புள்ளி மேவாத மான் – 8
இதோ அதோ என விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் தனஞ்ஜெயன் எழிலரசி கல்யாணம் . கல்யாணம் நெருங்க நெருங்க எப்பவும் கடல் அலை போல ஆர்ப்பரிக்கும் எழில் அமைதியாகி தன் கண்ணனின் கைத்தலம் பற்ற கண்ட கனவு நினைவாகும் தருணங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து தனது நினைவு பெட்டகத்தில் சேமித்து வைக்கும் அமைதியான மனநிலையில்.
அதற்கு நேர்மாறாக ஆழ்கடல் நீரோட்டம் போல அமைதியாக தனது காரியங்களை சாதித்துக் கொள்ளும் சுபாவம் கொண்ட தனா தன் மனதை கொள்ளை கொண்ட பைங்கிளியின் கரம் பற்றச் செய்தது எல்லாம் ஆர்ப்பாட்டமாகவே.
கல்யாணத்திற்கு முன் பெண் மாப்பிள்ளைக்கு மாமன் முறையுள்ளவர்கள் நலுங்கு வைத்து விருந்தளிப்பர். கற்பகத்திற்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் சித்தப்பாவின் மகன்கள் தாய்மாமன் நலுங்கு வைக்க முன் வர….
தன் ஆரூயிர் சிநேகிதனுக்கு பங்காளி மகளான கற்பகத்தை அண்ணன் ஸ்தானத்தில் இருந்து மாணிக்கவேல் தான் திருமணம் செய்து வைத்தார். அதை குறிப்பிட்டு தனக்கும் மாமன் நலுங்கு வைக்க உரிமை உள்ளது என அவர்களோடு மல்லுக்கட்டி காரியத்தை சாதித்துக் கொண்டான்.
எழிலிடம் சொன்னது போல நலுங்கு சீர் வரிசையில் அவன் எடுத்தப் பட்டு புடவை சில நகைகள் என சீரோடு வந்து…
எல்லார் முன்னிலையிலேயே அவளை அப்பட்டமாக ஆளை விழுங்கும் பார்வை கொண்டு சைட் அடித்தவாறே சந்தன நலுங்கு வைத்து சீர் தட்டை கையில் கொடுத்து
“இந்த புடவை தான் நீ கட்டிகிட்டு சபைக்கு வர..” என்றான் சத்தமாகவே…
ஏற்கனவே முத்துக்குமார் – கற்பகம் வகையில் உள்ள மாமன்கள் கொடுத்த சீரில் ஐந்து புடவைக்கு மேல இருக்க…. தனாவின் பேச்சு பூசலை கிளப்பும் வகையில் இருக்க… முத்துக்குமாரும் கற்பகத்திற்கு தான் தர்ம சங்கடமாகி போனது.
சட்டென சூழ்நிலை கருதி பெரியவர்கள் “இனி அவன் தான அந்த புள்ளைக்கு உடமைப்பட்டவன் அவன் ஆசைப்படி அவனுதையே கட்டட்டும்” என்றிட நலுங்கு முடிந்து எழில் அவன் புடவை நகைகளை அணிந்து வந்து சபையில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றாள்.
அதில் மட்டுமில்லாமல் எல்லாவற்றிலும் அவன் இஷ்டப்படி தான் செய்தான். தன் அண்ணனின் மறுபதிப்பாக தனாவைப் பார்க்கும் சுந்தரம் கூட அவன் செயலை கண்டித்தார். அதற்கு பிறகே சற்று அடங்கினான்.
முன்தினம் நிச்சயம் முடித்து ரிசப்ஷனனில் தான் எடுத்த கொடுத்த ஆயுர்கீரின் பட்டு புடவையில் இந்திரலோக ரம்பையாக இருந்தவளை கண்டு மதி மயங்கிப் போனான்.
