ATM Tamil Romantic Novels

புள்ளி மேவாத மான் – 7

7 –  புள்ளி மேவாத மான்

 

     இருவரும் சேர்ந்து புடவைகளை பார்க்க அவன் எதை காட்டினாலும் சரி என்றாள். அவள் புடவையைப் பார்த்ததை விட  அவள் மாமனை சைட் அடித்தது தான் அதிகம். அவள் பார்வையில் இவனுக்கு தான் வெட்கம் வந்தது. 

“அடியேய் புடவையை பாருனா என்னைய பார்த்துட்டு இருக்க இப்படியா ஒரு ஆம்பிளைய சைட் அடிப்ப…..”

“எந்த ஆம்பிளைய  நான் சைட் அடிச்சேன். என் மாமன தான….  எனக்கு அதுக்கு புல் ரைட்ஸ் இருக்கு…ம்ம்ம்”என்றாள் கெத்தாக..

அவள் பேச்சு  இவன் எனக்கு மட்டுமே சொந்தமானவன் என்பதை சொல்லாமல் சொல்ல அதில் அவன் கர்வம் கொண்டான். எந்த ஆண்மகனுக்கும் தன்னை கொண்டாடும் பெண் வாழ்க்கை துணையாக வந்தாள் கர்வம் கொள்வான் தானே.

தமிழரசன் வந்து மாதுளைஜீஸ் இரண்டு யூஸ் அண்ட் த்ரோ பாக்கெட் கொடுத்து செல்ல

சேல்மேன்”சார் இங்க குடிக்க அலவுட் இல்ல சார்”என்க 

இருவருமாக வெயிட்டிங் ஹால் (பெண்கள் புடவை செலக்ட் செய்யும் வரை அப்பாவி ஆண்கள் அமர என இப்பொழுது எல்லா கடைகளில் ஒரு அறை இருக்கிறது. ஆண்களின் பரிதாப நிலை கண்டு கடைக்கார்களின் கனிவான உபயம்) சென்று ஒரு ஓரமான தனிமையான இடம் பார்த்து அமர்ந்து கொண்டனர்.

“எப்படி மாமா  இவ்வளவு சீக்கிரம் வந்திங்க… நீங்க வரமாட்டிங்கனு  நினைச்சு எனக்கு டென்ஷனா இருந்துச்சு”

அவன் பயணத்தை பற்றி சொல்ல சொல்ல இவள் மனதுக்கு கஷ்டமாகி போனது. தன்னால தான் மாமாவுக்கு இவ்வளவு அலைச்சல். அம்மா சொல்றது போல மாமாவ ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டமோ என நினைத்து கவலைக் கொண்டாள். 

“சாரி மாமா…உங்கள ரொம்ப கஷ்டப்படுத்தறேனா…”

“சாரி எல்லாம் கேட்காதே… உனக்கு தெரியாது நீ என் வாழ்க்கைல வருவதற்கு முன்னால  ரொம்ப வருஷமா என் குடும்பம்னு சொல்ல கூட  யாரும் இல்லாம  ரொம்ப வெறுமையாக இருந்துச்சு.  என்னை சந்தோஷப்படுத்தவும்  யாருமில்லை. கஷ்டப்படுத்தவும் யாருமில்லை .உன்னால தான் எனக்கு வாழ்க்கைல ஒரு பிடிப்பு வந்திருக்கு.  எனக்கு கஷ்டமா எல்லாம் இல்லை. உனக்கு நிறைய நிறைய செய்யனும்ஆசை தான் அதிகமாகுது” என்றான் வலி மிகுந்த புன்னகையோடு

அவனின் பேச்சு எழிலுக்கு தாயைத் தேடும் குழந்தையாக தெரிய அவனுக்கு அனைத்துமாக தான் இருக்க வேண்டும் என்று  உறுதிக் கொண்டாள்.

