ATM Tamil Romantic Novels

புள்ளி மேவாத மான் – 22

22 –  புள்ளி மேவாத மான்



   நெடு நேரம் உறக்கம் வராமல் புரண்டு.. புரண்டு படுத்தவன்…அவள் நன்கு உறங்கிவிட்டதை அறிந்து  அவளை நெருங்கி  லேசாக அணைத்தாற் போல படுத்து உறங்க முயற்சிக்க…

  அவள் வயிற்றில் கைகளை மெதுவாக படரவிட்டு கண்களை மூட… சில நிமிடங்களில் பிள்ளை ஸ்பரிசத்தை இவன் கைகளில் உணர்ந்தான்.

அந்த நொடி அவன் மனதில் வெண்மையாக இருந்த வெறுமை எல்லாம் வர்ண ஜாலங்களால் நிரப்பப்பட்டது.

உனக்கு எல்லாமுமாக நான் இருக்கிறேன் அப்பா என அவன் குழந்தை சொல்வது போல உணர்ந்தான்.

“பாப்பு குட்டி உங்களுக்கு என்ன தெரியுதா… நான் அப்பா.. உங்க அப்பா…”

“நான் பேசறது உங்களுக்கு புரியுதா..நீங்க கவனிக்கறிங்களா..”

உடனே குழந்தை வேகமாக துள்ளியது.தன் குழந்தை தான் பேசுவதை கேட்கிறது என்ற மகிழ்ச்சியில்  எழிலின் வயிற்றில் கையை வைத்து அதன் ஸ்பரிசம் உணர்ந்தவாறே அதனிடம்  பேசினான்.

“பாப்பு குட்டி உங்களுக்கு அப்பாவ பிடிக்குமா…”

“எனக்கும் உங்கள ரொம்ப பிடிக்கும். உங்க அம்மாவை அதை விட அதிகமா பிடிக்கும் பாப்பு குட்டி”

தன் தலையை தந்தையின் கைகளில் வேகமாக முட்டி தன் எதிர்ப்பை  காண்பித்தது.

“ஹாஹா… ஹா… இப்பவே உங்களுக்கு பொறாமையா… “என சிரித்தான்.

அடுத்த நொடி சிரிப்பு மறைந்து முகத்தில் கவலை படர்ந்தது தனாவிற்கு…

“பாருடா குட்டி அம்மா என்ட்ட பேச மாட்டேங்கறா..”

“உங்க அம்மா அன்பை நான் புரிஞ்சுகலை தான். உங்க அம்மா எம் மேல உசிரா இருக்கானு இப்ப தான் தெரிஞ்சுது.. சொன்னா தான எனக்கு தெரியும். அவ சொல்லாம எங்கிட்ட கோவிச்சுகிட்டு இப்படி பண்றா.. நீயே சொல்லு பாப்பு குட்டி அப்பா பாவம் தானே..”

தன் மனக்குறைகளை யாரும் காது கொடுத்து கேட்காததால் வயிற்று பிள்ளையிடம் பிதற்றி கொண்டு இருந்தான்.

“நான் பண்ணினது தப்பு தான் இல்லேனு சொல்ல..  ஆனா இவ்வளவு பிரச்சினை ஆகும்னு தெரியாம பண்ணிட்டேன் பாப்பு குட்டி.  என்னை பாவம்னு மன்னிச்சு விடலாம்ல”

“பாப்பு குட்டி.. உங்க அம்மாவை விட்டா.. எனக்கு யாருடா இருக்கா..”

உடனே குழந்தை அவன் கைகளில் ஒரு உதை விட்டது.

“சாரி.. சாரி..உங்களை சொல்லைனு கோபமா.. நீங்களும் தான் எனக்கு ஓகேவா..”

