ATM Tamil Romantic Novels

Author name: Shaahithya Srinivasan

9 – தீக்கு தென்றலோடு மோகம்

9 – தீக்கு தென்றலோடு மோகம்!

அனைவரும் முன்னிலையில் நிச்சயம் நன்றாக முடிந்தது. யோகேஷிம் விமலாவும் செய்வது அறியாது திகைத்தனர். சம்ரித்தும் ஈஸ்வரும் கருணாகரன் தம்பதியரும் சந்தோஷத்தில் திளைத்தனர். நினைத்தை நடத்தி முடித்து விட்டதில் ஆதிகேசவன் நிம்மதியானார்.

தன்னோட அறைக்கு வந்த சம்ரித் அம்ரீதாவுக்கு போன் போட்டு,”யாஹீ.. அம்ரீ… நிச்சயம் நல்லபடியாக முடிந்தது…” என்ற சந்தோஷத்தில் கூக்குரல் எழுப்பினான்.

அம்ரீதா,”எல்லோரும் சம்மத்தோடய நடந்தது…” எனக் கேட்டாள்.

“அது உனக்கு எதுக்கு?” என திருப்பி சம்ரித் கேட்டான்.

“இல்ல… நா தெரிஞ்சுக்கனும்…” பிடிவாதமாக சொன்னாள்.

“நல்லபடியாக முடிந்ததுனு சொன்னால்… அத கேட்டு சந்தோஷப்படனும் தவிர… அத விட்டுட்டு இப்படியெல்லாம் கேள்வி கேட்ககூடாது… என்ன புரிஞ்சுதா…”

“ஓஹோ… அப்படியானால் பிரச்சனையோட நடந்திருக்கு அப்படி தான…”

“அப்படி தான் நடந்தது…” என சம்ரித் வேண்டா வெறுப்பாக பதிலளித்தான்.

“இவ்வளவு வெறுப்பாக சொல்றிங்கனு… அப்போ என்னவோ பெரிசா நடந்திருக்கு… அப்படி தானே…”

“ஆமாம் நடந்தது… அவ்வளவும் உன்கிட்ட சொல்லுனுமா…”

“இல்ல… நீங்க என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்…” என விடாமல் வாதிட்டாள்.

“சொல்லமுடியாது… உன்னால என்ன பண்ணமுடியமோ… அத பண்ணிக்கோ..”

“ஓஹோ… அவ்வளவு தூரம் ஆகி போச்சா… நா அத பத்தி தாத்தாகிட்டயாவது போன் பண்ணி தெரிஞ்சுக்குவேன்.”

“நீ என்னய நம்பாம… என் தாத்தாவுக்கு போன் செய்து கேட்க போறியா… கேளு… கேட்டு தான் பாரு…”

அம்ரீதா ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தாள்.

“ஹலோ.. ஹலோ…” என்று கத்தினான்.

மறுபடியும் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

“போடி… உன்கிட்ட என் சந்தோஷத்தை சொன்னே பாரு… வைடி போனை…” என சொல்லி அவள் போனை வைக்கும் முன்னே இவன் போனை வைத்துவிட்டான்.

அம்ரீதா அனுப்பிய புகைப்படத்தை அப்போது தான் பார்த்தான். புகைப்படத்தில் அம்ரீதா தேவதையாக ஜொலித்தாள்.

அதைப் பார்த்த சம்ரித்,”இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல…”

அவன் மனசாட்சியோ,’வேற எதில் குறைச்சலை கண்ட…’ என்றது.

சம்ரித்தோட,’நா என்ன பண்ணறது… அவ அழகுல கொஞ்சம் தடுமாறிட்டேன்…’ என்று நினைத்தான்.

‘கொஞ்சமாவ தடுமாறிட்டா…’ என்று கேள்வி எழுப்பியது.

அப்படி மனசாட்சி கேள்வி எழுப்பியதும் சம்ரித்தோ,’ஹீ… ஹீ…’ என்று இளித்தான்.

‘தூ… தூ…’ என காறித் துப்பியது.

அம்ரீதா அழகுல மயங்கி அவளோடு கனவுல டூயட் பாடிக் கொண்டிருந்தான். அவனோட மனசாட்சி,’சம்ரித்… சம்ரித்…’ என்று அழைத்துப் பார்த்தது.

சம்ரித்தோ கனவுல உலகத்துல இலயித்துக் கொண்டிருந்தான். மனசாட்சியோ,’அவன் கனவில் இருந்து மீண்டு வரமாட்டேன்… நா போகிறேன்…’ என்று எண்ணியவாறு மறைந்துவிட்டது.

சம்ரித் அம்ரீதா ஞாபகம் மனதை அரிக்க, அவகூட சண்டை போட்டதை மறந்து, அவளுக்கு போன் செய்தான்.
அம்ரீதா போன் அடிக்கவும், போனை எடுத்துப் பார்த்தாள் திரையில் சம்ரித் எனத் தெரியவும்,”க்கும்… என்கூட சண்டை போட்டுட்டு இப்ப எதுக்கு போன் பண்ணுகிறார்.” என நொடித்தாள்.

மீண்டும், மீண்டும் அடிக்க, ஒருவழியாக போனை எடுத்து,”ஹலோ… அதான் போனை எடுக்கவில்ல… தெரியுதில்ல… மறுபடியும்… மறுபடியும்… எதுக்கு போன் பண்ணுறிங்க…” என்று கடிந்துக் கொண்டாள்.

அப்போது தான் சம்ரித்துக்கு இருவரும் சண்டையிட்டுக் கொண்டது நினைவுக்கு வந்தது. ‘அச்சோ… இருவரும் சண்டை போட்டதை மறந்துவிட்டோம்…’ என நுனி நாக்கை கடித்தான். ‘இவளை எப்படியாவது சமாதானம் செய்வோம்… எப்படி…’ என்று யோசித்து, ‘இப்ப தான் நிச்சயம் முடிந்திருக்கு… இதை சொல்லியே ஒரு பரிசு வாங்கி கொடுக்காலாம்னு நகைகடைக்கு கூட்டி போயிடுலாம்…’ என முடிவு பண்ணினான்.

முடிவு மாதிரி சம்ரித் அம்ரீதாவை,”உனக்கு ஒரு கிப்ட் கொடுக்கனும்… உன்னாலே கொஞ்சம் நகைகடைக்கு வரியா…” அழைத்தான்.

அம்ரீதாவோ கொஞ்சம் பிகு செய்துக் கொண்டு,”அப்ப அப்படி எங்கிட்ட சண்ட போட்டங்க… இப்ப நீங்க கூப்பிட்டதும் நா வரனுமா…” என்றாள்.

சம்ரித்தோ,’இவளை சமாதானம் செய்யறது… கொஞ்சம் கஷ்டம் போல இருக்கு…’ என்று நினைத்துக் கொண்டு,”ப்ளீஸ் அம்ரீ… ப்ளீஸ்…”

அமரீதாவோ,’இன்னும் கொஞ்சம் கெஞ்சட்டும்… அவ்வளவு சீக்கிரம் மலை இறங்ககூடாது.’ என எண்ணினாள்.

அதிக நேரம் சம்ரித்தை கெஞ்சவிட்டு,”போதும்… போதும்… பெரிய மனசு பண்ணி உங்கள மன்னிச்சுட்டேன்…” கொஞ்சம் இறங்கி வந்தாள்.

இருவரும் சமாதானமாகி இயல்புக்கு வந்தனர். பிறகு அவன் சொன்ன மாதிரி நகைகடைக்கு அழைத்துப் போய் அழகான பிளாட்டினம் மோதிரம் வாங்கி, அதை அவன் கையால் அணிவித்து, அம்ரீதா கைக்கு முத்தம் ஒன்றை பரிசளித்தான்.

அதில் அம்ரீதா கன்னங்கள் இரண்டும் ரோஜா வண்ணம் கொண்டது. சம்ரித் அவள் கன்னங்களைப் பார்த்து ,”வாட் அ கிரேசி… யுவர் சீக்ஸ் ஆர் லுக் லைக் பிங்க்ஸ்…” என ஆச்சரியப்பட்டான்.

அவன் அப்படி சொன்னதும் மேலும் அவள் கன்னங்களில் இருந்த ரோஜா வண்ணம் முகம் முழுவதும் பரவியது. அவன் வாழ்ந்த நாட்டில் ஜஸ்ட் லைக் தட் போகும் பெண்களைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு இதை இன்னும் ஆச்சரியம் அளித்தது.

சம்ரித்,”யுவர் சைக்னஸ் இஸ் வெரி ப்யூட்டிபூல்… ஐ தாட் டூ வியர் தி டைமன்ட்ஸ் டூ யுவர் பாடி…” என புகழ்ந்தான்.

“ரொம்ப புகழாதிங்க… எனக்கு வெட்க… வெட்கமா வருது…”

“ஐ அட்மியைர் டூ திஸ் சைக்னஸ்…”

அம்ரீதா சம்ரித் புகழ… புகழ… பெருமையில் பூரிப்படைந்தாள். ஒருவழியாக மோதிரத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

அடுத்தது கார் நேராக பிரேத்யக பெண்கள் ஆடையகத்துக்குள் உள்ளே நுழைந்தது. அதை பார்த்தவுடன் அம்ரீதா கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்தது.

அம்ரீதா,”எனக்கு டிரஸ் எடுக்கவா வந்திருக்கிறோம்…” என்று கேட்டாள்.

“ஆமாம்… உனக்கே உனக்கு தான்…”என சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவன் சொன்னதும் அவள் முகம் பூரிப்படைந்தது. இரண்டு பேரும் உல்லாசமாக கைக் கோர்த்துக் கொண்டு கடைக்குள் நுழைந்தனர்.

அவன் புல் ப்ராக் இருக்கும் செக்‌ஷனுக்குள் நுழைந்தான். அங்கே இருக்கும் ஒவ்வொரு ஆடையாக எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தான். எதுவும் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. மேலே ஒற்றை நாடாவுடன் ஒரு ஸ்லிவ்ஸ் ப்ராக் நல்ல ரெட் ஒயின் கலரில் எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தான். அவள் வெள்ளை நிறத்துக்கு அந்த ரெட் ஒயின் கலர் பொருத்தமாக இருந்தது

அதில் அவளைப் பார்த்தவுடன்,”சபாஷ்… உனக்கு இந்த கலர் எடுப்பாக இருக்குது… வாவ்… இந்த கலர் டிரஸ் உனக்கு அழகா… இல்லனா நீ இந்த டிரஸ்ல அழகா இருக்கியா… எனக்கு எதுவும் புரியல…” என்றான்.

அவளும் அந்த உடையை வாங்கி தன் மேலே வைத்துப் பார்த்து,’வாவ்… வாட் அ ஒன்டர்புல் டிரஸ்…’ என சந்தோஷப்பட்டாள்.

சம்ரித்தும்,”மேலே வச்சு பார்த்தா மட்டும் போதுமா… இதை போய் அங்கிருக்கும் டிரஸ்ஸிங் ரூமில் போய் போட்டுட்டு வா…” என்று சொன்னான்.

‘சும்மா டிரையல் பார்க்க போட்டுட்டு வர சொல்றாருனு…’ என நினைத்துக் கொண்டு போட்டுட்டு வந்தாள்.

அம்ரீதா உடையை மாற்றி வந்தாள். அவளை அந்த மேலும் கீழும் பார்த்தவன் பார்வையில்,”வாட் அ ப்ரிட்டி…”என வியந்தான். உடனே பழைய டிரஸை பேக் செய்ய சொல்லிவிட்டான்.

அம்ரீதா பழைய டிரஸை பேக் செய்ய சொல்வதைப் பார்த்து,”நா இந்த டிரஸில் வர போகிறேன்.” என ஆச்சரியமாகக் கேட்டாள்.

“எஸ்… இந்த டிரஸ்ல தான் வர போற… ஏன் இதுக்கென்ன அழகா இல்லயா…”

“இல்லனு யார் சொன்னா… நீங்க வாங்கி கொடுத்தது எதையும் குறை சொல்ல முடியாதே… இத மட்டும் எப்படி குறை சொல்வேன்…” என்றாள்.

“இல்லயே… நீ சொல்றத பார்த்தா குறை சொல்ற மாதிரி தான் இருக்கு…” என வம்புக்கு இழுத்தான்.

“ஓஹோ… நீங்க அப்படி வரிங்களா… சொன்னா என்ன பண்ணுவிங்க…” இவளும் பதிலுக்கு வரிஞ்சு கட்டி சண்டைக்கு போனாள்.

“சொல்லி தாரேன் பாரு…” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ஹீம்… சொல்லிட்டாலும்… வேற வினையே வேண்டாம்…” பயந்துப் போல நடித்தாள்.

“அப்படி என்ன வினை வந்திடும்னு நினைச்சுகிட்டு இந்த பயம் பயப்படறே…”

“போதும் விளையாட்டு… அடுத்து எங்க போற ப்ளான்… எனக்கு தெரிஞ்சு எதோ ப்ளான் வச்சிருப்பிங்க…” என்றாள்.

சம்ரித் ஒன்றும் கூறாமல் சிரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்தது நேராக ஓட்டலுக்குள் நுழைந்தது. அங்கே அம்ரீதாவுக்கு தெரியாமலே சம்ரித் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

காரை விட்டு இறங்கியதும் சட்டென சம்ரித் அம்ரீதாவின் கண்களை மூடியவாறு அழைத்துக் கொண்டு போய்,”சர்ப்ரைஸ்…” என்று கூறி விட்டு மூடிய கண்களை திறந்தான்.

அங்கே ஒரு அழகான மேஜையில் சாட்டின் துணி விரிக்கப்பட்டு அங்கங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நடுவில் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.

அம்ரீதா மிகவும் ஆச்சரியப்பட்டு,”என்ன அடுத்ததடுத்து ஒரே சர்ப்ரைஸ் கொடுத்திட்டே போறிங்க…” எனக் கேட்டாள்.

சம்ரித்,”இதுக்கே ஆச்சரியப்பட்டால் எப்படி… இன்னமும் என்னன்ன இருக்கு…” எனக் கேட்டான்.

ஒரு இன்னிசை குழு தங்கள் கருவியோடு வந்து அங்கே தன் மென்னிசையை வாசித்துக் கொண்டிருந்தனர்.

பின்பு சம்ரித் ஒரு காலை மண்டியிட்டு குனிந்து அழகான பூங்கொத்தை எடுத்து அவள் முன்பு நீட்டியபடியே,”திஸ் ஃபார் யூ…” என்றான்.

அம்ரீதா ஆச்சரியத்தில் கண்களை விரித்து,”இதெல்லாம் எனக்கே… எனக்கா…” என்று ஒரு வித ராகத்தோடு கேட்டாள்.

அவனும் அதே ராகத்தில்,”ஆமாம்… உனக்கே… உனக்கு தான்…” என உரைத்தான்.

அவன் ராகத்தை ரசித்தவாறு சிரித்துக் கொண்டு குனிந்துப் பூங்கொத்தை பெற்றுக் கொண்டாள்.

பிறகு சம்ரித் திரும்பி இரு வெள்ளை சீருடை அணிந்திருந்த சிப்பந்திகளைப் பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்துக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தட்டில் ஒயிட்ஃபாரஸ்ட் கேக் எடுத்து வந்து அம்ரீதா முன்பு வைத்தனர்.

அதன் பின்பு ஒரு கத்தியை எடுத்து அவள் முன் நீட்டி,”ம்ம்ம்… கமான் கட் தி கேக்…” என்றவாறு சிரித்துக் கொண்டு சொன்னான்.

சுற்றியும் பார்வையை சூழல விட்டாள். யாரும் இவர்களை கவனிக்காமல் தங்கள் காரியத்தில் மூழ்கி இருந்தனர். பின்னர் ஓர் நிம்மதி பெருமூச்சு விட்டவாறு கத்தியை வாங்கி கேக்கை கட் பண்ணினாள். அம்ரீதா புன்னகையுடன் கேக்கை எடுத்து சம்ரித்துக்கு நாசூக்காக ஊட்டினாள்.

அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு அம்ரீதாவுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்ட முயல, இதையும் சற்றும் எதிர்ப்பார்க்காத அம்ரீதா சம்ரித்தை தள்ள முயல ஏற்கனவே அம்ரீதா அணைத்திருந்த கைகளோடு சேர்ந்து அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். இது சமயம் என்று அவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அம்ரீதா நிகழ்காலத்தில் இருந்து சொப்பனத்திற்கு சென்றுவிட்டாள்.

“வாவ்… வாட் அ ப்யூட்டிபூல் கபில்…” என சொல்லி சுற்றியுள்ள மேஜைகளில் உள்ளவர்கள் எழுந்து நின்று ஆரவாரத்துடன் கைத் தட்டினார்கள். ஒரு சிலர் விசில் கூட அடித்தனர்.

கைத் தட்டல் ஒலியில் அம்ரீதா கனவுலகத்தில் இருந்து மீண்டு நடப்புக்கு வந்து வெட்கப்பட்டு மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.

இது தான் சாக்கு என சம்ரித் மீண்டும்இறுக்கி அணைத்தான். அம்ரீதா நெளிந்துக் கொண்டே,”விடுங்க… எல்லோரும் நம்மளயே பார்க்கிறாங்க… எனக்கு கொஞ்சம் கில்டியா ஆகிறது…” சொன்னாள்.

