6- புள்ளி மேவாத மான்
காதலிப்பவர்களை விட காதலிக்கப்படுபவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அந்த வகையில் தனஞ்ஜெயன் அதிர்ஷ்டசாலி. தினம்தினம் எழிலின் காதல் மழையில் அவனின் வாழ்க்கை ரம்மியமாக இருந்தது.
இரவு எழில் போன் செய்தவள் ” மாமா என்ன பண்ணறிங்க சாப்பிட்டிங்களா …”
“இல்லடி மதியம் சாப்பிட்டதே பசிக்கல… பழம் மட்டும் சாப்பிட்டேன்”
“ஓ… சரிசரி மாமா நான் கொடுத்த கிப்ட் பிடிச்சிருந்ததா…”
“நிறையா கொடுத்த எதை சொல்லற” என்றான் வந்த சிரிப்பை வாய்க்குள் அதக்கி கொண்டு
“மாமா டிரஸ் வாட்ச் இதுல எது பிடிச்சுது”
“அதெல்லாம் விட நீ கொடுத்த ஜீஸ் தான் சூப்பரா இருந்துச்சு ” என்றான் கள்ளத்தனத்துடன்
“மாமா நான் எங்க ஜீஸ் கொடுத்தேன் நேத்து பாயாசம் தான் செஞ்சோம் ஜீஸ் இல்லையே”
“நீ கொடுக்கலடி நானா எடுத்துக்கிட்டேன். அதுவும் இரண்டு தடவை”
“மாமா ஒன்னும் புரியல…புரியற மாதிரி சொல்லுங்க”
சரியான மாங்கா மடச்சியா இருப்பா போல தனா உன் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் என நினைத்து கொண்டே , ராகமாக உல்லாசமான குரலில்
“அது…. அது… காலைல… கிச்சன்ல.…. உன்…..வாய்வழியா ….நான்….ஒரு ஜீஸ் குடிச்சேன்ல…. அது தான்”
“ச்சீ போங்க மாமா”
“அதைவிட போகிற அவசரத்தில் கொடுத்த ஜீஸ் தான் செம டேஸ்ட் “என சப்பு கொட்டினான்.
“ம்ம்ம்ம்…..மாமா…மா…ஆ..” சிணுங்கினாள். அவள் சிணுங்களில் இவன் கிளர்ந்தெழுந்தான்
நடு இரவு வரை அவனின் கொஞ்சல்களும் இவளின் சிணுங்கல்களும் மட்டுமே . இவர்கள் பேசி பேசிக் களைத்தார்களோ இல்லையோ போன் இரண்டும் களைத்து போய் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.
தனஞ்ஜெயனின் பிறந்தநாளுக்கு பிறகு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் , தினமும் போனில் பேசி களித்தாலும் தனஞ்ஜெயனுக்கு எழிலரசியை நேரில் பார்க்கவேண்டும் என ஆசை கொண்டான்.
அந்த வார இறுதியில் ஞாயிறு அன்று எழிலை பார்க்க வீட்டிற்கு வருகிறேன் என முத்துகுமாரிடம் தகவலாக தான் தெரிவித்தான். ஆமாம் தகவலாக மட்டுமே எங்கே அனுமதி கேட்டால் வேண்டாம் என சொல்லிவிடுவாரோ என அஞ்சி இவ்வாறு சொல்லி இருந்தான்.
காலையில் பத்துமணியளவில் வந்தான். வரும்போது அவளுக்கு மல்லிகை பூ , சுவீட் , சாக்லேட் பார் என வாங்கி வந்தான்.
சிறிது நேரம் எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தான். யாரிடம் பேசினாலும் அவன் பார்வை எழிலின் மீதே இருக்க அதை பார்த்த
கற்பகம் முத்துக்குமாரிடம் கண் ஜாடை காட்ட தமிழரசுவை கூட்டிக்கொண்டு ஏதோ வேலை இருப்பதாக சொல்லி வெளியே கிளம்பிவிட்டார். கற்பகமும் மதிய உணவு தயாரிப்பதாக சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.
