ATM Tamil Romantic Novels

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்… வா தேவதா!!
[1]

கிபி 1815, பங்குனி மாதம், 01,
நிலத்தின் ஆழத்தில் இருந்து.. உச்சியை நோக்கி.. அசைக்கவே முடியாத திடகாத்திரத்துடன் வளர்ந்திருந்தன கரும்மலைகள்!!
பேருந்தின் நெரிசலில் போகிற போக்கில் கன்னிப்பெண்களிடம் சில்மிஷம் புரியும் விடலைப் பையன்கள் போல,
அந்தக் கரும்மலைகளின் முகடு தொட்டு.. உரசிப் போய்க் கொண்டேயிருந்தன வெண்பஞ்சு மேகங்கள்!!
மலைமுகடுகள் தொட்டு உரசி வந்த வெண்பஞ்சு மேகங்கள், முழுமதி நிலவையும் உரச வருவது பிடிக்காத தென்றல் காற்றோ,
அவை நிலவை நாடி வந்த போதெல்லாம்.. சுழன்றடித்து அவைகளை தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்க,
வெண்பஞ்சு மேகங்களும், ‘நானும் விடுவேனா?’என்பது போல திரும்பத் திரும்ப நிலவை நோக்கி நகர்வதும், காற்றால் தள்ளிவிடப்படுவதுமாகவே இருந்தது..
பூரணை மதியோ.. அங்கு நடந்த சின்ன இயற்கையின் விளையாட்டை.. பளிச்சிட்டு சிரித்த வண்ணம் பார்த்திருக்க, அந்தக் கானகமே ஏகாந்த இரவில் மிளிர்ந்து கொண்டிருந்தது.
அது மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நில எழில் சொட்டும் அழகிய ‘கண்டி’ நகர்.
இலங்கையர்கள் பிரித்தானியர்களின் ஆட்சிக்கு கீழ் வரும் முன்னர், தமிழ் அரசர்களால் ஆளப்பட்ட கடைசி இராசதானி ‘கண்டி’ப் பெருநகர்.
இலங்கையின்.. இறுதி தமிழ் மன்னரான ‘ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின்’ ஆட்சி நிலவிய மாபெரும் சமஸ்தானம் ‘கண்டிப்’ பெருநகர்.
இத்தகைய இனிய இரவில்.. குளிர் காற்று சுழன்றடிக்கும் இறப்பர் மரங்களும், அடர்ந்த புதர்களும் சூழ்ந்த ஓர் கானகத்தின் மத்தியிலே…
தலைவனும்,தலைவியும் மல்லாக்காகப் படுத்திருந்தனர் வானத்தை அண்ணாந்து பார்த்தபடியிருந்த ஒரு பாறாங்கல்லினால் அமைந்த கல்மலையில்.
இப்பொழுது தான் ‘இனிய கூடலும்’ முடிந்தது என்பதை பறைசாற்றும் முகமாக, மெல்லமாக கலைந்திருந்தது அவள் அணிந்திருந்த இரவிக்கை இல்லாத சேலை!!
மாராப்பு விலகியதில்.. அவள் ஒளித்து ஒளித்து வளர்த்த பெண்மையின் பொக்கிஷங்கள் எல்லாம் கள்ளத்தனமாக வெளியுலகை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க,
அங்கெல்லாம் வெட்கமேயின்றி தழுவியது தென்றல்.
தன் தலைவனின் கைகளில் சிக்குண்டவைகளுக்கு, தென்றலின் வருடல் இதமான ஒத்தடம் போல இருக்க, நிதானமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள் தலைவி.
எப்போதும் அழகாக பின்னி கொண்டைப் போட்டிருப்பவளின் சுருள் அளகக் கூந்தல் இன்று படர்ந்து விரிந்து தலைவனின் தலையணையாக மாறிப் போயிருந்தது.
அவள் பெயர் நந்தினி. மகாசேனனின் காதல் நந்தினி!! ஆசை நந்தினி!! தாரம் நந்தினி!!
தாரமா? ஆம். அரக்கன் போன்ற உடல்வாகு படைத்த ‘மகாசேனனின்” ஏக மனைவி!!
அவனது அகம், பொருள், சொத்து என அனைத்துமாக மாறி விட்டிருக்கும் அழகு மங்கை நந்தினி!!!
அவள் தலையோ, பராக்கிரம பலம் பொருந்திய, மகாசேனனின் யானைத் தந்தம் போன்ற உறுதியான கையில் அடைக்கலமாகியிக்க… அவள் கால்களோ.. தன் தலைவனின் வாளிப்பான தொடைகளை இறுக்கிப் பிடித்திருந்தது.
அவள் கைகள் மகாசேனனின் வயிற்றைத் தழுவிக் கொண்டிருக்க… அவளது ஒரு பக்கத்தனம் அவனது மார்பின் பக்கவாட்டில் பிதுங்கிக் கொண்டிருந்தது.
மகாசேனன்.. அவனைப் பற்றியும், அவனது வீரபுஜ பராக்கிரம பலம் நிறைந்த அவனது வம்சாவழி பற்றி சொல்லியே ஆக வேண்டும். அப்போது தான் மகாசேனன் பற்றி முழுத் தெளிவு வாசகர்களுக்கு கிடைக்கக் கூடும்.
மகாசேனன் என்பான் ‘தச மஹ யோதயோ’ என்னும் “பத்து மகா இராட்சத போர்வீரர்கள்”என்றழைக்கப்பட்ட வம்சாவழியில் வந்தவன்.
சாதாரண மக்களை விட்டும்.. இவர்களின் தோற்றம் இராட்சதத்தனமாக இருந்ததை கவனித்த.. ‘துட்டகைமுனு’என்னும் சிங்கள மன்னன்,
இலங்கையை ஆண்ட சோழ மன்னனான ‘எல்லாளனை’ தோற்கடிக்க.. இவர்களை உபயோகப்படுத்திக் கொண்டான்.
