்டு நேரிடையாக விசயத்திற்கு வந்தாள்.

 

“மகிழை கட்டிக்கிறியா… இல்லயா…” என்று பட்டென்று கேட்டார்.

 

“ம்மா… இந்த பேச்ச விடமாட்டியா… இங்க அங்க சுற்றி அந்த பேச்ச எடுத்துக்குறியே…” எரிச்சலோடுக் கேட்டான். 

 

“அததான் நானும் கேட்கறேன்… மகிழு கட்டிக்கற எதுக்கு வேணாங்கற… பதில் சொல்லு…”

 

“அவள எல்லாம் என்னால கட்டிக்க முடியாது… சொன்னா புரிஞ்சுக்கமாட்டியா…”

 

“எனக்கு அவதான் மருமகளா வரணும் சொல்லிப்புட்டேன்…”

 

“கட்டிகிட்டாலும் அவளோடு எல்லாம் என்னால வாழமுடியாது… காலம் பூரா அவ வாழவெட்டியா தான் இருக்கோனும்… அதுக்கு சம்மதம்னா நா அவள் கட்டிக்கறேன்… டைம் எடுத்துக… நல்லா யோசிச்சு சொல்லு…” என்று செருப்பை மாட்டிக் கொண்டு கோபமாக வெளியே கிளம்பிவிட்டான்.

 

“டேய்… சாப்பிட்டு போடா…” என்று கத்தியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நடையை எட்டிப் போட்டான். வயலுக்கு வந்து அங்கிருந்த கயிற்றுகட்டிலில் படுத்துவிட்டான். கோபமாக இருந்தான். சிந்தனை பூராவும் மகிழும் வசந்தாவும் உலா வந்தனர்.

 

‘என்ன கொழுப்பிருந்தா போயும் போயி அவள போய் என்னய கண்ணாலம் பண்ணிக்க சொல்லும் இந்தம்மா… அவள் மனசன் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துமுடியுமா… இந்தம்மாவுக்கு வேற பொண்ணா கிடக்கல…’ என்று மகிழ்விழியை ஏசிக் கொண்டிருந்த நேரம்… அதே நேரம் மகிழும் இவனயே வைந்துக் கொண்டிருந்தாள்.

 

அதே நேரம் மகிழும் இவனயே வைந்துக் கொண்டிருந்தாள். ‘இவனயா நானு கட்டிக்குவேனா… நனைக்கவே ‘ஓவ்வே’ அறுவெருப்பா இருக்கு… இவன தவிர வேற மாப்பிளயா கிடக்கல… இந்தப்பாவுக்கு புத்தி ஏன் போகுது தெரியலயே…’ குந்த வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

 

இருவரும் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில் வசந்தாவோ மகிழ்விழியின் வேலாயுதத்திற்கு போன் செய்து,”ஹலோ… நா வசந்தா பேசறேன்…”

 

“சொல்லுங்க… சம்மந்தி”

 

“நா இப்ப எதுக்கு பொன் பண்ணினேனா… நாங்க உங்க வீட்டுக்கு வர வெள்ளிகிழம நிச்சயம் பண்ண வரோம்…”

 

“உங்க மகன் இதுக்கு ஒத்துக்கிட்டாரா…” என்று கேட்டார்.

 

“இவ தான் பொண்ணு சொன்னதும் முதல்ல தாம் தூம் குதிச்சாலும், பின்னர் வேறு வழியில்லாம ஒத்துகிட்டான்… அதான் தள்ளி போடாம சூட்டோட சூடா நிச்சயம் பண்ணிவிடலாம்னு சொல்றேனு…”

 

“சரிங்க சம்மந்தி… நீங்க சொலறபடியே எல்லா ஏற்பாடும் பண்ணிடறோம்…”

 

“சரிங்க சம்மந்தி… போனய வச்சிடவா…”

 

“சரிங்க…” சொல்லி போனை ஙைத்தார் வேலாயுதம்.

