ATM Tamil Romantic Novels

தாயாக மாறவா மாதவா

  1. அத்தியாயம்

கிருஷ்ணா மதுவை பாட்டிலை வாயில் சரித்துக் கொண்டிருந்தான்.. தன் அண்ணனையும், அண்ணியையும் கொன்றவர்களை தன் கையால் கொல்ல முடியாத வண்ணம் சத்தியம் செய்து கொடுத்து விட்டோமே என்று மதுவை அளவில்லாமல் குடித்துக் கொண்டிருந்தான்..

போனில் தன் பொம்மையின் ஸ்கீரின் சேவரை பார்த்து பொ.பொம்மை ஐ.லவ்.யுடி செல்லம் என்று உளறி போனை எடுத்து ஆன் செய்வதற்குள் கட் ஆகிவிட்டது.

பாஸ்கர் கிருஷ்ணா செல்லும் பாருக்குள் நுழைய அவனின் நிலை கண்டு தலையிலடித்துக் கொண்டு அவனருகே சென்று அவனை எழுப்ப..

“டேய் போடா இங்க யாரு உன்ன வரச்சொன்னா.. நீ ரொம்ப ஒழுங்கா சீலன் ஆச்சேஞ் இ.இங்க வாராத” என்று எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடி..

“ஐ.எம்.ஸ்டைடி”என்று கீழே விழப்பார்க்க..

“வாடா” என்று கிருஷ்ணாவை தோளோடு சாய்த்து கொண்டு அழைத்து சென்று காரில் பின் புறம் படுக்க வைத்து காரை ஓட்ட ஆரம்பித்தான்.

கிருஷ்ணா மட்டையாகி “ஏய் பொம்மை என்னை உனக்கு பிடிக்கலையாடி.. கொஞ்ச நேரம் முன் உன் கண்ணு என்னை ஒரு ர.ரவுடி மாதிரி பார்த்தது” என  உளறிகொண்டே தூங்கிவிட்டான்.

கீரன் கிருஷ்ணாவிற்காக தூங்காமல் அவனறையில் காத்திருந்தது..

பாஸ்கர் கிருஷ்ணாவை கைத் தாங்களாக கூட்டி வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.. “பாஸ்கி மாமா சித்துக்கு என்னாச்சு.. சித்தா எழுந்திரு” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க போனது..

“சாராய நெடி அடிக்க.. “வ்வேக் சித்தா மேல பேட் ஸ்மெல் வருது” என்று அறையை விட்டு ஓடியது.

பாஸ்கர் தலையை இருபக்கமும் ஆட்டிகொண்டு கிருஷ்ணாவின் ஸுவை சாக்சை கழட்டி விட்டு அவனருகிலேயே  படுத்துக்கொண்டான்.

கீரன் சிறிது நேரத்திலே மீண்டும் வந்து கிருஷ்ணாவின் பக்கத்தில் படுத்து அவனைக் கட்டிக்கொண்டது பால் மணம் மாறா குழந்தை..

குழந்தைகளுக்காகத்தான் செல்வத்தை விட்டு வைத்திருக்கிறான்.. இல்லையென்றால் நரசிம்ம அவதாரம் எடுத்து செல்வம் குடும்பத்தை துவம்சம் செய்திருப்பான்.

ஏதோ செல்வத்தின் மனைவி செய்த புண்ணியமோ என்னவோ செல்வத்தின் உயிர் அவன் உடம்பில் ஒட்டியிருக்கு என்று கண்ணை  மூடி உறக்கத்திற்கு சென்றான்.

கிருஷ்ணாவின் போனுக்கு ஜானவி போன் செய்திட.. போனை ஆன் செய்து

“ஹலோ”என்று பாஸ்கர் பேசும் முன்

“ஜானவி தன்னவன் குரல் அல்ல”என்று தெரிந்து

“அண்ணா அவர் எந்த நிலையில் இருக்கறாரு” என்று தயங்கி கேட்க.

“தங்கச்சி அவன் பேசும் நிலையில் இல்லை காலையில் எழுந்ததும் பேச சொல்லுறேன்”என்று போனை வைக்க போக..

தீடிரென்று போனை பாஸ்கரின் காதிலிருந்து பிடுங்கிய கிருஷ்ணா..

“ஏய் என்னடி வேவு பார்க்குறியா.. நான் குடிகாரன்தாண்டி.. என்னை பிடிக்கலையோ.. பிடிச்சாலும் பிடிக்காட்டியும் நான்தாண்டி உன் புருசன்” என்று அவளிடம் செய்த சில அந்தரங்கங்களை பேச பாஸ்கர் காதை பொத்திக்கொண்டு அறையை விட்டு ஓடி விட்டான்.

“இப்பவே நான் அங்க வரட்டுமாடி” என்று எழும்ப..

“நீங்க நாளைக்கு காலைல வாங்க.. இப்ப தூங்குங்க என்று பொறுமையாக பேசி போனை வைத்துவிட்டாள்.

