ATM Tamil Romantic Novels

தொடர் கதை

மெல்ல மெல்ல காதல் வருதே

23.காதல் ஐசியூ அறைக்குள்…மாறனின் கண் ஓரத்தில் வழிந்த அந்த ஒரு கண்ணீர் துளியை பார்த்த மருத்துவர் ஆச்சரியமாக,“குட்… ஹீஸ் ஃபைட்டிங் பேக்… எல்லாரும் சீக்கிரம்… பி.பி ஸ்டேபிள் பண்ணுங்க…”என்று கூறியபடி தொடர்ந்து சிகிச்சை அளித்தார். வெளியே நின்றிருந்த சந்தியாவிற்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக கடந்தது.அவளின் பார்வை முழுவதும் அந்த கதவின் மீதே இருந்தது.சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வந்தார். “டாக்டர்…” என்று ஓடிவந்தாள் சந்தியா.”பயப்படாதீங்க மிசஸ் மாறன் இனிமே ஆபத்து இல்லை தான் பட்… அவர் […]

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

22.காதல் அந்த நடு இரவில் அந்த நகரம் முழுவதும் கண்களில் ஒரு தவிப்போடு மனதில் ஒரு பயத்தோடு தன்னவனை தேடி கொண்டிருந்தாள்.. கடவுளே ..,அவருக்கு எதுவும் ஆகிட கூடாது..,ஆகிட கூடாது என்று ஆயிரம் வேண்டுதல் வைத்தாள்..எல்லாம் என்னால தான்..ஐயோ எங்க போனீங்க மாமா..ப்ளீஸ் வந்துருங்க மாறன்..என்று தேடி சென்றாள்.. அர்ஜுனுக்கு கால் செய்து” அண்ணா அவரை பார்த்தீங்களா ?எங்க இருக்காருன்னு தெரிஞ்சதா அண்ணா… என்றுஅழுது கொண்டே கேட்க .. இன்னும் இல்ல சந்தியா..மாறன் எப்பவும் இப்படி பண்ண

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

21.காதல் மாறனும் அன்று நடந்ததையே தான் நினைத்து கொண்டிருந்தான்.தியா..,என்று மென்மையாக அழைக்க அவள் கண்டுகொள்ளவில்லை..மீண்டும் தியாஆஆஆ..என்று சத்தமாக அழைக்க ப்ச்..,என்ன எதுக்கு மிட் நைட் ல கத்துறீங்க? “நானா டி கத்துறேன்..கூப்பிட கூப்பிட அமைதியா இருக்க..அப்போ சத்தமா தான் கூப்பிட முடியும்..” மாறனை முறைத்து கொண்டே இப்போ எதுக்கு என்னைய கூப்பிடிங்க..என்ன விஷயம்.. என்னடி கோவமா இருக்கியா?நான் ஏன் சார் கோவமா இருக்கணும்..நீங்க யார்கிட்ட பேசுனா எனக்கென்ன..போங்க உங்க ஆசை கண்மணி உங்களுக்காக காத்துட்டு இருப்பா.. இப்போ

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

10 – தீக்கு தென்றலோடு மோகம்

10 – தீக்கு தென்றலோடு மோகம்!

அடுத்தநாள் சம்ரித் அலுவலகம் வந்தவுடன் அம்ரீதாவை தான் தேடினான். நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவன் மனம் அவளை மிகவும் தேடியது. நிலாவை காணாத வெண்மேகம் போன்று எங்கே தேடியும் அவளை காணவில்லை. அவள் வரவில்லை. அதற்கு பதிலாக அவளுடைய விடுப்ப கடிதம் வந்திருந்தது. அதில் அவள்,”இந்த நிச்சயத்துக்கு பிறகு ஓன் வீக் லீவு எடுத்து கொள்கிறேன்”என்று தெரிவித்திருந்தாள்.

அதைப் படித்தவுடன் சம்ரித்துக்கு,”இவள் பாட்டுக்கு ஓன் வீக் லீவு சொல்லிட்டு வீட்லயே இருந்துக்குவா எனக்கு இவளை பார்க்கனும் போல இருக்குது… இவளுக்கு அந்த மாதிரி எல்லாம் ஈகராக இருக்காதா…” என அவள் எழுதிய கடிதத்தை வைத்துக் கொண்டு புலம்பினான்.

இவனுக்கு தெரியாதே… அம்ரீ வீட்டில் அவளின் சொந்தக்காரங்க எல்லாம் ஒரு வாரம் தங்கி விட்டு செல்வதாக கூறி அங்கேயே தங்கிவிட்டனர். அவர்கள் இருக்கும் வரைக்கும் யசோதா அம்ரீயை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார். அம்ரீக்கும் சம்ரித்தைப் பார்க்க வேண்டும் ஆவா இருந்தது. அவளுக்கு ஆசையாக இருந்து என்ன பயன்? தன் சித்தி சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்துக் கொண்டு அமைதியாக ஏற்றுக் கொண்டாள். அந்த ஒரு வாரமும் வாடிய முகத்துடன் சுற்றிக் கொண்டு இருந்தாள்.

அதைப் பார்த்த யசோதா அம்ரீதாவை கூப்பிட்டு,”ஏன் அம்ரீ மூஞ்சிய தொங்க போட்டு இருக்க… பார்கிறவங்க ஏன்னு இப்படி இருக்கா… நாங்க வந்தது பிடிக்கலயோ… அப்படினு என்னய தான் கேட்கமாட்டங்களா… நான் என்ன பதில் சொல்லட்டும்… நீயே சொல்லு…” எனக் கேட்டார்.

“அது வந்து சித்தி… அது வந்து…” என இழுத்தாள்.

“அதான் வந்துட்டியா… நீ சொல்ல வந்தது சொல்லு…”

அம்ரீதா தலையை குனிந்துக் கொண்டு,”எனக்கும் சம்ரித்த பார்க்க இருக்க முடியல சித்தி… நான் என்ன செய்யட்டும்…” என்று சொன்னாள்.

