முதல் நாள் அவன் செய்த காதல் அட்டகாசங்களை நினைத்தவாறு மீட்டிங்கு கிளம்பி கொண்டிருந்தாள் நவி. கூடவே பெங்களூரை சேர்ந்த சிந்துவும் அவளோடு தங்கி இருந்தாள். அவ்வப்போது இவள் முகத்தில் வந்து செல்லும் அந்த வெட்கம் கலந்த சிவப்பை கண்டு விட்டு “ஏய்.. நவ்னீதா யூ ஆர் ப்ளஷிங்… சோ ப்யூட்டி ஃபுல்.. என்ன காதல் கனவா?” என்று அவள் கிண்டலாக கேட்க சிரித்து மழுப்பினாள் பெண்.
“ம்ம்.. நடத்து.. நடத்து!!” என்று சிந்துவும் கிளம்பி வர, இருவரும் டைனிங் ஹாலில் அமர்ந்தனர். அதே சமயம் கேரள பெண்களும் இவர்களோடு காலை உணவில் சேர்ந்து கொள்ள.. சிரிப்பும் கலகலப்புமாக நகர்ந்தது காலை உணவு. அந்த டைனிங் அறையில் இருந்தவர்களும் இவர்களை திரும்பி திரும்பி பார்த்தாலும்.. இவர்களோ அதை எல்லாம் கண்டு கொண்டால் தானே!!
அப்போது சென்னை டீமோடு அந்தோணியும் வர.. அவர்களோடு விதுரனும் சேர்ந்து வர, கடந்து போகும் சமயத்தில் அந்தோணி “ஹாய் கேர்ள்ஸ்!!” என்று விட்டு செல்ல விதுரனும் நவியிடம் நிமிடத்துக்கு குறைவான நேரத்தில் இதழ் குவித்து பறக்கும் முத்தமுமாய் கண்சிமிட்டலுமாய் நகர்ந்துவிட்டான்.
கேரள பெண்களில் ஒருத்தி “யாருடி அந்த ஹேண்ட்ஸம்?” என்று நவியிடம் கேட்க.. அவள் அந்தோணியை சொல்கிறாள் என்று நினைத்து, “அவன் அந்தோணி.. எங்க சென்னை டீம் தான்!! ஓகேவா??” என்று அவளைப் பார்த்து கண்ணடித்து கேட்டாள் நவி.
“நோ.. நோ.. ஐ ஆம் நாட் மென்ஷன் தட் பெர்ஷன்!!” என்று அவள் அவசர அவசரமாக சொன்னதிலேயே சிரித்து விட்டாள் நவி.
“பின்ன யார சொல்ற நீ?” என்று அந்த கூட்டத்தில் உள்ளவர்களை கண்களால் துலாவினாலும் அவள் கண்கள் சென்று நிலைத்தது என்னவோ காந்தம் என அவளை ஈர்க்கும் காந்த கூர்விழியானிடம் தான்.
அவள் தன்னைப் பார்ப்பது அறிந்து ஒற்றைப்புருவத்தை மட்டும் உயர்த்தி என்னவென்று அவன் கேட்ட தொணியில் சட்டென்று இவளுக்கு முகம் நாணம் கொள்ள தோழிகளோடு பேசுவது போல் திரும்பிக் கொண்டாள் நவி.
“தட் பிஸ்தா கிரீன் கலர் ஷர்ட் நவி.. செம ஹாட்!!” என்று மேடை ரகசியமாய் அவள் கூறியதைக் கேட்டு அத்தனை பெண்களும் கண்களை விரித்து அவனை பார்க்கத் திரும்ப..
“பாக்காதீங்க!! எல்லோரும் அட்ட டைம்ல பாக்காதீங்க… ஒவ்வொருத்தரா திரும்பி பாருங்க” என்று அந்த பெண் மீண்டும் கூற.. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது யார் என்று தெரியாமல் இருக்கலாம், அவன் எட்ட வரும்போதே கண்களால் அவனை முழுதாக அளந்து விட்டவளுக்கு அது யாரென்று தெரியாமல் போகுமா?
மற்ற பெண்களும் ஒவ்வொருத்தராக திரும்பிப் பார்த்து “எஸ்.. ஹி இஸ்!!” “ஆமாம்பா..” “எஸ் எஸ் செம ஹான்ட்சம்!!” என்று ஆளுக்கு ஒரு விதமாய் தங்கள் ரகசிய கிரஷை பற்றி வர்ணனைகளை கூற அதெல்லாம் கனல் கங்குகளை காதில் விழுந்தது நவிக்கு.
இவளும் கீழ்கண்களால் அவனை நோட்டமிட்டாள்.
ஆளை இழுக்கும் கூர் கண்களும்.. அலையலை என கேசமும்..
கற்றை மீசையும்..