“ஏண்டி இப்ப வந்தா என்ன செய்வ.. நான் வருவேன்” என்று தள்ளாட

“சித்தா சித்தா சத்தம் போடாம தூங்கு” கீரனின் சத்தம் கேட்க அதுவரை குழந்தை இருந்தது. தெரியாமல் இருந்தவன்.

சத்தமில்லாமல் குழந்தையை தன் மார் மேல அணைத்துக்கொண்டு உறங்கினான்.

எத்துனை துன்பங்கள் இருந்தாலும்.. எத்தனை சண்டை போட்டாலும் ஒரு மழலையில் குரல் கிருஷ்ணாவை கட்டுப்படுத்தியது..

பாஸ்கர் கிருஷ்ணாவின் சத்தம் அடங்கியது உள்ளே வந்து படுத்தான்.

அங்கே ஒருவன் மருத்துவமனையில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான்.. பாலாவின் பக்கத்தில் செல்வத்தின் மனைவி பாலாவிற்கு பழச்சாறு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“டேய் கிருஷ்ணா உன்னை சும்மா விட மாட்டேன்டா..என் தம்பி மேல கையை வச்சிட்டல..உன் குடும்பத்தை சின்னா பின்னம்மா பண்ணப்போறேன்” என்று மருத்துவமனை என்றும் பாராமல் கத்திக்கொண்டிருந்தான்.

அங்கிருந்த செவிலி “சார் இது ஹாஸ்பிட்டல் உங்க வீடு அல்ல சத்தம் போட” என்று அவருடைய டியூட்டியை கச்சிதமாக செய்தார்.

தலையை பிடித்துக்கொண்டு எழுந்தவன் பாஸ்கர் லெமன் ஸுஸை டம்ளரில் கொண்டு வந்து கிருஷ்ணாவின் கையில் கொடுத்து குடிக்கச் சொல்ல.. மறுவார்த்தை பேசாமல் வாங்கிக்குடித்து விட்டு குளியலறை சென்றான்.

குளித்து முடித்து வெளியே டவலுடன் வந்தவன் போனை ஆன் செய்து பார்க்க.. அவனது பொம்மை பத்து தடவை மிஸ்டு கால் விட்டிருந்தாள்..  அவளின் எண்ணை கண்டதும் மெல்லிய புன்முறுவல் பூத்து டவலை அவிழ்ந்து உடையை அணியத் தொடங்கினான்.

நாளை மறுநாள் நடக்கும் கல்யாணத்திற்கு வீட்டை அலங்கரிக்கும் பொறுப்பை பாஸ்கரிடம் கொடுத்து இருந்தான்..

ஜானவி கிருஷ்ணாவிற்கு போன் போட்டுக் கொண்டிருந்தாள்.. ஜானவிக்கு பயம் இத்தனை கோபம் ஒரு மனிதனுக்கு ஆகாது..

தன்னவனிடம் பேச வேண்டும் என்ற ஆவல் வந்தது மங்கைக்கு

“ப்ச் என்ன தான் பண்ணுறாரு.. நாம போன் செய்தா எடுக்க மாட்டேன்கிறாரு”என்று புலம்ப..

“நான் நேர்லயே வந்துட்டேன் என்ன பேசணுமோ இப்ப பேசு” என்று கையை கட்டி ஜானவியின் முன்னே நின்றிருந்தான்.

“அ.அது வ.வந்து.. பே.பே. உளற” அவள் தேன் அதரங்களில் முக்கனிச் சாறை அருந்தத் தொடங்கினான் பொம்மையின் மாதவன்.

முக்கனிச் சாறையும் அருந்தி விட்டு தன் எச்சில் நீரை புனித தீர்த்தமாக ஜானவிக்கு வழங்கி.. தன் ஆசை பொம்மையை பிரியமனமில்லாமல் அவள் இதழிலிருந்து தன் இதழை பிரித்து எடுத்தான்.

இம்முறை பொம்மை மயங்கவில்லை.. முத்தம் கொடுத்து பொம்மையின் பித்தத்தை தெளிய வைத்திருந்தான் ஜானவியின் மாயக் கிருஷ்ணன்

“ம்ம்.. இப்ப சொல்லு பொம்மை” என்கிட்ட என்ன பேசணும் என்று அறையில் இருந்த ஷோபாவில் கம்பீரமாக அமர்ந்து பொம்மையின் கையை பிடித்து தன் அருகே உட்கார வைத்து.. அவள் இடையில் கையை அழுத்தி பதித்து கொண்டு பேசு” என்று ஜான்வியின் கண்களை தன் காந்த கண்களால் கவர்ந்திழுத்தான்.

“வசியம் செய்தயாடா வசீகரா என்பதை போல கிருஷ்ணனின் முகத்தை பார்த்திருந்தாள்.. பேச வந்ததை மறந்திருந்தாள் மங்கை.. பேச வாயெடுத்தால்.. காற்று மட்டும் தான் வந்தது பெண்ணவளுக்கு” ஜானவியின் கண்கள் படபடவென்று பட்டாம்பூச்சி போல பறந்தது

ஜானவியின் இடையிலிருந்து கையை லேசாக எடுத்து..