 

இருவரும் வெள்ளிகிழமை நிச்சயம் என்றுதும் மறுத்தார்கள். பின்பு இருவர் வீட்டிலும் மரணபயம் காட்டி கட்டாயப்படுத்தியதால் வேறுவழி இல்லாமல் ஒத்துக் கொண்டனர்.

 

வெள்ளிகிழமை நிச்சயத்துன்று தமிழ் ஏனோ தானோ என்று கிளம்பினான். வசந்தா தான்,”நல்ல நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பனும்… சீக்கிரம் கிளம்புடா…” எனக் கத்தினார்.

 

வசந்தா சொல்லியும் அசட்டையாக கிளம்பினான். இதைப் பார்த்து வசந்தா மீண்டும் கத்த தொடங்கினார். அடைத்த காதை விரலால் குடைந்துக் கொண்டு,”ம்மா… சும்மா நைநைனு பேசாதே… இப்ப உனக்கு என்ன டைமுக்கு கிளம்பனும் அவ்வளவு தானா… அந்த டைமுக்கு கிளம்புலனா என்னனு கேளு…” அவர் வாயை அடைத்தான்.

 

எப்படியோ சொன்ன மாதிரி நல்லநேரத்துக்குள் புறப்பட்டுவிட்டான். இங்கோ வேலாயுதம் வீட்டில் மகிழும் துணியை மாற்றாமல் யாருக்கு வந்த விருந்தோ என்று இருந்தாள். மந்தாகினி தான்,”நேராகுது… ரெடியாகு… இந்த சேலய கட்டிறியா… அந்த சேலய கட்டிறியா…” என்று அவள் பீரோவில் இருந்து புடவை எல்லாம் கலைத்து மாற்றி மாற்றி அவள் தோளில் போட்டுப் பார்த்தார்.

 

ஒன்றும் பேசாமல் ஏனோ தானோ என்று அவர் கேட்கும் கேள்விகளுக்கும் ஏனோ தானோ என்று பதில் சொல்லாமல் எங்கயோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

அதைப் பார்த்தும் மந்தாகினிக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வேலாயுதம் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தவர் நடுவில் மகள் தயாராகிவிட்டாளா… என்று பார்க்க வந்தவர் மனைவி கத்திக் கொண்டிருப்பதை, அதற்கு மகள் அசட்டையாக நின்றுப் பார்த்து,”மாப்ள வீடு வர நேரமாச்சு… இன்னும் ரெடியாகலயா…” என்றுக் கேட்டார்.

 

“வராதவங்களுக்கு இத்தன கூத்தா…” என்று நொடித்துக் கொண்டாள்.

 

உடனே வேலாயுதம்”அதயெல்லாம் அவங்க அப்பவே கிளம்பிட்டேன் சம்மந்தியம்மா சொன்னாங்க… இப்ப மேல தெருவுக்கு வந்திருப்பாங்க..” என்று சொன்னார்.

 

சொன்னதும் வலுகட்டாயமாக மகிழை யாரையும் உள்ளே விடாமல் மந்நாகினி தான் ரெடி பண்ணினார். யாரையும் உள்ளே விடாததற்கு காரணம் அவள் முரண்டுப் பிடிக்கும் விசயம் தெரிந்தால் ஒருத்தர்க்கு ஒருத்தர் கசமுசானு பேசி விசயத்தை பெரிது பண்ணிவிடுவார்கள் என்று யார் வந்து கேட்டாலும்,”அவளுக்கு கூச்சசுபாவம் அதிகம்… யார்கிட்ட வந்தாலும் புடிக்காது…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். “இவளுகளுக்கு வேற வேலயா இல்லயா… ஆட்டிக்கிட்டு வந்துட்டாளுங்க…” என்று வைத்தார்.

 

புடவைய கட்டிக்கிட்டு, நகையெல்லாம் போட்டுகிட்டு அம்மனாக உட்கார்ந்திருந்தாள். ஏனோ முதல் முதல் பருவம் எய்திய காலத்திற்கு சென்றது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top