‘பொலன்னறுவை’ நகர எல்லையில் நடந்த போரில், இவர்களின் உதவியுடன், வென்ற ‘துட்டகைமுனு’ அநுராதபுரம் என்னும் நகரை தலைநகராகக் கொண்டு , ஆட்சியும் அமைத்தான் என்கிறது இலங்கையின் வரலாறு சொல்லும் “மகாவம்சம்”.
இந்தப் பத்து இராட்சத போர்வீரர்களுக்கும் தனித்திறமைகள் இருந்தன.
மலையளவு சுமையை அநாயசமாக சுமக்கக் கூடியவர்களாக,
குதிரையை விடவும் வேகமாக ஓடக்கூடியவர்களாக,
குறிபார்த்து அம்பெய்வதில் அர்ஜூனனை நிகர்த்தவர்களாக,
சின்ன பொருளையும் துல்லியமாக பார்க்கும் திறன் கொண்டவர்களாக,
காற்று, மழை, ஆகாயம் ஆகியவற்றின் போக்கை அறிந்தவர்களாக.. என பல திறமைகளை தன்னகத்தே வைத்திருந்த இராட்சத போர்வீரர்களின் வம்சாவழியில் வந்தவன் தான் மகாசேனன்.
அவனது அரக்க உடலமைப்பைக் கண்டு ஊரே நடுங்க, அரக்க உடலுக்குள் இருக்கும்.. குழந்தைத்தனமான உள்ளத்தை கண்டு கொண்ட ஒரே பெண் “நந்தினி”.
தன்னை.. தனக்காக ஏற்றுக் கொண்ட பேரழகு மங்கை நந்தினி.. அந்த அரக்க உடல்வாகு படைத்தோனுக்கு சகலமுமாக மாறிப்போக,
ஊர் அறிய.. அரசர் ‘ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்’ தலைமையில் தாலியும் கட்டி, முறைப்பெடி பெண்டாண்டான் இந்த இனிய அரக்கன்.
எப்போதும் இயற்கையோடு ஒன்றிப் பிணைந்து கூடல் புரிவது அந்த இனிய அரக்கனுக்குப் பிடிக்கும்.
அப்படியாக நிகழ்ந்த இன்றைய கூடலின் பின்னர், வழமையாக அவளை அணுவளவும் நீங்காது.. கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டேயிருப்பவன்,
இன்று வானத்தை அண்ணாந்து பார்த்த வண்ணம்.. அந்த பெளர்ணமி நிலவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது ஏனோ மனத்தை முரண்டச் செய்தது பெண்ணவளுக்கு.
அவனது தீராத யோசனை.. இவளுக்கு கொடுத்தது தீராத மனவலியை.
வயிற்றைத் தழுவிய கைகள் மெல்ல முன்னேறி அவனது நெஞ்சைத் தழுவ, அரக்கனையும் கட்டிப்போடும் மெல்லிய குரலில்,
“என் மன்னஹ்!” என்று தாபத்துடன் அழைத்தாள் மகாசேனனின் “நந்தினி”.
‘மன்ன’ என்ற மனைவியின் அழைப்பில் சிந்தனை கலைந்தவனாக, திடுக்கிட்ட வண்ணம், மனைவியின் முகம் பார்த்தவன் முகம்… சற்றே கலங்கிப் போயிருந்தது.
அவன் மன்னனாக கருதும் ஒரே தலைவன் ‘ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனாக’ இருக்கையில், மனைவி தன்னை மன்னன் என்றழைத்தது ஒரு துளியும் பொறுக்க மாட்டாதவன்,
உணர்ச்சி வசப்பட்ட குரலில், “என்ன அபத்தம் நந்தினி?.. நான் மன்னனா? .. நாம் அனைவரும்.. நம் பெருமைக்குரிய மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் அடிமைகளாக இருக்கும் போது என்னை ‘மன்னன்’ என்று விழிப்பது எவ்வாறு தகும்?” என்றான் அவன்.
கணவனோ மன்னனின் உண்மை விசுவாசி. கண்ணால் இடும் கட்டளையை தலைமேல் கொண்டு செய்யும் பக்தியுள்ள அடிமை.
ஆனால் மனைவியோ அப்படியே கணவனுக்கு நேர்மாறு.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் அண்மைக்கால போக்கு.. பொதுமக்கள் யாவருக்கும் அத்தனை உவப்பாக இல்லை என்பதால்.. அவர் மேல் இவளுக்கும் அவமரியாதையே உண்டு.
ஆரம்பத்தில் அவரும் செங்கோல் ஆட்சியே புரிந்தார்.
நாடு பிடிக்க வந்த வெள்ளையன்.. ‘மது’ என்னும் வலை விரிக்க, ‘மதுவில்’ விழுந்து முழுநேர குடிகாரனாகப் போய், மக்கள் நலன் மறந்த விக்கிரம ராஜசிங்கனை, “மன்னன்”என்று விழிப்பதென்ன?
“மன்னன்” என்று நினைக்கவும் அவளால் முடியுமா என்ன?
அதை சொன்னால், தன் இனிய இராட்சசனின் மனம் நோகுமென்று வேறு சொன்னாள் நந்தினி.
அவள், அந்த இராட்சசனின் மனத்தைப் பித்தம் கொள்ளச் செய்யும் வண்ணம் கலகலத்துச் சிரிக்க… அந்த முத்து மூரல்களின் அழகிய நகைப்பில்.. மனக்கலக்கம் மறந்து ஸ்தம்பித்து நின்றான் மகாசேனன்.
அவள் உதிர்த்தது அத்தனை அழகு சிரிப்பு.
பௌர்ணமி நிலவு.
ஏகாந்த இரவு.
தன் மனதுக்கு உகந்த பேரழகுப் பெண்ணின் சிரிப்பு.