“ம்ம். பேசு”என்றான் மறுபடியும்..

“அது.. வ..வந்து நீ..நீங்க நே..நேத்து உங்களுக்கு அத்தனை கோபம் வரக்கூடாது.. எனக்கு உ..உங்களை கண்டாவே ப..பயமா இருக்கு.. இனிமேல் கொஞ்சம் கோவத்தை குறைச்சுக்கோ எனக்காக.. உங்களை நம்பி நானும் ந..நம்ம கு.குழந்தைகளும் இருக்கோம்”என்று திக்கி திணறி பேச வந்ததை பேசிமுடித்தாள்.

மன்னவனுக்கு தன்னவள் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள் என்று கூறியது காதில் விழவில்லை.. நம்ம குழந்தைகள் என்று ஜானவி கூறியதும் கிருஷ்ணாவின் காதில் மந்திரமாக ஒலிந்தது.

ஜானவியின் முகம் முழுவதும் முத்தமிட்டவன்.. “ஐ.லவ்.யு டி பெண்டாட்டி.. நீ சொன்ன அட்வைசுக்கு ரொம்ப நன்றி.. நான் எப்படி நடக்கணும்னு நீ ஆர்டர் போடக்கூடாதடி என் ஆசை பொம்மையே.. என்னையும் நம்ம குழந்தைகளையும் பார்த்துக்கிட்டா போதுடி கள்ளி பெண்ணே!” என்று கிருஷ்ணா பேசுவதையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் ஜானவி..

ஜானவியின் தாவணியை விலக்கி அவள் நாபிக் கமலத்தில் முகம் வைத்து உதடு கொண்டு ஊர்வலம் ஜானவியின் செப்புசிலையை துலக்க ஆரம்பித்தான் கிருஷ்ணா.

அ.அத்தான் என்று உயிர் உருகும் ஓசை குரல் பொம்மையிடமிருந்து..

“கொஞ்ச நேரம் சும்மா இருடி”என்று அவன் உதடுகள் எல்லையை தாண்ட..ஜானவின் பெண்மை விழித்து கொண்டது.. அவனிடமிருந்து விலக பார்த்தாள்..

“ஜானுமா” என்ற சத்தம் பெண்ணவளை தன் நிலைக்கு கொண்டு வர சித்தம் தெளிந்து விட்டாள்.

ஆனால் மன்னவனோ மன்மத நிலையிலிருந்து வெளி வர முடியாமல்.. இப்போதே தன் பொம்மைக்குள் ஐக்கியமாக துடித்தது மாயவனின் இளமை.

“அ.அத்தான் அ.அம்மா கூ.கூப்பிடுறாங்க”

“ஜானு” என்று வசந்தியின் குரல் பக்கத்தில் கேட்க

கிருஷ்ணா பால் மனம் மாறாத நல்ல பிள்ளையை போல ஜானவியை பிரிந்து விலகி.. பொம்மையின் உடையை சரி செய்து அவளை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டான்

பெண்ணவள் கிருஷ்ணன் நடத்திய மாயங்களிலிருந்து வெளிவர முடியாமல் கண்ணை மூடி மோன நிலையில் அமர்ந்திருந்தாள்.

அறைக்குள் வந்த வசந்தி மகள் இருக்கும் கோலம் கண்டு.. என்ன இவ மாப்பிள்ளை உட்கார்ந்திருக்கார்.. தூங்கிக் கொண்டிருக்கிறாள்.. எப்படித்தான் குடும்பம் பண்ண போகிறாள் என்று புலம்பலுடன் கையில் கொண்டு வந்த காபியை மருமகனின் கையில் கொடுத்து..

“டிடி. ஜானு” என்று மகளின் தோளை உலுக்க..

ஜானவி கண்விழித்து பார்க்க வசந்தி நின்றிருந்தார்.. பக்கத்திலிருந்தவனை கண்டு தீயாய் முறைத்திருந்தாள் கிருஷ்ணாவின் பொம்மை.

 

ஆடவன் பொம்மை பெண்ணை பார்த்து மெல்லிய சிரிப்பு சிரித்தான்.

“சிரிக்கிரையாடா இரு முதல் ராத்திரியில பேதி மாத்திரை கலக்குறேன்”என்று முணுமுணுத்தாள்.

“ம்ம்..என தலையை இருபக்கமும் ஆட்டிச் பார்க்கலாம்” என்று குடித்த முடித்த காபிக் கப்பை வசந்தியிடம் நீட்டினான்.

“அத்தை நாளை மறுநாள் புதன்கிழமை கல்யாணம் பிரம்ம முகூர்த்தம் என்பதால் நாளைக்கு நைட்டு எங்க வீட்டுக்கு வந்து தங்கிடுங்க.. அப்போதான் காலையில் எங்க குல தெய்வக் கோவிலுக்கு போவதற்கு சரியாகயிருக்கும்”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சுந்தரம் உள்ளே நுழைந்தார்.

“மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்பே பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வருவது முறையல்ல..” என்று தயக்கத்துடன் சுந்தரம் பேசினார்.

“நீங்க ஜானவியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரவேணாம் மாமா.. பக்கத்திலிருக்கும் எங்களோட கெஸ்ட் ஹவுசில் தங்கிக்கோங்க.. அது தான் எல்லாருக்கும் சவுகரியமாக இருக்கும்” என்றான்.

“சரிங்க மாப்பிள்ளை”என்று தலையசைத்தார் சுந்தரம்.

“மாப்பிள்ளை நாங்க உங்களுக்கு முறை செய்யணும் என வசந்தியை பார்க்க.. வசந்தி தாம்பூலத்தில் பட்டு வேட்டி சட்டையும் அவர்கள் வசதிக்கு தகுந்தாற் போல மூணு பவுனில் தங்க சங்கிலியும். ஒரு பவுனில் மோதிரமும் செய்து தாம்பூலத்தில் பூ பழம் வைத்து கிருஷ்ணாவின் கையில் கொடுக்க..

“இதெல்லாம் எதற்கு என்கிட்டயே நிறைய இருக்கே”என்று தன் கையில் போட்டிருந்த காப்பை காண்பிக்க.

“அப்பா ஆசைப்பட்டு கொடுக்கறாங்கல்ல வாங்கிக்க” என்றாள் ஜானவி.

இப்போதெல்லாம் கிருஷ்ணாவிடம் தைரியமாக   பேசும் அளவிற்கு தைரியம் வந்தது ஜானவிக்கு.

இருவரையும் சேர்ந்து நிற்கச் சொல்லி அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று  தாம்பூலத்தை வாங்கிக் கொண்டான் கிருஷ்ணா.

கிருஷ்ணா பெரும் பணக்காரன்.. தாங்கள் சுந்தரம் கொடுக்கும் பொருளை வேண்டாம் என்று மறுக்காமல் வாங்கி கொண்டது ஜானவிக்கு கிருஷ்ணாவின் மீது மரியாதையை உண்டு பண்ணியது.

சுந்தரம் மருமகனின் பெருந்தன்மையை எண்ணி பெருமை பட்டார்.. கிருஷ்ணாவின் கோபத்தை நினைத்து தான் கவலை..

அந்த கவலையையும் இப்போதும் பறந்து போனது.. சற்று முன் தான் தாம்பூலத்தை கொடுத்த போது வேண்டாம் என்று சொன்னவர்.. ஜானவி வாங்கிக்கங்க என்று சொன்னதும்.. மறுவார்த்தை பேசாமல் வாங்கிக்கொண்டதை நினைத்து மாப்பிள்ளையின் கோபத்தை தன் மகள் சரிசெய்து விடுவாள் என்று எண்ணி சமாதானம் அடைந்தார்..

பின்னாளில் கிருஷ்ணாவின் கோவத்தால் தான் ஜானவியை தொலைக்க போகிறான் என்பதை யார் அறிவர்..

மாயா கல்யாணத்தை நிறுத்த திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்..

செல்வம் மாயாவைப் பற்றி தெரிந்து தன் ஆட்களின் மூலம் மாயாவை தன் வீட்டிற்கு வரவைத்தான்.

தன் அண்ணன் மகனை கொன்றவன் வீட்டுக்கு மாயாவிற்கு போவதற்கு மாயாவின் மனது ஒப்பவில்லை.

கிருஷ்ணா தன்னை  அவன் காலில் விழ வைத்ததை நினைத்து.. வஞ்சம் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றார் மாயா.

அங்கே மாயா செல்வம் வீட்டுக்குள் நுழைந்ததும் சோஃபாவில் அமர்ந்திருந்த செல்வம் “வாங்க மாயாம்மா”என்று அழைத்து ஷோபாவில் அமர வைத்து தனது திட்டத்தை கூற கண்களை அகல விரித்து செல்வம் சொல்வதை கேட்டிருந்தார்.

கோமதி இவர்களிருவரும் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்..

“கோமதி” என்றழைக்க காபி ட்ரேயுடன் மாயாவை முறைத்துக் கொண்டு காபியை நீட்டினார்.

கோமதியை பார்த்து இந்த பெண் நல்லவள் போல தெரிகிறதே .. இது சரியில்லையே என்று காபியை எடுத்துக்கொள்ள..

கோமதி சமையல் கட்டுக்கு சென்று விட்டாள் என்பதை அறிந்து கொண்டு செல்வம் இந்த பொண்ணு யாரு என கேட்டார் மாயா .

“என் மனைவி கோமதி” என்றான்.

பாலாவிற்கு வீட்டுக்கு வந்ததும் தங்களது திட்டத்தை அவனிடம் கூறியவுடன் வாயெல்லாம் பல்லாக தெரிய சிரித்தான்.

