ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 22

22

 

 

 

 

கோபமா வெட்கமா என்று அறியா வண்ணம் அந்தி வானமென சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்த மிருவை பின்பக்கமாக சென்று அணைத்தவன் அவள் காதருகே… ” சீக்கிரம் என்கிட்ட வந்துருங்க மிஸ்ஸர்ஸ். கார்த்திக்… ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது ” அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் ஒன்று பதிந்து விட்டு விடுவிடுவென்று சென்றவன் திரும்பிவந்து…

 

” இதுதான் சாக்குன்னு இங்கே இருக்காதே சீக்கிரம் டின்னருக்கு கீழ வா.. நீ வரல.. அடுத்து யார் பார்க்கிறார்கள் எல்லாம் பார்க்க மாட்டேன் வந்து உன்னை தூக்கிட்டு வந்துருவேன் ” என்ற அவனின் அதிரடியில் மிரு சற்று கலங்கித்தான் போனாள்.

 

மிரும்மா உனக்கு அதிரடி தான் கரெக்ட் என்று அவளை எண்ணி சிரித்துக்கொண்டே பேருக்கு மாமாவை பார்த்து ஒரு ஹலோ ஹாய் சொல்லிவிட்டு கீழ்தளம் நோக்கி சென்றுவிட்டான். 

 

அதற்குள் தேவாவும் தன் மனைவியுடன் வந்திருக்க டின்னர் ஹால் களை கட்டியது. மிரு அவன் அதிரடியால்

சிவந்த முகத்தை.. இதழ்களை சற்று நேரம் எடுத்து தெளிவாக்கிய பின்னர் அங்கு வந்து சேர்ந்தாள்.

 

 

சாப்பாட்டு நேரத்தில் தொழில் பற்றிப் பேசக்கூடாது என்று தமயந்தியின் கட்டுப்பாடு , அதனால் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு மிருவின் திருமண பக்கம் சென்றது..

 

கார்த்திக்கை நிமிர்ந்தும் பாராமல் ” நான் பீஜி முடித்தவுடன் தான் எனக்கு கல்யாணமெல்லாம் ” என்று மெதுவாக ஆனால் அழுத்தமாக கூறினாள் மிரு.

மிருவின் பேச்சு சாப்பிட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கு புரை ஏற , அவன் கையில் தண்ணீர் கிளாசை கொடுத்த தேவா அவனைப் பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.

 

” சூப்பர் மிரு.. நெக்ஸ்ட் பீஜி மேஜர் கைனகாலஜிஸ்ட் எடு மிரு. உன் பொறுமையான மென்மையான குணத்துக்கு கரெக்டான சாய்ஸ் ” என்று வைஷூ கூற..

 

தேவா மெல்ல கார்த்திக் காதில் ” மச்சி உன் பாசமலர் உனக்கு ஆப்பு வைக்கிறா… உனக்கு டைரக்ட்டா 40 வயசுல தான் கல்யாணம் போல மச்சி ” என்று வார…

 

” நோ வே மச்சி.. இப்போ பீஜி பண்றேன்னு சொல்லவா, அடுத்து இப்பதான் பீஜி முடிச்சுறுக்கேன் என்று சொல்லுவா.. அப்புறம் கொஞ்சம் ப்ராக்டிஸ் ஆகட்டும் சொல்லுவா.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது… அவ ஹவுஸ் சர்ஜன் முடிச்ச உடன் மேரேஜ் பிக்ஸ் பண்ணிடு இல்ல ” என்று கார்த்திக் அவனை கடித்துத் துப்ப…

 

“சரி டா பார்க்கலாம் ” என்றான் தேவா.

 

அவனை முறைத்தவன் ” நீ மட்டும் கல்யாணம் பண்ணி குஜாலா இருப்ப.. நா மட்டும் இன்னும் பேச்சிலரா இருக்கணுமா.. நீ மேரேஜ் சீக்கிரமாக வைக்கல.. அப்புறம் என் பாசமலர நான் என் வீட்டு கூட்டிட்டு போயிருவேன் பார்த்துக்கோ ” என்று கார்த்திக் மிரட்ட..

 

” ஏன்டா ஏன்டா இந்த கொலவெறி.. ஏதோ இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா.. முன்னேறி கிட்டு இருக்கேன் அது பொறுக்கலையா உனக்கு ” என்று தேவா அலற..

