ATM Tamil Romantic Novels

புள்ளி மேவாத மான் – 9

புள்ளி மேவாத மான் -9

 

 

  நிறைவான தாம்பயத்தாலும் விடியலுக்கு முன் தான் தூங்கியதாலும் இருவரும் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தப்படி உறங்கி கொண்டு இருந்தனர்.

 பின்கட்டில் பால் கறக்க தோட்ட வேலை செய்ய வந்த ஆட்கள் எழுப்பிய சத்தத்தில் மெல்ல கண் விழித்தாள் எழில். எழுந்தவள் முதலில் கண்டது தன் மாமனின் முகத்தை தான். முகத்தை வழித்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு எழுந்தவள் தன்நிலை கண்டு வெட்கி தன் உடைகளை வாரி சுருட்டிக் கொண்டு குளியலைறைக்கு ஓடினாள்.

 சிறிது நேரம் கழித்து தனா கண் விழித்தவன் கண்டது சில்வர் கரை வைத்த மயில் நிறத்தில் டூப்ளிகேட் பட்டு  உடுத்தி முடி காய்வதற்காக விரித்து விட்டு இருந்த நீள கூந்தல் தோகையா விரிந்து இருக்க  பார்ப்பதற்கு நிஜமான மயில் போல காட்சி அளித்த எழில் தான்.

 குனிந்து பீரோவிற்கு அடியில் எதையோ தேடிக்கொண்டு இருந்தாள். அவள் குனிந்து தேடும் போது சற்றே புடவை விலகி சில இடங்கள் அவனுக்கு இலவச தரிசனம் கொடுத்துக் கொண்டு இருக்க….

 

இரங்கநாதர் பள்ளிக்கொண்ட மாதிரி இவள் புறம் திரும்பி படுத்து…..

 “என்னத்தடி இப்படி தேடிட்டு இருக்க.. ” என்றான்.

 அதே நிலையில் அவனை நிமிர்ந்து பார்த்து “க்கும் நேத்து நீங்க எல்லாம் பிச்சு எறிஞ்சிக்கல்ல அந்த நகையுல  அம்சவில்லையை காணோம் அதான் தேடிகிட்டு இருக்கேன்” என சொல்லி உதட்டை சுழித்தாள்.

 அவளின் உதட்டு சுழிப்பு இவனுக்கு அழைப்பு விடுப்பது போல இருக்க….. அவளை அணைக்க வேண்டும் என்ற தாபம் கொள்ள…… எழுந்து வந்து அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்து

 “இரு நானும் சேர்ந்து தேடறேன்” என்றான் கள்ளத்தனமாக..

 

தனா நகையை எங்கே தேடினான். அவன் தேடல் எழிலிடம் தான்.

தேடலில் தொடங்கி தேவையை பூர்த்தி செய்து அழகான சங்கமமாக நிறைவுப் பெற்றது.

 பின்பு இருவரும் குளித்து ரெடியாகி வர மணி பதினொன்று ஆகிவிட்டது. நேரம் கழித்து கீழே  செல்ல அவளுக்கு வெட்கமாக இருக்க….

 தனாவிடம்”எவ்வளவு லேட்டாயிடுச்சு எல்லாம் உங்களால தான் இப்ப கீழே போய் எல்லார் முகத்தையும் பார்க்க வெட்கமா இருக்கு. இன்னும் அம்சவில்லையை தேடி தரவே இல்ல…”

 “அதுக்கென்னடி இரண்டு பேரும் சாப்பிட்டு வந்து சேர்ந்து தேடலாம்”என்றான் சிரித்து கொண்டே…

 தலைக்கு மேலே இருகைகளையும் கூப்பி “ஐயா சாமி ஆள விடுங்க… நானே தேடிக்கிறேன்” என்றாள் .

