ATM Tamil Romantic Novels

தாயாக மாறவா மாதவா

2  அத்தியாயம்

சிறுமுகை பேரூராட்சியில் கைத்தறிப்பட்டுப் புடவைகளுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது.. ஊரில் தெருவெங்கும் கைத்தறி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்..காஞ்சிபுரம், ஆரணி பட்டுபுடவைகளுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் உள்ளது சிறுமுகைப்பட்டு

சுந்தரம் பட்டு சேலை நெய்யும் கைத்தறி நெசவாளர்.. சுந்தரத்தின் மனைவி வசந்தி கணவருக்கு நெசவுத்தொழிலில் உதவியாக பட்டுபுடவைக்கு முடிபோடுவது, கச்சை கட்டுவது. போன்ற சிறு சிறு உதவிகளை செய்வார்..

இவர்களின் தவப் புதல்வி நம் கதையின் நாயகி காந்தக் கண்ணழகி ஜானவி.. மிடில் கிளாஸ் பேமிலி.. சுந்தரம் முகூர்த்த மாதத்தில் பிசியாகி விடும் அளவிற்கு அவரிடம் ஆர்டர்கள் குவிந்து விடும்.

மணமக்களின் முக வடிவங்களுடன் தம்பதி பட்டு பல வண்ணங்களில் ஏழு உலக அதிசயங்கள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுர உருவங்களுடன் கூடிய பிரமாண்ட மயில் தோகை பட்டு.. குறள்களும் அடங்கிய திருக்குறள் பட்டு என்று தனித்த அடையாளத்துடன் கூடிய பட்டுப் புடவைகளை மிக நேர்த்தியான முறையில் நெய்து கொடுப்பார் சுந்தரம்..

சுந்தரத்திடம் பெரிய பெரிய துணி கடைக்காரர்கள் பட்டு புடவையை நெய்து கொடுக்க சொல்லி ஆர்டர்கள் கொடுப்பார்கள்..

சுந்தரத்திடம் திறமைகள் கொட்டிக்கிடக்கிறது.. ஆனால் திறமை இருந்த என்ன பிரயோசனம்.. இரவானதும் நெசவு நெய்து முடித்து விட்டு சாராயக்கடைக்கு சென்று விடுவார்.. சுந்தரம் சம்பாரிக்கும் பாதி பணம் குடி செலவுக்கே சரியாகிவிடும்.

குடித்துவிட்டு வந்து சுந்தரம் கலாட்டா செய்ய மாட்டார்.. குடிப்பதற்கு காரணம் சுந்தரத்தின் ஆசை மகள் ஜானவிக்கு இன்னும் திருமணம் நடக்காதது தான்.. ஜானவிக்கு வயது 22..இது ஒன்றும் பெரிய வயதில்லை.. ஆனால் அந்த ஊரில் பெண்ணுக்கு 18 வயதில் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.. ஜானவியுடன் படித்த பெண்களுக்கெல்லாம் திருமணம் ஆகி இரண்டு வயது குழந்தையுடன் இருப்பதை கண்டு சுந்தரத்தின் மனம் உலைகனலில் இட்ட நெருப்பு கொதிப்பதை போல இருந்தது.. பொதுவாக பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கணும் என்று சொல்வார்கள் ஊருக்கெல்லாம் திருமண பட்டு புடவை நெய்து கொடுக்கிறோம்.. தனது பெண்ணுக்கு திருமண யோகம் இன்னும் வரவில்லையே கடவுளிடம் சுந்தரமும், வசந்தியும் வேண்டாத நாளில்லை.

ஆனால் நம் நாயகி சிறு பிள்ளை போல பாவாடையை சுருட்டி இடுப்பில் சொருகி கொண்டு இரண்டு வாண்டுகளுடன் பட்டாம்பூச்சியை பிடிக்க ஓடிக்கொண்டிருந்தாள்.. பட்டாம்பூச்சி ஜானவியின் கையில் கிடைக்காமல் பறந்து சென்று கொண்டிருந்தது..

“ஏய்.. ஏய்.. பட்டாம்பூச்சி ஓடாத.. ஓடாத.. உன்னை பிடிக்காம விட மாட்டேன்” என பட்டாம்பூச்சியின் பின்னால் பட்டாம்பூச்சியாய் பறந்து சென்று கொண்டிருந்தாள் ஜானவி.

“ஹா..ஹா பிடிச்சுட்டேன்” என்று பட்டாம்பூச்சியை பிடித்தவுடன், அது பறக்க முடியாமல் துடித்ததை கண்டு ஜானவியின் மனம் துடித்துப்போனது.. பறக்கவிட்டாள் பட்டாம்பூச்சியை..