எதிர் சோபாவில் அமர்ந்திருந்த எழிலை தன் அருகில் வந்து அமருமாறு கண்களால் அழைப்பு விடுத்தான். சின்னசிரிப்புடனே சிறிது இடைவெளி விட்டு அவனருகில் அமர்ந்தாள்.
“ப்ச் கிட்ட வந்து உட்காரு” என்றான்.
அவள் விளையாட்டாக மாட்டேன் என்று தலையசைக்க நீ வராட்டி என்ன் நான் வருகிறேன் என அவன் நெருங்கி அமர்ந்து கொண்டான்.
“அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க. தள்ளி உட்காருங்க மாமா”
“என் மாமியார் தங்கமானவங்க மருமகனோட மனசறிஞ்சவங்க அது எல்லாம் தப்பா நினைக்கமாட்டாங்க”
அவளின் கைகளை பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தவன் சிறிது நேரத்தில் பேசும்போது அவள் முகம் காட்டும் வர்ணஜாலங்களில் தன்னை தொலைத்தவன் சுற்றும் முற்றும் யாரேனும் இருக்கிறார்களா என பார்த்தவன் சட்டென்று அவள் இதழ்களில் பட்டும் படாமல் முத்தம் ஒன்றை வைத்தான்.
அவள் என்னவென்று உணரும் முன் விநாடி நேரத்தில் நடந்ததால் இப்ப என்ன பண்ணினான் என யோசித்தாள். ஆனால் தென்றல் போன்ற தீண்டல் அவள் உதடுகளை பரிச்சித்ததால் அவளுக்கு நடந்ததை கட்டியம் கட்டி கூறியது.
உதடுகளின் குறுகுறுப்பில் உதட்டை மடித்து கடித்து தலை குனிந்து அமரந்திருந்தாள். அவளின் வெட்கத்தை ரசித்தவாறே அவளின் காதருகே குனிந்து கிசுகிசுப்பாக “சும்மா சீண்டலுக்கு வெட்கப்பட்டா எப்படிமா…நல்லா நச்சுனு கொடுத்திருந்தா…” என்றான் .
“போங்க மாமா எப்ப பாரு இப்படியே பேசிகிட்டு நீங்க ரொம்ப கெட்ட பையனா மாறிட்டிங்க”
“இதுக்கே கெட்ட பையனா கெட்ட பையன் என்னன்ன செய்வான் தெரியுமா” அந்த என்னன்ன என்பதை அவள் காதுகளில் ரகசியமாக சொல்ல ,
அவன் சொல்ல சொல்ல அவள் முகம் வெட்கத்தில் சிவந்து விட,
“ச்சீ அசிங்க அசிங்கமா பேசிகிட்டு” என அவனின் தோளில் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.
அடித்தவளின் கைகளை பிடித்தவன் “அதெல்லாம் அசிங்கமா…. அம்மா…. பரதேவதை… உன்னை கட்டி…. நான் உன் கூடகுடும்பம் நடத்தி….. பிள்ளகுட்டி பெத்து…… டேய் தனா….உன்பாடு பெரும்பாடு தான்…..” என சலித்து கொண்டான் . அவன் பேச்சில் அவளுக்குள் பெரும்காதலை கிளர்ந்தெழச் செய்ய அதனால் ஏற்பட்ட நாணம் என கலவையான உணர்வில் இருந்தாள.அவனருகே இருக்கமுடியாமல் கூச்சம் தடுக்க..…
“மாமா…ஆ…இப்படியே பேசிகிட்டு இருந்திங்க நான் எந்திருச்சு போயிடுவேன்” என ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டினாள்.
பட்டென்று அந்த விரலைப் பிடித்து மெல்லக் கடித்தான்.
விரலை உருவிக்கொண்டு அவனை கண்களாலேயே குறும்பாக ஒரு செல்ல மிரட்டல் விடுத்து சிரித்தவாறே உள்ளே சென்றுவிட்டாள் . சப்பிக் கொண்டிருந்த குச்சி ஐஸை பிடுங்கி கொண்டதில் அழும் குழந்தையாக முகம் வாடிப் போனான்.