 அவன் மனவருத்த்தை உடனே போக்க வேண்டும் என்று தோன்றியது.  என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை . அதற்கு தான் அவள் காதல் இருக்கிறதே.

சட்டென அவன் கையில் இருந்த ஜீஸை இவள் வாங்கி பருகி கொண்டே தன்னுடையதை மெல்ல  அவனிடம் நீட்டினாள் காதல் மிகுந்த பார்வையோடு ,  இவள்  அவன் வாழ்வை காக்க வந்த யட்சிணியாக அவனுக்கு தோன்றியது.

ஜீஸ் குடித்து முடிக்கவும்.அவனிடம் விளையாடட்டாக

“சொல்லடிங்கள்ள இனி பாருங்க எப்படி டார்ச்சர் பண்றேனு” என சொல்லி கண் சிமிட்டி சிரித்தாள்.

“சரி வாயாடி வா எல்லோரும் வரதுக்குள்ள சேலை  எடுப்போம்”

 இருவருமாக பட்டுபுடவை தேர்வு செய்தனர். முகூர்த்தத்திற்கு அவர்களின் வழக்கம் போல மெரூன் நிறத்தில் நெருக்கமான ஜரிகை வேய்த புடவை நிச்சயப்பட்டு  நலுங்குப்பட்டு எல்லாமே அவனுக்கு பிடித்தவிதமாகவே எடுத்தான். மேலும் இரண்டு புடவை எடுத்தான்.

 “இன்னும் இரண்டு புடவை எதுக்கு மாமா”

 “புடவை வேணாம்னு சொல்ற பொண்ணுங்க உண்டாடி”

 “ஹீ..ஹீஹீ… நான் வேணாம்னு…சொல்லவே இல்லை மாமா….எதுக்கு.. எதை… எப்ப கட்டிக்கறதுனு தான் கேட்டேன்”

 “இது மாமன் புடவை . இது எனக்கு பிடிச்சிருக்கு அதனால இதுவும்”என்றான் இரண்டு புடவைகளையும் காட்டி,

 “அச்சோ மாமா உங்களுக்கு ஒன்னுமே தெரியலை. எனக்கு மாமன் முறையுள்ளவங்க தான் நலுங்கு வச்சு மாமன் சீரு தருவாங்க”

 “அப்ப நான் யாருடி உனக்கு” என்றான் வெடுக்கென்று,

 “கோவிச்சுக்காதிங்க மாமா….நீங்க தான் என் மாமா….. எனக்கு மட்டும் தான் மாமா….  இருந்தாலும் சீரு செய்யற முறைவுள்ளங்க தான செய்வாங்க மாமா”என்றாள் குழைவான குரலில், 

அவள் சொல்லியவிதத்தில் இவன் எரிச்சல் மறைந்து மனம் கொஞ்சம் சாந்தி அடைய இருந்தாலும் வீம்பாக “நான் செய்வேன்டி உனக்கு. யார் என்ன சொல்றாங்கனு பார்க்கிறேன்”என்றான் காட்டமாக

 இது என்னடா புதுப்பிரச்சனையா இருக்கு என கொஞ்சம் கவலை தட்டிய போதும் அவனின் உரிமையான பேச்சில் அவளுக்கு பிடித்திருந்தது. 

எப்படியோ கொஞ்சம் சண்டை கொஞ்சம் கோபம் கொஞ்சம் கவலை கொஞ்சம் ஊடல்  கொஞ்சம் கலாட்டா  நிறைய காதல் என புடவை தேர்ந்தெடுத்தனர் இருவரும்.

கல்யாணம் நெருங்கி கொண்டு இருந்த போதும் தனாவின் ஞாயிற்றுக்கிழமை படையெடுப்பு மட்டும் நிற்கவில்லை. வாரம் முழுவதும்  தினசரி வேலையோடு கல்யாண வேலையும் சேர்ந்து கொள்ள நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பவனுக்கு அவளை பார்த்தால் போதும் அடுத்த வாரத்திற்கு தேவையான புத்துணர்ச்சி கிடைச்சிடும்.