அதைக் கேட்டவுடன் யசோதா சிரித்துக் கொண்டு,”அந்த காலத்துல நிச்சயம் முடிந்தால் போதும் வீட்டை விட்டு வெளியவே வரமாட்டங்க… நான் எல்லாம் அப்படி தான் இருந்தேன்…” சொன்னார்.

அதுக்கு அமரீதா,”அப்புறம் நீங்களும் சித்தப்பாவும் மீட் பண்ணிக்கவே இல்லயா…” கேட்டாள்.

அதற்கு யசோதா வெட்கப்பட்டுக் கொண்டு,”அப்படியெல்லாம் உங்க சித்தப்பா விடுவாரா…” என்றார்.

உடனே அம்ரீதா கதைக் கேட்கும் ஆர்வத்துடன்,”ம்ம்ம்… சொல்லுங்க… சித்தப்பா என்ன செஞ்சார்…”

யசோதா சிரித்துக் கொண்டே,”ஒருநாள் நைட் பின்பக்கம் சுவர் ஏறி குதிச்சிட்டாரு…”

“அப்புறம் என்ன நடந்துச்சு…”

“குதிச்சன்னாலே கால் இசகுபிசகா சுளுக்கிச்சு… வலில கத்திட்டாரு…”

“வலிய கொஞ்சம் பொறுத்துக்ககூடாது… பிறகு எல்லோரும் எழுந்துட்டாங்களா…” கேட்டாள்.

“பின்னே எல்லோரும் முழிக்காம இருப்பாங்களா… அதுக்கு அப்புறம் பின்பக்க வாசல் லைட்டை போட்டாங்க… கத்தினது சித்தப்பா தெரிஞ்சதும்… எல்லோரும் சிரித்து,”மாப்ளே நீங்க தானா… எதுக்கு சுவரேறி குதிச்சு… இப்ப பாருங்க கால் சுளுக்கிச்சு… இதெல்லாம் உங்களுக்கு தேவையா…” என்று யசோதாவின் தகப்பனார் கேட்டார்.

“அப்புறம்…”

“அப்புறம் என்ன நடந்திருக்கும் நீ நினைக்கற…”

“தெரியல…” அம்ரீதா உதட்டை பிதுக்கினாள்.

“பிறகு என்னய பெத்தவங்க… கூட பிறந்தவங்க… எல்லாரும் சேர்ந்து,”மாப்ள… எங்க பொண்ண பார்க்கவறாப்ல இருந்தா… இப்படியெல்லாம் சுவரேறி குதிச்சு வராதிங்க… நேர் வழில வாங்க… நாங்க தப்பா நினைச்சிக்கமாட்டோம்…” என எங்க அண்ணன் சொல்லிட்டார்.

“பிறகு உள்ளே கூட்டிட்டு வந்து காலுக்கு மருந்து எல்லாம் போட்டுவிட்டாங்க…”

“அதுக்கு பிறகு சித்தப்பா முன் வாசல் வழில தான் வந்தாரு…” எனக் கேட்டாள்.

“அப்புறம் பின் வாசல்ல வர அவர் என்ன கிறுக்கனா…” என்று கேட்கவும், அதற்கு இடுப்பில் தன் சித்திய பார்த்து செல்லமாக முறைத்தாள்.

யசோ,”என்னய முறைக்கற…” தன் சித்தப்பாவை கிறுக்கன் சொன்னதை நினைவில்லாமல் கேட்டார்.

உடனே அம்ரீ,”உங்களுக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா… என் சித்தப்பாவை பார்த்து கிறுக்கன்னு சொல்விங்க…” என்றாள்.

யசோதா தன் நுனி நாக்கை கடித்துக் கொண்டு,”சாரிப்பா… வெரி சாரி… நா உங்க சித்தப்பாவை கிறுக்கன் என சொல்லிவிட்டேன்.” என மறுக்காமல் மன்னிப்புக் கேட்டார்.

உடனே அம்ரீதா யசோதா பக்கத்தில் வந்து அவரை கட்டியணைத்துக் கொண்டு,”நா சும்மா தான் கேட்டேன். உங்களை கிண்டல் பண்ணறதுக்கா தான்…” என சொன்னாள்.

யசோதா அவள் கையை விலக்கி விட்டு,”ம்ம்ம்… எதுல விட்டேன்… மறந்து போச்சே…” என்றார்.

அம்ரீதா,”நா சொல்றேன்… பின் வாசல் வழியா எங்க சித்தப்பா என்ன கிறுக்கனா… அதை சொல்லிகிட்டு இருந்திங்க… நடுவுல நா தான் ஏதேதோ பேசி உங்கள திசை திருப்பி விட்டுட்டேன்… இனி மேல் நா உங்க பேச்சில குறுக்கே வரமாட்டேன்…” என்று சொல்லி வாய் மேல ஒரு விரல் வைத்து அமைதியாகிவிட்டாள்.

இவளின் செயலைப் பார்த்து யசோதா சிரித்துக் கொண்டே மீதி கதையை தொடரலானாள். “பிறகு அவர் என்னய பார்க்க வரும் போதெல்லாம் முன் வாசல் வழில தான் வந்தார்.”

அம்ரீதாவிற்கு ஒரு சிறு சந்தேகம் வந்தது. வாய் மேலே இருக்கும் விரலை எடுக்கட்டுமா… என ஜாடைல கேட்டாள். அதற்கு யசோதாவும் எடுத்துக்கோ என அனுமதி கொடுத்தார்.

உடனே அம்ரீதா,”என் சித்தப்பா உங்கள பார்க்க வரும் போது எல்லாம் ஏதாவது பரிசு வாங்கிட்டு வரமாட்டார்…” என்றுக் கேட்டாள்.

“வாங்கிட்டு வராமல இருப்பார்…” என பதில் கொடுத்தார்.

“அப்படி என்னன்ன வாங்கி வருவார்…”

“வீட்டுக்கு எப்ப வந்தாலும்… சும்மாவெல்லாம் வரமாட்டார். கைல பூ இல்லாம வரமாட்டார்.”