  1. அத்தியாயம்

கிருஷ்ணாவின் வீடு அரண்மனை போல ஜொலித்தது..

வசந்தி தீப்தியையும்   சுகந்தியையும் அழைத்து செல்ல அவள் வீட்டுக்கு வந்திருந்தார்.. சுகந்தி தனக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் “வசந்தியிடம் தீப்தியை அழைத்து போங்க  வரமுடியாது அண்ணி என்னால் வர முடியாது” என்றார்.

“தீப்தி அம்மா நான் உங்களை விட்டு போக மாட்டேன்”என்று அடம் பிடிக்க அங்கே வந்த ஜானவி தீப்தி கூறியதை கேட்டு வருத்தப்பட்டு “ஹேய் என்னடி அம்மாவை பக்கத்திலிருக்கும் பூங்கோதை பாட்டி பார்த்துக்குவாங்க.. வாடி ப்ளீஸ் நீ ஒருத்தி தாண்டி என் உயிர் தோழி” என்று கெஞ்சி தீப்தியை அழைத்து தன் வீட்டுக்குச் சென்றாள்..

சுந்தரம் குடும்பத்துடன் கிருஷ்ணாவின் வீட்டுக்கு போக அங்கே தன் ஜானவி வரவிற்காக வான வேடிக்கைகள் வெடிக்க வைத்திருந்தான்.. ஜானவி நடந்து வருவதற்கு தெருவெங்கும் பூ பாதைகள் போட்டு பெண்களை பூவை தூறல்களாக துவ செய்திருந்தான் ஜானுவின் கிருஷ்ணா.

ஜானவியை வரவேற்க வாசலில் அங்கே நின்றது மும்பெரும் செல்வங்கள்தான்.. மூன்று செல்வங்களை பாதுக்காக்கும் பொறுப்பை ஏற்க வந்திருக்கும் அரசியை வரவேற்க ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தது மூன்று செல்வங்கள்.. மூன்று குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் ஆரத்தியெடுக்க கீரனை வாரியெடுத்து முத்தாடினாள் குழந்தைகளின் தாயாக.

 

 

 

ஜானவி மூன்று முத்துக்களையும் அவர்களின் உயரத்திற்கு குனிந்து தாய் கோழி குஞ்சுகளை அணைகாப்பது போல அணைத்துக் கொண்டாள்.

லலிதாவிற்கு மூன்று குழந்தைகளையும் அவர்களின் தாய் கஸ்தூரியை போல ஜானவி           பார்த்துக்குவா என்ற நம்பிக்கை வந்தது.

ஜானவியின் பின்னால் வந்த தீப்தி அரண்மனையை கண்டு ஆச்சரியப்பட்டாள் .. தன் உயிர் தோழி வாழ போகும் அரண்மனையை சுற்றி பார்த்து சொக்கி போனாள்.. தானும் இந்த அரண்மனையில் தான் வாழ போகிறோம் என்பதை அறியாமல் கண்களை உருட்டி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மூன்று குழந்தைளும் கட்டி பிடித்ததில் ஜானவி அணிந்திருந்த பட்டுப் புடவை கசங்கியது.

“அச்சோ சித்திம்மா உங்க புடவை கசங்கிவிட்டேன்”என்று புடவை தேய்த்து விட்டது கீரன்.

கீரன் தன்னை சித்தி என்று கூப்பிட்டதும் மனம் வருந்தி  “கண்ணா என்னை சித்தின்னு யாரு கூப்பிட்ட சொன்னாங்க” என்று கீரனின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டு கேட்க.

கீரன் பதில் சொல்லும் முன் ஆதினி முந்திக் கொண்டு ஜானவியின் மடியில் ஏறி அமர்ந்து  “அந்த பேட் பாட்டி சித்தினு கூப்பிட சொன்னாங்க”என ஜானவியின் கன்னம் வருடி சோகமான குரலில் உதட்டை சுளித்தது.

“வருண் என்ன செய்வது” என்று தெரியாமல் விழிந்து நின்றிருந்தான்.

“வா” என்று வருணையும் அழைத்து மடியில் அமர வைத்துக் கொண்டாள்.

ஜானவி “பேட் பாட்டியா யாரு”என்று வருணிடம் கேட்க

“அதோ அங்க வராங்க பாருங்க”என்று மாயாவை காண்பித்தான்.

“ஓ.ஓ.. இவங்களா.. இந்த பேட் பாட்டிக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கலாமா”

“ம்..ம்ம். குடுக்கலாம்.. குடுக்கலாம்” என்று கோரசாக ஆதினி இரட்டை சடையை கையில் பிடித்து குதித்து ஆடியது.

தண்ணீர் பாட்டிலை பாதி குடித்து வைத்து விட்டு சென்றிருந்தனர்.. தண்ணீர் பாட்டில் மூடி இல்லாமல் திறந்து இருந்தது.. மாயா பாட்டில் இருக்கும் இடத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.

