ATM Tamil Romantic Novels

புள்ளி மேவாத மான் – 10

புள்ளி மேவாத மான் -10

 

   தனா –  எழில் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் இல்லை என்ற குறையை தவிர அவர்கள் வாழ்க்கையில் அன்பிற்கோ காதலிற்கோ குறைவில்லாமல் நிறைவாக தான் சென்றது.

 ஒரு நாள் இரவு தனா வெகு தாமதாக தான் வீடு வந்தான். வரும் போதே ரொம்ப சோர்வாக முகம் கவலையுடன் வந்தான். அவனைப் பார்த்துமே எழிலுக்கு பகீரென்றது.

 பதறிப்போய் “என்னாச்சு மாமா… ஏன் இப்படி இருக்கறிங்க…”

 ஒன்றுமில்லை என்பது போல தலையாட்டியவன் எதுவும் பேசாமல் சோபாவில் தலை சாய்த்து அமர்ந்து கொள்ள….

 எழில் தான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தாள். அவனை ஒருநாளும் இப்படி பார்த்ததில்லை இவள்.

 நேரம் தான் சென்று கொண்டு இருந்தது. எழில் சாப்பிட அழைத்தும் அவன் ஏதும் பேசவும் இல்லை சாப்பிட வரவும் இல்லை.

 தோசை எடுத்து வந்து”மாமா சாப்பிடுங்க..” என ஊட்ட முயல…

 “ப்ச்ச்… வேணாம் எழில். நீ போய் சாப்பிடு”

 கெஞ்சி கெஞ்சியே இரண்டு தோசைகளை ஊட்டியவள் தானும் இரண்டு சாப்பிட்டு விட்டு வந்துப் பார்க்கும் போது கண்களை மூடி படுத்திருந்தான். ஆனால் புருவம் நெரித்து ஏதோ யோசனையில்  இருக்க…… உறங்கவில்லை என்பதை பார்த்ததும் தெரிந்து கொண்டாள்.

 எதுவும் பேசாமல் வழக்கம் போல் அவனருகில் அவனை அணைத்தாற் போல படுத்துக் கொண்டாள். அவனை பார்த்தவாறே படுத்திருந்தவளுக்கு என்னவென தெரியாமல்…. கேட்டு கஷ்டப்படுத்த விரும்பாமல்..…  சொல்லவேண்டியதா இருந்தா அவங்களே சொல்வாங்க.…  என தனக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தவள்  கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கிவிட….. அவனுக்கு தான் தூக்கம் இல்லை.

 அவனின் சிந்தனை முழுவதும் இன்று பூங்கொடி தந்தை சொன்ன விஷயங்களிலேயே..…

 அவன் மில்லில் வேலையை முடித்துவிட்டு வீடு வந்து கொண்டு இருக்கும் போது …. பூங்கொடியின் தந்தை கோவிந்தன் பஸ்ஸிலிருந்து இறங்கி ஊருக்குள் செல்லும் சாலையில் சென்று கொண்டிருக்க…

 தனா அவர் அருகில் வண்டியை நிறுத்தி “வாங்க மாமா நான் வீட்ல இறக்கிவிடறேன்”

 எதுவும் பேசாமல் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டார். அவர் பேசாமல் வரவும் தனாவே தான் பேச்சுக் கொடுத்தான்.

 “ஏங்க மாமா எங்க போயிட்டு வரிங்க”

 “பூங்கொடிய பார்த்துட்டு வரிங்களா….”

 “பூங்கொடி நல்லா இருக்கா..”

 அவன் பூங்கொடியை பத்தி எதார்த்தமாக தான் கேட்டான். அவன் கேட்கவும் அவர் அழுக ஆரம்பித்து விட்டார்.

