10 – இத இதமாய் கொன்றாயடி
தமிழ் இளமை முறுக்கை அடக்கப்படாதபட்டுப் போனான். தமிழுக்கு மகிழ் மேல் மனதின் ஓரம் கொஞ்சம் காதல் பிறந்தது. காதலில் அவனுக்கு அவளைக் கட்டியணைக்க வேண்டும் போலவும், அவளை கண்டபிடி கலைத்து கசக்க வேண்டும் போல இருந்தது. விடிந்த பின்னால் குளிக்க கூட இல்லாமல் அவன் வயலுக்கு கிளம்பிவிட்டான். மகிழ் வழக்கம் போல் எழுந்து குளித்து முடித்து அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தாள். அந்த அறையில் அவன் இல்லை. அவன் இல்லை என்றபோதும் இரவில் அவன் பட்டபாடு என்பதை புரிந்துக் கொண்டு விஷமச் சிரித்தாள்.
‘அவன் எங்கு போயிடுவான். எங்கு சுற்றினாலும் இராவுக்கு வீட்டுக்கு வந்து தான் ஆகனும்… அப்ப வைச்சுறேனு…’ வன்மாக சிரித்தாள். பாவம் அவன் தன் மேல் காதல் கொண்டு அவளிடம் சொல்ல பயந்துக் கொண்டு ஓடி ஒளிகிறான் என்று சொல்லமுடியுமா… சொன்னால் அவள் நக்கலாக சிரிப்பாள்.ஆமாம் அவள் இவன் மேலே பாசம் கொண்டு இதெல்லாம் செய்யவில்லை. அவள் செய்யும் செயல் எல்லாம் வெறும் நடிப்பு தான் தெரிந்துக் கொண்டான்.
அவன் சென்ற இடம் அவனுக்கு மிகவும் பிடித்த இடம் நெல்காடு. இருபக்கமும் நெற்பயிர்கள் வளர்ந்திருக்க அதற்கிடைய இருந்த ஒற்றை வேப்பமரத்துக்கு அடியில் கயிற்றுகட்டிலைப் போட்டு படுத்தான்.மகிழின் சின்ன வயசில் இருந்து இப்ப வரை செய்த ஒவ்வொரு சேட்டையாக நினைவில் கொண்டு வந்து ரசித்தான்.
அவள் பேரை ‘அழகானராட்சி’ மாற்றி அமைத்தான். அதை ரசித்துக் கொண்டிருந்த போது அவன அழகானராட்சியே அழைத்தாள்.
“ஹலோ… நா மகிழா பேசறேனு… மதியம் வீட்டுக்கு வரிங்களா…” வினயமாக் கேட்டாள்.
சத்தமின்றி அவள் குரலை அணுஅணுவாக்க் கேட்டு, துளிதுளியாக உயிரில் இறக்கிக் கொண்டிருந்தான். அதற்குள் அவள் பல ஹலோக்களை சொல்லி,”போனே எடுத்துப் பேசமாட்டேங்குறானே… ஒருவேளை லைன்ல ஏதாவது சிக்கலா… என்னனு தெரியலே…” என திட்டியவாறே அலைப்பேசியைத் துண்டித்தாள்.
அலைப்பேசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவள் பலமுறை ஹலோகள் கூறியதையும், அவனை மரியாதையில்லாமல் திட்டியதையும் இன்பமாக நினைத்துப் பார்த்திருந்தான். நினைக்க நினைக்க அவன் மனதில் இன்பவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுகவேதனையில் கண்களை மூடி ஆழ்ந்திருந்தான். எப்போது எப்படி உறங்கினான் என தெரியவில்லை. உறக்கம் என்றால் அப்படி ஒரு உறக்கம்.
கண் விழித்துப் பார்க்கும் போது சுற்றிலும் ஒரே கும்மிருட்டு. எங்கே இருக்கிறோம் என ஒரு சிலநிமிடங்கள் புரியவில்லை. கண்களைத் தேய்த்து இருட்டுக்கு பழகிய பின்னால் காலையில் வந்தது பொழுது சாய்ந்த பிறகும் வயற்காட்டில் இருக்கிறோம் என்பதை அறிந்துக் கொண்டு அவனேயே நினைத்து சிரித்தான்.
