4
ஒரு வாரம் அமைதியுடனே கழித்தான் நந்தன், கல்லூரி செல்வதும் அவனின் அல்லகைகளுடன் அளவளாவதுமாய் சென்றது நேரம் அவனுக்கு. ஹரிஷ் கூட அந்த பெண் பற்றி மறந்துவிட்டானோ என்று குழம்பும் அளவுக்கு இருத்தது நந்தனின் நடவடிக்கைகள் எல்லாம்.
தந்தையிடம் திரும்ப ஒரு வார்த்தை கூட டிபார்ட்மென்ட் மாற்றுவதை பற்றி பேசவில்லை அவன். எப்போதும் போலவே தான் இருந்தான். மனோகரும் அவனின் இந்த அதிக ஆர்வமின்மையை பார்த்து கொண்டு தான் இருந்தார். தேவாவிடம் இருந்து மறுநாளே அழைப்பு வந்து விட, மகனிடம் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று அவதானித்தார். ஒன்றும் இல்லை என்றவுடன் தான் அவருக்கு பையன் உண்மையிலேயே விருப்பட்டு தான் கேட்டு இருக்கிறான் என்று முடிவுக்கு வந்தார்.
அன்று வெள்ளிக்கிழமை , இரவு மகனை அழைத்தார் மனோகர். ” டேய் தேவா கிட்டேயும் இதைப்பத்தி நான் பேசினேன். அவனும் இது ஓகே , பினான்ஸ் சைட் நம்ம கிட்டேயும் ஒரு ஆள் இருக்கிறது நல்லது தான் சொன்னான். அதே போல உங்க காலேஜ் பிரின்சிபாலிடம் உன்னை டிபார்ட்மெண்ட் சேன்ஞ் பண்ண சொல்லியாச்சு.. வர திங்கட்கிழமையில் இருந்து பினான்ஸ் டிபார்ட்மெண்ட் மாறிக்கோ.. இப்போ ஓகேவா.. சந்தோஷமா” என்று கேட்டார்.
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த மனதை அடக்கி வெளியில் காட்டிக்கொள்ளாமல் தேங்க்ஸ் என்று விட்டு நகர்ந்து விட்டான். பின்னே தந்தை இந்த சின்ன விஷயத்திற்கு சந்தோஷப்பட்டதை பார்த்தால் கண்டு கொள்வார்…
ஞாயிற்றுக்கிழமை காலை, நான்கு அடுக்கு கொண்ட வீடு.. நமக்கு மாளிகை போல தான் காட்சி அளிக்கிறது..
வீட்டின் முகப்பில் இரு சிங்கங்கள் கம்பீரமாக நிற்கும் முகப்புடன் கூடிய போர்டிகோ.. கீழ் தளம் மிக பிரம்மாண்டமாக நம்மை வரவேற்றது, பொதுவான வரவேறப்பறை.. அடுத்து மிக நெருக்கமாகவர்களுக்கான வரவேற்பு அறை.. அதன் இரு மருங்கிலும் வண்ண வண்ண விளக்குகள், அதன் பின்னே சிறு கோவிலோ என்று வியக்கும் வகையில் உள்ள பூஜை அறை.. அவ்வறை முன்னே பலர் அமரும் வசதியுடன் உள்ள தாழ்வாரங்கள்.. வரவேற்பறையின் இடது புறம் நீண்டு இருக்கும் விருந்தினர் அறைகள்… பூஜை அறையை தாண்டி இரு கட்டுகள் சென்றால் டைன்னிங் ஹால், அதற்கு பின்னே சமையலறை…
வரவேற்பு அறையில் தொடங்கும் மாடிபடிகள் இரு பிரிவுகளாக பிரிந்து வளைந்து, முதல் தளத்தில் சென்று இளைப்பாரும்… முதல் தளம் அவ்வீட்டின் தற்போதைய எஜமானர் மோகன ராஜன் மற்றும் அவரது மனைவி தமயந்தி அந்தப்புரம்.. அவரின் அலுவல் அறைகள்… அவர்கள் தந்தையார் ராஜராஜன் வந்தால் தங்குவதற்கு என்று தனியாக ஒரு பகுதி..
