8 – தீக்கு தென்றலோடு மோகம்
8 – தீக்கு தென்றலோடு மோகம்!
ஈஸ்வர் சொன்ன மாதிரியும் ஆதிகேசவன் முடிவு செய்த மாதிரியும் நிச்சயத்துக்கு உண்டான வேலையெல்லாம் ரகசியமாக சோனு தலைமையில் நம்பகத்தனமாக ஆட்களை வைத்து செய்தார்கள். இது எதுவும் விமலாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.
அன்றைக்கு போக முடியாத டின்னருக்கு இன்றைக்கு போகலாம் என சம்ரித் முடிவு செய்து,”அம்ரீ… ஸ்வீட்டி…”என இழுத்தான்.
“என்ன கொஞ்சல் எல்லாம் பலமாக இருக்கு… என்ன விஷயம் சட்புட்னு சொல்லுங்க… எனக்கு தலைக்கு மேல இருக்கு…”
“என்கிட்ட பேசறது தவிர அப்படி என்ன உனக்கு தலைக்கு மேல வேலயிருக்கு…”
“அதுவா…”என யோசித்து,”அது வந்து எனக்கு மேக்கப் பண்ற வேலயெல்லாம் இருக்கு… “ என பொய்யுரைத்தாள்.
“என்னயவிடவா…” என்று கேள்வி எழுப்பினான்.
இவன் கேட்கும் கேள்விக்கு என்ன பதிலுரைப்பது தெரியாமல் முழித்தாள். தான் சொன்னது பொய் என எப்படி சொல்வது குழம்பினாள்.
“சொல்லு… என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழிக்கிறயா…” சரியாக நாடியைப் பிடித்துவிட்டான்.
“ஹீஹீ…” என சிரித்து வைத்தாள்.
“என்ன இளிக்கிற… எப்படி உண்மைய கண்டுப்பிடிச்சேன்னு… சொல்லு பார்க்கலாம்…”
தலையை சொரிந்தவாறே,”அதான் தெரியலையே…” என சமாளித்தாள்.
“பதில் சொல்ல தெரியாம ஒரு ஐந்து நிமிஷம் யோசிச்சல்ல… அதுவே சொல்லிடுச்சு… நீ பொய் சொல்றனு…”
உண்மையை கண்டுப்பிடிச்சிட்டான்னு… என்று பேசாமல் இருந்தாள்.
“ஜோக்ஸ் அப்பார்ட்… அன்னைக்கு டின்னருக்கு போகல… இன்னைக்கு போலமா…” என்றுக் கேட்டான்.
“ஓ… போலமே…”
“நான் என் கார்ல நேரா ஓட்டல் தாஜ் கொரமண்டலுக்கு வந்திடறேன். நீ உன் பைக்ல வந்திடு…”
“நம் இரண்டு பேரும் தனித்தனியா அவங்க வண்டில வரது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல… நீங்க வந்து என்னய கூட்டிட்டு போங்க…”
“வேண்டாம்… வேண்டாம்….” என வேகமாக மறுத்தான்.
“எதுக்கு இவ்வளவு பதட்டம்…”
“இல்ல… அன்னைக்கு மாதிரியே ஏதாவது எக்கு தப்பா ஆகி போச்சுனா… அதனால் நீ நேரா ஓட்டலுக்கு வந்திடு…”
“அதுக்காக நீங்க என்னய ஓட்டலுக்கு வர சொல்றிங்களே… நா என்ன சொல்லிட்டு வருவேன்.”
“ஏன் நாந்தான் உன்னய வர சொன்னேன்னு சொல்லு…”
“என் சித்தப்பா நீங்க வந்து கூட்டிட்டு போலாமே… என கேட்டால்…” என முடிக்காமல் இழுத்தாள்.
சற்று எரிச்சலுடன்,”சரி நான் வரேன்… இதே எங்க நாட்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டியதில்ல… நாம ஆசைப்பட்டால் கிளம்பி போயிடலாம்… இந்த நாட்ல தான் ஆயிரத்தெட்டு கேள்விக்கு பதில் சொல்லிட்டு அழைச்சிட்டு போகனும்…” என்று சலித்துக் கொண்டான்.