அலைப்பேசியை எடுத்துப் பார்த்துப் போது அதிகமான அழைப்புகள் அதிலும் மனைவிடமும் தாயிடமும் வந்த அழைப்புகள் ஏராளம். அலைப்பேசி அழைத்தது கூட தெரியாமல் அப்படி உறங்கிவிட்டோம். வீட்டுக்குத் தானே போகிறோம். நேரில் சென்று பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். அவன் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு உல்லாசமாக விசிலடித்தபடியே வீடு நோக்கி நடந்தான்.
வீட்டை அடைந்ததும் தாயும் மனைவியும் என்னவோ ஏதோ என பதறிப் போய் அவனை சுற்றி வளைத்துக் கொண்டு கேள்வியாக்க் கேட்டார்கள். முதலில் மகிழ் அசட்டையாக இருந்துவிட்டாள். நேரம் கூட கூட அவன் அலைப்பேசிக்கு விடாமல் அடித்தாள். ஒவ்வொரு தடவையும் அழைப்பு எடுக்காமல் போகவும் உண்மையாலும் பதறிப் போனாள். அந்த பதட்டத்தில் தான் கைகளைப் பிடித்தப்படியே பதட்டத்துடன் விசாரித்தாள்.
தமிழுக்கு கைகளைப் பிடித்ததற்கு அவ்வளோ சந்தோஷமாக இருந்தது. அந்த சந்தோஷத்தில் தலைச் சுற்றிப் போனான். தாய் அவனை கட்டியணைத்தப்படி அழுதாள். தன் தாயைப் போலவே தன் மனைவியும் தன்னை கட்டியணைத்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துப் பார்த்தான்.கற்பனையில் நன்றாகவே இருந்தது.
நிஜத்தில் அவள் கட்டியணைப்பது நடக்கவே நடக்காது. மகிழ் நிதர்சனம் புரிந்து கைகளை மெதுவாக உருவிக் கொண்டாள். இனிப்பைத் தின்றுக் கொண்டிருக்கும் குழந்தையிடம் அந்த இனிப்பை பிடுங்கிக் கொண்டால் எப்படி அழுகும் அதே போலானது தமிழின் நிலைமை. நமக்கு கொடுத்து வைத்து அவ்வளவு தான் என்று ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டான். ஒருவழியாக நிலைமை சகஜமானது.
பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவை உண்டனர். தமிழ் முதலில் தங்கள் அறைக்குச் சென்று படுக்கையில் தலைக்கு அடியில் கைகளை கொடுத்து கனவுக் கண்டான். கனவில் அவனும் மகிழும் கட்டியணைத்து அவனுக்கு பிடித்த வேப்பமரத்தை சுற்றி வந்து டூயட் பாடினர். தீடிரென்று தலையணையோடு கீழே விழுந்தான்.
“ஆ… மண்ட வலிக்குது…” தலையை தேய்த்து விட்டபடி எழுந்து அமர்ந்து சுற்றுப்புறம் பார்த்தான்.
“ச்சே… எல்லாம் கனவா… உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும்…” புலம்பியபடி கட்டிலில் அமர்ந்து மீண்டும் கனவிற்குச் சென்றான்.அப்போது கதவை பட்டென்று மூடி தாளிடும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தால்,”ஆரது… எம்மை தொந்தரவு பண்ணறது… ஒருவீடான வீட்டில் நிம்மதியா கனவு காணமுடியுதா…”
ஓசையின்றி வாய்க்குள் முணுமுணுத்தான்.
“என்னது… முணுமுணுங்கிறிங்க…” சற்று அதட்டலாகவே கேட்டாள்.
“ஒன்னுமில்லயே…” மழுப்பலாக பதில் சொன்னான்.
“சரி… சரி… எம்மை நிம்மதியா தூங்கவிடுங்க…” என்றதும் தமிழ் அவளை ஏக்கத்துடன் பார்த்தான்.
“என்ன பார்க்கறிங்க… எமக்கு இன்னைக்கு கொஞ்சம் தல வலிக்குது… அதனால கைய கால ஆட்டாம படுக்கறனா படுங்க… இல்லினா பாயும் தலகாணியும் அங்க இருக்குது… அத எடுத்து போட்டு படுங்க…” என்று சொன்னதும்
‘எதற்கு வம்பு… கனவில் கைய கால எங்காவது போட்டு வச்சால்… வேற வினையே வேண்டாம்…’ நினைத்து பாயும் தலைகாணியும் எடுத்துப் போட்டுப் படுத்துக் கொண்டான்.