ஜானவி பட்டாம்பூச்சியை பறக்க விட்டதை பார்த்த வாண்டுகள் அனைத்தும் “ஐய்யோ அக்கா எதுக்கு பட்டாம்பூச்சியை பறக்கவிட்டீங்க”என்று அவளிடம் வரிசை கட்டி சண்டைக்கு நின்றனர்..

முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு தன் இரு கயல்விழிகளையும் சோளி போல உருட்டி..

“டேய் பசங்களா கோவிச்சுகாதீங்க.. உங்க ரெண்டு பேரையும் பிடித்து கிள்ளி வச்சா உங்களுக்கு வலிக்கும்ல.. அது மாதிரிதான் நான் பட்டாம்பூச்சியை புடிச்சதும்.. அது துடிச்சதை பார்த்து அதுக்கு வலிக்கும்னு பறக்க விட்டேன்”கையை விரித்து பட்டாம்பூச்சி பறப்பது போல செய்து காட்டினாள்,

“போக்கா உன்ன போய் பெரிய மனுசினு பட்டாம்பூச்சி பிடிக்க கூட்டி வந்தோம்பாரு”என்று படு கேவலமாக திட்டி சென்றது வாண்டுகள்.

இவர்கள் செய்யும் கலாட்டாக்களை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணா..

ஜானவி ஓடும் போது குலுங்கும் அவளின் மென்மைகளும், அவள் அணிந்திருந்த மெல்லிய செயினிலிருந்து கிருஷ்ணன் டாலர் அங்கும் இங்கும் ஆடுவதையும்.. அவளின் இடையில் லேசாக தாவணி விலகியதும் தெரிந்த எலுமிச்சை நிற கொடி இடையும்.. பாவாடையை தூக்கி செருகியிருந்ததால் அவளின் வாழைத்தண்டு கெண்டை கால்களும் அவனின் கண்களுக்கு பளிச்சென தெரிந்தது..அவள் காலில் அணிந்திருந்த வெள்ளி கொலுசுகளும்.. மருதாணி பூசிய மென்பாதத்தையும் கண்டு சித்தம் கலங்கி பித்து பிடித்து நின்றான் கிருஷ்ணா.

கிருஷ்ணா பட்டு புடவைகளுக்கென தனிஷோரூம் ஆரம்பிக்க வேண்டுமென சுந்தரத்தின் திறமையை அறிந்து சிறுமுகைக்கு வந்திருந்தான்.

கிருஷ்ணாவின் நண்பன் பாஸ்கர் சுந்தரத்தை தெரிந்தவன் என்பதால் அவனின் வரவிற்காக காத்திருந்தான்.. அப்போதுதான் ஜானவி எனும் தங்கசிலையை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எப்படியாவது இந்த பெண்ணை நாம பேசி மடக்கி ஒரு நாள்.. முழுவதும் இவளுடன் கழிக்க வேண்டும் என்று எண்ணினான்.. அவள்தான் காலம் முழுக்க துணையாக இருக்கபோகிறாள்.. அவனின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்ட போகிறாள் என்று யார் சொல்வது கிருஷ்ணாவிடம்..

பாஸ்கர் வருவான் என பொறுத்து பார்த்தவன் பாஸ்கரின் கடைக்கு சென்றான்.. மெதுவாக கதவை திறக்க அங்கே கிருஷ்ணா கண்ட காட்சியில் பனிசிற்பம் போல பிரீஸாக நின்று விட்டான்..

பாஸ்கர் “தீப்தியிடம் இந்த வாரம் பட்டுபுடவை ஸ்டாக் எடுத்திட்டிங்களா தீப்தி”என்று கேட்க

“எடுத்தாச்சு சார்.. எத்தனை புடவைகள் விற்பனையாகியிருக்குனு கம்ப்யூட்டர்ல பதிவு பண்ணிருக்கேன் .. “நான் கிளம்புறேன் சார்.. இன்னிக்கு என் அக்காவை பொண்ஷ பார்க்க வராங்க”என்று கிளம்ப..

தீப்தி ஒரு  நிமிஷம்.. நான் தினமும் கேட்கும் கேள்வியைதான் இன்றைக்கும் கேட்குறேன்

“சொல்லுங்க சார்”என்று பல்லைக் கடித்தாள்

நான் உன்கிட்ட லவ் சொல்லி பல மாசம் ஆச்சு..

“நானும் உங்களை லவ் பண்ணலனு சொல்லி பல மாசமா சொல்லிகிட்டேயிருக்கேன்” என வெற்று புன்னகை சிந்தி.. கதவு வரை சென்றவள் தன் வண்டியின் சாவியை எடுக்க மறந்துவிட்டோம் என உள்ளே செல்ல..