“வெறும் பூ மட்டுமா வாங்கிட்டு வந்து கொடுத்ததுக்கு இவ்வளவு பில்டப் ஆகாது சித்தி…” என சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“அது மட்டும் இல்ல.. ஒரு தடவை வெள்ளி குங்குமசிமிழ், இன்னொரு தடவை வெள்ளி கொலுசு, அப்புறம் வெள்ளி மெட்டிலாம் வாங்கி கொடுத்தார்.” யசோதா வீரவசனம் பேசினாள்.

“எல்லாம் வெள்ளியிலா…” இதெல்லாம் கேட்டு அம்ரீதா பிரம்பியானாள்.

“ஆமாம்… வெறும் வெள்ளி தான்… உங்க ஆளு தான் பிளாட்டினம் ரிங்லாம் வாங்கி குடுப்பாரு… ஏதோ எங்களால் முடிஞ்சதது சாதரண வெள்ளி தான்…”

“என்ன சித்தி…”

“இருந்தாலும் நீங்கலாம் பெரிய இடம்… நாங்க அப்படியா…” என யசோதா இழுத்தார்.

“போங்க சித்தி நீங்களே என்னய பிரிச்சு பார்க்கறிங்க… நானும் இந்த நிமிஷம் வரைக்கும் இந்த குடும்பத்தில் ஒருத்தி தான் நினைச்சிகிட்டு இருக்கேன்…. அப்படி இல்லைனு சொல்லாம சொல்லிட்டிங்களே…” என மிகவும் வருத்தப்பட்டாள்.

அவள் வருத்தப்படுவது பிடிக்காமல் யசோதா அருகில் வந்து அவளின் கைகளை பிடித்துக் கொண்டு,”சாரி… வெரி சாரி அம்ரீ… நா மனசார அப்படியெல்லாம் உன்ன நினைக்கவேயில்லை… ஏதோ ஒரு ப்ளோல வந்துடுச்சு… கல்யாணமாகி போனாலும் நீ எங்க குடும்பத்து ஆள் தான்…” என்று சமாதானப்படுத்தினார்.

“இருந்தாலும் நான் வேற… நீங்க வேறனு சொல்லிக்காட்டிங்கே…” அம்ரீதா குரலில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. எவ்வளவு யசோதா சொல்லியும் சிறிதளவு அவள் சமாதானமானாள்.

அம்ரீதா,”என்ன இருந்தாலும் உங்க கதைய கேட்டதில் எனக்கு ஆனந்தமே…” என்றாள்.

அதற்கு யசோதா மகிழ்ச்சி அடையாமல், உதட்டில் மெல்லிய சிரிப்பு மட்டும் எட்டிப் பார்த்தது. அதற்குள் கருணாகரன் உறவினர்கள் யசோதாவை சூழ்ந்துக் கொண்டு, அவளிடம் அரட்டை அடிக்க ஆரம்பி்த்தார்கள். அம்ரீதாவின் வயதொத்த இளம்பெண்கள் அவளிடம் கதை பேசினார்கள். அதில் அவளையும் சம்ரித்தையும் கிண்டலடித்தார்கள். அதில் இருவரும் தங்களை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர். இந்த கலகலப்பு இரவு வரையும் நீடித்தது.

அம்ரீதா போனை தன் அறையில் சார்ஜ்ல் போட்டு விட்டு போயிருந்தாள். சம்ரித் அழைத்துப் பார்த்தும் போனை எடுக்கவில்லை.

சம்ரித்,”ஷிட்.. அம்ரீ… போனை எடுக்காமல் எங்க போய் தொலைந்த…” என வாய்க்கு வந்தபடி கத்தினான். இவனுக்கு பாட்டுக்கு கத்திக் கொண்டு இருந்தான். ஆனால் இது எதுவும் தெரியாமல் அம்ரீதா இளவட்டங்களோடு அரட்டையில் மூழ்கிவிட்டாளே…

சம்ரித் கத்தியனது அம்ரீதாவின் காதில் விழுந்ததோ இல்லையோ… இஷாரா காதில் மட்டும் விழுந்தது. மூக்கு வேர்த்தாற் போல சம்ரித் அறைக்கு வந்தாள். இஷாரா போடும் பெர்யூம் வாசனை அவளுக்கு முன்னால் வந்தது. மூக்கை சுருக்கியவாறு சம்ரித் ‘இவளை ஆபிஸ்க்குள் வரக்கூடாது என சொல்லியிருந்தும், இவள் எங்கே இங்கு வந்தாள்.’ என நினைத்தான்.

நிலைமை புரியாமல் இஷாரா,”என்ன மாம்ஸ்… எப்படி இருக்கிங்க…” என்று நலம் விசாரித்தாள். ஒன்றும் இல்லாமல் இருக்கும் போதே நலம் விசாரித்தால் எரிச்சலடைவான்.

ஏற்கனவே அம்ரீதா போனை எடுக்காத கோபத்தில் இருந்த சம்ரித் அந்த கோபத்தையும் இவளிடம் திருப்பி,”ஏய்… நீ எங்க வந்த… உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா… உன் முகத்தை பார்க்கவே எனக்கு எரிச்சல் எரிச்சலா வருகிறது என்று…” என முகம் சுழித்தான்.

அதற்கு இஷாரா,”மாம்ஸ் எதுக்கு இவ்வளவு கோபம்…” கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.

கன்னத்தில் இருக்கும் கையை அருவறுப்புடன் தட்டி விட்டு,”ஏய்… எதுவாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளி நின்று பேசினால் உனக்கு மரியாதை… அவ்வளவு தான் சொல்லுவேன்…” கத்தினான்.

‘இஷாரா இதற்கு எல்லாம் அசறுவாள்…’ என நினைத்தான்.

இவளோ அசராமல்,”கோபமாக இருக்கிங்க… உங்க கோபத்த எப்படி போக்கனும் எனக்கு தெரியாதா…”அதற்கும் பதிலளித்தாள்.

பிறகு சம்ரித்தை கட்டியணைக்க அருகில் வந்தாள். அவள் எண்ணத்தை சரியாக புரிந்தக் கொண்ட சம்ரித் சற்று விலகினான்.

“நான் இதுக்கெல்லாம் ஆளில்ல…” என்றான்.