இரண்டாவது தளம் அவர்களின் செல்ல மகள் அவ்வீட்டு இளவரசி மிருளாளிணி தேவி உடையது..
பெயரை போலவே பழகுவதற்கு இனிமையான, மிருதுவான பெண் அவள். தாய் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் வீட்டு புறா.. பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பான்மையான நேரம் வீடு தான் எல்லாம். அந்த எல்லாமேயில் மினி நூலகம், இன்டோர் கேம்ஸ், கிராஃப்ட் கிளாஸ், நடன பயிற்சி பெற தனி அறை என்று எல்லாமும் அடங்கும்.. அவர்களின் குடும்ப பாரம்பரியத்தை பின் பற்றி அவளை மேனேஜ்மென்ட் படிக்க சொல்ல, அவளோ தீர்மானமாக மறுத்து , தற்போது
ஹவுஸ் சர்ஜன் ஆக உள்ளாள்.
முக்கியமான ஒன்று தேவாவின் அன்பு தங்கை.. ஆறு வயது வித்தியாசம் என்றாலும் தேவாவிற்கு அவள் நெருக்கமாக தோழியும் கூட..
மூன்றாவது தளம், நம் நாயகன் தேவேஸ்வர ராஜனுடையது.. அவனின் பகுதியும் அவனை போலவே சற்று வித்தியாசமாக தான் இருக்கும்.. சிறந்த தொழிலதிபர்கள், அவனுக்கு பிடித்த அறிஞர்கள் என்று அந்த பகுதி முழுவதும் ஆங்காங்கே அவர்களின் புகை படங்கள் வைத்திருப்பான். தனி உடற் பயிற்சி கூடம், அவனின் அலுவலக அறை.. குறிப்பாக ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று ஒரு அறை வைத்திருப்பான்.. எப்போதெல்லாம் அவனின் ஸ்ட்ரெஸ் ஐ குறைக்க விரும்புகிறானோ அப்போது அந்த இடத்தில் சங்கமமாகி ஆகிவிடுவான்.
அவனுக்கு ஸ்ட்ரெஸ் போகுதோ இல்லையோ.. அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காது போய்விடும்.. அனைவரும் ரூம் உள் ஸ்பீக்கர் வைத்து பாட்டு கேட்டால், இவனோ இவன் தளம் முழுவதும் ஸ்பீக்கர்கள் செட் செய்து வைத்து, அனைவரின் காதையும் பஞ்சர் செய்வான். அவன் அன்னை கேட்டால் , நீங்களும் கேளுங்க ஸ்ட்ரஸ் குறையும்.. பிபி வராது.. என்று கூறி நகர்ந்து விடுவான். இவனின் தாரக மந்திரம்.. ” டேர் டூ பீ டிஃப்வரன்ட்”..
காலையில் தன் தளத்தில் உள்ள வரவேற்பு அறையில் குப்புற படுத்து கொண்டு, சில நோயாளிகளின் கேஸ் ஹிஸ்டரியை பார்த்து கொண்டிருந்த மிருளாளினி…
“ஃபர்ஸ்ட் திங்ஸ் ஃபர்ஸ்ட்”
திடீரென்று ஹை பிட்சில் கேட்ட பிளீவர் பாடலில் அதிர்ந்து துள்ளி கீழே விழுந்தாள். நல்ல வேளை கார்பெட் அவளை காப்பாத்தியது..