 அவளின் செயலில் சிரித்து கொண்டே “என்னடி பிடிக்காத மாதிரி ரொம்ப அலுத்துக்கற…. நைட் எனக்கு அப்படி தோனலையே. ஆனால் பேச்சும் செயலும் வேற மாதிரில இருக்கு” என்றான் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து கொண்டு…

 அவன் பார்வையிலும் பேச்சிலும் வெட்கி அவன் நெஞ்சிலேயே அடைக்கலம் ஆனாள். சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்து விட்டு “வா கீழே போகலாம்” என்றான் மெதுவாக…..

 நெகிழ்ந்து இருந்த புடவையை சரி செய்து கொண்டு தனாவுடன் கீழே சென்றாள். இருவரும் மெல்ல பேசி சிரித்துக் கொண்டே கீழே வர….. இணைந்து இறங்கி வருவதை  பார்த்து அதுவும் தனா எழில் கையைப் பிடித்துக்கொண்டு வர  வீட்டினர்க்கு மனம் நிறைந்தது.

 எல்லோர் முகத்தையும் பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்ற எழிலை சகஜமாக்கும் பொருட்டு திலகா “அரசி விளக்கேத்துமா… போ தனா இரண்டு பேரும் சாமி கும்பிட்டு வந்து சாப்பிடுங்க..” என்றார்.

 இருவரும் சாப்பிட்டு முடித்து முன்னறைக்கு வர சுந்தரமும் கண்ணனும் பொண்ணு மாப்பிள்ளை நலுங்கு யார் யார் வீட்டுக்கு விருந்துக்கு செல்வது என தேதிகளை பட்டியலிட்டனர்.

 இதுவே ஒரு மாத கணக்கிற்கு வர தனாவுக்கோ கவலை. எழிலைக் கூட்டிக் கொண்டு  ஹனீமூன் செல்ல வேண்டும் என நினைத்திருந்தான்.

 அதுக்கு வேற சுந்தரம் ஏதாவது சொல்வாரோ என பயந்து கொண்டு மெதுவாக சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து இருந்தான்.

 இப்ப இவ்வளவு நாட்களா என கவலை கொண்டான். அவன் முகத்தை பார்த்து எழில் குழம்பி என்னவென கண்களால் கேட்டாள். ஒன்றுமில்லை என கண்களால் அவளை அமைதிப்படுத்தினான்.

 எல்லாம் பேசி முடித்துவிட்டு மதியம் உணவையும் உண்டு விட்டு மாலை வருவதாக சொல்லிவிட்டு எல்லோரும் சென்று விட….

 “வா உனக்கு அம்சவில்லையை தேடி தருகிறேன்” என கண்ணடித்து குறும்பாக சொன்னான்.

 “க்கும் தேடி கொடுத்துட்டாலும்……” என்றாள் நொடித்துக் கொண்டே….

“மாமனடோ தேடல பார்க்கத்தானே போற” என்றான் அவள் மேனியை பார்வையாலேயே தின்று கொண்டே…. 

அவனின் பேச்சும் பார்வையுமே அவளுக்கு சொன்னது அவனின் தேடல் என்னவென்று….. 

சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தவன் யாருமில்லை என்றதும்  அவளை ஒவ்வொரு அடியாக  நெருங்கி வர அவள் பின்னால் நகர தீடிரென  ஸ்டைலாக ஒருகாலை தூக்கி வேட்டியை மடித்து கட்டியவன் வேகமாக அவளை கைகளில் தூக்க வர அவன் நோக்கம் அறிந்து அவன் கைகளில் அகப்படாமல் ஓடினாள். 

தனா துரத்தி கொண்டு ஓட மாடிப்படி வளைவில் வகையாக சிக்கி கொண்டாள். அவள் கையைப் பிடித்து ‘மாட்டினாயா’ என புருவம் உயர்த்தி தலையை ஆட்டி கண்களால் பேசவும். அதில் அவள் மயங்கி நின்ற நொடி அவளை கைகளில் அள்ளி இருந்தான்.