இறுகிய தாடையுமாய் ஆணழகனாய் இருப்பவன். திராவிட நிறத்தவனாய் இருந்தாலும் அதில் அவனின் கம்பீரமும் ஆளுமையும் அனைவரையும் எப்போதும் கவர்ந்திழுக்கும் ஒன்று!!
கூடவே காலை முதல் ஒருவித சந்தோசத்தில் இருக்கிறான் என்பதை அவனது பளீர் சிரிப்பும்.. முகத்தில் எப்பொழுதும் இருக்கும் மென் புன்னகையும் காட்ட.. இன்னும் கந்தர்வனாய் கவர்ந்திழுத்தான் கன்னிகளை!!
போதாக்குறைக்கு இன்று தன்னை பார்த்து பார்த்து தன்னவளுக்காக தயார் செய்து வந்திருக்க.. கேட்கவும் வேண்டுமா?
“இவன யாரு இன்று ஓவர் ஸ்மார்ட்டா வர சொன்னது? நார்மலா இருந்தாலே நாலு நாளைக்கு இவளெல்லாம் பேசுவாளுங்க.. இதுல இவ்வளவு கிளாமரா வேற இருக்கானே.. பிச்சே தின்னுடுவாளுங்களே!!” என்று அதுவரை நண்பிகளாக தெரிந்தவர்கள் எல்லாம்.. இப்போது தன் உரிமையான பொருளை பிடுங்கும் ராட்சசிகளாக அவள் கண்களுக்குத் தெரிய.. தலையை உலுக்கி கொண்டவள் அமைதியாக சாப்பிட்டாள்.
ஆனாலும் அவள் அமைதியை சோதிக்கும் வண்ணமே மற்றவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர்.
“அவன் யாருன்னு முதல்ல விசாரிங்க” என்றதும்,
“என் டீம் கிட்ட கேட்டா உடனே சொல்லிடுவாங்க..” என்று இன்னொரு கேரளாவை சேர்ந்த பெண் தன் டீமுக்கு மெசேஜ் செய்து அவனைப் பற்றி டீடெயில்ஸ் கேட்க.. அடுத்த பத்தாவது நிமிடம் வந்து விழுந்தது விதுரனை பற்றியது..
“ஏய்.. அவன் பேரு தேவஜித் விதுரன்!!
“வாவ்!! விதுரன் நைஸ் நேம்..” என்று அதற்கு ஒருமுறை பாராட்டு மழை…
“கோயமுத்தூர் டீம்மாம்!!”
“கோயம்புத்தூர்னா தமிழ்நாடு தானே?” என்று மற்றவர்கள் கேட்க ஆமாம் என்று தலையாட்டினாள் நவி, வரவழைக்கப்பட்ட புன்னகையோடு…
“அப்படின்னா எங்களை எல்லாம் அவன் கிட்ட ஒரு இன்ட்ரோ கொடு நவி” என்று கொஞ்சலாக கேட்டவளை சாப்பிட்டு கொண்டிருக்கும் சாம்பாரை அவள் தலையில் அபிஷேகம் செய்தால்தான் என்ன என்று எண்ணம் தோன்றியது நவிக்கு!!
இப்படியாக காலை வேளையை கடுப்புடன் கடந்து வந்தாள் நவி இவர்களின் ஜொள்ளுவிடுதலை கண்டு…
ஒரு வழியாக பெண்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்து சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்களை கடந்து வேக நடையுடன் விதுரன் செல்ல…
வேகமாக சென்றவன் தன் பின்னால் குசுகுசு என்று பேச்சு கேட்பதை கண்டு திரும்பி அவர்களை பார்த்தான்.
அவன் திரும்பிப் பார்த்ததற்கே இவர்களின் முகம் எல்லாம் 100 வாட்ஸ் பல்பு போல பிரகாசிக்க.. “எக்ஸ்க்யூஸ் மீ கேர்ள்ஸ்.. ஏதாவது சொன்னீங்களா?” என்று நவியின் எரிகின்ற மனதில் பெட்ரோலை ஊற்றினான் செவ்வனே!! அவனாக கேட்ட விதத்தில் அவனின் அந்த ஆளுமையான குரலில் சுற்றி நின்றவர்கள் இவளை தட்டி எழுப்ப…
நால்வரும் நவிக்கு பின்னால் நின்று அவளை சுரண்டி.. கிள்ளி.. அடித்து ஒரு வழி ஆக்கினர், அவனிடம் அறிமுகம் செய்து வைக்க சொல்லி..