 அவர் அழுகவும் பதறிப்போய் வண்டியை ஓரங்கட்டி நிறுத்த…. தலையில் அடித்துக்கொண்டு  கதறியவாறே “நான் தப்பு பண்ணிட்டேன் மாப்புள்ள…. தப்பு பண்ணிட்டேன்…”

 தனா பதறிக் கொண்டு “மாமா…. என்னாச்சு….. என்னனு சொல்லுங்க முதல்ல”

 “என் வீம்பாலயும் வரட்டு கௌரவத்தாலயும் என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்”

 “நான் என் பொண்ணை உனக்கு கொடுக்கக்கூடாதுனு பிடிவாதத்துல நல்லா விசாரிக்காம டவுன்ல படிச்சு வேலைல இருக்கானு ஒரு அயோக்கியனுக்கு கட்டிக் கொடுத்து என் பொண்ணு வாழ்க்கையை நானே சீரழிச்சிட்டேன்”

 “கல்யாணம் பண்ணின புதுசுல நல்லா தான் இருந்தான். யாரோ நீயும் பூங்கொடியும் லவ் பண்ணினதை சொல்லிட்டாங்க போல அன்னைலருந்து சந்தேகப்பட்டு தினமும் குடிச்சிட்டு வந்து அடிச்சு சித்ரவதை பண்றான்” 

“நான் ஆத்திரப்படாம உனக்கே என் பொண்ண கட்டி கொடுத்து இருந்தா உள்ளூர்லயே என் பொண்ணு என் கண் முன்னாடி சந்தோஷமா இருந்திருப்பா…”

 தற்போது அவன் மனம் முழுவதும் எழிலே வியாபித்திருக்க எந்த இடத்திலும் பூங்கொடியின் சுவடுகள் இல்லை என்ற நிலையில் பூங்கொடியோடு இணைத்து பேசிய அவருடைய இந்த பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை.

 “நான் பண்ணின பாவம் தான் என் பொண்ணை சுழற்றி அடிக்குது. என்ன மன்னிச்சுடுப்பா..” என தனாவின் கைகளை பிடித்துக்கொண்டு அழுதார்.

 அவரை எப்படியோ சமாதானம் செய்து வீட்டில் விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தான் அப்படி ஒரு நிலையில்….

 தானாக தானே தேடிப் போய் காதல் சொன்னோம். ஆசையை வளர்த்து நம்பிக்கை கொடுத்து அதை காப்பாற்ற முடியாமல் ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டோம் என்று ஏற்கனவே இறுகி போய் இருந்தவனை எழிலின் காதல் தான் மீட்டது.

 இப்போது இதை எல்லாம் கேட்டவுடன் ஒரு குற்றவுணர்வு வந்து மனதில் உட்கார்ந்து கொண்டது. அது பூங்கொடியை கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போனதே என்றல்ல. காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட நான் காரணம் ஆகிவிட்டேன என்பது தான்.

 படிப்பு முடிந்து வந்து ஆலை ஆரம்பித்த காலத்தில் கல்லூரிக்கு போய் கொண்டு இருந்த பூங்கொடி மேல் ஆசை கொண்டு இவனே தான் வழியப் போய் காதல் சொன்னான். கட்டிக் கொள்ளும் முறையும் இருக்க…. ஊரில் நல்ல படிப்பு படித்து பெரிய குடும்பத்து பையனாக…. நல்ல வாட்டசாட்டமாக அழகான இருக்கவும்…..அவளும் ஏற்றுக் கொண்டாள்.

 அவள் கல்லூரிக்கு செல்லும் வழியில் பார்க்கப் பேச என இருக்க… அது அரசல் புரசலாக கோவிந்தன் காதிற்கு வர… ஏற்கனவே மாணிக்கவேலின் வளர்ச்சியும் செல்வாக்கும் பிடிக்காமல் பொறாமையில் இருந்த  கோவிந்தன் பெண்ணின் காதலை முழு மனதாக எதிர்த்தார்.

 மாணிக்கவேலும் லட்சுமியும் பெண் கேட்டு போக அவமானப்படுத்தி அனுப்பி விட்டு…. அவசர அவசரமாக பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்.

 அந்த அவசர கல்யாணம் தான் இன்று அலங்கோலமாக நிற்கிறது.

 எழிலின் காதலில் வாழும் தனாவுக்கு  தான் காதல் என நினைத்து எல்லாம் காதலே இல்லை என ஏற்கனவே உணர்ந்திருந்தான்.

