ATM Tamil Romantic Novels

காற்றுக்கென்ன வேலி – ஏழாம் அத்தியாயம்

இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன.

குழந்தைகள் வர்ஷா, கிரிஷா வுக்கு நான்காம் ஆண்டு பர்த் டே பார்ட்டி கொண்டாடினர். அலுவலக நண்பர்கள் , பரமசிவம் மற்றும் இவன் வீட்டில் உள்ள அனைவரும் அங்கே குழுமியிருந்தனர்.

எல்லோருமே இவர்கள் இருவரும் தம்பதிகள் என்றே கருதினர். பரமசிவம் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு தான் உண்மை என்ன வென்று தெரியும்.

மாமனார் இப்போதெல்லாம் கல்யாண பேச்சை எடுப்பதே இல்லை.
அவன் அம்மாவும் அப்பாவும் திருச்சிக்கு அடிக்கடி சென்று வந்தனர். ரம்யா படிப்பை முடித்து விட்டாள். ஒரு ஐடி நிறுவனத்தில் கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலை கிடைத்து விட்டது. சென்னை வந்து விட்டாள். சின்னவள் கவிதா சென்னை லயோலாவில் கமெர்ஸ் பி.காம் சேர்ந்து இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள். அவளும் ரம்யாவுடன் ரவியின் வீட்டில் தங்கி கொண்டாள்.

திருச்சியில் உள்ள விமலா அத்தை மும்பையில் உள்ள தன் தம்பி ஜெயக்குமாருக்கு போன் செய்து சென்னையில் நடந்த அனைத்தையும் கூறினாள்.
ஜெயக்குமார் ஒரு ரவுடியாக வளர்ந்து மும்பை சென்று அடியாளாக ஒரு பெரிய மும்பை ரவுடியிடம் வேலை செய்து கொண்டு இருப்பவன். சர்வதேச அளவில் அவனுக்கு ஆட்களை தெரியும்.

“என்ன செய்வியோ எனக்கு தெரியாது. என்னை ஏமாற்றி விட்டு சிங்கப்பூர் சென்று விட்டார்கள் அனைவரும். என்னால் இங்கே அமைதியாக இருக்க முடியவில்லை.” என்றாள்.

அவர்களை சிங்கப்பூர் சென்று முடித்து விட்டு வரவா இல்லை சென்னைக்கு வரும்போது முடிக்கவா என்று கேட்டான்.

யாரையும் நீ முடிக்க வேணாம்.அடுத்த மாதம் நான் என் பெண்ணுக்கு திருமணம் என்று அவனுக்கு பத்திரிகை அனுப்புவேன். அப்போது அவசியம் நேரில் வர வேண்டும் என்று கேட்பேன். நீயும் திருமணத்திற்கு வா.
இரண்டு பெண் குழந்தைகள் அவனுக்கு உண்டு. அவர்களை கடத்தி கொண்டு மும்பைக்கு போய் விடு. பிறகு பேரம் பேசி 5 கோடி கேள். உனக்கு இரண்டு எனக்கு 3 கோடி. என்றாள்.

அக்கா நீ பக்கா ரவுடி கணக்கா யோசிக்குற கா …என்றான்.

நீ இந்த பாராட்டெல்லாம் வேணாம். வேலையை முடி என்றாள்.

திருச்சியில் திருமணம் ..

மண்டபத்தில் அவளின் உறவினர் கூட்டம் மற்றும் ரவி மற்றும் கோமதி குழந்தைகளுடன் வந்து இருந்தனர்.

ஜெய்குமாரும் அவனது கூட்டாளியுடன் வந்து இருந்தான். சமயம் பார்த்து கொண்டு இருந்தான்.

குழந்தைகள் விளைய்டி கொண்டு இருந்தனர் இங்கும் அங்கும் ஓடி..

ரவி முதல் வரிசையில் இருந்தான். குழந்தைகள் 10 வரிசைகள் தாண்டியும் ஓடி விளையாடினார்கள். ஜெயக்குமாரின் கூட்டாளி சில பலூன்கள் வைத்து இருந்தான். ஆசையுடன் இவர்கள் அதை பார்த்து ஓடி வந்தார்கள்.

அங்கே உள்ள குழந்தைகளுக்கு கொடுத்து கொண்டே வந்தான்.

பலூனில் திருமண விழாவிற்கு வந்தமைக்கு நன்றி என்று பிரிண்ட் செய்ய பட்டு இருந்தது.

வர்ஷாவும் கிரிஷா வும் வந்து கேட்ட போது அவன் “இதை விட பெரிய பலூன் ஸ்பெஷலாக இருக்கு என்னுடன் வாருங்கள்” என்று கூட்டி போனான்.