அதற்கு அவளோ,”ஏன் மாம்ஸ்… நா என்ன செஞ்சேன்… எதுக்கு இவ்வளவு கோபப்படறிங்க… அதுமட்டும் இல்லாம என்னய கண்டால் எதுக்கு விலகி போறிங்க… இதெல்லாம் கொஞ்ம் கூட நியாயமில்ல…” என குறைப்பட்டாள்.

“ஏன்னு உனக்கே தெரியாதா… இல்ல தெரிஞ்சு இருந்தும் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கறியா…”

“நானா… நடிக்கறேனா… இது உங்களுக்கே அநியாயமா தெரில்ல…” எதுவும் நடக்காத மாதிரி நடித்தாள்.

‘என்னம்மா நடிக்கறா… இவள் நடிப்புக்கே ஆஸ்கார் அவார்ட் கூட கொடுக்கலாம்…’ என மனதில் நினைத்துக் கொண்டு,”ஆமாம்… நீ தான் நடிக்கற… இல்லைனு ஃப்ரூப் பண்ணு பார்க்கலாம்…” என அவள் முகத்துக்கே நேராக சம்ரித் சவால்விட்டான்.

சம்ரித் சவால் விட்டதும் இஷாரா ஒரு நொடி முகம் இருளடைந்துப் போனது. மறுநொடி தன் முகத்தை சீர் செய்துக் கொண்டு,”ம்ம்ம்… நா உண்மையான பாசம் வச்சுருக்கேன். அதை பார்த்தால் உங்களுக்கே நடிப்பா தெரியுதா… இதை தான் நல்லதுக்கே காலம் இல்லைனு பெரியவர்கள சொல்வாங்க…” நடிப்பை பிழிந்தாள்.

இவள் நடிப்பை எல்லாம் பார்க்க பிடிக்காத சம்ரித்,”ப்ளீஸ் லீவ் மை கேபின்…” என கத்தினான்.

“என்னயா வெளில போக சொன்னிங்க… இதே அந்த மேனாமினுக்கியா இருந்தா இப்படியா வெளியா போக சொல்லுவிங்க…” என செல்லமாக்க் கோபித்துக் கொண்டாள்.

அவள் இங்கு இருந்து நேரத்தை ஓட்டுகிறாள் என்பதை புரிந்துக் கொண்ட சம்ரித்,”அப்படியா… அந்த மேனாமினுக்கி யாரை சொல்ற…. அம்ரீயா…” என்று கேட்டான்.

“ஆமாம்… அவள தான்… வேற யார சொல்வேன்… என நீங்க நினைச்சிங்க…” என நக்கலடித்தாள்.

இவள் நக்கலை பொறுக்கமுடியாமல்,”இப்ப நீயா போயிட்டா நல்லா இருக்கும்… இல்லனா நா கழுத்த பிடிச்சு வெளில தள்ளுவேன்… எப்படி வசதி…” பற்களை நறநறவென கடித்து வார்த்தைகளை துப்பினான்.

இவன் கோபத்தைக் கண்டு பயத்தில் நடுங்கிய உடலை மறைத்தவாறு அங்கு நிற்காமல் விட்டால் போதும் என ஓடிவிட்டாள்.

அவள் ஓடியதும் சம்ரித் இருந்த கோபத்தைக் குறைப்பதற்காக தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றான். அவனுக்கு இஷாரா மேலே இருந்த கோபம எல்லாம் இப்பொழுது அம்ரீதா மேலே திரும்பியது. ‘அம்ரீ வந்திருந்தால் அவளோடு டூயட் பாடியிருக்கலாம்…’ என கனவுல அவளோடு சஞ்சரித்திருந்தான்.

அவன் கனவை கலைப்பது போல மேஜையில் இருந்த மொபைல் ரீங்காரமிட்டது. கனவில் இருந்த மீண்டவன்,”ச்சே… யார் நேரம் காலம் தெரியாமல் தொந்தரவு பண்ணிட்டு இருங்காங்க…” புலம்பிக் கொண்டே, மொபைல் எடுத்துப் பார்த்தவன்,’மாம் இஸ் காலிங் யூ’ என திரையில் தெரியவும்,’ச்சே… நாம அம்ரீயோட கனவுல லயித்திருப்பது இவர்களுக்கும் பிடிக்கலயா…’ என வெறுப்போடு,”யா… திஸ் யுவர் சன் மாம்…” என்றான்.

“வாட் ஆர் யூ டூயிங்…” எடுத்த எடுப்பில் கேட்கவும், அவனுக்கு தலையும் வாலும் புரியாமல் திருதிருவென முழித்தான்.

“ஐ டிட் க்நோ… வாட் ஐ’ம் டூயிங்…” தன் தாயார் என்ன சொல்ல வருகிறாங்க என புரியாமல் கேட்டான்.

“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கறா…” என அவகிட்ட சொன்னது எல்லாம் ஞாபகம் இப்ப வந்தது.

நடிப்பு என்ற வாக்கியம் இவனுக்கு எதிராக திரும்ப, இஷாரா நேராக தன் வீட்டிற்கு சென்று இல்லாதையும் பொல்லாதையும் சொல்லியே விமலாவிற்கு ஸ்குரு கொடுத்திருக்கிறாள்.’எல்லாம் இவளால் வந்தது…’ என்று அவள் மேல் இருந்த வன்மம் எல்லாம் மேலும் கூடியது.

“ஆமாம்… அவ வந்து உங்ககிட்ட சொன்னது எல்லாம் உண்மைனு நம்பிட்டாதிங்க… வெறும் நடிப்பு தான்…”

“ஒருத்தரும் இங்க வரல… யாரும் எதுவும் எங்ககிட்ட சொல்ல… எல்லாம் உன்னோட இமேஜின்…” என்றார்.

‘இஸ்ட்…. நவ் ஐ அம் கம்மிங்…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு போனை கட் செய்து விட்டு காரில் விரைந்தான்.