ரிசப்ஷன் முடிந்து உறவுகள் கலைந்த நிலையில் போட்டோகிராபர் இவர்களை தனிப்பட்ட முறையில் சில போஸ்களில் போட்டோ எடுக்க எழிலை ஒட்டி நின்று தோளோடு அணைத்து… பின்புறமாக நின்று அவள் கையோடு கை சேர்த்து அணைத்தவாறு …. ரிசப்ஷனுக்காக போட்டு இருந்த பிரத்தியேக சோபாவில் இவன் அமர்ந்து அவளை மடியில் இருத்தி என… அவனாகவே சில போஸ்களில் எடுக்க சொல்ல… எழில் தான் வெட்கத்தில் நெளிந்து கொண்டு இருந்தாள்.
முகூர்த்த நேரம் நெருங்க மணவறையில் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்த தனா அய்யர் சொல்ல சொல்ல மந்திரங்களை திருப்பி சொல்லிக் கொண்டு இருந்தான்.
“பொண்ணை அழைச்சிட்டு வாங்க” என அய்யர் சொல்ல எழில் வந்து மணையில் அமர தனா அவளையே இமை சிமிட்டாமல் பார்க்க…
கருணாவோ “மாப்புள்ள ரொம்ப வழியுது” என கைக்குட்டையை நீட்ட வெட்கம் வந்திட சிரித்தவாறே அய்யர் மந்திரத்தில் கவனமாகினான். குறிஞ்சிப்பூ போல அரிதாக பூக்கும் ஆணின் வெட்கமோ தனி அழகு தான்.
பெரியவர்கள் ஆசி பெற்ற திருமாங்கல்யத்தை அய்யர் எடுத்துக் கொடுக்க சொந்தங்கள் சுற்றத்தார் புடை சூழ மூன்று முடிச்சிட்டு தன் மனவாட்டியை மணையாளாக ஆக்கிக் கொண்டான் தனஞ்ஜெயன்.
தன் கழுத்தில் தொங்கிய பொன்தாலியை பார்த்து கண்களில் ஆனந்த கண்ணீர் எழிலுக்கு. அவளின் கண்ணீரை கண்டவன் மாலை மறைவில் அவள் கைகளை ஆறுதலாக அழுத்தி விடுவித்தான். அவன் ஆறுதல் அவளின் மனதை இதமாக்கியது.
கண்ணாளனின் கைத்தலம் பற்ற
கண்ணம்மா மேற்கொண்ட தவம்
கண் திறந்து கண்ட கனவுகள் எல்லாம்
மண் மீது வரி வடிவம் பெற்று நிற்க
பாவையவள் பரவசநிலை எய்தி
ஆனந்த கூத்தாடினாள்.
எல்லா சம்பிரதாயங்கள் முடித்து தனாவின் வீட்டில் உரிமையுடன் அடி எடுத்து வைத்தாள் எழில் . அவள் தனாவை மட்டுமா விரும்பினாள்? தனாவோடு அவனுடைய அம்மா அவர்கள் வாழ்ந்த வீடு என எல்லாமே அவள் காதல் கொண்டிருந்தாள்.
கல்யாணத்திற்கு முன்பு இரண்டு தடவை வந்திருக்கிறாள் தான். ஆனாலும் இப்போ உரிமையாக அவன் மனைவியாக அந்த வீட்டில் அவளுடைய பிரவேசம் தன் இடம் வந்து சேர்ந்த சாந்தத்தை அவள் மனதிற்கு கொடுத்தது.
பூஜையறையில் விளக்கேற்றி தனாவின் பெற்றோர் படத்தின் முன் விழுந்து வணங்கி பால் பழம் சாப்பிட்டு எல்லாம் முடித்து வீட்டினர் தவிர மற்ற உறவினர்கள் விடைபெற்று இருந்தனர்.
