ATM Tamil Romantic Novels

கதைப்போமா காதலே‌… 20, 21

கதைப்போமா 20

 

 

நவ்னீதா வீட்டு வாசலில் தான் அன்றைய விடியல் விதுரனுக்கு!!

 

காலையிலேயே வீட்டு காலிங்பெல் அடித்துக் கொண்டிருக்க… வந்து திறந்த புவனா அங்கு நின்றிருந்த விதுரனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!!

 

அவனை நவி வாயிலாக தெரியும் தான்!! ஆனால் அறிமுகம் கிடையாது. விதுரனாக இருக்குமோ என்று சிறு சந்தேகம் மட்டுமே!!

 

“சிஸ்டர்… நிதா… நவ்னீதாவ பார்க்கனும்” என்றதும் அச்சந்தேகமும் தீர்ந்து போக ஒரு மென் சிரிப்பு அவளது இதழ்களில்…

 

“அண்ணா… அவ இங்க இல்லையே.. உங்களுக்கு தெரியாதா?” என்றதும் ‘என்னது இல்லையா?’ என்று அதிர்ந்தவனால் சிறிது நேரம் யோசிக்க கூட முடியவில்லை!! அந்த பெண் பொய் பேசுகிறவள் போல தெரியவில்லை. 

வீட்டுக்கும் சென்று இருக்க வாய்ப்பில்லை.. அதுவும் நேற்று அன்னை வந்து பேசிய பிறகு… எங்க சென்றிருப்பாள்? என்று நெற்றியை நீவிகொண்ட யோசித்தவனை பார்த்த புவனாவுக்கும் பாவமாகத்தான் இருந்தது.

 

பத்து நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தை கிடையாது என்று அவளுக்கும் தெரியும். அதிலும் நேற்று விதுரனோட அம்மா என்று வந்த பெண்மணி ஏதோ பேசி இருக்கிறார்கள்.. அதற்கு தக்க தோழியும் சமாளித்தியிருக்கிறாள் என்றவரை புரிந்தது. ஆனால் என்ன விஷயம் என்று இவள் கேட்டுக் கொள்ளவில்லை. அது அவர்களது அந்தரங்கம்!!

 

அந்தரங்கம் அழகானது மட்டுமல்ல

அவர்களுக்குள்ளானது!! 

 

அதில் நுழைய பெற்றவர்களுக்கே உரிமையில்லாத போது தோழிக்கு எங்கணம் இருக்கும்?

 

“அண்ணா. எதோ லான்ச் மீட் என்று போய் இருக்கா!!” என்றதும் தான் அவனுக்கு கொஞ்சம் மனதோடு சேர்ந்து மூளையும் வேலை செய்ய “எங்க? எப்போ? லான்ச் மீட்டிங்?” கேட்டான் அவளிடமே!!

 

“என்ன ணா உங்களுக்கு தெரியாதா?” என்றதும் தான் மட்டி மட்டி என்று மீண்டும் தலையில் அடித்துக் கொண்டான். பத்து நாட்களாக தான் அவன் வேலை செய்யும் இடத்தோடு ஒரு தொடர்பு இல்லாமல் இருந்தானே.. பின்பு எங்கணம் அவனுக்கு இந்த மீட்டிங் பற்றி தெரிய வர??

 

“ஓகே சிஸ்டர்.. தேங்க்ஸ்!!” என்றவன் கையில் ஃபோனை எடுத்தவரே மீண்டும் நவிக்கே அழைக்க.. அதுவோ அந்த பக்கம் எடுக்கப்படாமல் அணைந்து போக “ராட்சசி.. வச்சி செய்றா என்னை!!” என்று கூறிக்கொண்டு இம்முறை தன் கொலீக்கு அழைத்தான்.

 

விதுரன் சீனியர் என்பதால் அந்த கொலீக்கும் விதுரனை ப்ரோ என்று தான் அழைப்பான். “சொல்லுங்க ப்ரோ… உடம்பு சரியில்லை என்று சொல்லி லீவ் எடுத்தீங்க போல.. இப்ப ஓகேவா?” என்று கேட்டது தான் தாமதம்!!

 

” எங்க இருக்கீங்க? லான்ச் மீட்டிங்னு கேள்விப்பட்டேன்.. உண்மையா? நாம மட்டுமா இல்ல ஹோல் தமிழ்நாடுமா? மீட்டுங் சென்னை இல்லையா? வேற எங்கே?” இவன் படபட என்று கேள்விகளாய் கேட்க… எதிர்பக்கம் இருந்தவன் “ப்ரோ உங்களுக்கு கம்பெனி மேல இவ்வளவு அக்கறையா? நீங்க ஏற்கனவே வெறித்தனமாக வேலை பார்ப்பீங்கன்னு தெரியும்!! ஆனால் இவ்வளவு வெறித்தனத்த எதிர்பார்க்கவே இல்லையே ப்ரோ” என்று சமயம் தெரியாமல் அவன் இவனை புகழ்ந்து பாட… அவன் நேரில் மட்டும் இருந்திருந்தால் இருந்த கோபத்திற்கு இரண்டு இழு இழுத்து இருப்பான் விதுரன்.

 

“சொல்லி தொலைடா!!” என்று இவன் இருந்த வேகத்தில் கத்த..

 

“அப்பப்பா மீட்டிங்கு வர என்ன ஒரு வேகம் ப்ரோ உங்களுக்கு!!” என்று அவனை சிலாகித்து விட்டு “இந்த முறை மீட்டிங் ஹைதராபாத்தில் ப்ரோ!! நாளைக்கு மீட்டிங் நாங்கல்லாம் நைட் கிளம்புறோம் ப்ரோ” என்றான்.

 

“சரி சரி எனக்கு மீட்டிங் இடத்தை வாட்ஸ்அப் பண்ணு” என்றவன் திரும்பி புவனாவை பார்த்து, “சிஸ்டர்.. உங்க பிரண்டு ஹைதராபாத்தில் இருக்காளாம்..” என்றவனின் வார்த்தைகளில் அவளை கண்டுபிடித்து விட்டேன் என்று வெற்றி பெருமிதம்!!

 

 “எப்படியோ சேர்ந்தால் சரி சண்டை இல்லாமல் வாழ்ந்தால் சரி!!” என்றவள் விட்ட தூக்கத்தை பிடிக்க சென்று விட்டாள் புவனா.