 ஏதாவது செய்து பூங்கொடியின் வாழ்க்கையை சரி செய்திடவேண்டும் என அந்த நினைவிலேயே உழன்று கொண்டு இருந்தவனை எப்போதும் போல் எழில் தன் காதலால் அவனை தேற்றிக் கொண்டு இருந்தாள்.

 தன் கணவனை ஏதோ மனதளவில் அரித்துக் கொண்டு இருக்கு என கண்டு கொண்டவள் அவனாக சொல்லும் வரை கேட்டு கஷ்டப்படுத்த விரும்பாமல் பசி தூக்கமின்றி தவித்தவனை நேரத்திற்கு பசியாற்றி…. மடி தாங்கி தூங்க வைத்து தாயாக மாறி போனாள்.

 துவண்ட நேரத்தில் கேள்விகளற்ற எழிலின் அரவணைப்பு  தனாவ ஓரளவு தேற்றி தெளிய வைத்திருக்க…. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவும் எடுத்திருந்தான். அதனால் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான் தனா.

 அதற்குள் வெற்றியின் திருமணம் நெருங்கி விட அதில் பூங்கொடி பிரச்சினையை தள்ளி வைத்தான். சுந்தரம் சொன்னது போலவே எல்லா சுபகாரியங்களிலும் தனா எழிலை முன்னிறுத்தியே செய்ய…

 ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமாக தன்னை அலங்கரித்து கொண்டு வளைய வந்த எழிலை காண காண தனாவின் காதல் மனம் விழித்துக் கொண்டது.

 எழில் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் பஞ்சமா என்ன… திலகா தேவி கீர்த்தி என எல்லோரையும் கூட்டிக்கொண்டு பார்லர் போனாள்.

 திலகா தேவி வயதின் காரணமாக மறுக்க…. திலகாவோ “வேணாம் அரசி…  மாமாங்க இரண்டு பேரும் திட்டுவாங்க நீயும் கீர்த்தியும் செஞ்சுங்கோ”

 “நான் பேசுறேன் மாமாகிட்ட…. சரினு சொல்லிட்டா நீங்க வரனும். ஓகேவா….”

 “இந்த வயசுல எங்களுக்கு அதெல்லாம் நல்லா இருக்காது. வேணாம் அரசி” என தேவியும் சேர்ந்து கொள்ள…

 “அத்தைஸ்…. நாம அழகா இருக்கோம் இல்லை அது வேற…. அதுக்காக அழுது வடிஞ்சிகிட்டு இருக்க முடியுமா…..  இருக்கற அழக சூப்பரா மெயின்டென் பண்றோம். கல்யாணத்துல  கெத்தா   சுத்தறோம்” என்றாள் கலகலப்பாக….

 பிறகு சுந்தரம் கண்ணனிடம் எழில் கேட்க அவர்களின் செல்ல மருமகள் கேட்டு இல்லனா சொல்லப் போறாங்க. சிரித்துக் கொண்டே சம்மதம் சொல்லவும் ஆவென வாயைப் பிளந்து பார்த்தனர் திலகாவும் தேவியும்.

 வெற்றியின் வருங்கால மனைவி கனிமொழியையும் சேர்த்து கொண்டாள். பெண்களுக்கு மட்டும் ஒரு வாட்சப் குரூப் அதில் எந்த நேரமும் சாட்டிங் தான். புடவை அதன்கலர்க்கு ஆர்க்கிட் பூக்கள்  தோதான ஜ்வல்ஸ் என எல்லோரையும் இணைத்தாள்.

 கனிமொழிக்கும் திலகாவுக்கும் எழிலால் ஒரு ஒற்றுமை இழையோடியது.வெற்றி கனிக்கு போன் செய்யும் போது எல்லாம் அவள் போன் பிசியாகவே இருக்க…..

 “எப்ப போன் பண்ணாலும் பிசியாவே இருக்க… நீயா பண்ணுவேனு பார்த்தா அதுவும் கிடையாது… என்ன தான் நினைச்சிகிட்டு இருக்க” கடுப்பில் காய்ச்ச…..