“விதுரன்..” என்று அழைத்தவளின் அழைப்பு அபிசியல் ஆக இருக்க.. “எஸ் நிதா…” என்று சற்று அருகில் வந்தவனிடம் அவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தினாள். அவள் கண்களில் தெரிந்து பொறாமையும் கோபமும் அவனுக்கு அவளின் பொஷசிவ்னஸை பறைசாற்ற.. சற்று சீண்டிப் பார்க்க நினைத்தவன், வாய் வார்த்தையால் ஹலோ என்று கூறாமல் அனைவருக்கும் கைகுலுக்கியே அறிமுகமானான்.
“போதும்டா… ரொம்ப நேரம் குலுக்காத!!” என்று பல்லை கடித்து சிறு குரலில் அவனுக்கு கேட்குமாறு திட்டியவளை, திரும்பிப் பார்த்தவன் “பொறாமை?? இருக்கட்டும்!! இருக்கட்டும்!!” என்று சிரிப்போடு அந்தக் கேரள பெண்களிடம் அவனுக்கு தெரிந்த மலையாளத்தில் உரையாட.. அவர்களுக்கு எல்லாம் பறப்பது போலானது. கோயம்புத்தூரில் இருக்கும் அவனுக்கு மலையாள நண்பர்கள் ஏராளம்.
நாகரிகம் கருதி தன் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்களுடன் நின்றிருந்த நவியின் பொறுமை கூட ஒரு எல்லையில் பறக்க தொடங்க.. “பை கேர்ள்ஸ்… நைஸ் டூ டாக்கிங் வித் யூ ஆல்!!” என்று அவர்களிடம் கையாற்றிவிட்டு சென்றவனை “இருடா மகனே… உனக்கு இதுக்கு திருப்பி செய்யல..” என்று தன் ஆத்திரத்தை எல்லாம் தன் அழகிய நகத்தில் காட்டிக் கொண்டிருந்தாள்.
வழக்கம் போல மீட்டிங் நடக்க இம்முறை ஃபஸ்ட் பிரேக்கில் டீ அருந்திக் கொண்டிருந்தவளை தான் சர்வேஷ் சோகமான முகத்தோடு “அவளிடம் பேசலாமா? வேண்டாமா?” என்று யோசனையுடன் பார்த்திருக்க “ஹாய் சர்வேஷ்…” என்று உற்சாக புன்னகையுடன் நவி அவனை எதிர் கொள்ள.. அந்த உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது.
அதன் பின் விதுரனை வெறுப்வேற்றும் வேலையை இவள் செவ்வனே செய்தாள்.
டீப் பிரேக்கில் மட்டுமல்ல லஞ்ச் பிரேக்கிலும் அவனுடைய பேசியபடி சாப்பிட்டவளை வினோதமாக பார்த்தான் விதுரன். ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவன் முகத்தில் காட்டாமல் இருந்தாலும் அவள் மீதான கோபம் அவன் கண்களின் கூர் விழிகளில் தெரிய.. “அப்பாடா… இப்பதான் சாப்பிட்டது செரிக்கும்!!” என்று தன்னை மறந்து கூறியவளை அந்தோணி வினோதமாக பார்த்தான்.
“என்ன நவி?” என்று அந்தோணி கேட்க…
“அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது.. ஏன்னா நீ நைட்டிஸ் கிட்!!”
“போ.. போ… ஆனா ஒன்னு அந்த ரெட்டி கூட ரொம்ப பேசாத.. அவனும்.. உன்னை பார்க்கும் அவன் முழியும்?” என்று தன் தோழியை தின்பது போல பார்க்கும் சர்வேஷை அவனுக்கு பிடிக்கவில்லை.
“அப்படியா சொல்லுற? அவன் எனக்கு ப்ரோபோஸ் பண்ணிட்டான்!! பார்க்கலாம்??” என்றவள் கண்ணடிக்க…
“எதே? இது எப்போ? இரு அவனை….” என்று எழுந்தவனை அமர வைத்தாள் கஷ்டப்பட்டு நவி. ஆனால் அடுத்த பிரேக்கில் அதை அப்படியே விதுரனின் காதில் ஓதிவிட்டான் அந்தோணி.
விதுரன் அவளை முறைத்த முறைப்பில்… அவனைப் போலவே ஒற்றைப் புருவத்தை தூக்கி நவி சிரிக்க…
“உன்னை இரு டி வைச்சிக்குறேன்” என்று இதழ்களை மெலிதாக அசைத்து அவன் தூதுவிட..
“வைச்சுக்கோ… வைச்சுக்கோ…” என்று இவளும் இதழ்களாலே பதில் அனுப்ப.. இதை கண்ட அந்தோணி இப்பொழுது இவர்கள் இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்தான்.