 

நண்பர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். இவர்களின் ரகசிய பேச்சை மோகன் கவனித்தாலும் கண்டுகொள்ளாதவர் மாதிரியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தமா மகள் மட்டும் மருமகள் இருவருடன் ஐக்கியமாக, விலாவரியாக எந்த டிபார்ட்மென்ட் பீஜியில் எடுக்கலாம் என்று மிகத் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தனர் பெண்கள்..

 

அன்று ஞாயிற்றுக்கிழமை, காலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வைஷூவின் இடுப்பில் ரோமங்கள் ஓடிய வன் கை ஒன்று இழுத்து அணைக்க, அந்தக் கையை இழுத்து தன் கன்னங்களுக்குள் புதைத்துக் கொண்டு மீண்டும் உறங்கினாள் வைஷூ.

 

 

” மிஸர்ஸ். தேவா எழுந்திரிங்க ” என்று எழுப்பியவனையும் இழுத்து அணைத்து கொண்டு அவள் தூங்க…

 

” நீ சரிப்பட மாட்டே ” என்று அவளை தூக்கியவன், அவனின் ஸ்டிரஸ் பஸ்டர் ரூமில் சென்று இறக்கி விட்டான். 

 

இன்னும் சரியாக தூக்கம் கலையாமல் அவன் விட்டதும் அவன் மேலே சாய்ந்து கொண்டு கண்களை கசக்கிக் கொண்டே பார்த்தவள் ” எதுக்கு இங்கே கொண்டு வந்து விட்டீங்க? சன் டே கூட நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா ? ” என்று சிணுங்கி விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள். 

 

” தூங்குமூஞ்சி முழீச்சிக்கோடி ” என்று அவள் கன்னத்தை தட்ட…

 

அவனின் தட்டலை அனுபவித்துக் கொண்டு ” அப்படித்தான் அப்படியே ஒரு தாலாட்டு பாடுங்க.. ” என்றவளை, பார்த்து ” நீ தாலாட்டு பாட வேண்டிய வயசுல உனக்கு பாட சொல்றீயா ? உன்னை ” என்றவன் அவள் கன்னத்தை அழுந்தி கடிக்க.. தூக்கக் கலக்கத்தில் இருந்தவள் அலறி முழித்தாள்.

 

” யூ .. யூ.. ” என்று அவனைத் துரத்த, ஓடி கொண்டே அவன் தன் கையிலுள்ள ரிமோட் மூலம் அவன் ஸ்டிரஸ் பஸ்டர் சவுண்ட் சிஸ்டத்தில் பாட்டை அலற வைத்தான்.

 

ஓட்டத்தை நிறுத்தி தன் இரு காதுகளை பொத்திக் கொண்டு ” ஆரம்பிச்சுட்டான்யா.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டான் ” என்று கத்தினாள்.

 

மெல்ல அவள் அருகில் வந்தவன் அவள் பின்பக்கம் நின்று ஒரு கையால் அவளை கை பற்றி சுழற்றி விட, அவள் சுழன்று தன்னை சுதாரித்துக் கொண்டு நிற்கும் முன் மறு கையால் அவள் இடுப்பை அணைத்துக் கொண்டு அறையில் அலறிய பாடலுக்கு ஏற்றார் போல் தன் நடன அசைவுகளை அசைத்தவன் கூடவே அவளையும் தன் கூடவே தன் நடனத்துக்குள் மெல்ல மெல்ல கொண்டு வந்தான். முதலில் விழித்தவள் பின் அவன் எண்ணம் புரிந்து தன் பழுப்பு பார்வையில் குறும்பை பூட்டி , அவனைப் பார்த்து தன் இரு உதடுகளை குவித்து வைத்து ஒரு பறக்கும் முத்தத்தை அவனுக்கு அனுப்பினாள். பின் அவன் எண்ணம் புரிந்து அவன் லயதிற்கும் பாடலின் தாளத்திற்கும் ஏற்ப தன் உடலை வளைத்து நெளித்து ஆடத் தொடங்கினாள். அந்த முரட்டுக் கைகள் அவளின் இடையை வளைத்து அணைத்து தன்னை நோக்கி இழுத்து என பல லாவங்களை கையாண்டது. அவளும் அவனுடன் குழைந்தும்.. நெளிந்தும்.. இணைந்தும் விலகியும்.. அவனுடன் நடனம் ஆடினாள். அவனோ சல்சா ஜாஸ் என்று மேற்கத்திய நடனங்களை பயின்றவன். இவளோ நம்மூர் பரதநாட்டியத்தை பயின்றவள். இதற்கு முன் இருவரும் இணைந்து ஆடியதும் கிடையாது, ஆனால் இவர்களின் இந்த லாவகமும் லயமும் தாளத்திற்கு ஏற்ப இணைந்தும் பிரிந்தும் அவர்கள் ஆடியது அவர்களின் தேர்ந்த நடனப் பயிற்சியை கட்டியம் கூறியது.