 “நான் என்னங்க பண்ணட்டும். அத்தைங்க  எழிலக்கா யாராவது பேசிட்டே இருக்காங்க. அதான் நைட் பேசறோம்ல அப்புறம் என்னங்க”

 “நைட் பேசுவது எல்லாம் எனக்கு பத்தாது. எங்க அண்ணனும் அண்ணியும் கல்யாணத்துக்கு முன்னாடி ஓட்டுன ரொமான்ஸ் படத்துல பாதி கூட நாம இல்ல… நானே நொந்து போய் இருக்கேன். இவ வேற எரிச்சல் படுத்திகிட்டு….”

 “சரி சரி கோபப்படாதிங்க என் புஜ்ஜீல்ல… செல்லம்ல்ல…” என கொஞ்சி தாஜா செய்து அவனை மலை இறக்கினாள். அவனும் சலுகையாக  போனிலேயே சிலபல முத்தங்கள் கொடுத்து வாங்கிய பிறகே விட்டான்.

 மாமியார் இரண்டு பேரையும் உள் வேலையை பார்க்க சொல்லிவிட்டு பெண்களுக்கான வெளி வேலைக்கு இவள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டாள். அதற்காக தினமும் கீர்த்தியை கூட்டிக்கொண்டு வெளியே சென்று வந்தாள்.  திருவு கருணாவும்  இவர்களுக்கு டிரைவர் வேலை செய்தே நொந்து போனர். 

சுந்தரம் வீட்டிற்கும் தங்கள் வீட்டிற்கும் நடந்து கொண்டே  இருந்தாள். இவளின் அலைச்சலைப் பார்த்து சுந்தரம் கூட தனாவிடம் கல்யாணம் முடியும் வரை இங்கேயே இருங்க என சொல்லிவிட….   எழில் எங்க அடங்குனா…. 

கொஞ்சம் நேரம் தனா தங்கள் வீட்டிற்கு வந்துட்டா கூட பின்னாடியே வந்துடுவா…. அவன் வெளியில் கிளம்பும் வரை இருப்பா….

 பெரியவர்கள் கண்டு காணாமல் இருந்தாலும் இளசுகள் கேலி பேசியே ஒருவழியாக்கியது. அவள் அதை எல்லாம் சட்டை செய்யவே இல்லை. தனாவுக்கு தான் வெட்கமாகிவிட…..

 எழிலின் அட்டகாத்தில்  தனா “ஏன்டி புள்ளையார சுத்தற மாதிரி புருஷன சுத்திட்டு இருப்பியா… எந்நேரமும் என் பின்னாடி சுத்தாம போய் கல்யாண வேலையை பாருடி”

 அவனின் நெஞ்சில் சாய்ந்து  சட்டை பட்டனை திருகிக் கொண்டே”நான் என்ன பண்ணட்டும் மாமா நானே சும்மா இருந்தாலும் என் மனசு உங்க பின்னாடி தான வருது…. ம்ம்ம் என்ன பண்ணட்டும்.”என்றாள் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு….

 அவள் விளையாட்டாக சொன்னாலும் அது தானே உண்மை.

 கல்யாண நாளும் வந்துவிட நிச்சயம் ரிசப்ஷன் முகூர்த்தம் என எழில்  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு மேக்கப்பில் மிளிர தனா தலைசுற்றி போனான்.

 அவள சொல்லிட்டு இவன் தான் அவள் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான். அவளோடு ஒட்டிக்கொள்ள… உரசிக்கொள்ள… சடங்கு சம்பிரதாயங்களை சாக்கிட்டு கொண்டான். கேப் கிடைக்கும் போது எல்லாம் கெடா வெட்டிக்கோண்டு இருந்தான்.

 நிச்சயம் முடிந்து வெற்றிமாறனும் கனிமொழியும் ரிசப்ஷனுக்காக நிற்க தனா எழில் திரு கீர்த்தி கருணா வசந்தி என எல்லோரும் மேடையில் வெற்றி கனியை கேலி செய்து கொண்டு இருக்க….