 

“நாளைக்கு தானே மீட்டிங்!! முதல் நாளே கிளம்பி போயிட்டா? ஏன்?” என்று பயங்கர யோசனை விதுரனுக்கு.

 

இம்முறை போனை அந்தோணிக்கு போட்டான். “ஹலோ தேவா எப்படி இருக்கீங்க?” என்றவன் அவன் தொழில் ரீதியாக மன்த் எண்ட் டார்கெட்.. சேல்ஸ் மேனேஜர் தொல்லை என்று பேச..

 

‘இப்ப இதெல்லாம் எனக்கு ரொம்ப முக்கியம் தான்!’ என்று இங்கே பல்லை கடித்தான் விதுரன்.

 

“அவன் எங்கே இருக்கிறான் என்று நேரடியாக கேட்க முடியாது.. அருகில் இவ இருந்தால் அவ்வளவுதான்…” என்று அவன் கேட்டதற்கு பதில் அளித்தவன் “பத்து நாளா நான் கொஞ்சம் லீவு அந்தோணி. சென்னைக்கு இன்னைக்கு ஒரு வேலையா வந்தேன். அதான் அப்படியே உன்னை பார்த்துட்டு இங்கிருந்து உங்களுடன் மீட்டிங்கு கிளம்பி போயிரலாம்னு ஒரு ஐடியா” என்றான்.

 

“சூர்!! போலாமே… நாங்க நைட்டு தான் கிளம்புறோம். மார்னிங் வொர்க் வந்தாச்சு.. ஆஃப்டர்நூன் மேல வீடு போயிட்டு எல்லாரும் கிளம்புறதா பிளான். ஆனா உங்களுக்கு டிக்கெட்…” என்று அவன் கேட்கும் போது தான் நவியை பற்றி எப்படி கேட்பது என்று பெரும் யோசனை இவனிடம்..

 

“தட்கல்ல போட்டுக்கலாம்!! எந்த டைம் மட்டும் எனக்கு நீங்க சொல்லுங்க” என்றான்‌ விதுரன்.

 

அந்தோணி ட்ரைனிங் பெயர் நேரம் எல்லாம் கூற… “ஓகே அந்தோணி நவியும் நைட்டு தான் கிளம்புறாங்களா?” என்று பேச்சுவாரக்கில் கேட்பது போல..

 

“இல்லை இல்லை அவள் ஏர்லி மார்னிங் ட்ரெய்ன்ல கிளம்பிட்டா..” 

 

“வாட்??” என்று தன் அதிர்ச்சியை வெளிப்படையாக காட்ட முடியாமல் தவித்தான் விதுரன்.

 

“ஆமா.. அங்க அந்த சர்வேஷ் ரெட்டி இருக்கான் இல்லையா…??” என்றதும் எந்த சர்வேஷ் ரெட்டி என்று இவன் யோசிக்க..

 

“நம்ம கூட ட்ரெய்னிங்கில் வந்திருந்தான் தேவா. அவன் தான் ஆரம்பத்தில் இருந்து ஃபோன் போட்டு ஒரே நச்சரிப்பு.. நவிய லவ் பண்றான் போல.. ஹைதராபாத் சுத்தி காமிக்கிறேன்னு வா சொல்லிட்டு ஒரே தொந்தரவு அவன்!! இந்த முறை சவுத் பார்ட் எல்லாத்துக்கும் ஹைதராபாத்ல தான் மீட்டிங்.. கேரளாவில் இருந்து மூணு கேர்ள்ஸ் வராங்க அவங்களோட நவியும் ஜாயின் பண்ணிட்டு சுத்தி பாக்க போறேன்னு போய்ட்டா.. கெய்ட் வந்து நம்ம ரெட்டி தான்” என்று அவன் நகைச்சுவை சொன்னது போல சிரிக்க..

 

இங்கே நெருப்பில்லாமலே புதைந்தது விதுரனின் நெஞ்சம்.. ஊத்தி அணைக்க ஆன்டாசிட் கேட்டது கொஞ்சம்!!

 

அந்த ஒரு நாளை நெட்டித்தள்ள போதும் போதும் என்றானது அவனுக்கு. அதுவும் இவன் செய்த அத்தனை காலுக்கும் மெசேஜுக்கும் அவளிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

 

“இப்படித்தான் பத்து நாளும் அவள் தவித்து இருப்பாளோ?? சரியாக வச்சி செய்கிறாள் ராட்சசி!!” என்று மதியம் வரை அங்கு இங்கு என்று சுத்தியவன், அதற்கு மேல் அந்தோணி இடத்திற்கு சென்றான். அதற்குள் தட்கல் மூலம் அதே கோச்சில் அவனுக்கும் டிக்கெட் பதிவு செய்து கொண்டான். ஒரு வழியாக இரவு அனைவரும் ஹைதராபாத் நோக்கி செல்லும் ட்ரெயினில்!! அனைவரும் உறங்க இவனுக்கு தூக்கம் தூரம் போனது…

 

மும்பையில் இருந்து வரும் போது பயணித்த ஒற்றை கூபேவும் தன் கைவளைவில் தூங்கிய பைங்கிளியின் ஸ்பரிசமும் வேண்டும் என்பதாய் மனது ஆர்ப்பரித்தது. சிகையை கோதை மனதை அடக்கியவன் “விரைந்து வரனடி ராட்சசி.. வந்து இருக்கு உனக்கு!!” என்று காற்றில் தூது விட்டான் தன்னவளுக்கு!!

 

அதே நேரம் காலையில் இருந்து கேரள பிரண்ட்ஸுடன் ஊர் சுற்றி பார்த்த அலுப்பில் படுத்திருந்தாலும் இன்னும் தூக்கம் வரவில்லை நவிக்கு.

 

விடியற்காலையில் அவனிடம் வந்திருந்த அலைபேசி அழைப்பே சொன்னது அவன் சென்னை வந்து விட்டான் என்று!! கண்டிப்பாக தெரியும் அவன் வருவான் என்று!! அதனால்தான் அவனை கொஞ்சம் சுத்தலில் விடவே இந்த திடீர் பயணம்!!

 

முதலில் விதுரனின் அம்மா பேச பேச அவளுக்கு நிதர்சனமும் காதலும் மாற்றி மாற்றி தாக்க.. எதன் பக்கம் சாய என்று முடியாமல் தவித்தாள் பெண்!! அவளும் சிறு பெண் தானே? 

