8 – இத இதமாய் கொன்றாயடி
அறைந்த கன்னத்தை நீவிவிட்டபடி,”பங்காளி…… யாரு எம்ம அடிச்சது எம் பெரிப்பா மவன் அடிச்சது நா அதை எல்லாம் அடிச்சதுக்கு எல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டே… உம் பொஞ்சாதிக்கறது சொல்ல… அவள் கண்காணிச்சுட்டு சொல்லு… அவ்வளவு தான சொல்லுவேன்… நா வரேன்…” அவன் மனதை குழப்பும் வேலையை செய்ய ஆரம்பித்தான்.
‘ச்சே… அவள் அப்படியெல்லாம் இல்ல… இவன் தான் கண்டபடி உளறிகிட்டு இருக்கான்…’ என தன்ராஜ் சொல்வதை நம்பாமல் அசட்டையாக விட்டுவிட்டு வேறு வேலைய்யைப் பார்க்கச் சென்றான்.
மகிழைப் பார்க்க ஒருநாள் அவள் வீட்டிற்கு தோழி தேன்மொழி தயங்கி தயங்கி வந்தாள். “வா தேனு… நல்லா இருக்கியா…” என கையைப் பிடித்து சோபாவில் அமர வைத்தாள்.
“ம்ம்… நல்லா… இருக்கேன்…” சொல்லிவிட்டு யாராவது இருக்கிறார்களா சுற்றும் முற்றும்ப் பார்த்தாள். என்ன இப்படிப் பார்க்கிறாள் என யோசித்துவிட்டு,”எவரும் இல்ல… என்ன விசயம் சொல்லு…”கேட்டாள்.
அப்பொழுதும் அவள் பயந்தவளாக தயக்கத்துடன்,”இல்ல… நாம் கொஞ்சம் உம் ரூமில போய் பேசுவேம…” கொஞ்சுவதுப் போலக் கேட்டாள்.
மகிழை அவளைப் பார்த்து புரியாமல் தன் அறைக்குச் சென்றாள். போனதும் உடனே தேன்மொழி கதவை அடைத்தாள்.
இப்பவும் எதற்கு கதவை அடைக்கிறாள் என விழித்தாள். தேன்மொழி மெல்லிய குரலில்,”எமக்கு கதிரேசய விரும்பறேனு… அவனும் எம்மை போல தான் உசுருக்கா உசுருக்கா விரும்பறான். எங்கள நீதான் எப்பாடுபட்டாவது சேர்த்தி வைக்கனும்…” என மகிழ் காலில் விழுந்து கதறி அழுதள்.
மகிழா காலில் எல்லாம் விழுவாள் என எதிர்ப்பார்க்காமல் பதறியடித்து இரண்டு அடி தள்ளி நின்று,”ஹேய்… முதல்ல எந்திரி… எம்ம காலில் விழுந்து பாவத்த சேர்க்காத… நா எங்கிட்டு போயி அந்த பாவத்த கரைப்பேனு…”
இப்பொழுது காலுக்கு பதிலாக இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு,”எம்ம காதல எப்படியாவது சேர்த்தி வக்கனும்…” என கூறிவிட்டு கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.
வேறுவழி இல்லாமல் மகிழும் கையை உருவிக் கொண்டு,”சரி… சரி அழுகாதே… நா உம் காதல சேர்த்தி வக்கிறது எம் பொறுப்பு… அவசரப்பட்ட… எமக்கு நீ கொஞ்சம் டைம் கொடு…”
மகிழ் அப்படி சொன்னதும் தேன்மொழி அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு,”நீ சொல்லிட்டில… அப்புறம் எமக்கு என்ன கவல… எத்தன நாள் வேணா டைம் எடுத்துக்கோ… ஆனா உம் பதில் எமக்கு சாதமாக தான வரும்னு சொல்லிபுட்டேன்…” என கவலையின்றி துள்ளிக் கொண்டு ஓடினாள்.
இப்பொழுது மகிழுக்கு ,’ஓர் ஆணிடம் எப்படி போய் பேசுவது… முதலில் என்ன என்று அவனிடம் போய் பேசுவது… ‘ என மிகவும் குழம்பிப் போனாள்.அதே சிந்தனையில் இருந்ததால் தமிழ் வீட்டிற்கு வந்தது அவள் அறியவில்லை. அறிந்திருந்தாலும் அவனுக்கு மதியுணவு பரிமாறி இருக்கமாட்டாள் என்பது வேற விஷயம். இவனும் அவள் கையால் பரிமாறுவாள் என எதிர்ப்பார்த்துக் காத்திருக்கவில்லை.