மணமேடை அலங்காரம் பண்ணியவர்களையே முதலிரவுக்கும் அலங்காரம் பண்ண பேசி இருந்தான். சுந்தரத்திற்கு தெரியாமல் கருணாவை வைத்து செய்ய சொல்லியிருக்க….
என்ன இருந்தாலும் சுந்தரத்திற்கு தெரியாமல் போய்விடுமா…
தனது குடும்பத்தாரை தனியாக அழைத்து அவரோ காச்மூச்சென்று கத்த ஆரம்பித்துவிட்டார். இது என்ன புதுப்பழக்கம் பணத்திற்கு ஆள் வைத்து செய்வது அது இது என
தனாவும் எழிலும் கோயிலுக்கு சென்று இருக்க அவர்களுக்கு இது தெரியவில்லை. கருணாவிற்கு தான் அதிக திட்டு உன் சிநேகிதன் சொன்னா பெரியவர்களை கேட்காமல் செய்வாயா என….
கண்ணன் தான் “இந்த காலத்தில் இப்படி தான். கல்யாணமே வேணாம்னு இருந்தான். அவன் நல்லா வாழ தான கல்யாணம் பண்ணி வச்சோம் அவன் சந்தோஷமாக இருக்கான்ல அதைப் பாருங்க” தன் அண்ணணை சமாதானம் செய்தார்.அதன் பின்னே அமைதியாகினார் சுந்தரம்.
கருணா தனாவின் தம்பிகளிடம் தனியாக”எல்லோரும் என்னை வச்சு செய்யறிங்கடா” என புலம்பித் தீர்த்தான்.
தனா விருப்பம் இல்லாமல் தான் எழிலை பெண் பார்க்க சென்றான். அவனை கேட்காமல் கட்டாயத்தின் பேரில் தான் திருமணம் பேசி முடித்தனர். ஆனால் எழில் காட்டிய அளப்பரிய அன்பு தான் தனாவை எழிலின் பால் ஈர்த்தது. எழிலோடு வாழும் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவித்து வாழவேண்டும் என்ற தனாவின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் அவனின் இந்த நடவடிக்கை எல்லாம். எழில் அன்பைக் கொடுத்து அன்பை எடுத்துக் கொண்டாள்.
தனாவின் அறை பெங்களூரில் இருந்து ஸ்பெஷலாக வர வைக்கப்பட்ட உயர்தர எக்ஸ்போர்ட் ரோஜாக்களாலும் மல்லிகை பூக்களாலும் புதுவிதமாக அலங்கரிக்கப்பட்டு ரோஜா மணமும் மல்லிகை மணமும் கலந்து இயற்கையான நறுமணத்துடன் இருந்தது.
தனா பட்டு வேஷ்டி சட்டையில் எழிலின் வருகைக்காக காத்திருந்தான். அறையின் ரம்மியமே அவனை கிறங்கடித்து கொண்டு இருந்தது.
எழில் வந்தாள் சர்வ அலங்கார பூஷிதையாக . பார்த்தவுடன் மலைத்தான் அவள் அழகை கண்டு அல்ல. அவள் அலங்காரத்தைக் கண்டு ஜடைவில்லை , குஞ்சம் வைத்த ஜடை அலங்காரம் , கழுத்தில் ஒரு பிடி அளவுக்கு ஆரம் நெக்லஸ் , கைகள் நிறைய வளையல்கள் இடுப்பில் ஒட்டியாணம் என…
ஷப்பா இதெல்லாம் கழட்டி பிரித்து எடுப்பதற்குள் பாதி இரவு தாண்டிடுமே அப்படி தான் அவன் நினைத்தான். பெரும் கவலையோடு யோசனையில் இருந்தவன் முன் வந்த எழில் அவனாக ஏதாவது பேசுவானா என பார்த்திருக்க…..
அவன் பேசுவதாக தெரியவில்லை எனவும்”மாமா…மாமா” என மெதுவாக அழைத்தாள்.அவளும் என்ன தான் பண்ணுவாள். எவ்வளவு நேரம் தான் அப்படியே நிற்பது…
“ஹாங்…” யோசனையை கைவிட்டவனாக….