எப்பேர்ப்பட்ட வீரனையும் உன்மத்தம் கொள்ளச் செய்யும் தான் இல்லையா?
சிரிக்கும் தன் மனையாளையே இமைக்க மறந்து அவன் இரசித்துப் பார்த்திருக்க, அவள் கைகள்.. அவனது கழுத்தைச் சுற்றி வளைத்து மெல்ல இழுத்தது.
மெல்லியலாள் அவள் இழுத்ததும் நகருமா அந்த பர்வதம்?
மனைவி தன்னை அருகே அழைப்பது புரிந்து.. அவனாகவே வளைந்து கொடுக்க நாடி, மெல்ல அவளை நோக்கித் திரும்பி, அவளை இடையூடு தழுவி.. தன் மார்போடு கட்டியணைத்துக் கொண்டான் அவன்.
அவன் விழிகளும், அவன் விழிகளும் இரண்டறக் கலக்க, மந்தகாசமான குரலில் நந்தினி சொன்னாள், “ஆள்பவன் மன்னனால்.. என்னை ஆளும் நீரும் மன்னர் தானேஹ்?”என்று.
மனைவியின் வார்த்தைகளில் உள்ளம் கனிய, தன் முரட்டு நெற்றியோடு, அவளது பிறைநுதலை மெல்ல இடித்தவன்,
விழிகள் அகல, “நான் உன்னைஹ் ஆளுகிறேனாஹ்? .. இந்த இராட்சசனின் முப்பொழுது நினைவுகளையும் திருடியஹ் திருடி!! நீயல்லவா என்னை ஆளுகிறாய்..!!” என்றான்.
மனைவியின் காதை மறைத்து வீழ்ந்திருந்த கார் குழல் கற்றையை மெல்ல ஒதுக்கிய வண்ணம்..அவளது சுந்தர வதனத்தையே பார்த்துக் கொண்டிருந்த மகாசேனனின் கண்கள்.. மீண்டும் ஏதோ யோசனை வயப்படலானது.
கணவனின் பிடரி மயிரை கைவிட்டு சுகமாக அளைந்து கொண்டிருந்தவள், “திரும்பவும் என்ன யோசனை?”என்று கேட்டு வைக்க,
யோசிக்கும் முகபாவனையை மாற்றாமல், அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துப் பிடித்தவாறே …
மீண்டும் வானத்தை அண்ணாந்து பார்த்தவனாக,
சோகம் இழையோடும் குரலில், “மனதில் ஒரு சின்ன நெருடல் நந்தினிஹ்…எந்நேரமும் ஒரு அசம்பாவிதம் நடந்து விடுமோஹ் என்ற முரண்டல்.. இதோ இப்பொழுதும் என் கைகள் உன்னை அணைத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மனம்? ஆனால் மனமோ வெள்ளையன் பால் பிரதானிகளும் சாய்ந்து விட்டதன் பின்பு.. கண்டியை கைக்கொள்ள வெள்ளையன் தீட்டும் திட்டங்கள் யாதாக இருக்கக் கூடும்?? என்றே சிந்திக்கிறது” என்றவனுக்கு நாட்டுமக்களின் சிந்தை எழ, மனைவியை விட்டும் மெல்ல விலகி எழுந்து கொண்டான்.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கையில் இனி நாடு இருப்பது சரியில்லை என்று, கண்டி சிங்கள பிரதானிகளும் (அமைச்சர்களும்) கூட.. நாட்டை வெள்ளையன் கையில் தாரைவார்க்க சித்தமாகி நின்ற பரபரப்பான தருணம் தான் அது.
பிரித்தானியர் கைக்கு நாடு சென்றால்.. இனி அடிமை வாழ்க்கை தான் என்று புரிந்து விட, அவன் கண்களில் காதல்க் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, நாட்டுப்பற்றும், சுதந்திர உணர்வும் தலைதூக்கலானது.
இறப்பர் மரக் கானகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே, உணர்ச்சி துடைக்கப்பட்ட குரலில்,,
“ எந்நேரமும் நாடு சாயலாம். நாட்டு மக்கள் வீழலாம்.. பிரித்தானியர் நம்மை அடிமைப்படுத்தலாம் என்னும் போது மனம் நில்லாமல் தடுமாறுகிறது.”என்றான் மகாசேனன்.
அவளும் அரசனின் கையாலாகாத இழிநிலையையும், பிரதானிகளின் துரோகத்தையும், வருங்கால அரசியலையும் அறிந்தே வைத்திருந்தாள்.
இருப்பினும் உயர்மட்ட சத்திரியர்களின் தீர்மானமே நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க, தன் தலைவனின் நாட்டுப்பற்று, நடப்பதை மாற்றுமா?
தன் இனிய அரக்கனைத் தேற்றும் வழிவகை அறியாது நின்றவள், உடைகள் களைந்து, அங்கலாவண்யங்கள் நிலாவெளிச்சத்தில் பளிச்சிடுவது கூட சிந்தனையற்றவளாக,
அவனைப் பின்னோடு அணைத்து.. வயிற்றைத் தழுவிய வண்ணம், முதுகில் குட்டிக் குட்டி முத்தங்கள் வைக்கலானாள்.
இராட்சத உடல்வாகு கொண்டிருப்பவனின் விறைத்த உடல், மனைவி வைத்த குட்டிக் குட்டி முத்தங்களினால் கொஞ்சம் கொஞ்சமாக இளகலானது.
அவனும் ஒரு கட்டத்தில் காதல் உணர்வுகள் இழையோட, அவளை நோக்கித் திரும்ப விளைந்த நேரம், இறப்பர் காட்டின் புதர்களில் இருந்தும் சலசலக்கும் ஒலி கேட்க,
ஒலி வந்த திசை நோக்கி சட்டெனத் திரும்பியவன், தன்னுடைய கொடூரக் குரலில், “ய்யாரங்கேஏஏ?”என்று அதட்டிக் கேட்டான்.