ஜானவி ஆதினியின் காதில் ஏதோ ரகசியம் சொல்ல..

ஆதினி கிளுக்கென்று சிரிந்து தலையாட்டி மாயா காலை எடுத்துக் வைக்கும் போது அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை தட்டிவிட்டு சென்றது.. தரை மார்பில்ஸ் என்பதால் மாயாவின் தண்ணீரில் கால் வைத்து வழுங்கி பொத்தென்று பூசணிக்காய் உடைவது போல கீழே விழுந்தார்.

“மாயா ஐய்யோ என் இடுப்பு” என பப்பரப்பேன்னு விழுந்தார்.

வசந்தி மாயாவிற்கு கைகொடுத்து எழுப்பி விட்டார்.

இடுப்பை பிடித்துக் கொண்டு.. என் இடுப்பு போச்சு.. இந்த ஆதினி கழுதை எங்க .. தண்ணீர் பாட்டிலை தட்டிவிட்டு ஓடுது என்று ஆதியின் சிண்டை பிடிக்க போக

“ம்ஹூம் குழந்தை முடியை பிடிச்சீங்க கையை உடைச்சிடுவேன்” என்று பல்லைக் கடித்துப் விரல் நீட்டி எச்சரித்தாள் ஜானவி.

அதற்க்குள் லலிதா ஜானவியிடம் “வாங்க சின்னம்மா.. சின்னய்யா உங்களை கெஸ்ட் ஹவுசில தங்க ஏற்பாடு செய்திருக்காங்க” என்று புன்னகையுடன் கூற..

பாஸ்கர் ஜானவி இருக்கும் இடத்திற்கு வந்து  அங்கே நின்றிருந்த லலிதாவிடம்..

“அக்கா நீங்க போய் சமையலை கவனிங்க நான் இவங்களை கூட்டிட்டு போறேன் ” என்றான் புன்னகை முகத்துடன்.

ஆதினியும், கீரனும் “பாஸ்கர் மாமா நாங்களும் சித்தி கூடவே கெஸ்ட்ஹவுஸ் வரோம்” என்று சிணுங்க..

பாஸ்கர் “குழந்தைகளிடம் இன்னிக்கு மட்டும் சித்தியை விட்டு விடுங்க.. நாளையிலிருந்து நீங்களே உங்க சித்தியை வைச்சுக்குங்க” என்று கூற

ஜானவிக்கு குழந்தைகள் தன்னை சித்தி என்று அழைப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.

ஜானவியின் கண்கள் கிருஷ்ணாவை தேடுவதை. பார்த்த பாஸ்கர் ஜானவியின் அருகில் வந்து

“தங்கச்சி கிருஷ்ணா கொஞ்சம் வெளி வேளையாக போயிருக்கான்.. நீங்க வந்ததும் என்னை உங்களை கவனிக்க சொல்லியிருக்கான்.. இந்த சமஸ்தானம் உங்களை வரவேற்கிறது” என்ற ஜானவியிடம் கிண்டலாக பேசி ராஜ மரியாதையாக கெஸ்ட்ஹவுஸிற்கு அழைத்து வந்தான்.

அங்கே கெஸ்ட்ஹவுஸின் வாசலில் கிருஷ்ணா காரை நிறுத்தி விட்டு இறங்கியதும்

கீரன் “சித்தா”என்று ஓடி அவனின் காலை கட்டிப்பிடிக்க.. கீரனை தூக்கிப் போட்டு பந்தாடி விளையாடி கீரனை மகிழ்ச்சிப் படுத்தினான்.

சுந்தரத்தின் அருகே வந்து  “வாங்க மாமா! நான் கொஞ்சம் அவசர வேலையாக போய்விட்டேன்.. தப்பா எடுத்துக்காதீங்க”என்று அவரிடம்  கைகூப்பி வணக்கத்தை வைத்தான்.

“மாப்பிள்ளை உங்களுக்கு ஆயிரம் வேலையிருக்கும்.. இதெல்லாம் நாங்க பெரிசு பண்ண மாட்டோம்”

தன்னவனின் கண்கள் இன்னும் தன் கண்களை புசிக்காமல் இருப்பதை கண்டு போலியாக கோபம் வந்தது ஜானவிக்கு.

அனைவரையும் கெஸ்டு ஹவுசிஸிற்கு அழைத்து சென்றான்.. சுந்தரமும் வசந்தியும் ஒரு அறையில் தங்கும் படியும்.. ஜானவிக்கு தனியறை ஏற்பாடு செய்திருந்தான்.. ஜானவி தீப்தி என்னோட தங்கிக்கட்டும் என்று கிருஷ்ணாவை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே சொல்ல..

நீ யாரு கூட இருந்தாலும் எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை என்ற ரீதியில் நின்றிருந்தான்.

