3 ஜில்லு
மாயமில்லை மந்திரமில்லை.
இதயம் ஒரு நிமிஷம் நின்றதும் உண்மை . அப்புறம் லேசா துடிச்சி துடிச்சி பழைய லயத்துக்கு வந்ததும் உண்மை.
வாசலில் சிலையாய் நின்றவளை முதலில் கண்டதும் நாயகன் தான்.
ஹு ஆர் யூ? ஆண்மை ததும்பிய குரலில் அதட்டியதும் அவன் தான்.
காலக்கொடுமை!
கேளு! கேளு! நல்லா கேளு!
அறையிலிருந்த அத்தனை பேரின் கண்களும் இவளையே நோக்க, லஜ்ஜையா போச்சு லியாவுக்கு.
திடீர்னு எப்படி திக்கு வாய் வரும்? ரத்தம் பூரா உறிஞ்சிட்டா வார்த்தை எப்படி வரும்? அப்படித்தான் நாக்கு உலர்ந்து போனது..
நா .. நான்.. மிரண்டு போனாள். என் பேர் என்ன? அவளுக்கே மறந்து போச்சு
அதற்குள் சமீ இவளின் ப்ரோமோஷன் பற்றி கேசி காதில் மட்டும் சொல்ல இவளை உற்று பார்த்துக்கொண்டே தலையசைத்து எதிராளியிடம் பார்வையை மேயவிட்டான்.
சமீ பக்கத்திலிருந்த ரெண்டாம் நிலை பிஏ விடம் சைகை காட்டினாள்.
எம்டி அறையின் ஒரு மூலையின் டேபிளுக்கு அழைத்து சென்றவன்
வெல்கம் மிஸ் ஷால்யா.. மை நேம் ஸ்ரீனிவாஸ் .. இது உங்க பிளேஸ் கொஞ்ச நேரம் வெய்ட் செய்ங்க..
ஒருநிமிசம் ஸ்ரீனி.. நேத்து ஜுரம் இன்னைக்கு குளிர் ஜுரமாகிருச்சு.. பதிலுக்கு கூட காத்திராமல் அங்கிருந்த ஒரு கதவு வழி பின்னங்கால் பிடரி தெறிக்க ஓட்டம். அம்மா ஸ்கூலுக்கு வந்துட்டா.. அவர் கிளாசில் இருப்பதாக அட்டெண்டர் கூற அம்மாவின் பெர்சனல் ரூமில் அடைக்கலம். குஷன் சேரில் அமர்ந்தே குட்டி தூக்கம்.
இப்படி பொறுப்பில்லாமல் ஓடி வந்துட்டோமே ! தூக்கிடுவாங்களோ? வேலையை விட்டு தூக்கினா போவட்டும். நஷ்ட ஈடு கேட்குங்க.. இருந்தா தானே தர? வடிவேலு போல ரெண்டு ஜோபியையும் வெளில் போட்டு சரண்டர் ஆகிட்டா எப்படி கேப்பான்? தொடர் தொடர கண்டமேனிக்கு கற்பனை ரெக்கை கட்டி பறந்தது.
இங்கே கூட பால்வாடி டீச்சரா வேலை செஞ்சுக்கலாம்.. போதும் ஒரு பிடி சோறு.. வேற எதுவும் வேண்டாம். அம்மா வரட்டும் இங்கேயே இருந்துடலாம். பிளான்லாம்? பார்வேர்ட் டூ அடுத்த ஜென்மா. நொந்தாள். அவனை டெய்லி பார்க்கணுமா? எதுக்கு புதுசா பதவி? கல்யாணம் பண்ணி எட்ட நின்னு கொடுமை! விவாகரத்து கொடுத்துட்டு கட்டி பிடிச்சு கொடுமை! இப்ப கிட்ட வச்சி கிள்ளி கொடுமை செய்வானோ? நீ வேணாம் போ.
வேணும்னு கேட்டா தானே வம்பு. விதி கண்ணு முன்னாடி நூலில் கட்டி ஆட விட்டு எட்டாமல் பண்ணி விளையாடுது. வேண்டாம் புருஷன் வேண்டாம் அவன் முகத்தில் முழிக்கும் நாள் வேண்டாம். உறவு வேண்டாம். அது உடைஞ்சி போனாலும் வேண்டாம்..