கல்யாணத்தின் பதினைந்து நாட்களுக்கு முன்பு அந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்பே வந்தவன் எப்போதும் வாங்கி வரும் பூ சுவிட் சாக்லேட்பார் அடங்கிய பையை அவள் கைகளில் கொடுத்து விட்டு கற்பகம் கொடுத்த காபியை வாங்கி குடித்து விட்டு முத்துக்குமாரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவன் முத்துக்குமாரிடம்

 “மாமா நான் எழிலை கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரவா” என கேட்டான்.

 பெண்ணைப் பெற்ற தகப்பனாக மருமகனிடம் மறுப்பு சொல்ல முடியாது தயங்கிவாறே

 “கல்யாணம் இன்னும் பதினைஞ்சு நாள் இருக்க இப்ப வெளிய போறதெல்லாம் நல்லா இருக்காது.கல்யாணம் முடிஞ்சா உங்க பொண்டாட்டிய நீங்க எங்க கூட்டிட்டு போனாலும் யார் என்ன சொல்ல போறாங்க”

 “நான் கோயிலுக்கு தான் கூட்டிட்டு போகிறேன் மாமா.  வீட்ல எந்த நல்ல காரியம் தொடங்கும் முன்னால அப்பாம்மா முதல்ல மாசாணியம்மனுக்கும் பாலாஜி கோயிலுக்கு போயிட்டு வருவது வழக்கம் அதுதான் எனக்கு எழிலோடு போயிட்டு வந்தால் நல்லாருக்கும்”

கோயிலுக்கு என்ற போதும் சம்மதம் சொல்ல தயங்க ….. 

“மாமா நீஙக தப்பா எதும் யோசிக்காதிங்க எனக்கு என்னைவிட உங்களைவிட எழில் கெளரவம் தான் முக்கியம். அவளுக்கு ஒரு கெட்டபேர் வந்தா அது உங்களை விட எனக்கு தான் அசிங்கம் ” என பேசிப்பேசியே அவரிடம் சம்மதம் வாங்கினான். அப்போதும் கற்பகம் “கோயிலுக்கு தான அனுப்பி வைங்க” என்று சொல்லவும் தான் சம்மதம் சொன்னார்.

அப்போதும் எங்கு எவ்வளவு நேரம் ஆகும் பொழுது சாய்வதற்குள் வரவேண்டும் என பல கண்டீசன்களோடு தான் அனுப்பி வைத்தார்.

கற்பகம் மகளின் அறைக்கு சென்று  மகளை இந்த புடவையை கட்டு அந்த நகை போடு இப்படி செய் என மகளை நச்சரித்து கொண்டு இருந்தார்.

“அம்மா… எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ அமைதியா இரு..”

அவள் சுடிதார் அணிவதைக் கண்டு “மாப்பிள்ளை கூட முதல்முதல்ல வெளியே போற திருவிழாவுக்கு எடுத்தோம்ல அந்த சாப்ட் சில்க் கட்டி ரூபி செட் போட்டுக்கோ” 

“ம்மா  மாமா தான் மா சுடிதார்ல வர சொன்னாரு…”

“ஒத்தசரம் முத்து செயினாவது போடு” ஏற்கனவே கழுத்தை ஒட்டி சிறு சங்கிலியும்  தனஞ்ஜெயன் அணிவித்த செயினும் இருக்க மகள் அதை இதுவரை கழட்டியதில்லை என்று தெரிந்தும் சொன்னார்.