கிருஷ்ணா சுந்தரத்திடம் மதிய “மாமா உணவு தயாரானதும் லலிதா அக்கா உங்களுக்கு கொண்டு வருவாங்க.. இரவு 7 மணிக்கு ரிசப்சன் 5 மணிக்கு ப்யூட்டிசியன் ஜானவியை அலங்காரம் செய்ய வருவாங்க” என்றான் தன் பொம்மையை பார்க்காமல்.

“மாப்பிள்ளை ரிசப்சன் கல்யாணம் முடிந்து வைத்துக்கலாம்னு சொன்னீங்க.. என்கிட்ட நீங்க முன்னமே ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்னா நானும் எங்க சொந்தங்காரங்களுக்கு சொல்லி இருப்பேன்” என்று வருத்தப்பட்டு கூற

“மாமா என் தொழில் வட்டார பிரண்ட்ஸ்களை மட்டும் அழைத்து ஒரு சின்ன பார்ட்டி மாதிரி கொடுக்குறேன்.. அதை ரிசப்சன் அளவில் செய்து பார்க்கணும்னு பாஸ்கர் ஆசைப்பட்டான்”என்று மாமனாரை பேசவிடாமல் செய்தான்.

ஜானவியின் கண்கள் கிருஷ்ணாவை வட்ட மடித்தது.

என்ன கோவம் என் மேல என்று பெண்ணவள் குழப்பத்திலிருந்தாள்..

தன்னிடம் ஒரு வார்த்தை பேசாமல் செல்லும் தன் கிருஷ்ணாவின் மீது பொய் கோபம் கொண்டாள்.

மதிய உணவு உண்டபின் அனைவரும் குட்டி தூக்கம் போட்டு பின் 3 மணியளவில் ஜானவியை அலங்காரம் செய்ய ப்யூட்டிசியன் வந்தனர்.

தீப்தி டிசைனர் சாரி அணிந்து கழுத்தை ஒட்டிய நெக்லஸ் மட்டும் அணிந்து சிம்பிளாக மேக்கப் போட்டுக்கொண்டாள்.. அவளை அழகாக எடுத்துக் காட்டியது

ஜானவி ப்யூட்டிசியனிடம் எனக்கு அந்த மாதிரி மேக்கப் வேண்டாம்.. இந்த மாதிரி சாயம் அடிக்காதீங்க என்று அவரை படாய் படுத்தினாள்.. ஒரு வழியாக மேக்கப் முடித்தது.

இளம் பால் நிற தாவணியும் அதே நிறத்தில் முழுக்க முழுக்க ஊதா நிற சர்தோசி வேலைபாடுகள் நிறைந்த டிசைனர் பிளவுசும் கற்கள் பதிக்கப்பட்ட ஹெவி ஒர்க் பாவாடையும் சேர்ந்த லெஹங்கா சாரி அணிந்து வைரத்தாரகையாய ஜொலித்தாள் ஜானவி.

தீப்தி ஜானவியை மேடைக்கு அழைத்து செல்ல மண்டபத்தில் இருந்த அனைவரின் கண்களும் திரும்ப முடியாத அளவு உடையும் தோற்றமும் கண்ணை கவரும் அழகு தேவதையாக. மணமேடையில் ஏற.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பது இராமயணத்தில் சொல்வது போல யார் முதலில் பார்த்தது என்ற அறியாத வண்ணம் இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே மேடையேறும் ஜானவியை கண்கொட்டாமல் இரசித்திருந்தான்..

சந்தன நிற ஷெர்வானி கிருஷ்ணாவிற்கேற்ற அளவெடுத்து தைத்தது போல அவனின் மலையெனும் புஜங்களில் படர்ந்து அழகு சேர்க்க காதில் சிறு கடுக்கண் கழுத்தில் புலி நகம் போட்ட தடிமனான தங்க சங்கலி.. கையில் காப்பு.. ஜெல் தடவி படியவைக்கப்பட்ட கேசத்துடன் ஆணழகனாக மேடையில் நின்றிருந்த கிருஷ்ணா ஜானவி அருகில் வந்ததும் அவளின் இடையில் கைகோர்த்தவாறு அணைத்து நின்றான்.. பெண்ணவள் நாணம் கொண்டு நிலமகளை பார்த்து நின்றாள்.

தீப்தி ஜானவியை கிருஷ்ணாவின் அருகே மேடையில் நிற்க வைத்து விட்டு கீழே இறங்கினாள்..

பாஸ்கரன் நேவி புளு கோட் சூட் அணிந்திருந்தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதல் பார்வை பார்த்துக்கொண்டனர்.

வசந்தி சுந்தரமும் மணமேடையின் முன் சீட்டில் அமர்ந்து ராஜா ராணி போல நிற்கும் மகளையும் மருமகனையும் கண்டு உள்ளம் களிப்புடன் இருந்தனர்.

கிருஷ்ணா குழந்தைகள் மூன்று பேருக்கும் கூட்டம் என்றால் அலர்ஜி அவர்களின் உடல் நலம் கருதி வீட்டிலேயே இருக்குமாறு லலிதாவிடம் கூறிவிட்டான்..