ஆத்திரம் வந்தால் எல்லோருக்கும் வாயில் கண்டபடி வார்த்தை வரும்.. இவளுக்கோ உதடு பிதுக்கி அழுகை தான் வரும்.. தன் டிரேட் மார்க் அழுகையுடன் அன்னையை நாடி சென்றாள்,
“ம்ம்மா… இந்த அண்ணணை பாருங்க.. காலையிலே ஆரம்பிச்சிட்டாங்க…”
“எனக்கும் கேட்டுச்சு டா”
” உங்களுக்கே கேட்டுச்சின்னா.. என் நிலைமை.. கொஞ்சம் வாலியூம் கம்மி பண்ண சொல்லுங்க மா..”
‘ “நாம சொல்லி அவன் கேட்ட நாட்கள் எல்லாம் போச்சு.. என்னைக்கு உன் தாத்தா அவனை வளர்க்க எடுத்து போனாரோ அப்பவே.. அவன் என் கையை விட்டு போய்ட்டான்”
” உங்களை யாரு தாத்தா கிட்ட கொடுக்க சொன்னா” என்று முறைத்த மகளை பார்த்து, ” அப்போ நீ எனக்கு ஐந்து மாதம், ப்ளீடிங் ஆச்சுன்னு… ஃபுல் பெட் ரெஸ்ட் சொல்லிட்டாங்க.. அதான் தேவாவை உங்க தாத்தா கூட அனுப்பினேன்.. அவன் அப்படியே உங்க தாத்தாவா மாறி வருவான்னு எனக்கு தெரியுமா என்ன??”
” இப்போ போய்.. அவங்கள வால்யூம் குறைக்க சொல்லுங்க”
“என்னால முடியாது… வேலை தலைக்கு மேல இருக்கு.. அவனோட மல்லு கட்ட முடியாது.. நீ வேணா ஒன்னு பண்ணு.. இங்க அப்பா ஆபீஸ் ரூம்ல போய், உன் கேஸ் ஹிஸ்டிரியை பாரு.. ” என்று விட்டு அவர் வேலையாட்களுக்கு வேலைகளை உத்தரவிட சென்று விட.. மிருவும் அன்னார்ந்து மேல பார்த்து விட்டு, அம்மா சொன்னது போலவே அப்பா ஆபீஸ் ரூம் நோக்கி சென்றாள்.
அவங்க போகட்டும்.. வாங்க.. நாம போய் பார்ப்போம் தேவாவை..
அவன் தளத்தில் நுழைந்த உடனே இசை காதை பிளந்தது.. இவன் எங்கே என்று நாம் தேட… அருகில் உள்ள ஒரு அறைக்குள் காலடி சத்தங்கள் கேட்க, அங்கே சென்று பார்த்தால், அவன் உடலை கவ்வி பிடித்த கையில்லா பனியனும், டிராக் பாண்டும் அணிந்து கொண்டு இருக்க.. அந்த இசைக்கு ஏற்ப அவனின் கைகளும் கால்களும் மிக நேர்த்தியாக ஆடி கொண்டிருந்தது… இவனின் நடன அசைவுகளால், அவனின் உடற்கட்டு வியர்வை துளிகளால் மின்னின.. அதை எல்லாம் எங்கே அவன் பொருட்படுத்தினான்.. காரியமே கண்ணாக இருந்தான். பாடல் முடிய தன் நடனத்தையும் முடித்து அவன் அவ்வறையை விட்டு கிளம்ப ஆயத்தமாக, .. வாங்க.. வாங்க அவனை பார்த்தது போதும், நாம கீழே போகலாம்.
காலை உணவு வேளையில் அனைவரும் மோகன ராஜன், தமயந்தி, மிருளாளினி டைனிங் டேபிளில் அமர்ந்து தேவாவிற்காக காத்திருந்தனர். ஃப்ரெஷ் ஆகி கீழே வந்தவன், அனைவருக்கும் ஒரு மார்னிங்.. ஒரு சாரி சொல்லி விட்டு அவனும் இணைத்து கொண்டான். மிரு குரலும் அவளின் தந்தையின் குரலுமே அவ்விடத்தில்.. இவன் தலை அசைப்பு மட்டுமே..