மேலும் சில ஜோடிகள் இவர்களை மாதிரியே கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

பிறகு ஒருவருக்கொருவர் ஒரே தட்டில் இருந்த உணவை ஊட்டிக் கொண்டனர். அங்கிருந்து மகிழ்ச்சியோடு கிளம்பினர். அவர்கள் முதலில் சண்டையோடு ஆரம்பித்து இறுதியில் மனநிறைவோடு எல்லாவற்றையும் முடித்துக் கொண்டனர்.

இருவருக்கும் இந்த பொழுது இனிமையான பொழுதாக அமைந்தது. வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருந்த பொழுது…

அந்த நினைவுகள் எந்நாளில் நினைவின்றி நீங்குமோ…

இப்பொழுது இனிமையான பொழுதாக இருப்பதை…

வாழ்வில் இத்தருணம் என்றென்றும் மறக்குமோ….

9 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

7 – தீக்கு தென்றலோடு மோகம்

7 – தீக்கு தென்றலோடு மோகம்!

விமலாவும் யோகேஷ் சொன்ன மாதிரி ‘எந்த தேதினு தெரிஞ்சிக்க…’ ஒன்றும் நடக்காத மாதிரி இவர்களின் உரையாடல் கேட்கும் தூரத்தில் அமர்ந்துக் கொண்டார். பேச்சு சுராஸ்யத்தில் அவர் வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

“அடுத்த மாதம் வருகிற முதல் முகூர்த்தில் நிச்சயம் பண்ணிக்கலாம்…” ஆதிகேசவன் சொல்ல, ஈஸ்வரும் சம்ரித்தும் சரி என்பது போல தலையாட்டினார்கள். அதை குறித்துக் கொண்ட விமலா உடனே யோகேஷிடம் சொல்ல ஓடிப் போனார்.

யோகேஷிடம் செல்போனில்,”ண்ணா… அடுத்த மாதம் முதல் முகூர்த்த தேதில என்கேஜிமெண்ட் வச்சிருங்காங்கண்ணா… அதுக்கு முன்னாடியே நீங்க இஷாவ கூட்டிட்டு வந்துடுங்க…” விமலா சொன்னார்.

அதுக்கும் யோகேஷ்,”சரிம்மா… நாங்க வந்திடுறோம்…. நீ ஒன்னும் கவலப்படாதே….” என சொல்லி போனை வைத்துவிட்டார்.

இஷாவை அழைத்து,”இஷா… உங்க அத்த இப்ப தான் போன் செஞ்சா…” என சொல்லி முடிக்கும் முன்,

இஷா பரபரப்பாக,”ப்பா… அவங்க என்ன சொன்னாங்க…” என்று கேட்டாள்.

“என்னம்மா… நா சொல்லாங்காட்டி உனக்கு அவசரந்தான்…”

“நீங்க சொல்லறதுக்குள்ள விடிஞ்சே போயிடும்ப்பா…” என்று சலித்துக் கொண்டாள்.

“கொஞ்சம் இரும்மா… உங்கம்மா எங்க இருக்கானு பார்த்திட்டு வாம்மா…”

“அப்பா… நீங்க விஷயத்த முதல்ல சொல்லுங்கப்பா… என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல…” என அவசரப்படுத்தினாள்.

“உங்கம்மா விஷயத்த கேள்விப்பட்டால் முதல அவங்கிட்ட போயி பத்த வச்சிடுவா… அதுக்கு தான் சொன்னேன் அவ எங்க இருக்கானு பார்த்திட்டு வாம்மா…” என்று விளக்கினார்.

“ஷிட்… சாரி… சாரிப்பா… இது எனக்கு தெரியாம போயிடுச்சு… இருங்க… இந்தம்மா எங்க இருக்குதுன்ன பார்த்திட்டு வரேன்ப்பா…” என கூறி தன் தாயைப் பார்க்கச் சென்றாள்.

அவர் ‘தன் மகளுக்கு நல்ல புத்தியைக் கொடு…’ என்று பூஜையறையில் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

அதைப் பார்த்து விட்டு ‘பாவம் இதுக்கு என்ன கவலையோ…’ நினைத்துக் கொண்டு சென்றாள். ‘இவளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கனும்…’என்ற வேண்டுதலை அறியாமல்…

தன் தந்தையிடம்,”அப்பா… அம்மா கடவுளிடம் தீவிரமாக எதையோ வேண்டுதல் வைத்துக் கொண்டியிருக்குது…” எனச் சொன்னாள்.

இது தான் சமயம் என்று,”நல்லவேளைம்மா… உன்ம்மா இங்க இல்ல… உங்க அத்தை சம்ரித்துக்கு நிச்சயத்துக்கு முன்னாடி நம்மள தட்டு மாத்திக்க வர சொல்லிக்க இருக்காம்மா… இத சொல்லங்காட்டி அந்த பற பறந்தே… நா என்ன பண்ணட்டும் சொல்லு….” என்று குறைப்பட்டுக் கொண்டார்.

“சூப்பர்… சூப்பர்ப்பா…” என்று சுற்று்பபுறம் மறந்து சத்தமாச் சொல்லிக் கொண்டு இரு கைகளையும் தட்டி ஆர்பரித்தாள்.

“ஷ்ஷ்… சத்தமா பண்ணாதே… இத கேட்டு உன்னம்மா வந்துட்டா நமக்கு தான் ஆபத்து…” என்றார்.

“சாரிப்பா… தெரியாம செஞ்சுட்டேன். என்னய மன்னிச்சிடுங்கப்பா…” மெதுவாக பேசினாள்.

“பரவாயில்ல… விடும்மா… ஒரு ஆர்வத்துல பண்ணிட்டே… இனி மேல் நாம எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஃஸ்டெப்ம் ஜாக்கிரதையா எடுத்து வைக்கனும்…” என மெதுவாக சொன்னார்.

“ம்ம்… சரிப்பா…”என்று குசு குசுவென பேசினாள். இருவரும் தன் தாய்க்கு நிச்சயதேதியை சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்.

இதோடு விஷயம் முடிந்தது என்று இஷா வழக்கம் போல் ஜிம்கும், யோகேஷிம் தன் அலுவலகத்தையும் பார்க்க சென்றனர்.

அம்ரீதா வீட்டில் யசோ,”உங்க மகள் சம்ரித்தை லவ் பண்ணறா தெரியுமா…” சொன்னார்.

இதை கேட்டதும் மிகவும் அதிர்ந்து போய்,”என்ன யசோ சொல்ற…” என கேட்டார்.

“ஆமாம் ப்பா… நிஜமா தான்…” என யசோ சொல்ல, அதற்கு கருணாகரன்,”அம்ரீ… அம்ரீ… இங்க வா…” என்று கத்தினார்.

உள்ளே இருந்து தன் சித்தப்பா என்ன சொல்வாரோ என பயந்து நடுங்கிக் கொண்டே வந்தாள்.

அவளைப் பார்த்ததும்,”நீ சம்ரித்த காதலிக்கறா…” என கோபமாக வினவினார்.

“ஆமாம் சித்தப்பா…” என பயந்துக் கொண்டே சொன்னாள்.

அப்போது போன் சிணுங்கி இடையூறு செய்தது.போனை கருணாகரன் தான் எடுத்தார்.

ஆதிகேசவன் தான்,”ஹலோ… உங்க வீட்டு பொண்ணும் எங்க வீட்டு பையனும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணறாங்க… உங்களுக்கு தெரியுமா…” என்று பேசினார்.

தன் முதலாளி அழைத்து அப்படி கேட்கவும்,கருணாகரன்,”எனக்கு விஷயம் இப்ப தான் கேள்விப்பட்டேன். அதைப் பத்தி தான் என் மககிட்ட விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்.” என்றார்.

அதற்கு ஆதிகேசவன் தான்,”அதையே நா சொன்னேன். அவங்க இரண்டு பேரும் காதலிக்கறாங்க…” என்றார்.

கருணாகரன்,“ நீங்க என்ன சொல்றிங்கனு புரியல…” என்று கேட்டார்.

ஆதிகேசவன் புன்னகைத்தவாறே,”உங்க பொண்ணும் எங்க பையனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க… இப்ப புரிஞ்சிருக்குமே…” என சொன்னார்.

“அதனால் நீங்க என்ன சொல்ல வரிங்க…” என்றார்.

“பேசாமல் இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிடலாமே… நீங்க என்ன சொல்றிங்க…”

“நா என்ன சொல்றது… அவங்க வாழ்க்கை அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்க… நா அப்பனா… ஃஏப்ட் ஆல் நா சித்தப்பா தானே…” என கோபமாக போனை வைத்துவிட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அம்ரீதா என்ன செய்வது என்று தலை குனிந்தும் கைகளை பிசைந்தும் தவித்தாள். யசோதா கண் ஜாடையில் அம்ரீதாவை சமாதானம் செய்து வைத்துவிட்டு கோபமாக சென்ற கணவரிடம் பேசச் சென்றார்.

யசோதா கதவைத் திறந்துக் கொண்டு வரும் அரவம் கேட்டும் திரும்பிப் பார்க்காமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தார் கருணாகரன்.

“கருணாஸ்” என அழைத்து அவரை சமாதானம் செய்ய முயன்றார். அவர் தனிமையில் இருக்கும் போது எல்லாம் யசோ அப்படி தான் காதலோடு கூப்பிடுவார். அவ்வாறு அழைக்கும் போது எல்லாம் அப்படியே தீயில் இட்ட பனிகட்டியாக உருகிவிடுவார். அதனால் இப்பவும் அப்படியே அழைக்கவும் செய்தார்.

அவர் இதுக்கெல்லாம் அசையமாட்டேன் என கோபமாக இருந்தார். அவர் கோபம் இன்னும் கூட குறையவில்லை என்பதில் இருந்து அருகில் சென்று கருணாவை பிடித்து இழுத்து படுக்கையில் அமர வைத்து, தானும் அவரின் பக்கத்தில் அமர்ந்து, அவர் கன்னத்தைப் பிடித்து அவரை தாஜா செய்தார்.

“ப்ளீஸ் கருணாஸ்… ப்ளீஸ் கருணாஸ்…”

“என்னய விடு சொல்றேன்…” அப்பவும் முறுக்கிக் கொண்டார்.

“கருணாஸ்… நா சொல்றத கொஞ்சம் கேளுங்க…” என்றார்.

அவர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு,”என்ன சொல்லு…” என்றார்.

“அவங்க இரண்டு பேரும் காதலிங்கறாங்க தான்… உங்கள சம்மத்துக்காக காத்துட்டு இருக்காங்க… நீங்க அவங்களுக்கு கொஞ்சம் கூட நியாயம் செய்யவேயில்ல… நீங்க பண்ணறது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல…”

கருணாகரன் கொஞ்சம் இளகி வந்தார். இது தான் நல்ல தருணம் என யசோதா நினைத்துக் கொண்டு, மேலும் அவரை பேசிய கரைக்கலாம் என முடிவு செய்து,”கருணாஸ் நீங்க என்ன சொல்றிங்களோ… அதன்படியே அவங்க கேட்டு நடந்துப்பாங்க…” என்றார்.

உடனே கருணாகரன் தீவிரமாக சிந்தனை செய்தார். அவர் யோசிக்கட்டும் என அவரை தனிமையில் விட்டுட்டு யசோதா வந்துவிட்டார். ‘ஆனது ஆகிப்போச்சு… இனி மேல் நாம சொல்லி மாற போகுதா… அவங்க லவ் பண்ணிட்டாங்க… என்ன தான் என் சம்மத்த வேண்டி நின்னாலும்… எத்தன காலத்துக்கு தான் தடுத்த நிறுத்த முடியும்… தடுத்தாலும் அவர்கள் மனம் மாறப் போவதில்ல… பேசாமல் நாமளே திருமணம் செய்து வைத்துவிடலாம்… கேட்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டால் நம்ம கௌரவத்துக்கு அழகு…’ என்ற முடிவு செய்தார்.

அவர் சிந்தித்தும் சிந்தித்தும் தெளியும் போது மாலையாகிவிட்டது. அவர் மனம் முடிவு செய்த படி,’அவர்கள் திருமணத்தை தானே நடத்திவிடலாம்.’ என தெளிந்தார். பின்பு அறையை விட்டு வெளியில் வந்தார்.

நேராக ஆதிகேசவனுக்கு போன் செய்து,”நானும் யோசனை பண்ணி பார்த்தேன். எப்படி பார்த்தாலும் இவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பது தான் சரியாக இருக்கும்… சோ, இந்த திருமணத்தை நடத்தி வைக்கலாம்னு நா முடிவு பண்ணிட்டேன்.” என்று அவருக்கு மட்டும் இல்லாமல் அவர் வெளியில் வந்தவுடன் அவரை சுற்றிக் கொண்ட குடும்பத்தினருக்கும் சேர்ந்து சொன்னார்.

அவர் சொன்னவுடன் அம்ரீதா மகிழ்ச்சியில் தன் சித்தப்பாவை ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டாள். யசோவும், இராகுலும் கூட மகிழ்ந்தார்கள்.

அந்த பக்கம் இதை கேட்டவுடன் ஆதிகேசவனும் சந்தோஷப்பட்டார். போனை அதன் தாங்கியில் வைத்து விட்டு,”சம்ரித்… இங்க வாப்பா…” என்றார்.

“என்ன தாத்தா… என்ன விஷயம்…” என பரப்பாக ஓடி வந்தான்.

“உங்க சின்ன மாமனார் உன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார்.” என்கவும், தீடிரென சின்ன மாமனார் என சொல்லவும் சம்ரித் புரியாமல் முழித்தான்.

ஆதிகேசவன் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டு,”இன்னும் புரியலயா… அம்ரீதாவுக்கு சித்தப்பா என்றால் உனக்கு சின்ன மாமனார் தானே…” விளக்கினார்.

சம்ரித் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தப்படியால் அவனுக்கு இந்த உறவுமுறை எல்லாம் சட்டென்று புரியவில்லை.

“ஆமாமில்ல…”

“ஆமாம்மா… இல்லயா… இரண்டுல ஒன்ன தான் சொல்லனும்…”

“ஆமாம் தாத்தா… ஆமாம்… இல்லைனு நா எப்பவும் சொல்லமாட்டேன்.”

“இல்லங்கற வார்த்தை எப்பவும் உன் வாயிலருந்து வராதே…?”

“ஆமாம் தாத்தா… எப்பவும் வரவே வராது…”

“அதையும் பார்க்கலாம்… இப்ப உன்கிட்ட சில கேள்வி கேட்பேன். அதுக்கு எவ்வளவு சாமர்த்தியமா பதில் சொல்றின்னு பார்ப்போம்…” என சவால் விட்டார்.

“கேளுங்க… அதற்கு நா பதில் சொல்றதில், நீ அசந்து போயிடுவிங்க…”

“நீ அம்ரீதாவ காதலிக்கல்ல…”

“நா அம்ரீய காதலிக்கல… ஆனால் அவள அதற்கு மேல… என் உயிருக்குள்ள வச்சு பொத்தி பாதுகாக்கறேன்…” நெஞ்சை மேல் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு சொன்னான்.

“ஆஹா! அப்படியா…”

“ஆமாம்… அப்படித்தான்…” நெஞ்சை நிமிர்த்தி பெருமையாக சொன்னான்.

“இவ்வளவு நாள் எனக்கு இது தெரியாமல் போச்சே…” என ஆச்சரியப்பட்டு பேசினார்.

“இனி மேல் தெரிஞ்சுக்கோ…” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான்.

இவனின் சிரிப்பு சத்தம் கேட்டு ஈஸ்வரும், விமலாவும் என்னவென்று தெரியவில்லையே என விரைவாக வந்தார்கள்.

இருவரும் இது தான் விஷயம் என்று சொன்னதும், ஈஸ்வர் வாய் விட்டு உல்லசமாக சிரித்தார். இதற்கு நேர்மாறக விமலாவோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

மதியம் போல் சம்ரித் அம்ரீதாவின் செல்லுக்கு அழைத்து அவளை தனிமையில் சந்திக்கனும் என்று சொன்னான். எங்கே எத்தனை மணிக்கு வருகிறதுனு முடிவு பண்ணிட்டு சொல்லுமாறு வைத்துவிட்டான்.

யசோவிடம்,”சித்தி, சம்ரித் வெளியே போகனும்னு சொல்றார். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரட்டுமா…” என்று கேட்டாள்.

அதற்கு யசோ,”எங்க போறது முடிவு பண்ணிட்டிங்களா…” பதிலுக்கு கேட்டாள்.

“இல்ல… சித்தி… என்னய முடிவு செய்ய சொல்லிகிறார். நா இன்னமும் எங்கே போறது தான் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்…”

சிறிது நேரம் யசோதா யோசித்து,”இல்ல சாயங்கலாம் தான போறிங்க… பேசாம ஃபீச்க்கு போயிட்டு வாங்க…” என்றார்.

“ஆனா தனிமையில் சந்திக்கனும்னு சொல்றார்.”

“அதுக்கு நீங்க நைட் டின்னர் போலாமே…”

“ஆஹா… இது நல்ல ஐடியாவே இருக்குது… நா இப்பவே அவருக்கு கூப்பிட்டு சொல்றேன்…”துள்ளி குதித்தாள்.