சலசலத்த முட்புதர்களுக்கு நடுவே இருந்து.. கறுப்பு உடையும், இடையில் தொங்கி, தரை வரை தழுவும் வாளும் என வந்து நின்றது ஒரு சாமான்ய உருவம்.
மகாசேனனின் பக்கத்தில் யார் வந்து நின்றாலும் அது சாமான்ய உருவமாகத் தான் மாறிவிடும் அல்லவா?
பயப்படும்படியாக எதுவுமில்லை. வந்தது என்னமோ ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் படைத்தளபதியே தான்.
இன்னொரு ஆடவனைக் கண்டதும் நந்தினிக்கு.. தான் நின்றிருக்கும் கோலத்தில் ஒரு பதற்றம் பிறக்க, களைந்த உடைகளை சட்டுபுட்டென்று சரிசெய்து கொள்ள சந்தர்ப்பம் தேட,
மகாசேனனோ… மனைவியின் அலைக்கழிப்பை, அவளைத் திரும்பிப் பாராமலேயே உணர்ந்து, தன் திடகாத்திரமான முதுகையே மனைவிக்கு திரை போல ஆக்கி.. அவளை மறைத்து மானம் காப்பவனாக நின்றான்.
இனிய அரக்கனின் உன்னதச் செயல் அறிந்து, மனதார கணவனை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனவள், கிடைத்த அந்த அற்ப நொடிகளில் தன் உடைகளை சீர்படுத்திக் கொள்ளவும் செய்தாள்.
வந்த தளபதியாரும், அவனைத் தவிர வேறெதுவுமே கண்ணில் பதியாதவராக, நிமிர்ந்து, கனத்த குரலில்,
“மகாசேனரை கையோடு அழைத்து வரும்படி மன்னரின் உத்தரவு”என்றார் அவர்.
இதுவரை மனைவி தந்த காதல் உல்லாசத்தில் மனம் தத்தளித்துக் கிடந்தவனுக்கு, “மன்னரின் உத்தரவு ” என்ற ஒற்றை சொற்றொடரைக் கேட்டதும் சிலிர்த்தடங்கியது உடல்.
ஒரு வினாடி, இறப்பர் காட்டில் தனியாக நிற்கத் தலைப்படும் தன் மனைவியைக் கூட மறந்தவனாக, உணர்ச்சி வசப்பட்ட பக்தி நிறைந்த குரலில்,
“இதோ இப்போதே வந்தேன்”என்றபடி விரைய ஒரு எட்டு எடுத்து வைக்கப் போனவனுக்கு, ஏனோ தளபதியாரின் பின்னால் செல்ல முடியாமல் போனது.
நிர்க்கதியாக கானகத்தில் நிற்கும் மனைவியின் ஞாபகம் அவனது கண்களில் வந்து போக,
திரும்பி வந்து நந்தினியை, தளபதியார் இருப்பதை கூட சட்டை செய்யாமல்.. தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன்,
தவிப்புடன் அவளது விழிகளைப் பார்த்தவனாக, நந்தினியின் இரு கன்னம் ஏந்தியவன், அவளது பிறைநுதலில் அழுத்தி முத்தம் வைத்தான் மகாசேனன்… இது தான் தனக்கும், நந்தினிக்குமான இறுதி சந்திப்பு என்பதை அறியாமல்.
இறுதி அணைப்பு என்பதை அறியாமல். இறுதி முத்தம் என்பதையும் கூட அறியாமல்… மனம் கலக்கமுற நின்றாள் இனிய ராட்சதனின் அழகு நந்தினி.
சட்டென தன் இடைக்கச்சையின் சொருகலில் இருந்து ஒரு குறுங்கத்தியை உருவியெடுத்தவன், மனைவியின் கைகளில் திணித்தவனாக, “இதோ என் குறுங்கத்தி.. வீட்டுக்கு செல்லும் வழியில் தேவைப்படின் உபயோகப்படுத்து..”என்றவன்,
அவனையும் அறியாமல் அவனது திரண்ட விழிகளில் இருந்து கண்ணீர் ஊற்றெடுக்கவாரம்பித்தது.
மனைவியைப் பார்த்துக் கொண்டே அன்பு மீதூறும் தழுதழுத்த குரலில், “பா.. பாதுகாப்பாக.. வ்வீடு சென்று விடு…” என்றவன், அவளது இடையூடு கையிட்டு அணைத்தவனாக, மிருதுவாக நந்தினியின் இதழ்களைக் கவ்விக் கொண்டான்.
மனைவியின் இதழில் சுரந்த ஒட்டு மொத்த இதழ்த்தேனையும் சொட்டு விடாமல் உறிஞ்சுக் கொண்டவனுக்கு, அப்போதும் புரியவில்லை… இது அவன் அருந்தும் கடைசி அமிர்தம் என்று.
தளபதியாரோ.. அந்த இக்கட்டான நிலைமையில், வாயடைத்துப் போனவராக தலைகுனிந்து சங்கடத்துடன் நிற்க, அவரின் சங்கடம் அறியாமல் சிலபல மணித்துளிகளாக நீண்டு கொண்டே போனது இனிய இதழ் முத்தம்.
தன் அழகு மனைவியை பிரிய மனமேயற்று பிரிந்தவன், கண்களுக்குள் இறுதியாக அவள் முகத்தை நிரப்பிக் கொண்டவனாக, தளபதியை நோக்கி, “வாருங்கள் செல்லலாம்.” என்றவண்ணம் இறப்பர் கானகத்தை விட்டும் இறங்கி நடந்தான்.
ஏகாந்தமான நிலவொளியில்.. செல்லும் தன் மன்னவனையே.. அவன் தந்த குறுங்கத்தியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இமைக்காமல் பார்த்திருந்தவளுக்கு.. அன்று ஏனோ இதயம் வழமைக்கு மாறாக தாறுமாறாக அடித்துக் கொண்டேயிருந்தது.