மனைவியிடம் மன்னிப்பு கேட்க கௌரவம் பார்த்தவன் இன்னும் கண்ணிலே காணாத  கருவறை பிள்ளையிடம் மண்டியிட்டான். தன் உதிரத்தில் உதித்தது என்பதாலோ…

“போங்க பாப்பு குட்டி உங்க அம்மா மாதிரியே உங்களுக்கும் கோபம் வருது” என செல்ல கோபம் கொண்டான்.

குழந்தை தன் தலையை தந்தையின் கைகளில் முட்டி முட்டி  சமாதானம் செய்தது.

“நீங்க உடனே சமாதானம் ஆகிட்டிங்க.. ஆனா உங்க அம்மா சமாதானம் ஆகாம அப்பாவை கஷ்டப்படுத்தறா.. தெரியுமா..”

“நீங்க கொஞ்சம் அப்பாவுக்காக அம்மாட்ட சொல்லறிங்களா..”

குழந்தை அவன் கைகளில் லேசாக அசைந்து அவனை ஆறுதல் படுத்தியது..

வார்த்தைக்கு ஒரு பாப்பு குட்டி போட்டு ஏதோ ஏதோ பேசியவாறு உறங்கி போனான் தனா.

தந்தை உறங்கியது அறிந்தோ என்னவோ குழந்தையும் தாயின் வயிற்றில் அமைதியாகி உறக்கம் கொண்டது.

தந்தை மகவு பரிபாஷணை அறியாமல்

எழில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

எழிலும் கோபித்து கொண்டு தாய் வீடு சென்றுவிட்டாளே தவிர.. எப்போதும் தனாவின் ஞாபகமே.. நேரத்திற்கு உண்டானா.. உறங்கினானா.. என

பகலில் கூட  வீட்டிலுள்ளவர்களோடு பொழுதை கழித்துவிடுவாள். ஆனால் இரவில் தனாவின் அருகாமையோ.. அணைப்போ.. இன்றி அவளுக்கு முழுமையான உறக்கம் என்பதில்லை.

இன்று தனாவின் அணைப்பை கோபத்தில் நிராகரித்தாலும்.. அவனின் அருகாமையில் ஆழ்ந்த உறக்கம். அதனால் தந்தை பிள்ளை பாசபிணைப்பை அவள் அறியவில்லை.

நாம் இவரை உயிராக காதலித்து கொண்டு இருக்கோம். இவரோ எப்பவோ முடிந்து போன காதலுக்கு நியாயம் செஞ்சிட்டு இருக்காரு.. என  ஆதங்கத்தில் இருந்தாள்.

தினமும் ஊரே உறங்கும் வேளையில்  எழிலும்  உறங்கியதும் தனாவும் அவனுடைய பாப்பு குட்டியும் வெகு நேரம் உரையாடி விட்டே உறங்க செல்வது வழக்கமானது.

மேலும் சில நாட்கள் தனா வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் எழிலின் பின்னாலேயே சுற்றி கொண்டு இருக்க… அவளோ பேசாமல் முறுக்கி கொண்டு இருந்தாள்.

வெளியில் கோபம் முகம் கொண்டு இருந்தாலும்.. உள்ளுக்குள் அவனின் செயலால் மனம் குளிர்ந்து தான் போயிருந்தது.

தனா தன்னை சமாதனம் செய்வதற்காக.. கெஞ்சி கொண்டும்.. கொஞ்சி கொண்டும் பின்னாலேயே சுற்றுவது எழில் மனதில் சாரலாக சாமரம் வீசிக் கொண்டு இருந்தது.

எப்பவும் நாம் தானே பின்னாலேயே சுத்துவோம். இவரை சுத்தல்ல விடறது கூட நல்லா கிக்கா தான் இருக்கு என நினைத்தே

தனாவோடு சமரசம் ஆகாமல் போக்கு காட்டி கொண்டு இருந்தாள். 

இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க…எழிலின் பாராமுகத்தில் தனா மிகவும் துவண்டு போனான். அன்று பேக்டரியில் அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மனமும் உடலும் சோர்வாக இருக்க…

வெற்றியிடம் பேக்டரியை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு தன் ராயல்  என்பீல்டை எடுத்து கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் மனம் போன போக்கில் மெதுவாக ஓட்டி கொண்டு வந்தவனுக்கு அவனின்  வயற்காடு கண்ணில் பட…

வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு மெதுவாக வரப்பில் காலாற நடக்க ஆரம்பித்தான். எழிலின்  நினைவிலேயே வயற்காடு தென்னந்தோப்பு எல்லாம் தாண்டி  மாந்தோப்பிற்குள் வந்திருந்தான்.

நடந்து வந்து கொண்டு இருந்தவனின் காதில் கிசுகிசுப்பான பேச்சு குரல் கேட்க…. குரல் வந்த திசையை நோக்கி சென்றான்.

அங்கே  தோப்பை கவனித்து கொள்ளும் செங்கான் மனைவி வேலாயியை வலுகட்டயமாக இழுத்து அணைத்து கொள்ள… அவளோ கழுத்தை நொடித்து கொண்டு கணவனின் அணைப்பில் இருந்து திமிற…அங்கே இருவருக்குள் ஒரு காதல் கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருந்தது.

தனாவோ அவர்களின் காதலை கண்டு தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான். ஆம் ரசித்து கொண்டு தான் இருந்தான்.

அவர்களின் அகவை அறுபதிற்கு மேல்.. நரை கூடி..கூன் விழுந்து.. தோல் சுருங்கி..பொக்கை வாயோடு.. அந்த காதலர்கள் பெரிய அழகு இல்லை.. ஆனால் அவர்களின் காதல் கொண்ட மனம் அழகாக இருந்தது. அது அவர்களின் செயலில் மிளிரந்தது.

எதற்கோ வேலாயி கோவித்து கொள்ள… செங்கான் மனைவியை இழுத்து அணைக்க.. வேறு திசையில் பார்த்து கொண்டு இருந்தவளை கன்னத்தில் முத்தம் கொடுக்க..

அதில் வேலாயி வெட்கப்பட்டு கணவரின் நெஞ்சில் முகத்தை புதைத்து கொள்ள.. மனைவியை ஒரு கையால் அணைத்து கொண்டு..  மனைவியின் காதில் கிசுகிசுப்பாக… எதோ சொல்ல..

“மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலையா என் மச்சானுக்கு” என குமட்டில் இடிக்க..

அவரோ பெருங்குரல் சிரிப்போடு மீசையை நீவிக் கொண்டார். பிறகு மனைவியின் காய்ப்பு காய்ந்த கைகளை தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டு மென்மயாக நீவிவிட்டு அதில் முத்தம் பதித்து

“உனக்குனு நான் எதுவும் பெரிசா செஞ்சதில்ல.எனக்காக.. நம்ம குடும்பத்துக்காக உழைச்சு கையெல்லாம் காப்பு காஞ்சு போச்சுல…” கவலையுடன் உரைக்க…

அதற்கு மனையாளோ”யாருக்கு செஞ்சேன்.. எம் புருஷ சுமைய பாதி வாங்கிட்டே.. அதுல எனக்கு சந்தோசந்தான்.. விசனப்பட ஒன்னுல்ல..” மனம் நிறைந்த வாழ்வுகான புன்னகை முகத்தில் பிரதிபலிக்க சிரிக்க..

அந்த சிரிப்பில் மயங்கிய செங்கானோ தன்னை மறந்து மனைவியை அணைத்து கொண்டார்.அங்கு கலவியில்லாத ஒரு காதல் அரங்கேற்றமானது.

தனாவிற்கு அவர்களின் காதலை காண காண தானும் இது போல எழிலோடு வாழ்வின் இறுதிகாலம் வரை வாழவேண்டும் என ஆசை கொண்டான்.