உணவு முடிந்து அப்பாவும் பிள்ளையும் சோஃபாவில் அமர்ந்து பேசி கொண்டிருக்க, தமயந்தி அவனின் கல்யாண விசயத்தை ஆரம்பித்தார்.
” ம்மா.. பொண்ணுங்க மேல் எனக்கு பெரிய இன்டர்ஸ்ட் ஆர் எக்ஸ்பெக்ட் இல்லை.. ஒன் கண்டிசன்.. பிசினஸ் சப்போட்டிவா இருக்கணும்.. தட்ஸ் ஆல்”
” சரி டா.. அப்படி இரண்டு அலையன்ஸ் வந்து இருக்கு.. நீ இரண்டுல யார ஓகே பண்ணினாலும் , எங்களுக்கும் ஓகே..” என்றார் மோகன்..
” சரி.. போட்டோஸ் மெயில் பண்ணுங்க” என்றவனை பார்த்து தமயந்தி தான் தலையில் அடித்துக் கொண்டார்.
” ஏன் மா..”
” பின்ன.. நான் உன் கம்பனிக்கு மாடலா பார்க்க சொன்னேன்.. மெயில் அனுப்ப சொல்லுற.. பக்கத்தில் தானே டா இருக்கோம்.. ” என்று கூறி ஒரு கவரை அவன் கையில் திணித்தார்..
” ஓகே .. மா.. பார்த்திட்டு சொல்லுறேன்” என்றவன், அப்பாவின் பக்கம் திரும்பி சிறிது நேரம் பேசிவிட்டு தன் தளம் நோக்கி சென்று விட்டான்.
தமயந்தி ஒரு பெரும் மூச்சோடு அவனை நோக்கினார்.. பின் கணவரிடம், ‘”இருக்கிற நாலு பேருக்கு.. நாலு புளோர்.. அவனை கண்ணுல கூட சரியா பார்க்க முடியல.. காலையில் எப்போ போறான், நைட் எப்போ வரான் தெரியல.. இதுல தனி லிஃப்ட் வேற அவனுக்கு” என்று தன் மன குமுறல்களை கணவரிடம் கூறினார்.
“தேவா இஷ்டப்பட்டு கட்டிய வீடு தமா.. விடு விடு ஒரு கல்யாணம் ஆனால் எல்லாம் சரி ஆகிடும்” என்று மனைவிவிக்கு ஆறுதல் கூறினார்.
திங்கட்கிழமை காலை வெகு சிரத்தையாக முற்றிலும் பார்மலில் கல்லூரிக்கு கிளம்பினான் நந்தன்.
இந்த ஒரு வருடமாக ஸ்டிலிஷ் பிராண்டட் வெஸ்டன் அவுட் பிட்டில் அமர்த்தலாக, ரேபன் கண்ணாடியை சுழற்றிக் கொண்டே வரும் நந்தனா? இது? தன் கண்ணை தன்னால் நம்ப முடியாமல் அவசர அவசரமாக அருகில் இருந்தவனை கிள்ளிப் பார்த்து சரி பார்த்து கொண்டான் ஹரிஷ்.
“என்னடா மச்சி இது புதுவித அவதாரம்?”
“அவதாரமா ? ஏன்டா நான் நல்லவனா மாறுனா உங்களுக்கு பொறுக்காதா”
“நீ… நல்லவனா… நாடு தாங்காது மச்சி”, என்று தன் நெஞ்சில் கை வைத்து சிவாஜி போல வசனம் பேசியவனை பார்த்து,
ஹா ஹா ஹா ஹா ஹா என்று கலகல வென சிரித்தான் நந்தன்.