“ஓஹோ… அப்படி இருந்தால் உங்க நாட்லயே ஒருத்திய தேடி கண்டுபிடிச்சு காதலிச்சுருக்கலாமில்ல…” கோபத்துடன் சொன்னாள்.
“ஓகே… ஓகே…. நீ கோவிச்சுட்ட போல… நா வந்து கூட்டிட்டு போறேன்…” என கூறி சண்டையை முடித்து வைத்தான்.
சொன்னதுப் போலவே சம்ரித் அம்ரீதாவை வந்து கூட்டிட்டுப் போனான்.
சம்ரித் உறவினருக்கு பதினொருமணிக்கு நிச்சயம் என விமலாவை கூட்டிட்டுப் போய் அழைத்தன்ர். ஆனால் எல்லோருக்கும் ஆதிகேசவன் போன் செய்து ஒன்பது மணிக்கு நிச்சயம் என அழைத்தனர். இஷா வீட்டினர் பத்து மணிக்கு வந்து நிச்சயம் செய்துக் கொள்கிறோம் என ரகசியமாக விமலாவிற்கு தெரியப்படுத்தினர்.
எல்லா உறவினரும் எட்டு மணிக்கு கூட ஆரம்பித்தனர். ஆதிகேசவன், ஈஸ்வர் தம்பதியரும் வரவேற்பில் நின்றுக் கொண்டு வரவேற்றனர். விமலா பதினொருமணி நிச்சயத்துக்கு இப்பவே வந்துருங்காக போல நினைத்துக் கொண்டார்.
சம்ரித் காலையில் ஏழுமணிக்கே ப்யூட்டி பார்லருக்கு கிளம்பிப் போனான். அவன் ஏழுமணிக்கு கிளம்பிப் போகவும் விமலா கூட இஷா வீட்டினர் வரும் போது பிரச்சனை இருக்காது என நினைத்துக் கொண்டார்.
ஆனால் இஷா வீட்டினர் வருவதற்கு முன்பே கருணாகரன் தன் சொந்தபந்தங்களை அழைத்துக் கொண்டு சம்ரித் வீட்டுக்கு வந்திட்டார்.
அதற்கு முன்பே சம்ரித்தும் ப்யூட்டிபார்லர் போய் விட்டு மணமகன் போல காரில் இருந்து இறங்கினான். அதை பார்த்து, ஆதிகேசவன்,”அடடா… சம்ரித் மாப்பிள்ள போல ரெடியாயிட்டு வந்திருக்க… இப்பவே உன்ன மணப்பந்தல் உட்கார வச்சிடலாம் போல…”
அதை கேட்டவுடன் ஈஸ்வர் சிரித்து விட்டு,”அதற்கு அம்ரீதா வேண்டும்லப்பா…” என்றார். அப்பொழுது விமலா சற்று தள்ளியிருந்த பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
கடிகாரத்தில் டாண்னு மணி ஒன்பது அடிக்கும் போது, கருணாகரனின் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. ஆதிகேசவன்,”சொன்னது போல டைமுக்கு சம்மந்தி வந்திட்டார்.” என்றார்.
இதை எதிர்ப்பார்க்காத விமலா,’இவர் எப்படி நேராமாக வந்திட்டார்…’ என திகைத்து போய் பார்த்திருந்தார். உடனே இத முதல்ல யோகேஷிடம் சொல்ல வேண்டும் என்று பரப்பரத்தார். வாட்ஸ்ஆப்ல் இஷாவுக்கும் யோகேஷ்கும் கருணாகரன் வந்துவிட்டதாக மெசேஜ் தட்டிவிட்டார். இதை பார்த்ததும் யோகேஷீம் இஷாவும் அதிர்ந்தனர்.