மனமும் உடலும் சோர்ந்து வந்தவனுக்கு இந்த மூப்பு காதல் அவனை உற்சாகமாக மீட்டெடுத்தது.ஏனோ சொல்ல தெரியாத சந்தோஷம்..  உள்ளத்தில் உடனே எழிலை பார்க்க வேண்டும் என்ற பேராவல்..

அந்த காதல பறவைகளை தொந்தரவு செய்யாமல் … சத்தம் செய்யாமல்.. வந்த சுவடு தெரியாமல்.. ஆனால்  வரும் போது இருந்ததிற்கு நேர்மாறாக மிகுந்த துடிப்புடன்  சென்றான்.

மாலை மங்கி.. இரவுக்கான ஆயத்த வேலைகளில் வானம் களமிறங்க.. கதிர் முற்றி நெற்குதர்கள் நிறைந்திருந்த பயிர்களை தீண்டி வந்த சில்லென்ற காற்று.. என சுற்றுசூழலும் அவன் மனதை போலவே ரம்யமாக இருக்க..

அவனின் நடையில் இப்போ துள்ளல் வந்தது.  நம்மை சுற்றி உள்ளவை ஏற்கனவே தினமும் பார்த்து பழகியதாக  இருந்தாலும்.. காதல் கொண்ட மனதிற்கு அவை புதிதாக ரசிக்க கூடியதாக தான் இருக்கும்..

பைக்கை எடுத்தவன் வீட்டிற்கு எதிர்திசையில் சென்றான்.. நேராக தான் வழக்கமாக  பொருட்கள் வாங்கும் டிபார்மெண்ட் ஸ்டோரில் எழிலுக்கு பிடித்த டெய்ரிமில்க் சில்க் பெரிய பார் இன்னும் அவளுக்கு பிடித்த சில  ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு..  வரும் வழியில் அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகை சரம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தான்.

வீட்டிற்குள் நுழையும் போதே “எழில்.. எழில்.. எங்கிருக்க..”என உற்சாகமான குரலில்..

அவனின் குரலில்  உள்ளறையில் இருந்து வந்தவள் அவனை வித்தியாசமாக பார்த்தாள். என்னாச்சு நாம கோபமாக இருக்கோம்னு சோகமாக சுத்திட்டு இருந்தாரு.. இப்ப என்ன திடீர்னு மூஞ்சி ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.. என்னனு தெரியலயே.. எதுக்கும் உஷாரா இருந்துக்கோ எழிலரசி… என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.

இது எதையும் கண்டு கொள்ளாமல்.. அவள் வந்ததும் அவளை இழுத்து சோபாவில் அமர வைத்து தானும் அவளருகில் அமர்ந்து கொண்டு சாக்லேட் பாரை எடுத்து..

“எழில் இந்தா உன்னோட பேவரட் சாக்லேட்.. இப்ப சாப்பிடறியா.. இல்லல்ல வேணாம் உனக்கு கொஞ்சம் மெல்டானதான பிடிக்கும். அப்புறமா சாப்பிடு.. இப்ப வேணா ட்ரைப்ரூட்ஸ் பால்ஸ் சாப்பிடறியா..உனக்கு பிடிக்கும்ல.. வேணா வேணாம் நேந்திரங்கா சிப்ஸ் சாப்பிடறியா..”  தனா தன் போக்கில் பேசி கொண்டே போக..

இவருக்கு என்னாச்சு நான் இவரிடம் சண்டை போட்டது எல்லாம் மறந்து போச்சா.. நான் பேசமாட்டேனு தெரிஞ்சு இவர் பாட்டுக்கு நான்ஸ்டாப்பா பேசிகிட்டே போறாரே…என நினைத்தாள்.

தனாவோ இப்ப பூச்சரத்தை கையில் எடுத்து

“நெருக்கமா கட்டிய மல்லிகப்பூ உனக்கு பிடிக்கும்ல..  இப்பவே வச்சுகறியா..”என ஆசையோடு கேட்க..