“பொறு… பொறு… இப்பவே அவரய வீட்டுக்கு வர சொல்லி காபி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு டின்னர் போங்க…” சொன்னார்.

அம்ரீயும் அப்படியே சொன்னாள்.

உடனே விமலா யார் அறியாமல் இஷாவின் செல்லுக்கு அழைத்து,”எல்லோரும் ஒரே கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு கேட்கவே முடியல… ஒரே நாரசமாக இருக்குது…” அருவருப்புடன் சொன்னார்.

“ஏன்… என்ன விஷயம்… இவ்வளவு அருவருப்புடன் சொல்றிங்கத்த…” இஷா கேட்டவுடன்,

விமலா நடந்தவற்றை எல்லாம் கொட்டித் தீர்த்தார். அதே எள்ளும் கொள்ளும் இப்போது இஷாவின் முகத்தில் வெடித்தது.

“இருங்கத்த… இதுக்கெல்லாம் முடிவு கட்டறேன்.”

“எப்படி…” என விமலா கேட்டார்.

“ஏன் உங்களுக்கு தெரியாத… எல்லாம் உங்க மருமகளாக வந்து, சம்ரித்த ஆட்டி படைக்கிறேன்.”

“நீ பேசறது எல்லாம் கேட்கும் போது இந்த காதுல தேன் வந்து பாயுற மாதிரி இருக்குது…”

“எல்லாம் நடக்கும் அத்த… நீங்க எதுக்கு கவலப்படறிங்க…”

“நீ சொலறது எல்லாம் கேட்க ஆசையாயிருக்கு… நிஜத்துல நடந்த எவ்வளவு நல்லா இருக்கும்…”

“நடக்காமல் எங்க போகுது… நடக்கலைன்னாலும் நாம நடத்தி முடிச்சுடமாட்டோம்… நீங்க கவலப்படாமல் போங்கத்த… நா போனை வைக்கிறேன்.” என சொல்லி போனை வைத்தாள்.

மாலையானதும் சம்ரித் அம்ரீதா வீட்டுக்கு வந்தான். அம்ரீதா,”வாங்க… உள்ளே வாங்க…” அழைத்து விட்டு, “சித்தி… சம்ரித் வந்திருக்கிறார்.” என உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்.

தன் அறையில் இருந்த யசோதா வெளியில் வந்து,”வாங்க மாப்ளே வாங்க… உட்காருங்க…” என்று சோபாவை காண்பித்தாள் உடனே சம்ரித் கூச்சப்பட்டவாறே,”புதுசா என்ன மாப்பிள்ளனு சொல்லிகிட்டு இருக்கிங்கத்த… என்னய சம்ரித்துனு கூப்பிடலாமேத்த…” என்று உட்கார்ந்தான்.

“நீங்க மட்டும் என்னய அத்தைனு கூப்பிடறிங்க… மாப்ளே… நா உங்கள அப்படி கூப்பிடகூடாதே…” என்றார்.

“எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்குதுன்னு தான் அப்படி சொன்னேன். சரி நீங்க உங்க இஷ்டப்படி கூப்பிடுங்க… எனக்கு போக போக பழகிடும்னு நனைக்கிறேன்…” என சொன்னான்.

அம்ரீ இருவரையும் சிரித்துக் கொண்டே பார்த்திருந்தாள். யசோ காபி கொடுத்தாள். சம்ரித் அதை வாங்கி குடித்தான்.

பிறகு யசோ அம்ரீய பார்த்து,”மாப்ள… கூட்டிட்டு உன் ரூம்கு போ…” என்றதும், அவள் சம்ரித்தை தன் அறைக்கு அழைத்துக் கொண்டு போனாள்.

சம்ரித் அறைக்குள் நுழைந்ததும் சுற்றியும் பார்த்து விட்டு,”பரவாயில்ல… உன்ன போலவே ரூமையும் நீட்டாக வச்சிருக்க… இஷா தன்க்கு மட்டும் மேக்கப் பண்ணிக்குவா… ஆனா ரூமை மட்டும் அன்டைடியா வைத்திருப்பா…” என்றான்.

“சிலர் அப்படித்தான்… என்ன செய்யறது… அவங்க மேக்கப் பண்ணிக்குற அளவுக்கு அவங்க சுற்றியுள்ள இடத்தய பத்தி கவலப்படமாட்டாங்க… அது தான் அவங்க சுபாவம்…” என்று சொல்லிச் சிரித்தாள்.

அவள் சிரிப்பு அவனை மயக்கிவிட… உடனே அவளை இழுத்து கட்டியணைத்தான். அவன் கட்டியணைத்ததில் தீடிரென அவன் கட்டிணைத்தில் அவள் திமிறினாள். அவள் திமிறவும்,”ஷ்ஷ்… இது என்ன உன்னய கட்டி பிடிக்கறது எல்லாம் புதுசா… இதுக்கு ஆபிஸ், ஹாஸ்பிட்டலில் எல்லாம் கட்டி பிடிச்சதில்ல பாரு…” கடிந்தான்.

“ரூம் கதவ திறந்திருக்கு… அதனால் தான் கொஞ்சம் சங்கடப்பட்டேன். இதுக்கு எல்லாம் கோவிச்சுகிட்டிங்களா…” சொன்னாள்.

அப்புறம் தான் தனக்கு பின்னால் இருக்கும் அறைக் கதவை கவனித்தான். “ஷ்ஷ்… நா ஒரு ஃபூலிஸ்… ரூம் கதவ லாக் பண்ணாம எனக்கு ரொமான்ஸ் கேட்குதா…” என நெற்றியில் அடித்துக் கொண்டான்.

அவனுக்கு வலிக்குமே என்று அடித்தை இடத்தை அவள் நீவிக் கொடுத்தாள். மறக்காமல் கதவை சாற்றி விட்டு வந்து, அவளை கட்டியணைத்தான். அவளும் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். இருவரும் பேச்சற்ற ஒரு மோனநிலைக்கு சென்றனர். மாலை போய் இரவு வந்தது கூட தெரியாமல், டின்னர் போக வேண்டும் என்பதை கூட மறந்து, அதே மோனத்திலே லயிருந்திருந்தனர்.

விமலாவும் மேற்கொண்டு என்ன நடக்குதுனு பார்க்க முடிவு எடுத்து, நடப்பதை கவனிக்கலானாள்.

மும்மரமாக நிச்சயத்துக்கு உண்டான வேலை எல்லாம் ஆதிகேசவனும் கருணாகரனும் கலந்து பேசி, எங்கே எப்போது நடத்துவது என முடிவு எடுத்தார்கள்.

அதே போல் இஷாராவின் வீட்டிலும் இஷாவின் தந்தையும் இஷாவும்,’இந்த நிச்சயத்துக்கு முன்னால் தாங்கள் போய் நிச்சயத்தை நடத்தலாம்…’ என பேசிக் கொண்டிருப்பதை, அந்த வழியாக லதாவின் காதில் விழுந்தது.

உடனே லதா சத்தப்படாமல் வீட்டில் இருந்து வெளியேறி தெருமுனைக்கு வந்து ஒரு ஆட்டோ பிடித்து, சம்ரித்துக்கு வீட்டுக்கு வந்தாள். வரும் வழியில் விமலா வீட்டில் இருக்ககூடாது என கடவுளை வேண்டிக் கொண்டு வந்தார்.

நல்லவேளை அவர் வேண்டுதல் வீணாகாமல் விமலா இஷா தனக்கு மருமகளாக வரவேண்டும் என கடவுளிடம் முறையிட சென்றிருந்தார்.

இது தான் நல்ல சமயம் என்று லதா ஆதிகேசவனிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட, கருணாகரனுக்கு போன் செய்து லதா வந்ததையும், அவர் சொன்னவற்றை முழுவதும் சொன்னார். மேற்கொண்டு என்ன செய்யலாம் இருவரும் கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

முறைப்படி பெண் வீட்டில் தான் நிச்சயத்தை நடத்துவார்கள். ஆனால் ஆதிகேசவன் கேட்டுக் கொண்டதால் கருணாகரன் வழக்கத்திற்கு மாறாக சம்ரித் வீட்டில் நிச்சயத்தை நடத்த ஒத்துக் கொண்டார்.
அதன்படி இஷா வீட்டினர் வருவதற்கு ஒருமணி நேரம் முன்பு கருணாகரனை தங்கள் வீட்டிற்கு வரச் சொன்னார். அதற்கும் கருணாகரனும் ஒத்துக் கொண்டார்.

உடனே அலுவலகத்தில் இருந்து வரவழைத்து சம்ரித்துக்கும் மருத்துவமனையில் வரவழைத்து ஈஸ்வருக்கும் லதா வந்து சொல்லிவிட்டு, அதற்கு கருணாகரனை முன்பே நிச்சயத்தை நடத்த வருமாறு சொன்னதையும் சொன்னார்.

சம்ரித் கோபப்பட்டு,”உங்க வுட்பி செஞ்சிட்டு இருக்கற வேலயெல்லாம் பாருங்க… நமக்கு ஆப்போஸிட்டா வேலய செய்யறது எல்லாம் நல்லாவ இருக்கு…” என்றான்.

ஈஸ்வர்,”இருடா நா உன்ன மாதிரியெல்லாம் கோபப்பட்டால் வேலைக்கு ஆகாதுடா… அப்பா நீங்க சொல்ற மாதிரி எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடலாம்…” முதலில் மகனிடம் ஆரம்பித்து, இறுதியில் தந்தையிடம் முடித்தார்.

மோகத்தில் முத்தெடுக்க….

மோனநிலைக்கு செல்ல…

அந்நிலையில் லயித்திட…

சுற்றம் மறந்திருக்க…

அவ்வறையே சாட்சியாக அமைய…

7 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

6 – தீக்கு தென்றலோடு மோகம்

6 – தீக்கு தென்றலோடு மோகம்!

மருத்துவமனை வாசம் முடிந்து ஒரு வழியாக சம்ரித் வீடு வந்து சேர்ந்தான். சம்ரித் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தான். அருகில் இருந்து விமலாவும் இஷாராவும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள். சம்ரித்துக்கு இருந்தும் அம்ரீத்தைப் பார்க்க முடியாததால் மனம் வெறுமையாக உணர்ந்தான்.

அம்ரீதா மட்டும் என்ன… சம்ரித்துக்கு அலுவலகம் வரவில்லை என தெரிந்தும் இவளும் அலுவலகம் செல்லவில்லை. வீட்டிலேயே தன் அறையிலே படுத்திருந்தாள். யசோதா கூட இவள் மனநிலை தெரிந்து ஒன்றும் சொல்லாமல் இவள் போக்கு விட்டுவிட்டார்.

அம்ரீதா நினைவில் இருக்கும் போது இஷாரா அருகில் அவனை உரசிக் கொண்டு அமர்ந்தாள். இஷாரா தேகம் உரசவும் சம்ரித் தீ சுட்டதுப் போல் துடித்துப் போய் தன்னை அறியாமல் நகர்ந்து அமர்ந்தான். இவளும் இன்னும் நெருங்கிப் போகவும், அவன் தள்ளிப் போய் அமர்ந்தான்.

“ஏன் மாம்ஸ் நா பக்கத்துல உட்கார்ந்தா… நீங்க இப்படியெல்லாம் ஃபேஸை வச்சுகிட்டு என்னய விட்டு தள்ளி போய் உட்காரமாட்டிங்க… இப்ப என்ன இப்படியெல்லாம் செய்யறிங்க… வாட் ஐ கேன் டூயிங்…” என புலம்பினாள்.

“ப்ச்… ப்ச்ச நெவர் ஐ டோன்ட் லைக் இட்…”

“ஒய்…” என கேள்வி எழுப்பினாள்.

“ம்ப்ச்… ம்ப்ச்…” என்றான்.

“ஒய் ஆர் டூயிங் லைக் திஸ்…”

“எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கல… சொன்னா புரிஞ்சுக்கோ…” என வெறுப்பாகக் கத்தினான்.

சொன்னதும் இஷாரா வெடுக்கென அந்த அறையை மட்டுமல்ல வீட்டை விட்டு நகர்ந்து போயிவிட்டாள்.

அவள் வீட்டை விட்டு போனதை கூட விமலா இவர்களுக்கு தனிமை கொடுத்து தங்கள் அறைக்கு சென்ற கூட அறியவில்லை.

“ஹீப்…”என பெருமூச்சை விட்டு சோபாவில் இருந்து தன் படுக்கையில் படுத்து உறங்கிவிட்டான்.

முதலில் விமலா தூங்கி எழுந்து வந்து இஷாராவை சம்ரித் அறையில் போய் பார்த்தார். அங்கு சம்ரித் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தான். பிறகு வீடு முழுவதும் தேடினார். எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

விமலா போய் சம்ரித்தை எழுப்பி அவனிடம்,”இஷாரா எங்கடா…” என்றுக் கேட்டார்.

தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி தீடிரென விமலா கேட்கவும் ஒன்றும் புரியாமல் விழித்தான். புரிந்ததும் அப்பாடா போய்விட்டான் என முதலில் நினைத்தான். தாய் தன் முகத்தையே பார்த்திருக்கவும் தான் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை.

“நான் தூங்கிவிட்டேன். அவள் என்கிட்டயும் சொல்லிட்டு போகலமா…” மனசார பொய்யுரைத்தான்.

விமலாவும் அப்படித்தான் இருக்குமோ என நினைத்து, இஷாராவுக்கு போன் செய்து கேட்கலாம் என போன் செய்து,”ஏம்மா… இஷா யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம போயிட்டே…”

‘மாம்ஸ்… நான் சொன்னதை என்ன தைரியம் இருந்தால் மறைத்திருப்பான். மாம்ஸ் உங்க மனசுல என்ன இருக்குது, உங்கள கையும் களவுமா நா கண்டுபிடிக்கறேன்…’ என மனதில் சூளுரைத்தாள்.

“இஷா… இஷா… நா கூப்பிட்டே இருக்கேன்… நீ பதிலே பேசமாட்டகற…”

“அப்படியெல்லாம் இல்ல அத்தை… நா ஏதோ யோசிட்டு இருந்தேன்.”

“சரி… என்ன யோசிட்டு இருந்த…”

“அதெல்லாம் விடுங்க அத்தை… அவசரமா… அவசரமா… என் மம்மி கூப்பிட்டாங்க… அதனால தான் யார்கிட்டயும் சொல்லாம வந்துட்டேன்.”

“ஓ… அப்படியா… அது தெரியாம தான் உன்னய காணோம்… காணோம்… வீடு பூரா தேடினேன்.”

“எனக்கு உங்க கஷ்டம் புரியுது அத்த… நீங்க எல்லோரும் தூங்கிட்டு இருந்திங்க அத்த… மேய்ட்கிட்டயாவது சொல்லிட்டு வந்திருக்கலாம்… சாரி அத்த…”

“சரி விடு… அதுக்கு எல்லாம் சாரி கேட்கற…”

“பரவாயில்ல அத்த… அது உங்க ப்ராட்- மைண்ட் காமிக்குது…”

“எதுக்கு உங்க மம்மி அவ்வளவு அவசரமா உன்னய கூப்பிட்டா…”

“அவங்களுக்கு வேற வேலை என்ன அத்த… உங்க வீட்டுக்கு வந்தாலே ஆகாது… ஏதாவது நைநைனு சொல்லிகிட்டே இருப்பாங்க… உங்களுக்கு தெரியாத அத்த…” என இழுத்தாள்.

“ம்ம்ம்… அது என்னவோ உண்மை தான்… எங்கள கண்டாலே ஆகாதே…”

“சரி அத்த… நா போன வச்சிட்டுமா…”

“எங்ககிட்ட பேசிட்டு இருக்க தெரிஞ்சா… அதுக்கு ஏதாவது சொல்வா… சரி வச்சிடு…” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

போனை வைத்த பிறகு,’முதல்ல நா உரசிகிட்டு பக்கத்துல ஒன்னும் சொல்லமாட்டான்… அவனுக்கும் அதைய அப்செட் பண்ணிக்குவான்… இப்ப என்னடா தள்ளித் தள்ளிப் போறான்… சம் திங் பிஸ்ஸி… அது என்ன விஷயம் கண்டுபிடிக்கறேன்…’ கங்கணம் கட்டிக் கொண்டாள்.

அம்ரீதா சம்ரித்தைப் பாரக்காமல் அலுவலகத்தில் எவ்வளவோ முயன்றும் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. சம்ரித் இப்போ என்ன செய்கிறான் என தெரியவில்லை சதா சர்வகாலம் அதே நினைவு தான். நினைத்து நினைத்து அவளுக்கு மண்டை இடிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் கழித்து தாங்க முடியாத தலைவலியாக மாறிவிட்டது. பின்னர் என்ன செய்தும் தலைவலி குறையவே இல்லை. இனி அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய முடியாது என்ற நிலைமை வந்து போது, அதற்க்கு கீழே வேலை செய்யும் ஊழியரிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். பகல்வேளையில் யசோதா மட்டும் தான் இருந்தாள்.