சிறிது நேரத்தில் முத்துக்குமார், தமிழரசன் வரவும் தனாவுடன் அமர்ந்து மதிய உணவு கற்பகமும் எழிலும் பரிமாற உண்டனர் .
அதிலும் தனஞ்ஜெயன் எழிலை தண்ணீ கொடு சாதம் வை என இப்படி ஏதாவது கேட்டுக் கொண்டே தன் பக்கத்தில் நிற்க வைத்துக் கொண்டான் .
சாப்பிட்டதும் முத்துகுமாரிடம் தமிழரசனிடமும் பேசிக் கொண்டு இருந்தவன் சிறிது நேரத்தில் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டான் . இந்த தடவை எழிலின் முகம் பார்த்து புன்னகை முகமாகவே சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
அடுத்தடுத்த ஞாயிறுகளிலும் வந்தான் . முதல் வாரம் மட்டுமே அனுமதி கேட்டான் . அதற்கு பிறகு எழிலை பார்ப்பதும் பேசுவதும் தன் உரிமை என்பது போலவே நடந்து கொண்டான்.
முத்துக்குமாருக்கு இதெல்லாம் மனசுக்கு ஒப்பவில்லை என்றாலும் தன் ஆரூயிர் சிநேகிதனின் மகன் தன் மனதுக்கு மட்டுமல்ல தன் மகளின் மனதுக்கும் பிடித்த மருமகன் என்பதாலும் அமைதியாகவே இருந்து கொண்டார்.
கல்யாணம் ஒரு மாதம் என்ற நிலையில் பட்டு எடுக்கவும் மாங்கல்யம் வாங்கவும் இருவீட்டுப் பெரியவர்களும் நல்லநாள் குறித்திருந்தனர் . முன்பே எழில் சொல்லி இருந்தாள் .
“மாமா நீங்க வந்து தான் முகூர்த்தப்பட்டு நிச்சயப்பட்டு எல்லாம் இரண்டு பேரும் சேர்ந்து தான் செலக்ட் செய்யனும். கண்டிப்பா வரனும் ”
இரண்டு நாட்களாகவே திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தி கொண்டு இருந்தாள்.எழிலுக்கு தன் மாமனோடான தன் கல்யாணத்தில் ஒவ்வொன்றையும் மனம் நிறைய சந்தோஷத்துடன் அதை அனுபவித்து செய்யவேண்டும் என்பது ஆசை .
ஆசை என்பதைவிட கனவு என்று சொல்லலாம்.
பட்டு எடுப்பதற்கு முன்தினம் மாலை அவர்கள் தொகுதி தொழில்துறை மந்திரியை அவருடைய சென்னை அலுவலகத்தில் மறுநாள் வந்து சந்திக்க சொல்லி அவரது பி.ஏ அழைத்து கூறினார். ஏற்கனவே ஒருமாதத்திற்கு முன்பே தனது தொழிலை விரிவுபடுத்துவதற்கு பெர்மிட் கேட்டு இருந்தான் . அதற்காக நேரில் பேசவதற்கு மந்திரி சந்திக்க வர சொல்லி இருந்தார்.
திருமணத்திற்கும் அழைக்க வேண்டியிருப்பதாலும் மந்திரியை சந்திக்க கொடுத்த நேரத்தை தவறவிட்டால் மறுபடியும் மந்திரியை சந்திப்பது சிரமம் என்பதாலும் அவனுக்கு போயே ஆக வேண்டிய கட்டாயம். பெரியவர்கள் குறித்த நாளை மாற்றவும் முடியாது. எழிலிடம் எப்படி சொல்வது என தயக்கம்.
அவனுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்பவள் இதுவரை தனக்கென எதுவும் கேட்டதில்லை. இதை தான் அவள் முதல்முதலாக கேட்டது. அதை மறுக்க வேண்டி உள்ளதே என வருத்தப்பட்டான்.