 

குடும்பம் என்று பார்ப்பாயா? காதல் என்று பார்ப்பாயா? இதில் எது வேண்டும்? என்றால் பாவம் மனது காதலை புதைத்து குடும்பத்தை தான் கைக் காட்டும்!! என்னதான் அது காவிய காதலாக இருந்தாலுமே..

 

ஆனா அதற்காக என்னை இவ்வளவு தூரம் தேடி வருவானேன்? இதை அங்கிருந்தே ஒற்றை ஃபோன் காலில் சொல்லி இருக்க முடியும் அல்லவா? அதுவும் இல்லாமல் அப்படியெல்லாம் விட்டு விடுபவன் விதுரன் அல்லவே!! 

 

சிறிது நாள் பாராமல் பேசாமல் இருந்தால் கொண்ட காதல் இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை நேசித்த நெஞ்சம் தான் அதனை மறந்து விடுமா? இக்காலத்தில் பலருக்கும் வந்தது போல இது வியாதி அல்ல!! உணர்வு.. நெஞ்சம் துஞ்சிய காதல்!! என்று தான் தெளிந்தவள், தன் தெளிவை மிகத் தெளிவாகவே உணர்த்தினாள் விதுரன் அம்மாவிற்கு!!

 

விருந்தோம்பல் தமிழர் பண்பு என்றாலும் அவ நிலையில் யாராலும் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் தன்னை பரீட்சித்து பார்க்கவே இவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட நவியும்… அவர்களை பரீட்சிக்கவே இந்த விருந்தோம்பலை புரிந்தாள்.

 

மனதில் ஓரத்தில் மகனின் காதலி எப்படி இருப்பாள்? எப்படி நடப்பாள்? என்று அதை விரும்பினால் இதை அவர் ஏற்பார் இல்லையா? இவள் வேண்டவே வேண்டாம் என்றால் இப்போதே விட்டு சென்று விடுவார் அல்லவா? என்று அவள் வைத்த பரீட்சையில் லஷ்மி அம்மா அவரே அறியாமலே வெற்றிகரமாக ஜெயித்திருந்தார்!!

 

அதனால் இரவு அவரை ட்ரைனில் ஏற்றிவிட்டவள் பேசியதை எப்படியும் இவர் மகனிடம் பகிர்வார் என்பது திண்ணியம் அவளுக்கு. அன்னையின் ஒற்றை வார்த்தைக்கு காத்திருப்பவன் பறந்து வருவான் என்பதும் அறிந்தே… சர்வேஷுக்கு ஃபோன் செய்து கேரளா டீமோட தானும் சுற்றி பார்க்க ஆசைப்படுவதாக கூற.. ஏற்கனவே இவர்களிடம் ப்ரபோஸ் செய்திருப்பவன் இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். உடனே அவளுக்கு ட்ரெயின் புக் செய்து விட்டான். கூடவே அவர்களோடு சேர்த்து அறையும் இவள் பகிர்ந்து கொள்ள.. விதுரன் வரும் முன்னே ஹைதராபாத் நோக்கி பறந்து விட்டாள் நவி!!

 

காலையிலிருந்து அவன் போன் செய்யும் போதெல்லாம் “போடா.. எடுக்க முடியாது!! இப்படித்தானே என்னையும் தவிக்க விட்டாய்?” என்று அவனை தவிக்க விட்டாலும் மனதோ அடித்துக் கொண்டது. பத்து நாளுக்கு பிறகு அவனது குரலை கேட்க ஆவல் கொண்டது மனம்!!

 

“இருக்கட்டும்!! இருக்கட்டும்!! இந்த நவியோட அருமை நன்றாக புரியட்டும்… தவித்து தவித்து பின் என்னை தேடி பறந்து வரட்டும்” என்று செல்லில் அவனது ஃபோட்டோவை பார்த்து கொஞ்சிக் கொண்டாள் நவி!!

 

இரண்டு நாள் மீட்டிங்!! அதற்காக கம்பெனியிலிருந்து இவர்களுக்கு மீட்டிங் நடக்கும் ஹோட்டலிலே அறை புக் செய்து கொடுத்திருக்க… சென்னை டீமோடு வந்து சேர்ந்தவன், இடையில் அவனுடைய மேனேஜருக்கும் அழைத்துக் கூறிவிட்டான். ஒருவேளை விஷயமாக சென்னை வந்தவன் அப்படியே இங்கு வந்து விட்டதால் அவனுடைய ரெஃபரன்ஸ் எதுவும் எடுத்து வரவில்லை என்று!!

 

“அதனால் என்ன விதுரா எல்லாம் தான் இப்போ மெயில் அண்ட் ஃபோன்ல இருக்கும் தானே.. அதை வச்சு பாத்துக்கலாம்” என்றார் அவரும். சரி என்று அவசரத்தில் ஃபார்மல் டிரஸ் எதுவும் எடுத்து வராததால் சென்னையில் இரண்டு செட் உடைகள் மீட்டிங்கு தேவையானவற்றை வாங்கி அதை எடுத்துச் செல்ல பேக்கும் ஒன்றை வாங்கினான். 

 

வந்து இறங்கியவுடன் செக் இன் லிஸ்டை எடுத்து பார்க்க அதில் நவ்னீதாவின் பெயரும் இல்லை கேரளா குழுவும் இல்லை. “இன்னும் என்ன செய்றா வந்து சேராமல்?” என்று பொருமலோடு இவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றான்.

 

முதல் நாள் கேரள பெண்களோடு இவள் வேற ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தாள்.

 

காலையில் தயாராகி மீட்டிங் ஹாலுக்கு வந்து கோயம்புத்தூர் டீம் இடத்தில் அமர்ந்தவன் கண்கள் முழுவதும் சென்னை டீமிடமே!! அவ்வப்போது அவை வாயிலுக்கு சென்று சென்று மீண்டு வந்தன!! அருகில் அமர்ந்து இவனிடம் தங்கள் ஏரியா பற்றி சேல்ஸ் பற்றி பேசிக்கொண்டிருந்த சேல்ஸ் மேனேஜரின் வார்த்தை ஒன்று கூட அவன் கவனத்தில் ஏறவில்லை. ஆனால் முகம் என்னவோ அவர் பேசுவதை கூர்ந்து கேட்பது போலவே இருந்தது.