நந்தினியின் இடது கண்ணில் இருந்து மாத்திரம் வழிந்த ஒற்றைத்துளி நீர்.. சரேலென அவள் கன்னம் விட்டு இறங்கி மாராப்பை நனைக்கத் தொடங்கியது.
அவன் தந்த குறுங்கத்தியை அநாயசமாக இறுக்கிப் பிடித்த வண்ணம், கானகத்தின் ஒற்றைவழிப் பாதையோடு தைரியமாக நடந்து,
சப்தமில்லாமல் வீடு வந்து சேர்ந்து, தலையணையில் தலை வைத்தவளுக்கு, மனம் உள்ளே முரண்டிக் கொண்டேயிருந்தது.
அந்த சின்னக் குடிசையின் மோட்டுவளையை வெறித்துப் பார்த்தவளின் கைகள், மெல்ல கீழிறங்கி இன்னும் மேடு தட்டாத தன் மெல்லிய வயிற்றை வருட,
இதழ்களோ, “அப்பா விரைவில் வந்ததும்.. உன் வரவை பற்றி சொல்லிவிடலாம் கண்ணா”என்று தாய்மையோடு முணுமுணுத்தது.
ஆம். மகாசேனன் காட்டிய உன்னதமான அன்பில் உதித்த அழகிய முத்துக்குழந்தை அவளது மணிவயிற்றில்.
அவன் முரடனல்லவா? மென்மையான குழந்தையை கையாள இவள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவன் இலகுவில் குழந்தையை கையாளும் மென்மையை பழகிக் கொள்வான் என்று அவன் பற்றிய கனவிலேயே மிதந்தவளுக்கு, தூக்கம் வரவில்லை.
எத்தனை நேரமானாலும் பரவாயில்லை. அவன் வந்ததும், ‘அவன் குழந்தையை இவள் சுமக்கும் கதையை’ சொல்லி, அவனது சந்தோஷத்தைக் கண்ணார கண்டு விட்டுத் தான், நித்திரை எல்லாம்.. என்று மனதோடு எண்ணிக் கொண்டவள், அவனுக்காக காத்திருக்கலானாள்.
அடுத்த ஒரு சில நாழிகைகளில் எல்லாம் வீட்டின் கதவு தட்டப்பட, உச்சாதி பாதம் வரை உடம்பில் ஓர் சந்தோஷச் சாரல் தூறி மறைந்தது அவளுக்கு.
‘இதோ வந்துவிட்டான் என் மன்னவன்’ என்றே எண்ணம் தோன்ற… கலைந்திருந்த கூந்தலையும், சேலையும் சொற்ப நொடிகளில் சரி செய்து கொண்டே, கதவை நோக்கி ஓடினாள் நந்தினி.
கதவை ஆவலும், காதலும் போட்டி போட திறந்தவளுக்கு, முகம் அப்படியே வாடி ஏமாற்றம் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
வந்திருந்தது அவள் எதிர்பார்த்த அவளது தலைவன் அல்ல. மாறாக வந்திருந்து என்னமோ அவளது உற்ற தோழி கண்ணம்மா.
வெகுதூரம் இரவில் ஓடி வந்திருப்பாள் போலும். கையில்லாத ரவிக்கையின் பின்புறமும், முன்புறமும் வியர்வையில் நனைந்து ஊறிப் போயிருக்க, முன்கழுத்தில் முத்து முத்தாக திரண்டு வழிந்து கொண்டிருந்தது வியர்த்தநீர்.
கண்ணம்மாவின் தனங்கள் மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, ஏதோ விஷயம் சொல்ல வந்தவளுக்கு மேற்கொண்டு வாய் திறக்க முடியாதவாறு நா வறட்சி வேறு தொண்டையை அடைக்கலானது அவளுக்கு.
தன் தோழியின் நிலை கண்டதும், இதயப்பந்து வந்து நெஞ்சாங்கூட்டு மத்தியில் சுருண்டு கொண்டது போல வலியெடுக்க,
விஷயத்தை அறிய முன்னாடியே ஒரு பதற்றமும், துணுக்கமும் பிடித்துக் கொண்டது நந்தினியை.
சட்டென்று தன் தோழியின் கைச்சந்தினை பாய்ந்து பிடித்துக் கொண்டவள், நா தழுதழுக்க, “எ.. எ.. என்னவாயிற்று கண்ணம்மா?? ” என்று கேட்டாள் நந்தினி.
தான் ஓடி வந்த திசையைக் காட்டிய வண்ணம், பேசவே முடியாத திக்கித் திணறிய குரலில், “கக.. ல் தி. திடலில் மகாசே.. சேனரை….. திட… ட்ல்ல.. இல்” என்கிறாளே ஒழிய மேற்கொண்டு சொல்ல முடியாத வண்ணம் மூச்சு முட்டியது கண்ணம்மாவுக்கு.
தோழி தன் கணவனின் பெயரை உச்சரித்து விட்டு மேலே சொல்ல முடியாமல் திணறுவது உச்சபட்ச அவஸ்தையைக் கொடுக்க,
அச்சத்தில் விரிந்த கண்களுடன், கண்ணம்மாவின் கைகளை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டவளாக, “கற்திடலில் மகாசேனரைய்ய்ய்? சொல் கண்ணம்மாஆஆ… மகசேனரைஐஐ??” என்று அதட்டிக் கேட்டும் பயனில்லை.
ஏந்தி வந்த விஷயத்தை சொல்ல முடியாமல்.. அவள் திண்டாட.. உடலெல்லாம் ஒரு குரூரமான நோயை அனுபவித்தாற் போன்ற வலியெழுந்து பரவியது நந்தினிக்கு.
இனியும் கண்ணம்மாவை அமர வைத்து, ஆற அமர நீர் பருக்கி அவள் அதிர்ச்சி தெளிவித்த பின்.. நடந்ததை கேட்கும் வரை பொறுமை இல்லாதவளாக…
கண்ணம்மா சொன்ன கற்திடலை நோக்கி, பதற்றத்துடன் ஓடினாள் தலைவி.