வண்டி சத்தம் கேட்கவும், யசோ,’அம்ரீ வண்டி சத்தம் மாதிரியே கேட்குது… அதுக்குள்ள வந்துட்டாளே…’ என நினைக்கவும், காலிங் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

திறந்ததும் தொப்பென் சோபாவில் அமர்ந்து,”ஷ்ஷ்… என்ன ஒரு தாங்க முடியாத தலவலி… சித்தி உங்க கையால ஒரு ஸ்டாரங்கா காபி போட்டு குடுங்களேன்… அப்பயாவது தலவலி குறையுதானு பார்க்கறேன்…” என்று சொன்னாள்.

அவளுக்கு தலைவலி என்று சொல்லவும், அரக்க பறக்க கிச்சனுக்கு சென்று, அவசரமாக காபி தயாரித்து எடுத்து வந்துக் கொடுத்தாள். அம்ரீ கையில் காபி வாங்கி அதன் வாசனையை முகர்ந்ததும்,”வாவ் சித்தி… நீங்க போடற காபிய அடிச்சுக்கவே ஆளில்ல…” என சிலாகித்துச் சொன்னாள்.

“ரொம்ப ஐஸ் வைக்காதே அம்ரீ… எனக்கு சளி பிடிச்சுக்கும்மல…”

“ஐஸ்ல ஒன்னுமில்ல சித்தி… உண்மைய தான் சொன்னேன்.”

“போமா… எனக்கு ஒரே ஷையா இருக்குது…” என நெளிந்தாள்.

“உண்மைய சொன்னா… இப்படி வெட்கப்படறிங்களே…”

“ச்சோ… போடா…” என்று கூறி விட்டு வெட்கப்பட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததில் இருந்த தலைவலி போன இடம் தெரியவில்லை. ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டாள்.

இஷாரா ஜிம்க்கு போய் இருக்கும் போது, இஷாராவின் பெற்றோர்களுக்கு நடுவில் சண்டை நடந்தது. “இஷாராவை என் தங்கை மகனுக்கு தான் கட்டிக்க கொடுக்க வேண்டும்” என்று யோகேஷ் கூறினார்.

அதற்கு லதா,”அதெல்லாம் முடியாது. அங்க கொடுக்கறத விட என் பொண்ணய பாலு கிணத்துல தள்ளலாம்…” சொன்னாள்.

“என் பொண்ணுக்கு சம்ரித்தை தான் ரொம்ப பிடிச்சிருக்கு… அப்படி இருக்கும் பொழுது நீ அவனை மறந்துட்டு வேற எவனுக்காவது கட்டி கொடுக்கனும் நினைச்ச… அவ சூசைட் பண்ணிக்குவா தெரியுமா…” என்றான்.

சூசைட் என்ற வார்த்தை அவளைக் கட்டிப் போட்டது. ‘தன் பொண்ண சம்ரித் இல்லனா… சூசைட் பண்ணிக்குவளோ…’ சிந்திதாள். அந்த நினைவே அவளை மேற்க்கொண்டு எதையும் சிந்திக்க விடாமல் செய்தது.

யோகேஷ்,’அவளே எதாயிருந்தாலும் முடிவு செய்யட்டும்…’ என அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

லதா எவ்வளவு யோசித்தும் வேற வழியில்லாமல் இஷாராவை சம்ரித்கு தான் கட்டி கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

யோகேஷ் வந்தவுடன்,”எனக்கு உடன்பாடு இல்லைனாலும், உங்க மகளுக்காக சம்மதிக்கறேன்.” முடித்துவிட்டாள்.

இஷாரா வந்தவுடன் இதை கேள்விப் பட்டு அளவில்லா மகிழ்ச்சிக் கொண்டாள். உடனே யோகேஷ் விமலாவிற்கு போன் செய்து,”ஒரு நல்ல நாள் பார்த்து உங்கள் வீட்டுக்கு நிச்சயம் பண்ண வருகிறோம்.” எனச் சொன்னார்.

விமலா மிகவும் மகிழ்ச்சியுடன்,”வாங்கண்ணா… வாங்க…” சம்ரித்தைக் கேட்காமலே சொல்லிவிட்டார்

இவர்கள் இந்த மாதிரி முடிவு செய்திர்களே என்றால், கடவுள் தாத்தா ரூபத்தில் வேறு மாதிரி முடிவு செய்துவிட்டார். சம்ரித்துக்கும் அம்ரீதாவுக்கும் நிச்சயம் என முடிவு செய்து குடும்பத்தினரிடம் சொன்னார். சம்ரித்துக்கு உடனே சம்மதம் சொல்லிவிட்டான். ஈஸ்வருக்கும் ஓகே தான்.

ஆனால் விமலாவிற்கு இந்த ஏற்பாடேல்லம் சுத்தமாக உடன்பாடில்லை. ஏனெனில் சகோதரின் மகளை தன் மருமகளாக வரவேண்டும் ஆசை. உடனே அவர் முகம் சுருங்கிவிட்டது. குடும்பத்தினர் முகங்களை எல்லாம் அவதானித்தவர் விமலா முகம் சுருங்கியதைக் கவனித்தவர் அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என புரிந்துக் கொண்டார். அவருக்கு எவ்வளவு சிந்தித்தும் மூளையை கசக்கியும் பார்த்தார். ஆனால் காரணம் தான் புரியவில்லை.

எனவே அவர் விமலாவிடம்,”ஏம்மா உனக்கு இந்த கல்யாணத்தில் அவ்வளவா உடன்பாடில்லையோ…” கேட்டார்.

அதற்கு விமலா,”இல்ல மாமா… என் விருப்பமா முக்கியம். அது தான் கட்டிக்கப் போறவனே சம்மதம் சொல்லிட்டானே…”

சம்ரித் அதிர்ச்சியாக தன் தாயைப் பார்த்தான். உடனே ஆதிகேசவன்,”எனக்கு எல்லோரது விருப்பம் முக்கியம். உன் மனசில் உள்ளதை தயங்காம சொல்லுமா…” என மிகவும் வற்புறுத்திக் கேட்டார்.

அவர் வற்புறுத்தியதால் விமலா அவரிடம்,”எனக்கு இவனுக்கு இஷாராவை தான் கட்டிக்க வக்கனும் ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டா போதுமா… இவன் எண்ணம் எல்லாம் வேறாயாஇருக்குது…”

இஷாராவை என்றதும்,”நான் அந்த மாதிரி எண்ணத்தில் பழகவே இல்ல…” என்றான்.

“நீங்க பழகியதைப் பார்த்து லவ் பண்ணுங்கிறிங்களோ… நா நனைச்சேன்…”

“நாங்க இரண்டு பேரும் சோஷியலா பழகினோம்… அதை நீங்க தப்பா எடுத்துகிட்டா… நாங்க பொறுப்பா ஆக முடியாதும்மா…” விளக்கினான்.

“ஆனால் இஷா உன்னய லவ் பண்ணுறாளே… அவளுக்கு உன்னய பேசி முடிக்கலாம்னு நா வர சொல்லிக்கறேன்…”

இஷாரா தன்னை காதலிக்கிறாள் என்ற செய்தி சம்ரித்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலை ஆதிகேசவனும் ஈஸ்வரும் வேடிக்கைப் பார்த்தனர்.

“நா ப்ரண்ட்லியா பழகினேன். அதை அவ காதலிக்கிறேனு நனைச்சா… நா ஒன்னும் பண்ண முடியாது…” அதிர்ச்சியோடு கேட்டான்.

“நீ ப்ரண்ட்லியா தான் பழகினேன்னு சொல்ற… அவ காதலிக்கிறேன்னு சொல்றா… அவகூட நெருங்கிப் பழகவும் தான் அவ அப்படி சொல்றா… அவ மட்டும் நாங்க கூட அப்படி தான் நனைச்சோம்… அப்படி தானே ஈஸ்வர்…” தன் பங்குக்கு ஈஸ்வரையும் கூட்டுச் சேர்த்த முயன்றாள்.

ஈஸ்வர்,”அப்படி எல்லாம் இல்ல… என் கண்ணுக்கு ரெண்டும் ப்ரண்ட்லியா தான் பழகுவதாக தெரியுது…” என சொன்னார்.

விமலா தனக்கு உதவிக்கு வருவார் என நினைத்த ஈஸ்வர் இப்படி பேசுவார் என நினைக்கவேல்லை. தனக்கு தானே தான் போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

அதே போல பேச எண்ணி,”இஷா எனக்கு மருமகளாக வர வேண்டும். அந்த கூலிக்கார பொண்ணை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது.” அம்ரீதாவை மருமகள் என்று சொல்லக் கூட அவருக்கு மனம் வரவில்லை.

சம்ரித்தும் அம்ரீயை கூலிக்காரி என்று சொன்னதில் தன் தாயின் மேல் கட்டுக்கடாத கோபம். அவர் தன்னோட அம்ரீயை மருமகள் என்று சொல்லத் தயங்குவதை மனதில் குறித்துக் கொண்டு, அந்த கூலிக்காரி தான் உனக்கு மருமகளாக்க வேண்டும் என முடிவு செய்துக் கொண்டான்.

“எனக்கு அம்ரீய தான் பிடிச்சிருக்கு… நா அவள தான் கல்யாணம் பண்ணிக்குவேன்… வேற யாரும் என் மனசில இல்ல…” என்று சொன்னான்.

“எனக்கு இஷா தான் மருமகளா வர வேண்டும். அது தான் என் முடிவு…”

“அவளயெல்லாம் என்னால கட்டிக்க முடியாது. நீங்க அஸ் யூஸ்ஃபுல் டிபிக்கள் இண்டியன் மாம்ஸ் மாதிரி தான் நடந்துக்கறிங்க… நா அம்ரீய தான் கட்டிக்குவேன்…” என உறுதியாக சொல்லி விட்டு தன் தாயிடம் பேச்சு முடிந்தது என்பது போல…

தன் தாத்தாவிடம் திரும்பி,”நிச்சயத்துக்கு நல்ல நாள் பாருங்க கிராண்ட்பா…” என சொன்னான்.

தன்னை யாரும் மதிக்கவில்லை என நினைத்தவாறு கோபமாக தன் அறைக்குள் புகுந்து தன் அண்ணனுக்கு போன் செய்தாள் விமலா.

யோகேஷ் போன் எடுத்தவுடன்,”என்ன விமலா… விஷயத்த சொல்லிட்டியா… எப்ப வரலாம்னு கேட்டியா…” மூச்சு விடாமல் பேசிக் கொண்டேப் போனார்.

“அண்ணா… அண்ணாணா… கொஞ்சம் நிறுத்தறிங்களா… இஷாவை சம்ரித்துக்கு பிடிக்கலயாம்… இவன் அந்த கூலிக்காரிய தான் லவ் பண்ணறானா… அவள தான் திருமணம் செஞ்சுக்குவானா…”

“ஓஹோ அப்படியா சொன்னான்… என் பொண்ணுகிட்ட இளிச்சு பேசினது,ஒட்டி உறவாடது எல்லாம் பொய்யா… எல்லாம் நடிப்பா… அவன் மனசில என்ன நனைச்சுகிட்டு இருக்கான்… இரு… இரு… அவன இரண்டுல ஒன்னு பார்த்திடலாம்…” சொல்லி விட்டு கோபமாக போனை வைத்துவிட்டார்.

பிறகு இஷாவிடம்,”அவன் உன்னய லவ் பண்ணலயா… அந்த கூலிக்காரிய தான் லவ் பண்ணுறானா… பாரம்மா இவனய என்ன செய்யலாம் சொல்லு…”

இதைக் கேட்டவுடன் லதா அப்படானு இந்த கல்யாணம் நடக்காதுனு என நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

கொஞ்ச நேரம் இஷா ஒரே யோசனையாக குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அவள் அவ்வாறு நடப்பதைப் பார்த்து லதா ‘இவள் இன்னும் திட்டம் தீட்டுகிறாள்னு தெரியலயே…’ பயந்தார்.

இஷா,”ப்பா… அத்தகிட்ட என்னைக்கு அவள நிச்சயம் செய்ய போறாங்கனு… கேளுங்கப்பா… அதுக்கு முன்னால் ஒருமணி நேரத்துக்கு நாம நிச்சயம் செய்ய வருகிறோம்…

“ஆகட்டும் இஷா… நா இப்பவே போன் பண்ணி கேக்கறேன்.”

லதா,”இஷா… அந்த பையனே அவள தான் கல்யாணம் பண்ணிக்குவேனு முடிவு பண்ணிட்டான்… இதுக்கு மேல நாம தலையிடறது தப்பு… வேண்டாம் சொன்னா கேளும்மா…” என தன்மையாக சொன்னார்.

இஷா கோபத்துடன்,”எதும்மா தப்பு… என்னய காதலிச்சிட்டு… இப்ப அந்த கூலிக்காரிய கட்டிக்க போறேனு சொல்லறா… அதெல்லாம் தப்பில்லயா…” கேட்டாள்

உடனே லதா,”அவன் தான் சொல்றானல்ல… அந்த பொண்ணு தான் லவ் பண்ணறேனு… அப்புறம் என்ன…” சொன்னாள்.

அதற்கு இஷா,”எங்கிட்ட ஒட்டி உறவாடனது எல்லாம் நடிப்பா… ஹா…ஹா… யாருகிட்ட காது குத்தறான்…” சொன்னாள்.

“அவனை அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அவன் நாட்டில் எல்லாம் பொண்ணு பையன் விகல்பமில்லா பழகற மாதிரி இங்கேயும் அவன் பழகினான்… அத நீ தப்பா புரிஞ்சிகிட்டா… அவன் என்ன பண்ணுவான்.”

இஷா சீற்றத்துடன்,”அவன் என்னய தான் லவ் பண்ணினான். இப்ப மாத்தி சொல்றான்… இப்ப அவள பார்த்துட்டான்ல… அது தான் லவ் பண்ணுறேனு சொல்லிகிட்டு திரியறான்… மலருக்கு மலர் தாவுற வண்டு மாதிரி… அப்படியே அந்த நாட்டு வழக்கத்தை அவன் இங்கேயும் கடைப்பிடிக்கறான். இவனுக்கு ஒரு பாடத்தை கத்துக் கொடுக்கமா… நா ஓயமாட்டேன்…” என சூளூரைத்தாள்.

‘இவங்களுக்கு பட்டா தான் புத்தி வரும்…’ லதா ஒதுங்கிக் கொண்டார்.

உடனே விமலாவிற்கு போன் செய்து,”ம்மா… விமலா… அவங்க என்னைக்கு நிச்சயம் பண்ணறாங்க உனக்கு தெரியுமா…” என்று கேட்டார்.

“தெரியலண்ணா… நா உங்களுக்கு போன் பண்ணி சொல்லனும்றதுக்காக என் ரூம்க்கு வந்துட்டேன்…”

“என்னம்மா… நீ அவசரப்பட்டியே… என்ன தேதினு தெரிஞ்சுகிட்டு வா…” என்றார்.

விமலாவும் அவ்வாறே செய்ய ஒப்புக் கொண்டார்.

கள்ளமில்லா நா இருக்க…

காதலை நீ அள்ளி தர…

உறவென்று அவள் வர…

உள்ளத்திலே நீ இருக்க…

உறுதியாக நீ என நா இருக்க…

இல்லத்தில் யார் வருவதாக…

இறுதியில் தான் தெரியும்…

6 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

5 – தீக்கு தென்றலோடு மோகம்

5 – தீக்கு தென்றலோடு மோகம்!

எபி – 5

சம்ரித்துக்கு அன்று முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. கண்ணை திறந்துக் கொண்டு அவளோடு கனவில் உலா வந்தான். அவளுக்கு கொடுத்த முத்ததை நினைத்து இதழை வருடினான். இதழ் இனிக்க மாதிரி இருந்தது. பிறகு இதழை உள்ளே இழுத்து ஒரு சப்புக் கொட்டினான். விடிய விடிய ஒரு நிமிடம் கண்ணை மூடவில்லை.ஒரே நிலையில் படுத்து இருந்தான்.

விடிந்தும் வெகு நேரமாகியும் சம்ரித் அறையை விட்டு வெளியில் வரவேயில்லை. விமலா அறையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். காலை உணவுக்கு வராமல் இருக்கவும் ‘என்னவோ தெரியவில்லை இவன் இவ்வளவு நேரம் எழுந்திரிக்காமல் இருக்கமாட்டானா…’ என கதவைத் தட்டினாள். அது உடனே திறந்துக் கொண்டது.

அருகில் போய் பார்த்தால் போர்வையை தலையோடு இழுத்துப் போர்ததிக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தான். போர்த்திருந்த போர்வையை விலக்கி விட்டு பார்த்தால் சம்ரித் உடல் அனலா கொதித்துக் கொண்டிருந்தது. அது இல்லாமல் “ம்மா… ம்மா… “ என்று அனத்திக் கொண்டிருந்தான்.

உடனே விமலா”டார்லிங்… டார்லிங்…” பதறியடித்துக் கொண்டு ஈஸ்வரை கூட்டி வர ஓடினாள்.ஈஸ்வர் கீழே ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

அப்படியே படித்துக் கொண்டிருந்த பேப்பரை போட்டு விட்டு,“யாருக்கு என்னாச்சு… அது முதல்ல சொல்லுமா…” என்றார்.

“நம்ம சம்ரித்துக்கு தான் ஃபீவர் மாதிரி இருக்கு… உடம்பு நடுங்கி அனத்திட்டு இருக்கான்…”

“பதட்டப்படாதே… வா…” என்று முன்னால் சென்றார்.