வெறுத்து போய் வேண்டாம் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தவளை
அழைத்தது சமீரா!
இதுவரை அழைத்ததேயில்லை. கம்பெனி லோகோவோடு காலர் ஐடியில் சமீரா பேர் வர எடுக்காமல் இருக்க முடில..
“ஹாய் சமீரா”
“ஹாய் ஷால்யா எப்படி இருக்கீங்க?”
“நல்லாருக்கேன் .. ஹாஸ்பிட்டல் போய்ட்டு இப்பதான் வந்தேன்” பொய்யா சொன்னாள்..
ஓ.. எப்போ அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் வாங்கிக்கிறீங்க?
மான் காராத்தே ஸ்டைல் மாறினாள். முஸ்தீப்பே வேணாம் காலில் விழுந்திடலாம்.
அக்கா அக்கா பிஏ க்கு என்ன குவாலிபிகேசன் வேணும்னு கூட எனக்கு தெரியாது ப்ளீஸ் என்னை விட்ருங்களேன்.. சேல்ஸ் விங்லேயே இருக்கேன்..
சாரி ஷால்யா உன்னை நேரடியா கேசியே செலக்ட் பண்ணியிருக்கார்.. ஒன்னும் பண்ண முடியாது.
நான் அவ்ளோலாம் ஒர்த் இல்லக்கா.. இனி கம்பெனி காபி நாலுதடவை குடிக்க மாட்டேன்.. மதியம் வேலைபார்க்குற மாறி சேரிலேயே தூங்க மாட்டேன்.. சேல்ஸ் அளவா காட்ட மாட்டேன்.. உள்ளதை அப்டியே டேட்டாவாக்குறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் உங்க விங் மட்டும் வேணாம் எனக்கு கேசி சாரை பார்த்தாலே குளிர் பிடிக்குது.. புலம்ப.
சமீரா வுக்கு ஒற்றே சிரிப்பு..
ஷால்யா யூ ஆர் சோ ஸ்வீட்.. 23 புளோர்க்கே வந்துடுங்க.. சாட் முடிந்தது.
என் கெஞ்சல் அம்புட்டு காமெடியாவா இருந்தது.
நீத்து தான் ஹெச் ஆர்.. அவகிட்ட நாலு பிட்ட போடுவோம்.. போன் அடிக்க பிசி.. பாய் பிரண்டுக்கு என்று தனியா காதும் செல்லும் வச்சுக்கோணும்.. பிரண்ட்ஸ் காலை இப்படி வெயிட்டிங் ல போடக்கூடாது. ஆபிஸ் வந்தால் அவளுக்கு இது ஹாபி. கடுப்பானாள். திரும்ப முயற்சித்தும் போகல. 242 மெஸேஜஸ் போட்ட பின் தான் கொஞ்சம் மனசு ஆறுச்சு. நேரத்துக்கு ஹெல்ப் பண்ண மாட்டுறா.
புத்திசாலித்தனமாய் நிறய வழிகள் இருக்கும்.. அதை நினையாது
ஏன் பிரச்சனையை பார்த்து ஓடி ஒளியுற லியா. பயமாயிருக்கு. தனியாவே எதிர்கொள்ள பயமாயிருக்கு கண்ணீர் வழிந்தது. சினிமாவிலும் நாடகங்களிலும் வீர தீரமாக பேசப்படும் வசனங்கள் நிஜங்களில் வியர்த்தமே. இங்கு எது பின்னாடியாவது பதுங்கி கொள்வது நலம். பாதுகாப்பு. சூடு கண்ட பூனை என் செய்யும்? சந்தேகிக்கும்.