கருணாகரனை நினைத்து அவர்கள் கோபமடைந்தனர். அதே கோபம் ஆதிகேசவன் மற்றும் ஈஸ்வர் மேலேயும் திரும்பியது.’இவர்கள் நேரமாக வர சொல்லாமயே அவன் வந்திருப்பான்.’என…
யோகேஷ்,”எல்லாம் கூட்டுசதி… எப்படியெல்லாம் நாடகம் நடத்தி நம்மள ஏமாத்தியிருங்காங்க…” என இரண்டு கைகளை சேர்த்தி பழைய படத்தில் நம்பியார் செய்வது போல இவரின் செயல் இருந்தது.
இஷா,”அப்பா… நாம போயி சண்ட போடலாம்…” என்று கூறினாள்.
“ஆமாம்… அப்படி தான் பண்ணனும்…” என்றார் யோகேஷ்.
அவர்கள் இருவரும் தங்கள் பேசுவதற்கு பத்து பேரை கூட்டிக் கொண்டு நேராக சம்ரித் வீட்டிற்கு வந்து இறங்கினர். முன் கூட்டியே விமலாவிற்கு தாங்கள் வருகிறோம் தகவல் தெரியப்படுத்திருந்தனர். விமலாவும் அவர்கள் வரவுக்காக வாசலிலேயே காத்திருக்கலானாள். யோகேஷீம், இஷாவும் வந்தவுடன் விமலாவும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.
அவர்கள் அனைவரும் ஈஸ்வரிடம் சென்று,”நாங்க உங்கள் எல்லோரிடம் நியாயம் கேட்டு வந்திருக்கிறோம்…”
கருணாகரன் ஏதோ சொல்ல வந்தார். உடனே விமலா,”நாங்க உன்கிட்ட பேச வரல… நாங்க எங்க குடும்பத்து ஆட்கள் பேசனும்… இதுல நீ தலையிடாதே…” என்று மரியாதை இல்லாமல் பேசினார்.
யசோதா,”யார்கிட்ட பேசறிங்கனு தெரிஞ்சு தான் பேசறிங்களா… மரியாதை கொடுத்தால் நல்லா இருக்கும்…” என சண்டைக்கு தயாரானார்.
விமலா,”தெரியுதும்மா… உங்களுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டியிருக்குது…” எடுத்து எறிந்துப் பேசினார்.
இருவருக்கும் சண்டைக்கு வருகிற மாதிரி, அதுவரை கோபத்தை அடக்கி வைத்திருந்த சம்ரித்,”கொஞ்சம் உங்க சண்டய நிறுத்திறிங்கறா…” என்று கத்தினான்.
ஆதிகேசவன் மனதில் கோபத்தில் குமறி கொண்டிருந்தவர்,”சம்ரித்… கொஞ்சம் இருப்பா… நா இவங்கிட்ட பேசிக்கிறேன்.” என்றவர் விமலா பக்கம் திரும்பி,”என்னம்மா… என்ன… எதுவாயிருந்தாலும் என்கிட்டபேசு… அதவிட்டு சம்மந்தி மரியாத இல்லாமல் பேசறது… அதை கேட்க வந்த சம்மந்தியம்மாகிட்ட சண்ட போடறதுலாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல…” என எச்சரித்தார்.
விமலா பம்மிக் கொண்டே,”மாமா… அது வந்து மாமா…” என எச்சில் கூட்டி விழுங்கினார்.
உடனே யோகேஷ்,”அட ஏம்மா… இவருக்கு எல்லாம் பயந்தா வேலயாகாது… எதுக்கும் துணிந்து கேள்வி கேட்கனும்… அப்படி கேட்டால் தான் நியாயம் கிடைக்கும்…” ஒரே போடாக போட்டார்.
ஆதிகேசவன் பார்வையால்,’உனக்கு அவ்வளவு தைரியம் வந்திருச்சா… என்னப்பா… என்கிட்ட கேளு…’ புறங்கையை கட்டிக் கொண்டு நின்றார்.
யோகேஷ் அவர் பார்வையை படித்தும், அதை சட்டை செய்யாமல்,”ஏன் உங்க பேரன் செஞ்சதுலாம் தெரியாம இந்த நிச்சயத்திற்கு ஏற்பாடுலாம் பண்ணியிருக்கிங்களா..”