“ஹலோ… ஹலோ…” என விமலா கத்தி விட்டு,”இஷா… சம்ரித் இங்க தான் வந்திட்டிருக்கான் போல… உடனே நீ இங்கிருந்து கிளம்பு… ஹரி ஆப்… ஹர் ஆப்…” என பரபரத்தார்.

“வந்தால் வரட்டுமே… எனக்கே என்ன பயமா… நெவர் ஐஃப்ரைட் ஃபார் எனிஓன்…” என அலட்சியமாக பதிலுரைத்தாள்.

விமலாவிற்கு தான் ‘சம்ரித் வந்தால் என்ன ஆட்டம் ஆடுவானோ… அவன் பேச்சைக் கேட்டு தன் வீட்டு ஆண்கள் என்ன பேசுவார்கள்…’ பயம் பிடித்துக் கொண்டது.

இஷாராவை அங்கிருந்து அனுப்புவதற்குள் விமலாவிற்கு போதும் என போதும் என்று ஆகிவிட்டது.

இளையவர்கள் காதலோடு மூத்தவர்கள் காதல் போட்டியா…

எந்த காதலுக்கு எந்த காதலும் சளைத்தில்லை…

இரு தரப்பும் அதை நிருபிக்க போராடினர்கள்…

இறுதியில் இரு காதலும் வெற்றி பெற்றதாக உணர்ந்து கொண்டனர்.

10 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

20.காதல் வீட்டிற்கு வந்து எதுவும் பேசாமல் அவனுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவன்..,சந்தியாவிடம் சொல்லாமல் சென்று விட்டான்.. குழந்தையை தூங்க வைத்து விட்டு இவனிடம் வந்து பேச நினைத்தவளுக்கு அவன் இல்லாத அறையே காட்சி அளித்தது..“நான் இப்போ என்ன பேசிட்டேன்னு இந்த மாதிரி வார்த்தை சொல்லிட்டு போறாரு..”எனக்கு வலிகட்டும்னு தான பேசுறீங்க.. செத்தா நான் சந்தோஷ படுற அளவுக்கு நான் என்ன கல்லரக்கியா.. இன்னும் பேசுங்க நான் ஏன் கோபபட்டு கத்தனும் என்று கூறியவளுக்கு கேவலும் அழுகையும்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

19.காதல்   நாயகி கோபமாக வெளியேறியதும் வீடு முழுவதும் அமைதி நிலவியது.சந்தியா மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்..ஆனால் அங்கு நடந்த எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.. மாறன் அவள் அருகே வந்தான்.“தியா…”அவள் அவனைப் பார்க்கவில்லை. “பயந்துட்டியா டி?”திடீர்னு எப்படி வந்தாங்கன்னு தெரியல.. “இல்ல…நான் எதுக்கு பயப்படனும்..என்ன திரும்பவும் நாடகம் போட பாக்கிறீங்களா..?எப்படி எப்படி உங்க அம்மா வந்தது தெரியாதா..ஹ்ம்ம்..உங்க பசப்பு வார்த்தைகளுக்கு நான் மயங்க மாட்டேன்..இது எல்லாம் பழகிடுச்சு…”பட் நான் பழைய சந்தியா இல்ல உங்கள நம்பவும்

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

18.காதல்   மாறனிடம் கூறிவிட்டு வெளியில் வந்த சந்தியாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..மம்மி டேடி கிட்ட போனும் ..என்று அவர்களது செல்ல மகன் ஆத்ரேயன் அழுது கொண்டிருந்தான்.. ஆது குட்டி உனக்கு நான்..எனக்கு நீ ..அம்மா மட்டும் தான் உனக்கு என் செல்லம் இல்ல ..என்று கொஞ்சி விட்டு போனை..,அவனை பார்த்து கொண்டே பேசியவள் வழக்கம்போல் ஓடி விளையாடவில்லை…“மம்மி…” என்று மட்டும் சொல்லிக்கொண்டே சந்தியாவின் மார்பில் சாய்ந்து கிடந்தான். “ஆது… என்னடா செல்லம்? ஏன் ஒரு மாதிரி

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

9 – தீக்கு தென்றலோடு மோகம்

9 – தீக்கு தென்றலோடு மோகம்!

அனைவரும் முன்னிலையில் நிச்சயம் நன்றாக முடிந்தது. யோகேஷிம் விமலாவும் செய்வது அறியாது திகைத்தனர். சம்ரித்தும் ஈஸ்வரும் கருணாகரன் தம்பதியரும் சந்தோஷத்தில் திளைத்தனர். நினைத்தை நடத்தி முடித்து விட்டதில் ஆதிகேசவன் நிம்மதியானார்.

தன்னோட அறைக்கு வந்த சம்ரித் அம்ரீதாவுக்கு போன் போட்டு,”யாஹீ.. அம்ரீ… நிச்சயம் நல்லபடியாக முடிந்தது…” என்ற சந்தோஷத்தில் கூக்குரல் எழுப்பினான்.

அம்ரீதா,”எல்லோரும் சம்மத்தோடய நடந்தது…” எனக் கேட்டாள்.

“அது உனக்கு எதுக்கு?” என திருப்பி சம்ரித் கேட்டான்.

“இல்ல… நா தெரிஞ்சுக்கனும்…” பிடிவாதமாக சொன்னாள்.

“நல்லபடியாக முடிந்ததுனு சொன்னால்… அத கேட்டு சந்தோஷப்படனும் தவிர… அத விட்டுட்டு இப்படியெல்லாம் கேள்வி கேட்ககூடாது… என்ன புரிஞ்சுதா…”

“ஓஹோ… அப்படியானால் பிரச்சனையோட நடந்திருக்கு அப்படி தான…”

“அப்படி தான் நடந்தது…” என சம்ரித் வேண்டா வெறுப்பாக பதிலளித்தான்.

“இவ்வளவு வெறுப்பாக சொல்றிங்கனு… அப்போ என்னவோ பெரிசா நடந்திருக்கு… அப்படி தானே…”

“ஆமாம் நடந்தது… அவ்வளவும் உன்கிட்ட சொல்லுனுமா…”

“இல்ல… நீங்க என்கிட்ட சொல்லித்தான் ஆகனும்…” என விடாமல் வாதிட்டாள்.

