ATM Tamil Romantic Novels

புள்ளி மேவாத மான் – 24

24- புள்ளி மேவாத மான்

 

         இதோ வெகு விமரிசையாக ஊரையே அழைத்து எழிலுக்கு வளைகாப்பு நடத்தி கொண்டு இருந்தான் தனா.  மண்டபம் பார்த்து வைக்கலாம் என வீட்டார் சொல்ல  வேண்டாம் என மறுத்து வீட்டிலேயே வைத்து கொண்டான். அவனிற்கு அவன் பெற்றோர் வாழ்ந்த வீட்டிலேயே  தன் வாரிசின் வரவுக்கான விழா நடை பெறவேண்டும் என நினைத்தான்.அவன் சொன்னது போலேவே ஒன்பதாம் மாதம் தான்.

தனக்கு இருக்கும் ஒரே உறவு அவள் தான்.அதுவும் தன் காதல் மனைவி. தன் வாழ்க்கையில் விடிவெள்ளியாக வந்து  வாழ்வை பிரகாசமாக்கினாள் என்றால் ..  மண்ணில் உதிக்கும் முன்பே தந்தை மீதான அளப்பற்கரிய பாசம் கொண்ட அவனுடைய பாப்புகுட்டியின் வருகையை உலகுக்கு பறை சாற்றும் விழா. இவர்களுக்கான விழா கொண்டாடி மகிழ்ந்தான்.

மனம் நிறைந்த ஆசைகளோடு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான். முத்துக்குமார் தன் செல்லமகளுக்காக செய்ய மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் தனாவோ சீர்வரிசை மட்டும் செய்யுங்கள் போதும். என் மனைவிக்கு நான் செய்து கொள்கிறேன் என்க..

ஏழாம் மாதம் அனுப்பாததாலேயே ஏக கடுப்பில் இருந்தவர்  வழக்கம் போல முத்துக்குமார் சுந்தரத்திடம் பஞ்சாயத்து வைக்க.. சுந்தரம் சொல்லியும் தனா கேட்கவில்லை. ஒரே பிடிவாதமாக தன் நிலையில் நின்று விட்டான்.

முத்துக்குமாரை சமாதானம் செய்வதற்குள் சுந்தரம் தான் சலித்து போனார்.  “முதப் புள்ள இல்லையா.. அதான் ஆட்டம் போடறான். அடுத்து இரண்டு மூன்று பொறந்தா அடக்கிடுவான். அடுத்த புள்ளபேறும் நீங்க தான் பார்க்க போறிங்க மாமா.. இப்ப அவன் போக்குல விட்டு புடிப்போம்” என சமாதானம் செய்தார்.

சுந்தரம் சொன்னதில் இரண்டு மூன்று பேரக்குழந்தைகள் என்ற நினைப்பே தித்திப்பாக இருக்க.. எளிதில் விட்டு கொடுத்தார்.

இருந்த போதும் வழக்கம் போல மாமனார் மருமகனும் பார்க்கும் போது எல்லாம் முறைத்துக் கொண்டு இருந்தனர்.

கற்பகத்திற்கமும்  ஏழாம் மாதம் அழைத்து வந்து மகளை சீராட்ட ஆசைப்பட்டார். தனா மறுத்ததில் மனக்குறை இருந்த போதும்.. மகளின் மீதான மருமகனின் பாசத்தில்  மனம் நிறைந்து போனார்.

அவ்வப்போது மகளிற்கு பிடித்ததை செய்து தமிழரசனோடு வந்து  பார்த்து விட்டு சென்றார்.

தனா இதுக்கும் அதுக்கும் என நில்லாமல் சுற்றி சுற்றி அலைந்து எல்லாமே சரியாக நடக்கிறதா என பார்க்க.. கருணா இவனின் அலும்பை பார்த்து..

“டேய் மாப்பிள்ளை.. எதுக்குடா இப்ப ஓரிடம் நில்லாமல் அலைந்து கொண்டு இருக்கிற..”

“அது எல்லாம் சரியா இருக்கானு பார்த்தேன்”

அவனை கருணா முறைத்து பார்த்தான்.

“ஏன்டா உனக்கே கொஞ்சம் ஓவரா  தெரியல..”

ஒன்றும் தெரியாதவன் போல “என்னடா” என்றான் சிரிப்பை உதட்டை மடித்து அடக்கி கொண்டு..