“என்னாச்சு மாமா”
“எதுக்குடி அம்மன் கோயில் சிலை மாதிரி இத்தனை நகை..”
“ஏன் மாமா போடகூடாதா…” என்றாள் புரியாதவளாக
எரிச்சலில் சற்றே கிட்ட நெருங்கி பல்லைக் கடித்தவாறே “அடியேய்”
ஏற்கனவே புதுமணப்பெண்ணுக்கே உண்டான வெட்கம் கொஞ்சம் பயம் என கலவையான உணர்வில் இருந்தவள் அவனின் எரிச்சலில் மிரண்டு ஓரடி பின்னால் போக …..
அவளின் மிரண்ட பார்வையில் தன்னையே நொந்து கொண்டு
“எழில் ஒன்னும் இல்ல இங்க வா”என கைப்பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமரவைத்து தானும் அவளை உரசிக்கொண்டு அமர்ந்தான்.
அவளை இலகுவாக்கும் பொருட்டு அவள் கைகளை தன் கைளில் எடுத்து “இப்ப படுக்கத்தான போற எதுக்கு இந்த நகை போட்டுட்டு வந்த” என பேசிக்கொண்டே மெதுவாக ஒவ்வொரு வளையலாக கழட்டி கொண்டு இருந்தான்.
“அம்மாவும் அத்தைகளும் தான் போட்டு விட்டாங்க”
அவன் வளையல்களை கழட்டி புறங்கையிலிருந்து மேல் கை வரை மெல்ல மெல்ல முத்தமிட்டு கொண்டே முன்னேறியவன் கழுத்தில் பின்கழுத்தில் என முத்தமிட்டு முத்தமிட்டே ஒவ்வொரு நகையாக கழட்டினான்.
அவனின் ஒவ்வொரு முத்தத்திற்கும் எழில் முதலில் கூச்சத்தில் நெளிந்தவள் பின்பு மயங்கி கிறங்கி அவனின் தலைமுடியில் தன் கைகளை விட்டு இறுக்கிப் பிடித்தாள். அவளின் ஒத்துழைப்பில் முற்றிலுமாக அவன் உணர்வுகள் கிளர்ந்தெழ…..
அவள் காதோரம் ஹஸ்கி வாய்ஸில்”இந்த ஜடைய பிரிச்சிடு இல்லாட்டி உன் முதுகுல பட்டு உறுத்தும்” என்றான்.
அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்தவள் நாணத்துடன் தலை முடியை பிரித்து அதிலிருந்த நகைகளை இவனின் அவசரம் புரியாமல் மெல்ல பிரித்து எடுக்க இவன் பொறுமை இழந்து முடியை கொத்தாகப் பிடித்து பிய்த்து எறிய அது அறையில் ஒரு மூலையில் போய் விழுந்தது. ஏற்கனவே அவன் கழட்டிய நகைகளும் அங்கங்கே சிதறி கடந்தது…
இவளோ தலையைமுடியில் கைவைத்தவாறே அவனின் முகம் பார்த்து வலியில் “ஸ்ஸ்…. மாமா வலிக்குது மெதுவா”
தாலியின் மஞ்சள் சரடு மட்டுமே கழுத்தில்….. அது தனி சோபையை தர……
அறையில் இருந்த பூக்களின் நறுமணமும்…. மனைவியின் மேல் எழுந்த துளசி சோப்பின் வாசனையும் …. புதுத்தாலியின் மஞ்சள் வாசனையும் .…. அவனை மேலும் நெருங்க சொல்லி தூண்ட….