நம் வீட்டில் நமது படுக்கறையில் நம் கட்டிலில் நமக்கே இடமில்லை எனக் கோபப்படாமல் கனவில் மிதந்துக் கொண்டு மகிழைப் பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சு விட்டான்.
அவன் ஏக்கப் பெருமூச்சோடும், அவள் நல்ல உறக்கத்திலும் அந்த இரவு அப்படியே கழிந்தது.
தமிழ் இரவு வெகுநேரம் கழித்து உறக்கம் கொண்டான். அதனால் சூரியவெயில் முகத்தில் அடிக்கும் போது விழித்தான். விழித்து எழுந்தும் மகிழ் இல்லாமல் அறையே வெறிச் சோடிக்கிடந்தது. உடனே அவனுக்கு எப்போது தான் நம்மை புரிந்துக் கொள்வாள் என இருந்தது.
மகிழ் தன் நடிப்பு வேலையை ஆரம்பித்துவிட்டாள். அவனுக்கு பாசமாக இருப்பதுப் போல் காபி கலந்துக் கொடுப்பதும் டிபன் செய்து கொடுப்பதுமாக… அதையும் அவன் கடமையே உண்டான். பிறகு வயலுக்கு புறப்பட்டான்.
வயலில் தமிழ் வருவதற்குள் தன்ராஜ் இவன் வருகைக்காக காத்திருந்தான். தன்ராஜைப் பார்த்ததும் தமிழுக்கு
முகம் அஷ்டகோணலாகிவிட்டது தமிழைப் பார்த்தும்,”என்ன பங்காளி சவுக்கியமா?” கேட்டான்.
‘இவன் என்ன சொல்லி குட்டையை குழப்ப வந்திருக்கிறனோ தெரியவல்லை’ பயந்தான். தமிழுக்கு தன்ராஜ் சொல்வதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. தன்ராஜ் நிச்சயம் பொய் சொல்கிறான் அவன் காதல் கொண்ட மனது நம்பியது.
அதற்குள் தன்ராஜ்,”என்ன சவுக்கியமானு கேட்டேன். அதுக்கு பதிலே சொல்லாம என்ன யோசனை…”
அதற்கு தமிழ்,” சவுக்கியம்… சவுக்கியம்…” வேண்டாவெறுப்பாக பதில் சொன்னான்.
அவனுடைய பதிலைக் காட்டிக் கொடுத்தது,’தன்னுடைய வருகை அவனுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் தான் வந்த வேலை ஆகவேண்டும்.’ எண்ணிக் கொண்டு தூபம் போடும் செயலை செய்ய ஆரம்பித்தான்.
“பங்காளி… நான் சொல்லறேனு தப்பா எடுத்துக்காதே… மகிழை கொஞ்சம் வாட்ச் பண்ணிகிட்டு வா… அவ நடவடிக்கை எல்லாம் சரியில்ல… அவ கதிரேசு கூட மீண்டும் தொடர்பில்ல இருக்கா போல இருக்கு… அத பார்த்து நடந்துக்கோ அவ்வளவு சொல்வேன்” சொல்லி முடிக்கவில்லை.
தமிழுக்கு தன்ராஜ் சொல்வதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. தன்ராஜ் நிச்சயம் பொய் சொல்கிறான் அவன் காதல் கொண்ட மனது நம்பியது. ‘கனத்த பாலைவிட சுத்தமானவள்’ என மகிழை நம்பினான் தமிழ்.
உடனே சட்டையை கொத்தாப் பிடித்து இழுத்து,”ஆரை பார்த்து என்ன சொல்கிறா… இந்த முடிச்சு போடற வேலய எல்லாம் எம்மகிட்ட வச்சுக்காதே…” சொல்லி சொல்லியே மண்ணில் போட்டு புரட்டி எடுத்தான்.
தப்பித்தோம்! பிழைத்தோம்! உயிர் தப்பினால் போதும் என ஓடி வந்துவிட்டான். சட்டை எல்லாம் கிழிந்து உடம்பு எல்லாம் இரத்தம் கசிய ஓடி வந்தவனைப் பார்த்து மகிழ்,”என்னாச்சு… என்ன உடம்புல ரத்தம் வழியுது… ஏன் இப்படி சட்டையெல்லாம் கிழிஞ்சிருக்கு…” கேட்டாள்.
