ATM Tamil Romantic Novels

மயக்கத்தில் ஓர் நாள் 4

அத்தியாயம் 4

 

“அந்த சுகர் டப்பாவை எடு..”

 

“இந்தா..”

 

“அடியேய்.. இது உப்பு டப்பா.. சுகர் டப்பா எங்க?” என்ற ஷாலினியை புரியாது பார்த்தாள் அதிதி. 

 

“என்னடிச்சு உனக்கு?” 

 

“ஒன்னுமில்ல..”

 

“சும்மா சொல்லுடி..”

 

“எனக்கும் அம்மா அப்பான்னு குடும்பம் இருந்திருந்தா.. உன்னைய மாதிரி க்ராண்டா கல்யாணம் ஏற்பாடு பண்ணிருப்பாங்கல்ல?”

 

“இப்ப உனக்கு யாரும் இல்லைன்னு யார் சொன்னா.. நானிருக்கேன் டி.. நான் உனக்கு மேரேஜ் பண்ணி வைக்குறேன்..”

 

“மேரேஜ் பண்ணணும்னா அசோக் ஒத்துக்கணுமே?” என்ற அதிதியை கொலைவெறியோடு பார்த்த ஷாலினி, சமையல் அறையில் சமையல் மேடைக்கு அடியில் எதையோ தேடினாள். அதனைப் பார்த்த அதிதி,

 

“என்னடி தேடுற? சொன்னா.. நானும் கூட சேர்ந்து தேடுவேன்ல..” என்று கூற,

 

“இல்ல.. இங்க தான் பூரிக்கட்டை ஒன்னு வைச்சுருந்தான்.. அதை இப்போ காணோம்.. அதான் தேடுறேன்..” என்றபடியே தொடந்து ஷாலினி தேட,

 

“நீ தோசை தானே ஊத்துறேன்னு சொன்ன? இப்ப எதுக்கு பூரிக்கட்டை தேடுற?” என்று புரியாது பார்த்தாள் அதிதி. 

 

“அது வந்து.. சொல்லி திருந்தாத சில ஜென்மங்களை அடிச்சு சொன்னாத் தான் புரியுமாம்.. அதுக்கு தான் தேடுறேன்..”

 

“யாரை அடிக்கப் போற? இங்க நாம் ரெண்டு பேர் மட்டுந்தான் இருக்கோம்.. என்னைய அடிக்கலைனா.. உன்னைய நீயே அடிச்சுக்கப் போறியா?” என்ற அதிதி, வேக வேகமாக ஷாலினியின் அருகில் வந்து, அவளது நெற்றியில் கை வைத்து சோதித்துப் பார்த்தாள். 

 

“நீ நல்லா தானே இருக்க ஷாலு.. உன்னைய நீயே ஏன் அடிக்க போற?”

 

“அடியேய்.. அடிக்க போறது என்னைய இல்ல.. உன்னைய.. இனிமே அந்த அசோக்கோட பெயர் உன் வாயில வந்துச்சு.. வாயோட சேர்த்து நாலு சாத்து சாத்துவேன்..” என்றவளை தோளோடு அணைத்துக் கொண்டு நின்றிருந்த அதிதியின் காதில் வாயிலின் அழைப்பு மணி ஓசை விழ,

 

“கொரியர் ஏதாவது வந்துருக்கா? நீ ஏதாவது ஆர்டர் பண்ணியா?” என்று கேட்டவாறே கதவை திறந்த அதிதியின் முன் கம்பீரமாக நின்றிருந்தான் அக்னி சாஹித்யா. அகன்ற தோள்களையும் மார்பையும் உடையவன் வயிறு ஒட்டி போயிருக்க, செதுக்கி வைத்த கருங்கல் சிற்பத்தை போன்று இருந்தவனின் பின்னால் இரு பாதுகாவலர்கள் நிற்க, அவனைப் பார்த்த மறு நொடி கதவை அடைக்க முயன்றவளின் கையைப் பிடித்து வெளியே இழுத்தவனின் மார்போடு வந்து மோதினாள் அதிதி. 

 

“விடு என்னை.. நான் எங்கப் போனாலும் எப்படி கண்டுபிடிக்குற?”

 

“நான் தான் மாஃபியாவோட லீடராச்சே.. அப்படித்தானே சொல்லிருக்க? அப்போ உன்னைய கண்டுபிடிக்குறது அவ்வளவு கஷ்டமா?”

 

“நான் உண்மையத் தானே சொன்னேன்? நீ மாஃபியா கேங்கோட லீடர் தானே?”

 

“எல்லாத்தையும் தெளிவா உள்ளப் போய் சொல்றேன்.. வா.. என்கூட..”

 

“முடியாது.. உள்ள என்னோட ப்ரெண்ட் இருக்கா.. உன்னை மாதிரி ஆளுங்க உள்ள நுழைஞ்சா.. அவளையும் தப்பா பேசுவாங்க..”