விமலா ஈஸ்வர் பின்னாலேயே சென்றார். இருவரும் உள்ளே வரும் போதே சம்ரித் உடல் தூக்கி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. ஈஸ்வர் அருகில் வந்து நெற்றி கழுத்தில் எல்லாம் கை வைத்துப் பார்த்தார். உடம்பு நெருப்பாய் கொதித்தது.

ஈஸ்வர் விரைவாக சென்று மெடிக்கல் கிட் எடுத்து வந்து வெப்பநிலை அளவைப் பார்த்தார். அது நூத்திப் பத்து என காண்பித்தது. ‘என்ன… இப்படி உடம்பு கொதிக்குது…’ என நினைத்து, வெப்பமானி கருவி விமலாவிடம் காட்டினார்.

அதைப் பார்த்ததும் விமலா அதிர்ந்து,”என்னங்க… ஹை ஃபீவரா இருக்குது… இப்ப என்ன பண்றது…” எனக் கேட்டாள்.

“இரு… இரு… மெடிஷன் கொடுத்துப பார்க்கலாம்… அதுல ஃபீவர் குறைலன்னா… வேற ஏதாவது செய்யலாம்… கொஞ்சம் கஞ்சி காய்ச்சி கொண்டு வா… அத கொடுத்தது அப்புறம் மெடிஷன் கொடுக்கலாம்.” என்றார்.

விமலா வேக வேகமாகச் சென்று கஞ்சி தயாரித்துக் கொண்டு வந்து தன் கையால் புகட்டினார். பிறகு ஈஸ்வர் மாத்திரை கொடுத்து அவன் தூங்கும் அவரை இருவரும் அருகில் இருந்தார்கள்.

இரவெல்லாம் முழித்திருந்ததுக்கும் சேத்தி பகலில் தூங்கினான்.தூங்கி எழுந்தும் காய்ச்சல் குறையவேயில்லை.

அங்கே அம்ரீதா வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். உதட்டோடு உதடு வைத்து கிஸ் கொடுத்து அப்புறம் ஷோரும் ஆட்களை அழைத்து இந்த பைக்க அம்ரீ வீட்டில் கொண்டு நிறுத்தச் சொல்லிட்டு தான் போனான்.

‘இதுல போலாமா… இல்ல வேண்டாமா…’ ஒரு நொடி தான் நினைத்தாள். ‘சேச்சே… வேண்டாம்…’ என்று நினைத்துக் கொண்டு பஸ் பிடிக்க வேகமாக ஓடினாள்.

வழக்கம் போல இவள் போகும் பஸ் இவளை விட்டுட்டு சென்றுவிட்டது. அடுத்த பஸ்ஸைப் பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தாள். சம்ரித் இன்று அலுவலகத்துக்கு வரவில்லை. விசாரித்து அறிந்துக் கொண்டதில் அவனுக்கு தீவிர காய்ச்சல் என அலுவலகத்தில் உள்ளவர்கள் அறிந்துக் கொண்டனர்.

இதை அம்ரீதா காதில் கேட்டதும், ‘ஏன்னு தெரியலயே… சம்ரித்துக்கு உடம்பு எப்படி இருக்குதோ… அவனை பார்க்கனும் போல இருக்குது… அவனை பார்க்கனும்னா வீட்டுக்கு தான் போகனும்… நா மட்டும் எப்படி தனியா போயி பார்ப்பது…’ என பலவாறு நினைத்துத் துடியாய் துடித்துப் போனாள். அவளால் அலுவலகத்தில் இருப்புக் கொள்ளவில்லை.அம்ரீதா அன்று முழுவதும் அலுவலகத்தில் ஒரு வேலையும் செய்யாமல் பித்துப் பிடித்ததுப் போய் இருந்தாள். வீட்டிற்கு வந்தும் அதே கவலையுடன் இருந்தாள்

அவள் சித்தி கூட,”அம்ரீ ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறே…” எனக் கேட்டாள்.

அதற்கு வருத்ததுடன்,”சம்ரிக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் செஞ்சிருக்காங்க சித்தி…” சொன்னாள்.

அதற்கு யசோ,”கவலைப்படாதே… அவர் உடம்புக்கு ஒன்னும் சீரியஸாக இருக்காது.” என அவளைத் தேற்றினார்.

இருந்தும் அவள் மனது சமாதானம் ஆக மறுத்தது. அவள் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று பிசைந்துக் கொண்டிருந்தது.

சம்ரித்துக்கு உடல் சூடு குறையவே இல்லை நேரமாக ஆக அதிகமாயிட்டு போய் கொண்டிருந்தது. ஈஸ்வர் எவ்வளவு முயன்றுப் பார்த்தும் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை. விடிய விடிய சம்ரித் உடம்பு சூடு அதிகமாக வந்து கைகால் எல்லாம் இழுத்து ஜன்னி கண்டது. உடனே சம்ரித்தை தீவிரசீகிச்சைப்பிரிவுல சேர்க்கப்பட்டான். அந்த விஷயம் சொந்தக்காரங்களுக்கு காட்டுத்தீ போல பரவியது.

இஷாராவுக்கும் அவள் பெற்றோரும் உடனே பார்க்க வந்தார்கள். இஷாராவும் அவள் தந்தையும் ஐ.சி.யூவுக்கு வெளியே நின்றுப் பதறிப் போனார்கள். லதாவோ யாருக்கு வந்த விருந்து என இருந்தார். அம்ரீதா இருந்த காலனி முழுவதும் சம்ரித் ஐ.சி.யூவுல அனுமதிக்கப்படிருந்தான் என்ற செய்தி பரவியது. இதைக் கேள்விப்பட்டதில் இருந்து அம்ரீதாவுக்கு வீட்டில் இருக்க இருப்புக் கொள்ளவில்லை.

உடனே அவனைப் பார்க்க போக வேண்டும் என கால்கள் பரபரத்தது. என்ன செய்யலாம் என யோசித்து சுற்றி முற்றியும் பார்த்தாள். அப்போது வாசலில் நிற்கும் பைக் கண்ணில் பட்டது. எதையும் யோசிக்காமல் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தாள். அங்கே போய் சம்ரித்தை பார்த்தவுடன் கைகால் நடுங்கியது. ஒன்றும் பேச முடியாமல் போக, கடவுள் நம்பிக்கை இல்லாதவள் நேராக கோவிலுக்கு சென்று கடவுள் முன் சரணடைந்தாள். ஒரு தூண் அருகே அமர்ந்துக் கொண்டு சம்ரித்துக்காக மனம் உருக வேண்டினாள். கண்களில் அருவியாக நீர் கொட்டியது. தந்தை இறப்புக்கு கூட கண்ணீர் விடாமல் இறுக்கமாக இருந்தவள் சம்ரித் மேல் எந்த அளவுக்கு காதல் இருந்தால் கண்களில் கண்ணீர் வரும்…

அம்ரீதாவின் வேண்டுதலுக்கு பலன் இருந்தது. சம்ரித்தின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் இருந்தது. அவன் உடல்நிலை தேறி வருகிறது என்ற செய்தி அவள் காதுக்கு எட்டியது. அப்போது தான் அவளுக்கு நிம்மதியானாள். அவள் எழுந்து கடவுளை வணங்கிட்டு அவனுக்கு பிரசாதம் வாங்கிக் கொண்டுப் போனாள். அப்போது அந்த அறையில் யாரும் இல்லை. அம்ரீதா சம்ரித்தைப் பார்த்து நெற்றியில் விபூதி பூசி விடும் நேரம் அவள் கைப்பட்டு கண் விழித்தாள்.

சம்ரித் அம்ரீதாவைப் பார்த்து,”அம்ரீ… நீயா… கடைசியில் என்னய பார்க்க வந்துடியா…” என காய்ச்சல் கண்ட நிலையில் ஏதோயதோ பிதற்றினான்.

அவளும்,”நா வந்துட்டேன்… உங்கள பார்க்க ஓடியோடி வந்துட்டேன்…” என கண்களில் ஆனந்தக் கண்ணீரோடும் உதட்டில் புன்னகையோடும் உண்மையைச் சொன்னாள்.

“ஐ லவ் யூ அம்ரீ… ஐ லவ் யூ அம்ரீ…” என நான்கு நாளாக மனதில் அடைத்து வைத்திருந்த காதலை போட்டு உடைத்தான்.

அவன் அருகில் அமர்ந்து,”ஐ டூ லவ் யூ சம்ரித்…” என இவ்வளவு நாட்களாக போட்டு புதைத்து வைத்திருந்த காதலை போட்டு உடைத்தாள்.

இருவரும் காதலைப் பரிமாறிக் கொண்டு கட்டியணைத்தனர். இருவருக்கும் அந்த அணைப்பு அவசியமாகிற்று. எவ்வளவு நேரம் இவர்கள் இந்த மாதிரி இருந்தார்களோ… அவர்களுக்கே தெரியவில்லை… இவர்கள் நெருக்கத்தை கலைக்கும் விதமாக கதவு தட்டும் ஓசைக் கேட்டு அவசரமாக அவசரமாகப் பிரிந்தார்கள். நர்ஸ் தான் உள்ளே வந்தார்.

“இந்த டைம்ல ஒரு இஞ்செக்‌ஷன் போடனும்… திரும்பி இடுப்பை காமிங்க…” என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

இருவரும் திரு திருவென முழித்தார்கள். உடனே வேகமாக அம்ரீதா வெட்கப்பட்டு திரும்பி நின்றுக் கொண்டாள். அவள் திரும்பி நின்றதைப் பார்த்துக் கொண்டே ஊசிப் போட்டுக் கொண்டான். அந்த நர்ஸ் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார். பிறகு ஒருவர் முகத்தைப் பார்க்கவே சங்கடப்பட்டு தலைக் குனிந்து அமர்ந்திருந்தனர்.

நேரமாகவது தெரிந்து அம்ரீதா தான்,”நேரமாகுது நா கிளம்பறேன்…” என சொல்லிக் கொண்டு கிளம்ப ஆயுத்தமானாள். அவன் சரி என்று தலையாட்டவும் அவள் கிளம்பினாள்.

அம்ரீதா விசிலடித்துக் கொண்டு மிகவும் சந்தோஷமான மனநிலையில் வீட்டிற்கு வந்தாள். அவள் நுழைந்தவுடன் கருணாகரன்,”என்னம்மா… விசில் எல்லாம் பலமாக இருக்கு… என்ன இவ்வளவு ஹாப்பியா இருக்க… கொஞ்சம் சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்ல…” அவருக்கு அவளோட காதலைப் பற்றி தெரியாது இல்ல… அதனால் அவ்வாறு கேட்டார்.

என்ன சொல்வது என தெரியாமல்,”அது வந்து சித்தப்பா… அது வந்து…” என இழுத்தாள்.

“அது வந்து… எது வந்து… என சொல்லு அம்ரீ” எனக் கேட்டார்.

அவர் கேட்க கேட்க… இவள் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கும் போது, யசோதா உதவிக்கு வந்தார்.

“என்ன அம்ரீ… சித்தப்பா தான் கேட்கறாங்கல… ப்ரண்ட் எங்கெஜ்மெண்ட் அங்க தான் நாள் பூரா இருந்துட்டு வரேன் சொல்ல வேண்டியது தானா…” என சொன்னாள்.

யசோதா சொல்லிக் கொடுத்தப்படியே இவளும்,”ஆமாம் சித்தப்பா… என் ப்ரண்ட்கு எங்கெஜ்மெண்ட் அதுக்கு போயிருந்தேன்.” என சமாளிப்பாக…

உடனே கருணாகரன்,”யார் அந்த ப்ரண்ட்… எனக்கு தெரியாமல் இருக்காதே…” கேட்டார்.

என்ன சொல்வது என தெரியாமல் மீண்டும் முழிக்க, இப்பவும் யசோ தான்,”கருணாஸ்… அவ அந்த அநாதை பொண்ணு… அவ நீங்க அதிகம் பார்த்தில்ல… அவ எங்கெஜ்மெண்ட் போய் கூட இருந்து எல்லா முடிஞ்சது அப்பறம் வர்றா… களைச்சு போயி வர்றவள…. இப்படி நிற்க வச்சுட்டு தொணதொணன்னு கேள்வி கேட்டா எப்படி… உங்களுக்கு ஒரு நியாயம் வேண்டாமா…” என்று கேட்டு போ என கை அசைத்து அவளை கருணாகரனிடம் காப்பாற்றி அனுப்பி வைத்தார்.

அவரும் நமக்கு தெரியாத யார் அந்த ப்ரண்ட் என யோசிக்க ஆரம்பித்து, என்ன யோசித்தும் ஞாபகம் வராமல் போக… கடைசியில் மண்டையை பிச்சுக்காத குறை தான்…

சமையல் அறைக்கு வந்த யசோதாவை கட்டி அணைத்து,”சூப்பர் சித்தி… என்னய சித்தப்பாகிட்ட இருந்துட்டு காப்பாத்திட்டிங்க… ரொம்ப ரொம்ப தேங்கஸ்…” என கூறினாள்.

யசோதா“இதுக்கெல்லாம் தேங்கஸ் சொல்வாங்க… இன்னும் சின்ன புள்ளயாட்டம் இருக்க… போ போயி ஆகுற வேலய பாரு…” என சொல்லி அவள் அறைக்கு அனுப்பினார். அவள் நிம்மதியுடன்அறைக்கு சென்றாள்.

அம்ரீதா யாரும் இல்லாத நேரத்தில் போன் செய்து விட்டு சம்ரித்தைப் பார்க்க செல்வாள். இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் விளையாட்டுக்கு சம்ரித் அம்ரீதாவைப் பார்த்து,”உன்னய விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன செய்வ…” எனக் கேட்டான்.

“அப்படி நடந்திடுமா… நான் நடக்கவிட்டுவேனா…” எனரௌத்திரமாகக் கேட்டாள்.

“நீ என்ன பண்ணுவ… நா முதலாளி… நீ ஆப்டர்ஆல் என்கிட்ட சம்பளம் வாங்கற தொழிலாளி…”

“தொழிலாளினா என்ன… நீங்க செய்யற அநியாயத்த பார்த்துகிட்டு சும்மா இருப்பேனா…” என பொங்கி எழுந்தாள்.

“பார்த்துகிட்டு சும்மா தான் இருக்கமுடியும்… வேற என்ன பண்ணமுடியும்…” இவனும் பதிலுக்கு வம்பு இழுத்தான்.

“நா என்ன செய்வேனா… எப்படி கல்யாணம் நடந்திடும் பார்க்கறேன்…” என ஆவேசமாகக் கேட்டாள்.

“நடந்துட்டா… நீ என்ன செய்வ…” கண்களில் சிரிப்போடுக் கேட்டான். அவளுக்கு இருந்த கோபத்தில் அதை கவனிக்கவில்லை.

“முகூர்த்தம் நடக்கற நேரத்தில் வந்து போராட்டம் பண்ணுவேன்…” என்றாள்.

“எனக்கு ஆள்பலமிருக்கு… அங்க கூட்டத்தில் வந்து நீ என்ன செய்வ…”

“ஆள்பலமிருந்தா என்ன… அதுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்….” வீரவசனம் பேசினாள். அவளை விட்டால் அவனை அடித்துவிடுவாள் போல இருந்தது.

“கூல்… கூல்… சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். அதுக்கு இவ்வளவு கோபப்படுவியா…”

“அதுக்கு எதுஎதில விளையாடுவீங்கனு இல்ல…” என திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.

“அதுக்குள்ள கோபமா…”

“பின்னே நீங்க சொன்னது சாதரணமா விஷயமா என்ன…”

“சாதாரணமான விஷயமில்ல… அதுக்குன முகூர்த்த நேரத்தில் போராட்டம் எல்லாம் செய்வேன்னு சொன்ன பாரு… இதெல்லாம் உனக்கு டூம்மச்சா தெரியல…”

“பின்னே நீங்க உண்மையாலும் சொன்னிங்க நினைச்சேன்…. எனக்கு என்ன தெரியும்… அது விளையாட்டுக்கு சொன்னது…”

“ஓகே… லீவ்இட்…” என்றான்.

கொஞ்ச நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். “உங்ககிட்ட பேசியதுனால நேரம் போனதே தெரியல…”

“அந்த கொஞ்ச நேரமும் சண்ட தான் போட்டு இருந்த…”

“சார்… ஒரு சின்ன திருத்தம்… நானில்ல… நாம…” என விளக்கினாள்.

“கொஞ்சம் மாத்தி சொல்லிட்டேன்… அதுக்கு மறுபடியும் சண்டைக்கு வருவியா…”

“சண்டைக்கு எல்லாம் வரல… உங்களுக்கு கொஞ்சம் புளி போட்டு விளக்கினேன்…”

“நீ புளி போட்டு விளக்கிட்டாலும்… விளங்கிடும்…” என நொடித்துக் கொண்டான்.

“மறுபடியும் ஆரம்பிக்காதிங்க… ஓகே… பைபை… ஸீ யூ லேட்டர்…” சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவள் போன பிறகும் அவளோடு சண்டைப் போட்டதை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். விளையாட்டுக்கு சொன்னதை உண்மையாலும் சொல்றமோனு நினைச்சுகிட்டு பெரிதாக எண்ணி அவனோடு சண்டையை வளர்க்கிறா… என எண்ணி எண்ணியே தனக்குள் நகைத்தான்.