அதில் மேலும் கடுப்பாவன் “என்ன… என்னடா..ஏற்கனவே நீ பண்ற அட்டகாசத்துல எங்க பொண்டாட்டிங்க எங்களை மதிக்கறதே இல்லை.. மானக்கேடா பேசறாங்க”

“இதுல இப்படி எல்லாம் பண்ணினா..ஒரு வாரமா  எங்களை கூட நம்பாம நீ தான எல்லாம் பார்த்து ஏற்பாடு பண்ணின.. காலைல இருந்து மேற்ப்பார்வை பார்க்கறேனு அலையற…அதுததுக்கு ஆள் போட்டு இருக்கு..அடங்கி ஒரு இடத்துல இருக்க மாட்டியா” என்றான்.

“போடா”என சிரித்து கொண்டே அவனை கைகளால் நகர்த்தி விட்டு அவன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.

“அடேய்” என பல்லை கடித்தான் கருணா. பின்ன அவனும் தான் என்ன பண்ணுவான். தனா யார் எங்க என இல்லாமல் எப்பவும் எழில்… எழில்.. என என்று எழில் ஜபம் படிக்க ஆரம்பித்தானோ.. அன்று ஆரம்பித்தது அந்த குடும்ப ஆண்களுக்கு ஏச்சும் பேச்சும் அவர்களின் மனைவிமார்களால்…

“தனா அண்ணா பாருங்க..எழில எப்படி தாங்கறாரு.. நீங்களும் அவர் கூடத்தான இருக்கறிங்க.. அவரப் பார்த்தாவது கொஞ்சம் பழககூடாது”

“தனா மாமா அக்கா வாய திறந்து சொல்லாமலே மனசறிஞ்சு பார்த்து பார்த்து செய்றாரு.. அவரு ரத்தம் தான உங்க உடம்புலயும் ஓடுது.. நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கறிங்க..”

என்று ஏற்கனவே பல ஏச்சு  பேச்சுகள வாங்கி கொடுத்துவிட்டு இப்படி அவர்கள் கண் முன்னாடியே அட்டகாசம் செய்தால் அவர்களும் என்ன தான் செய்வார்கள்.

“இன்னைக்கு இவன் மொத்தமா டைவர்ஸ் வாங்கி கொடுக்காம அடங்கமாட்டான்” என கருணா மற்றவர்களிடம் கூற அவர்களும் புலம்பி சலித்தனர்.

கொஞ்ச நேரத்தில் தான் வளைகாப்புக்கு என பிரத்யேகமாக எடுத்துக் கொடுத்த மயில் வண்ண பட்டில் தன் திருமணத்தின் போது வாங்கி கொடுத்த நகைகள் பூட்டி.. ஒன்பதாம் மாத வயிறு சற்று பெரிதாக..திருவாரூர் தேரை போல அசைந்து வந்தவளை… சற்று தள்ளி நின்று கண் எடுக்காமல் ரசித்து கொண்டு இருந்தான்.எழில் மணையில் அமர வைக்கப்பட்டு…நலுங்கு வைக்க ஆரம்பிக்க.. தனா எழலின் அருகில் வந்து நின்று கொண்டான்.

முதலில் திலகா நலுங்கு வைத்து வளையல் போட்டு ஆரம்பித்து வைக்க… அடுத்து கற்பகம் நலுங்கு வைத்து மகளுக்கு தங்க வளையல் கைக்கு இரண்டாக போட்டு மகிழ்ந்தார். பிறகு தேவி வசந்தி என பெண்கள் அனைவரும் வளையல் அணிவித்து முடிக்க…

முத்துகுமார் சுந்தரம் கண்ணன் என குடும்பத்தில் மூத்த ஆண்கள் சந்தன பொட்டு வைத்து ஆசிர்வாதம் செய்தனர்.

கடைசியாக தனாவை அழைக்க… தனா எழிலின் முன் வந்தவன்.. நெற்றி கன்னம் என சந்தனம் துலங்க… அலங்காரமான சற்று பெரிதான ஒற்றை சோபாவில் இவ்வளவு நேரம் நிமிர்ந்து அமர்ந்து இருந்ததில் இடுப்பும் முதுகும் வலிக்க.. சற்று சாய்ந்து ஆசுவாசமாக இடக்கையை பின்னால் ஊன்றி  அமர்ந்து சோபையாக தனாவை பார்த்து மென்னகை புரிய…

தனாவிற்கோ பிள்ளை சுமக்கும் கிள்ளையை அணைத்து கொஞ்சிட வேகம் பிறந்தது. மெல்ல தன் இரு கைகளிலும் சந்தனத்தை எடுத்து தடவி அவள் கன்னங்களில் தடவ.. சந்தனத்தின் குளுமையை விட அவன் கைகளின் குளுமை அவளின் உடலெங்கும் சிலிர்ப்பை  உண்டாக்க.. கோதையின் கண்களோ ஏக்கத்தை பிரதிபலிக்க.. கண்ணளானின் உள்ளமோ கள்வெறி கொண்டது.