தீப்திக்கு பாஸ்கர் தன் மேல் விருப்பம் இருக்குனு தெரிஞ்சு தான் பாஸ்கர் தன் காதலை ஏற்றுக்கொள்ள சொல்லுறான்.. ஆனால் இன்று வரை தீப்தி தன் காதலை அவன் மறுத்து வருகிறாள்., இப்போது அவளிடம் வன்முறையை காட்டினால் காரியம் சாதிக்க முடியும் என

“தீப்தி இன்னிக்கு  நான் உன்கிட்ட என் காதலை நீருபிக்காம விட மாட்டேன்”என்று கத்தியை எடுத்து கையை கீற போக..

கிருஷ்ணா உள்ளே செல்ல பார்க்க.

“பாஸ்கி”என்று ஓடிச்சென்று அவன் கையிலிருந்த கத்தியை பிடுங்கி போட்டு.

“ஏன் பாஸ்கர் இப்படி பைத்தியகாரன் மாதிரி நடந்துக்கீறிங்க”.

“ஆமாடி நான் உன்மேல் காதல் பைத்தியக்காரன் தான்”என அவளை தன் கை வளைவில் கொண்டு வந்து அவள் முகத்தை தன் நோக்கி இழுத்து தன் வன் இதழ்களுக்குள் அவளின் மென் இதழ்களை பூட்ட..தீப்தி இதழை இறுக முடிக் கொள்ள.. தீப்தியின் தாமரை இதழை தன் நாவு எனும் சாவியைக்கொண்டு திறந்தான்.

பெண்ணவள் அவனின் முத்தத்திற்கு கண்ணீரை காணிக்கையாக பரிசளித்தாள்..

தன் பலத்தை திரட்டி பாஸ்கரை தள்ளி விட்டு..பாஸ்கர் கொடுத்த வன் முத்தத்தால் மங்கையின் உதடுகளில் உதிரம் கசிய அதை துடைத்து விட்டு பெண் நாகமாய் சீறி..மார்பு கூடு மேலே ஏறி இறங்க

“ச்சே இவ்வளவு கேவலமா நடந்துக்குவீங்கனு நான் நினைக்கலை பாஸ்கர்” என்று கதவை திறந்து எதிரே யார் ந¤ற்கிறார்கள் என கூட பார்க்காமல் சென்றாள் பேதை பெண்.

கிருஷ்ணா  தன்னை காக்க வைத்துவிட்டான் என கோபத்துடன் வந்தவன்.. அவனிருக்கும் சூழ்நிலை கண்டு மௌனச் சிரிப்புடன் கதவை திறந்து உள்ளே சென்றான்.

பாஸ்கர் தீப்தி பேசி சென்றதை எண்ணி யோசனையில் நின்றிருக்க கிருஷ்ணா உள்ளே சென்று அவனின் தோளை தொட.. அப்போது தான் சுயம் வந்தவன்

“வா கிருஷ் எப்ப வந்த”

நீ அந்த பொண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போதே வந்துட்டேன்டா .. என்னடா மாப்ள நீயா இது.. என்னை பெண் பித்தன் என சபிப்பவன் நீ.. இன்னிக்கு அந்த பொண்ணுகிட்ட முத்த யுத்தம் நடத்துற”என்று கேலி செய்தான்

கிருஷ்ணா பேசியதை கேட்டு கோபப்பட்டு “உன்ன போல மலர் விட்டு மலர் தாவும் வண்டு இல்ல நான்”என கிருஷ்ணாவிற்கு பதிலடி கொடுத்து..தீப்திக்கு மட்டும் முதல் முறை முத்தம் கொடுத்திருக்கேன்..அவள நான் மனசார காதலிக்கிறேன்டா” என்று காதல் வசனம் பேச

“அப்பா சாமி போதும்டா உங்க கலாச்சாரம்.. நாம இப்போ பட்டு சேலை நெய்யும் சுந்தரம் வீட்டுக்கு போகணும்.. போகலாமா.. இல்லை தீப்தியை வரச்சொல்லவா”என்று நக்கலடிக்க

“வேண்டாம்டா சாமி..உன்னை பார்த்தா அவ பத்ரகாளி ஆகிருவா.. வாடா போலாம்” என கிருஷ்ணாவை வெளியே கூட்டி வந்தான்.