வழியில் இருந்த கற்களும், முட்களும் அவளது மென்மையான பாதத்தை தைக்கிறது;சருமத் தோல் கிழிந்து இரத்தமும் எட்டிப் பார்க்கிறது.
அப்போதேனும் ஓட்டத்தை நிறுத்தினாளா அவள்? இல்லையே?
அவனது ராட்சத கணவன்.. மனைவி காலில் முள்குத்தக் கூடாது என்பதற்காக.. அவளைக் கையில் தூக்கிய வண்ணம் அல்லவா நடப்பான்?
அப்பேர்ப்பட்ட அன்புக்கணவனுக்கு ஒன்று என்றதும் பாதங்களில் முள் தைத்தால் என்ன? கல் தைத்தால் என்ன? என்ற நிலைப்பாடே அவளுடையது.
அந்த நடுநிசி இரவின் பாதுகாப்பற்ற கானகமும், உயிர் துளைக்கும் கூதல்க்காற்றும், கல்லால் ஆன கடினமான மலையும் அவளை இம்மியளவும் கலைக்காது போக, தோழி சொன்ன ‘கற்திடலை’ நோக்கி ஓடினாள் அவள்.
கண்ணம்மா சொன்ன கற்திடல். அது ஒரு கானகம் அடர்ந்த மலைப்பான பிரதேசத்தில் இருந்தது. அந்த மலைப்பாங்கான இடத்தை நோக்கி ஏறும் போது… எங்கிருந்தோ திரண்ட மேகங்கள்… திடும்மென்று பொழிந்தன பேய்மழையை.
கானகத்தின் மேடுபள்ளம் எங்கும் அடித்து ஊற்றிப் பெய்தது மழை நீர்… அருவியாகவும், சிற்றோடைகளாகவும் உருமாறி ஊற்றெடுத்து ஓட, அத்தனையும் கணக்கில் கொள்ளாது முன்னேறினாள் அவள்.
போகும் வழியில்.. மண்ணுக்கு வெளியே புடைத்து வெளித் தெரிந்த ஒரு பெரும் வேர் இடுக்கில் .. சமயா சந்தர்ப்பமே பாராது அவளது பாதங்கள் தடுக்க, அந்தோ பரிதாபம்!!
சமநிலையின்றி முகம் குப்புற விழுந்தாள் அவள்.
மற்றுமொரு பெரிய வேரில்.. அவளது இன்னும் மேடிடாத அந்தச் சின்ன வயிறும்,நெற்றியும் போய் மோத, உயிர் போகும் படி எழுந்த ஓர் வலியில், கானகமே அதிர “ஆஆஆஆஆஆஆஆ”என்று கத்தினாள் நந்தினி.
அப்போது அவள் நிலை கண்டு இரங்கிய வருணபகவானும் கொடூரமான மின்னலை அனுப்பி, அந்தக் கானகத்தையே வெட்ட வெளிச்சமாக்க, அங்கே அவள் கண்ட காட்சி..அவளைக் கதறிக் கதறி அழ வைத்தது.
மழைநீரில் நனைந்து ஒட்டிப்போய் தெரிந்த சேலையோடு.. உதிரமும் கலந்து வழிய, அவளது இனிய இராட்சசனுக்காக அவள் பாதுகாத்த பொக்கிஷம்… மழைநீரோடு நீராக போவது தெரிந்தது.
கூடவே நெற்றி வேறு விண்விண்ணென்று தெறித்து, நுதலில் இருந்தும் உதிரம் வெளிப்பட, அவளுக்கு இது அனைத்தையும் கவனிக்க, துக்கம் அனுஷ்டிக்கக் கூட நேரமில்லை என்று மனம் வேறு இடித்துரைக்க,
மெல்ல எழுந்து கொண்டவளுக்கு, அடிவயிற்றில் குத்தியது போல வலித்தது.
கால்களுக்கிடையிலோ.. இரத்தம் வழிய வழிய.. கற்திடலை நோக்கி… கானகப் பாதையில் வளர்ந்திருந்த ஒவ்வொரு மராமரத்தின் தண்டையும் ஆதரவாகப் பிடித்து பிடித்து, நெடும் மூச்சுக்களை விட்ட வண்ணமே நடந்தாள் அவள்.
அவள் வந்தடைய வேண்டிய கற்திடலும் வந்தது. அடிவயிற்றிலும், முழங்காலிலும் பெரு வலி எழ.. சட்டையே செய்யாதவளாக வீறுகொண்ட பெண்புலி போல கற்திடலின் உச்சிமேட்டை நாடிப் போனாள் அவள்.
அங்கே இருந்தது மொத்தம் மூவர். தளபதியார் மற்றும் இரண்டு பொதுமக்கள். அதில் ஒருவன் அவளிடம் தகவல் சொன்ன கண்ணம்மாவின் தமையன்!!
தமையன் மூலம் செய்தி அறிந்து வந்து சொல்லியிருக்கிறாள் என்று உண்மை உணர்ந்தவளுக்கு…
அவர்கள் அனைவரும் இலங்கையின் இறுதி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் வலதுகைகளாக இருக்கக் கண்டவளின் கண்கள் சுற்றுமுற்றும் அலைந்து தன் மகாசேனனையே தேடியது.
அவனும் மன்னனின் உண்மை விசுவாசி அல்லவா? அவனும் மன்னனின் வலதுகை அல்லவா? அப்படியானால் அவளது அன்புக்கினிய கணவனும் தான் எங்கே?
சுற்றிநின்ற கூட்டத்தை மெல்ல விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த போது, அவர்களின் ஒட்டு மொத்த பார்வையும் ஓரிடத்தில் நிலைத்து பதிந்திருப்பதைக் கண்டவளுக்கு, உள்ளூற மின்சாரம் தாக்கியது போல உடல் கிறுகிறுக்கத் தான் செய்தது.