 அவளை தங்கள் அறைக்கு தூக்கி சென்று கதவை காலால் ஒரு எத்து விட  அது சாத்திக் கொண்டது . படுக்கையில் அவளை தூக்கி போட்டவன் அவனும் அவள் மேல் தொப்பென விழுந்தான்.

ஆனால் அவள் மேல் பாராம் ஏற்றாமல் அவள் இருபுறமும் கைகளை ஊன்றிக் கொண்டான்.

 அவள் மூக்கோடு மூக்கை உரசி “என்னடி தேடலாமா” என்றான் சல்லாபமாக..

 அவளோ வெட்கத்தில் முகத்தை திருப்பி தலையணையில் புதைத்து கொண்டாள். மெல்ல மெல்ல முத்தம் கொடுத்து அவளை தன்புறம் திருப்பினான். இறுதியாக அவளின் இதழை வன்மையாக கடித்து உயிரையே உறிஞ்சு எடுத்திடுவது போல நீண்ட முத்தம் கொடுத்து அவள் காது மடல் கழுத்து அதற்கு கீழே  என உடல் எங்கும் முத்தம் ஊர்வலம் நடத்தி அவளை கழைந்து களைத்து போகும் வரை நீண்டது அவனது தேடலும் கூடலும்……

 அதுக்கப்புறம் அம்சவில்லையை எடுத்து கொடுத்துவிட்டான் அது வேற விஷயம்.

 அடுத்தநாள் எழிலுக்கு தனா வீட்டினர் எண்ணெய் நலுங்கு வைத்தனர். இரண்டு நாட்கள் கழித்து தனாவிற்கு எழில் வீட்டில் எண்ணெய் நலுங்கு வைத்தனர். தாலி பிரிச்சு கோக்க.. கடாவிருந்து…. அடுத்தடுத்து உறவினர்கள் வீட்டு விருந்து என ஒரு மாதம் வேகமாக சென்றது.

 இந்த  ஒரு மாத காலத்தில் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் வந்து இருந்தது. விருந்து எல்லாம் முடித்து கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு தேனிலவிற்காக எழிலை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

வயநாடு பூலோக சொர்க்கம். ஹனிமூன் சூட்  ஒரு வாரத்திற்கு புக் செய்திருந்தான் தனா. இவர்கள் சென்று சேரவே மாலை ஆகிவிட…. இவர்கள் குளித்து  கிளம்பி இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து சூட்டிற்கு வந்ததும் பார்த்ததும் தனா உற்சாகமாக  விசிலடித்தான்.

 சூட்டில் இவர்களின் படுக்கறை தான் ஹைலைட் . அறை முழுவதும் வாசனை மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு  வெண்மை நிற படுக்கையில் நடுவில் சிவப்பு ரோஜா இதழ்களால் இதய வடிவில் வரையப்பட்டு  அதன் மேல் பேபி பிங்க் நிறத் துணியாலான இரண்டு அன்னப்பட்சிகள் முத்தமிட்டு கொள்வது போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 அறை முழுவதும் மெழுகுவர்த்தி வாசனையாலும் ரூம்ஸ்பிரே வாசனையாலும் நிரம்பி இருக்க நல்ல ஒரு ரொமான்டிக் மூட்டை கிளப்பி விட ஏதுவாக இருக்க…..

 அந்த இரவு அவர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமைந்தது.

முதல் மூன்று நாட்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை கொண்டது எல்லாம் தாபமும் மோகமும் மட்டுமே.

 நினைத்த நேரம் கூடி களித்து….. பசிக்கும் போது சாப்பிட்டு.…. சோர்ந்து போகும் போது கொஞ்சமாக தூங்கி…. என சந்தோஷமாக மனநிறைவாகவே இருவரும் இருந்தனர்.

 அடுத்த மூன்று நாட்கள் சைட் சீயிங் சென்றனர். தனா எழிலை தன் அணைப்பிலேயே வைத்துக்கொண்டே தான் சுற்றினான்.