சுந்தரத்திற்கு போன் செய்து ” சித்தப்பா நான் நாளைக்கு மந்திரியைப் பார்க்க சென்னை கட்டாயம் போகவேண்டும் . நாளைக்கு தான் வர சொல்லி இருக்காங்க . நீங்க எல்லாம் பார்த்து செஞ்சிருங்க… எழில் வருவா அவளுக்கு பிடித்த மாதிரி பட்டு எடுத்துருங்க. நான் நாளைக்கு கிளம்பும் முன் பணம் கொண்டு வந்து கொடுக்கறேன்”
“பணத்துக்கு என்ன அவசரம் தனா நான் பார்த்துக்கறேன் நீ நல்லபடியா போயிட்டு வா . அப்புறம் பணம் வாங்கிக்கறேன்”
“இல்ல சித்தப்பா எழிலுக்கு செய்யும் எதுவும் என் பணமாக இருக்கனும்னு நான் ஆசைப்படறேன். நான் காலைல வந்து கொடுக்கறேன்”என கூறி அழைப்பை துண்டித்தான்.
அதை அவளிடம் சொல்வதற்கு மிகவும் சங்கடப்பட்டு போனான்.
வழக்கம் போல் இரவு தன் மாமனை போனில் அழைத்தவள் .
“மாமா நாளைக்கு நீங்க நான் எடுத்து கொடுத்த பேண்ட் சர்ட்ல தான் வரனும். உங்க பிஸ்தா கலர்க்கு தகுந்த மாதிரி நானும் பிஸ்தா கலர்ல சில்க்காட்டன் சேரில வரேன்”
மிகவும் தயக்கத்துடன் “எழில்…. நான் ஒன்னு சொல்வேன் கேட்பியா..”
“சொல்லுங்க மாமா உங்க பேச்சுக்கு என்னைக்கு நான் மறுப்பு சொல்லியிருக்கேன்”
“என் சூழ்நிலை அப்படி அமைஞ்சிடுச்சு”
“ம்ம்ம்”
“நான்.. நாளைக்கு…. மந்திரியப் பார்க்க சென்னை போகனும்”
சுரீரென்று வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு “அதுக்கு”
“இல்லடா நாளைக்கு தான் டைம் கொடுத்து இருக்காங்க அதனால..… என்னால வரமுடியாது . நீ போய் உனக்கு பிடிச்ச மாதிரி எடுத்துகிட்டு வாடா”
“அப்படினா உங்களுக்கு வசதிப்படற நாள்ல எடுத்துக்கலாம்” என்றாள் பட்டென்று
“எப்படி குறித்த நாளல மாத்த சொல்லி பெரியவங்கிட்ட சொல்றது அது அபசகுணமா நினைப்பாங்கடா நீ போயிட்டு வா”
அவன் வரவில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட அது வரை அடக்கியிருந்த கோபத்தை கிளறிவிட”நீங்க வரலைனா நானும் போகலை மாமா அவங்களேயே பார்த்து எடுத்துட்டு வரச் சொல்லிருங்க” என பட்டென்று போனை வைத்துவிட்டாள்.
அவன் மீண்டும் மீண்டும் அழைத்தும் அவள் எடுக்கவில்லை. ஒருகட்டத்தில் போனை சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டாள் . அவளிடம் இவ்வளவு கோபத்தையும் பிடிவாதத்தையும் எதிர்பார்க்கவில்லை.
அவனுக்கு தெரிந்த எழில் அன்பானவள். என்றும் மாறா சிரிப்புடன் வளைய வருபவள். எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்பவள். அவளின் கோபம் அவனை அதிர வைத்தது.
அவளின் கோபத்தால் இவன் மனம் அமைதியின்றி தவித்தது. அவள் காட்டும் முதல் கோபம் அல்லவா என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. நடுஇரவு வரை யோசித்தவன் விமானத்தில் செல்லலாம் என முடிவு பண்ணி கோவைல இருந்து சென்னைக்கு அடுத்து இருக்கும் விமானத்தில் டிக்கெட் புக் செய்தான்.
உடனே தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு நேராக சுந்தரம் வீட்டிற்கு சென்றவன் அவரை போனில் அழைத்தான். அழைப்பை ஏற்ற அவர் பதட்டத்துடன் “என்னய்யா இந்த நேரத்துல….” என்றார்
“சித்தப்பா பதட்டப்படாதிங்க நான் நம்ம வீட்டுவாசலில் தான் நிற்கிறேன் யார்கிட்டயும் எதுவும் சொல்லாம நீங்க மட்டும் வெளிய வாங்க” என்றான்.
