6 – இத இதமாய் கொன்றாயடி
அதற்குப் பிறகு இரண்டு பேர் மனதில் பகை வளர்ந்துக் கொண்டே போனது. பார்க்கும் இடத்தில் எதிரியாய் பாவித்து சண்டைப் போட்டனர். இவர்கள் இப்படி இருக்கும் போது இவர்களுக்கு திருமணமா… விதி நினைத்தால் நடக்காமல் போய்விடுமா…
ஊராரை திரட்டிக் கொண்டு வசந்தா பெண் பார்க்க வந்திருந்தார். தமிழ் யாருக்கோ வந்த விருந்து என உட்கார்ந்திருந்தான். மகிழ்விழியை கூடத்திற்கு அழைத்து வந்தனர். அவளும் தமிழை முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்து நின்றாள். கை எடுத்து கும்பிடச் சொன்னார்கள். அப்படி செய்யாமல் பிடிவாத்த்துடன் விரைப்பாக இருந்தாள்.
இதை எல்லாம் பார்க்கும் போது தமிழுக்கு கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் இந்த இடத்தில் கோபப்படுவதில் நியாயமில்லை என பற்களை கடித்து பொறுத்துக் கொண்டான். மகிழை உள்ளே அழைத்துக் கொண்டுச் சென்ற பின் நிச்சயதாம்பாளம் மாற்றி நிச்சயம் செய்துக் கொண்டனர். தமிழுக்கு தந்தை இல்லாத்தால் பங்காளி உறவில் வயதில் ஒரு பெரியவர் தட்டை முன் நின்று மாற்றிக் கொண்டார்.
நிச்சயம் நல்லபடியாக முடித்துக் கொண்டு அனைவருக்கும் விருந்துப் படைத்தனர். இருவரையும் ஒன்றாக அமர வைத்து விருந்து படைத்தனர். அதற்கு முன்னால் தமிழும் மகிழும் முறுக்கிக் கொண்டு இருந்தனர். இருவரையும் ஒன்றாக உட்கார வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒருவழியாக எல்லாம் முடிந்ததும் வசந்தா அனைவரிடம் சொல்லிக் கிளம்பினார். தமிழ் மகிழைத் தவிர அனைவரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
உடனே மகிழ் முகம் தொங்கிப் போய்லிட்டது. “பெரிய இவன்… சொல்லிக் கொள்ளாமல் போறான்… போனால் போகிறான்… எனக்கு என்ன வந்துச்சு…” என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள். நல்லவேளை அவள் முணுமுணுத்தை யாரும் கவனிக்கவில்வை. மந்தாகினி மட்டும்கவனித்திருந்தால் “மாப்ளய இவனே… அவனே என்று பேசவாயா…”பொளந்துக் கட்டிப்பார்.
தமிழ் முகம் ஒன்றும் செழுசெழுப்பாக இல்லை. தன் அறைக்குள் புகுந்துக் கொண்டு,”ஆளைப் பாரு… அவளைப் பாரு… நல்லா திருஷ்டி பொம்மையாட்டம் சேலய சுற்றி கொண்டு வந்து நிற்கிறாளே…” என திட்டிக் கொண்டே இருந்தான்.
கல்யாணம் நடக்கும் வரை இராப் பகலா இருவரும் ஒருலரை திட்டிக் கொண்டே இருந்தனர். ஊரார் இவர்களை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சென்றனர். விடிந்தால் கல்யாணம் ஊரார் எல்லாம் தமிழ் குலத்தெய்வம் கோவிலில் கூடியிருந்தனர். பட்டுவேஷ்டியில் சரசரக்க தமிழ் மாப்பிள்ளை கோலத்தில் பிரகாரத்தின் முன் வந்து நின்றான். அதே போல் மகிழும் பட்டுசேலை சளசளக்க தமிழின் முன் வந்து நின்றாள்.இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பார்வையில் அனல் பறந்தது.
கோவில் பூசாரி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்த தாலியை தமிழ் முன்பு நீட்டினார். சில நொடிகள் தாலியை வெறுப்பாகப பார்த்தான். வசந்தா யாரும் அறியாமல் முலங்கையில் லேசாக இடித்து, “என்ன தாலியவ பார்க்கிறவ… நல்ல நேரம போறதுக்குள்ள எடுத்து கட்டு…” என்று முணுமுணுத்தார்.
பிறகு தமிழ் தாலியை எடுத்து கழுத்தை சுற்றிக் கொண்டும் போகும் போது,”ஏன்டா… இவன் கையால தாலி வாங்கிட்ட என வாழ்நாள் பூரா மனசு நொந்து போய் சாவ பாரு…” என்று அவள் காதோரமாக சென்று மெல்ல கூறி கேலியாகச் சிரித்தான்.
பதிலுக்கு அவளும் நக்கலாக,”தொட்டான்… கொட்டான்… என்ற பழமொழிகேற்ப என்னய தொட்டில இனி உனக்கு தான் அழிவு காலம் ஆரம்பம்…” சொன்னாள்.