 

“படுத்துகிறாளே ராட்சசி.. இன்னும் வராம!!” என்று அவளை திட்டிக் கொண்டே அமர்ந்திருந்தான்.

 

அவனின் இதயத் துடிப்பை எகிற வைத்து.. டென்ஷனை ஏற்றி இறக்கி ஒரு வழியாக வந்து சேர்ந்தாள் நவ்னீதா.. விதுரனின் நிதா!!

 

அவள் உள் நுழையும்போதே விதுரனை கண்டு கொண்டாள்!! கண்களால் கட்டியும் கொண்டாள்!! ஆனால் கண்டுகொள்ளாத பாவணையோடு தன் டீமோடு இணைந்து பேசிக் கொண்டிருந்தாள்.

 

வந்த கதை.. போன கதை.. நேற்று ஊர் சுற்றி பார்த்த கதை என்று அவளுக்கு பேச அனேக விஷயங்கள் இருந்தன..

 

நின் இதழ்கள் எதனையோ மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றனடி..

 

அதை கூட என்னால் புரிந்து கொள்ள இயலவில்லையடி ராட்சசி..

 

உன் ஒவ்வொரு அழகியலும் என்னை ஆட்கொண்டு..

சிந்தையை சிதைத்து அழித்து..

கொடுங்கோல் ஆட்சி செய்கிறதடி அழகிய ராட்சசியே!! என்று விதுரனின் மனம் கவிதை மொழி பெயர்த்தது!! 

அவளது அசைவுகளை.. அழகுகளை!!

 

வழக்கம் போல காலையில் உள் நுழைந்து எச்ஆர் டீமும் அதன் பின் வந்த ப்ராடக்ட் டீமும்.. அனைவரும் விடாமல் பேசி பேசி.. உயிர் கொடுத்து பேசி பேசி தங்கள் ஊழியர்களை போர் அடிக்காமல் தங்கள் திட்டங்களை அவர்கள் மண்டைக்குள் புகுத்தி கொண்டிருக்க.. விதுரனோ அவளின் ஒற்றை கண் வழியே உயிர்ப்பு கொண்டு நொடியும் விலக்காமல் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் கண்களால் விழுங்கியபடி…

 

உறுமீன் ஓட காத்திருந்த கொக்கு போல.. தனியே நவியை விழுங்க காத்திருந்தான் விதுரன்!!

 

அவளும் கண்களுக்கு கூட எட்டாத வண்ணம் தள்ளி இருந்தாளே ஒழிய தனித்து இருக்கவே இல்லை.. இடைவேளை இட்ட போதெல்லாம்.. இருவருக்கும் இடையேயான இடைவெளியை நிரப்பிக் கொண்டிருந்தான் சர்வீஸ் ரெட்டி மிக கச்சிதமாக!!

 

இப்பொழுது மட்டும் விதுரனுக்கு கொங்கணவர் போல் எரிக்கும் சக்தி இருந்தால் சர்வேஷ் எப்போதோ பஸ்பமாகி இருப்பான்.

 

மீட்டிங் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் லிப்டின் மூலம் கீழே சென்று கொண்டிருந்தனர். ஒரு லிஃப்ட்டில் அனைவரும் முண்டியடித்து ஏறிக்கொள்ள.. அதுவோ ஓவர் லோட் என்று காட்டியது.

 

பொது சேவைக்காகே பிறந்த நம் நவியும் பெருந்தன்மையாக வெளியில் செல்ல.. அவளையே தொத்திக் கொண்டு திரிந்து கொண்டிருந்த சர்வேஷூம் அவளுக்கு பாதுகாப்பாய் இறங்கி விட்டான்.

 

சர்வேஷூக்கோ செம குதூகலம்

அனைவரும் சென்று விட.. இவர்கள் இருவரும் மட்டுமே இருந்த நிலையில்.. மீண்டும் அவனின் மனதை திறக்க வாய்ப்பை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது.. இவர்கள் நின்றிருந்த லிஃப்டுக்கு அருகில் இருந்த மற்றொரு லிஃப்ட் கதவுத் திறந்த நொடி அதிலிருந்து வெளியே வந்த விதுரனது முரட்டு கையானது வாரிசுருட்டி உள்ளே இழுத்து சென்று விட்டது நவியை.

 

‘என்னடா இங்கே நடந்தது?’ என்று சர்வேஷ் விழிக்கு முன் அவர்களது லிஃப்ட் மூடிக்கொண்டது..

 

வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் வாய்ப்பைப் பற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா? என்று முடிவுக்கு வந்திருந்தவன்.. அப்படி ஒரு வாய்ப்பு மீட்டிங் முடிந்து அவர்கள் செல்லும் போது தான் கிடைத்தை பயன்படுத்திக் கொண்டான் விதுரன்!!

 

“என்னடி… நானும் பாக்குறேன் காலையிலிருந்து என்னை சுத்தவிட்டுட்டு இருக்க..” என்று அவளை இரு கைகளுக்கிடையே சிறை வைத்திருந்தான் மாயவன்!!

 

அவள் முகத்தை

இழுத்து நீள நரம்புகள் நெளிந்தோடிய அவளின் மிருதுவான சங்கு கழுத்தில் மீசை முடிகள் குத்த.. தாடி உராய உராய அழுத்தமாக முத்தமிட்டான்!!

 

கழுத்து மட்டுமல்ல உடலே சிலிர்த்தது பெண்ணவளுக்கு!! கழுத்தைத் திருப்பிக் கொண்டாள் அவனிடமிருந்து! அவளின் மென்கழுத்து மெல்லக் கடித்து கவ்வியிழுத்து விடுவித்து முகம் பார்த்தான். உன்னால் என்னை விட்டு வேறொருவனோடு பேச செய்ய முடியுமா? என்று!!

 

அவனது முத்தத்தில் முதலில் அதிர்ந்து.. பயந்து.. குழைந்து.. பின் தெளிந்து இப்போது முறைக்கும்‌ பெண்ணை பார்த்தவன், “உன்னையெல்லாம்… என்று அவள் வார்த்தைகள் முடிக்கும் முன், அவனது முரட்டு இதழ்கள், அவளின் கழுத்து பரப்பெங்கும் முத்தமிட்டு முத்தமிட்டு முக்குளித்தன..

அதி காதலாய்!!

துளி காமமாய்!! 

பெரும் இன்பமாய்!!