“அப்படி என்னப்பா பண்ணினான்…”
“நீங்க எதுவும் தெரியாத மாதிரி கேட்கறிங்க பாருங்க… ஆஹா… என்ன ஒரு நடிப்பு… அச்சோ… இந்த நடிப்புக்கு எல்லாம் ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்…” என கேலியாக பேசினார்.
அதற்கு ஆதிகேசவன்,”விஷயத்த சொல்லாம… வீணான கதயெல்லாம் பேசிட்டு இருக்காதே…” என எச்சரித்தார்.
“உங்க பேரன் என் பொண்ணுகிட்ட ஒட்டி உறவாடதுனலாம் எல்லாம் பொய்யா… இல்ல நடிப்பா…”
ஆதிகேசவன்,”உன் பொண்ணு கூட வந்திருக்கால்ல… எங்க கூப்பிடு… அவகிட்டயே கேட்போம்…” என்றார்.
சற்று தள்ளி நின்று விமலாகூட சேர்ந்து நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தவளை,’இங்க வா…’ கண்ஜாடையில் அழைத்தார் யோகேஷ்.
தன் தந்தை அழைத்ததும்,”என்னங்கப்பா…” என்றாள்.
ஆதிகேசவன்,”ஏம்மா… இஷாரா… அவன் உன்ன காதலிக்கிறேன் உங்கிட்ட சொன்னான…” எனக் கேட்டார்.
எதற்கும் துணிந்தவளாக,”ஆமாம்… அப்படி தான் சொன்னான்…” என நாக்கு கூசாமல் பொய் சொன்னாள்.
இதைக் கேட்டவுன் சம்ரித் வந்த கோபத்தை பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டான். அவன் பல்லைக் கடிக்கும் ஓசை பக்கத்தில் இருந்த ஈஸ்வருக்கு தெளிவாக கேட்டது. அதுவரை இஷாராவைப் பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் சம்ரித்தைத் திரும்பிப் பார்த்து இஷாரா பொய் கூறுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டார்.
“அப்புறம் உன்கிட்ட வேறு என்ன சொன்னான்…?” என்றுக் கேட்டார்.
“கட்டிப் பிடிச்சான்… லிப் டூ லிப் கிஸ்… அதுக்கும் மேலயே என்னமொன்ன பண்ணினான். போங்க தாத்தா இதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கமுடியுமா…” என்று வெட்கமில்லாமல் குழைந்துக் கொண்டு நடித்தாள்.
அவள் சொல்வது எல்லாம் பொய் அங்குள்ள சம்ரித் ஆட்களுக்கு புரிந்தது. ஆனால் யோகேஷ் கூட்டிட்டு வந்த ஆட்கள் எல்லோரும் இஷா சொல்வதைக் கேட்டு,”நெருப்பில்லாமல் புகையுமா…” என தங்களுக்குள் கூடி நின்று பேசினர்.
அங்கு கருணாகரன் வீட்டில் அம்ரீதா மணப்பெண் அலங்காரம் செய்து இருந்தாள். அதைப் பார்த்து அவள் வயதொத்த தோழிகள் அவளை கிண்டலும் கலாட்டாவும் செய்துக் கொண்டிருந்தனர். அம்ரீதாவுக்கு வெட்கத்தில் முகம் பன்னீரில் நனைத்த ரோஜாபூ போல சிவந்திருந்தது. அதிலும் ஒரு பெண் அவளை போட்டோ எடுத்து சம்ரித்துக்கு அனுப்பி வைத்தாள்.
இந்த பிரச்சனை நடந்துக் கொண்டிருக்கும் போது சம்ரித் போனில் வாட்ஸ ஆப்பில் நோட்டிஃபிகேசன் வந்தது. இருக்கிற பிரச்சனைல இது வேறயா… எதையும் பார்க்காமலே தன் மொபலை ஆப் செய்துவிட்டான்.