 

“இந்த மும்பை.. என்னோட ராஜ்யம்.. யார் உங்களை என்ன சொல்றாங்கன்னு பார்க்குறேன்?” என்றவாறே அவளை தள்ளிக் கொண்டு தானும் அவர்களது அடுக்கு மாடி குடியிருப்பிற்குள் நுழைந்தான் அக்னி சாஹித்யா. அக்னியை பார்த்ததும் வெடவெடத்துப் போனாள் ஷாலினி. அக்னி ரோடு சகஜமாக பேசும் அதிதியை ஆச்சரியமாகப் பார்த்தாள். என்ன தான் அதிதி எல்லோரிடமும் சிரித்து பேசினாலும், அவரவர்களுக்கென்று ஒருவரைமுறை வைத்து தான் பழகுவாள். அவள் வரைமுறையில்லாது பழகியது ஷாலினியிடமும் அசோக்கிடமும் மட்டும் தான். அவளை உள்ளே நகர்த்தியவாறே நுழைந்தவன், அங்கிருந்த ஷாலினியை பார்த்தான். 

 

“ஹலோ சிஸ்டர்.. ஐம் அக்னி சாஹித்யா.. நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றவன் அங்கிருந்த சோஃபாவில் அமர,

 

“என்ன நீ? நான் உன்னைய உள்ள வரவே சொல்லல.. அதுக்குள்ள வீட்டு ஓனர் மாதிரி ஜம்முனு வந்து உட்கார்ந்துகிட்ட.. கிளம்பு.. வெளியப் போ..” என்று அக்னி சாஹித்யாவின் கையைப் பிடித்து இழுத்தவள், 

 

“கெட் அவுட்.. எனக்கு உன்னைய பார்க்கவே பிடிக்கலை.. இனிமே எப்பவும் என்னைய பார்க்கவராத..” என்று கூறிய அதிதியை அக்னி சாஹித்யா வேகமாக இழுக்க, அவன் மடி மீது வந்து விழுந்தாள். 

 

“அவளுக்கு தான் உங்களை பிடிக்கலைன்னு சொல்றாளே.. அப்புறமும் எதுக்கு அவளை தொந்தரவு பண்றீங்க?”

 

“மருந்து கசக்கும் தான்.. ஆனா அதை எடுத்துக்காம நோய் குணமாகுமா?” என்றவன் கூற,

 

” அப்போ நான் பேசண்ட்.. நீ டாக்டரா? மாஃபியா கேங் லீடர் எப்படி டாக்டராயிருக்க முடியும்?” என்றவளின் இதழோடு இதழ் மென்முத்தம் வைக்க, அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அதிதி. 

 

“க்கும்.. உங்களை எப்படி நான் நம்புறது? அதிதிக்கு  யாருமில்லன்னு நினைக்காதீங்க.. அவளுக்கு நானிருக்கேன்..”

 

“ரொம்ப சந்தோஷம்.. பட், அவளுக்கு எல்லாமுமா நானிருப்பேன்.. நீங்க அதை நம்பணும்னா நான் என்ன பண்ணனும் சிஸ்?” 

 

“நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கணும்..”

 

“ஷாலு?”

 

“எல்லாம் உன்னோட நல்லதுக்காக தான் அதிதி.. என்னைய நம்பு.. நீ இந்த தடவை ஏமாற மாட்ட.. ப்ளீஸ் பிலீவ் மீ..” என்று அதிதியை பார்த்து கூறியவள், 

 

“பட் ஒன் கண்டிஷன் எந்த கட்டத்தில் அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையோ..  அப்போவே அவ என்கிட்ட திரும்பி வந்துடுவா..” என்று அக்னி சாஹித்யாவை பார்த்து கூறினாள் ஷாலினி.

 

“அவளுக்கு கண்டிப்பா அப்படி ஒரு சூழ்நிலை உருவாக்க மாட்டேன்..” என்று அக்னி சாஹித்யா, ஷாலினிக்கு வாக்களிக்க, அருகில் இருந்த பிள்ளையார் கோயிலில் எளிதாக நடந்தது அவர்களது திருமணம்.  

 

“எப்படியோ என்னைய பேக் பண்ணி, அவன்கூட அனுப்பி விடுறேல? நீ.. நீ.. உனக்கு கல்யாணமாகி.. ஃபர்ஸ்ட் நைட்ல உன்னோட ஹஜ் பக்கத்துல வர்றப்போ.. கரெண்ட் போயி.. பண்ணறதெல்லாத்தையும் எக்குத்தப்பா பண்ணப்போறாரு.. பார்த்துக்கோ.. இது நான் உனக்கு கொடுக்குற சாபம்..”

 

“பேபி.. இது நீ உன் ப்ரெண்ட்டுக்கு கொடுக்குற சாபம் மாதிரி தெரியல.. வரம் மாதிரி தெரியுது..”

 

“என்னது அப்படியா தெரியுது?”