அப்போது கிருஷ்ணாவின் போன் ரிங்காக.. அவன் போனை எடுத்து பார்க்க.. அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்து,

“சொல்லுங்க மணியண்ணா” என்றான்

தம்பி “கீரன் ஆதினியோட கையில காம்பஸை கீறிட்டான்.. லேசா காயம் ஆகிட்டுச்சு நீங்க சீக்கிரம் வாங்க” என்று போனை கட் செய்தார்,

சிறிது நேரத்திற்கு முன்

கிருஷ்ணாவின் வீட்டு ஹாலில் ஆதினியும், கிரணும் ஹோம் ஒர்க் செய்துகொண்டிருக்க ஆதினி கீரனின் கலர் பென்சிலை எடுத்து படம் வரைந்து கொண்டிருந்தது.. ஆதினி அவன் பென்சிலை எடுத்த படம் வரைவதை பார்த்த கீரன்.

“ஏய் அக்கா எதுக்குடி என் கலர் பென்சிலை எடுத்த” என்று ஆதினியின் கையை கிள்ளி வைத்து பென்சிலை பிடுங்க பார்க்க..

“டேய் கொஞ்ச நேரம் படம் வரைந்து விட்டு கொடுக்கிறேன்”என்று கெஞ்ச..

“ம்ஹும் எனக்கு என் பென்சில் வேணும்”..

“போடா நான் தரமாட்டேன் நீ என்ன வேணா செய்துக்க,, நான் பென்சில தரமாட்டேன்”என ஆதினியும் வீம்பு செய்தது..

“என்ன பண்ணுவேனா பாரு “என்று ஜாம்மன்றி பாக்ஸிலிருந்த காம்பஸை எடுத்து விளையாட்டாக ஆதினியின் கையில் கீறிவிட்டது.

“ஆஆஆஆஆ”என்று அலறியது ஆதினி.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மணி ஆதினியின் சத்தம் கேட்டு ஹாலுக்கு ஓடி வந்து.

“என்னாச்சு பாப்பா அச்சோ கையில் இரத்தம் வருது “என்று பதறி கேட்க.. ஆதினி அழுகையூடே நடந்ததை கூறியது..

ஆதினி அழுவதை கண்ட கீரன் உதட்டை பிதுக்கி

“அக்கா என்னை மன்னிச்சுரு”என்று காதை பிடித்து மன்னிப்பு கேட்டது..

அதற்குள் மணி இரத்தம் வராமல் கட்டை போட்டு கட்டி மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று மருந்திட்டு வீட்டுக்கு கூட்டி வந்தார்.

ஆதினி வலியில் தூங்கியது.. கிருஷ்ணாவும் பாஸ்கரும் ஆதினிக்கு பெரிய காயம் ஏற்பட்டு விட்டது போல என நினைத்து பதட்டத்துடன் வீட்டினுள் குழந்தைகள் இருக்கும் அறைக்குள் நுழைய

ஆதினியின் பக்கத்தில் கீரன் அழுதுகொண்டு.. தான் கீறி விட்ட காயத்தின் மீது ஊதிவிட்டுக் கொண்டிருந்தது..

கீரன் கிருஷ்ணாவை கண்டதும் “சித்தா நானு அக்காவோட கையை வேணும்னு கீறல”என்று உதட்டை பிதுக்கி விசும்பியது.. அழும் குழந்தையை கண்டிக்க முடியாமல் திணறி போனான்.

மணி அறைக்குள் வந்தவர்.. “ஐய்யா இதற்குதான் குழந்தைகளை பார்த்துக்க கண்டிப்பான ஒரு ஆள் வேணும்னு சொல்லுறேன்.. அதுக்கு நீங்க கல்யாணம் செய்துக்கணும் “என்ற மணியை கூறிய மணியை கிருஷ்ணா முறைத்து பார்த்தான்

மணியை முறைப்பதை கண்ட பாஸ்கர்.. “கிருஷ் மணி அண்ணாவை எதுக்கு முறைக்கிற..ப்ர்ஸ்ட் உன் கண்டிசன்களையெல்லாம் தூக்கி குப்பையில் போட்டுட்டு ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் செய்யற வழிய பாருடா” என்று கடிந்து பேசினான்..

ஜானவி முயல் குட்டியை போல தாவி தாவி குதித்து வீட்டுக்குள் வருவதை பார்த்த வசந்தி “எங்கடி போன இவ்ளோ நேரம்.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் மணி நேரத்துல வந்துருவாங்க போய் குளிடி “என ஜானவியை அதட்டி பேச

வெளியே சென்றிருந்த சுந்தரம் அங்கே வர வசந்தி ஜானவியை வசை பாடுவதை பார்த்து ” எதுக்குடி புள்ளைய திட்டுற.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதுக்குள்ள புள்ளைய நீதான் ரெடிபண்ணணும்.. அதை விட்டு சும்மா கரிச்சு கொட்டுறா”என வசந்தியிடம் சினமாக பேச.