“உனக்கு வாயால பதில் சொன்னா எல்லாம் பத்தாதுடி!! ராட்சசி!!” என்றவன் பெண்களோடு அவள் அமர்ந்து டீ அருந்தும் வேளையில் சட்டென்று அவள் அருகில் அமர்ந்து ஏதோ வெகு முக்கியமாக பேசுவது போல அவள் காதில் அவனின் கற்றை மீசை மட்டுமல்ல… முரட்டு இதழ்களும் கவி பேச… கிசுகிசுத்தான் அத்தனை பேரும் முன்பும் ரகசியமாக…
“சும்மா அவனை பார்த்து உதட்டை உதட்டை இளிக்காதே டி.. இழுத்து வைச்சு கடித்து விடப் போறேன்..” என்றான். அத்தனை பேரும் அதை குறுகுறுப்போடு பார்க்க.. அதை கொஞ்சமும் சட்டை செய்யாதவன் அவள் அருந்திவிட்டு வைத்திருந்த மிச்சம் டீயை ஒரே மிடுக்கில் குடித்துவிட்டு அவன் எழுந்து சென்றுவிட்டான்.
பெண்கள் எல்லாம் அவளை ஆவென்று வாய் பிளந்து பார்க்க.. என்ன பதில் சொல்வது என்று இவள் திகைக்கும் போதே மீட்டிங் ஆரம்பித்துவிட… தப்பித்தோம் தொலைத்தோம் என்று தன் இடத்துக்கு வந்து அமர்ந்து விட்டாள்.
ஒரு வழியாக மீட்டிங் முடிந்ததும் அதைப்பற்றி ஃபீட்பேக் கொடுக்க சொல்ல சொன்னார்கள். ஒவ்வொரு டீமில் இருந்தும் ஒவ்வொருவர் அழைக்கப்பட்டனர். சென்னையில் இருந்து “தலைவியே… நீயே போ!!” என்று நவியை துரத்தி விட்டார்கள்.
இவள் முடித்து வர, அடுத்து கோயம்புத்தூர் டீமுக்காக பேச வந்த விதுரன் “ஷல் ஐ ஸ்டார்ட் வித் ஒன் குட் நியூஸ்?” என்று ஆரம்பிக்க.. அங்குள்ளவர்கள் ஒப்புதலாக கைதட்டினார்கள். விறுவிறுவென்று சென்றவன், அனைவரும் முன்னும் நவியை நோக்கி கையை நீட்ட… அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.
‘ம்ம்ம்.. நான் இருக்கிறேன்.. கொடு!’ என்பதாய் அவன் கண்களை மூடி திறக்க ஏதோ முடிவு எடுத்து விட்டான் ராட்சசன் என்று நினைத்தவள், வலிய சிரிப்போடு அவன் உள்ளங்கையில் தன் கையை வைக்க.. அவளை அழைத்து வந்து அனைவரும் முன்பாக நிறுத்தி, “நிதா.. மை பியான்சி!!” என்றான் அனைவர் முன்பும்… பலத்த கரவோஷத்தோடு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் அனைவரும்!!
ஒரு பக்கம் பக்கென்று சர்வேஷின் லிட்டி ஹார்ட் உடைய… மறுபக்கம் பெண்கள் நவியை முறைத்தனர்.. “அவ ஆளை பத்தி சொல்லும்போது கூட சொல்லாமல் மறைத்து விட்டாளே” என்று!!
அன்றிரவே… மானிடம் சிக்கிக் கொண்டது வகையாக சிறுத்தை!!
அதிலும் ஆவேசவெறியுடன் முத்தமிட்டு கடித்துச் சுவைத்தவளை… கடித்தவளை கண்கள் சொக்க பார்த்தான் விதுரன். அவள் கொடுக்கும் மோக அவஸ்தைகளை இன்பமாய் ஏற்றபடி முனகிக் கொண்டு!!
கதைப்போமா 23
மீட்டிங் முடிந்த உடன் நவியை சூழ்ந்து கொண்டு பாசமாக பார்த்தார்கள் பெண்கள் ஒரு புறம் அந்தோணி அண்ட் டீம் மறுபுறம்…
“இவ்வளவு நாள் பழகியும் இதை நீ எங்களிடம் சொல்லவில்லையே நவி…” என்று அந்தோணி அவளை பாசமாக முறைக்க… பெண்களோ “அடிப்பாவி!! உன்னிடமே உன் ஆளைப் பற்றி சொன்னமே அப்போதாவது ஒரு வார்த்தை சொல்ல கூடாது நீ?” என்று அவர்களும் அனல் பறக்க பார்க்க…
இடையில் புகுந்த விதுரன் “சரி கைஸ் எங்களுக்கு டைம் ஆயிடுச்சு ட்ரையினுக்கு!!” என்று ஆபத்து வந்தவனாய் மாறியவன் அவளை அழைத்துக்கொண்டு அவள் ரூமில் விட்டான்.