“ம்ப்ச் அம்மா அதான் கழுத்துல   இரண்டு செயின் இருக்குல்ல தெரிஞ்சிகிட்டே பேசாதேம்மா”

அவன் வாங்கி வந்திருந்த மல்லிகை சரத்தை தன் நீண்ட பின்னலில் சூடி பாந்தமாக கலம்காரி சாப்ட் காட்டன் சுடிதாரில்

தயாராகி வந்தவளை முத்துக்குமாரிடம் சொல்லிக்கொண்டு கூட்டிச் சென்றான் . பொள்ளாச்சி  வரை காரில் வந்தனர். பொள்ளாச்சியில் ஒரு இடத்தில் சாலை ஓரமாக  கருணா தனாவின் ராயல் என்பீல்டோடு நின்று கொண்டு இருந்தான்.

அவனிடம் காரை கொடுத்து விட்டு பைக்கை வாங்கி கொண்டான். எழிலுக்கோ தலைக்கால் புரியவில்லை. தன் மாமனோடு பைக்கில் போகிறோம் என்பதே இறக்கை கட்டி பறப்பது போன்ற உணர்வு.

அவளுடைய  பத்து வருட காதலில் இது போல பல ஆசைகள் அதை தெரிந்தோ தெரியாமலேயே நிறைவேற்றி கொண்டு இருக்கிறான் தனஞ்ஜெயன்.

“மாப்பிள்ளை பார்த்து போயிட்டு வா. அதவிட முக்கியம் என் தங்கச்சி பத்திரம். என் சித்தப்பு அனுப்பி வச்சதே அதிசயம்.கோயிலுக்கு மட்டும் தான போற எதுக்கும் பார்த்து சேதாரம் இல்லாம கூட்டிட்டு வந்துடு மாப்பிள்ளை” என தனாவின் அருகே வந்து ரகசியமாக நக்கலடித்தான்.

“எல்லாம் எங்களுக்கு தெரியும் மூடிட்டு போடா” என்றுவிட்டு எழிலைக் கூட்டிக்கொண்டு முதலில் நகைக்கடைக்கு சென்றான்.நகைகடை வாசலில் பைக்கை நிறுத்தியதும் எதற்கு என்று தெரியவில்லை என்றாலும் கேட்கவில்லை . அவள் கேட்கும் மனநிலையில் இல்லை . ஒவ்வொரு மணித்துளியையும் ரசித்து அனுபவித்து  கொண்டு இருந்தாள்.

 அவனும் எதுவும் பேசாமல் அவள் கையோடு கைகோர்த்து கொண்டு நகைகடைகடைக்குள் சென்றான். உள்ளே சென்றதும் கடை முதலாளியே வந்து,

 “வாங்க தம்பி நீங்க கேட்ட மாதிரி நிறைய கலெக்ஷன் வந்திருக்கு பாருங்க”என்று கூட்டி சென்றார்.

 கடை சிப்பந்தியிடம் எடுத்து காட்ட சொல்லி விட்டு அவர் நகர்ந்து கொண்டார். கடை ஊழியர் பிரைடல் கலெக்ஷன் மோதிரங்கள் எடுத்து காட்டினார்.

 “எழில் உனக்கு பிடிச்ச டிசைன் செலக்ஷன் பண்ணு”

 அவளுக்கு எல்லாமே அழகாக தெரிய இதா அதா என தனாவை கேட்டு கேட்டே நச்சரித்துவிட்டாள்.அவனோ ஏதும் சொன்னானில்லை. உதட்டில் நிறைந்த புன்னகையோடு பார்த்து கொண்டு இருந்தான்.

 பொடிப்பொடியான வைரகற்கள் பதித்த மோதிர ஜோடியை வாங்கி கொண்டு மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு தாலியையும் மோதிரங்களையும் வைத்து பூஜை செய்து வாங்கி கொண்டு பாலாஜி கோயிலுக்கு வால்பாறை மலை நோக்கி பறந்தனர்.

 கோவிலை விட்டு வந்து பைக்கை எடுத்தவன் ஒருபுறமாக அமரப் போனவளை இரண்டு பக்கமும் கால்கள் போட்டு அமரச் சொன்னான். மலை ஏற ஏற ஆட்கள் நடமாட்டம் குறைய தனா  பண்ணின அட்டகாசம் இவ்வளவு தான் இல்லை.