 தனா கண்களால் எழிலிடம் காதல்மொழி பேச அதைப் பார்த்த கருணா “டேய் இங்க ஒருத்தன் தனி டிராக் ஓட்டிட்டு இருக்கான்டா டேய் திரு  என்ன தான் சொல்லு உனக்கே கல்யாணம் பண்ணாலும் அப்பவும் இப்பவும் எப்பவும் உங்க அண்ணன் தான்டா காதல் மன்னன்”

 அதை எல்லாம் அவன் காதிலேயே வாங்கவில்லை அவன் பார்வை முழுவதும் எழிலிடம் மட்டுமே. ரிசப்ஷன் முடிவில் பஸ்டர் வெடித்து கேக் வெட்டி வெற்றி கனிக்கு மாற்றி மாற்றி ஊட்டி ஒருவருக்கு ஒருவர் முகத்தில் பூசி என அந்த ரிசப்ஷன் கோலாகலமாக நடந்தது.

 யாரும் அறியாமல் தனா கேக் சாப்பிட்டு கொண்டு இருந்த எழிலை மேடைக்கு பின்புறம் தள்ளி கொண்டு போனவன் தன்கையில் இருந்த கேக்கை அவளுக்கு ஊட்டிவிட்டான்.

 விழுங்கும் முன்  அவளை இழுத்து வாயோடு வாய் பொருத்தி அவள் வாயிலிருந்த கேக்கை தன் வாய்க்கு இடம் மாற்றி இருந்தான்.

 நாக்கை சுழற்றி சப்பு கொட்டி சாப்பிடவாறே “கேக் செம்ம டேஸ்ட் இல்லடி”என்று கண்ணடித்தான்.

 “ஓஓஹோஹோ….ஓ” என பின்னால் இருந்து இளைய பட்டாளத்தின் கூச்சல்.

  ஒரே வெட்கமாகிவிட எழில் தனா முதுகின் பின் மறைந்து கொண்டாள்.

 மேடையில் மைக் பிடித்து பேசும் பாவனையில் கருணா  “சத்தியமாக உண்மையாக நிச்சயமாக இங்கு நடந்தது எதுவும் நாங்க பார்க்கவில்லை…. பார்க்கவில்லை. நம்பனும் யுவர்ஆனர்”

 கருணாவின் மனைவி வசந்தி “எங்க அண்ணன்  ஹுரோ. ஹீரோ எப்படி இருக்கனுமோ அப்படி இருக்காரு அதுல உங்களுக்கு என்ன பொறாமை. நீங்க ஒரு காமெடி பீஸ் தான். உங்களுக்கு இதெல்லாம் செட்டாகாது”

 திரு “மாமா…. அக்கா சும்மா…..கிழி கிழினு கிழிச்சிடுச்சுல. உன் இமேஜ் டோட்டல் டேமேஜ்”

 கருணா தலையை தொங்க போட்டு கொள்ள எல்லோரும் சத்தமாக சிரிக்க இவர்களின் கலகல பேச்சில் எழில் சகஜமாகி விட எல்லோரும் சாப்பிட சென்றனர்.

 முகூர்த்த நேரத்திலும் எழில் எல்லா வேலைகளையும் எடுத்து கட்டி செய்ய வழக்கம் போல் தனா சைட் அடிக்கும் வேலையை செய்ய…

  மங்கள வாத்தியங்கள் முழங்க சுற்றமும் நட்பும் சூழ வெற்றிமாறன் கனிமொழி கழுத்தில் தாலி கட்டி தன் மனைவி ஆக்கிக் கொண்டான்.

 எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வரும் வரை எழில் ஓயவில்லை. தன் மனகவலைகளை மறந்து ரொம்ப உற்சாகமாகவே எல்லாம் செய்தாள். அது தான் அவள் இயல்பும் கூட.

 ஊரார் பேச்சிற்கு பயந்து முதலில் தயங்கினாலும் தன் குடும்பத்தாரின் ஆதரவில் மிகவும் உற்சாகத்துடன் எல்லாம் செய்தாள்.

 அனைவருக்கும் இவள் உற்சாகம் தொற்றிக் கொள்ள அந்த குடும்பத்தில் ஆனந்தம் ஆனந்தமே…

 

 தன்னுள் பிரவாகமாக

ஊற்றெடுக்கும்அன்பை

அன்பால் நிரப்பி

தன் சூழ் உலகை இனிதே

இனிமையாக்கினாள்

இனியவள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top