ஐந்து நிமிடத்தில் வெளி கேட்டை திறந்து வெளியே வந்தவர்
“என்னய்யா இந்த நேரத்துல கிளம்பிட்ட… காலைல தான போறதா சொன்ன… முதல்ல உள்ள வா” என அழைக்க அவரை பின் தொடர்ந்து சென்றவன் திண்ணை வாசலிலேயே நின்று கொண்டு
“சித்தப்பா நான் இப்ப பிளைட்ல சென்னைக்கு போறேன். போயிட்டு எவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்க முடியுமோ முடிச்சிட்டு மதியத்திற்குள் கோவைக்கு வந்திடுவேன் . நீங்க மற்றவர்களுக்கு ஜவுளி எடுங்க . நான் வந்தவுடன் எனக்கும் எழிலுக்கு எடுத்துக்கலாம்”
“அது உங்களுக்கு நல்ல நேரத்துல எடுக்கனும்னு நேரம் குறிச்சி கொடுத்தாரு ஜோசியர் அதான் எப்படினு எனக்கு தெரியல”
“சித்தப்பா ஜோசியர்கிட்ட நாளைக்கு உள்ள எல்லா நல்ல நேரமும் குறிச்சி வாங்கிடுங்க.நான் எப்படியும் சாயந்திரத்துகுள்ள வந்திடறேன்”
“தம்பி மங்கல்யம் காலைலயே எடுக்கனும். இறங்கு முகத்துல வாங்ககூடாதுய்யா”
“அப்படினா நீங்க மங்கல்யம் குண்டு காசு எல்லாம் என்ன தேவையோ வாங்கிடுங்க மாங்காய் தாலிக்கொடி வாங்க வேண்டாம். அது அம்மாவுது இருக்கு”
சரி என்றவரிம் இருபதைந்து இலட்சம் கையில் கொடுத்தான்.
“எதுக்குய்யா இவ்வளவு தொகை”
“எல்லாருக்கும் நல்லவிலையில் உங்களுக்கு திருப்திபடற மாதிரி எடுத்துறுங்க . எழிலுக்கு கொஞ்சம் நகை வாங்கனும்னு நினைச்சேன் அதான். நீங்க வச்சிருங்க நான் சென்னை போயிட்டு நேரா கோவை தான வருவேன். இதை கையில வச்சுகிட்டு பயணம் பண்ணமுடியாது அதனால தான்” என்றான்.
“சரிய்யா எல்லோருக்கும் நான் சொல்லிக்கிறேன். நீ கிளம்பு”
“சரி சித்தப்பா பார்த்துக்குங்க நான் முடிந்த வரை சீக்கிரம் வந்திடறேன்”என சொல்லி கிளம்பிவிட்டான்.
அடித்து பிடித்து வந்து கோவை விமானநிலையம் வந்தவன் விமானத்தில் ஏறி சென்னை வந்தவன் கேப் புக் பண்ணி தான் வழக்கமாக தங்கும் ஹோட்டலில் அறை எடுத்தான்.
அறைக்கு வந்து ப்ரஷ்ஷாகி விட்டு படுக்கையில் சரிந்தவன் எழிலுக்கு அழைப்பு விடுத்தான்.இப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியில் தான் இருந்தாள்.
‘அம்மணி ரொம்ப கோபமாக இருக்கிறாங்க போலவே . எவ்வளவுக்கு எவ்வளோ அன்பா இருக்கறாளோ அவ்வளவுக்கு அவ்வளோ கோபமும் இருக்கும் போல பார்த்து தான் நடந்துக்கனும் இல்லைனா சேதாரம் அதிகமாக இருக்கும்’ என அக்மார்க் குடும்பஸ்தனாக யோசித்தான் .
யோசனையிலேயே ஒருமணி நேரம் கடந்திருக்க அதிலிருந்து விடுபட்டு மணியைப் பார்த்தவன் மந்திரியின் பி.ஏவிற்கு அழைத்தான்.