நனி தாபமாய்!!

 

மெல்ல முனகி தலையைப் பின்னால் இழுத்து முகத்தை அண்ணார்ந்து அவன் தலைமுடியில் விரல்களை நுழைத்து இறுக்கியபடி கிளர்ச்சியுடன் அவனுக்கு ஈடுகொடுத்தாள் பெண் அனைத்தையும் அக்கணம் மறந்து!! அப்பொழுது அவன் மீது கொண்ட உயிர் காதல் மட்டுமே நினைவில்!!

 

 

 

கதைப்போமா 21

 

லிஃப்டுக்காக காத்திருந்தவளை அடுத்த லிஃப்டில் இருந்து வந்த விதுரன் கந்தர்வனாய் கவர்ந்து சென்றான்.

 

நவி அந்த முரட்டு கையின் ஸ்பரிசத்தை உணரும் முன்னே லிஃப்ட்டுக்குள் அடைபட்டு இருக்க.. அருகில் நவியிடம் காதலை சொல்ல காத்திருந்த காளையவனோ… கண்டென்டு கிடைக்காத நெட்டிசன்கள் போல முழித்துக் கொண்டு இருந்தான், இப்போ இங்க என்ன நடந்தது என்று தெரியாமல்!!

 

லிஃப்ட்டில் நுழைந்தவுடன் அவள் மேனிதனில் மேவி காதல் கொண்டு படர்ந்து.. மோகம் கொண்டு முத்தத்தில் முக்குளிக்க.. அந்நிலையில் பாவைவளும் அவனின் உயிர் காதலை மட்டுமே நினைவில் கொள்ள… இதழ்களை கொண்டு அளவெடுத்தான் அவளின் சங்கு கழுத்தின் அழகியலை எல்லாம்!!

 

அவனின் ஸ்பரிசத்திலும்… இதழ்களிலும் ஈரத்திலும்… 

கற்றை மீசையின் குறுகுறுப்பிலும்…

மெலிதாக லவ் பைட்ஸ் கொடுக்கும் அவனின் பற்களின் வேகத்திலும்…  

இடையை இறுக்கி ஆளும் வன் கரத்திலும்..‌. முழுதாக தொலைந்தாள் கோதை!!

 

மெல்ல மெல்ல நேற்று நடந்த நிகழ்வுகள் ஞாபகம் வர சட்டென்று அவனை பிடித்து தள்ளி..

“கீப் டிஸ்டன்ஸ் மேன்!!” என்று ஒற்றை விரலால் அவன் பரந்து விரிந்த மார்பு தன்னை நெருங்கி விடாமல் தடுத்தாள். தடுக்க முடியுமா என்ன? விதுரவனவனை வது அவள்?

 

அவனது பார்வை மந்தகாசமாக கீழ்நோக்கியது அவளது விரலையும் அவளையும்…

 

பின் மேனகையை பார்த்து மோகனமாய் சிரித்தவன், “ஓஹ்… பெரிய தடை தான்!! அதை தகர்க்க முடியாது பாரு?” என்று சிரித்துக் கொண்டான். மெல்ல குனிந்தவன் ஒற்றை முத்தத்தை அவளது விரலில் அழுத்தமாக வைக்க.. அவளோ முறைத்தாள் விரலை நகர்த்தாமல்…

 

“ஓஹ்.. ஒத்த முத்தம் போதல போல..”

என்றவன், அவளது வெண்டை பிஞ்சு விரலை அவனது வாய்க்குள் வைத்து சுவைக்க.. சட்டென்று பிடுங்கிக் கொண்டாள் விரலை!! வெட்கிச் சிவந்த வதனத்தை அவனுக்கு காட்டாமல்..

 

சிறிதும் அசையாமல் அதே இடத்தில் நின்று கைகளால் அவளை இருபுறமும் சிறைபிடித்தவன் மூச்சுக்காற்று அவளது மூக்கில் பட்டு சிவக்க.. “என்ன டா கோபம் நிதா.. என் மேல.. இந்த ஓட்டம் ஓடுற!” என்று கேட்டான் ஒட்டுமொத்த காதலையும் வார்த்தைகளில் கொட்டி..

 

இவ்வளவு அருகில் அவனைப் பார்த்தால் எங்கனம் பெண்ணிற்கு பேச்சு வரும்?

 

அவனது அண்மையும்…

விழுங்கும் பார்வையும்..

அகன்ற மார்பின் தீரமும்..

ஆண்மையின் வாசமும்.

பொங்கும் காதலும்..

மீறிய மோகமும்..

மீசையின் குறுஞ்சிரிப்பும்..

இதழ்களை கொய்ய காத்திருப்பும்..

லயம் தப்பி துடிக்க வைத்தது நவியின் இதயத்தை!!

 

கயல் நயனங்கள் அங்கும் இங்கும் நிலைக்கொள்ளாமல் அப்பால் வண்ண விழிகளில் நீந்த, அவனின் பார்வையை தவிர்த்தாள் கோதை!!

 

அவனோ ஒற்றை விரலால் அவளது பிறை நுதலில் இருந்து மெல்ல கோடு இழுத்தான். 

 

கூர் மூக்கு அதை அளந்து சற்று கீழே இறங்கி.. 

துடிக்கும் செர்ரி இதழ்களை தடவி இழுத்து விடுத்து.. 

தாடைகளில் தடையற்று பயணித்து.. சங்கு கழுத்தில் நங்கூரம் இட்டது விரல்!

ஏறி இறங்கிய அவளது தொண்டைக் குழியை ஆசையாக வருடியது அந்த ஒற்றை விரல்!!

 

அவள் கழுத்தில் அணிந்திருக்கும் ஐடி கார்ட்டை அவ்விரலில் தொட்டு சுழற்றி விளையாட.. இவளோ அவனை தடுக்க முடியாமல் தவித்தாள். அந்த விளையாட்டில் அவன் விரல்கள் அவளின் கழுத்தின் மென்மையை சோதித்து சோதித்து மீண்டன. மலரில் தேனருந்தும் தேன் சிட்டு போல அவன் இதழ்கள் அவளின் இதழ்களையே இலக்கென சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால் தீண்டவில்லை.. 

 

தீண்டினால் அடுத்த நிமிடம் தீர்ந்துவிடுமே தாபம்!!

மோகித்தால் பெண்ணவளின் மீதான மோகம் கரையை‌ கடக்குமே!!