நான்கு கண்களும் நேர்கோட்டில் சஞ்சாரமிட… இருவரும் மௌனமான மோனநிலையில்…

“க்க்கும்…க்க்கும்…” என சுற்றியும் கருணா வெற்றி திரு பிரசாத் தமிழரசன் கீர்த்தி கனி வசந்தி  என ஒரு பட்டாளமே கணைத்து சத்தமிட…

தனா திரும்பி அவர்களை முறைக்க.. எழிலோ வெக்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.

தனா மெதுவாக எழிலின் கைகளை பிடித்து தன் சட்டைபையில் இருந்த இரு ஜோடி வளையல்களை அணிவித்தான். அதுவரை வெட்கத்தில் தலை குனிந்திருந்த எழில் தனா தன் கைகளில் அணிவித்த வளையல்களை பார்த்தவுடன் சராலென நிமிர்ந்து தனாவை நோக்கினாள்.

பார்த்தவளின் கண்களில் கண்ணீர் கரகரவென இறங்க… அந்த வளையல்கள் தனாவின் தாய் லட்சுமியின் வைரவளையல்கள் ஒரு ஜோடியும் நவரத்தின கற்கள் வளையல்கள் ஒரு ஜோடியும்… தன் அன்பு அத்தையின் வளையல்கள் கணவன் அணிவித்ததில்  மங்கை அவளுக்கு அத்தனை ஆனந்தம். அதனால் வந்த ஆனந்த கண்ணீர்.

தனாவிற்கு  புதிதாக வளையல் வாங்க  இஷ்டமில்லை. தன் தாய்க்கு மிகவும் பிடித்தவள் அதுமட்டுமின்றி தன் மனைவிக்கும் மகவுக்கும் தன் பெற்றோரின் ஆசிர்வாதம் வேண்டும் என நினைத்தே இவ்வாறு செய்தான்.

“உஷ்ஷ்” என மெல்ல அதட்டி அவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன்.. அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்து.. அவளின் புடவையை லேசாக விலக்க.. சுற்றி நின்றவர்கள் இவன் என்னடா செய்யறான் என்று குறுகுறுப்புடன் பார்க்க..

அவளுக்கோ அவன் என்ன செய்ய போகிறான் என தெரிந்ததால்.. அனைவரும் முன்பும் இப்படி செய்ய  சுற்றி நின்றவர்களில் பார்வையில் கூச்சமாகி நெளிந்தவாறே…

“மாமா என்ன பண்றிங்க..எல்லோரும் பார்க்கறாங்க” என அவனின் கைகளை பிடித்து தடுக்க..

“ஏய் என் பாப்புகுட்டிக்கு முத்தம் கொடுக்கறேன்டி.  உனக்கு கொடுத்திட்டு பாப்புகுட்டிக்கு கொடுக்கலைனா கோவிச்சுக்குவாங்க..”

“மாமா.. எல்லாரும் முன்னாடி சேலையை விலக்கி.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..”

“லேசா தாண்டி.. யார் பார்த்தா என்ன நீ ஏன் அவங்களை பார்க்கற.. என்னை பாரு”

தனா “பாப்புக்குட்டி” என அழைத்து இரண்டு மூன்று முத்தங்கள் வைக்க… உடனே குழந்தை வயிற்றில் வேகமாக துள்ளாட்டம் போட..

இவன் என்ன செய்கிறான் என குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இவன் முத்தம் வைத்ததும் குழந்தை துடிப்பாக துள்ளவும்.. இவர்களை சுற்றி நின்று கொண்டு இருந்த இரு குடும்பத்தாரும் பேச்சின்றி வியந்து போய் நின்றனர்.

உடனே கீர்த்தி “அண்ணா நான் நான் ணா..” என்று ஓடி வந்து தனா அருகில் மண்டியிட..

தனா கீர்த்தியின் கைகளை எடுத்து மெதுவாக எழிலின் வயிற்றில் வைத்து..