அம்ரீதாவின் போட்டோவைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியில் தனக்கு போன் செய்வான் என மிகவம் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். வெகுநேரம் காத்திருந்து விட்டு அவனுக்கு போன் செய்தாள். மறுமுனையில் போன் செயல்பாட்டில் என வந்தது.
அம்ரீதா,”ஏய், மானசா ஒரு நிமிஷம் உன் செல்லை கொடு…” என்றாள்.
“ஏன்… எதுக்கு கேட்கற…” பதிலுக்கு மானசா கேட்டாள்.
“கொடுடீ முதல்ல… அப்புறம் சொல்றேன்…” என சொல்லி அவள்கிட்ட இருந்து வெடுக்கென செல்லைப் பறித்தாள்.
மானசாவின் செல்லை வாங்கி அதில் வாட்ஸ ஆப் பார்த்தாள். அதில் தன் புகைப்படத்தைப் பார்த்தவுடன் தான் செல்லை ஆப் செய்துவிட்டான் என புரிந்தது. பதட்டதுடன் தன் சித்தப்பாவிற்கு சித்திக்கும் முயற்சி செய்தாள். அழைப்பு போய் கொண்டே இருந்தது. அடுத்தது ஆதிகேசவனுக்கும், ஈஸ்வருக்கும் முயற்சி செய்தாள். அவர்களுக்கும் அழைப்பு போய் கொண்டே இருந்தது. ஆனால் யாரும் பதில் அளிக்கவே இல்லை.
‘என்னனு தெரியலயே… யாரும் போனை எடுக்கவில்லயே… இஷா அவள் உறவினர் கூட வந்து ப்ராப்ளம் பண்ணிட்டு இருக்காளோ….’ என பதட்டமானாள். அவள் இருக்கும் நிலையைப் பார்த்து அவள் உறவினர் மற்றும் அவள் தோழிகள் கண்டு என்ன என்று விசாரிக்க…
அம்ரீ,”இஷா… அவ அப்பாவும், சொந்த பந்தத்தோடு என்ன ப்ராப்ளம் செய்யறானு தெரியல… அது தான் எனக்கு ஒரே கவலயாயிருக்கு…”
அவள் உறவினர்களில் வயதில் மூத்த ஆண்மக்கள் சிலர்,”இரும்மா… நாங்க போய் பார்த்துட்டு வரோம்… நீ கவலப்படாதே…” என்று கூறி புறப்பட்டார்கள்.
இஷா உறவினர்கள் அப்படி சொன்னதற்கு சம்ரித் உறவினர்களில் ஒருத்தர்,”ஏம்மா… அவன் ஆம்பள பையன் அவன் தான் நெருங்கி வந்தான்னா… நீ பொம்ள பிள்ள அவன விட்டு தள்ளி நிற்க தெரியாதே…” என கேட்டார்.
மற்றொருவர்,”ஏப்பா… அவன் தப்பே பண்ணவே இல்லங்கறான்… நீ தப்பு பண்ண மாதிரியே பேசற….” என்றார்.
அதற்கு இஷா அப்பா,”இந்த பூனையும் பால் குடிக்குமா… முகத்த வச்சுகிட்டு… நாடகம் எல்லாம் ஆடறான்… நீங்க நம்புங்க… நாங்க எல்லாம் நம்பமாட்டோம்…” என்றார்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விமலா,’தன் மகனை தரக்குறைவாக பேசுகிறார்கள்… என கவலையின்றி இஷா எப்படியாவது தன் வீட்டு மருமகளாக வர வேண்டும்…’ என்கிற வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தார். ஈஸ்வரும் விமலாவை தான் முறைத்துக் கொண்டிருந்தார். அதுக்கு எல்லாம் விமலா அலட்சியமாக நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அம்ரீதா உறவினர்கள் ஒரு வேனில் வந்து இறங்கினர். இறங்கி வேகமாக வரவேப்பறைக்குள் வந்தனர்.
அதில் ஒரு பெரியவர்,”நாங்க எல்லோரும் கருணாகரன் உறவினர்கள். இங்கே என்ன தான் நடக்குதுனு தெரிஞ்சுக்க வந்திருக்கோம்…” என்றார்.