“ஆமாங்க என்னையவே  எல்லாத்துக்கும் குட்டி குத்தம் சொல்லுங்க.. உங்க பொண்ணுக்கு இதோட எத்தனை மாப்பிள்ளை பார்த்துட்டு போய்ட்டாங்க .. முதல் முறை பொண்ணு பார்க்க வந்தவன் கேட்ட வரதட்சணையை நம்மனால கொடுக்க முடியலை.. இரண்டாம் முறை வந்தவன் என்னைய விட செவ்வப்பா இருக்கானு உங்க பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டான் .. ஊருல உள்ளவங்க நம்ம பொண்ண ராசியில்லாதவனு என் காதுபட பேசுறாங்க “என கணவரிடம் மனம் வருந்தினார்.

வசந்தி கவலைபட்ட பேசுவதை பார்த்து சுந்தரம் “இந்த இடம் நம்ம பொண்ணுக்கு அமைச்சுடும் வசு” என சொல்லிக்கொண்டிருக்கும்போது வெளியில் கார் சத்தம் கேட்டு “மாப்பிள்ளை வீட்டார் வந்துட்டாங்க நீ போய் பொண்ண ரெடியா பாரு ” என வாசலில் சென்று பார்க்க.. அங்கே மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் காரிலிருந்து பழத்தட்டுடன் ஐந்து பேர் இறங்கினர்.

அனைவரையும் “வாங்க வாங்க”என வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார் சுந்தரம்.

ஜானவி சாதரணமாக சுந்தரம் மகளுகென்று ஆசையாய் நெய்த மெரூன் கலரில் தங்க சரிகை வைத்த சேலையை கட்டி.. கழுத்தில் எப்போதும் போடும் செயினோட இன்று ஒரு கழுத்தை ஒட்டிய அட்டிகை ஜானவியின் சங்கு கழுத்துக்கு அழகு சேர்த்தது.

வசந்தி அனைவருக்கும் காபி போட்டு ஜானவியின் கையில் கொடுத்து ஹாலில் இருந்தவர்களிடம் கொடுக்க சொல்ல..

ஜானவியும் குனிந்த தலை நிமிராமல் காபியை கொண்டு செல்ல.. அழகு பதுமையாக காபியுடன் வந்த ஜானவியை கண்ட பெண்கள் இருவர் வாயில் ஈ போவது கூட தெரியாமல் இரசித்திருந்தனர்.

பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா.. எங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு என் பையன் உங்க பெண்ணை போட்டோல பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவான் என்று சொல்வதற்குள் அவரின் போனில் மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடெண்ட் என்ற செய்தியை கேட்டு மாப்பிள்ளை வீட்டார்.. சற்று நேரத்திற்கு முன்னாள் ஜானவியை மகாலட்சுமி என்று சொன்னவர்கள்.. இப்போது ராசிகெட்ட பெண் என்று சாபமிட்டு சென்றனர்.

இவர்கள் பேசியதை கேட்டு சுந்தரத்தின் வீட்டு வாசலில் நின்றிருந்தனர் கிருஷ்ணாவும் பாஸ்கரும்.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஜானவியை ராசி இல்லாத பெண் என் திட்டி சாபம் விட்டு வெளியே வருவதை கண்ட பாஸ்கர் .. என்ன மனுஷங்க இவக்கெல்லாம் என அவர்களை  அற்ப புழுவை பார்ப்பது போல பார்த்தான்.. கிருஷ்ணா எதோ தனக்கு சாதகமான ஒன்று நடக்கப்போகிறது என எண்ணி கொண்டு காரில் சாய்ந்து நின்றான்.

நாம தப்பான நேரத்தில் என்ட்ரி கொடுத்துட்டோமோ நினைக்குறேன் கிருஷ்..  இப்போ அவங்க இருக்குற நிலைமையில அவங்ககிட்ட நாம டீலிங் பேசுவது சரியில்லடா ..  நாளைக்கு வந்து பார்ப்போமே” என காரின் கார் கதவை திறந்து விட..

“நோ!! நோ!! பாஸ்கி நான் இப்பவே சுந்தரத்தை பார்த்து பேசியாகணும்டா.. முன் வச்ச காலை பின் வைக்க மாட்டான் இந்த கிருஷ்ணா..” என சுந்தரம் வீட்டின் கதவை நோக்கிச்  செல்ல.. இவன திருத்த முடியாது என தலையில் அடித்துக்கொண்டு கிருஷ்ணாவின் பின்னால் சென்றான் பாஸ்கர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top