 

ஒருவரின் உடலோடு ஒருவரின் உடல் உரச.. அவர்களின் உயிரோடு உயிர் கலக்க அந்த நிமிடங்களை அவர்கள் ஆழ்ந்து அனுபவித்தனர். அவனின் பரந்து விரிந்து மார்புகளில் அவளின் மென்மைகளின் ஸ்பரிசம் உணர.. அவன் கைகளில் அவளின் மெல்லிய இடையின் மென்மையும்.. வழவழப்பும்.. உணர அவனின் ஒவ்வொரு அணுவும் அவள்மேல் பித்தாகி அவனை வீழ்த்திக் கொண்டிருந்தது. இது ஏதும் அறியாத அவள் மேலும் மேலும் அவனோடு இணைந்து ஆடி தன் ஸ்பரிசத்தால்… விழி வீச்சால்.. அவளின் மென்மையால்.. தேவாவின் பித்தனாக்கி கொண்டிருந்தால் தன்னையறியாமல்… 

 

முதலில் நடனத்தைக் ஆரம்பித்தது என்னவோ தேவா தான், ஆனால் நேரம் செல்ல செல்ல அவனை தனக்குள் ஆட்கொண்டாள் வைஷூ. அவள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் அவன் நடன அசைவுகள் மாற, முற்றிலும் அவள் வசமனான் தேவா..

 

அவனின் மென் தொடுகை மெல்ல மெல்ல வன்மையாக மாறி அவனின் வேட்கையை உணர்த்தினான். அதை உணர்ந்து கொண்டவளோ அதைத்தன் ஸ்பரிசத்தில் ஏற்று உள்ளத்தில் குழைத்து கண்களில் காட்டினாள். கரைபுரண்ட காதலில் ஆக்டோபஸ் போல தன் விழி வீச்சுகளால் தனை இழுக்கும் அந்தப் பாவையை கண்டவன் தாங்க மாட்டாமல் இறுக அணைத்து தன் முத்தங்களால் கண்களை தண்டித்தான்.

 

அடுத்து இதழ் நோக்கி குனிந்தவனை தன் கை வைத்துத் தடுத்தாள். 

 

” ஐ டோண்ட் லைக் டர்ட்டி கிஸ் ” என்று என்று கூறி அவனை தள்ளி விட்டு ஒரே ஓட்டமாக அறையை நோக்கி ஓடிவிட்டாள். அவளால் மட்டுமே எழுப்பப்படும் அவ்வுணர்வுகளை அடக்க மாட்டாமல் தன் தலையை கோதி சரி செய்தான் தேவா. 

 

திங்கட்கிழமை காலை அனைவருக்கும் பரபரப்புடன் விடிய தன் அலுவலக அறையில் இரு கைகளால் தன் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தான் நந்தன். தேவாவை பழி வாங்க என்று வந்துவிட்டான் தான் ஆனால் இந்த பைனான்ஸ் அவனை கொஞ்சம் இல்ல ரொம்பவே குழப்பியது. ஏதோ வைஷூ புண்ணியத்தில் புரிந்து இருந்த கொஞ்ச நஞ்சமும் அவர் மேனேஜர் விளக்கிய பேலன்ஸ் ஷீட்டில் மொத்தமாக அடி வாங்கியது. அவரை அனுப்பிவிட்டு தான் அவ்வாறு அமர்ந்து இருந்தான். அவனின் நடவடிக்கைகளை தன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தார் மனோகர் சிசிடிவி கேமரா உதவி கொண்டு.. முட்டி மோதி பயல் வரட்டும் என்று அமைதியாகவே…

 

சிறுது நேரம் எதோ யோசனையுடனே இருந்தவன் , பின்பு தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தலையை சரி செய்தவன் மேனேஜர் விட்டு சென்ற ஃபைலை ஆழ்ந்து நோக்க ஆரம்பித்தான். தேவாவைப் பழிவாங்க வேண்டும் என்று தீவிரமான எண்ணத்தில்.. வெறியில்…

 

தன் வாழ்வை அழித்து தன்னிடமிருந்து வைஷூவை பிரித்து விட்டான் என்ற எண்ணத்தில். ஆனால் அவன் மறந்தது வைஷூவின் மனதை.. ஒரு கை தட்டினால் ஓசை எங்கனம் வரும்.. தேவா அவளை மணக்கா விட்டால் நிச்சயம் அவளை தன் பால் ஈர்த்து இருப்பான் என்று அதீத நம்பிக்கை நந்தனுக்கு. அவன் அறியாதது அந்த தேவாவே அவளின் மனதை வெல்ல முடியாமல் அவள் ஆட்டம் காட்டுகிறாள் என்பது தான்.. 

