7 – இத இதமாய் கொன்றாயடி
தமிழ் அவ்வளவு எளிதில் வீடு ஙரவில்லை. அலன் வயலுக்கு போய் அங்கிருக்கும் அவன் மோட்டர் போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஆட்கள் ஙந்தவுடன் வேலையை பிரித்துக் கொடுத்து மேற்பார்வை பார்த்து விட்டு வர நண்பகல் ஆகிவிட்டது. அதற்குள் மகிழ் வீட்டார் மறுவீட்டுக்கு அழைக்க வந்திருந்தனர். வசந்தாவும் இவர்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு,”வாங்க சம்மந்தி… எல்லோரும் வாங்க…” என அழைத்தார்.
அதற்குள் மகிமும் வந்து,”வாங்க…” அழைத்துவிட்டு,’நீங்கதான கண்ணாலம் பண்ண வச்சிங்க… நீங்களே அனுபவிங்க…’ என தூணில் சாய்ந்துக் கொண்டு அசட்டாக நின்றுக் கொண்டிருந்தாள். “ வரோம்… மாப்ள எங்க…” என்று வேலாயுதம் கேட்டார். அதற்கு வசந்தா தான்,“இதோ தமிழ் வயல் அவரை போயிருக்கான்… வீடு வர நேரந்தான் வந்துவிடுவான்…” சொன்னார். தமிழுக்காக காத்திருந்தனர்.
அப்பாவும உறவினர்களும் கேட்கும்கேள்விகளும் விட்டேத்தியாக பதில் சொன்னாள்.மகிழோட அம்மா வீட்டில் இருந்து சமையாட்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
நண்பகல் வேளையில் வீடு வந்தவன் வீடு நிறைய உறவினர்களைப் பாரத்ததும் ஒருநொடி அதிர்ச்சியில் மலைத்து நின்றுவிட்டான். அடுத்தநொடி தன்னை சமாளித்துக் கொண்டு,”வாங்க மாமா.. வாங்க சின்ன மாமா… வாங்க சின்ன அத்த… எல்லோரும் சாப்பிட்டிங்களா… காபி தண்ணீயாவது குடிச்சிங்களா…” முறையாக்க் கேட்டான்.
இவனைப் பார்த்ததும் மகிழ் முகத்தைத் திருப்பிக் கொண்டு தங்கள் அறைக்குப் போனாள். தமிழும் மகிழை முறைத்துக் கொண்டு நின்றான். இவர்கள் திருமணம் தான் ஊரறிந்த ரகசியம் தானே… சின்னப் பிள்ளை தானே விளையாட்டாக எண்ணி அவர்கள் யாரும் தவறாக நினைக்கவில்லை.
“காபி தண்ணீ மட்டும் குடிச்சோம் மாப்ள… மதிய விருந்து நம்ம வீட்டில் தான் மாப்ள… நீங்களும் மகிழும் வரணும்…” முறைப்படியாக அழைத்தார்.
.
தன்ராஜ் இவர்கள் இப்படி நடந்துக் கொள்ளவும் இரவு இவர்களுக்குள் ஒன்றும் நடக்கவில்ல என்பதைப் புரிந்துக் கொண்டான். தெளிந்த நீரில் மீன் பிடிப்பது கஷ்டம் ஆனால் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எளிது என்பதைப் புரிந்துக் கொண்டவன் அந்த வேளையில் என்ன செய்யலாம் என்று திட்டம்போட்டான்.
இப்படி ஒரு சதிவேலை தங்களைச் சுற்றி நடப்பது தெரியாமல் தமிழ் மகிழைத் தேடித் தங்கள் அறைக்குப் போய் சண்டைப் போட்டான்.
“ஏய்… என்ன உம் மனசுல நனச்சுட்டு இருக்க… “
“சத்தியமா… உம்ம நனக்கல…” நக்கலாக்க் கேட்டாள்.
“எம்ம நனக்கல… அது எமக்கும் தெரியும்…” பதிலுக்கு நக்கலடித்தான்.
அடுத்ததும்,”வந்திருக்கறது எம் ஒரம்பற இல்ல… உம்பட ஒரம்பற அத நனப்பிருக்கா…” வினயமாகச் சொன்னான்.
“அதுக்கென்ன… இருந்துட்டு போகட்டும்…” திமிராகவே சொன்னாள்.