சம்ரித் தாத்தா ஆதிகேசவன் மாதாந்திர செக்கப்புக்காக அங்கேயே மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு நடுவில் இவர்கள் செல்லச்சண்டை நடந்தது. இதைக் கேள்விப்பட்டு இவர்களைக் கண்காணிக்க தனக்கு நம்பகமான வேலைக்காரையை அனுப்பி வைத்தார். இந்த கூத்துல் இவர்கள் இதையெல்லாம் கவனிக்கவில்லை.

வேலைக்காரன் சோனு இதையெல்லாம் பார்த்து விட்டு வந்து,”சாப், அவங்க ரெண்டு பேரும் காதலிகிறாங்க போல இருக்குது…” என்று கூறி அவர்களுள் நடந்த செல்லச் சண்டைகளையும் சொல்லிச் சிரித்தான்.ஆதிகேசவனும் சிரித்தார்.

அவர் யாரையும் கலந்தோசிக்காமல் சட்டென முடிவு எடுத்து சமயம் வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என முடிவு செய்தார். சோனுக்கு மட்டும்,”நீ எதையும் பார்க்கல… என்கிட்ட எதையம் சொல்ல… என்ன புரிஞ்சுதா…” அவன்கிட்ட சொன்னார். ஏதோ புரிந்தது போல இருக்கவும் பேசாமல் தலையாட்டினான்.

இதை அறியாமல் மீண்டும் இருவருக்கும் காதல் தொடர்ந்தது.

வஞ்சியவள் காதலை கண்டு மயங்கி…

கள்ளனும் அவள் மேல் காதல் கொள்கிறான்.

இருவரும் கடினப்பட்டு காதலை பரிமாற…

அதற்குள் இருவருக்கும் நடுவில்…

செல்ல சண்டை வர…

இதை அறியாமலே ஒற்றர் ஒருவர் சொல்ல…

மூத்தோர் இருவருக்கும் மணமுடிக்க…

திட்டம் தீட்டுகிறார்.

5 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

4 – தீக்கு தென்றலோடு மோகம்

4 – தீக்கு தென்றலோடு மோகம்!

எபி – 4

அம்ரீதா தன் கனவோடு பயணித்திருக்க…. இஷாரா தன் எடையைக் குறைக்கும் பயிற்சியில் தீவிரமாக இருக்க… இதை எதையும் பற்றி கவலைப்படாமல் சம்ரித் தன் அலுவலகத்தில் கவனமாக இருக்க… மூவரும் அவரவர் வேலையில் ஈடுப்பட்டாக இருக்க… காலம் இவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டது.

அம்ரீதா அலுவலகம் முடிந்து வந்தால் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பாள். இதை தினசரி வழக்கமாக வைத்திருப்பாள். டியூசன் எடுத்துக் கொண்டிருக்கும் போது எப்பவும் போனை சார்ஜ் போட்டு வைத்திருப்பாள்.

அன்றும் அதே போல போட்டு வைத்திருந்த போன் சிணுங்கியது. ஏதோ விளம்பரக் கால் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் சிணுங்கவும் போய் எடுத்துப் பார்த்தாள். போன் திரையில் சம்ரித் எனக் காட்டியது. ‘இந்த நேரத்தில் இவன் எதுக்கு போன் கூப்பிடுகிறான்…’ என நினைத்தாள்.

அது மறுபடியும் சிணுங்கவும்,”ஹலோ… என்ன சம்ரித் இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்கறிங்க…” என்றாள்.

“இல்ல… எனக்கு ஒரு டவுட்…”

“எந்த டவுட்டா இருந்தாலும் நாளைக்கு ஆபிஸ்ல கேட்கலாமே…”

“என்ன பேசவிட்டா தானே… நா என்னனு கேட்பறது புரியும்…”

“ஹூம்… சொல்லுங்க…”

‘அப்படி வா வழிக்கு…’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, அவன் ஏதோயதோ பேசிக் கொண்டிருந்தான். சத்தியமாக அலுவலக வேலைப் பற்றி பேசவில்லை. இயல்பாக கொஞ்சம் நட்போடு பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள்,”க்கா… க்கா…” டியூசன் மாணாக்கர்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

“வரேன்… வரேன்…” சொல்லிக் கொண்டே இருந்தாள்.

இவர்கள் கூப்பிடுவதையும் “இவள் வருகிறேன்…” என்று சொல்வதையும் கேட்டும் அவன் பேசிக் கொண்டிருந்தான்.

‘இவன் எப்ப போனை வைப்பான்…’ எனத்தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருந்தும் போனை அவன் வைக்க மாதிரி தெரியவில்லை.

பொறுத்தும் போதும் என பொங்கி எழுந்துவிட்டாள். “டியூசன் பிள்ளங்க கூப்பிடறாங்க… நா போயி அவங்கள பார்க்கனும்…” என போனை துண்டிக்கப் போனாள்.

“இரு… இரு.. நாஇந்த டைம் பேசினால் உனக்கு டிஸ்பர்ன்ஸா இருக்கும்…தினமும் நாம ஏன் நைட் பத்து மணிக்கு போன் பேசிக்கூடாது…” எனக் கேட்டான்.

‘தினமும் நைட்லயா…’ என யோசிக்கவும், சம்ரித்,”ஹலோ… ஹலோ…” என திரும்ப திரும்ப அழைக்கவும்,

“ம்ம்ம்…லைன்ல தான் இருக்கேன்…” கொஞ்சம் தயங்கி,”ஓ… பேசலாமே…” என பர்மிஷன் கொடுத்தாள்.

பிறகு தான் இழுத்த மூச்சை,”ஷ்ஷ்… அப்படா…” விட்டுட்டு “உன்கிட்ட இருந்து பர்மிஷன் வாங்கறதுக்குள் எனக்கு உயிர் போயி உயிர் வந்தது…” என சொல்லி முடிக்கும் முன்,”க்கா.. க்கா…” மீண்டும் மாணவர்கள் அழைத்தனர்.

“இதோ வரேன்…” சொல்லி விட்டு,”ஓகே… நா போன வச்சிடறேன்…” கூறி அழைப்பைத் துண்டித்தாள்.

‘அப்பாடி… எப்படியோ பர்மிஷன் கொடுத்தாளே…’ என நினைத்துச் சிரித்தான்.

அம்ரீதா,’தினமும் இவன் என்கிட்ட என்ன பேசுவான்…’ என நினைத்தாள்.

டியூசன் மாணாக்கர்களுக்கு பாடம் நடத்த நடத்தவே தனக்குள் கற்பனையில் மிதந்தாள்.அவர்களை அனுப்பி விட்டு இரவுணவு முடித்து விட்டு நேரமாக படுக்கையறைக்குள் புகுந்து கதவை அடைத்து சம்ரித் போனுக்காக காத்திருக்கலனாள்.

பத்து பதினொன்றானது அவன் போன் செய்யவேல்லை. காத்திருந்து காத்திருந்து ஒரு கட்டத்தில் உறங்கிவிட்டாள்.

சம்ரித் இப்பதான் போன் பண்ணினனும் நினைத்து விட்டுட்டான்.

அம்ரீத் இரவில் தமாதமாக தூங்கி நன்கு விடிந்ததும் எழுந்தாள். பிறகு காலை கடன்கள் முடித்து விட்டு நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வந்த பின்பு சித்திக்கு சமையலுல் உதவி செய்து விட்டு குளிச்சு அலுவலகம் செல்ல தயாராகி வந்தாள்.

வந்தவள் காலையுணவு முடித்து விட்டு மதியத்திற்கு சித்தி போட்டு வைத்திருந்தி டிபன்பாக்ஸை எடுத்து தனது பேகில் வைத்துக் கொண்டு,”நா ஆபிஸ்கு போயிட்டு வரேன்… ஏற்கனவே எனக்கு லேட்டாகிவிட்டது… ஓகே பை சித்தி…” சொல்லிக் கொண்டு அவசரமாக கிளம்பிவிட்டாள்.

பஸ்ஸைப் பிடிக்க அரக்க பறக்க போனான். அவள் வழக்கமாக செல்லும் பஸ் சென்றுவிட்டது. அடுத்த வந்த பஸ்ஸில் ஏறி அலுவலுலகத்துக்கு மிகவும் தமாதாக வந்தாள்.

அவசரம் அவசரமாக கிளம்பி வந்தில் மிகவும் சோர்வாகத் தெரிந்தாள். அப்படியே சம்ரித் முன்னால் போய் நின்றாள். அவன் குனிந்து ஏதோ பைலை மும்மரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“எக்ஸ்கூமி சார்…” கூப்பிட்டதும் நிமிர்ந்துப் பார்த்தான்.

கண்கள் இரண்டும் சிவந்து சரியாக உறங்காமல் முகம் சற்று வீக்கமாக இருந்தது. அவளைப் பார்த்தவுடன் பதறிவிட்டான்.

“அச்சச்சோ… இவ்வளவு ரெஸ்ட் லெஸாக இருக்க…” எனக் கேட்டான்.

‘ம்கூம் எல்லாம் இவனால் தான்… ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறத பாரு…’ என்று மனதில் திட்டினாள்.

“ஹீ… ஹீ…” என இளித்துக் கொண்டு,”எல்லாம் நன்மையும் உங்களையே சாரும்…” என்று தூய தமிழில் மொழிந்தாள்.

“என்னமோ சொல்றினு புரியுது… ஆனால் ஒன்னுமே விளங்கவேமாட்டேங்குது…” என்று சொன்னான்.

‘ஹாஹா… சுத்தம் ஒன்னும் புரியல…நல்லவேளை நா தப்பிச்சேன்…’ என்று மனதில் நினைத்தாள்.

அவள் ஏதோ சிந்தனையில் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டு மேஜையைத் தட்டி,”என்ன யோசனை…” கேட்டான்.

“ஒன்னுமில்ல…”

“ஒன்னுமேயில்லயா… ஆர் யூ சூயூர்…” என திரும்ப திரும்ப கேட்டான்.

“ஒன்னுமேயில்லனு சொன்னால் ஏன் புரிஞ்சுகவேமாட்டேங்குறிங்க…”

“என்னவோ சொல்ற… நானும் இந்த டாபிக் இதோட விடறேன்.”

“சரி நா போயி என் வேலய பார்க்கட்டுமா…”

“சரி சரி… நீ போயி உன் வேலய பாரு… இட்ஸ் கெட்டிங் லேட்…” என சொல்லவும் தான் எதுக்கு வந்தோம் என்பதை மறந்து விட்டு ஏதோஏதோ பேசிக் கொண்டிருக்கிறோம் என உணர்ந்தாள்.

“ஆமாம் சார்… நா லேட்டாக வந்ததுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன். சாரி சார்… என்னய மன்னிக்கவும்…”

“பரவாயில்ல… இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சு…” என சொல்லித் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

சாதரணமாக தோளைத் தட்டிக் கொடுத்தது, காதல் கொண்ட மனசு பெரிதாக எண்ணிக் கொண்டது. அவள் தட்டிக் கொடுத்த தோளைப் பார்த்தபடியே கனவில் மிதந்தபடியே நடந்தாள்.

கனவில் வந்தவளை வழி மறித்து ஒரு லேபர்,”மேம்… இந்த ஸ்குருவ இந்த மெஷினுக்கு மாட்டலமா…”

கனவிலிருந்து விழித்துக் கொண்ட அம்ரிதா,”ஹா… என்ன கேட்டிங்க…” என்றாள்.

”இல்ல… இந்த ஸ்குருவ இந்த மெஷினுக்கு மாட்டலமா…” என்று அந்த லேபர் அதே கேள்வியை திரும்பக் கேட்டான்.

“ஓ… தாரளமாமாட்டலாம்…” என சொன்னாள்.

பிறகு தன் கேபினுக்கு வந்தவள்,’ச்சேய் ஆபிஸ்ல எப்படி நடந்துக்கிட்டோம்…” என்று தன் தலையில் தானே கொட்டிக் கொண்டு அலுவலகம் முடியும் வரைக்கு வேலையைப் பார்த்தாள்.

நேற்று மாதிரி இல்லாமல் இன்று இரவு பத்துமணிக்கு சம்ரித் அம்ரீதாவுக்கு போன் பண்ணினான்.

அம்ரீதாவோ பண்ணுவானோ… பண்ணமாட்டனோ… தன் மொபலையைப் பார்த்திருந்தாள். சம்ரித் அழைக்கிறான் என்று திரையில் வரவும்,”யாஹூ…” என கைகளை உயர்த்திக் கத்தினாள்.

அப்புறம் எதுவும் நடக்காத்துப் போல மிகவும் சாவகாசமாக போனை காதுக்கு கொடுத்து,”ஹலோ… சம்ரித் என்ன விஷயம் சொல்லுங்க…” என்றாள்.

“என் போனுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தியா…” என்றுக் கேட்டான்.

“ச்சேச்ச… அப்படியெல்லாம் கிடையாதே…” என மனசார பொய்யுரைத்தாள்.

உடனே சம்ரித் முகம் சோம்பிவிட்டது. தன் காலை எதிர்ப்பார்த்து காத்திட்டு இருப்பாள் என நினைத்திருக்க… சட்டென இப்படி சொல்லிவிட்டாளே என வருத்தம் கொண்டான்.

தன் வருத்தம் குரலில் தெரியாமல் இருக்க வெகு பிரயத்தனப்பட்டு தொண்டையை செருமிக் கொண்டான்.

“ஹலோ… சம்ரித் சளி ஏதாவது பிடிச்சகிச்சா… இல்ல தொண்டைய செருமிட்டு இருக்கிங்களே…” ஒன்றும் அறியாதவளாட்டும் கேட்டாள்.

“யெஸ்… கொஞ்சம் கோல்ட் பிடிச்சகிச்சா…” என இவனும் பொய் மொழிந்தான்.

“சரி… போன வச்சுட்டு நேரமாய் போயி தூங்குங்க…” என இவளுக்கும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.

சம்ரித்தும் இன்னும் கொஞ்சம் பேசினால் பரவாயில்ல என நினைத்து,”கோல்ட் தானே… நோ ப்ராப்ளம்… இட்ஸ் ஓகே… லெட்ஸ் வீ டாக்…”

“யூ ஹவ் நோ ப்ராப்ளம்… ஓகே வீ வில் டாக்…” என்றாள்.

“அப்பறம் ஆபிஸ் இருந்து வந்த என்ன செஞ்சிட்டு இருந்தாய்…”

“ஆபிஸ்ல இருந்து வந்தவுடன் ப்ரஸ்ஆப் ஆகிவிட்டு சித்தி சோள அடை செஞ்சு கொடுத்தாங்க… அத சாப்பிட்டு விட்டு டியூசன் படிக்க பசங்க வந்தாங்க… அவங்களுக்கு டியூசன் எடுத்து முடிச்சிட்டு அவங்கள அனுப்பி வச்சிட்டு டிபனுக்கு சித்திக்கு ஹெல்ப் பண்ணிட்டு சாப்பிட்டு பெட்கு வந்திட்டேன்…”

“அப்புறம்…” என்றான்.

“அப்புறம் விழுப்புரம்…” என்று சிரிக்காமல் சொன்னாள்.

“விழுப்புரமா… ஒன்னும் புரியலையே…” என்று முழித்தான்.

“ஐயோ… மட்டிமட்டி…”என சொல்லி விட்டு தலையில் அடித்துக் கொண்டாள்.

மட்டு என்றதும் சுருக்கென கோபம் வந்தது. அந்த கோபம் குறையாமல்,”யாரைப் பார்த்து மட்டிங்கறங்க… நா படிக்கும் போதே ஸ்கூல், காலேஜ் எல்லாத்திலயும் டாப்பர் தெரிஞ்சுக்கோ…” படபடவென பொரிந்து தள்ளிவிட்டான்.

“ஹாஹா… ஸ்கூல், காலேஜ் எல்லாத்திலயும் டாப்பரா இருக்கறவருக்கு இந்த ஜோக் கூட தெரியலனு நினைக்கும் போது தான் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…” என கூறி விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

‘இது ஜோக்கா… நமக்கு இது கூட தெரிஞ்சுக்காம இருந்திருக்கோமே…’ என நினைத்து அசடு வழிந்தான்.

அவன் அசடு வழிந்ததை நேரில் பார்த்த மாதிரி,”என்ன சார்… அசடு வழியறிங்களா…” கேட்டாள்.

‘குப்புறம் விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலனு சொல்வாங்களே…’ அந்த மாதிரி,”சேச்சே… அப்படியெல்லாம் கிடையாதே…” வீம்பாக சொன்னான்.

“காட் ப்ராமிஸா… நீங்க சொன்னா நம்பி தானே ஆகனும்…” போனால் போகுதுனு நம்பற மாதிரி நடித்தாள்.

“போதும் போதும்… நீ என் காலை வாரினது எல்லாம் போதும்…” என கூறி விட்டு தானும் சிரித்தான்.

இருவரும் அடக்கமாட்டாமல் சிரித்தார்கள். பிறகு போனில் மணியைப் பார்த்த அம்ரீதா,”சம்ரித் மிட்நைட்டாகிவிட்டது. பேசினது போதும் வச்சிடலாமே… குட்நைட்…” என்று கூறி விட்டு சம்ரித் மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் போனை வைத்துவிட்டாள்.