“சொல்லமுடியாது… உன்னால என்ன பண்ணமுடியமோ… அத பண்ணிக்கோ..”

“ஓஹோ… அவ்வளவு தூரம் ஆகி போச்சா… நா அத பத்தி தாத்தாகிட்டயாவது போன் பண்ணி தெரிஞ்சுக்குவேன்.”

“நீ என்னய நம்பாம… என் தாத்தாவுக்கு போன் செய்து கேட்க போறியா… கேளு… கேட்டு தான் பாரு…”

அம்ரீதா ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தாள்.

“ஹலோ.. ஹலோ…” என்று கத்தினான்.

மறுபடியும் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

“போடி… உன்கிட்ட என் சந்தோஷத்தை சொன்னே பாரு… வைடி போனை…” என சொல்லி அவள் போனை வைக்கும் முன்னே இவன் போனை வைத்துவிட்டான்.

அம்ரீதா அனுப்பிய புகைப்படத்தை அப்போது தான் பார்த்தான். புகைப்படத்தில் அம்ரீதா தேவதையாக ஜொலித்தாள்.

அதைப் பார்த்த சம்ரித்,”இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல…”

அவன் மனசாட்சியோ,’வேற எதில் குறைச்சலை கண்ட…’ என்றது.

சம்ரித்தோட,’நா என்ன பண்ணறது… அவ அழகுல கொஞ்சம் தடுமாறிட்டேன்…’ என்று நினைத்தான்.

‘கொஞ்சமாவ தடுமாறிட்டா…’ என்று கேள்வி எழுப்பியது.

அப்படி மனசாட்சி கேள்வி எழுப்பியதும் சம்ரித்தோ,’ஹீ… ஹீ…’ என்று இளித்தான்.

‘தூ… தூ…’ என காறித் துப்பியது.

அம்ரீதா அழகுல மயங்கி அவளோடு கனவுல டூயட் பாடிக் கொண்டிருந்தான். அவனோட மனசாட்சி,’சம்ரித்… சம்ரித்…’ என்று அழைத்துப் பார்த்தது.

சம்ரித்தோ கனவுல உலகத்துல இலயித்துக் கொண்டிருந்தான். மனசாட்சியோ,’அவன் கனவில் இருந்து மீண்டு வரமாட்டேன்… நா போகிறேன்…’ என்று எண்ணியவாறு மறைந்துவிட்டது.

சம்ரித் அம்ரீதா ஞாபகம் மனதை அரிக்க, அவகூட சண்டை போட்டதை மறந்து, அவளுக்கு போன் செய்தான்.
அம்ரீதா போன் அடிக்கவும், போனை எடுத்துப் பார்த்தாள் திரையில் சம்ரித் எனத் தெரியவும்,”க்கும்… என்கூட சண்டை போட்டுட்டு இப்ப எதுக்கு போன் பண்ணுகிறார்.” என நொடித்தாள்.

மீண்டும், மீண்டும் அடிக்க, ஒருவழியாக போனை எடுத்து,”ஹலோ… அதான் போனை எடுக்கவில்ல… தெரியுதில்ல… மறுபடியும்… மறுபடியும்… எதுக்கு போன் பண்ணுறிங்க…” என்று கடிந்துக் கொண்டாள்.

அப்போது தான் சம்ரித்துக்கு இருவரும் சண்டையிட்டுக் கொண்டது நினைவுக்கு வந்தது. ‘அச்சோ… இருவரும் சண்டை போட்டதை மறந்துவிட்டோம்…’ என நுனி நாக்கை கடித்தான். ‘இவளை எப்படியாவது சமாதானம் செய்வோம்… எப்படி…’ என்று யோசித்து, ‘இப்ப தான் நிச்சயம் முடிந்திருக்கு… இதை சொல்லியே ஒரு பரிசு வாங்கி கொடுக்காலாம்னு நகைகடைக்கு கூட்டி போயிடுலாம்…’ என முடிவு பண்ணினான்.

முடிவு மாதிரி சம்ரித் அம்ரீதாவை,”உனக்கு ஒரு கிப்ட் கொடுக்கனும்… உன்னாலே கொஞ்சம் நகைகடைக்கு வரியா…” அழைத்தான்.

அம்ரீதாவோ கொஞ்சம் பிகு செய்துக் கொண்டு,”அப்ப அப்படி எங்கிட்ட சண்ட போட்டங்க… இப்ப நீங்க கூப்பிட்டதும் நா வரனுமா…” என்றாள்.

சம்ரித்தோ,’இவளை சமாதானம் செய்யறது… கொஞ்சம் கஷ்டம் போல இருக்கு…’ என்று நினைத்துக் கொண்டு,”ப்ளீஸ் அம்ரீ… ப்ளீஸ்…”

அமரீதாவோ,’இன்னும் கொஞ்சம் கெஞ்சட்டும்… அவ்வளவு சீக்கிரம் மலை இறங்ககூடாது.’ என எண்ணினாள்.

அதிக நேரம் சம்ரித்தை கெஞ்சவிட்டு,”போதும்… போதும்… பெரிய மனசு பண்ணி உங்கள மன்னிச்சுட்டேன்…” கொஞ்சம் இறங்கி வந்தாள்.

இருவரும் சமாதானமாகி இயல்புக்கு வந்தனர். பிறகு அவன் சொன்ன மாதிரி நகைகடைக்கு அழைத்துப் போய் அழகான பிளாட்டினம் மோதிரம் வாங்கி, அதை அவன் கையால் அணிவித்து, அம்ரீதா கைக்கு முத்தம் ஒன்றை பரிசளித்தான்.

அதில் அம்ரீதா கன்னங்கள் இரண்டும் ரோஜா வண்ணம் கொண்டது. சம்ரித் அவள் கன்னங்களைப் பார்த்து ,”வாட் அ கிரேசி… யுவர் சீக்ஸ் ஆர் லுக் லைக் பிங்க்ஸ்…” என ஆச்சரியப்பட்டான்.