அறையில் தன் சிந்தனையில் குறுக்கும் நெடுக்குமாக நடைப் பயின்றுக் கொண்டிருந்தவள் ஏதோ யோசனையுடன் செருப்பை மாட்டிக் கொண்டு விறுவிறுவென கதிரேசைப் பார்க்க விரைந்தாள்.
கதிரேசனை ரகசியமாகத் தோட்டத்தில் போய்ப் பார்த்தாள் மகிழ்விழி. அவன் அங்கு மோட்டர் போட்டு விட்டு பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான். அவன் வேலையில் கவனமாக இருந்ததால் மகிழ் வந்ததையும் கையை ஆட்டி கூப்பிட்டதையும் கவனிக்கவில்லை.
அருகில் அவன் காதருகே வந்து,”கதிரேசு… உங்ககிட்ட தனியா ஒரு விசயம் பேசணும்…”என்றாள்.
கதிரேசன் நிமர்ந்துப் பார்த்து,’இவள் எதுக்கு நம்மகிட்ட பேசணுங்கறாள்…’ என்ற யோசனையில்,”என்ன விசயமாகட எம்மகிட்டு பேசணும்கற… சட்டுபுட்டுனு சொல்லிபுட்டு இடத்தை காலி பண்ணு…” தேன்மொழியின் தோழி என தெரிந்திருந்தும் அவள் தனியாக வந்ததை அறிந்தும் யாராவது பார்த்தால் தவறாக நினைக்க கூடும் என்று அவளை துரத்துவதிலயே குறியாக இருந்தான்.
“நானு சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடேறன்… அதுக்கு பொறவு உம்மபாடு… தேனுபாடு…” தேன்மொழியின் பேரைக் கேட்டதும் அப்படியே சிலைப் போல நின்றுவிட்டான்.
மகிழ் கதிரேசனை உலுக்கி,”கதிரேசு… இங்க பாருங்க… உம்ம விசயம் எமக்கு எல்லாம் தேனு சொல்லிட்டா…”
கதிரேசன் என்னும் சிலைக்கு உயிர் வந்தது. “என்னாது… எம்ம விசயம் எல்லாம் தெரியுமா…” நம்பமாட்டமல் அதிர்ந்துப் போய் கேட்டான்.
“ஷ்ஷ்… சத்தம் போடாதிங்க… மெல்ல பேசுங்க… யாருக்காவது கேட்டுவிட போகுது…” என்று எச்சரித்தாள்.
அவள் எச்சரித்தவுடன் மெதுவாக,”தேனுகிட்ட யார்கிட்டவும் சொல்ல வேணாம்னு சொல்லியிருந்தேனு… அவசரப்பட்டு உம்கிட்ட அதுக்குள்ள சொல்லிபுட்டா… கேனசிறுக்கி…” என்று வைத்தான்.
“அவளயும் சொல்லி குத்தமில்ல… அவ மட்டும் என்ன பண்ணுவா… பயந்துகிட்டு எம்மகிட்ட சொல்லிப்புட்டா…” தேனுக்காக வக்காலத்து வாங்கினாள்.
‘என்ன பொண்ணு இவள் தன் தோழிக்காக இவ்வளோ பேசுகிறாளே…’ மகிழ்விழியின் பேச்சைக் கேட்டு புருவங்களை உயர்த்தி மெச்சுதலாக ஒரு பார்வைப் பார்த்தான்.
அவனுடைய மெச்சுதலைக் கண்டு மகிழும் வெட்கப்பட்டு,”அப்படி பார்க்காதிங்க…” என முகத்தை மூடிக் கொண்டாள்.
தொலைவில் இருந்துப் பார்கிறவர்களுக்கு இருவரும் காதலிக்கிறார்கள் என்று தோன்றும். அப்படி தான் தன்ராஜ் தமிழிடம் இருவரையும் காண்பித்து,”பாரு தமிழு… அவன் என்னவோ சொல்கிறானு… அதுக்கு மூஞ்சிய மூடிகிட்டு வெட்கப்படறா…” குழப்பிவிட்டான்.