சம்ரித் இன்னும் பேசனும் ஆசையாக இருந்தாலும் அவனும் போனை வைத்துவிட்டான்.

அம்ரீதா போனை வைத்துவிட்டால், அவள் கனவில்,’டேய்… என் கலாபக் காதலா… எனக்கு உன்கிட்டயுனும்னு பேசனும்னு தான் ஆசை… ஆனால் என்ன பண்றது…ஆச இருக்குது நாடாள ஆனா அம்ச இருக்குது கழுத மேய்க்கனு ஒரு பழமொழி இருக்குதுல்ல…’ என நினைத்து அடிவயிற்றில் இருந்து மூச்சை இழுத்துவிட்டாள்.

அதே போல எவ்வளவு நேரம் ஏதோஏதோ நினைத்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமலயே தூக்கத்திற்கு கண்கள் சொருக ஒரு வழியாக தூங்கிவிட்டாள்.

இன்றும் அவசரம் அவசரமாக எழுந்து மணியைப் பார்த்தாள். கடிகாரத்தில் ஏழு மணி என காண்பித்தது. ‘இனியும் ப்ரஸாகி வாக்கிங் போக முடியாது. சித்திக்கு கிச்சன்ல கொஞ்சம் ஹெலப் பண்ணிட்டு ஆபிஸ் கிளம்ப தான் நேரம் சரியாக இருக்கும்…’ என்று நினைத்துக் கொண்டு தன் படுக்கை விரிப்பை சீர் செய்தாள்.

பிறகு தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். அதுவரைக்கும் யசோதா சமையலில் ஒரு கண்ணும் இவள் அறையில் ஒரு கண்ணும் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவ்வளவு நேரமாச்சு… இப்பவாவது எழுந்து வந்தேயா..இன்றைக்கு வாக்கிங் போகலயா…”

“இல்ல சித்தி… நல்லா தூங்கிட்டேன். அதனால் வாக்கிங் போகல…”

“நீ வாக்கிங் வேணுமானலும் போயிட்டு வா… நா கிரேவி பண்ணிட்டேன். இன்னும் ரொட்டி மட்டும் தான் செய்யனும்… அத நா பார்த்திக்கறேன்.”

“இல்ல சித்தி… இன் மேல் வாக்கிங் போக முடியாது. அதனால உங்களுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணிட்டு ஆபிஸ்கு கிளம்ப தான் நேரம் சரியாக இருக்கும்…” என்றாள்.

“அதுவும் கரெக்ட் தான்… வா வந்து வேலய பாரு…”

சித்தி சொல்லவும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். இருந்தும் வேலையை முடிக்கும் போது நேரமாகிவிட்டது.

அப்பவும் சித்தி,”அம்ரீ எல்லா ரொட்டியும் சுட்டெடுக்க இன்னும் ஹாப் நெவர் ஆகும். உனக்கு இப்பவே ஆபிஸ்கு டைமாகிடுச்சு பாரு… போயி குளித்துவிட்டு கிளம்பு…” என்றாள்.

“இருக்கட்டும் சித்தி… மீச்சத்த சுட்டு கொடுத்திட்டு போறேன்…”

“போ நா பார்த்துக்கேறன்…” அவள் சிற்றன்னை சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக செய்துக் கொடுத்து விட்டு தான் குளிக்கப் போனாள்.

எவ்வளவு வேகமாக கிளம்பியும் அவளால் அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு போய் சேர முடியவில்லை. இன்றும் தாமதமாகத் தான் போனாள். பையோ கிளாக்கில் தன் வரவை பதிவு பண்ணிவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தாள். சமரித் அலுவலகம் இன்னும் வரவில்லை. அதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என தன் அறைக்கு ஓடிவிட்டாள்.

பதினொன்றாகியும் சம்ரித் இன்னும் வரவில்லை என்றானதும் ‘ஏனோ இன்னும் வரவில்ல… என்னாச்சு தெரியல…’ அம்ரீதா கவலைக் கொண்டாள்.

சம்ரித்,”நா லேபர் ஆபிஸ் போயிட்டு தான் வருவேன்.” என சொல்லிச் சென்றதை அம்ரீதா மறந்துவிட்டாள்.

சம்ரித் திரும்பி வந்து,”அம்ரீ… நா லேபர் ஆபிஸ்கு போயிட்டு தான் வருவேன் என சொல்லி சென்றத மறந்துவிட்டாய் போல இருக்கு…” என ஞாபகப்படுத்தவும், அம்ரீதாவுக்கு நினைவு வந்தது.

“அச்சச்சோ… நா மறந்தே போனேன்…” என சொல்லி நுனி நாக்கைக் கடித்தாள்.

“நல்லா மறந்து போனே… போய் உன் ஒர்க்க பாரு…” என கூறி அனுப்பி வைத்தான்.

அலுவலகம் முடிந்து சம்ரித்திடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். வழக்கமாக அவன் அழைக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். நேரம் தவறாமல் போன் செய்து மணிக்கணக்கில் இருவரும் பேசினார்கள்.

தினம் போலவே அன்றும் தாமதமாக எழுந்து, சித்திக்கு உதவிட்டு அரக்க பறக்க கிளம்பினாள். அலுவலகத்துக்கு இவளுக்கு முன்னாலே சம்ரித் வந்துட்டான்.

அவனைப் பார்த்து,”குட்மார்னிங் சார்…” என்றாள்.

அவனும் பதிலுக்கு,”குட்மார்னிங்… வந்தே லேட் போய் ஒர்க்க பாரு…” என்றான்.

‘எப்படி தான் இவன் மட்டும் டைமுக்கு கிளம்பி ஆபிஸ்கு வரனோ…’ என்று நினைத்தாள்.

அலுவலக வேலை முடிந்தும் சம்ரித் அம்ரீதாவை அழைத்தான். அவள் எதுக்கு கூப்பிடுகிறான் என எண்ணியவாறே அவன் அறைக்குச் சென்றாள்.

“இன்றைக்கும் உனக்கு கால் பண்ணலமா… உனக்கு ஏதும் டிஸ்டர்பாக இல்லயா…”!

கேட்டவுடன் ஒத்துக் கொள்ள சங்கடப்பட்டு ஏதோ சொல்லிச் சமாளிக்கனும் என யோசித்தாள். உண்மையை சொல்லிடலமோ என்று கூட நினைத்தாள். அதை சொன்னால் போன் செய்யாமல் விட்டுவிடுவானோ… அவன் கூட பேசனும் மனம் நிறையாக ஆசை… இப்படி நிறைய நினைத்தாள் எதையும் அவன்கிட்ட சொல்லமுடியாமல் தவித்தாள்.

அம்ரீதா என்ன சொல்வது யோசிச்சுகிட்ட இருக்கும் போது அதுக்குள்ள சம்ரித்,”ஒரு கேள்வி தான் கேட்டேன். அதுக்கு பதில் சொல்ல இவ்வளவு யோசிக்கற… ஏன் உனக்கு இஷ்டமில்லயா…”

“ஐயோ… அப்படி எல்லாம் இல்ல…” உடனே மறுத்தாள்.

“வீட்ல ஏதாவது சொல்லவாங்களா.. .” எனக் கேட்டான்.

சித்திக்கு தெரியும் எப்படி சொல்வாள். என்ன கூறி சமாளிக்கலாம் என யோசித்தாள்.

“வீட்ல தான் திட்டினாங்களா… அது தெரியாமல் தினம் தினம் கால் செஞ்சு பேசியிருக்கேன் பாரு…” அவனா ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு அது தான் உண்மை எனப் பேசினான்.

‘கண்டதையும் நனைத்து மனச ஒலப்பிக் கொள்வானோ…’ என பயந்து,”இல்ல… உங்ககிட்ட பேசிட்டு தூங்கறதுக்கு லேட்டாகிடறதுனால… காலையில் எழுந்து சித்திக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணிட்டு, பிறகு ரெடியாயிட்டு வரதுக்குள்ள நா வழக்கமா போற பஸ் கிளம்பி போயிடுது… அடுத்த பஸ்கு வெயிட் பண்ணி ஏறி வரதுக்குள்ள ஆபிஸ் வர லேட்டாயிடுது…” என உண்மையைச் சொன்னாள்.

சம்ரித்கோ அம்ரீகு சர்ப்ரைஸாக லேடிஸ் பைக் வாங்கி கொடுக்கனும் ஆசை… இவன் மனசுக்குள் காதலோ… என்னவோ… தெரியவில்லை.

அடுத்த நாள் சம்ரித். போனில் அம்ரீதா,”வா வந்து பாரு… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வெயிட்டிங்…” என்றான்.

வாயு வேகமோ… புயல் வேகமோ… என அம்ரீதா ஓடி வந்தாள். மில் வாசலில் வந்துப் பார்த்து பிரமித்துப் போனாள். அங்கு அவள் வாங்க ஆசைப்பட்ட பைக்டோடு, ஷோரும் ஊழியர்கள் இருவர் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

“வா வந்து பாரு… உனக்கு தான்இந்த சர்ப்ரைஸ்… எப்படி இருக்குது இந்த பைக்…” எனக் கேட்டான்.

‘எனக்கா இந்த பைக்… இவன் வாங்கி கொடுப்பதா… பார்க்கிறவங்க எல்லாம் என்ன சொல்வார்கள்… சம்ரித்துக்கும் இவளுக்கும் தொடர்பு இருக்குதுனு தப்புத்தப்பாக பேசவாங்களோ…’ என பயந்து நடுங்கினாள்.

அதுவே அவளுக்கு கோபமாக மாறி விருட்டென்று திரும்பி போய் தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் கோபமாகப் போனதும் என்னவோ… ஏதோ… என பதறி அடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடினான். அந்த பதட்டத்தில் அவள் முன்னால் போய் நின்று,”ஏன் அம்ரீ உனக்கு பைக் கலர் பிடிக்கலயா… இல்ல இந்த மாடல் பிடிக்கலயா… என்னதான் பிடிக்கல… சொல்லு மாத்திக்கலாம்…” என்று வாஞ்சையாக்க் கேட்டான்.

“இந்த பைக்கே பிடிக்கலே…”

“இந்த மாடல் வேண்டாம்னு சொல்லு… வேற மாடல் வாங்கிகலாம்…”

அவனை முறைத்துக் கொண்டே,”எனக்கு நீங்க பைக் வாங்கி கொடுக்கறதே பிடிக்கல…” என்றாள்.

“ஏன் நா வாங்கி கொடுக்க கூடாத…” ஆத்திரத்துடன் கேட்டான்.

உடனே அவள் திரும்பி நின்று,”நீங்க வாங்கி கொடுத்து த நா ஓட்டிட்டு போனேன் வச்சிகங்கோ… இந்த ஊர்உலகம் ஒன்னுக்கு இரண்டா திரிச்சு பேசும்…”

இவனும் அவளுக்கு எதிர்ப்பக்கமா வந்து நின்றுக் கொண்டு,”என்ன பேசும்… பேசினால் பேசட்டுமே… நாம இந்த காதுல வாங்கி அந்த காதுல வாங்கி விட்டுகிட்டே போயிட்டே இருக்கனும்…” என்று எரிச்சலுடன் சொன்னான்.

“பேசினால் பேசட்டும் உங்கள மாதிரி கண்டுக்காமல் போக முடியாது.” இவளும் ஆத்திரத்துடன் கூறினாள்.

“கண்டுக்க வேண்டாம்னு சொல்ல… ஜஸ்ட் இக்னோர் பண்ணிட்டு தான் போ என சொல்றேன்.” கத்தினான்.

“எப்படி தான் இக்னோர் பண்ணிட்டு போக சொல்றிங்க… என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது.” இவளும் பதிலுக்கு கத்தினாள்.

இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போய் அவள் பேசும் வாயை அடைக்கும் வழி அறியாமல் அவள் உதட்டை இழுத்து பிடித்து உறிஞ்சினான். இவன் திடீரென அவன் உதட்டோடு உதடு வைத்து கிஸ் கொடுப்பான் என அறியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

சிலநொடிகள் கழித்து அவள் சிலை போன்று நிற்பதைக் கண்டு தன் தவறை உண்ர்ந்து தன் தலையில் அடித்து, பதறி,”சாரி, சாரி… தெரியாமல் பண்ணிட்டேன்.” விலகி நடந்தான்.

‘இரவில் போன் செய்தால் போனை எடுப்பதா… வேண்டாமா…’ என யோசித்தாள்.

சம்ரித்தும் அம்ரீதாவுக்கு போன் பண்ண மறந்துவிட்டு வேறு ஒரு கனவில் மிதந்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை சம்ரித்தும் காதலில் குதித்துவிட்டானோ… அது தான் கனவில் காணுக்கிறானோ… என்னவோ…

அவனோ… அவளோ… யார் முதலில் காதலை செப்புவது தயங்கினர்.

அவனோ… அவளோ… முதல் அடியை எடுத்து வைப்பது அஞ்சினர்.

பெண்ணவள் வெட்கம் கொண்டு சொல்லாமல் இருக்க…

ஆடவனோ தைரியம் கொண்டு காதலை சொல்ல தயாராக இருக்க…

காலம் இவர்களைப் பார்த்து சிரிக்க தயாராக இருந்தது.

4 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

தீக்கு தென்றலோடு மோகம் – 3

3 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 3 அம்ரீயும் சம்ரித்தும் நட்போடு தான் பழகினார்கள். ஆனால் அம்ரீ கொஞ்சமாக கொஞ்சம் சம்ரியை இரசிக்க ஆரம்பித்துவிட்டாள். அது தெரியாமல் சம்ரித் நட்பு மட்டும் பாராட்டினான்.சம்ரித் என்ன எது செய்தாலும் அம்ரீக்கு இரசித்தாள். இரசித்து இரசித்து காலம் போக, போக அது ஒருதலை காதலாகவே மாறிவிட்டது. ஆமாம் அம்ரீ சம்ரியை ஒருதலையாக காதலிக்கிறாள். ஒருநாள் சம்ரித் யார்கிட்டயோ போனில் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அம்ரீ அவனிடம் வேலையில்

தீக்கு தென்றலோடு மோகம் – 3 Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

2 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி 2 சம்ரித்,”மாம்… மாம்.. எனக்கு டிபன் எதுவும் வேண்டாம்.” ஹைப்ச்சில் கத்தினான். அதற்கு அவனுடைய அம்மா கிச்சனில் இருந்து,”இருடா… கொஞ்சம்… உனக்காக தான் அவசரம் அவசரமாக செஞ்சிட்ருக்கேன்.” என பதிலுக்குக் கத்தினார். “இல்லம்மா.. எனக்கு டைமாயிடுச்சு… நா தான் முதலாளி… நானே டைம்க்கு போகலனா… முதலாளிய லேட் வருகிறாரு… லேபர்ஸ்கு நாம டைம்க்கு போகனுமா என்னங்கற தாட் வந்திடும்…” என சொல்லிட்டு இருக்கும் போது தன் அசிஸ்டெண்ட் டிபன்

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

1 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி – 1 ஹீரோ : சம்ரித் – பெயருக்கேற்ப செல்வவளமிக்கவன். குடும்பமே வெளிநாட்டில் வாசம். தாத்தா ஆதி கேசவன் மும்பையில் அன்னபூரணி என்ற இரும்பு எஃகு ஆலை நடத்தி வருகிறார். ஹீரோயின் : அம்ரீதா இவளை செல்லமாக அமீர் என்று அழைப்பார்கள்.மும்பையில் அன்னபூரணி எஃகு ஆலையின் குவாட்டர்ஸில் வாசம். தந்தை பிரபாகரன் மற்றும் சித்தப்பா கருணாகரன் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரே மகன் தான்.

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

18 – இத இதமாய் கொன்றாயடி

18 – இத இதமாய் கொன்றாயடி

சூர்யா சொல்வதை நம்பாமல் நிலா கண்களை இடுக்கிக் கொண்டுப் பார்த்தாள். கல்யாணியோ இது தான் சமயம் என்று,”க்கா… இவன் நடிக்கிறான்கா நம்பாதிங்க…”என இவள் நடித்தாள். சூர்யாவின் பெற்றோரோ சூர்யா பக்கம் நியாயம் இருப்பதாக முழுவதும் நம்பினார்கள்.

எனவே சூர்யாவோட தந்தை சிந்தித்தவாறு,”சரிம்மா… நீ சொல்றது கரெக்ட் தான்… எங்க பையனா இருந்தாலும் தப்பு தான் தப்பு… தப்புக்கு தண்டனை இருக்கு… என்ன தண்டனை கொடுக்கலாம் நீயே சொல்லும்மா…” கல்யாணிப் பார்த்து வினயமாகக் கேட்டார்.

இவளும்,”எனக்கு செய்த மாதிரி வேற யாருக்கும் செய்யகூடாதில்ல… எனக்கும் அவருக்கும் கண்ணாலம் பண்ணி வச்சிடுங்க… அவரு பேருல இருக்கற சொத்தல்ல என் பேருக்கு மாத்திடுங்க… அவ்வளவு தான்.” தன் குரபுத்தியைக் காட்டினாள்.