உடனே இஷாவின் உறவினர் ஒருவர்,”எங்க பொண்ணை இந்த பையன் ஆசை வார்த்தை பேசி உறவாடி கெடுத்திட்டான்…” என்று அபாண்டமாக பழியைத் தூக்கி சம்ரித் மேல போட்டான்.
இதற்கும் விமலா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இந்தம்மா தன் மகனை தப்பாக பேசுகிறார்கள். அதையும் என்ன இப்படி வேடிக்கை பார்த்திட்டு இருக்குது… இதெல்லாம் பெற்ற தாயா… ‘ என கருணாகரன் உறவினர் நினைத்தனர்.
அவ்வாறு பேசும் போது சம்ரித் பதட்டத்துடன்,”நா கெடுத்திட்டேனா… இது எல்லாம் அப்பட்டமான பொய்…” என்றான்.
அதற்கு யோகேஷ்,”சம்ரித் பெத்த அம்மா இங்க தான இருக்காங்க… அவங்கள கேட்கலாம் உண்மைய சொல்லுவாங்க… நீயே சொல்லும்மா…” கூறினார்.
விமலா,”ஆமாம் என் மகனும் இஷாவும் நெருக்கமாக பழகி வந்தனர். நா கூட இவங்க பழக பார்த்தா இரண்டு பேரும் மேரேஜ் செஞ்சுவாங்கனு ரொம்ப ஆசையாயிருந்தேன். ஆனால் இவன மலர் விட்டு மலர் தாவுற ஜாதி தெரியாம போச்சே…” என்று பொய்யுரைத்தார்.
இதைக் கேட்டு சம்ரித் முகம் இறுக நின்றான். அதைப் பார்த்த ஈஸ்வருக்கு கோபம் தலைக்கு ஏறியது.
ஈஸ்வர் இதுவரை அடிக்காத மனைவியை கன்னத்தில் பளார் அறைந்து விட்டு,”உன் மகன பத்தி களங்கம் சொல்றே… இனி ஒரு வார்த்தை பேசுன நா பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்.” எச்சரித்தார்.
ஆதிகேசவன் வேகமாக வந்து அவர் கையைப் பிடித்து தடுத்தி நிறுத்தி,”ஏப்பா… என்ன செய்யற… கோபத்தில் நிதானத்தை இழக்ககூடாது. ஆத்திரத்தோடு ஏழுகிறவன் நஷ்டப்பட்டு உட்காருவான் என்ற பழமொழிய கேள்விப்பட்டதில்லயா…”
“சும்மா இருங்கப்பா… இவளுக்கெல்லாம் கன்னத்தில் ரெண்டு கொடுத்தால் தான் அடங்குவா…”
“அதுக்காக அடிக்கறது எல்லாம் ரொம்ப தப்புய்யா…”
“இவ பேசுனதுக்கு ரெண்டு அடியோடு நிறுத்திட்டேன் சொல்லி சந்தோஷப்படுங்க… இவள எல்லாம் போட்டு அடி பின்னி பெடல எடுத்திருக்கனும்ப்பா…”
“கன்னத்திலே அடிச்சது தப்புங்கறேன்… வீட்டுக்கு வாழ வந்த மகாலஷ்மி இப்படியெல்லாம் மனம் நோகற மாதிரி எல்லாம் நடந்துக்ககூடாதுப்பா… அவங்க மனசு நொந்து கண்ணீர் விட்டால் அந்த பாவம் நம்ம தலைமுறைக்கும் தொடரும்..”
அதற்கும் விமலா,’சும்மா நடிப்பு… யார ஏமாத்தறதுக்கு இந்த நடி நடிக்கிறாங்க… இதெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துலயே பார்த்திட்டோம்…’ முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டார்.
இவர் முகத்தைத் திருப்பிக் கொண்டதை பார்க்கும் போது ஈஸ்வருக்கு,’இவளை என்ன செய்யலாம்… திட்டியும் பார்த்தாச்சு… அடிச்சும் பார்த்தாச்சு… இவளை எல்லாம் திருத்த முடியாது… ச்சைய்…” என இவர் முகத்தை எதிர்பக்கம் திருப்பிக் கொண்டார்.