“பாப்புகுட்டி.. இவங்க அத்தடா.. பாப்புகுட்டியோட அத்த…”

தந்தையின் குரலோ.. கீர்த்தியின் ஸ்பரிசமோ.. மீண்டும் குழந்தை அசைந்தாடியது.குழந்தையின் அசைவை உணர்ந்த கீர்த்தியின் கைகள் கூச  செய்ய… கீர்த்திக்கோ சொல்ல முடியாத உணர்வில் தத்தளிக்க.. தன் அண்ணனை திரும்பி பார்த்தாள். தனா ஆம் என்பது போல கண்களை மூடி தலை அசைக்க…

பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இம்முறை முகத்தில் வியப்பை மீறிய ஆனந்தம்  கூத்தாடியது.

தங்களின் வாரிசு பிறக்கும் முன்பே எவ்வளவு துடிப்பாக பாசமாக இருக்கிறது என தனாவின் சித்தப்பா சித்திகளும் கற்பகமும் பூரித்து போய் இருக்க ….

முத்துகுமார் தான் என் புள்ளைய மயக்கி வச்சிருக்கிற மாதிரி.. என் பேரபுள்ளயையும் மயக்கி வெச்சிருக்கான் என மனதில் வசை பாடினார்.

அடுத்து  பிரசாத் “நான்.. நான் தொட்டு பார்க்கிறேன்” என வர..

எல்லோரும் முன்பு இப்படி இருக்க எழில்  சங்கடமாக உணர்ந்தாள். அவளின் நிலை உணர்ந்த  திலகா தான்..

“போதும் இது என்ன புள்ளதாச்சிய வச்சிகிட்டு விளையாட்டா..எல்லோரும் போங்க.. போயி ஆகற வேலையை பாருங்க..”என சத்தமிட..

எல்லோரும் அமைதியாக… கடைசியாக திலகா தேவி கற்பகம் ஆரத்தி சுற்றி முடித்து எழிலை தனாவோடு சாப்பிட அனுப்பி வைத்தனர்.

சாப்பிட்டு சிறிது நேரத்தில் எழிலை முத்துக்குமார் குடும்பத்தினர் அழைத்துச் செல்ல..தனாவோ அவளை எங்கே அனுப்பினான். அவளின் கைகளை பிடித்துக்கொண்டு தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றவன்..

“இங்கயே இருந்துடேன்டி..  நீயும் பாப்புகுட்டியும் இல்லாம  நான் இங்க தனியா எப்படி இருப்பேன்”

“மாமா..”என எழில் பரிதாபமாக பார்த்தாள்.

“நான் நல்லா பார்த்துகறேன்டி.. வேணும்னா உங்க அம்மாவை இங்கேயே வச்சிக்கலாம்”

“மாமா..”

“நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி.. சொன்னா புரிஞ்சுக்கோ..”

தனாவின் முகத்தை பார்த்து அவளால் ஒன்றும்  சொல்ல முடியவில்லை.

ஏழாம் மாதம் அனுப்பததால் முத்துக்குமார் கற்பகத்திடம் அத்தனை சத்தம் போட்டு இருக்க.. அதை தாயின் மூலம் அறிந்திருந்த எழில் இப்போது என்ன செய்ய என முழித்தாள்.

சுந்தரம் “தனா நல்ல நேரம் போயிட்டு இருக்கு.. அரசி கிளம்பனும். என்ன பண்ணறிங்க.. வாங்க சீக்கிரம்” என்க..

“இதோ வரோம் சித்தப்பா” என்று வெளியே பார்த்து குரல் கொடுத்தவன் எழிலை ஏக்கமாகப் பார்க்க..

எழில் தனாவினை லேசாக அணைத்து “மாமா.. சொன்னா புரிஞ்சிக்குங்க.. இப்ப போய் வரலைனு சொன்னா பெரியவங்க என்ன சொல்வாங்க.. எங்க அப்பா கோவிச்சுகுவாரு..”

“போடி அந்த விருமாண்டிக்கு நான்  எல்லாம் பயப்படுவேனா..”

“மாமா.. அவங்களுக்கும் பொண்ண பக்கத்தில் வச்சு பார்த்திகிடனும்னு ஆசை இருக்காதா.. என்ன ஒரு மூனு நாலு மாசம் நிமிசமா ஓடி போயிடும்”

“போடி” என முறுக்கி கொள்ள.. அவன் தாடையை பிடித்து கொஞ்சி கெஞ்சி என சமாதானப்படுத்தினாள் எழில். அப்போதும் மனசில்லாமல் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் அனுப்பி வைத்தான் தனா.

அவனின் முகவாட்டம் அவள் மனதை பிசைந்தது.

முத்துக்குமார் குடும்பம் எல்லோரிடம் சொல்லி கொண்டு எழிலை அழைத்து சென்றனர்.எழில் தனாவை திரும்பி திரும்பி பார்த்தவாறே காருக்கு சென்றாள்.