 

“நீ எனக்கு சாபம் கொடுத்தாலும் சரி.. வரம் கொடுத்தாலும் சரி.. நீ நல்லாருந்தா.. எனக்கு அதுவே போதும்.. சரி.. சரி.. நல்ல நேரம் போகுறதுக்குள்ள.. ரெண்டு பேரும் கிளம்புங்க..” என்ற ஷாலினியை கனிவுடன் பார்த்த அக்னி சாஹித்யா,

 

“ரொம்ப தேங்க்ஸ் சிஸ்.. இவ்வளவு நாளா என்னோட பேபிய ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டதுக்கு.. இனிமே, அவளை நான் பார்த்துக்குறேன்.. அவளைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்..” என்று கூற,

 

“ஹலோ பிரதர்.. இப்படியெல்லாம் சொல்லி எஸ்ஸாகிடாதீங்க.. அடுத்த மாசம் எனக்கு மேரேஜ்.. என்னோட அண்ணனா நீங்க கண்டிப்பா வரணும்..” என்றவளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவன்,

 

“கண்டிப்பா நான் வந்து தானே ஆகணும்..” என்று கூறி, ஷாலினியிடம் விடை பெற்றவன், அதிதியை கூட்டிக் கொண்டு தன் இல்லம் நோக்கி விரைந்தான். காரில் சென்று கொண்டிருக்கும் போது, அக்னியை திரும்பிப் பார்த்த அதிதி,

 

“எதுக்கு நான்?” என்று கேட்க,

 

“புரியல..” என்று புருவம் சுருக்கி பார்த்தான் அக்னி சாஹித்யா.

 

“இல்ல.. இந்த மும்பைல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் போது, நான் எதுக்கு?”

 

“அதான் எதுக்கு?”

 

“கல்யாணத்துக்கு.. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிடுங்களாமே?”

 

“நான் யாரை வேணா கல்யாணம் பண்ணிருக்கலாம்.. ஆனா, என் மனசை தொட்ட முதல் பெண் நீ தான்.. நான்  மனசார வாழ நினைச்ச பொண்ணும் நீ மட்டும் தான்.. இந்த ஜென்மத்துக்கு நீ தான் எனக்கு.. அதுல உனக்கு எந்த சந்தேகமும் வேணாம்..”

 

“இன்னும் கொஞ்ச நாள்ல.. நான் உங்களுக்கு அலுத்து போகலாம்.. வேற யாரையாவது உங்களுக்கு பிடிக்கலாம்..”

 

“அதுக்கு வாய்ப்பேயில்ல..”

 

“மாஃபியா கேங் லீடரை நம்பலாமா?”

 

“மாஃபியான்னா உன் பாஷைல எதை சொல்ற?”

 

“உங்களை மாதிரி ஒருத்தரை..”

 

“இங்கப்பாரு அதிதி.. உனக்கு மாஃபியா கேங் லீடர் பிடிக்கலைன்னா.. சொல்லு.. மாத்திக்குறேன்.. உனக்கு பிஸ்னஸ்மேன் வேணும்னா சொல்லு.. பிஸ்னஸ்மேனா மட்டும் மாறிடுறேன்.. உனக்கு நான் எப்படி மாறுனா பிடிக்கும்? சொல்லு..”

 

“நீங்க எப்படியும் மாற வேண்டாம்.. என்னைய விட்டுடுங்க.. அது போதும்..”

 

“உன்னைய விடுறதுக்கா கல்யாணம் பண்ணிருக்கேன்?”

 

“ம்ம்?” என்றவள் கேள்வியாக அவனைப் பார்க்க, சட்டென சடன் ப்ரேக் போட்டு கார் நின்றது. காரை சுற்றி கருப்பு நிற முகமூடி அணிந்த மனிதர்கள், துப்பாக்கியால் சுட, 

 

“காருக்குள்ளே குனிஞ்சிரு.. எக்காரணம் கொண்டும் வெளியே வந்திடாத..” என்றவன் பதுங்கியபடி வெளியே வந்தான். தனது சட்டையின் பின் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த அனைவரையும் குறி வைத்து விட, அவனது பாதுகாவலர்களும் அவனோடு சேர்ந்து சுடத் தொடங்கினர். அங்கிருந்த அனைவரையும் சுட்டு வீழ்த்தியவன், குண்டடி பட்டு தப்பிக்க முயன்ற ஒருவனைப் பிடித்து,

 

“சொல்லு.. உங்களை யார் அனுப்புனது? சொல்லுடா..” என்று உலுக்க, 

 

“டெல்லி..” என்றவனின் உயிர் பறந்திருந்தது எங்கிருந்தோ வந்த குண்டினால்.. தன் முன் முற்றிலும் உக்கிரமாக, முழு அக்னிச் பிழம்பாக நின்றிருந்த இந்த அக்னி சாஹித்யா, காரினுள் அமர்ந்திருந்த அதிபதியின் கண்ணிற்கு முற்றிலும் புதியவனாக தெரிந்தான்.  அவன் நின்றிருந்த கோலத்தைக் கண்டு பயத்தில் உடல் ஜில்லிட, அமர்ந்திருந்தவளின் நிலை இனி என்னாகுமோ? 

 

1 thought on “மயக்கத்தில் ஓர் நாள் 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top