“திமிரு… உடம்பெல்லாம் திமிரு… ம்ம்… சீக்கிரம் கிளம்பு…” எனுத்தரவிட்டன்.
“திடுதிப்பு கிளம்புனா… எங்க கிளம்பறது…” நொடித்தாள்.
“சொன்னா தான் கிளம்புவுயா… ம்ம்… உம் அப்பாரு வீட்டுக்கு…”
“எதுக்கு” என வெடுக்கென கேட்டாள்.
“நம்மள மறுவீட்டு விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க…”
“அதுக்கு இவங்க கூப்பிட்டா போவணும… நா வேணா வேணா சொல்ல சொல்ல கேட்காம கண்ணாலம் பண்ணி வச்சாங்க… நா போவமாட்டே… வரமாட்டேனு சொல்லிடு… அவமானப்பட்டு போவட்டும்…”
மறுபடியும் தன்னை மரியாதையில்லாமல் பேசவும் சினம் வந்தது… அதிலும் தன் மாமனை அவமானப்படுத்தி பேசவும்…
“போதும் நிறுத்து… இனி ஒரு வார்த்தை பேசினா நல்லாயிருக்காது ஜாக்கிரதை…” விரல் நீட்டி எச்சரித்தான்
அவன் கத்த தொடங்கியதும் வாயை இறுக்க மூடிக் கொண்டாள்.
“ஏதும் பேசாமல் கிளம்பு…” அதிகாரமாக கூறி அறையை விட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.
அறையை விட்டு வெளியே வந்தவன் விருந்தினர்களைப் பார்த்து,”மகிழ் ரெடியாயிட்டு இருக்கா… வந்ததும் போவலாம்…” என சொல்லியவன் தானும் கிளம்பப் போனான்.
வேறு அறையில் உடை மாற்றிக் கொண்டு வந்தான். அதே நேரம் மகிழ்விழியும் தயாராகி வந்தாள்.
மகிழ் உடை உடுத்தியிருந்த அழகை யார் ரசிக்கனுமோ அவன் ரசிக்கவில்லை. தன்ராஜ் திருட்டுத்தனமாக அணுஅணுவாக ரசித்தான்.
இவன் பார்வை தன் மகள் படிவதை அறியாமல்,”வாங்க சின்ன மாப்ள… நீங்களும் எங்க கூட வாங்க… வசந்தாவும் நீயும் வா தாயி…” என அழைத்தார்.
உடனே வசந்தா,”ஒறம்பர எல்லாம் வீடு நிறய இருக்காங்க… வந்தவங்கள கவனிக்கனுமே…” வரலைங்கறது நாகரிகமாக மறுத்துவிட்டாள்.
உடனே தமிழும்,”ம்மா… சொல்றது தான் சரி மாமா… வாங்க நாம போகலாம்…” சொல்லிவிட்டு மகிழோட கிளம்பினான். அப்படிப் போனால் தான் கிடைக்கும் இடத்தில் எல்லாம் கோல் அடிக்கலாம் எனவே தன்ராஜூவும் கூடவே ஒட்டிக் கொண்டான்.
இவர்கள் போன நேரம் தடபுடலாக கறி விருந்து ரெடியாகிக் கொண்டிருந்தது. அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த மந்தாகினி,”ஏலே… வரச் வேலய பாருங்க… முனியா அந்த கறிய வறுத்து கொட்டிடு…” அவசர அவசரமாக புடவைத் தலைப்பில் கைகளை துடைத்துக் கொண்டு,”வாங்க மாப்ள… வாங்க சின்ன மாப்ள…” என்றாள்.
தமிழ் தலையை மட்டும் ஆட்டினான். மகிழுக்கு’இந்தம்மா… நம்மள மட்டும் கூப்பிடாம எல்லோரையும் கூப்பிடது…’ கோவித்துக் கொண்டு முகத்தை தூக்கி வைத்திருந்தாள். அதை அவர் கவனிக்கவில்லை.
தன்ராஜ் அங்கேயும் போய சும்மா இருந்தானா அதுவும் இல்லை. “வரங்க அத்த… சமையலாகிடுச்சா… ஏதாவது வேல இருந்தா சொல்லுங்க… நா செய்யறே…” என்று சொன்னான்.
“இருக்கட்டும் மாப்ள… நீங்க எதுக்கு இந்த வேலய எல்லாம் செஞ்சுகிட்டு… அதுக்கு எல்லாம் ஆள் போட்டிருக்கு… அவங்க எல்லாம் பார்த்துவாங்க…” என்றார்.