“””””””
தாலி கட்டி முடிந்த மதியம். விருந்து மறுவீடு சீதனங்கள் பேச்சு வந்த பொழுது மாப்பிள்ளையாக நான் கல்யாணம் பண்ணிக்கவில்லை. எங்கப்பா தற்கொலை பண்ணிக்க காரணமா இருந்தது உங்க பேமிலின்னு தெரிஞ்சு தான் உங்களை போலவே உறவாடி துரோகம் செஞ்சேன். இந்த பொண்ணு இனி என் கூட வாழணுமா? வேணாமா? நீங்களே முடிவு பண்ணிக்கங்க. அம்போ வென்று லியாவை தனியா விட்டு போய்ட்டான்.
இந்த பையன் நோக்கம் எனக்கு அப்பவே தெரியும் பொண்ணு கேட்டு வந்தப்பவே சொல்லலாம் மிருந்தேன் பாப்பா ஆசை பட்டது.. வாழ வாழ சரியாகிடும் நல்லா வச்சுப்பான் நினைச்சேன்.. இப்படி செஞ்சிருக்க க்கூடாது. தாய் மாமா வருத்தப்பட்டார்
கோடானு கோடிக்கு சொந்தக்காரன்.. என்ன வேணும்னாலும் செய்வான்? யார் தட்டி கேட்க முடியும்? சித்தப்பா.
அவன் தகுதிக்கு நாமளும் குறைச்சலில்லை.. துரோகம் பண்ணிட்டான் அவ்ளோதான்.. பெரியம்மா.
தோரணங்கள் கலையல! விருந்து இலைகள் கூட காயல. துரோகம் பகை வார்த்தைகள் எல்லாம் புதிது. அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்தது தெரியும்.. சிறு பெண் என்று ஏதும் சொல்லவில்லையோ? இனி கேட்டு என்ன செய்வது? அழனுமா? சமூகத்தின் கடமைக்கு கட்டுபட்டு புருஷன் பின்னே போவதா? விலகுவதா? பயம் வந்தது . கண்ணீர் தானா தன் முதல் நண்பன் காதலன் கணவன் சந்துருக்காக கன்னம் தாண்டி ஓடியது.
துரோகம் யார் யாருக்கு செய்தார்கள்? தெரியாது. சந்துரு இவளுக்கு செய்தான் இது நிஜம்.
××××××××
உணவு இடைவேளையின் பொழுது சமீராவை மட்டும் நிறுத்தி.. விடாது நெரிக்கும் வேலை பளுவை தளர்த்துவது போல தன் டையின் நாட்டை லூஸ் பண்ணி …
சாட்டர்டே நைட் எனக்கு என்ன ஆச்சு? யாருடைய வேலை இது?
அவனுக்கு முன் ஒரு பைலை வைத்தாள் சமீ.
ரெண்டு விதமாய் போதை முதலில் உங்க உடையில் தெளிக்க பட்டிருந்தது. அடுத்து ட்ரிங்க்ஸ்ல ..
மோடிவ்?
உங்களை பெண்கள் விஷயத்தில் மாட்டி பேர் கெடுத்து விட சதி.
கழுகு கண்கள் போல கண்ணை உருட்டி யாராயிருக்கும்? யோசித்தான் கேசி.. பணம் பெருத்து போனால் எதிரிகளும் பெருக்குவது இயல்பே. இதற்குத்தான் நண்பர்களே வைப்பதில்லை. நெருங்குபவர்களையும் விடுவதில்லை..
அன்று பார்ட்டி தந்த ஜிஎஸ் குருப்பா?
இல்ல.. அவர்கள் கிளீன் ஹாண்ட்.. யாரோ புது ஆட்கள் .. பெரிய இடம் போல.. ரெண்டுநாள் போதல கேசி. கொஞ்சம் டயம் தாங்க. பேர் வரை கொண்டு வரேன்..
மூணு நாள் ஓகே!
ஒன் வீக் தாங்க கேசி
நெக்ஸ்ட் மன்டே
பக்கா.
என்கூட இருந்த பொண்ணு பற்றி..
அது ப்லைன்ட் லைன் கேசி. உங்க ரூம் விஐபி ஷுட் என்பதால் கேமரா போகஸ் கம்மியா இருக்கு.. இருந்த வரையில் உங்க முதுகும் உங்களின் நெஞ்சுக்குள் அந்த பெண் அடங்கின மாறி தான் இருக்காங்க முகம் தெரில. ஒயிட்ல லவேண்டர் சின்னப்பூ போட்ட கவுன்.