மந்திரி பொள்ளாச்சியை சேர்ந்தவர். ஒரு வகையில் உறவினரும் கூட அதனால் தனஞ்ஜெயனின் தந்தை ஊராட்சி தலைவராக இருந்ததால் அவருக்கு மக்களிடையை இருந்த மரியாதைக்காக நல்ல நட்புறவை ஏற்படுத்தி கொண்டார் . இப்போதும் தனஞ்ஜெயனிடமும் தன்னை தக்க வைத்துக் கொண்டார்.
அதனால் அந்த நேரத்தில் அவன் அழைத்த போதும் பேசினார். தன் நிலையை சொல்லி மந்திரியை காலையில் வீட்டிலேயே சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா எனக் கேட்டான்.
பி.ஏ “ஐயாவிடம் கேட்டுட்டு சொல்றேன்”என்றார். பொறுமையாக ஒருமணி நேரம் கழித்து அழைத்தவர் எட்டு மணிக்கு சரியாக வீட்டிற்கு வருமாறு கூறி அழைப்பை துண்டித்தார்.
இங்கு மலையனூரில் சுந்தரம் எல்லோரையும் கிளப்பி கொண்டு இருந்தார். குடும்பத்தினரிடம் “அவசர வேலையாக தனஞ்ஜெயன் சென்னை போயிருக்கான். நாம தான் போய் எடுக்கனும்”
“என்னப்பா அண்ணனில்லாம எப்படி…”என்றான் வெற்றி.
“அவன் ஒத்த ஆளா எத்தனைய பார்ப்பான்.அவனுக்கு நம்மள விட்டா யாரு இருக்கா நாம தான பார்க்கனும் போங்க போய் கிளம்புங்க” என சத்தமிட்டார்.
திலகவதி”தனா இல்லாம எழிலுக்கு பட்டு நகை எல்லாம் எப்படி பார்க்கறது” என்றார் தன் கணவரின் கோபமறிந்து பயந்தவாறே
“ஏன் இத்தனை பொம்பளைங்க இருக்கறிங்கள எடுக்கமாட்டிங்களா என் நேரமும் ஆம்பள கூடவே இருப்பானா வெளிய வேலவேட்டி பார்க்க வேணாம். பொழுதுக்குள்ள வந்திடுவான்.கிளம்பங்க முதல்ல”
உடனே முத்துக்குமாருக்கு அழைத்தவர் தனஞ்ஜெயன் சென்னை சென்று இருப்பதை சொல்லி “நாம தான் எல்லாம் பார்க்கனும் எழில கூட்டிக்கிட்டு சீக்கிரம் வந்திடுங்க”என சொல்லி போனை வைத்து விட்டு தன் வீட்டாள்களை விரட்ட சென்றார்.
எழில் வீட்டிலோ எழிலோ வரமாட்டேன் என பிடிவாதமாக குளிக்காமல் கூட அறையில் பிடிவாதமாக அமர்ந்து இருந்தாள்.முத்துக்குமார் கற்பகத்திடம் விபரம் சொல்ல.
“ஓஹோ அதான் விஷயமா… மாப்பிள்ளை இவகிட்ட இராத்திரியே சொல்லிட்டாரு போல அதான் முகத்தை தூக்கி வச்சிகிட்டு கிளம்பமா உட்கார்ந்து இருக்கா இவளை இருங்க வரேன்”
“பார்த்து பக்குவமா சொல்லி கூட்டிட்டு வா ரொம்ப திட்டாதே”என்ற முத்துகுமாரை கற்பகம் முறைத்துக் கொண்டே..
“அவருக்கு அவசர வேலை வந்திடுச்சு அதனால வரமுடியல.அவரு சூழ்நிலைய புரிஞ்சுக்காம இப்படி பண்ணுவாளா. கல்யாணத்துக்கு அப்புறம் அங்க போயி இப்படி பண்ணா அவரு எப்படி நிம்மதியா வேலை செய்வாரு யாருக்கு சம்பாதிக்கிறாரு உங்க மகளுக்கு தான அவருக்கும் இவள விட்டு யாரு இருக்கா இவ தான அவரை புரிஞ்சிக்கனும்”என கணவரிடம் கோபமாக பேசி விட்டு எழிலை தேடி சென்றார்.