 இடுப்பில் மட்டும் லேசாக கைப் போட்டு இருந்தவளை” நெருங்கி வா நல்லா இறுக்கி கட்டிபிடி “என்றான் உல்லாசமாக…..

அவளும் நெருங்கி வந்து அவனின் இடுப்பு வழியாக இருகைகளையும் விட்டு வயிற்றோடு அணைத்தாள்.அதுவும் அவனுக்கு போதவில்லை.

 “இன்னும் கிட்ட வாடி நெருக்கம் பத்தலை கொஞ்சம் கேப் விழுகுது”

 “மாமா கோயிலுக்கு போறோம்” என்றாள் கோபமாக

 “ஆமாம் கோயிலுக்கு தான் போறோம் அதுக்கென்ன அவரே காதல் மன்னன்டி அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டார். அவருக்கு ஏற்ற பக்தன் நான்”

 அவன் பேச்சில் ‘ஆவென’வாயைப் பிளந்து பார்த்தாள்.

 பைக் கண்ணாடி வழியாக இவளைப் பார்த்து பேசிக்கொண்டே வந்தவனுக்கு அவளை லிப்லாக்  பண்ணனும் தோன்ற”வாயை குளோஸ் பண்ணுடி மனுசன உசுப்பேத்த மாதிரியே எல்லாம் பண்றது”

 அவன் சொன்னதில் கப்பென வாயை மூடிக்கொண்டு அவன்முதுகிலேயே முகம் புதைத்து கொண்டாள்.

பாலாஜி கோயிலுக்கு வந்து பூஜையை முடித்துக்கொண்டு சின்ன கல்லார் நோக்கி பயணித்தனர்.

சின்னகல்லார் மேகங்களாலும் மூடுபனியாலும் மூடப்பட்டு இதமான குளிர் காற்று வீச அந்த குளிரை தாங்க முடியாத நிலமகள் பச்சை போர்வை கொண்டு தன்னை மூடிக் கொள்ள பார்க்கவே மிக ரம்மியமாக இருந்தது. காதலர்களுக்கு ஏற்ற காதல் பிரதேசம்.

அந்த இடத்தின் இதமான சீதோஷ்ணம் ஏகாந்தமான சூழல்…..

அன்பு கொண்ட இதயங்கள்…..அந்த இதயங்களின் காதல் துடிப்பை அதிகரிக்க….  உள்ளக் காதல் விழி வழி ததும்ப…. பேச்சற்ற பரிபாஷையில் தன் கையணைப்பில் எழிலை கொண்டு வந்தவன்….. தனது இடக்கரத்தை அவளை நோக்கி நீட்ட….அதில் அவள் வலக்கரத்தை  வைக்க…. அவளது மோதிரவிரல் பற்றி அவள்  கண்ணோடு கண் நோக்கி மோதிரத்தை அணிவித்தான்.

 அதே போல் தனாவும் தனது வலக்கரத்தை நீட்ட… இவளும் அவனுக்கு சளைக்காமல் சவாலான காதல் பார்வையோடு அவனின் மோதிரவிரல் பற்றி மோதிரம் அணிவித்தாள். மெதுவாக அவளை அணைத்து மெல்ல அவள் இதழை தன் இதழால் சிறை செய்தான்.

 அது குளிர்காலம் என்பதாலும் எப்பவும் நசநசனு மழை பெய்து கொண்டு இருப்பதாலும் ஆள் நடமாட்டம் அதிகமில்லை.இவர்கள் இருந்த இடமும் சற்று உட்புறமாக தனிமையான இடமாக இருந்தாலும்  இவர்களின் காதல் பரிமாற்றம் அழகான நிகழ்வாக அரங்கேறியது.