 

தேவாவின் குடும்பம் வரவேற்பிற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்க.. தேவா தம்பதியினர் தங்கள் புது பைனான்ஸ் புராஜகட்டுக்கு தகுந்த நம்பிக்கையான ஆட்களையும் அவர்களின் தகவல்களையும் திரட்டி முனைப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

 

 

 அதேநேரம் நந்தன் தங்கள் தொழிலின் ஆதி அந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்று உணர ஆரம்பித்தான். இவ்வளவு நாள் பணம் செலவழிப்பது இலகுவாக இருக்க.. அவனுக்கு அதை சம்பாதிக்கும் வழிமுறை சற்று விழிபிதுங்க செய்தது. தன் இதே வயதில்தான் தேவா தொழிலில் அசுர வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருந்தான் என்ற தகவலும் அவன் மூளையின் மெடுல்லா அப்பல்லங் கேட்டாவில் பதிந்து அப்போப்போ எட்டிப்பார்த்து அவனை இம்சித்தது நீ இப்போதான் தொழிலை கற்க ஆரம்பிக்கிறாய் என்று.. 

 

ஒரு வாரம் கடந்த நிலையில் நந்தன் தங்கள் தொழில் சூட்சுமங்களை புரிந்து கொண்டிருக்க.. அங்கே வைஷுவோ அடுத்த நிலையை எட்டி கொண்டிருந்தாள். அவளின் திட்டத்தை செயலாக்கி கொண்டிருந்தாள் அவளின் மன்னனின் உதவி கொண்டு கூடவே பாசம் மலரும்.. அதாங்க கார்த்திக்.

 

மற்றவர்களை விட இவர்களின் வட்டி விகிதம் குறைவாக இருக்க அதுவும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு இன்னும் இவர்கள் சலுகைகள் செய்து கொடுக்க மற்ற பைனான்ஸ் குழுமங்களில் பெருத்த சலசலப்பு. அதுவும் தீனா குரூப்ஸ். தீனாவிற்கு எப்போதும் தேவாவின் வளர்ச்சியில் மிகுந்த பொறாமையும் காழ்புணர்ச்சியும் உண்டு. இதை காரணம் காட்டி மற்ற குழுமங்களின் விரோதத்தை தேவாவிற்கு சம்பாதித்துக் கொடுக்க எண்ணி அவர்கள் சங்க கூட்டத்தை அவன் அவசரமாக கூட்டினான். 

 

அன்று சங்க கூட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் வந்து அமர்ந்து இருக்க, தேவா தன் மனைவியுடன் உள்ளே நுழைந்தான். அவன் மனைவியுடன் வந்ததை யோசனையுடன் அனைவரும் பார்த்தனர். யாரும் தங்கள் குடும்ப உறுப்பினரை இக் கூட்டத்திற்கு அழைத்து வந்ததில்லை. தீனாவும் பார்த்துக் கொண்டிருந்தான் இருந்தான் முதலில் குழப்பமாக. பின்பு இதை வைத்து தேவாவை மட்டம் தட்ட உள்ளுக்குள்ளேயே எண்ணிக் கொண்டிருந்தான் வன்மமாக. 

 

நந்தனும் வந்திருந்தான், கோபமாக இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். இவன் பெரிய காதல்மன்னன் பொண்டாட்டிய விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டான்.. எங்க போனாலும் கூடவே கூட்டிட்டு போவானா… என்று உள்ளுக்குள் குமைந்துவாறு..