“என்ன நினைச்சிகிட்டு இருக்க உன் மனசுல…. அவரு பொன்னே… பூவேனு தினமும் போன்ல கொஞ்சாருல அதான் திமிரு அதிகமாயிடுச்சு. என்ன முழிக்கற தினமும் பேசறது எல்லாம் எனக்கு தெரியும். ஆம்பளைகளுக்கு ஆயிரம் வேலை டென்ஷன் இருக்கும் அத புரிஞ்சு நடந்துகறது தான் நல்ல பொம்பளைக்கு அழகு. இப்ப கிளம்பி வர அங்க வந்து நாங்க சொல்லறத மட்டும் தான் கேட்கனும் மீறி ஏதாவது பண்ண நாலு அப்பு அப்பிபுடுவேன் பார்த்துக்க”என சத்தம் போட்டு குளிக்க அனுப்பி வைத்தார்.
ஒரு வழியாக குளித்து பிஸ்தா சில்க்காட்ன் சேலையில் தயாராகி வந்தாள்.அவன் அழைப்பான் என தெரிந்தே போனை அறையிலேயே விட்டுட்டு வந்தாள்.
கற்பகம்”போன் எடுத்துகிட்டயா மாப்பிள்ளகிட்ட ஒழுங்கா போன் பண்ணி நல்லவிதமா பேசி சமாதனமாகு போ போய் போனை எடுத்திட்டு வா” கோபமாக பேச போனை எடுத்திட்டு வந்தாள்.
இப்படியாக எல்லோரும் கிளம்பி நகைகடைக்கு வந்து சேர்ந்தனர்.முதலில் மாங்கல்யம் எடுத்தனர். பிறகு எழிலுக்கு நகை எடுக்க சொன்னார் சுந்தரம்.
எல்லா பெண்களும் சேர்ந்து இதைப் பாரு அதைப்பாரு என நகைகளைக் காட்டி சமாதானம் பண்ணினர்.ஒருவாறு நகைகளை பிடித்தே எடுத்தாள்.
எழுந்து குளித்து எழில் எடுத்து கொடுத்த உடையில் காலை உணவை உண்டுவிட்டு ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு சரியாக எட்டு மணிக்கு மந்திரியின் வீட்டில் இருந்தான்.
மந்திரி வந்திடுவார் உட்காருங்கள் என பி.ஏ கூறி அமரவைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார்.நேரம் கடந்து கொண்டே இருக்க மந்திரி வந்தப்பாடு தான் இல்லை. கேட்டால் குளிக்கிறார் சாப்பிடுகிறார் ஏதாவது காரணம் சொல்லினர்.
நகைகளை எடுத்து விட்டு ஜவுளிக்கடைக்கு வந்தனர்.சுந்தரம் பெண்களை பிடித்ததை எடுங்கள்.எழிலுக்கு எல்லோருக்கும் எடுத்தபிறகு எடுத்துக்கலாம் எப்படியும் தனா வந்துவிடுவான் பார்க்கலாம் என்றுவிட்டார்.
பெண்கள் சேலை செலக்ஷனில் மூழ்கி விட கற்பகம் மகளிடம் வந்து “ஒழுங்கா மாப்பிள்ளைக்கு போன் பண்ணி பேசு” மிரட்டி விட்டுசென்றார். காலையில் தாய் திட்டியதிலேயே குற்றவுணர்வில் இருந்தவள் உடனே தனாவிற்கு அழைத்தாள்.
பயங்கர டென்ஷனில் இருந்தவன் இவளின் அழைப்பு அவனுக்கு டென்ஷன் ரீலீப்பாக இருந்தது . அவன் அழைப்பை ஏற்றும் இவள் பிகு பண்ணிக் கொண்டு பேசாமல் இருக்க எப்பவும் எடுத்தவுடன் “மாமா”என்பவள் பேசவில்லை என்றாலும் தனா பேசினான்.