வேணுகோபால்,”ஏம்மா… அவன் சொத்து முழுசும் உன் பேருல எழுதி வச்சா போதுமா… அவன் எப்படி போனால் உனக்கென்ன…” எனக் கேட்டார்.

உடனே அவள்,”ம்கூம் என் பேருல சொத்திருந்தா போதும்… அவன சொத்தில்லாம ஒரு பையனும் மதிக்கமாட்டாங்க…”

இவள் என்ன சூர்யாவை விட சொத்து தான் பெரியது என பேசுகிறாள் நிலா நினைத்தாள்.

சூர்யா ஏதோ குறுக்கிட்டு பேச வந்தான். பேசாதே என்று மகனுக்கு கண்ஜாடைக் காட்டிவிட்டு, வேணுகோபால்,”புருசன மதிக்க வேணாம்… சொத்துமட்டும் இருந்தா பரவாயில்லயா…” கேட்டார்.

“சொத்துக்காக என் காலை சுத்தி வரணும்ல…” என்று சொன்னாள்.

உடனே வேணுகோபாலுக்கு கோபம் வந்தது. “கூட்டுகளவாணிகளா… இரண்டு பேரும் சேர்ந்து சொத்துக்கு ஆசப்பட்டு எங்கள ஏமாத்துணுமங்கறது நனச்சிட்டு எங்க வந்து நாடகம் போடறிங்க… ஒழுங்கா மரியாதயா இடத்த காலி பண்ணுங்க… இல்லனா வாட்ச்மேன விட்டு துரத்தியடிப்பேன்…” என சிம்மாக கர்ஜித்தார்.

நிலாவுக்கு இவளே ப்ராடு எனத் தெரியாமல் வந்ததுக்கு இந்த கெட்டப் பெயர் தேவை தான் என மனம் நொந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு காலிப் பண்ணினாள். கல்யாணியோ இவ்வளவுக்கு பிறகும் ஏதாவது தோறுமா என நினைத்து,”சொத்து ஒன்னும் வேணாம்… அதுக்கு பதிலா ஒரு ஐம்பது லட்சம் கொடுங்க… சத்தப்படாம போயிடுறேனு…” என்றாள்.

வேணுகோபாலோ,”வாடச்மேன்… வாட்ச்மேன்…” என வாசலைப் பார்த்து குரல் கொடுத்தார். வாட்ச்மேன் வருவதற்குள் இனிமேல் ஏதும் தேறாது என நினைத்தவாறே,”இருங்க… வெளிய போய் உங்க மகன பத்தி இல்லாதயும் பொல்லாதயும் சொல்லி மானத்த வாங்கலன்னா என் பேரு கல்யாணில்ல…” சொல்லிவிட்டு அந்த பங்களாவை விட்டு நிற்காமல் ஓடிப் போனாள்.

ஓடிவிட்டாள் என சூர்யாவும் சூர்யா பெற்றோரும் ஆசுவாசமாக பெருமூச்சு விட்டனர். அதற்கு ஆயுள் குறைவு போலும் ஏனெனில் அவள் போன வேகத்திற்கு ஊருக்குள்ள கட்டுக்கதைகளைப் பரப்பியிருந்தாள். ஊருக்குள்ளவர்களும் பெரிய இடத்துபையன் கொஞ்சம் அப்படி இப்படியிருந்தா என்ன என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அது இவர்களுக்கு தெரிந்த போது சூர்யா முகம் இருட்டிடடித்துவிட்டது. அதைப் பார்த்த வேணுகோபாலுக்கு கண்மண்ணு தெரியாத கோபம் வந்தது.

யாரைக் கொண்டு இவள் வாயை அடைப்பது என தெரியாமல் சூர்யா சிந்தித்தான். அவன் மூளையில் நிலா தான் சரியான ஆள் என்று டக்கென பொறித் தட்டியது. உடனே சூர்யா நிலாவை சந்திக்க எண்ணி அவள் வீட்டு முகவரியை விசாரித்துக் கொண்டு, ஒரு சேரியில் உள்ள அவள் வீட்டைக் கண்டுப்பிடித்துப் போனான்.

நிலா வீட்டுவாசலில் நின்றுக் கொண்டு,”நிலா… நிலா…” என அழைத்தான். வெளியே வந்த நிலா சூர்யாவைப் பாரத்ததும், இந்தாள் இங்க எதற்கு வந்திருக்கான்? என முகம் பேயறைந்தாற் போல ஆகிவிட்டது. சூர்யா நிலா மனதில் என்ன நினைக்கிறாள் என கணித்துவிட்டான்.

உடனே சூர்யா,”தோ பாரு.. நீ நனக்கற மாதிரியெல்லாம் பிரச்சனய பண்ண வரல… சொல்ல போனா நா ஒரு உதவி தான் கேட்டு வந்திருக்கேன்…” சொன்னான்.

நிலா மனதிற்குள் அப்பாடி இவன் ஒன்றும் பிரச்சனை பண்ண வரவில்லை. இது தெரிந்தால் தன் அம்மா ஆடித் தீர்த்துவிடுவாள் என எண்ணினாள்.

நிலா,”சரி எதற்கு வந்திருக்கே…” கேட்டாள். அதற்கு சூர்யா,”இல்ல… அன்னைக்கு வீட்டு வந்தில்ல… அங்க நடந்தது பூராவும் ஊருல சொல்லறியா… ப்ளீஸ்…” என மன்றாடிக் கேட்டான்.

நிலா பதிலுக்கு,”அதற்கென்ன… உண்மய தான் சொல்லறேனு… சொல்லிட்டா போச்சு…” சூர்யாவோடு கிளம்பினாள்.

சூர்யா நிலாவோடு கல்யாணி தங்கியிருக்கும் விடுதி வந்து இறங்கினான். அங்கு சூர்யாவோடு நிலாவைக் கண்டதும் கல்யாணி இவனோடு இவள் எங்க இங்க என்னத்துக்கு வந்திருக்கா என அதிர்ச்சியடைந்தாள். நிலா வந்த வேகத்திற்கு கல்யாணியைப் பிடித்து கன்னம் கன்னமாக அறைந்தாள். இவள் இப்படி செய்வாள் என எதிர்பார்க்காத கல்யாணி திரு திருவென முழித்தாள்.

“என்னடி யாருக்கும் தெரியாதுனு நனச்சிட்டு இருக்கறியா… எல்லா உண்மயும் தெரிஞ்சவ நா ஒருத்தி இங்க இருக்கேனு என்பதை மறந்துடாதே… ஒழுங்கா மருவாதயா எங்க கூட வந்து எல்லார் முன்னாடி உண்மய சொல்லறியா… என்ன புரிஞ்சுதா…” மிரட்டினாள்.

கல்யாணி அடிக்கு பயந்து வேறுவழியில்லாமல்,”நீங்க எங்க வந்து சொல்லனா… நா அங்க வந்து சொல்றேன்…” என ஒப்புக் கொண்டாள்.

மக்கள் கூடியிருக்கும் இடத்துக்கு இருவரும் அழைத்துப் போனார்கள். மக்கள் முன்னால கல்யாணியோ உண்மையை சொன்னாள்.. “உன் சுயநலத்துக்கா இப்படி பண்ணுவியா…” என்றும், “உன் பேச்ச நம்பி நல்ல பையன தப்பா நனச்சிட்டோம…” “நீயெல்லாம் மனுசியா இந்த பொழப்பு பொழைக்கறது நாண்டுகிட்டு சாகலாம்…” “நல்ல பையனப்பா இப்படி அவன் மேல அபாண்டமா பழிய தூக்கி போட்டிருக்கா பாரேன்…”என்று எல்லோரும் சூர்யாவை புகழ்ந்தும் கல்யாணியை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். கல்யாணி முதலில் சொன்ன பொய்யை உண்மை என்று சூர்யாவை பேசின அதே வாய் தான் கல்யாணியை இப்பொழுது திட்டி தீர்த்தது. சூர்யாவையும் நிலாவையும் பாராட்டி விட்டுச் சென்றார்கள்.

கல்யாணியால் தனக்கு வந்த களங்கத்தை நிலாவைக் கொண்டு துடைத்துக் கொண்டான் சூர்யா. சூர்யா நிலாவிடம்,”ரொம்ப தேங்கஸ்… நீ வந்து சொல்லினா நா எப்படி இந்த உண்மய நிருப்பிப்பேன்… வா உன்ன கொண்டு போயி வீட்லய விட்டறேன்…”

அதற்கு நிலா,”தேங்கஸல்லாம் வேணாம்… உங்களோட இந்த கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணமாயிட்டேனு நனக்கும் போது கொஞ்சம் வருத்தமாயிருக்குது… நானே போயிக்குவேன்…” என்று சொல்லி விடைப் பெற்றாள்.

சூர்யாவும் சரியென சொல்லிவிட்டு அவன் பாதையில் விடைப் பெற்றான். நிலாவும் தலையாட்டிவிட்டு தன் பாதையில் கிளம்பினாள்.

எண்ணங்களும் வழிகளும் வெவ்வேறு…

தனித்தனி பாதைகளில் பிரிந்து செல்கின்றன…

இரண்டும் சேர்ந்து ஒரே பாதையில் பயணிக்குமா…

ஒரே கிளையில் ஒரே கூட்டில் வசிக்குமா…

சூர்யாவுக்கு நிலா ஞாபகமே இருந்தது. அவன் எண்ணம் முழுவதும் அவளாக இருக்கட்டும் தைரியமாக வந்து கல்யாணியை இரண்டு அறைக் கொடுத்து, மக்கள் முன்னால் உண்மையை ஒத்துக் கொள்ள வைத்து என் மானத்தைக் காப்பாற்றினாள் என புளங்காகிதம் அடைந்தான். இப்படியே சூர்யா நிலாவை நினைத்து நினைத்து, ஒரு கட்டத்தில் அவள் மேல் காதல் கொண்டான்.

நிலாவை ஒரு பொருட்காட்சிக்கு வரச் சொன்னான். இவனுக்கு முன்னால் வந்து நிலா வந்து இவனுக்காக காத்திருக்கலானாள். சூர்யா அவளிடம் காதலை சொல்ல கையில் ஒற்ற சிகப்பு ரோஜாவுடன் தைரியமாக கிளம்பிப் போனான். நிலாவை சந்தித்து தரையில் முட்டாங்கால் மடித்து அமர்ந்து சிகப்பு ரோஜாவை அவள் முன்னால் நீட்டி தன் காதலை சொன்னான்.

எதற்கு வரச் சொன்னான் என தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த நிலா தீடிர் என்று அவன் காதலைச் சொல்வான் எதிர்பார்க்காதமல் அதிர்ந்துவிட்டாள்.

“ஏய் நிலா… என் காதலை சொன்னதுக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?” கேட்டான்.

இவன் கேட்டதும், நிலா அதிர்ச்சி நீங்கியவளாக,”என்க்கு மூத்தவங்க இரண்டு பேரு இருங்காங்க… அது மட்டுமில்லாம நீங்க எங்க நா எங்க… உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது… இது நடக்க சாத்தியமேல்ல… உங்க காதல மறுக்கறதுக்கு என்னய மன்னிச்சுங்க…” என சொல்லி விட்டு வேகமாக நடந்தாள்.

சூர்யாவால் நிலாவை மறக்க நினைத்தாலும், அவள் நினைவு வந்து கொல்லாமல் கொல்லுகிறது. மனதில் வலியோடு திரும்பிய பக்கமெல்லாம் அவளாகவே தெரிய பித்துப் பிடித்தது போலானான். அவளை மறக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்தப் பிறகு நிலாவைப் பார்க்க இந்த தடவை அவள் வேலை செய்யும் இடத்திறகு கிளம்பிப் போனான்.

“நிலா எவ்வளவோ முயற்சித்தும் என்னால உன்னய மறக்க முடியல… ப்ளீஸ்… என் லவ்வ ஏத்துக்கோ…” என மன்றாடினான். நிலா இருந்தும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. சூர்யா சளைக்காமல் மீண்டும் மீண்டும் படையெடு்த்தான். அவன் படையெடுப்பைக் கண்டு மனம் இறங்கி ஒருவழியாக அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.

சூர்யாவோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து,”யாஹீ…” என்று கத்தினான். நிலா மனம் கொள்ளாச் சிரிப்போடு பார்த்திருந்தாள்.

“நிஜமாகவே என் லவ்வுக்கு ஓகே சொல்லிட்டியா… என்னால நம்பவே முடியல…” மகிழ்ச்சியோடு ஆரவாரித்தான்.

அவன் ஆரவாரத்தை நிலா கண்கள் மின்னப் பார்த்திருந்தாள். தினம் தினம் ஏதாவது சாக்கு வைத்துக் கொண்டு சந்திக்கலானார்கள். அப்படியே இவர்கள் காதலும் வளர்ந்தது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் இருவீட்டாரும் முழு வீச்சில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சூர்யா வீட்டில் சொத்துக்கு ஆசைப்பட்டு உன் பின்னால் சுற்றுகிறாள் எனவும், நிலா வீட்டில் உனக்கு மூத்தவங்க இருக்கிறாங்கல்ல… அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்… அவங்க பெரிய இடம் நம்மகிட்ட எல்லாம் சம்மந்தம் பேசமாட்டாங்க… எனவும் மறுத்தார்கள்.

சூர்யா – நிலா இருவரும் எதிர்ப்பை மீறி சந்தித்துக் கொண்டனர். நிலாவுக்கு அவள் அம்மா,”சொல்ல கேட்காம அவன போயி பார்ப்பியா… போவியா… போவியா…” கூறி கூறியே… அடுப்பில் எரிந்துக் கொண்டிருந்த விறகுக் கட்டையை எடுத்து சூடு இழுத்தாள். நிலா சூட்டின் வலி தாங்காமல் கதறி கதறி அழுதாள்.

சூர்யா வீட்டில் அவன் தந்தை எங்கும் போககூடாது என சொல்லி அறையில் நாற்காலியில் கட்டி வைத்துப் பூட்டி வைத்தார். வேளாவேளைக்கு கதவை மட்டும் நீக்கி உணவுக் கொடுத்தார். சூர்யாவோ தினம் தினம் அவன் தந்தை இல்லாத போது கை கால்கட்டுகளை கழட்ட கொஞ்ச கொஞ்சமாக முயற்சி செய்தான்.அவன் தந்தை கதவை நீக்கும் ஓசை கேட்டால் ஒன்றும் அறியாத பிள்ளைப் போல இருந்துக் கொள்வான்.

ஒருநாள் வெற்றிக்கரமாக கட்டெல்லாம் அவிழ்த்துவிட்டு அவன் தந்தை வருகிற நேரத்துக்கு கையில் இரவுவிளக்கை எடுத்து கதவு மறைவில் அடிக்க காத்திருந்தான். வேணுகோபால் கதவைத் திறந்துக் கொண்டு வரவும், மண்டையில் இரவுவிளக்கில் ஓங்கி ஒருபோடுப் போட்டான். அவர் மயங்கி விழவும் அவரை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு தப்பித்து நிலா வீட்டிற்குச் சென்றான்.

பொழுது சாயும் நேரம் அந்த வீட்டில் நிலா அவள் அக்கா கோமதியைத் தவிர யாரும் இல்லை. நிலா காலில் தீக்காயத்துடன் அழுதுக் கொண்டிருந்தாள். அவளின் அக்கா கோமதி,”அழுகாதே… அழுதழுது கண்ணெல்லாம் வீங்கிப் போயிடுச்சு பாரு…” சமாதானப்படுத்தி் கொண்டிருந்தாள்.

சூர்யா நிலாவைக் கண்டதும் உணர்ச்சி பெருக்கில் கட்டியணைக்கப் போனான். கோமதி நாகரிகம் கருதி விலகிப் போனாள். அவள் கால் மேலே அவன் கால் பட்டதும் எரிச்சல் தாங்காமல் கத்தினான். அவள் கத்தவும்,”என்னாச்சு… கால்ல என்னாச்சு…” பதறியவாறே காலை இழுத்து பாவாடையை நீக்க முயற்சிச் செய்தான்.

“வேணாம்…” மறுத்து பாவாடையை கால்வழியை இழுத்துவிட்டுக் கொண்டாள். “காண்பிக்க போறியா… இல்லயா…” சண்டைப் பிடித்து பிடிவாதமாக பாவாடையை விலக்கிப் பார்த்தான். பார்த்தவுடன்,”ஐயோ… யாரு இப்படி கால்ல சூடு வச்சது…” பதறினான்.

அதற்கு நிலா அழுதவாறே,”எல்லாம் என் அம்மா தான்… உங்கள பார்க்ககூடாதுனு சொல்லி இப்படி சூடு வச்சிருச்சு…”

“என் வீட்லயும் எங்கப்பா எதிர்கறாரு… உன் வீட்லயும் உங்கம்மா எதிர்கறாங்க… பேசாமல் இரண்டு பேரும் சொல்லாம கொள்ளாம ஓடி போயி கண்ணாலம் பண்ணிக்கலாம்.”

நிலா அதற்கு சரியென தலையாட்டினாள். இருவரும் ஊரை விட்டு தப்பித்து ஓடினர்.

இருகிளிகளும் தங்கள் கூட்டை மறந்து…

சுகந்திரவானில் கை கோர்த்துப் பறந்தனர்.

18 – இத இதமாய் கொன்றாயடி Read More »

error: Content is protected !!
Scroll to Top