அவனின் மகிழ்ச்சியும் நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் முகத்தில் தெரிந்த பொலிவும்…  அவன் உதடுகளோடு கண்களின் சிரிப்பும்…

கண்டவளுக்கு அவனை பேசி காயப்படுத்த விரும்பாமல்.. அமைதியாக பூவை வாங்கி தலையில் சூடிக் கொண்டாள்.

எதுவும் எதிர்மறையாக பேசாமல் பூவை வாங்கி வைத்து கொள்ளவும்.. தனாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

எழிலை தாவி அணைத்து கொண்டான்.அவனின் வேகமான அணைப்பில் எழில் தான் சற்று மிரண்டுவிட்டாள்.

“அச்சோ.. பாப்பா.. “என கத்திவிட்டாள். அதன் பின்பு தான் எழிலின் நிலையறிந்து தன் வேகத்தை சற்று குறைத்து..

அவளின் சேலையை லேசாக விலக்கி.. வயிற்றில் கை வைத்து..

“சாரிடா பாப்புகுட்டி.. சாரி.. உங்களுக்கு வலிக்குதா.. அப்பா தெரியாம பண்ணிட்டேன்.. சாரி”

அடப்போடா தகப்பா.. உனக்கு எப்ப பாரு இதே வேலையா போச்சு.. தப்பு பண்ணிட்டு சாரி கேட்க வேண்டியது.. உனக்கு எங்க அம்மா தான் கரெக்ட்..என ஒரு உதை கொடுத்து விட்டு அமைதியாகிவிட்டது.

தனாவின் பேச்சிற்கு வயிற்று குழந்தையின் பதிலடி இதை எல்லாம் பார்த்தவள்..   என்னடா நடக்குது இங்கே..என புரியாமல் முழித்தாள். அவளுக்கு இதெல்லாம் தெரியாதல்லவா…

அவளின் முழியை கண்டவன் “நீயும் பேசலையா.. இந்த வீட்ல வேற யாரு இருக்கா என்ட பேச… அதான் நீ தூங்கியதும் நானும் பாப்பு குட்டியும் தூக்கம் வரவரை பேசிட்டு இருப்போம்”என்றான் முகத்தை சோகமாக வைத்து கொண்டு..

அவன் சொல்லியது உண்மை தானே என நினைத்து வருத்தபட்டாள். ரொம்ப ஓவரா தான் பண்றமோ.. என நினைத்து கொண்டிருக்க..

அவளின் முகமாற்றைத்தை சரியாக படித்தவன் அவள் இளகி வரும் தருணம் அறிந்து…

“சாரிடி.. சாரி..  எல்லாத்துக்கும் சாரி”என அவள் தாடையை பிடித்து கொஞ்சினான்.அவனின் கொஞ்சலில் மெல்லிதாக சிரிக்க..

அந்த சிரிப்பே.. அவனுக்கு  போதுமானதாக இருக்க..இன்னும் நெருங்கி அவளை மெல்ல அணைக்க… அவளும் அவனின் நெஞ்சில் சாய..

அவளை கைகளில் அள்ளி கொண்டவன் தங்கள் அறையை நோக்கி சென்றான்.

எழில் தான் சிணுங்கி கொண்டே..

” மாமா வாசற்கதவு திறந்திருக்கு”

“இருளாயி முன்னால திண்ணைல உட்கார்ந்திருக்கு”

“விளக்கு வைக்கற நேரம் வேணாம்”

“விளக்கு அணைக்கற நேரமே வந்திடுச்சு”

“நான் இன்னும் டிபன் பண்ணல..”

“எனக்கு இன்னைக்கு பசிக்கலடி”

“எனக்கு பசிக்கும் மாமா”

“உன் பசியை மறக்க வைக்கற வித்தை மாமனுக்கு  தெரியும்”

“மாமா..”மேலும் அவள் ஏதோ சொல்ல வர..