இருவரும் கிசுகிசுப்பாக பேசிக் கொள்ள மும்மரத்தில் மூழ்கியிருக்க… ஊர் பெரியவர்களில் ஒருத்தர், “உங்களக்குள்ள பேசிகிட்டது போதும்… இனி நடக்கிற சாங்கியம் எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்…” சொன்னார். மற்றவர்கள் எல்லாம் கொல்லென சிரித்தனர்.
வன் பெண் ப
மற்ற தம்பதியர் நாணத்துடன் மகிழ்ச்சியுடன் செய்யும் சடங்கு எல்லாம் இருவரும் ஏட்டிக்கு போட்டியாக செய்தனர். இந்த கூத்து எல்லாம் முடிந்து மகிழ் வீட்டுக்கு வந்தனர். இருவரையும் மாலையில் நல்ல நேரம் பார்த்து சீரோடு அழைத்து கொண்டு போய் விடுவதாக ஏற்பாடு. அதுவரை மகிழ் வீட்டில் தமிழுக்கு இருந்தாக வேண்டிய கட்டாயம். அவன் உறவினர்கள் எல்லாம் கோவில் எல்லாம் முடித்துவிட்டு அவன் வீட்டிற்கு சென்றார்கள். யாரும் அவனோடு மகிழ் வீட்டிற்கு வரவில்லை. அங்கு அவனுக்கு பேச்சுக்கு துணைக்கு ஆளில்லாமல் தனித்து விடப்பட்டான். மகிழும் வீட்டிக்குள் போனவள் தான் வெளியே வரவில்லை. தமிழுக்கு வேலாயுதத்தை தவிர ஒருவரையும் அவ்வளவாக பரிச்சயமில்லை. கூடத்தில் எவ்வளவோ நேரம் தான் மோட்டுவளையத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது ரொம்ப கடினம்.
ஒருவழியாக தமிழ் மதியவிருந்தை முடித்துக் கொண்டு மாலைக்கு குளித்து முடித்து தயாரனான். அதேப் போல் மகிழும் கிளம்பினாள். இருவரையும் சீரோடு அழைத்துக் கொண்டு தமிழ் வீடு வந்தார்கள். அங்கு தமிழையும் மகிழையும் ஒன்றாக நிற்க வைத்து சுமங்கிலி பெண் ஒருத்தி வந்து ஆலம் சுற்றி வீட்டுக்குள் அழைத்தார். அப்போதும் இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு ஆளுக்கொரு திசையை பார்த்து் கொண்டு நின்றார்கள். இதை எல்லாம் ஒருவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அவன் பெயர் தனராஜ். வேறு யாருமில்லை அவனும் உறவினன் தான. வசந்தாவிற்கு கொழுந்தன் பையன் தான். அவன் பத்து வயதில் தாய் இருக்கும் வரை இந்த ஊரில் தான் இருந்தார்கள். விஷக்காய்ச்சல் கண்டு இறந்த பிறகு பட்டணத்துக்கு பிழைக்கச் சென்று ஓரளவுக்கு வசதி வாய்ப்போடு வாழ்ந்து வந்தார்கள். தாயும் இல்லாத்தால் கண்டிச்சு வளர்க்க வேண்டிய தந்தையும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்ததால் கண்டிக்க ஆளில்லாமல் தான்தோன்றி வளர்ந்துவிட்டான். பிறகு உண்மை தெரிந்த பிறகு எல்லாம் கை மீறிவிட்டது.
இவனும் கல்யாணத்திற்கு வந்ததில் இருந்து பார்க்கிறான் இருவருமமுகத்தை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவன் கோணல் புத்தி மிகவும் கோணலாக யோசித்தது. ‘பெண் மிக அழகாக இருக்கிறாள். இந்த பட்டிக்காட்டனுக்கு இப்படிப் பட்ட பொண்ணா…’ என்று வயிறு எரிந்தான்.’எப்படியாவது இந்த பொண்ண தன் மஞ்சத்தை அலங்கரித்து பார்க்க வேண்டும்…’ என பேராசைக் கொண்டான். அவள் அழகைப் பார்க்க… பார்க்க ஆசையே வெறியாக மாறியது.
ஏற்கனவே அவன் பெண் பித்துப் பிடித்தவன். இவளைப் பார்த்தும் பித்து தலைக் கேறிவிட்டது. கல்யாணத்தை முடித்துக் கொண்டு அன்றைக்கே சென்றுவிடலாம் என்று எண்ணியவன்… தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். தன் எண்ணம் ஈடேறும் வரை இங்கேயே தங்கலாம் என முடிவு எடுத்தான். தன் முடிவை செயலாற்றும் விதமாக தன் தந்தையிடம் சென்று,”ப்பா… எனக்கு இந்த ஊர் பிடிச்சுருக்கு… அதனால கொஞ்சநாள் இங்கேயே இருந்து ஊரே சுத்தி பார்க்கலாம்னு இருக்கேன்… நீ என்ன நனக்கிற…”
இந்த பட்டிகாட்டில் ஒருநாள் கூட இருக்கமுடியாது என்று ஆடியவன்… இப்ப இப்படி சொல்கிறான் என்று நினைத்தவர்,”யாருடா… அந்த பொண்ணு…” அவன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டவராக கேட்டான். தன் திட்டத்தை கண்டுப்பிடித்து விட்டாரே என மனதில் நினைத்தவாறே… அதை மறைத்துக் கொண்டு,”ச்சே… யாரு சொன்னார்கள்… அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… கண்டதயும் நனச்சு கற்பனய வளர்த்துக்காதிங்க…”என சொல்லிவிட்டு இன்னமும் இருந்தால் என்ன பொய் சொல்லி சமாளிக்க வேண்டும் என அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.
