13 ஆசை வெட்கமறியாது
அஸீயின் ஏற்பாட்டில்.. மிகையாய் பூக்கள் இறைத்து அலங்கரிக்கப்பட்ட அறை.. வாசனை திரவியங்கள் அளவாய் தெளிக்கப்பட்ட கனவு சோபனஅறை..
கனிகள்/ இனிப்புகள்/ ட்ரை புருட்ஸ் என்று தட்டுக்களில் அலங்காரமாய் அடுக்கப்பட்ட அறை.. பார்த்ததும் அடடா! பிரமாண்டம்! திகைக்கவைக்கும் இந்திரலோகத்தின் படுக்கையறை ..
மணப்பெண்ணான விஜயலட்சுமி, அவளின் செல்ல ஜானும்மாவால் வெள்ளைப்பட்டு உடுத்தி தலைநிறய மல்லிகைப்பூ சூடி.. இலகுவான மேக்கப்பில் இருந்த விஜி அவ்வறையின் அழகில் ஏற்பாட்டில் மயங்கவுமில்லை.. வெட்கமும் கூச்சமும் தயக்கமும் உண்டாகாது வெறித்துப் பார்த்திருந்தாள்..
எனக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி செய்தேன்? தப்பா? சரியா? குழம்பி.. தன் பெரிய கருவண்டு விழிகள் ஈரம் பூக்க.. கையில் கொண்டு வந்த பால் சொம்பை உணவு கூட்டத்தின் அருகில் வைத்துவிட்டு.. அவள் அறை, அவள் கட்டில்தான் ஆனாலும் கட்டிலில் அமர கூட பிரியமில்லாது.. புது கார்ப்பெட்டில் குத்துகாலிட்டு அமர்ந்து.. நெத்தி சுட்டி கவிழ முகமும் அதற்குள் மறைத்து .. அமைதியோ அமைதி.. அழனும் போலவே இருக்க.. இன்று நல்ல நாள் வேணாம்.. நாளை அழுதுக்கலாம் யாரும் இருக்கக்கூடாது.. சத்தம் போட்டு அழனும் குலுங்கி கத்தி அழனும் அடிவயிற்று துக்கம் போக மூச்செடுத்து அழனும்.. பொங்கி வந்ததை தள்ளி போட்டாள்.. அவள் பாவம் செய்திருக்கிறாள்.. அழுது தான் அதுக்கு மன்னிப்பு கேட்கணும்.. அலமர்ந்து கிடந்தாள்.. எதிலேயும் பிடிப்பு இல்ல..
கதவு திறக்கும் ஒலி.. தாழிடும் ஒலி.. யார் அறைக்குள் வந்துருப்பது தெரிந்தும் அவளின் அணுக்கள் கூட அசையல… அருகில் வருவதும் உணர்ந்தாள்.
விஜி.. கனத்த ஆண் குரல்
போடா டேய்.. !!! கருப்பும் சிவப்பும் கலந்த அதரத்துக்கு லேசு டார்க் ரெட் லிப்ஸ்டிக் போட்ட இதழை சுழித்து புத்தம் புதுமணமகனை வரவேற்றாள் விஜி..
கட்டிலுக்கு வா
நீ படு.. இன்னும் நிமிரல மணப்பெண்
நீ படு நான் கீழே படுத்துகிறேன்
அவன் போர்வை எடுப்பது தெரிய..
சொல்றேன்ல பன்னி.. ப்போ மேலேயே படு..
உன் மே…லே..
அவன் சொன்னது லேட்டா புரிய.. படக்குன்னு எந்திரிச்சு அந்த மாமிச மலையின் முதுகில் தன் மெஹந்தி கைகளால் அடி சார்த்த.. அக்கைகளை தன் வலிய கரங்களால் கிடுக்கி பிடி பிடித்து..
தாலி கட்டியதும் திருந்திட்டியோ? நினைச்சேன் விஜி… அதே பிசாசுதான் நீ… ஹாஹா சப்தமிட்டு தன்
முத்து பல் தெரிய ..சதுப்பு முகம் களையாய் ஒளிர சிரித்தான் செல்வா.. அவன் சொர்க்கம் அவனுக்கே சொந்தம் எனும் கர்வம்.. கனவு கைசேர்ந்த நிம்மதி அவனில் தனி அழகு மிளிர்ந்தது.. முரட்டு முகம் கூட பூவாய் மலர்ந்து விகசித்தது..
இப்போ என்ன சொன்ன?
பிசாசு சொன்னேன்..
அதில்ல.. அதுக்கு முன்னாடி..
மேலே வா சொன்னேன்
அதுக்கு பின்னாடி..
தெரில.. சாதித்தான் விஜியின் செல்லு..
நீ நல்லவன் நினைச்சேன்.. ஏதோ சொன்னே.. ம்ம்ம்.. தன் கவலைகள் மறந்து.. நுனைத்த மூக்கு புறங்கையால் தேய்த்து கொஞ்சம் கூட நாகரீகமில்லாது யோசனை.. இருக்கும் தானே.. என்னென்னாலும் அவளோடு வளர்ந்தவன் தானே.. இவளின் ஓட்டை உடைசல் பழக்க வழக்கங்கள் அவனும் தெரியும்தானே.. அதான் ரொம்ப பீல் பிரீ யா இயல்பாயிருந்தாள்..