“15 மினிட்ஸ் டைம் அதுக்குள்ள ரெடியாயிரு!! ட்ரைனுக்கு டைம் ஆச்சு” என்று அவனது லக்கேஜை எடுக்க சென்றான்.
“இருடி என் கிட்ட மாட்டுவல.. அப்ப இருக்கு உனக்கு!!” என்று ‘இப்படி அனைவரும் முன்னும் போட்டு உடைத்து விட்டானே.. இனி எல்லோரையும் எப்படி பார்ப்பது? அவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் எப்படி பதில் அளிப்பது?’ என்று மனதில் ஒரு புறம் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தாலும்.. கைகள் அவளது உடைமைகளை எடுத்து மறக்காமல் பேக் செய்து கொண்டு இருந்தது. மீட்டிங் அறையில் இருந்த கசகசப்பு போக ஒரு குளியல் போட்டவள், பிங்க் நிற குர்தாவும் வெள்ளை நிற பிளாசாவும் அணைந்து இவள் வெளியில் வந்தாள் அறையை மூடி!!
விதுரனும் அப்போது வந்தவன், “அள்ளுற டி… ராட்சசி!!” என்றவன்
சுற்று மற்றும் பார்த்துவிட்டு அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுக்க, அவளோ அவனை தள்ளிவிட்டு தனது ஷாலை கொண்டு அழுத்தமாக கன்னத்தை தேய்த்துக் கொண்டாள்.
“ஆஹான்… ஒரு நாள் மொத்தமாக கையில் சிக்குவல.. அன்னைக்கு நீ என்ன பண்றான்னு பார்க்கிறேன்” என்றவன் மற்றவர்கள் அறைக்கு வரும் முன்னே அவளை அழைத்துக்கொண்டு சென்று விட்டான். அதில் ஒரு புறம் நிம்மதி தான் நவிக்கு.
எப்படியும் அவளிடம் ஏன் சொல்லவில்லை? ஏன் சொல்லவில்லை? என்று சுற்றி நின்று மீண்டும் கேட்பார்கள் அதிலும் அந்தோணி அவனது டீம் எல்லாம் பல நாட்களாக இவளோடு இருப்பவர்கள், உரிமையாய் கோபித்தும் கொள்வார்கள். இப்போது யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லேம் மனநிலையில் அவள் இல்லை. சிறிது நாட்கள் ஆற போட்டு அதன் பின் சொல்லலாம் என்று நினைத்தவளுக்கு, இப்போது மொத்த கோபமும் விதுரன் மீது தான்!! இவனை யாரு இப்படி சொல்ல சொன்னது என்று!!
ஹோட்டலில் இருந்து கேப் புக் செய்தவன், போகும் வழியிலேயே ஹோட்டல் ஒன்றில் சாப்பாடு பார்சல் வாங்கிக் கொண்டான். எதிலும் தலையிடாமல் பார்வையாளராகவே அமர்ந்திருந்தாள் நவி.
“இவ பாக்குற பார்வையே சரியில்லையே??? சேதாரம் பலமா இருக்குமோ??” என்று வேண்டுமென்றே அவளுக்கு கேட்கும் வண்ணம் சத்தமாக முணுமுணுத்தான். அதில் முகிழ்த்த சிரிப்பை இவள் முகம் திருப்பி மறைத்துக் கொண்டாள்.
“சிரிப்பு வந்தா சிரிச்சிடனும் நிதா மா..உணர்ச்சிகளை எல்லாம் கட்டுப்படுத்தி வைக்கக் கூடாது!! காட்டிடனும்!!” என்று அவன் இரட்டை அர்த்தத்தில் கூற.. தன் கையில் போட்டிருந்த பிரேஸ்லெட்டை காப்பு போல முறுக்கி விட்டவள் “காட்ட தானே வேணும்? காட்டு காட்டுனு காட்டுறேன் விதுரன் சார்.. ட்ரெயின் ஏறியதும்” என்றதிலேயே அவள் ஃபுல் ஃபார்ம் இருப்பது தெரிய “இதெல்லாம் புருஷ லட்சணம் நிதா!! அடி வாங்குவதும்… காலில் விழுவதும்.. ஆனால் ஒத்த சத்தம் கூட வெளியில் கேட்காது!! தெரியுமா?” என்று அவள் அருகில் முணுமுணுத்தான்.
அன்று போலவே இன்றும் முதல் வகுப்பு கூபேயில் தான் இருவருக்கும் சென்னைக்கு டிக்கெட் புக் செய்திருந்தான் விதுரன்.
“ஏன்டா இன்னைக்கு அப்படி செஞ்ச எல்லாரும் முன்னாலையும்?” என்று உள்ளே நுழைந்து அவன் கதவை சாற்றியதும் அவன் சட்டையை இவள் பிடிக்க…
“உன் வேகம் கண்டு நான் வியக்கேன் கண்மணி?!” என்றான் சொக்கிய குரலில் சொக்கநாதனாய் விதுரன்.