“சொல்லுடா எழில் கடைக்கு வந்துட்டியா நான் எப்படியும் ஈவ்னிங்குள்ள வந்துடுவேன்.உனக்கு பிடிச்சதை எடுத்து வை நான் வந்ததும் பைனல் பண்ணிக்கலாம்”என்க
இவளோ”இல்ல மாமா நான் சேலை செலகஷன் பண்ணும் போது வீடியோகால் பண்றேன் நீங்க பார்த்து சொல்லுங்க”
“எப்ப எடுப்ப எழில்”
“சுந்தரம் மாமா சொல்லறேனு சொல்லி இருக்காங்க நீங்க உங்க வேலைய எல்லாம் முடிச்சிட்டு பொறுமையாவே வாங்க”
சரி என சொல்லி அழைப்பை துண்டிக்கவும் மந்திரி வரவும் சரியாக இருந்தது.
மந்திரியிடம் தொழில் சம்மந்தப்பட்ட வேலைகளை பேசி முடித்து திருமணப்பத்திரிக்கையை தாம்பூலத்தோடு கொடுத்து முறையாக அழைத்து விட்டு உடனே கிளம்பிவிட்டான்.
நேராக விமானநிலையம் சென்றவன் அடுத்திருந்த விமானத்தில் உடனே கிளம்பி கோவை வந்தான். வந்தவன் சுந்தரத்திற்கு போன் பண்ணி எங்கு இருக்கறிங்க என கேட்டு கொண்டு யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம். நேரில் வந்து பேசிக்கலாம் என கூறிவிட்டான்.
சுந்தரத்திடம் பேசி முடித்ததும் அடுத்து எழில் வீடியோ காலில் வந்தாள். “மாமா இந்த சேலை எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்”
என முப்பதிற்கு மேலுள்ள சேலைகளை காட்டினாள்.
தனாவோ சேலையை பார்த்து சிரித்து விட்டான்”ஏண்டி கடைல இருக்கிற சேலை எல்லாம் எடுத்து வச்சிருக்க”
“அச்சோ மாமா கடைல நிறைய நிறைய இன்னும் இருக்கு இது கம்மி தான்”என்றாள்.
“மாமா இந்த பச்சை நல்லா இருக்கா….க்கூம் இந்த லோட்டஸ் கலர் நல்லா இருக்குல்ல சொல்லுங்க மாமா”
பின்னால் இருந்து அவள் தோளை தட்டியவன் “இவ்ளோ சேலைக்கு நடுவுல உட்கார்ந்து கொண்டு சொல்லுனா என்ன சொல்லறது”
தீடிரென தன்னருகே மாமன் குரல் கேட்கவும் சந்தோஷத்தில் அதிர்ந்து “மாமா” என சத்தமில்லாமல் வாய் அசைத்தவாறு பார்த்தவளை கன்னத்தில் தட்டி “என்ன சேலையை பார்க்கலாமா” என்றான்.
“சாப்பிட்டிங்களா மாமா”என்று கேட்கவும் இல்லை என தலை அசைத்தான். யாரிடம் ஏதாவது வாங்கி வர சொல்லலாம் என இவள் சுற்றியும் பார்க்க யாரும் இல்லை.
தனஞ்ஜெயன் வந்தவும் இவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி சாப்பிட செல்வதாக கூறி சென்றுவிட்டனர்.தனா அதை கூறவும் உடனே தன் அண்ணனுக்கு போன் பண்ணி
“டேய் அண்ணா எங்களுக்கு மாதுளை ஜீஸ் வாங்கிட்டு வந்து கொடுத்திட்டு போய் சாப்பிடு சீக்கிரமே வா” என்றாள் அதிகரமாக
எப்பவும் போல இப்பவும் அவள் காதலை கண்டு பிரம்மித்து நின்றான்.
அவளின் மோகமும் அவனே
அவளின் கோபமும் அவனே
அவளின் காதலும் அவனே
அவளின் வாழ்வும் அவனே
அவளுக்கு அனைத்தும் அவனாகினான்.
Super sis 💞