 

ஆனால் இவனோ அலர் அவளின் விரகதாபத்தை ஏற்றிக் கொண்டிருந்தான் உரசி உரசி!! இருவருமே புற உலகை தவிர்த்த மோன நிலையிலிருந்தனர்.

 

மெல்ல குனிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசம் முகர்ந்து, காது மடல்களை தீண்டி, பின் சிறு சிறு கடிகளும் முத்தங்களும் வைத்து, கன்னங்களை இதழ்கள் கொண்டு ஆராய்ந்து பின் இச் இச் என்று நச்சென முத்தங்களை பதித்து, அவளது மெல்லிய இதழ்களை பற்றிக் கொண்டான் ஆழமாக.. அழுத்தமாக!!

 

அவளோ அவன் பிடறி மயிரில் விரல்களோட்டி முதுகை தடவி விரல்களை இறுக்கி கோர்த்தாள். 

 

நொடிகளோ நிமிடங்களாக கரைந்து கொண்டே இருக்க.. இவ்விருவரும் தங்கள் இதழ்களுக்குள் மற்றொருவர் இதழ்களை புதைத்து கரைந்து கொண்டிருந்தனர். அதற்குள் தரைதளம் வந்திருக்க அவனை விட்டு பிரிந்தவள்.. அவனை தள்ளி நிறுத்தி முறைக்க.. லிஃப்ட் திறக்கும் முன் அதனை மூடினான்.

 

அவள் வேண்டாம் என்று தடுக்கும் முன், மீண்டும் லிஃப்ட்டை மேல் நோக்கி போக அதன் பட்டனை அழுத்தியவன், அவளை இழுத்து திணற திணற முத்தமிட்டான். மூச்சுமுட்ட அவனை தள்ள முடியாமல் கண்களில் கண்ணீர் வர அவள் பாவமாக பார்த்தும் தான் அவளை விட்டான்.

 

அவன் உதடுகள் அவளின் உதட்டு அமுதத் துளிகளை உறிஞ்சி எடுத்து விட்டு விலகியபோது அவள் உதடுகளோ மழையில் நனைந்த புறாக் குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்தது.

 

இவனின் முத்தாடல் முடியவும் ஐந்தாம் மாடியில் யாரோ லிஃப்டுகாக பட்டனை அழுத்திருக்க.. அந்த தளம் வந்தவுடனே லிஃப்ட் திறக்கவும் சரியாக இருக்க… இருவரின் இதழ்களின் சமர் முடிந்தாலும் விழிகளின் சமர் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது ஒன்று கோபமாக… மற்றொன்று தாபமாக!!

 

அதில் ஏறி இருந்த முதிய தம்பதி பின்னால் இருக்கும் இருவரையும் ஓர கண்ணால் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் காதல் பாஷை பேசிக்கொள்ள.. பார்த்திருந்த விதுரனின் கண்களோ நவியை பார்த்து பல செய்திகளை சொல்ல… நவியோ பட்டென்று கண்களில் கத்திரி வைத்து தன்னை நோக்கி வந்த செய்திகளை வெட்டி விட்டாள்.

 

அவர்கள் இறங்கியவுடன் மீண்டும் அடுத்தவர் வருமுன் லிஃப்ட் கதவை மூடியவன் இடைவெளியை சுருக்கி “இப்போ என்னடி உனக்கு கோபம்? நான் எல்லாத்தையும் சொல்கிறேன் நிதா.. நீ நிதானம்மா கேளு” என்றான். 

 

அவன் அறியாமல் சட்டென்று அடுத்த பட்டனை அவள் அழுத்தி இருக்க பேசிக்கொண்டே இருந்தவன் லிஃப்ட் நின்றதும் சற்றே விலகி அவளை முறைத்தவாறு தள்ளி நின்றான்.

 

இப்பொழுது ஒரு கேங் ஆக ஆண்கள் ஏன்.. நவி தானாகவே சற்று தள்ளி நின்ற விதுரன் அருகில் நின்று கொள்ள.. முகிழ்த்த சிரிப்பை இதழுக்கடியில் மறைத்தவன் கிடைத்த வாய்ப்பை விடாமல் இருக்க பற்றிக் கொண்டால் அவளது இடையை பின்புறமாக அழுந்த பற்றி..

 

நவி அருகில் இருப்பவர்கள் தெரியாமல் அவனை முறைத்து கையை சுட்டிக்காட்டி எடுக்க சொல்ல.. அவனோ உதடு பிதுக்கி தோளை குலுக்கியவனின் விரல்கள் இடையில் இசை மீட்ட தொடங்கியது!!

 

அவனின் இடைவிடாத இசை மீட்டலில் நெளிந்து கொண்டே நிற்க வேண்டியதாய் இருந்தது நவிக்கு. முன்புறமும் அந்த ஆண்கள் நின்று கொண்டிருக்க. பின்புறம் நகர்ந்தால் இன்னும் வாகாக அவனது கையில் மாட்டிக் கொள்ள நேரிடும். பின் பாகாக உருக நேரிடும்!!

 

மெல்ல மெல்ல அவளது இடைப்பற்றிய அவனது வன் கரங்கள் மெல்லிடையின் மென் ஸ்பரிசத்தை உணர்ந்து.. ஆலிலை வயிற்றின் நடுவே அழகாய் சுழிந்திருக்கும் நாபியை கண்டு விட்டு.. அதை சுற்றி வருடிக் விட்டுக் கொண்டிருக்க.. உணர்ச்சி பெருக்கில் உதடு கடித்து பெருவிரலை நிலத்தில் ஊன்றி தன்னை சமாளிக்க முயன்றாள் நவி.

மன்னவன் விரல்களோ தடாகத்தில் நீந்தி… அதன் நீள அகலங்களை சோதிக்க.. “சோதிக்காதடா ப்ளீஸ்!!” என்று கண்களால் கெஞ்சினாள்.. பின் கனலை கக்கினாள் பாவை.

 

நவியின் தவிப்பு வெட்கம் அதனோடு சேர்த்த கோபம் எல்லாம் அவள் முகத்தை அந்திவானம் போல சிவக்க வைக்க.. அதை ரசித்து பார்த்திருந்தான் விதுரன்.