அவளை நெருங்கி இறுக்கி அணைக்க இருவருக்கும் நடுவில் உறுத்தலாக இருந்த ஒட்டியாணத்தை வெடுக்கென்று வேகமாக இழுக்க அவன் இழுத்த வேகத்தில் இடுப்பில் சிறு கீறலை உண்டாக்க அது தந்த வலியில் பெண்ணின் கண்களில் லேசான கண்ணீர்.
அதை எல்லாம் கவனிக்காமல் ஆவேசமாய் முரட்டுத்தனமாக மேலும் அவன் கைகள் அவள் உடலில் முன்னேற அவள் உடலின் வெண்ணெய் குழைவான மென்மையில் கிறங்கி மயங்கி தன் தேடலை துவங்கினான்.அவன் கொண்டது ஆவேசமான வேகம் . அவளை பிய்த்து எடுத்து விழுங்கிடுவது போல….
அவனின் வேகம் கண்டு உடல் நடுங்க அவள் மிரள…… இதை எப்படி எதிர்கொள்ள என தெரியாமல் மிரண்டு அவனை எதிர்க்கும் எண்ணம் தோன்ற உறவு பெண்களின் உபதேசம் மறுக்கும் எண்ணத்தை மழுங்கச் செய்திட… அவனின் ஆவேசத்தை தாங்கி கொள்ள முடியாமல் தனாவின் கைகளில் மொத்தமாக துவண்டாள் காதல் பாவை.
ஒரு கட்டத்தில் அவனின் வேகம் தாளாமல் சற்றே கதறிட …. அவள் கதறலில் பெண்ணின் நிலை உணர்ந்து சற்றே வேகத்தை குறைத்தவன் அவளை இயல்பாக்கும் பொருட்டு ஆவேசத்தை அடக்கி மென்மையை கையில் எடுத்து முத்தம் கொடுத்து முத்தம் கொடுத்தே மொத்தத்தையும் அள்ளிக் கொண்டான். பெண்ணுக்கோ மெல்ல மெல்ல மிரட்சி மறைந்து காதல் கொண்ட மனம் விழித்துக் கொள்ள….
“எழில்” “எழில்” என கொஞ்சிக் கொஞ்சியே அவளிடம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள….. ஏற்கெனவே
மாமன் மேல் பித்தாக இருந்தவள் அவனின் அதித காதலில் மேலும் பித்தாகி”ஜெய் மாமா””ஜெய்மாமா” என்று பிதற்றியே அவனின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தாள்.
விடியல் வரும் வரை இருவரும் மோகவலையில் சிக்கி முத்த மழையில் நனைந்து தங்கள் இணையிடம் தங்களின் இளமை தேடல்கள் முடிவடையாமல் மீண்டும் மீண்டும் மன்மதக்கலையை பயின்று ஒருவரில் ஒருவர் மூழ்கி இன்பத்தை பகிர்ந்து உயிர் உருகிட மொத்தமாக நிலையிழந்து பெரும் உவகை கொண்டனர்.
இளமை தாகம் தீர்ந்து களைப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தப்படியே உறங்கினர். பேதையின் காதல் காளையின் மனதை மாற்றி மோகம் கொள்ளச் செய்து ஊரார் பார்க்க மனைவியாக ஏற்று கொள்ள…. இன்று அழகான கூடலில் நிறைவு பெற… அவள் காதல் மனதின் அழைப்புறுதல் அடங்கி மன்னவனின் நெஞ்சமே மஞ்சம் என தஞ்சம் கொண்டு ஆனந்த் துயில் கொண்டாள் மங்கை.
இரவு பொழுதல்லவா
பால் நிலவல்லவா
மன்மத கலையல்லவா
காதல் அலையல்லவா
மோக வலையல்லவா
காமன் கணையல்லவா
காம லீலையல்லவா
முத்த மழையல்லவா
மூழ்கும் நிலையல்லவா
இதயங்கள் துடித்தல்லவா
இன்பம் பகிர்ந்தல்லவா
உருகும் உயிரல்லவா
வெற்றி சமமல்லவா…
Super and nice sis