அவன் அப்படி சொன்னதும் மேலும் அவள் கன்னங்களில் இருந்த ரோஜா வண்ணம் முகம் முழுவதும் பரவியது. அவன் வாழ்ந்த நாட்டில் ஜஸ்ட் லைக் தட் போகும் பெண்களைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு இதை இன்னும் ஆச்சரியம் அளித்தது.

சம்ரித்,”யுவர் சைக்னஸ் இஸ் வெரி ப்யூட்டிபூல்… ஐ தாட் டூ வியர் தி டைமன்ட்ஸ் டூ யுவர் பாடி…” என புகழ்ந்தான்.

“ரொம்ப புகழாதிங்க… எனக்கு வெட்க… வெட்கமா வருது…”

“ஐ அட்மியைர் டூ திஸ் சைக்னஸ்…”

அம்ரீதா சம்ரித் புகழ… புகழ… பெருமையில் பூரிப்படைந்தாள். ஒருவழியாக மோதிரத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

அடுத்தது கார் நேராக பிரேத்யக பெண்கள் ஆடையகத்துக்குள் உள்ளே நுழைந்தது. அதை பார்த்தவுடன் அம்ரீதா கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்தது.

அம்ரீதா,”எனக்கு டிரஸ் எடுக்கவா வந்திருக்கிறோம்…” என்று கேட்டாள்.

“ஆமாம்… உனக்கே உனக்கு தான்…”என சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவன் சொன்னதும் அவள் முகம் பூரிப்படைந்தது. இரண்டு பேரும் உல்லாசமாக கைக் கோர்த்துக் கொண்டு கடைக்குள் நுழைந்தனர்.

அவன் புல் ப்ராக் இருக்கும் செக்‌ஷனுக்குள் நுழைந்தான். அங்கே இருக்கும் ஒவ்வொரு ஆடையாக எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தான். எதுவும் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. மேலே ஒற்றை நாடாவுடன் ஒரு ஸ்லிவ்ஸ் ப்ராக் நல்ல ரெட் ஒயின் கலரில் எடுத்து அவள் மேல் வைத்துப் பார்த்தான். அவள் வெள்ளை நிறத்துக்கு அந்த ரெட் ஒயின் கலர் பொருத்தமாக இருந்தது

அதில் அவளைப் பார்த்தவுடன்,”சபாஷ்… உனக்கு இந்த கலர் எடுப்பாக இருக்குது… வாவ்… இந்த கலர் டிரஸ் உனக்கு அழகா… இல்லனா நீ இந்த டிரஸ்ல அழகா இருக்கியா… எனக்கு எதுவும் புரியல…” என்றான்.

அவளும் அந்த உடையை வாங்கி தன் மேலே வைத்துப் பார்த்து,’வாவ்… வாட் அ ஒன்டர்புல் டிரஸ்…’ என சந்தோஷப்பட்டாள்.

சம்ரித்தும்,”மேலே வச்சு பார்த்தா மட்டும் போதுமா… இதை போய் அங்கிருக்கும் டிரஸ்ஸிங் ரூமில் போய் போட்டுட்டு வா…” என்று சொன்னான்.

‘சும்மா டிரையல் பார்க்க போட்டுட்டு வர சொல்றாருனு…’ என நினைத்துக் கொண்டு போட்டுட்டு வந்தாள்.

அம்ரீதா உடையை மாற்றி வந்தாள். அவளை அந்த மேலும் கீழும் பார்த்தவன் பார்வையில்,”வாட் அ ப்ரிட்டி…”என வியந்தான். உடனே பழைய டிரஸை பேக் செய்ய சொல்லிவிட்டான்.

அம்ரீதா பழைய டிரஸை பேக் செய்ய சொல்வதைப் பார்த்து,”நா இந்த டிரஸில் வர போகிறேன்.” என ஆச்சரியமாகக் கேட்டாள்.

“எஸ்… இந்த டிரஸ்ல தான் வர போற… ஏன் இதுக்கென்ன அழகா இல்லயா…”

“இல்லனு யார் சொன்னா… நீங்க வாங்கி கொடுத்தது எதையும் குறை சொல்ல முடியாதே… இத மட்டும் எப்படி குறை சொல்வேன்…” என்றாள்.

“இல்லயே… நீ சொல்றத பார்த்தா குறை சொல்ற மாதிரி தான் இருக்கு…” என வம்புக்கு இழுத்தான்.

“ஓஹோ… நீங்க அப்படி வரிங்களா… சொன்னா என்ன பண்ணுவிங்க…” இவளும் பதிலுக்கு வரிஞ்சு கட்டி சண்டைக்கு போனாள்.

“சொல்லி தாரேன் பாரு…” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ஹீம்… சொல்லிட்டாலும்… வேற வினையே வேண்டாம்…” பயந்துப் போல நடித்தாள்.

“அப்படி என்ன வினை வந்திடும்னு நினைச்சுகிட்டு இந்த பயம் பயப்படறே…”

“போதும் விளையாட்டு… அடுத்து எங்க போற ப்ளான்… எனக்கு தெரிஞ்சு எதோ ப்ளான் வச்சிருப்பிங்க…” என்றாள்.

சம்ரித் ஒன்றும் கூறாமல் சிரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்தது நேராக ஓட்டலுக்குள் நுழைந்தது. அங்கே அம்ரீதாவுக்கு தெரியாமலே சம்ரித் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

காரை விட்டு இறங்கியதும் சட்டென சம்ரித் அம்ரீதாவின் கண்களை மூடியவாறு அழைத்துக் கொண்டு போய்,”சர்ப்ரைஸ்…” என்று கூறி விட்டு மூடிய கண்களை திறந்தான்.

அங்கே ஒரு அழகான மேஜையில் சாட்டின் துணி விரிக்கப்பட்டு அங்கங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு நடுவில் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது.

அம்ரீதா மிகவும் ஆச்சரியப்பட்டு,”என்ன அடுத்ததடுத்து ஒரே சர்ப்ரைஸ் கொடுத்திட்டே போறிங்க…” எனக் கேட்டாள்.

சம்ரித்,”இதுக்கே ஆச்சரியப்பட்டால் எப்படி… இன்னமும் என்னன்ன இருக்கு…” எனக் கேட்டான்.