சரி ஒன்னும் நியாபகம் வரல.. நான் திடீர்ன்னு கட்டிக்கிறேன் சொன்னதில் உனக்கு ஒன்னும் பிரச்னையில்லையே ஹல்க்கு
கண்ணில் காந்தம் வைத்து தன் மனையாளை இஸ்க்கு இஸ்க்கு ன்னு களவாடிக்கொண்டே இருமருங்கிலும் தலையாட்டி தன் பதிலை சொல்ல..
நான் லவ் பெயிலியர்ல இருக்கேன்..
மேலும் கீழும் தலையாட்டி ஊமையாகவே செல்வா பதில் சொல்ல.. மொதல்ல வாயைத் திறந்து பதில் பேசு! சரியா?! பேசல.. அப்புறம் பாரு!!
ம்ம்ம்..
ஒருத்தி இப்படிலாம் மிரட்டுறாளே என்று கொஞ்சம் கூட மதிக்காது தன் புடஜம் புது முழுக்கை பட்டு சட்டை கொஞ்சம் அசௌகரியம் தர.. கழட்ட ஆரம்பித்தான் செல்வா..
என்ன? என்ன? சட்டைல்லாம் கலட்ற? அவன் தோள் உயரம் கூட இல்லாத விஜி ரவுடி பேபி அவன் முன் நின்று.. மூக்கு விடைக்க குதித்து சண்டையிட..
செல்வனுக்கு அதே மந்தகாச சிரிப்பு! என்னவோ தெரியல இதெல்லாம் ரொம்ப இனிச்சுது..
புது சட்ட எரியுது விஜி..அதான்.
வேரொன்னுமில்ல..
கழட்ட உள்ளே போடப்பட்டிருந்த புது முண்டா பனியனுடன் நிற்க.. இரண்டு மலைகளை ஒன்றாக சேர்த்த தோள்கள் காட்டிக்கொண்டு விடைத்த நெஞ்சை பனியன் கவ்வி பிடித்திருக்க.. உலகின் அத்தனை ஆண்மகனுக்கும் சவால் விடும் உன் புதர் போன்ற முடிகள் படர்ந்த அந்த மார்பும் புஜங்களும் கரணைய கைகளும் முதன் முறை இந்த கோலத்தில் கண்டவளுக்கு.. என்னென்னவோ செய்தது விஜிக்கு.. லவ் பீல் இல்ல.. சம் கூச்சம்.. வேறு பக்கம் திரும்பி கொண்டாள் அவன் எப்பவும் போல யதார்த்தமாக இது வரை அணிந்து பழகாத வேட்டியும் ரகுவின் பரிசான கோல்ட் வாட்ச, கனத்த செயின் எல்லாம் கழற்றி ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்தவன்.. விஜி அறையின் ஏசியின் குளிர் சூடாய் தெரிய..
கட்டிலிலிருந்து பெட் சீட் தலையணை எடுத்து தரையில் விரித்து படுத்துக்கொண்டான்..
இன்று இரவு சந்தோஷத்தின் காரணமாக செல்வத்துக்கு தூக்கம்வராது அது அவனுக்கே தெரியும்.. ஆனாலும் கண்ணை மூடி ஆழமாய் மூச்செடுத்து ஆடிய மனசை அடக்க முன்கையை மூடிய கண்கள் பக்கம் வைத்து படுத்துவிட..
கழுத்து நிறைய நகைகளையும் கை நிறைய தங்க வளையல் என்று இன்னும் அலங்காரம் களைக்காத தேவதையா விஜி..
அவன் ஆண் தான் பூண்ட ஆபரணங்கள் எளிதில் களைந்து விட்டான்.. பெண்ணுக்கு? அது தலைவன் தானே களையணும்? இவள் பூசிய சந்தனங்கள் அவன் உடல் வேர்வையில் மணக்கனுமே?! அணிகள் அனைத்தும் ஆணின் ஸ்பரிசங்களில் உருகி திரவமாகணுமே? நெளியணும்.. உடையணும் அதானே முதல் இரவு..
ஐயகோ! இந்த ஜோடிகளோ ஏதேதோ நினைத்து இன்றைய இனிமையை கெடுத்துக்கொண்டனர் எனலாம்.. ஒரு ஆணும் பெண்ணும் தனியறையில் வைச்சு ஊரே அனுப்பி சம்மதம் தருவது எவ்ளோ பெரியவிஷயம்..
ஆண்.. இவள் மனைவியா கிடைத்ததே போதும் நிம்மதி கொண்டான்..
பெண்ணோ,திரிபுரம் பற்றிய நெருப்பாய் ஒன்றும் புரியாத நிலையில் நின்றாள்..