 

“கையை எடுடா.. ஒழுங்கா எடுக்கல என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று அடிக் குரலில் அவள் சீற.. இவனும் சீறும் தன்னவளை பார்த்து சிரிப்புடன் இதழ் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை விடுத்தான்.

 

“விதுரனனா இது?” என்று வாயை பிளந்தாள் நவ்னீதா!! இவனின் இந்த அட்டூழியங்ளை அதுவும் காதல் அட்டூழியங்களை பார்த்து… 

 

அன்று வெளியில் சேர்ந்து போனாலே பார்ப்பவர்கள் நாலு விதமாய் பேசுகிறார்கள் என்று சிறுபிள்ளை போல குறை படித்தவனா இவன்? இன்று நாலு என்ன எட்டு பேர் இருக்கையிலேயே நாட்டியமாடுகிறானே!! அதுவும் நாபிக் குழியில்!!

 

லிஃப்ட்டில் ஒன்றாக பயணித்தால் நண்பர்கள் கீழே பொருமுவார்கள் என்றவன்.. இன்று லிஃப்ட்டுக்குள்ளே விட்டால் குடும்பமே நடத்தி விடுவான் போலையே?? என்று அவனது செயலை நினைத்து ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கி தின்னாலும் மற்றொருபுறம் அவனின் இத்தகைய மாற்றங்கள் காதலினால் மட்டும் அல்லவா? என்று நினைத்து சந்தோஷித்தாள். அதுவும் அவள் மேல் கொண்ட அபிரிமிதமான காதலினால் தன்னையே மாற்றியிருக்கிறான் என்றால் என்ன சொல்வது என்று பெருமிதமாகத்தான் இருந்தது நவ்னீதாவுக்கு!!

 

அதற்குள் கீழ்த்தளம் வந்திருக்க.. வந்தவர்கள் மெல்ல இறங்கி செல்லும் நேரம் வரை காத்திருந்தவன் அவர்களோடு நவியும் விலகி வெளியே போக முடில.. இஞ்சி இடுப்பை இறுக்கி பிடித்து அவளை அசைய விடாமல் மீண்டும் லிஃப்டை மூடிவிட.. அந்த கணத்தில் தொலைவிலிருந்து இவர்களை பார்த்த சர்வேஷ் லிப்ட்டுக்குள் நுழையும் முன் மீண்டும் லிஃப்ட் மூடப்பட.. வாயை பிளந்து நின்றான் அவன்!! ‘இந்நேரம் வரை இவர்கள் லிஃப்ட்டுக்குள் தான் இருந்தார்களா?’ என்று!!

 

மீண்டும் லிஃப்ட் மூடி மேல் செல்ல பட்டனை அமுக்க கடுப்புடன் பார்த்தவள், “போதும் விதுரா.. இதுவரை நீ செய்ததே போதும்!! செம கடுப்புல இருக்கேன். வேண்டாம்…” என்று அவனின் பார்வையின் பேதத்தை அறிந்து கோபமாக பேசினாலும், அவன் மீதான நடுக்கம் அவளது மனதில்…

 

மெல்ல மெல்ல அவளை நெருங்கியவன் நூலிழை இடைவெளியில்.. அவளது இதழ்களை மெல்ல வருடினான் தனது பெருவிரல் கொண்டு!! அந்த ஸ்பரிசம் இல்லா ஸ்பரிசத்தில்… நவி வேகமாக மூச்சை வெளியிட விம்மி தணிந்த அவளது மென்மைகள் அவனது பார்வைக்கு விருந்தாக… குனிந்து அவற்றை கொள்ளை கொள்ள போனவனை சடுதியில் தடுத்து நிறுத்த.. மீண்டும் ஐந்தாம் தளத்திற்கு வந்து நின்றது அவர்கள் பயணித்த லிஃப்ட்..

 

இம்முறை நவியின் சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணாவும் மற்ற இருவர்களும் அங்கே நின்று இருக்க இவர்களை கேள்வியோடு பார்த்தனர்.

 

என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் நின்றிருந்தவளை “என்னாச்சு நவி? இன்னும் நீங்க ரூமுக்கு போகலையா?” என்றார் கரிசனையோடு.

 

“சார்.. அவங்க ரூம் கீய இங்க மீட்டிங் ஹாலுல மிஸ் பண்ணிட்டு வந்துட்டாங்க போல.. பேக்ல தேடியும் இல்ல. இங்கே ஒரு தரம் செக் பண்ணலாம் என்று வந்தோம்” என்று கூறினான் தயங்காமல் நடுங்காமல் பொய்யை..

 

“ஏம்மா பத்திரமா வச்சிக்கிறது இல்லையா?” என்று ஒரு சிறு கடிதலோடு கூறியவர், “சீக்கிரம் பார்த்துட்டு வாங்க.. மீட்டிங் ஹாலை நாளைக்கு ரெடி பண்ணிட்டு இருப்பாங்க.. அவங்க கிளீன் பண்றதுக்குள்ள நீங்க போய் தேடிப் பாருங்க” என்றார் அவர். சரி சரி என்று தலை ஆட்டலுடன் இவர்கள் லிஃப்ட் மீண்டும் 6 ஆம் தளத்தை நோக்கி பயணித்தது.

 

வேறு வழியின்றி ஆறாம் தளத்தில் இறங்கி மீட்டிங் ஹாலில் பேருக்கு இவள் தேட.. இவன் கையை கட்டிக்கொண்டு வாசல் கதவருகில் நின்று கொண்டிருந்தான். உள்ளே மற்ற பணியாளர்கள் நாளை மீட்டிங்கு ஏற்றார் போல் ஹாலை மாற்றி அமைத்து கொண்டிருந்தனர்.

 

அவர்களிடமும் அதே பொய்யை விதுரன் சொல்லியிருக்க.. இவளுக்கு தான் சங்கடமாகப் போனது. பின்பு இவளாகவே குனிந்து கீழே கிடப்பது போல “கீ.. கிடைச்சிடுச்சு” என்று பொதுவாக அறிவித்துவிட்டு அவனுடன் சென்றாள். இம்முறை நவி லிஃப்டை தவிர்க்க பார்க்க… “ரொம்ப வசதியா போச்சு.. ஸ்டெப்ஸ்ல யாருமே வர மாட்டாங்க” என்றான் இவன் குதூகலமாக!!

 

அதில் திதைத்தவள் “போடா..!!” என்று அங்கு வந்த லிப்ட்டுக்குள் நுழைய கூடவே விதுரனும்!!