” என்ன மச்சி சிரிக்கிற….ஃபார்மல்ல வந்திருக்க… அதுவும் படிக்கிற பழம் மாதிரி வந்திருக்க… இங்கே என்ன நடக்குது மச்சி” என்று அவன் தூண்டில் போட…
” பரவாயில்ல.. உனக்கு கூட கொஞ்சம் மூளை இருக்க தான் செய்யுது ” என்று கூறி அவர்கள் அருகில் அமர்ந்தவன், குறுகுறுப்பாக தன்னை பார்த்தவர்களை கண்டு கொண்டனில்லை.. ஹரிஷ் கேட்ட கேள்விக்கும் பதில் சொன்னானில்லை.
சிறிது நேரம் கழித்து
வகுப்புகள் ஆரம்பிக்கும் நேரம் ஆனதும் தன் அல்லகைகளை நோக்கி கையசைத்து ” சரி பார்க்கலாம் டா… எனக்கு கிளாசுக்கு டைம் ஆயிடுச்சு ” என்று கூறி ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
” இரு ..இரு.. நீ பாட்டுக்கு தனியா எங்கள விட்டுட்டு போற, உனக்கு மட்டும் தனியா ஸ்பெஷல் கிளாஸ் ஏதும் வைச்சு இருக்காங்களா… எல்லாருக்கும் ஒண்ணா தானே கிளாஸ் ஆர்மபிக்கும்… அது மட்டுமல்ல நாம என்னைக்கு கரெக்ட் டயத்துக்கு கிளாசுக்கு போயிருக்கோம்?” என்று கேட்டான் ஹரிஷ்.
“டேய்.. அது போன வாரம் , இது இந்த வாரம். இனி நான் பைனான்ஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட் ” என்று அழுத்தமாக கூறியவனைப் பார்த்து ஆச்சரியத்தில் வாய் பிளந்தான் ஹரிஷ்.
” அடப்பாவி… இந்த ஒரு வாரம் அமைதியா இருக்கும்போதே நான் நினைச்சேன், நீ ஏதோ பிளான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்னு… ஆனா இப்படி நினைக்கவே இல்லையாடா..”
கர்வம் பொங்க தன் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டான் நந்தன் . ” என்னை யாருன்னு நினைச்ச நந்தன்…நந்தராஜன்… நினைச்சதை முடிக்காமல் இருக்க மாட்டேன்” .
“ஏன் மச்சி.. மாறினதான் மாறினே… என்னையும் சேர்த்து கூப்பிட்டுயிருக்க கூடாதா… இந்தப் பயலுகளோட நான் மட்டும் தனியா போய் என்ன செய்ய… உன் பவரை யூஸ் பண்ணி என்னையும் கொஞ்சம் மாற்றிவிடேன் அந்த டிபார்ட்மெண்ட்க்கு ” என்றான் ஹரிஷ் கெஞ்சலாக…
” மச்சி இனி நீ வேற டிபார்ட்மெண்ட்.. நான் வேற டிபார்ட்மெண்ட் .. என்ட டிபார்ட்மெண்ட் பைனான்ஸ்.. என்ட தின மந்திரம் கிரெடிட் டெபிட்.. என்ட தாரக மந்திரம் டிரேடிங்.. ப்ராஃபிட்….” என்று கூறி தன் கை விரல்களை நெற்றி மீது வைத்து ஒரு சல்யூட் அடித்து விட்டு தன் வழியே நடந்து சென்றான் நந்தன்.
போகும் அவனையே ஆவென வாய் பிளந்த வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தனர் அல்லக்கைகள் ஹரிஷூடன் சேர்ந்து…
இவன் அல்லக்கைகள் மற்றும் ஹரிஷியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றது, அது மட்டுமல்லாமல் அந்த டிபார்ட்மெண்ட்க்கு இவன் புதியவன் அல்லவா அதனால் கிளாஸ் தேடி சென்று போகவே இன்னும் சிறிது நேரம் பிடித்துவிட்டது. கொஞ்சம் காலதாமதமாக அவன் வகுப்புக்குச் செல்ல , அதற்குள் வகுப்பு ஆரம்பமாகிவிட்டது.