“உன்னை எல்லாம்… நீ எல்லாம் என்ன டிசைன் டா? அப்போ அவ்ளோ தள்ளி தள்ளி போன… இப்போ இப்படி…” என்று அவர்கள் இருவரின் இறுக்கமான அணைத்திருந்த நிலையை சுட்டிக்காட்டி கூறினாள்.
அவள் சட்டையை பிடித்து அடுத்த நிமிடமே இவன் இடையே இறுக்க பிடித்திருக்க… அங்கே காற்றுக்கு கூட அனுமதி இல்லை.
“உன்னை…!!” என்று அவனது அதரங்களை அழுத்தமாக ஆவேசமாக அழுந்த கடித்தாள் நவி.
அவனும் அவளது மோக சித்திரவதையில் தத்தளித்து தள்ளாடி கிறங்கி நின்றான்.
“வேணாம்டி… விடுடி… அப்புறம் நீதான் கற்பு போச்சு சிவப்பு போச்சு என்று புலம்புவ… சொன்னா கேளு!!” என்று அவன் சொல்வது புரியாமல் மேலும் அவனின் அதரங்களில் அவள் தண்டனை கொடுக்க… “இனி என்னால முடியாது!! எல்லாத்துக்கும் நீ தான் பொறுப்பு” என்றவன் அவளை அந்த சீட்டில் கிடத்தி இருந்தான்.
அவனது அதிரடி முத்தாடலில் வியர்வையில் குளித்த முகமாகக் கண் மூடிக் கிடந்தாள் நவி. அவளின் கூந்தலும், முன் நெற்றி முடிகளும் ஏகத்துக்கு கலைந்து போயிருந்தது. நெற்றியில் வைத்திருந்த திருநீறு காணாமல் போய் பொட்டெல்லாம் கலைந்திருந்தது. அவனால் ஆர்வமாகச் சப்பிச் சுவைக்கப் பட்ட அவளின் தேன் சுளை உதடுகள் வெளிறி பிளந்திருந்தன.
மோகத்தில் முக்குளித்த விதுரனோ முகத்தை தூக்கி எக்கி அவள் உதட்டின் மேல் தன் உதட்டை வைத்து அழுத்தி முத்தமிட்டான். அவள் முகம் சுனங்கியது. ஆனால் கண்கள் திறக்கவில்லை. மெல்ல தன் பற்களால் அவள் உதட்டை கவ்வினான். அவளின் வெப்ப மூச்சை தன் முகத்தில் உணர்ந்தபடி மெதுவாக அந்த உதட்டை கவ்விச் சுவைத்தான் மன்னவன்!!
நவி மெதுவாக மூடிய கண்களைத் திறந்தாள். அவள் மூச்சு பலமாக இருந்தது. உச்சத் தவிப்பில் இறுக்கி அணைத்திருந்த நவியின் உடலில் இருந்து தன் கைகளையும், கால்களையும் பின்னி பிணைத்திருந்தான் அவளை நகர விடாமல்… அவள் உதட்டை நன்றாகச் சப்பிய பின் விடுவித்தவன்.
“லவ் யூ ஸோ மச் நிதா” அவள் கண்களைப் பார்த்து காதல் பித்தேறி மோகத்தில் முணக ஆரம்பித்தான்.
எதுவும் பேசாமல் அவனை உற்றுப் பார்த்தாள். அதிலிருந்து எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. மாறாக மயங்கி இருந்தன மங்கையின் விழிகள்!! வலது கையால் அவளின் கன்னத்தை வருடினான். கலைந்து புரண்ட முடி கற்றைகளை காதோரம் ஒதுக்கினான். பின் அவள் மூக்கையும், உதட்டையும் இதழ்களால் வருடினான்.
“தேங்க் யூ டி.. பொண்டாட்டி!!” என்றான் முத்தமிட்டு!!
”பொறுக்கி… போடா… இதுக்கு மேல லிப்ஸ் தாங்காது!!” என்றாள் சற்றே செல்ல சலிப்பாக!!
“ச்சோ ஸ்வீட்” கொஞ்சினான்!!
“பிராடு..” மிஞ்சினாள்!!
“அழகிடி நீ!!” ஆராதித்தான்!!
“விடுடா…!!” அணைந்திருந்தாள்!!
“ம்ஹூம்… இந்த ஜென்மத்துல அந்த எண்ணம் இல்லை!!” பித்தாய் மிழற்றினான்.
“என்னை என்னடா செஞ்சே.. உன் மேல பைத்தியமா இருக்கேன்!!” சொக்கி கிடந்தாள்.
“இன்னும் ஒன்னும் பண்ணலடி!! பண்ணலாம்னு தான் யோசனை…” சராசமாடினான்!!