இவள் இப்படிப்பட்டவளா என்று குழப்பத்துடன் கன்னத்தை தடவியவாறே தன் வயலுக்கு போகாமல் வீடுத் திரும்பினான். தமிழ் மனதை கலைத்ததில் தன்ராஜ் மிகவும் உற்சாகமானான்.
வயலுக்கு போகாமல் வீடு திரும்பியவனைப் பார்த்து,”ஏன்டா… இந்த நேரத்துக்கு நீ வயல்ல தான் இருக்கனோம்… இங்க என்ன பண்ற…” வசந்தா கேட்டார்.
“ஏம்மா… நா இந்த நேரத்துல வீட்டுக்கு வர கூடாத… இல்ல வர உரிமை இல்லியா…” கோபமாக்க் கேட்டான்.
“எதுக்கு இவ்வளவு கோபடப்பற… உமக்கு இல்லாத உரிமையா… நா என்ன தப்பா கேட்டுபுட்டே… வயலுக்கு போகிட்டா வேலய முடிக்காம சாமானியத்துல வீடு திரும்பமாட்ட… அதான் கேட்டேன்.”
யாரிடம் உள்ள கோபத்தை தன் தாயிடம் காண்பித்தால் வருத்தப்பட்டு,”சரி விடுமா… ஏதோ டென்ஷன் அதை உம்மிடம் காட்டிவிட்டேன்…” என தோளோடு அணைத்து ஆறுதல் கூறினான்.
அதற்கு வசந்தா முறுக்கிக் கொண்டு,”நா போறேன் விடுடா…” என அவன் கைகளைத் தட்டிவிட்டாள். ஆனால் வாய் சொல்லியது இருந்த இடத்தை விட்டு எழவே இல்லை.
தமிழ்,”வாய் தான் சொல்கிறது… இருந்த இடத்த விட்டு எந்திரிக்கவே காணோம்…”கிண்டலடித்து சிரித்தான்.
உடனே வசந்தா பொய் கோபம் கொண்டு வெடுக்கென அந்த இடத்தை விட்டு அகன்றார். அதற்கும் சிரிப்பு தான் தமிழிடம்… நேராக சமையறைக்கு சென்றவர் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது.
‘தான் என்ன மனநிலையில் வீடு வந்தும்… இப்ப சிரிப்பது என்ன…’ என நினைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் கையில் ஒரு பாத்திரத்தோடு வந்தாள். அந்த பாத்திரத்தை தமிழ் முன்னாடி நீட்டினாள். அதில் ரவாலட்டு நிறைந்திருந்தது. அதைப் பார்த்தவுடன் ஆசையாக அதை எடுத்து உண்டான்.
அவன் உண்ணும் அழகை கண்டு வசந்தா ரசித்தார். எப்படிப்பட்ட கோபத்தையும் நீக்கிவிடும் சக்தி தாய்க்கு உண்டு என்பதை புரிந்துக் கொண்டான். அப்பொழுது மகிழ் அவன் ஞாபகத்தில் இல்லை. அப்படியே தாய் மடியில் படுத்தவாறே,” அன்னக்கு மாதிரியே கால் வலிய பொறுத்து கொண்டு எம்மகிட்ட ஒன்னும் சொல்லாம இருக்ககூடாது. சரியா…”
அதை கேட்டவர்,”சரிடா… நா சொல்றே… பேசாம நீ தூங்கு…” என சொன்னார்.
மகிழ் மதியம் வீடு வரும் போது வீடு அமைதியாக இருந்தது. அவன் அவனுடைய அம்மா மடியில் படித்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் அம்மாவும் அவன் மேல் சாய்ந்து சிறிது நேரம் கண் அசந்தார். அந்த இடைவெளியில் சத்தமின்றி தன் அறையில் புகுந்துக் கொண்டாள்.
கால் மருத்துப் போகும் முன் தமிழ் விழித்தவன் கேட்டவன் முதல் கேள்வியே,”ம்மா… கால் ஒன்னும் மரத்து போகவில்ல தானே…”
“இல்லடா… நா நல்லா தான் இருக்கேன்…” என்றார். அப்பவும் தமிழ் நம்பாமல் பார்த்தான்.
“என்ன நீ நம்பலயா…” எழுந்து விரைப்பாக நடந்து காண்பித்தார். அதன் பிறகு தான் அவன் நிம்மதியாக எழுந்துப் போனான்.