ஒரு இன்னிசை குழு தங்கள் கருவியோடு வந்து அங்கே தன் மென்னிசையை வாசித்துக் கொண்டிருந்தனர்.

பின்பு சம்ரித் ஒரு காலை மண்டியிட்டு குனிந்து அழகான பூங்கொத்தை எடுத்து அவள் முன்பு நீட்டியபடியே,”திஸ் ஃபார் யூ…” என்றான்.

அம்ரீதா ஆச்சரியத்தில் கண்களை விரித்து,”இதெல்லாம் எனக்கே… எனக்கா…” என்று ஒரு வித ராகத்தோடு கேட்டாள்.

அவனும் அதே ராகத்தில்,”ஆமாம்… உனக்கே… உனக்கு தான்…” என உரைத்தான்.

அவன் ராகத்தை ரசித்தவாறு சிரித்துக் கொண்டு குனிந்துப் பூங்கொத்தை பெற்றுக் கொண்டாள்.

பிறகு சம்ரித் திரும்பி இரு வெள்ளை சீருடை அணிந்திருந்த சிப்பந்திகளைப் பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்துக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தட்டில் ஒயிட்ஃபாரஸ்ட் கேக் எடுத்து வந்து அம்ரீதா முன்பு வைத்தனர்.

அதன் பின்பு ஒரு கத்தியை எடுத்து அவள் முன் நீட்டி,”ம்ம்ம்… கமான் கட் தி கேக்…” என்றவாறு சிரித்துக் கொண்டு சொன்னான்.

சுற்றியும் பார்வையை சூழல விட்டாள். யாரும் இவர்களை கவனிக்காமல் தங்கள் காரியத்தில் மூழ்கி இருந்தனர். பின்னர் ஓர் நிம்மதி பெருமூச்சு விட்டவாறு கத்தியை வாங்கி கேக்கை கட் பண்ணினாள். அம்ரீதா புன்னகையுடன் கேக்கை எடுத்து சம்ரித்துக்கு நாசூக்காக ஊட்டினாள்.

அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு அம்ரீதாவுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்ட முயல, இதையும் சற்றும் எதிர்ப்பார்க்காத அம்ரீதா சம்ரித்தை தள்ள முயல ஏற்கனவே அம்ரீதா அணைத்திருந்த கைகளோடு சேர்ந்து அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். இது சமயம் என்று அவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அம்ரீதா நிகழ்காலத்தில் இருந்து சொப்பனத்திற்கு சென்றுவிட்டாள்.

“வாவ்… வாட் அ ப்யூட்டிபூல் கபில்…” என சொல்லி சுற்றியுள்ள மேஜைகளில் உள்ளவர்கள் எழுந்து நின்று ஆரவாரத்துடன் கைத் தட்டினார்கள். ஒரு சிலர் விசில் கூட அடித்தனர்.

கைத் தட்டல் ஒலியில் அம்ரீதா கனவுலகத்தில் இருந்து மீண்டு நடப்புக்கு வந்து வெட்கப்பட்டு மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.

இது தான் சாக்கு என சம்ரித் மீண்டும்இறுக்கி அணைத்தான். அம்ரீதா நெளிந்துக் கொண்டே,”விடுங்க… எல்லோரும் நம்மளயே பார்க்கிறாங்க… எனக்கு கொஞ்சம் கில்டியா ஆகிறது…” சொன்னாள்.

மேலும் சில ஜோடிகள் இவர்களை மாதிரியே கட்டிப் பிடித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

பிறகு ஒருவருக்கொருவர் ஒரே தட்டில் இருந்த உணவை ஊட்டிக் கொண்டனர். அங்கிருந்து மகிழ்ச்சியோடு கிளம்பினர். அவர்கள் முதலில் சண்டையோடு ஆரம்பித்து இறுதியில் மனநிறைவோடு எல்லாவற்றையும் முடித்துக் கொண்டனர்.

இருவருக்கும் இந்த பொழுது இனிமையான பொழுதாக அமைந்தது. வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருந்த பொழுது…

அந்த நினைவுகள் எந்நாளில் நினைவின்றி நீங்குமோ…

இப்பொழுது இனிமையான பொழுதாக இருப்பதை…

வாழ்வில் இத்தருணம் என்றென்றும் மறக்குமோ….

9 – தீக்கு தென்றலோடு மோகம் Read More »

நெஞ்சோரம் பூத்தவளே 24

பூ  – 25 முல்லை இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.   அவள் அருகில் அமர்ந்திருந்த செந்தூரன், அவளது தலைமுடியை வருடியபடி அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.   மெல்ல கண் விழித்த முல்லை, அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.   “சின்னையா…” என்று சோர்வில் சிரித்தவளின் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவன்,   “அம்மணி… இப்போ எப்படி இருக்கு? இன்னும் மயக்கமா  இருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டான்.   “இல்லங்க… இப்போ பரவாயில்ல.” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.   “அப்போ

நெஞ்சோரம் பூத்தவளே 24 Read More »

மெல்ல மெல்ல காதல் வருதே

17. காதல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாறன், ஆழமாக ஒரு மூச்சை இழுத்தான். அவனது வீட்டிற்கு சென்று தயாராகி விட்டு தன்னுடைய ஆபிஸ் வேலையாக அவனுடைய பார்ட்னர் ஏ. எம். சொலியூஷன்ஸ் நிறுவனத்திற்குச் சென்றான்.கட்டிடத்தைப் பார்த்தவுடன் அவன் இதயம் வேகமாகத் துடித்தது. ஏதோ உள்ளுணர்வு தூண்ட திரும்பி பார்க்க அங்கு சந்தியா..மாறனுக்கு மகிழ்ச்சியில் கண்ணில் ஆனந்தம் மின்னியது..அவள் லிஃப்ட் காக நின்று கொண்டிருந்தாள்..அவளை நோக்கி சென்றவன் போகும் முன் சந்தியா சென்று விட்டாள்..  

மெல்ல மெல்ல காதல் வருதே Read More »

error: Content is protected !!
Scroll to Top