மொச புடிக்கற நாய மூஞ்சிய பார்த்தா தெரியாதா… என நினைத்துக் கொண்டு வேறு சோழியப் பார்க்க சென்றார். அவருக்கு இந்த ஊரில் இருந்தால் மனைவியின் நினைவு அடிக்கடி வருவதால் அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. அதற்கு தகுந்தாற் போல் மகன் கிளம்பு போதே கல்யாணம் முடிந்ததும் உடனே ஊருக்கு திரும்ப வேண்டும் என சொல்லியிருந்தால் உடனே கிளம்ப வேண்டும் என்று எண்ணியிருந்தார். அவன் இப்படி சொன்னதும் வேறுவழியில்லாமல் அந்த ஊரிலேயே தங்கவேண்டியதாக போய்விட்டது.
தமிழோட அறை தமிழ் மகிழோட வரவுக்காக சீறும் சிங்கமாக குதறி விடும் நோக்கோடு காத்திருந்தான். மகிழும் கொத்தவரும் பாம்பின் வெறியோடு நிலம் அதிர நடந்து வந்தாள். வந்ததும் கையில் கொண்டு வந்த சொம்பை நங்கென்று அங்கிருந்த மேஜையில் வைத்தாள்.
தமிழுக்கு சுரீரென்று கோபம் தலைக்க ஏறியது. உடனே,”பார்த்து பார்த்து சொம்பு ஒடுங்கிற போகுது…” என கோமாக்க் கேட்டான்.
“ஒடுங்கினால் உனக்கு என்ன வந்துச்சு… எம்ப்பா வூட்டு சொம்பு… நா சீதனமா கொண்டு வந்தது… நானு கவலப்படாத போது உனக்கு என்ன கவல…”
“அதானே… உம் சொம்பு உமக்கு இல்லாத கவல… எமக்கு எதுக்கு…” என்று சொல்லி அலட்சியமாக தோளை குலுக்கினான்.
அவன் அப்படி சொன்னதும் பதிலுக்கு பதில் ஏதாவது பேசி அவன் வாயை அடைக்க வேண்டும் என நினைத்தவளால் என்ன பேசுவது என தெரியாமல் பேச்சற்று கோபத்துடன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றாள்.
அவனும் பேச்சு முடிந்து என்று தன் படுக்கையில் படுத்ததும் உறங்கிவிட்டான். அவனோடு படுக்கையில் படுக்க ஒருமாதிரியாக இருக்கவே… சுவர் ஓரமாக கால்களை மடித்து உட்கார்ந்துக் கொண்டாள். நேரம் நேரமாக அவளுக்கு தூக்கம் சொக்கவே அவளை அறியாமல் உறங்கிவிட்டாள்.
ஜன்னல் வழியாக காலை வெயில் மகிழ் முகத்தில்பட்டதும் கண்ணை கசக்கிக் கொண்டு கண் விழித்தாள். அறையை சுற்றிலும் முற்றிலும் பார்த்தாள். அறை வெறச் சோடிகிடந்தது. தமிழ் எப்பவோ எழுந்து சென்றுவிட்டான்.
மகிழுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த வீட்டுக்கு வந்து வருடங்கள் ஓடிவிட்டது. எந்த அறை எந்த பக்கம் என்பது கூட மறந்துவிட்டது எப்படி போவது என தெரியாமல் பேந்த பேந்த முழித்து தடுமாறினாள்.
இவள் தடுமாற்றத்தைப் புரிந்து கொண்ட மாதிரி வசந்தா வந்து,”வாம்மா… இப்ப தான் எழுந்தியா… தமிழ் வெள்ளன எழுந்து நேரமா போயிருக்கான்… அவன் நேரம் கழித்து வந்து சாப்பிடுவான். இப்ப நீ வந்து சாப்பிடு… முதலில் காபிய தண்ணீ குடிக்கறியா… நேரமாச்சு டிபனே சாப்பிடறியா…” கேட்டாள்.
“இல்ல அத்த… டிபனே சாப்பிடறே…” உள்ளுக்குள் கண்லயானம் முடிந்து ஒருநாள் கூட ஆகவில்லை அதுக்குள்ள எப்படியோ போகட்டும் என்று விட்டுட்டு போய்விட்டான் என்ற கோபம் இருந்தாலும் அதை அத்தையிடம் காட்டிக் கொள்ளவில்லை. அவன் நேரில் வந்தால் கடித்து குதறிவிடும்
என்ற வெறியே இருந்தது.