மன்னனின் உண்மை விசுவாசிகளின் கண்கள் பதிந்த இடத்தில் தன் கண்கள் பதித்த நந்தினி.. அங்கே தன் ஆருயிர்க்கணவன், மூச்சுக்குழல் அறுக்கப்பட்டு இறந்து கிடப்பதை அறிந்து.. தன் மூச்சு வெளிவர ஒரு கணம் திகைத்து நின்றாள்.
அவளுடைய மகாசேனன்!! .. அவளுடைய இனிய கணவன் மகாசேனன்!!.. இராட்சத உருவமும், குழந்தை மனமும் உள்ள மகாசேனன் அல்லவா அது??
வெறும் உடல் மட்டுமாக.. உயிர் பிரிந்த ஜடமாக.. அசைவற்ற பிரேதமாக கிடப்பது அவளது இனிய இராட்சசன் அல்லவா அது??
ஒரு நாழிகையின் பின்னர் தான் சித்தபிரம்மை தெளிந்தாற் போன்று, ஓடோடி வந்தவள்.. உயிர் பிரிந்த கணவனின் தேகத்தை பாய்ந்து கட்டிக் கொண்டு.. வாய் விட்டு கதறி அழத் தொடங்கினாள்.
கணவனுக்கு என்ன நடந்திருக்கிறது என்று யாரும் வாய் விட்டு சொல்லாமலேயே.. அவளுக்குப் புரிந்தது.
அந்த காலத்தில், பிரித்தானியர்களின் ஆட்சியை எதிர்த்த ராஜாமார்கள் எல்லாம், ‘இனியும் வெள்ளையனை எதிர்ப்பது கடினம்.. தோற்பது உறுதி’ என்று இறுதிக் கட்டத்தில் தெரிய வந்து விடும் போது..
வெள்ளைக்காரன் கையில் தன் சேர்த்து வைத்த வைடூரியங்களும், வைரங்களும்,தங்கமும்,வெண்கலமும், செம்பும், பித்தளையும் போய் சேர்ந்து விடக் கூடாது என்று,
ஊரில் இருக்கும்.. பெரும் மலை போன்ற கல்லைக் கூட அநாயசமாகத் தூக்கக் கூடிய, இராட்சத உடல் கொண்டோனை அழைத்து வந்து ..
ஒரு பெரிய குழி தோண்டச் சொல்லி,வைரமும், வைடூரியமும் கொண்ட பெரும் பெட்டகத்தை புதைத்து விட்டு, அதுக்கு மேலே மலை அளவு கல்லை அநாயசமாகத் தூக்கி வைத்து.. மறைத்து வைக்கச் சொல்லி விடுவர்.
திரும்ப அந்த கல்லை அந்த ராட்சச அரக்க உடல் கொண்டவனால் மட்டுமே தான் தூக்க முடியும்.
இருப்பினும் வெள்ளைக்காரன் கையில் அந்த இராட்சசன் அகப்பட்டுக் கொண்டால், எவ்வித்தை செய்தாவது, அந்த மலை போன்ற கல்லை.. அவனை தூக்க சொல்லி விடுவான் என்ற அச்சத்தில்.. ராஜா புதையல் இடத்திலேயே, அவனையும் கொலை பண்ணச் சொல்லி உத்தரவிட்டிருக்க,
புதையல் புதைத்த மலை போன்ற கல்லுக்கு அருகிலேயே இறந்து கிடந்தான் அவள் மேல் உயிரையே வைத்திருந்த மகாசேனன்.
மகாசேனனை அழைத்துச் சென்ற தளபதியாரும், இன்னும் இருவருமே அந்த இடத்தில் இருக்க, கணவனை கட்டியணைத்து கதறியழுத பெண், கணவனையும் இழந்து, அவன் தந்த சிசுவையும் இழந்து நிர்க்கதியாகி நிற்பதை உணர்ந்தாள்.
அழுது அழுது கண்ணீர் வெளிவர மரத்துப் போன விழிகளுடன், வெறி வந்தவள் போல பட்டென்று எழுந்தவளின் கண்கள்.. தளபதியாரை வெறித்துப் பார்த்தது; இதழ்களில் மழைநீர் வழிந்து ஓட, கால்களிலே தான் இழந்த ஒரே வாரிசின் உயிர் இரத்தமும் ஓட,
கடினப்பட்டு மெல்ல மெல்ல தளபதியாரை அடைந்தவள், ஈனஸ்வரத்தில், “இதற்குத்.. தானா… என்னிடம் இருந்து என் மகாசேனரை அழைத்துச் சென்றீர்கள்?? இதற்குத் தானாஆஆஆ க்கைய்.. யோஹ்டுஹ் அழைத்துச் சென்றீஈஈர்கள்?”என்று கத்திக் கேட்க,
ஒன்றும் பேசாமல் குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்ற தளபதியோ இயலாமை நிறைந்த குரலில், “மன்னர்.. வெள்ளையரால் சிறைபிடிக்கப்பட்டார்…தளபதியாகிய நான் தப்பித்து ஓடியதை எண்ணி தலைகுனிகிறேன்.. இன்றோடு இராஜவம்சம் கவிழ்ந்தது.. இராணியும் குழந்தையோடு தலைமறைவானார்… சிறைபிடிக்கப்பட முன்னர் மன்னரின் இறுதி ஆணை இது..”என்றார் அவள் கணவனின் பிரேதத்தை காட்டிய படி.
“இறுதி ஆணை” என்று அவர் உதிர்த்த ஒற்றை வார்த்தை அவளை அப்படியே பத்ரகாளியின் மறுஉருவம் கொண்டாற் போல காட்டியது.