“அமைதியா வாடி.. இன்னைக்கு உன் சால்ஜாப்பு எல்லாம் மாமன்கிட்ட பலிக்காது”

அவளுக்கும் அவனின் அணைப்பு தேவைப்பட..அவன் கழுத்தை தன் கைகளால் கோர்த்து கொண்டு வழக்கம் போல் அவனை சைட் அடித்து கொண்டு வந்தாள்.

அவள் பார்வைக்கு சளைக்காமல் பதில் பார்வை கொடுத்தவன்.. அவளை படுக்கையில் விட்டு அவள் அருகில் இடைவெளியின்றி படுத்தவன்

கிசுகிசுப்பாக அவள் காதுகளில் “நாம இப்படி… பாப்பு குட்டிக்கு ஏதாவது ஆகிடுமா..”பயத்துடன் கேட்க.. அவனின் முகத்தில் பயத்தை மீறிய ஆசை தென்பட…

அவனின் முகத்தை காதல் பார்வையால் வருடியவாறே… இல்லை என்பதாக மெல்ல  தலையை ஆட்டினாள்.

அவள் பதிலில் சீறிப் பாயும் காளையாக.. அவள் மேல் படர…

 

“மாமா.. மாமா. மெதுவா..” என அவனின் வேகத்திற்கு அணைப்போட..  வருடும் தென்றலாக அவளை ஆட்சி செய்தான்.

நீண்ட நாட்கள் ஊடலுக்கு பின் உண்டான கூடல் அல்லவா..

காமன் கலைகள் பயில… இரு பட்சிகள் முனைப்போடு இயங்க…

தாய்மை கொண்ட பேடையின் நிலையே வேகத்தடையாக இருக்க…

இருந்த போதிலும் அந்த கூடலை அணு அணுவாய் அனுபவிக்க விருப்பம் கொண்டது காதல் பறவைகள்.

பெண்ணவளின் மோகனங்கள் எல்லாம் மன்மதனின் மோகம் தீர்க்கும் மார்க்கமாக அமைய…

அவளின் இதழ்ரசம் மதுரசத்தை விட அதிக போதை ஊட்டுவதாக இருக்க… மேலும் மேலும் அவள் இதழிலேயே குடி கொண்டான்.

மங்கையின் பொன்னுடலில் காதல் ராஜன் கர்ம வீரனாக.. இதழும் கைகளும் காட்டிய மாய வித்தையில்..

மாயங்கள் யாவும் காயங்களாக.. காதல் அச்சாரங்களாக பதிய..

அச்சாரங்கள் கண்டு நாணம் கொண்ட காதல் தேவதையோ.. தலைவனின் ஆசைகளுக்கு தன்னை ஈடு கொடுத்து..

காதல் தந்து காதல் மீட்டாள்.

தன்னை தொலைத்து.. தன்னை தொலைத்த இடத்திலேயே மீட்டு கொண்டான் மீகிய காதலோடு அந்த காதல் கண்ணன்.

 

“என் சேலையும்

உன் வேட்டியும்

ஸ்பரிசிக்குமோ..

என்மஞ்சள் வாசனை

உன் சந்தன வாசனை

சங்கமிக்குமோ..”

 

அவள் காது மடலை உரசியவாறே ரசனையாக அவள் கவிதையை அவளுக்கே படித்தான்.

” ஸ்பரிசித்ததா… சங்கமித்ததா..” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்

நிறைவான கூடலில் உடல் சோர்ந்தாலும் உள்ளம் நிறைந்திருக்க.. அவளை அள்ளி தன் மார்பில் சாய்ந்து கொண்டு….

 

“என் நெஞ்சில்

மஞ்சம் என

தஞ்சம் கொண்டு

துயிலும் காலம்

வந்ததா… “

என்றான் அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து.. எழிலுக்கு எழிலானவன்..

 

1 thought on “புள்ளி மேவாத மான் – 22”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top