தீப்தி தனியாக நின்று கொண்டிருக்க.. அவளின் முன்னாள் கணவன் பரத் கிருஷ்ணா நண்பன் கூட வந்திருப்பான் போல.. தீப்தியை பார்த்துவிட்டு அவளிடம் வம்பு செய்தவற்காக தீப்தியின் அருகில் சென்று

“என்னடி முன்னை விட கன்னம் எல்லாம் ஜொலிக்குது.. யாரையாவது பிடிச்சிட்டயா”என்று அசிங்கமாக பேசி.. அவளின் கையை பிடித்து இழுக்க..

தீப்தி உடல் நடுங்கி “இ.இங்கிருந்து போயிரு.. உ.உன்னை நான் டிவோர்ஸ் செ..செய்துட்டேன்.. என்னை ஏன் இன்னும் தொந்தரவு பண்ணுற”என்று கண்ணீர் விட்டு கதறி அழ..

தூரத்திலிருந்து தீப்தி யாரிடமோ பயந்து நடுங்குவது பாஸ்கரின் கண்களுக்குத் தெரிய தீப்தியிடம் ஓடி வந்தான்.

பரத் தீப்தியின் கையை பிடித்திருப்பதை கண்டு தீப்தியின் கண்களை “இவனா”என்று வாயில் முணுமுணுத்தவாறு கேட்க. அவன் கையை உதறிவிட்டு பாஸ்கரின் தோள்வளைவில் நின்று கொண்டாள்..

“ஓ.. இவனை பிடிச்சுட்டியா”என்று நாராசமாக பேச பாஸ்கர் தீப்தியை கேவலமாக பேசுவது தாங்காமல் அவன் மூக்கில் ஓங்கி குத்த இரத்தம் கொட்டியது..

மீண்டும் பரத்தை அடிக்க போக.. “விடுங்க பாஸ்கி அவனை அடிச்சா உங்களுக்குதான் கேவலம்.. வாங்க போலாம்”என்று அழைத்து செல்ல.

பாஸ்கர் தனியாக சென்றதும்.. “ஏஞ்சல்”என்று தீப்தியின் கையை பிடித்து பார்க்க பரத் கையை அழுத்தியதில் சிவந்திருந்தது.. அதில் இதழ் உத்தடம் கொடுக்க.. கண்ணை இறுக முடிக்கொண்டாள்.. அவள் அருகில் செல்ல இரவு சீரியல் பல்பு வெளிச்சத்தில் தீப்தியின் கண்களில் கண்ணீர் வழிவதை பார்த்து விலகி கொண்டான்..

தீப்தியை கைப்பிடித்து அழைத்து வந்து வசந்தியின் அருகில் அமரவைத்து சாப்பாடு போடும் இடத்திற்குச் சென்றான்.

மேடையில் ஜானவியை இறுக்கமாக அவள் இடையில் அழுத்தமாக கைப்போட்டு கொண்டு தொழில் வட்டார நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்..

அவன் அழுத்திய இடம் சிவந்து விட்டது.. “என்னங்க கொஞ்சம் கையை எடுக்கீறீங்களா”என்று அவன் காதோரம் மெல்லிய குரலில் பேச

“ம்ம்.. இந்த வலியே தாங்கமாட்டியா”.. என்று இன்னும் இடையை அழுத்திப் பிடித்தான்.

“ஸ்ஸ்”என்று வலித்தாங்காமல் முணக.. அங்கே நின்றிருந்த நபரிடம் கண்ணைக் காட்ட ஒரு நிமிடம் லைட் அணைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் அழுத்தி சிவந்த இடத்தை முத்தம் கொடுத்து டிரிம் செய்யப்பட்ட தாடியில் லேசாக குறுகுறுக்கச் செய்தான்.. காயமும் அவனே மருந்து அவனே.. சிறிது நேரத்தில் லைட் ஆன் செய்தததும் ஒன்றும் அறியாதவன் போல நின்று கொண்டான்.

போட்டோ கிராபர்கள் இருவரையும் அப்படி நில்லுங்க.. முத்தம் கொடுப்பதும் போல போஸ்களில் போட்டோ எடுத்தனர்.. ஜானவிக்கு அனைவர் முன்னிலும் கிருஷ்ணாவுடன் நெருக்கமாக இருப்பது போல போட்டோவிற்கு போஸ் கொடுப்பது சங்கடமாக இருந்தது.. அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜானவியை தூக்கிக் கொண்டு போஸ் கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னான் கிருஷ்ணா.

ஜானவியின் முகத்தில் இருக்கும் சிரிப்பை கண்டு இன்னும் மாயாவும் கீதாவும் வயிறெறிந்து நின்றனர்.

மாயா இன்னும் சிறிது நேரத்தில் நீ அவமானப்பட்டு நிற்கப்போகிறாயடி என்று ஜானவியை பார்த்து பொறாமை பட்டு கரித்துகொட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top