“கொன்ருவேன்… தள்ளி போடா!!” மிரட்டினாள்!!
“ஐ லவ் யூ சொன்ன?” சீண்டினான்!!
“சொன்னேன்… அதுக்கு.. போ போ.. ” என்று சிணுங்கினாள்.
“நீ தான்டி ஓகே சொன்ன?”
“என்னை மயக்கி.. ஏமாத்தி சொல்ல வெச்சிட்ட.. நீ… ப்ராடு!!”
“இல்லடி.. உன் அழகுல நான்தான் மயங்கிட்டேன்… உன் அழகு என்னை பைத்தியமாக்கிடிச்சு”
அவன் கன்னத்தைப் பிடித்து வலிக்கக் கிள்ளினாள்.
“பொறுக்கி.. பொறுக்கி..” என்று அவனை அடித்து பின் கைகளை முதுகிலும் கழுத்திலும் போட்டு வளைத்து இறுக்கிக் கொண்டாள். அவள் முகமெங்கும் ஆசையாக முத்தமிட்டான். கொள்ளையாக இருந்தவளை முழுதாக கொள்ளையிடும் எண்ணம் மேலிட்டது அவனுக்கு!!
ஆனால் அவன் கொண்ட காதலும்.. அவள் வைத்த நம்பிக்கையும்.. அவனை தள்ளியே நிறுத்தி இருந்தது!!
அவளை அணைத்து கொண்டே உறங்கியவன் சென்னை வந்ததும் தான் அவளை அவள் இடம் சேர்பித்தவன், “நான் மீட்டிங்ல எல்லாரும் முன்ன நீ என் பியான்சி சொன்னேன்னு உனக்கு கோபம் இருக்கலாம் நிதா. ஆனா அது அப்படி இல்ல… நம் இருவரின் நெருக்கத்தை நிறைய கண்கள் பார்த்து இருக்கலாம்.. அதான் மத்தவங்க கண்களுக்கு நம் காதலை கொச்சைப்படுத்த விரும்பாமல் சொல்லிட்டேன்!! இப்போ அப்படி பார்த்து இருந்தாலும் அவர்கள் அது லவ்வர்ஸின் ரொமாண்டிக் டைம் என்பதோடு கடந்து இருப்பார்கள். புரியுதா என்னை?” என்று நெற்றி முட்டி கேட்டவன் மேல் எங்கனம் கோபம் கொள்வது? இன்னும் இன்னும் காதல் பிரவாகம் எடுத்தது அவளுள்!!
கோபம் இல்லை என்னும் விதமாய் தலையாட்டினாள் நவி!!
“அதற்கு மேல சர்வேஷூம் உன்னை நினைத்து சுத்திட்டு இருந்தானா? பாவம்… இவ கமிட்டெட் டா.. ஒரு ஆன்ட்டிக்காக எதுக்கு டைம் வேஸ்ட் பண்றேன்னு அவனுக்கு புரிய வைக்கவும் தான்!!” என்றவன் சிரிக்க… அவளோ முறைக்க…
“சரி.. சரி.. காளியாத்தா அவதாரம் எடுக்காதே!! சீக்கிரம் அப்பாம்மாவோட வருகிறேன் மா” என்றவன் சொன்னது போலவே அடுத்த ஒரு வாரத்தில் அவளைப் பெண் கேட்டு வந்து இறங்கி இருந்தான் அவளது வீட்டுக்கு!!
நவியின் அன்னைக்கும் ஏக தயக்கம்!! அதைவிட சுற்றமும் சொந்தமும் என்ன சொல்வார்களா என்று பயம்!!
இவ்வளவு நாட்களாக கணவன் என்ற ஆண்மகன் எந்த முடிவு எடுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர் மீது நம்பிக்கை கொண்டு.. அவர் வார்தை மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து பழகிவிட்டார். இன்று கணவன் இல்லாத நேரத்தில்.. தான் எடுக்க முடிவை இந்த சுற்றமும் உறவும் சமூகமும் எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்று பயந்தவர், முதலில் சம்மதிக்கவே இல்லை!! லட்சுமியும் சுந்தரமும் நிறைய எடுத்து சொன்னாலும் அவர் முகம் தெளிய மறுத்தது.
இவர்கள் பேசுவது எல்லாம் திகில் நிறைந்த முகத்தோடு பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் நவி. லட்சுமி மெதுவாக அவளது முகத்தை காட்டி “உங்க பொண்ணு முகத்தில எவ்வளவு பயம் பாருங்க.. காலம் முழுக்க இதே பயத்தோட அவ வாழுனுமா? இல்ல மனம் நிறைந்த மகிழ்ச்சியுடோடு வாழ வேண்டுமா? யோசிங்க!! நானும் உங்களை போல யோசித்தவள் தான்.. நான் புரிந்து கொண்ட மாதிரி நீங்களும் புரிந்து கொள்வீர்கள்” என்றார் நம்பிக்கையோடு.. அது பெற்றவராய் தன் மகன் மீது கொண்ட நம்பிக்கை!!