பால் ரூம் பக்கம் அவளை முதலில் பார்த்தேன்.. அங்கு செக் பண்ணியா?
முதலில் டைனிங் அடுத்து நீங்க சொன்ன இடம் அடுத்து தான் ரூம் படிப்படியா பார்த்தோம்.. அதிசயமா ஒன்றிலும் அந்த பெண் முகம் தெரில.. அசைவுகள் மட்டுமே பதிஞ்சிருக்கு.. உயரம் 5.2 இருப்பாங்க.. எடை நிச்சயம் 60 க்கு மேல இருக்கும். பூசின உடல்வாகு. சுறு சுறுப்பான பெண் சார்.
ஆண் நண்பர்கள் கூட வந்திருக்க மாறி தெரிஞ்சுதா? இந்த கேள்வி கேட்கும் பொழுது பதில் இல்லை என்றிருகணும் எதிர்பார்த்தான்..
இல்லை தனியா வந்துருக்காங்க.. தனியாவே போறாங்க.
ரைட்.. அந்த பொண்ணு பற்றி உருப்படியான விவரம் தந்தா உனக்கு டூ மன்த்ஸ் சாலரி போனஸ் தருவேன் சமீ. தேடு.
எனிதிங் ஸ்பெஷல்?
நத்திங்.. ஒன்லி காம்பன்சேஷன் தர விரும்பறேன்.. முடித்துக்கொண்டான்.
அவன் இதயம் தேடுவதை எப்படி சொல்வான்? அந்த அழுத்தக்காரன்.
*********
பாப்பா எப்ப வந்தே? இதென்ன புதுசா ஸ்கூலுக்கு வந்திருக்க?
கார்ட் வேணாம் .. நேரிலேயே கொடுக்க வந்தேன் பொய் சொன்னாள். அம்மா பர்ஸில் திணித்தும் விட்டாள்.
ஏன் முகம் வாடியிருக்கு.. பிரபு பாப்பாக்கு ஏதாச்சும் கொடுத்தீங்களா?
கொடுத்தார்.. சாப்பிட்டேன்.. கிளம்பிட்டேன் பை..
பாப்பா.. அம்மாக்கு வயசாகிடுச்சி..
என்ன புது வசனமா இருக்கு?
எல்லா தொழிலும் அடைச்சு கொடுத்தாச்சு.. இது எனக்கு பிரியமான ஆலயம் கூட வச்சுக்கோயேன்.. நீ டேக்ஓவர் பண்ணிக்கோ. நான் டென்ஷன் பிரீ ஆகிருவேன்ல
வரேன் வரேன்.. ஒரு வருஷம் பொறுங்கமா..
இவள் எப்பவும் போடும் உருட்டையே உருட்ட.. அதெல்லாம் இந்த முறை கெஜலட்சுமி காதில் வாங்க வில்லை… தொடர்ந்தார்.
“சந்துரு தாத்தா கிட்டே பொது ஆள் வச்சி பேசிட்டேன். அங்கும் சுமுகமான பதில் வந்துடுச்சு.. உனக்கு டைவர்ஸ் முறைப்படி வந்ததும். நம்ம இனத்திலேயே உனக்கு பொருத்தமா அழகான திறமையான பையனை தேடி வச்சிருக்கேன்.. அஞ்சு வருஷம் பஞ்சி போல பறந்துடுச்சு.. இனி உன் லைனை கிளியர் பண்ணனும் பாப்பா.. வேலையை விட்ரு. உடனே என் கிட்டே வந்துடு..
லியாவின் சலசலத்துக்கொண்டிருந்த உலகம் முற்றிலுமாக அமைதியானது.
மூன்று நாளைக்கு முன்னென்றால் கூட இந்த ஆபர்க்கு ஷால்யா அம்மாவுக்காக! என்று கூட தலையாட்டியிருப்பாள்.