அவளது விழிகள் இன்னும் இன்னும் செந்நிறங்கொள்ள, தன் பருத்த தனங்கள் ஏறி இறங்கி.. இதயம் விம்மிப் பொரும மூச்சு வாங்கியவள்,
வெறுத்துப் போன குரலில், “எது இறுதி ஆஆஆஆணை? உலகியல் செல்வங்களை பாஆஆதுகாக்க.. அவர் மேல் உயரிய விசுவாசம் கொண்ட சேவகனின் உயிரைப் பறிப்பதாஆஆஆ அவரது இறுதி ஆஆஆஆணை?? ஒரு பெண்ணின் தாலி பறித்து நிர்க்கதியாக்குவதாஆஆஆஆ அவரது இறுதி ஆணை??
ம்மகாசேனனின் உயிரைப் பறிப்பதில் அவருக்கென்ன அலாதி ஆஆஆனந்தம்? மகாசேனரை கொல்லச் சொல்லாமல் தலைமறைவாக சொல்லியி.. ர்ருக்கலாமேஏஏ? என் வாழ்க்கைக்கு பதில் சொல்லஹ் உங்கள் ‘க்குடிகாஆஆர்ர’ அரசனால் ம்முடியுமாஆஆஆ?”என்று மன்னரையே அவள் வெறி கொண்ட வேங்கை போல எதிர்த்து கேள்வி கேட்க,
தளபதியாரோ பதில் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நின்றார்.
அவளோ அடிபட்ட குரலில் தொடர்ந்து சொன்னாள்.
மன்னருக்கு உரிய மரியாதை சுத்தமாக தேய்ந்து விட்டிருந்தது அவள் குரலில்.
கழுத்து நரம்புகள் புடைத்து வெளித்தெரிய, கைமுஷ்டியை அழுத்தி மூடிய வண்ணம், “அவ்வனெ.. ல்லாம் என்ன ம்மன்னன்? மக்கள் எப்படிப் போனால் என்னஹ் என்று அசட்டையாஹ்.. கஹ்… இருந்து விட்டு.. நித்தமும் “க்குடி க்குடி” என்று இருந்தவனும் ஓர் ம்மன்னனாஆஆஆ? அவன் இட்டதும் ஓர் ஆணையாஆஆஆ?”என்று கேட்க, அந்தப் பதிவிரதையின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தலைகுனிந்தனர் மன்னனின் விசுவாசிகள்.
அவள் மனதுக்குள் வந்து போனது “அரசியார் குழந்தைகளுடன்” தலைமறைவான விஷயம். அவளுக்கே வாரிசே இல்லாமல் செய்து விட்டு, ராஜசிங்கனின் வம்சம் மட்டும் உயிரோடு வாழ்வதா??
மன்னன் தன் கணவனுக்கு செய்த அநீதியில்…. மரத்துப் போயிருந்த அவள் இதயம்…. மன்னனின் குடும்பத்தைப் பழிவாங்கவிடும் வெறியில் ஊறித் திளைத்திருந்தது.

அவள் கண்கள் சிவந்து.. மடல் வீங்கிப் போய் தினுசைக் காணுகையில்..மன்னரின் உண்மை விசுவாசிகளுக்கு.. அந்த மாகாளி தேவியின் ருத்ரவதனமே நெஞ்சில் நிலைக்கவாரம்பித்தது.
மாகாளியே தானா இவள்? அவர்களின் உடலும் அவர்களையும் மீறி நடுக்குறத் தொடங்கியது.
மார்புக்கச்சையில் இருந்து அவளது மன்னன் தந்த குறுங்கத்தியை ஆவேசமாக உருவி எடுத்தவள், சிவந்த கண்களுடன்,
இடிஇடிக்கும் வானத்தை அஞ்சாது பார்த்தவளாக, “கொடுங்கோல் ம்மன்னஹ்… உன் வ்வம்சத்தில் ஜ்ஜனிக்கும் க்கடைசி உய்யிர்ரை.. ய்யும்.. வ்வேரறுப்பேஏஏன்.. இது நான் வணங்கும் வ்வத்ரகாளி ம்மீது சத்தியம்ம்ம்!! ..” என்று ஆவேசத்துடன் கத்தியவள்,
அதே வானத்தை விரிந்த தலைமயிர் கோலத்துடனும், இரத்தம் சொட்டச் சொட்ட வழியும் உடலுடனும், “த்தாய்யேஏஏ.. இந்த அபலையின் உடலை உனக்கு காணிக்கை ஆக்குகிறேஏஏஏன்.. இப்போதே இந்நொடியே.. என் இறுதி ஆசையை தீர்க்கும் வ்வல்லமையை தந்து விடு!! .. ”என்றவள் குறுங்கத்தியெடுத்து தன் இதயத்தில் பாய்ச்ச…
திடுக்கிட்டுப் போன வானம்… கண்டியில் இருக்கும் சகலமானவர்களின் இதயத்தையும் கிடுகிடுங்கச் செய்த வண்ணம் பேரிடியாக முழங்கியது.
ஓர் நோக்கத்தோடு செத்துப் போன நந்தினிக்கு, தன் கணவனையும், குழந்தை உயிரையும் பறித்த “ராஜசிங்கனின்” வம்சத்தை வேரறுக்கும் பழிவெறியுடன் செத்துப் போன நந்தினிக்கு.. மரண வலி என்பது கிஞ்சித்தும் தெரியாமலேயே இலகுவில் உயிர் பிரியலானது.
அவளது நரபலியையும், வேண்டுதலையும் ஏற்றுக் கொண்டாளோ காளி மாதாவும்??
கண்களைப் பறிக்கும் மின்னல் மின்னி, அகோரமாக இடியும் இடிக்க, அந்த உடலில் இருந்து ஒரு பெரும் கரும்புகை கிளம்பிய வேகத்தில்…. மரமெல்லாம் சரசரவென சரிந்து விழுத் தொடங்கியது ஆக்ரோஷமாக.

 

4 thoughts on “ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top