“இல்ல அத்த… கூச்சப்படாதிங்க… எதுனாலும் இருந்தா சொல்லுங்க.. நம்ம வீட்டு வேலதான்…” என கூறிக் கொண்டே சமையல் செய்யும் இடத்திற்கு விரைந்தான்.
இவனே அவர்களோடு அறிமுகமாகி தெரியாத வேலை எல்லாம் இழுத்துப் போட்டுகிட்டு செய்தான். தெரியாம செய்தலோ என்னவோ மிகவும் சொதப்பி வைத்தான். சமையலாட்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் முழித்தனர்.
மந்தாகினி இவன் செய்யும் வேலையெல்லாம் பார்த்துவிட்டு இவனைவிட்டால் உறவினர்கள் சாப்பிடுவதற்கு இல்லாமல் முழுவதும் கெடுத்துவிடுவான். அர்த்ததுடன் வேலாயுதத்தைப் பார்த்தார்.
தன் மனைவி சொல்ல வரும் சேதி புரிந்தவர் உடனே,“ஏங்க சின்ன மாப்ள… உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலயெல்லாம் போதும்… எந்திரிச்சு வாங்க…” கூறி கையை பிடித்து இழுத்துச் சென்றார்.
சமையலாட்கள்,’அப்பாடி’ என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தன்ராஜ் அடுத்தது பெண்கள் பக்கம் பார்வை திரும்பியது. ஏன்னெற்றால் அவர்களுக்கு நடுவே மகிழ்விழி அமர்ந்திருந்தாள். கூச்சமின்றி பெண்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு மகிழ் அருகில் அதுவும் மகிழை இடித்துக் கொண்டு உட்கார்ந்தான்.
மகிழுக்கு பிடிக்காமல் போக அருவெறுப்புடன் முகத்தை சுழித்தாள். அதற்கும் பல்லைக் காட்டி இளித்தான்.சட்டென முகத்தில் அடித்தாற் போல் அந்த இடத்தைவிட்டு எழுந்து நின்றவாறே,”எல்லாரும் என்னய தப்பா எடுத்துக்காதிங்க… சில ஐந்துக்கள் தொந்தரவு தாங்கமுடியல…” தன்ராஜை பார்த்துக முறைத்தவாறே சொன்னாள். அதில் தன்ராஜை தான் சொல்கிறாள் என அப்பட்டமாக தெரிந்தது. பிறகு அவள் அங்கிருந்து வெடுக்கென வேறு இடத்திற்குப் போய் உட்கார்ந்துக் கொண்டாள்.
அங்கும் அவன் போய் வம்பு வளர்த்தான். வேறுவழியில்லாமல் மகிழ் பளார் என ஒரு அறைவிட்டு,”எம்கிட்ட வம்பு வச்சுகிட்ட இப்படி தான் கன்னம் பழுத்துப் போகும்… ஜாக்கிரதை…” விரல் நீட்டி எச்சரித்து விட்டு தன் அறையில் புகுந்துக் கொண்டாள்.
எல்லோர் பார்க்க அவள் அடித்ததை அவன் அவமானமாக உணர்ந்தான். அந்த அவமானம் தாங்கமுடியாமல்,”இருடி… எம்ம அடிச்சிட்டில்ல… தனியாம மாட்டாம போகிடுவியா… அப்ப உம்ம பார்த்துக்கிறே…” என வஞ்சமாக உரைத்தான். இவன் செய்த வேலை எல்லாம் வசதியாக மறந்துவிட்டான்.
வெளியே வாசலில் தமிழ் உட்கார்ந்திருந்தால் அவனுக்கு இது எதுவும் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் சாதரணப் பொண்ணுக்கே தர்ம அடி கிடைத்திருக்கும். என்ன தான் பிடிக்காத மனைவி என்றாலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டான் அடி வெளுத்து வாங்கியிருப்பான்.
தன்ராஜ் இப்போது நேரம் சரியில்லை என அமைதியாகிப் போனான். அதன் பிறகு விருந்துப் பரிமாறினார்கள்.முதலில் தமிழ் உடகார்ந்து சாப்பிட வந்தான். வேலாயுதம் தான்,”ஜோடியாக உட்கார்ந்து சாப்பிடலாமே…” எனக் கேட்டார்.