இவன் நல்ல நேரமோ என்னவோ அன்று முதல் வகுப்பு பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள் வைஷாலி..
ஒரு வழியாக தன் வகுப்பறையை கண்டுபிடித்து, உள்ளே செல்ல அனுமதி கட்டாயம் கேட்டு தான் ஆகணுமா ? என்ற தயக்கத்தோடு வாசலில் வந்து நின்றவன் , வைசாலியை பார்த்தவுடன் தயக்கங்கள் எல்லாம் தயக்கமின்றி ஓடிவிட்டன…
” மே ஐ கம் இன்? ” என்று கூறியவன் மேமை வாய்க்குள்ளேயே புதைத்துக்கொண்டான்.
அவள் ஆழ்ந்த குரலிலும், தெளிவான விளக்கத்தில், எளிதாக புரியும் வகையில் பாடத்தை நடத்தும் திறனிலும் கட்டுண்டு இருந்தனர் மொத்த வகுப்பு மாணவர்களும்.. இடையே நந்தன் குரலில் அவர்கள் கலைந்தனர்.
நந்தன் குரலில் திரும்பி பின்புறம் பார்த்த வைசாலி புருவங்கள் நெறிய யோசனையோடு அவனைப் பார்த்து கம் இன் என்றாள்..
வெகு கேஷுவலாக அவள் முன்னே தன் கைகளை நீட்டி, ” ஐம் நந்தன்.. நியூ டு பினான்ஸ் டிபார்ட்மென்ட் ” என்று அலட்டலாக தன் அறிமுகத்தை ஆரம்பித்தான்.
நீட்டிய அவன் கைகளை அவளின் பழுப்பு நிற கண்கள் அழுத்தத்தோடு பார்க்க, அந்த பார்வை வீச்சு ஏதோ செய்ய, அவனையும் மீறி சட்டென்று கையை இழுத்துக் கொண்டு முகத்தில் புன்னகை பரவ நின்றான் நந்தன்.
சினேக புன்னகையுடன் நந்தனை பார்த்த வைசாலி, ” வெல்கம் டு அவர் டிபார்ட்மெண்ட் ” என்று கூறி தன் கைகளால் மாணவர்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்தை சுட்டி காட்டினாள். அந்த செய்கை அனாவசியமாக நின்று நேரத்தை வீணாக்காமல் சென்று உட்காரு என்று அவனுக்கு கூறியது.
அவளிடன் தலையசைத்துக் கொண்டு கண்களால் இடம் தேடியபடி அவன் மாணவர்களுக்குள் நுழைய அங்கே கண்களில் பீதியுடன் அமர்ந்திருந்த சந்துரு, அவன் கண்ணில் பட, சந்துருவிற்கு ஒரு கண் அடித்தலை பார்சல் செய்து விட்டு, அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
சந்துரு அவனை வாய் பிளந்து பார்க்க, ஒற்றை விரல் நீட்டி அவன் தாடையை வைசாலி பக்கம் திருப்பி, கண்களால் அங்கே கவனி என்றான். பின் சிரித்து கொண்டே தானும் கவனித்தான்… பாடத்தையா??? பாடத்தை நடத்தியவளையா???
அவள் நடத்திய பாடங்கள் முழுக்க அவன் காதில் நுழைவதை கடினப்பட்டு, விரட்டியடித்து விட்டு, அவளை மட்டும் தன் கண்களால் நிரப்பிக்கொண்டு இருந்தான் நந்தன்..
அடுத்த நாள் காலை, வைசாலி வரும் முன்னே அவள் கேபின் முன்னால் நின்றான் கோரிக்கையோடு நந்தன்…
கர்வம் வளரும்..

Very nice epi sis
Very nice sis
நந்தன் என்று பொறுப்பானவன மாறுவான் ?