சம்ரித் பெரும் கவலையோடு,’இந்த நிச்சயம் நல்லபடியாக நடக்குமா… என்னனு தெரியல…’ நினைத்தான்
இஷா உரிமையோடு சம்ரித் அருகில் வந்து சம்ரித் கையை பிடித்து இறுக்கிக் கொண்டாள். சம்ரித் உடனே அவள் கையை உதறி விட்டு தள்ளிப் போய் நின்றான்.
“மாம்ஸ் இவ்வளவு வெட்கமா… கூச்சப்பட்டு தள்ளி போய் நிற்கிறது பாரு…” என சொல்லி மீண்டும் அவன் தோளில் தொங்கிக் கொண்டு நின்றாள்.
உடனே விமலா,”ரெண்டு பேரத்தையும் பார்க்கும் போதே என் கண்ணே பட்டுவிடும் போல இருக்குது…” ஆரத்தி எடுக்கவும் ஆரம்பிக்கும் வேளைல ஈஸ்வர் குறுக்கே வந்து தட்டுத் தட்டிவிட்டார்.
“பிடிக்காத ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வச்சு காலம் பூரா சேர்ந்து வாழமா… அவங்க சண்ட போட்டு இருக்கறத நாம ரெண்டு பேரும் வேடிக்கை பார்க்கனுமா… சொல்லு…” என விமலாவிடம் ஈஸ்வர் கேட்டார்.
அதற்கு விமலாவை முந்திக் கொண்டு யோகேஷ்,“பிடிக்கலன்னு யார் சொன்னது எல்லாம் பிடிச்சு போயி தான்… இந்த என்கேஜ்மெண்ட் நடத்திடலாம் என வந்திருக்கோம்…” என பொய் சொன்னார்.
ஈஸ்வர் யோகேஷிடம்,”இஷாவுக்கு மட்டும் பிடித்தால் போதுமா… என் மகன் விருப்பமில்லைனு சொல்றானே…” என வாதிட்டார்.
முத்தரப்புக்கும் பேச்சு வார்த்தை முற்றிப் போய் கைகலப்பில் ஈடுபடும் நேரம் ஆதிகேசவன்,”எல்லாரும் உங்க சண்டய நிறுத்தறிங்களா…” என சத்தமிட்டார்.
சட்டென அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஆதிகேசவன்,”இப்ப எல்லாரும் கேட்டுங்கோ… இந்த வீட்டுக்கு பெரியவனா இருந்து நா முடிவு எடுத்திருக்கேன். நா என் பேரனுக்கும் கருணாகரன் பொண்ணுக்கும் நிச்சயம் செய்யறதா வாக்கு கொடுத்துருக்கேன். நா வாக்கு கொடுத்தா… கொடுத்தது தான்… எல்ஆருக்கும் புரிஞ்சிருக்கனும் நினைக்கிறேன். வாங்க கருணாகரன் தட்ட மாற்றிக்கலாம்…” என கருணாகரனை அழைத்தார்.
அவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து கருணாகரன் தாங்கள் கொண்டு வந்த நிச்சயத்தட்டை எடுத்துட்டுப் போனார். ஐய்யர் நிச்சய ஓலையை வாசிக்க, இருவரும் தட்டை மாற்றிக் கொண்டனர். அருகில் ஈஸ்வரும் சம்ரித்தும் யசோதாவும் வந்து நின்றனர்.
நாயகன் நிச்சயத்தில் நாயகி கைக் கோர்க்க காத்திருக்க…
தாயும் அவ தமையனும் மகளும் ஒரு திட்டம் தீட்டியிருக்க…
நாயகன் குடும்பத்தினர் அத்திட்டத்தை முறியடிக்க…
நாயகி குடும்பத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி…
இரு குடும்பத்தாரும் இணைந்து திட்டம் தீட்டினார்கள்.