அதற்கு தமிழ்,”அதெல்லாம் சரி வராது மாமா…” முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னான்.
“எப்படி மாப்ள… மறுவீட்டுக்கு வந்தா சோடியா உட்கார்ந்து சாப்பிட்டா தானே நல்லா இருக்கும்… இப்படி சோடியாக உட்கார்ந்து சாப்பிடுவது தானே ஊர் வழக்கம்…”
“ஊருக்குள்ளே எப்படியோ எனக்கு தெரியாத… ஆனால் நாங்க இப்படி தான்…” மறுத்துவிட்டான்.
அதே மாதிரியும் மகிழும்,”நா எல்லாம் அந்தாள் கூட உட்கார்ந்து சாப்பிடமாட்டேன்…” அவள் பங்குக்கு அவளும் மிரண்டுப் பிடித்தாள்.
இரண்டு பேரையும் வலுகட்டாயமாக இழுத்து பிடித்து உட்கார வைத்தனர். அப்படியும் ஆளுக்கொரு பக்கம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
இவர்களை எல்லாம் திருத்த முடியாது தலையில் அடித்துக் கொண்டு சென்றனர். தன்ராஜ் இவர்களில் எதிரில் இவர்களைப் பார்த்து உட்கார்ந்தான். அவன் மனதிற்குள் மகிழ்ந்துப் போனான். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுப் போல்…
ஏற்கனவே தமிழும. மகிழும் சண்டைக் கோழிகளாக திரிந்துக் கொண்டிருந்தனர். இவர்களை பிரிப்பதா பெரிய விஷயம்? திட்டமிட்டான். இவர்களை இந்த ஒரு விஷயத்தில் பிரிப்பது அவ்வளவு எளிதல்ல என்று நிருபித்தினர். இருவரும் என்ன சொன்னாலும் நம்ப மறுத்தனர்.
தமிழிடம் மகிழைப் பற்றி,”நீ சொன்னா நம்பமாட்டே… அவளுக்கு ஒரு தொடுப்பு இருக்கு…”
உடனே தமிழ்,”நீ நனக்கறே மாதிரி பொண்ணில்ல… அவ நெருப்பு மாதிரி உரசினா பத்திக்கும்…தெரிஞ்சு்கோ…”
தன்ராஜ் கஜினி முகமது விடாமல் படையெடுத்தான். மீண்டும் அவன்,”உமக்கு தெரியாது… நீ தான் மெச்சிக்கனும்… அவ நெருப்புனு யார் சொன்னா… எல்லாம் நடிப்பு… ஊருக்கே தெரியாம அவளுக்கு ஒரு கள்ளக் காதலன் இருக்கான்… அந்தளவுக்கு அவ ரகசியமாக கட்டி காப்பாத்திட்டு வருகிறா…” தமிழ் மனதில் தூபம் போட ஆரம்பித்தான்.
இருந்தாலும் தமிழ் நம்பாமல்,”இவ்வளவு நாளா நீ ஊருக்குள்ளே இல்ல… அப்படியிருக்கும் போது உனக்கு எப்படி தெரியும் அவளுக்கு ஒரு தொடர்பு இருக்குதுனு…” கழுத்தில் துண்டைப் போடாத குறையாக குறுக்கிட்டு கேள்விக் கேட்டான்.
இப்படிக் கேட்டால் எப்படி… மாட்டிக் கொண்டோம் என்ன பொய் சொல்லி தப்பிப்பது என அவன் குறுக்கு புத்தி யோசித்தது. ஒருவழி கண்டுப்்பிடித்தது. அதன்படி…
“அட பங்காளி… நீ பொழைக்க தெரியாத ஆளா இருக்கியாப்பா… எல்லா ஊருக்குள்ள அரசல் புரசலா பேசிகிட்டது… உம் பொஞ்சாதிய பத்தி எமக்கு எப்படி தெரியும்…” எடக்கு முடக்காக பேசவும் தமிழுக்கு சந்தேகம் வந்தது.
“ஏய்… எம்மா என்ன நனச்சிட்டு இருக்கே… நீ சொல்றது எல்லாம் கேக்கறது… நா என்னய கேனாயா நனச்சிட்டு இருக்கே… நீ பேசறதெல்ல்லாம் எடக்கு முடக்கு பேச்சாவே இருக்கு…” தன்ராஜ் சட்டையை இழுத்து அறைந்தான்.
Super sis
Thanks sis