அவனுடய நிம்மதிக்கு ஆயுள் குறைவு. மீண்டும் மகிழும் கதிரேசும் சிரித்துப் பேசிக் கொண்டது கண் முன்னால் தோன்றியது. அவனுக்கு அதை நினைக்கும் போதே அடிவயிற்றில் தீகங்கை போல கொழுந்து விட்டு எரிந்தது. அந்த தீயை அணைக்கும் வழி அறியாமல் திண்டாடிப் போனான். அதனால் அவனுக்கு கோபம் கோபமாக வந்தது..
அவளிடமே அவன் காரணமே இல்லாமல் எரிந்து விழுந்தான். சிறிது நேரம் இது எப்பவும் எரிந்து விழுகிறது தானே என்று பேசாமல் இருந்தாள். இதையே அவன் தொடரவும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,”போதும் நிறுத்துங்க… விட்டால் பேசிகிட்டே போறிங்க… அப்படி என்ன தான் உங்களுக்கு பிரச்சனை…”
“புடலங்காவுக்கு உப்பு பத்தல…” எகத்தாளமாக பதில் சொன்னான்.
“அதை புடலங்காவிடம் கேட்க வேண்டியது தானே…” அவனைவிட மிக எகத்தாளமாக கேட்டாள்.
“ச்சைய்… உன்கிட்ட என்ன பேச்சு வேண்டிகிடக்கு…” என்று கோபப்பட்டான்.
“இந்த கோபத்துக்கு ஒன்னும் குறச்சலில்ல…” இவளும் பதிலுக்கு கோபமாக கத்திவிட்டு சமையலறைக்குச் சென்று கோபம் குறைய மூச்சு வாங்க நீரை அருந்தினாள்.
அவள் பின்னால் வந்த தமிழ்,’ச்சே… இவளுக்கு இதே வேலயா போச்சு… இவளிடம் பேசவே கூடாது…’ நினைத்தவாறே உரக்கடைக்கு சென்றான்.
எப்பொழுதும் ஆறுமணிக்கு வரும் தன் முதலாளி இன்று ஐந்துமணிக்கு வந்திருக்கவும்,”என்னண்ணா… இன்னக்கு பொழுது போறதுகுள்ள வந்திட்டிங்க… ஏதாவது வெளியே போகிற சோழியிருக்கா…” கேட்டான்.
“இல்லடா… அது வந்து… உம்மகிட்ட சொல்றதுகு என்னடா… அது வந்து எமக்கும் உம் அக்காவுக்கும் ஒரு சின்ன சண்டயாகி போச்சு…” முடிப்பதற்குள், “அதான பார்த்தே… நீரும் அக்காவும் எப்ப ஒத்துமையா இருந்திங்க… எப்பவும் சண்டகோழியாட்டம் திரிவிங்க…” நக்கலாகச் சொன்னான்.
‘அவன் சொல்வது உண்மை தானே… எப்பவும் இருவரும் கீரியும் பாம்பும் மாதிரி தான இருந்துகறோம்…’ தலையை கீழே குனிந்துக் கொண்டான்.
“பீல் பண்ணாதிங்க விடுங்கண்ணா… வாழ்கைய இதுல சாதரணம்பா…” முதலாளி வருத்தப்படுவது பிடிக்காமல் தேற்றினான்.
‘இவன் எல்லாம் தேற்றும் நிலைமயில் நாம இருக்கிறோம்.’ எண்ணி நொந்துப் போனான்.
தமிழ் உரக்கடையில் நீண்டநேரம் வேலைப் பார்த்துவிட்டு தாமதமாக வீடுப் போய் சேர்ந்தான். புருஷனுக்கு தன் கையால் பரிமாறட்டும் எண்ணிக் கொண்ட வசந்தா தான் முதல் ஆளாக பொழுதோடவே உண்டுவிட்டு தன் அறையில் முடங்கிக கொண்டார். போகும் முன்பு,”மகிழு… உம் புருசனுக்கு சாப்பாடு போட்டுவிட்டு, நீரும் சாப்பிட்டு விட்டு உறங்குங்க…” சொல்லிச் சென்றார்.
மகிழ் மாமியார் சொன்னதுகாக சிறிது நேரம் காத்திருந்து விட்டு தான் உண்டுவிட்டு உறங்கிவிட்டாள். தாமதமாக வந்த தமிழ் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான். மகிழ் வெகுநேரம் கழித்து வந்து கதவைத் திறந்துவிட்டாள்.
வாசல் கதவைத் திறந்ததுப் போல் மனக்கதவை எப்போது திறப்பாளோ…?