அவன் குருரப் புத்தி,”அவன் உம்மை சந்தேகப்பட்டு பேசினா… மகிழ் தங்கமான புள்ள… இப்படி எல்லாம் சந்தேகப்பட்டு பேசாத என சொன்னேன். எனக்கு எல்லாம் தெரியும் உம்ம வேலய பார்த்துட்டு போடா என்றான். கட்டின பொஞ்சாதிய சந்தேகப்படறது பாவம சொன்னேன். அதுக்கு அவன் ஒன்னு பேச… நா ஒன்னு பேச… எம்மையடா எதிர்த்து பேசற… சொல்லி இழுத்து வச்சு இப்படி ரத்தம் வர அளவுக்கு அடிச்சிடான்மா…”
மகிழ் “ஆஆ… அப்படியா பேசினான…” நம்பாமல் கேட்டாள்.
“ஆமாம்… அப்படி தான் பேசினான்.” தன்ராஜ் அடித்துச் சொன்னான்.
“சொல்லியிருப்பான்… இதுவும் சொல்லியிருப்பான்… இதுக்கு மேலயும் சொல்லியிருப்பான்…” மகிழ் எரிச்சலுடன் சொன்னாள்.
“எல்லாம் அவன் தான் என்கிற ஆகங்காரம்… உடம்பு பூரா கொழுப்பு…”மனதில் தோன்றியதை எல்லாம் சொல்லித் திட்டித் தீர்த்தாள்.
தன்ராஜ் பற்ற வைத்துவிட்டு கொழுந்துவிட்டு எரியறதை பார்த்து அமைதியாக சிரித்தான். மகிழ் தமிழைப் போல அல்லாமல் தன்ராஜ் சொன்னதை முழுவதும் நம்பினாள். அதனால் அதில் மகிழின் கோபம் என்னும் வெப்பத்தில் தன்ராஜீம் குளிர் காய்ந்தான்.
தமிழ் இரவு வரட்டும் ஒருகைப் பார்த்துக்கலாம் என இரவுக்காக காத்திருந்தாள். இரவு வந்ததும் தமிழும் வந்தான். மகிழோக்கோ தமிழைப் பார்த்ததும் உள்ளே இருந்த கோபத்தில்,”என்ன துரை… இது தான் வீட்டுக்கு வர நேரமா…” கேட்டாள்.
எப்பவும் நடிப்பாளே… இப்போது கோபமா பேசுகிறாளே… என்னனு தெரியலையே… என குழம்பி போனவன்,”என்னம்மா… நீ சொல்லறது எதுவும் புரியலய…”
“தன்ராஜீடம் என்னய சந்தேகப்பட்டு பேசினியா…” கேட்டாள்.
“நா இல்ல… அவன் தான் எம்மகிட்ட உம்ம பத்தி தப்பாக தப்பாக பேசினான்.”
“இல்ல… நா நம்பமாட்டேன்… நீ பொய் சொல்ற…”
“கொஞ்சம் பொறுத்துக்க… ஆரு உண்மையா இருக்கா… ஆரு பொய் சொல்றது… உமக்கு காமிக்கறேனு…” சொல்லி எப்பவும் போல பாயை விரித்து கீழே படுத்துக் கொண்டான்.
என் கட்டில் என் படுக்கை நான் ஏன் கீழே படுக்கவேண்டும் சொல்லாமல் இந்த நிலையில் கூட கீழே படுக்கிறான். என்ன மனிதன் இவன் என நினைக்காமல் இருக்கமுடியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் தமிழைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.கொஞ்சம் அவன்பால் மனம் இளகியது. இளகிய மனதை இறுக்கிப் பிடிக்காமல் புத்தி சிந்தனையோடு பயணிக்கவிட்டாள். அப்போது தான் அவன் செய்தது எல்லாம் நியாயமாகப்பட்டது.
தமிழும் தன்ராஜ் உண்மையை சொன்னால் மட்டுமே மகிழ் நம்புவாள். தன்ராஜை அவன் வாயால எப்படி உண்மையை ஒத்துக்க வைக்கிறது ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.
தமிழு உண்மையை படம் போட்டு காட்டுவானா… இல்லையா…