தமிழரசனோ கீர்த்தியை முறைத்துக் கொண்டே கிளம்பி சென்றான்.  இன்று  எப்படியாவது கீர்த்தியிடம் தனியாக பேசி காதலிக்க சம்மதம் வாங்கி விட நினைத்தான்.

அவளோ இவனுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தாள். வீட்டின் பின்புறம் கீர்த்தி எதற்கோ செல்ல.. தமிழரசன் யாரும் அறியாமல் அவளை பின் தொடர்ந்து சென்றான்.

அங்கு யாரும் இல்லாமல் போக இது தான் சரியான சமயம் என நினைத்து..

“ஏய் இங்க பாருடி.. என்ன… சும்மா உன் பின்னாடியே  அலைய விட்டுட்டு இருக்க..”

கீர்த்தியோ அவ்விடம் விட்டு நகரப் பார்க்க.. சட்டென் அவள் கைகளை பிடித்துக் கொண்டான் தமிழரசன்.

அவனின் அந்த தீடீர் செயலில் பெண்ணவளோ பதறி போய் கையை உதறிக் கொண்டே  யாராவது பார்த்தால் என்ன நடக்குமோ பதட்டத்துடன் சுற்றியும் பார்க்க..

அவள் கையை அவனிடம் இருந்து விடுவிக்க முயல…  இன்னும் இறுக்கிப் பிடித்தான். இன்று பதில் தெரியாமல் விடமாட்டேன் என்பதை போல..

அவன் இறுக்கிப் பிடித்ததில் வலியால் முகம் சுருக்கி”ஷ்ஷ்… வலிக்குது விடுங்க..”

“இன்னைக்கு நீ எனக்கு பதில் சொல்லியே ஆகனும் கீர்த்தி அதுவரைக்கும் இப்படி தான் கையை விடமாட்டேன்”

“சொன்னா கேளுங்க.. யாராவது பார்த்தால் பிரச்சினை ஆகிவிடும் விடுங்க மாமா..” தன்னை அறியாமல் அவனை மாமா என அழைத்து விட்டதில் மென் சிரிப்போடு கண்களை சுருக்கி நுனி நாக்கை கடித்து நின்றாள்.

அவளின் அந்த அழகில் சொக்கி போய்..அவளுடைய மாமா என்ற அழைப்பிலும்  சந்தோஷம் கொண்டவன் “அப்ப என்னைய லவ் பண்றேனு சொல்லு.. கைய விட்டுடறேன்”

“ஹூம்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே..” என சட்டென்று சொன்னாள்.

அவள் முகத்தை வைத்தே அவள் பொய் சொல்கிறாள் என அறிந்தவன் அவளிடம்..

“நிஜமா.. ஒன்னும் இல்லையாடி.. ஆனா நான் இருக்குனு சொல்லறேன் நிருபிக்கவா..” என்றவன் என்னவென்று உணரும் முன்பே அவளின் இடை வளைத்து இறுக்கி அணைத்து இதழில் முத்தமிடப் போக..

அவனின் தீடிர் செயலில் புரியாமல் முழித்தவள்.. பின்பு சுதாரித்து கொண்டு அவனிடம் இருந்து விடுபட முயல..

அங்கு  “தமிழ்” என திருவின் குரல் கேட்க..அவனின் உறுமலில் இருவரும் விதிர்விதிர்த்து விலக…

தன் தங்கையின்  விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயப்படுத்தி  தப்பாக நடக்க முயற்சிக்கிறான் என நினைத்துக் கொண்டான் திரு

தங்கையின் கையை பிடித்து தன்னருகே நிறுத்திக் கொண்டவன் “என்ன பண்ணிகிட்டு இருக்கறிங்க.. விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்தி தப்பா நடந்துக்க பார்க்கறிங்க.. அசிங்கமா இல்ல..”

தமிழோ “மச்சான்”என ஏதோ சொல்ல வர..அதை எல்லாம் எங்கே காது கொடுத்து கேட்டான் திரு..

“அண்ணியோட  அண்ணாங்கறதால … தனா அண்ணா முகத்துக்காக சும்மா விடறேன். இதே வேற யாராவதா இருந்தா நடக்கறதே வேற..”

தமிழ் கீர்த்தியை பார்க்க.. அவளோ என்ன என உணரும் முன்பே எல்லாம் நடந்திருக்க.. செய்வதறியாது திகைத்து நின்றாள்.

தனக்கு சாதகமாக அவள் அண்ணணிடம் சொல்வாளா

2 thoughts on “புள்ளி மேவாத மான் – 24”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top