 

சங்க தலைவர் அவ்வசர கூட்டத்திற்கான காரணத்தைக் கூறி விளக்கம் தருமாறு தேவாவை கேட்க.. மற்ற உறுப்பினர்களை ஆழ்ந்து நோக்கி தன் தரப்பை கூறும் முன், எழுந்த தீனா

 

” தலைவரே.. முதல இந்த கூட்டத்திற்கு ஏன் அவர் மனைவியை அழைச்சிகிட்டு வந்தார்னு கேளுங்க.. இது என்ன லவ்வர்ஸ் பார்க் ஆஹ் ” என்று நையாண்டி செய்ய… அவன் மட்டுமே அதற்கு சிரித்தான். அங்கு உள்ளவர்கள் தேவாவை எதிர்த்து கண் சிமிட்ட கூட அஞ்சுவார்கள். தேவ்ஜி யைப் பகைச்சிகிட்டா எங்க.. எந்த தொழில்ல எப்படி தன் பழியை காட்டுவான் என்று அந்த ஆண்டவனுக்கு கூட தெரியாது என்ற உண்மை அவர்களிடம் பிரபலம். 

 

தீனாவை பார்த்து ஒரு வன்ம புன்னகையை உதிர்த்தவன், பின் தலைவரை நோக்கினான். அவன் தந்தை விட்டு தந்ததினால் மட்டுமே அங்கே கொழுவீற்றிருக்கும் அவர், தன்மையாகவே தேவாவை பார்க்க, “மீட் அவர் ராஜன்ஸ் பைனான்ஸ் குரூப் நியூ எம்.டி மிஸ்ரர்ஸ். வைஷாலி தேவி தேவேஸ்வர ராஜன் ” என்று அவர்களின் கேள்விக்கான பதிலை கூறினான். 

 

நந்தன் அதிர்ந்தானா.. வியந்தானா.. வைஷாலி பைனான்ஸ் குரூப் நியூ எம். டி என்பது அவனுக்கு அதிர்ச்சி… அதை சாத்தியமாக்கிய தேவாவை நினைத்து வியப்பு.. வைசாலி கொண்டு தன்னை லாக் செய்ய நினைக்கிறானோ என்ற அவன் புத்தி சாதுர்யத்தை நினைத்து கடுப்பு.. 

 

இம்முறை வைஷாலி எழ, அவளுக்கு கரவொலி எழுப்பி தங்கள் வாழ்த்துக்களை அனைவரும் தெரிவிக்க, நந்தனும் அதில் அடக்கம். 

 

” வணக்கம்… வெல், உங்கள் குற்றசாட்டுக்கான எங்கள் விளக்கம், நாங்க அதிக வட்டி.. கந்து வட்டி.. மீட்டர் வட்டி வாங்குறோமா என்ன.. இதுவரை அது போல செய்தவர்களுக்கு எல்லாம் நீங்க இப்படி தான் கூட்டம் கூட்டி, விளக்கம் கேட்டீங்களா.. இல்லைல… அதற்கு உங்கள் சுண்டு விரல் எதிர்ப்பு தான் காட்டுனீங்களா.. இல்லைல.. ஆனா ஒரு நல்ல விசயம் நாங்க செய்ததுக்கு இப்படி ஒரு கூட்டம்.. என்று விளாச ஆரம்பித்தவளை கூட்டம் ஆவென பார்த்தது துளி எதிர்ப்பு இல்லாமல்.. 

 

” எங்களுக்கு வர லாபம் போதும் என்று தான் நாங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிச்சி இருக்கோம். எல்லோரையும் நாங்க பின் பற்ற சொல்லல.. ஆனா செய்றவங்களை தடுக்காதீங்க.. ஐ ஹவ் ஆல் த டீட்டைல்ஸ் ஆப் எவரிபடி ஹியர் போத் லீகள் அண்ட் இல்லீகள் ஆக்டிவிட்டீஸ் இன் பைனான்ஸ்.. ஷல் வீ டிஸ்கஸ் ரைட் நவ்? என்று அழுத்தமாக குரலில் அடுத்த குண்டை போட, அதிர்ந்தது ஒட்டு மொத்த சங்கமும். பெண் தேவ்ஜி யை பார்த்த ஃபீல் அனைவருக்கும். பின் ஏன் வாய் திறக்க போகிறார்கள், தீனா உட்பட..

 

நந்தன் மிரண்டு போய் தான் அமர்திருந்தான் அவளின் அதிரடியில்.. தேவாவின் அழ முடியாதபடி அடிப்பா என்று வார்த்தை அவன் காதில் ஒலிக்க..

பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா என்றது அவன் மனசாட்சி… 

 

மனைவியின் பேச்சை ரசித்த வண்ணம் தேவா அமர்ந்திருந்தான். தீனா என்ற குள்ள நரி அவர்கள் வாழ்க்கையில் விளையாட போவதை அறியாமல்…

 

 

4 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 22”

Leave a Reply to Deepthi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top