“வெளியே உள்ள காரில் வைத்து இருக்கிறேன் வாருங்கள்” என்று ஆசை காட்டி கூட்டி சென்று விட்டான்.
“காருக்குள் வாருங்கள் காண்பிகிறேன்” என்று சொல்லி தயாராக வைத்து இருந்த கிளோரோபார்ம் தடவிய கர்சீப்பினை மூக்கில் அழுத்தி இழுத்தனர். இரு குழந்தைகளும் காரிலேயே மயங்கினர்.
ஜெய்குமாருக்கு போன் செய்து “எல்லாம் ஓவர்” என்றான்.

“குட் நண்பா… நீ காரை எடுத்து கொண்டு சென்னை நோக்கி போய் கொண்டு இரு. நான் சென்னையில் ஜாயின் பண்ணி கொள்கிறேன்.” என்றான்.

அதற்குள் கோமதி இங்கே குழந்தைகளை தேட ஆரம்பித்து விட்டு இருந்தாள்.

குழந்தைகள் காணோம் என்றதும் ரவியும் தேடினான்.. 15 நிமிடங்கள் தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ந்து போயினர். ரவி அத்தையிடம் சென்று கூறினான்.

உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் அவள் ஒன்றும் அறியாதவள் போல ” என்னடா சொல்லுற .. நல்ல தேடி பார்த்தியா..” என்று கேட்டாள்.

“தேடி பார்த்து விட்டேன் அத்தை காணவில்லை..” என்று கண்கள் கலங்க அழுதே விட்டான்.

கோமதி அதற்குள் போலீசிற்கு சொல்லி மண்டபத்திற்கு போலீசை வரவழைத்து விட்டாள்.

போலீசை கண்டதும் அடஹிக்கு உதறல் எடுத்தது. யாரும் இங்கே இருந்து நங்கள் சொல்லும் வரை வெளியே செல்ல கூடாது என்று கூறி வெளி கேட்டை லாக் செய்தனர்.

திருமணம் நடக்கட்டும் அது நிற்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்

தாலி காட்டி முடித்ததும் பெண் மாப்பிள்ளையை மற்றும் வந்து இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட அனுப்பி விட்டனர்.

கோமதி மற்றும் ரவியிடம் உங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இருந்தாள் கூறுங்கள் என்று கேட்டனர்.

CC டிவி கேமரா இல்லை என்றதும் திருமண விழாவை படம் எடுக்க பயன் படுத்தி இருந்த டிரோன் கமெராவில் பதிவானவற்றையும் மனுவால் காமெராவில் பதிவானவற்றையும் பார்த்தனர்.

ஒரு பதிவில் அவர்கள் விளையாடி கொண்டு இருந்தது பதிவாகி இருந்தது.
நேரம் 8 : 10 AM காண்பித்தது இப்போது மணி ஒன்பது. தஞ்சாவூர் , சென்னை , புதுக்கோட்டை, மதுரை மற்றும் அணைத்து வழி தடங்களிலும் உள்ள செக் போஸ்டில் உஷார் படுத்தினர்.

அருகில் உள்ள ஒரு கடையின் வாசலில் அமைத்திருந்த cc டிவி பதிவை பார்த்தனர். 08 : 13 கு ஒரு மாருதி ஆம்னி காரில் குழந்தைகள் எறியதையும் அந்த கார் உடனே புறப்பட்டதையும் காண்பித்தது.

கார் நம்பர் பதிவில் சரியாய் தெரியவில்லை. எல்லா செக் போஸ்டிலும் அந்த சிசி டிவி பதிவு வாட்சப்பில் உள்ள காவலர் குரூப்பில் அனுப்பப்பட்டது.

சமயபுரம் டோல் கேட்டில் உள்ள சி சி டிவி இல் தெளிவாக அந்த கார் நம்பர் மற்றும் அந்த கார் டிரைவர் சீட்டில் இருந்தவன் தெளிவாக தெரிந்தது.

நம்பர் சென்னை தாம்பரம் RTO ரெஜிஸ்ட்ரேஷன் .. தாம்பரம் போலீசிற்கு அட்ரெஸ் அனுப்பப்பட்டது.

அதா கார் திருட்டு போனதாக காரின் ஓனர் கூறியதால் காரை திருடி குழந்தைகளை கடத்த பயன்படுத்தி உள்ளனர் என்பது தெளிவாக புரிந்தது.

தொடரும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “காற்றுக்கென்ன வேலி – ஏழாம் அத்தியாயம்”

Leave a Reply to Vithya Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top