“இங்கு படுக்க வா செல்லு.. தரை குளிரும்”
இன்னும் உறங்க ஆயத்தமாகாது ஒவ்வாத அணிகலன்கள் அணிந்து நின்றுகொண்டிருந்த விஜி முதன் முறையா கரிசனத்தோடு அழைக்க..
“இல்ல! பரவாயில்ல விஜி.. நீ படு”
“என் பிரச்சனை பற்றி பேசணும் வா செல்லு”
“நாளைக்கு பேசிக்கலாம் விஜி! எனக்கு டயர்டா இருக்கு..” அப்படி சொன்னவன் முகத்தில் துளிகூட டயர்ட் இல்ல.. முறைத்தாள் விஜி..
இவன் என்னடா இப்படி சொல்றான்?! .. பூனை போல இருக்கான் இந்த ஹல்க்கு அமுக்கினியா நல்லா வச்சு செய்வான் போல மனசுக்குள் செம்ம திட்டு திட்டினாள் மணப்பெண்..
ஏசி அறையில் குளிர் அதிகமாகத்தான் இருந்தது.. தரையில் இரவு முழுக்க படுக்க முடியாது என்பது ஆகச்சிறந்த உண்மை..
எது எப்படின்னாலும் நம் மனசை செல்வாக்கு சொல்லிருவோம்.. காலையில் ஏன் இந்த திடீர் முடிவுன்னு கேளு கேளு கேளு கேளு செல்வா என்று விஜி நொய் நொய் எங்க.. தாலாட்டு போல அவன் கொட்டாவி விட்டான்.. வராத தூக்கம் வந்தே விட்டது..
“நிஜமா நாளைக்கு பாத்துக்கலாம் விஜி.. ப்ளீஸ் தூக்கம் வருது..”
தன் தேவதை என்ன சொன்னாலும் அவன் கேட்க தயார் தான் அவளுடைய வாயும் அறிந்ததுதானே! ஆனாலும் அந்த நடிகன் பற்றி பேசுவதை அவன் விரும்பவில்லை அதற்கான தவிர்ப்பு மட்டுமே இந்த தூங்க வேண்டும் நடிப்பு..
நாங்க லவ் பண்ணோம் பட் பிசிக்கலா எந்த டச்சும் கிடையாது செல்வா நம்பனும்
“பேசாதே..”
“சொல்லணும் ல”
“படுடி”
டி… டி.. டி.. இந்த செல்வா புதுசு விஜிக்கு..
டி இவளுக்கு பிடிக்காத வார்த்தை.. இடுப்பில் இவள் தன் நண்டு விரலால் சட்டுனு சிறுகோபத்தில் கிள்ளி விட.. அந்தா பெரிய எருமைக்கு வீக்னெஸ் இடம் இடுப்பு தானே.. அது துள்ளி எந்திரிக்க..
“எப்படி டி சொல்லுவ செல்லு..”
அவனை துள்ள விடாது மேலே விழுந்து அமுக்கி தன் பாக்கு விழிகள் பெரிசாக்கி ரோசப்பட..
இனி சொல்லல விடு.. எந்திரி.. மூச்சு முட்டுது
பொய் சொல்ற.. நான் குட்டியோண்டு இருக்கேன் நான் மேலே கிடைப்பதால் மூச்சு வாங்குதோ?..
உன் அருகாமை மூச்சும் மோகமும் கேட்குதுடி சகியே! காதல் யாகதீயாய் தகிக்குது தேகம் … உன்னை ஆகுதியாய் அதில் கேட்குது .. என் செய்வேன்? என் காதலியே! பருத்த உதடுகள் இறுக்கி தன் உணர்வுகளை கட்டுப்படுத்தினான் செல்வா..
இன்னும் இன்னும் பூவாய் மோதிய பெண்ணுடலின் மென்மை ஆடவனை இம்சிக்க..
நான் மேலேயே வரேன்.. நீ போ விஜி!.. செல்வாவும் சமாதானத்துக்கு ஏதோ சொல்ல.. விஜி மகிழ்ச்சி..
சோம்பேறிக்கு ஏதும் கழற்ற விருப்பமில்லாது சோர்ந்து ஓர் ஓரம் படுத்து இவனுக்கு மறுபுறம் காட்ட..
“லைட் ஆப் பண்ணிடு விஜி.. “
“ம்ம்ம்.. நான் சொல்றதை கேட்கணும்..”
திரும்ப முதலிலிருந்தா?! அடி போடி பக்கி!
“சரி பண்ணு விஜி”
அவளும் அமர்த்திட்டு இது போல புரைய அன்ன மான என்று அஸீயின் கூடவான பழக்கத்துக்கு விளக்கம் கொடுக்க முனைய..
கழுத்தில் சூடான ஆண் சுவாசத்தின் மணமும் சூடும்.. அதிர்ந்தாள் விஜி..
என்னதிது? எவ்ளோ தகிரியம் இந்த ஹல்க்குக்கு!!

👌👌👌👌👌
Thema’s voor volwassenen is breed beschikbaar op speciale platforms voor volwassenen. Kies voor gegarandeerde bronnen voor veiligheid.
Feel free to visit my site – BUY XANAX WITHOUT PRESCRITION