 

“அநியாயம் பண்ற விதுரா இன்னைக்கு. வச்சி செய்ற என்னை நீ” என்று முணுமுணுத்தாள். அவன் அருகாமையில் அவள் தொலைவதை எண்ணி..

 

“ப்ளீஸ் டி.. நிதா!!” என்று அவன் கெஞ்ச.. இவளோ மிஞ்ச… மெல்ல முணுமுணுப்புடன் காதல் சண்டை நடந்து கொண்டிருந்தது இருவர்களிடையே. ஏனெனில் அந்த லிப்டில் ஒரு வெளிநாட்டு வயோதிக தம்பதியர் இருப்பதை கருத்தில் கொண்டு!!

 

அத்தம்பதியினரும் இவர்களை சுவாரஸ்யம் பொங்க பார்க்க நவிக்கு தான் கொஞ்சம் அசௌகரியம் ஆனது. ஆனால் அதெல்லாம் விதுரனுக்கு இல்லை…

 

அவளுடன் நெருங்கி நிற்பதும்.. சுண்டு விரலை பற்றி இழுப்பதும்.. அவள் அதை தட்டி விடுவதும்.. பின்பு ஒற்றை விரலால் அவள் கன்னத்தை சுரண்டுவதும்.. தோளோடு தோள் உரசுவதும்.. அவள் காதில் மென்மையாக ஊதுவதும்.. சிலிர்த்து கோபத்தில் திரும்பவளின் கண்களை கண்களால் கவ்வுவதும் என்று ஏக சேட்டைகள் செய்து கொண்டிருந்தான் விதுரன்!!

 

தரைத்தளம் வருவதற்கு பார்த்திருந்தவன் அந்த தம்பதியரிடம் “எக்ஸ்கியூஸ் மீ லவ்லி கப்புள்ஸ்… ப்ளீஸ் க்ளோஸ் யுவர் ஐஸ்” என்றதும் அவர்கள் இன்னும் சுவாரசியத்தோடு அவர்களைப் பார்க்க.. “ப்ளீஸ்..!!” என்று கண்களால் கெஞ்சினான். 

 

அவர்கள் திரும்பிக் கொள்ள சட்டென்று நவியை இழுத்து அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தம் வைத்தவன் “நைட் போன் பண்ணுவேன் ஒழுங்கா அட்டென்ட் பண்ணுற… இல்லை ரூமுக்கு வந்து தூக்கிட்டு வந்துருவேன் பார்த்துக்கோ” என்று சொல்லி முடித்தவன் மீண்டும் ஒரு அச்சாரத்தை கொடுக்கவும், லிஃப்ட் திறக்கவும் சரியாய் இருந்தது. அதுவரை வெளியே லாபியில் காத்திருந்தான் சர்வேஷ் நவிக்காக!!

 

இவர்களுக்கான அறை அதே ஹோட்டலின் இன்னொரு பிளாக்கில் மூன்றாவது தளத்தில் புக் செய்திருந்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து இறங்குவதை பார்த்து தன் கைக்கடிகாரத்தை பார்த்தான் சர்வேஷ்!!

 

கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியிருக்க.. ‘என்ன இவர்கள் இருவருக்கும் உள்ள நெருக்கம்?’ என்று கூர்ந்து பார்த்தான் சர்வேஷ். தன்னுடன் அவனை இழுத்து தன் புஜத்தால் அவனது கழுத்தை இறுக்கி “என்ன மிஸ்டர் சர்வேஷ்… பார்த்து ரொம்ப நாள் ஆகுது!! எப்படி இருக்கீங்க??” என்று பேச்சு கொடுத்து கொண்டே அவனின் குறுகுறு பார்வையிலிருந்து தன்னவளை தப்புவித்தான்.

 

அந்த பிளாக்குக்குள் வந்ததும் மீண்டும் லிஃப்ட்டுக்குள் ஒரு பயணம்!! இம்முறை நவியின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை கண்டு முகிழ்த்த சிரிப்பை மீசைக்கு அடியில் பதுக்கியவன், அருகில் நின்று இருந்தவனின் கேள்விக்கு எல்லாம் நவியை பார்த்துக் கொண்டே பதில் அளித்தான்.

 

நவ்னீதா தனது அறைக்கு செல்ல, சர்வேஷ் அதற்கு முன்னமே இருந்த அவனது அறைக்கு சென்று விட்டான். அவளைக் கடந்து விதுரன் நிமிட நேரத்தில் அவள் காதில் ஏதோ சொல்வது போல கன்னத்தில் மின்னலாய் ஒரு இச்சோடு “குட் நைட்!!” என்று ஓடிவிட்டான்.

 

யாராவது பார்த்திருப்பார்களோ என்று சுற்றி முற்றி பார்க்க காரிடரிலிருந்த சிசிடி கேமராவில் பதிவாயிடுமோ என்று கவலை கொண்டவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அப்படி ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவள் குனிந்து ரூம் கதவை திறந்து கொண்டிருக்கும்போது அருகில் குனிந்து ஏதோ பேசுவது போல 

முத்தமிட்டிருந்தான்… அவ்வளவு துல்லியமாக இவன் முத்தமிட்டது பதிவாகியிருக்காது என்று பெரு நம்பிக்கையை அவளிடம்!! ஆனாலும் ரூமுக்குள் நுழைந்த மறு நிமிடம் ஃபோனை போட்டு காய்ச்சி எடுத்து விட்டாள் அவனை!!

 

பத்து நாளைக்கு பிறகு தன்னவளின் உரிமையான பேச்சு.. அத்தனை இனித்தது மன்னவனுக்கு!!

 

“நான் இவ்வளவு பேசிட்டு இருக்கேன்.. பதில் பேசுறியா நீ?” என்று அவளின் கோப

க் குரல்கள் எல்லாம் அவனது முத்தச் சத்தத்தில் பலமிழந்து போயின…

 

அடுத்தடுத்து அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் இவனது முத்தங்கள் வந்துவிழ.. மன்னவனின் இந்த புது காதல் அவதாரத்தில் மயங்கி போனாள் மாது!!

 

இதுவெல்லாம் சிறிதே.. இனி தான்… என்று.. மறுநாள் காட்டினான் விதுரன் அவனது காதலை!!

3 thoughts on “கதைப்போமா காதலே‌… 20, 21”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top