 இந்த மோனநிலை எவ்வளவு நேரம் நீடித்ததோ தீடீர் என வீசிய வாடைக்காற்றில் எழில் உடல் குளிரில் வெடவெடக்க தான் சுயம் பெற்றனர். சிறிது நேரம் கல்லாரை சுற்றி பார்த்து எழிலோடு நெருக்கமாக சில செல்பிகளை தனது போனில் எடுத்துக் கொண்டான்.

 தீடிரென மேகங்கள் கருத்து இருண்டு கொண்டு இதோ மழை பொழிய போகிறேன் என வானம் கொட்டு கொட்ட  கிளம்பிவிட்டனர்.

 வால்பாறை டவுன் வந்து ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு மலையை விட்டு இறங்கினர். ஆழியாறு அணைப் பூங்காவில் வண்டியை நிறுத்தினான். அது வரை இருவரின் மனதிலும் காதலே ஆட்சி செய்ய ஒரு மோனநிலையில் இருந்தனர்.

 பூங்கா வந்ததும் “உன்னோடு கொஞ்சம் பேசனும் வா”என அழைத்து சென்றான். பூங்காவில் அமைதியான இடம் பார்த்து அமர சற்று நேரம் எதுவும் பேசவில்லை அவன்.

 “மாமா”என அவன் கையைப் பிடிக்க அவள் கையை அழுத்தி கொடுத்து

 “லவ்னா என்ன அந்த பீலிங் எப்படி இருக்கும் உண்மையாவே உன்கிட்ட தான் உணர்ந்தேன். பூங்கொடிய காதலிச்சேன் தான். நானா தான் லவ்வையும் சொன்னேன் அவ ஏத்துகிட்டா அவ்வளவு தான். ஆனா அது காதலா என இப்ப கேட்டா இல்லைனு தான் சொல்வேன் உன் காதல் தான என் காதலை எனக்கு புரியவச்சிருக்கு”

 “இந்த காதல் குறையாம உன்கூட காலம் பூரா வாழ்ந்திடனும். அதுதான் என் வாழ்நாள் ஆசை”என  பற்றியிருந்த அவள் புறங்கையில் முத்தமிட்டான்.

 அவனின் கன்னத்தை தன் பிஞ்சு விரலால் தடவியவாறே”மாமா  நாம நல்லா இருப்போம் அதெல்லாம்சூப்பரா காதலிச்சு குடும்பம் நடத்தி அஞ்சாறு பெத்து போடறோம்”என கூறி கண்ணடித்தாள்.

 அவள் பேச்சில் சிரிப்பு வந்திட சிரித்து கொண்டே”அஞ்சாறு போதுமாடி”

 “அதுக்கு மேலனாலும் நான் ரெடி நீங்க ரெடியா…”மீண்டும் கண்ணடித்தாள்.

 “வாய் கொழுப்பு கூடிப் போச்சு உனக்கு. சரி சரி…நேரமாகுது வா போலாம். இல்லனா என் மாமனார் என்னை நக்கீரர் மாதிரி கேள்வியா கேட்பார்”

 பேச்சும் சிரிப்புமாக வீடு வந்தனர். வாசலில் இருந்த முத்துக்குமாரைப் பார்த்ததும்  அவளை வாசலிலேயே இறக்கி விட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

  

பார்த்தா மீது கொண்ட காதைல மட்டுமே

பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்ந்தவள்

விஜயனின் விழி வழி வந்த காதல் கண்டு

பரவசம் எய்தினாள் பாவையவள்

கைத்தலம் பற்ற கனா கண்டவள்

சொப்பனம் எல்லாம் சொப்பனமாக

சொல்லோடு நின்றிடாது நிறைவேற

நிலையாத வாழ்வு நிலை பெற்றிட

நிலை மறந்து போனாள் பெண்ணவள்.

 

 

1 thought on “புள்ளி மேவாத மான் – 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top