நெருக்கமாக சில பல போட்டோக்களை எடுத்து கொண்டனர்.

 கிளம்பும் நாளில் தனாவிற்கு செல்வதற்கு மனதே இல்லை. எழிலை கொஞ்சிக் கொண்டும் சீண்டி விளையாடிக் கொண்டும் இருந்தான்.

எழில் தான் கோபத்தில் இடுப்பில் கை வைத்துக்கொண்டு முறைத்தவாறே “மாமா….இப்ப கிளம்ப போறிங்களா இல்லயா”என்றாள்.

 “ப்ளீஸ்டி இன்னைக்கு ஒரு நாள் இருந்துட்டு நாளைக்கு போலாமா” என்றான் பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு…

 அவனின் முகப்பாவனையைக் கண்டு சிரிப்பு வந்த போதும் அதை அடக்கி கொண்டு,

 “மாமா நாம வீட்டில் இன்னைக்கு வரோம்னு சொல்லி இருக்கோம். என்ன நினைப்பாங்க. நேரமா கிளம்பினா தான் இராத்திரிக்கு உள்ள வீடு போக முடியும்” 

“எழில்…. எழில்… ப்ளீஸ்டி… கடைசியா ஒரு தடவை… அப்புறம் உடனே கிளம்பிடலாம்” என கெஞ்சி கொஞ்சி தன் காரியத்தை சாதித்து கொண்டான்.

மதியம் போல தான் அவசர அவசரமாக கிளம்பினர். ஊர் வந்து சேர நடுஇரவு ஆகிவிட…. அதற்குள் வெற்றி மூலம் சுந்தரம் இரண்டு மூன்று தடவை போன் செய்துவிட்டார். 

இவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி விட…. வழக்கம் போல் தனா காலையில் எழுந்து தனது வேலைகளை பார்க்க கிளம்பி விட…. அவன் செல்லும் வரை அவனுக்காக எல்லாம் பார்த்து பார்த்து தானே செய்தாள் எழில்.

 எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருந்த போதும் அவனுடைய துணிகளை துவைப்பது இருளாயி பாட்டியை மேல் வேலைக்கு வைத்துக்கொண்டு அவனுக்கு பிடித்த மாதிரி சமைப்பது என அவனுக்கான வேலைகளை காதலோடு செய்தாள்.

 அந்த வீட்டில் தனாவோடு ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்து வாழ்ந்தாள்.அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவன் பின்னாடியே தான் அலைவாள். அவன் தேவையை உணர்ந்து அவன் கேட்கும் முன்பே அவனுடைய முகம் பார்த்து செய்தாள்.

 எழிலின் கவனிப்பில்  தனா மனதில் இவ்வளவு நாட்களாக இருந்த வெறுமை போய் அமைதி குடிக் கொண்டது. தன் போல் ஒற்றை ஆளாக தனித்து விடாமல் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொண்டு எழிலோடு குடும்பமாக வாழ ஆசைப்பட்டான்.

 இப்படியே சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் வாழ்க்கை போய் கொண்டு இருக்க…. இவர்களின் காதலுக்கும் அன்பிற்கும் உடனே குழந்தை இருக்கும் என தனா – எழில் வீட்டினர் எதிர்பார்க்க…. ஒருவருடம் கடந்தும் குழந்தை உண்டாகவில்லை. 

உறவினர்கள் எழிலிடம் கேட்டு கேட்டே அவளை மனதளவில் சோர்வடைய செய்தனர். அவளுக்கே தனக்கு அந்த பாக்கியம் இல்லையோ என தன்னை தானே வருத்திக் கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டாள்.

 முதலில் இதெல்லாம் தனாவிற்கு தெரியவில்லை. அவனை வருத்தப்பட வைக்க விரும்பாமல் அவனுக்கு தெரியாமல் மறைத்து கொண்டாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவனுக்கு  தெரியாமல் போகுமா….