விதுரனும் அவர்கள் அருகில் அமர்ந்தவன் “எங்க கல்யாணத்தால நவீனோட கல்யாணம் பாதிக்கப்படும் நீங்க நினைச்சீங்கன்னா??? அவன் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் எங்க கல்யாணத்தை நாங்கள் வைத்துக்கொள்கிறோம் அத்தை!!” என்றதும் அவனின் அந்த சரியான புரிதலில் சற்று ஆடிப் போய்விட்டார்.
என்னதான் மகளை நினைத்தாலும் நாளை மகனுக்கு என்று வரும்போது இதை சொல்லிக் காட்டுவார்களோ உறவினர்கள்.. பையனுக்கு பெண் கொடுக்க மறுத்து விடுவார்களோ என்ற பயம் அவருக்குள்!!
“இது ஆம்பளை இல்லாத குடும்பம் தானே… பெண்ணாக முடிவெடுத்து இப்படி கஷ்டத்தில் கொண்டு வந்து விட்டாய்!!” என்று உறவுகள் நாலும் பேசும் என்று அவ்வளவு பயம்…
ஆனால் விதுரன் அவரின் மனதை அறிந்து பயத்தை போக்கும் விதமாக பேச.. “என் பையன் கிட்டயும் கலந்து பேசிட்டு சொல்றேன்” என்றவர் அன்று இரவே மகனுக்கு அழைக்க.. அங்கு நடந்தவற்றை முழுதாக கவனித்துக் கேட்டவன் “இதைவிட வேற நல்ல குடும்பத்தை நீங்கள் வலை போட்டு தேடினாலும் உங்க பொண்ணுக்கு கண்டுபிடிக்க முடியுமா? நாளைக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிறவ என்னையும் நம்ம குடும்பத்தையும் நம்பி வரணுமே ஒழிய… ஊரார் வாயைப் பார்த்து வந்தால்.. அப்படிப்பட்ட பெண்ணை எனக்கு வேண்டாம்!! நானும் நவி மாதிரி ஒரு நல்ல குடும்பத்தை வலை போட்டு தேடிக்கிறேன்” என்றதும்,
“டேய்.. நவீன்… நீயுமா?” என்று அவர் அலற..
“சும்மா மா.. நீங்கதான் எனக்கு பொண்ணு பார்ப்பீங்க கவலையே படாதீங்க!!* என்று அவரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு நாள் குறிக்க சொன்னான்.
அதன்படி அடுத்து வந்த நல்ல நாளில் தேவஜித் விதுரன் நவ்னீதா திருமணம் வெகு சிறப்பாக நடந்தது!!
திருமணம் முடிந்து அன்று மாலை ரிசப்ஷன் தஞ்சாவூரில் நடக்க…
மறுநாள் கறி விருந்து.. அடுத்தடுத்து பூஜை… குலதெய்வ கோவில் வழிபாடு என்று மூன்று நாட்கள் தஞ்சாவூரில் தங்கி செல்வதாக திட்டம்.
அவர்களை திட்டத்தை எல்லாம் தவுடுபொடியாக வந்து சேர்ந்தது விதுரன் மற்றும் நவியின் நண்பர்கள் கூட்டம்..
அவர்களை வாழ்த்தியவர்கள்.. பரிசுகளை கொடுக்க புன்னகையுடன் வாங்கிக் கொண்டனர் இருவரும். அதன் பிறகு அவர்களது தலைமை சேல்ஸ் மேனேஜர் ஒரு கடிதத்தை கொடுக்க.. பிரித்து பார்த்தவன் சந்தோஷத்தில் வதனம் மின்னியது!! அதில் அவனுக்கு மேனேஜராக அடுத்த நிலைக்கு தேர்வாகி இருக்கிறான் என்றும், அதற்கான ட்ரெயினிங் வரச் சொல்லியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
முதலில் சந்தோஷப்பட்டவன் அதற்கு அடியில் அவர்கள் குறிப்பிட்டியிருந்த நாளை பார்த்து “நோ… கடன்காரர்களா… வச்சு செஞ்சிட்டீங்களேடா!!” என்று அலறி இருந்தான்.
ஆம்!! அன்று இரவே அவன் கிளம்ப வேண்டும். மறுநாள் அவனுக்கு ட்ரைனிங்…
Super sis ❤️
Ha ha ha.. So sad Vidhuran.. 😂🤣
Ada pavamey vechu senjutanunga😂😂