இளம் மனதை கெடுத்தவன் உடலையும் அல்லவா அவன் எடுத்துகிட்டான்.. சதுரங்கம் போல எங்கும் நகர முடியாத அளவு கட்டம் கட்டி நிற்க வச்சுட்டானே.. அவனே தான் எப்பவும் வின்னரா?!
நாளைக்கு பதில் சொல்றேம்மா பை.. எப்பவும் போல ஒத்தி போட்டு ஓடிவிட்டாள்.
××××××××××××××××
பிஏ என்ற பெத்த பேர் தான். கேசியிடம் கிட்டே போக முடில.. அரசன் போல ஏகப்பட்ட இடையர்கள்.. இவளுக்கு நல்லது தான்.
அவளுக்கான ஒர்க் ஷீட் அவள் டேபிளில் இருக்கும். அதை பார்த்து வேலை பார்க்கணும்.. சீனி தான் அந்த அட்டவணை தருவது.
மூணாவது பிஏ இவ கூட இருப்பார்.. சொல்லி தருவார்.
பெயர் திருஞான சம்பந்தம் வயதானவர். பழுத்த அனுபவம் மிக்கவர்.
இவர் தான் பர்ஸ்ட் இருக்கணும்.. சமீரா அழகுக்காக கூடவே கூட்டிட்டு திரிரான் சந்துரு.. லியா கருத்து.
சந்துரு இல்லடி சத்ரு..
அவன் இல்லாத பொழுது டேபிளை திட்டினாள்.
நீத்து கிட்டே கல்யாணம் அதனால் ரிலீவ் ஆகிறேன் எழுதி கொடுத்தப்பின் மூணு மாசம் பாண்டிங் முடிஞ்சதும் போகலாம் என்ற மேலிட பதிலுக்கு பின் தான். எம்டியின் பர்சனல் விங்குக்குள் இருக்கிறாள்.
வேலை பளு கிடையாது.. ம சொகுசான அலுவலக அறை. மானிட்டரில் தலைய கொடுத்துட்டு கீ போர்ட் பட்டனை தட்டிக்கொண்டிருப்பாள். சேல்ஸ்ய விட இது லேசி ஜாப் தான். பிரிய எதிரியை பாராது ஓடிரலாம் என்று பல்லை கடித்துக்கொண்டு நாளை எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு..
சமீக்கு மேஜர் ஆபரேசன் என்று அவ்விடம் தற்காலிகமாக காலியான இடத்தில் நிரப்பப்பட்டாள் லியா…
முதல் நாள் எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க சீனியோடு நின்றவளை உதடு வளைய உற்று பார்த்தான் கேசி.. அழகாத்தான் இருக்கா ஆனா எதுக்கு இப்படி முகம் வச்சுருக்கா?!
பின்னாடி சொல்லுவா கேசி.. டோன்ட் ஒரி…

Super
3 epi perday please
👌👌👌👌👌👌👌👌
Semma interesting plz dsily uds consist ah vaynum plz
References:
Spokane casino
References:
https://able2know.org/user/cobwebdonald28/
References:
Best steroids for muscle gain without side effects
References:
http://git.liuhung.com/brodiem5933283
steroids side effects in females
References:
chessdatabase.science
References:
Stay Casino high roller high rtp sites
References:
French lick casino
References:
https://graph.org/Fastpay-Casino-Complete-Review-04-20
References:
777 dragon casino
References:
https://casino-royale1967.online-spielhallen.de/
References:
Karlsruhe
References:
https://casino-ohne-einzahlung-freispiele.online-spielhallen.de/
References:
Kiel
References:
https://rio-all-suites-hotel-and-casino-las-vegas.online-spielhallen.de/
References:
Bremerhaven
References:
https://magnum-casino.online-spielhallen.de/
References:
Freiburg im Breisgau
References:
https://winfest-casino.online-spielhallen.de/
References:
Seattle casinos
References:
https://graph.org/What-Is-The-Best-Crash-Gambling-Site-04-27
References:
Gala casino nottingham schnelle-auszahlung-casino.online-spielhallen.de
References:
Seven cedars casino salestracker.realitytraining.com