 எதற்கோ தன்னை வருத்திக் கொள்கிறாள் என தெரிந்தது. காரணம் தெரியாமல் எழிலை விசாரிக்க…. வற்புறுத்தி கேட்ட பிறகே அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்து கொண்டே தன் மனபாரத்தை கொட்டித் தீர்த்தாள்.

 எழிலை வெகுவாக போராடி தான் சமாதானம் செய்ய வேண்டி இருந்தது. அதற்கும் டாக்டரிடம் அழைத்து சென்றான். டாக்டர் பார்த்து விட்டு இருவருக்கும் எல்லாம் சரியாக இருக்கிறது என்று விட… தனா தனக்கும் சேர்த்து டெஸ்ட் செய்து கொண்டான்.

 டாக்டர் எழிலிடம் மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்து கொள்ளுமாறு சில அறிவுரைகள் கூறி  விட்டமின் மாத்திரைகள் கொடுத்து அனுப்பிவிட்டார்.

 அதற்கு பிறகு எழில் இயல்பாக இருந்த போதும் அவளின் மனதின் ஓரத்தில் சிறிது கவலை இருந்து கொண்டு தான் இருந்தது.

 மேலும் ஆறு மாதங்கள் கடந்த நிலையில் வெற்றிக்கு பெண் பார்த்து நிச்சயிக்கப்பட… அந்த நிச்சய விழாவில் வீட்டின் மூத்த மருமகளாக எல்லாம் முன்னாடி  நின்று எடுத்து கட்டி செய்ய…

 உறவு பெண்கள் முகம் சுழிக்க தங்களுக்குள் பேசிக் கொள்ள… பெண் வீட்டார் உறவில் மூத்த பெண்மணி ஒருவர் சபையில் எல்லோர் முன்பும் எழிலிடம் “ஏம்மா… நீ வந்து எல்லாம் முன்னாடி செய்யலாமா… நீயா புரிஞ்சு ஒதுக்கிக்குவேனு பார்த்தா… சொன்னா தான் புரியும் போல.. கொஞ்சம் தள்ளியே இரு” என சொல்லிவிட….

 எழிலை சொன்னதும் தனாவிற்கு ஏகப்பட்ட கோபம். வெற்றிக்காக சபையில் ஏதும் பேசாமல் பொறுத்துக் கொண்டான்.ஆனால் சுந்தரமோ கண்ணனோ பொறுத்துக் கொள்ளவில்லை.

 பெண்ணின் தந்தையிடம் நேரடியாகவே “எங்கள் வீட்டுப் பெண்ணை  எங்கள் முன்பே இப்படி பேசறாங்க… கல்யாணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் தானே ஆகிறது. நீங்க பார்த்துட்டு பேசாம இருக்கலாம் எங்களால முடியாது . எங்க சார்ப்பா என் அண்ணன் மகனும் மருமளும் தான் முன்ன நின்னு எல்லாம் செய்வாங்க. அதுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம். இல்லைனா இதோடு எல்லாம் நிறுத்திக்கலாம்” என்றுவிட்டார் சுந்தரம்.

 பெண்ணின் தந்தையோ “அவர்கள் சார்ப்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் எப்படி செய்தாலும் எங்களுக்கு சம்மதம்” என்று சமாதானம் பேச ஒரு வழியாக நிச்சயம் நடந்தது.

 என்னதான் தனா எழிலைக் கொண்டே செய்த போதும் எழில் மனதளவில் நொறுங்கி தான் போனாள்.

 அவளை மேலும் முடக்கி போட பூங்கொடி வடிவில் விதி அவளை நோக்கி புயல் போல வந்து கொண்டு இருப்பதை அவள் அறியவில்லை…… எழில் அதை எதிர்கொண்டு மீள்வாளா…. முடங்கிப் போவாளா…

 

1 thought on “புள்ளி மேவாத மான் – 9”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top