ஏகாந்த இரவில்.. வா தேவதா!
[2]
இந்தியா, தில்லி.
டெராஸிலிருந்தும் வந்து கொண்டிருந்த மெல்லிய மஞ்சள் நிற மின்விளக்கொளி அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் பட்டுத் தெறிக்க,
கரை தட்டிக் கொண்டிருந்த நீர் அலைகளோ பொன் வண்ணமாக காட்சி தருவது… பார்ப்பதற்கு அத்தனை இரம்மியம்.
சீமெந்திலான மூன்று பக்கச் சுவர்களும், இன்னொரு பக்கம் பாரிய கதவுகள் கொண்ட ஓர் கண்ணாடிச் சுவரும்…
அதனையொட்டி அமைந்த டெராஸூம்… டெராஸோடு மினுங்கும் நீச்சல் தடாகமும் என… வெகுசொகுசான அறை தான் அது.
டெராசில் நின்றும் வந்து கொண்டிருந்த அந்த மஞ்சள் நிறவொளி, இருண்டிருந்த அவ்வறையை கொஞ்சமாக நிறைக்கவாரம்பிக்க,
இருண்ட அறையும் கூட “லக்ஷூரியஸ்” என்று சொல்லும்படியாகவே இருந்தது.
‘பொசு பொசு’வென்று மூன்றரையடி இறங்கக் கூடிய பெரும் மெத்தையில்…
வெற்றுமேனியுடன்.. இடுப்பில் வெறும் ஷார்ட்ஸூடன் மட்டும் அணிந்தவனாக… மல்லாக்காகப் படுத்திருந்தான் அவன். அவன் சத்யாதித்தன்!!
முப்பொழுதும் “வர்த்தகம் வர்த்தகம்” என்று காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடும்.. அழகும், அறிவும், பணமும் நிறைந்த பெரும் வாலிப வர்த்தகன்!!
அதுவும் இந்திய வர்த்தகன்!!
அவனுக்கென்று ஒரே சொந்தமான தாயும் சென்னையில் இருக்க, இவனோ வேலை விஷயமாக தில்லியில் தனக்கென்று இருக்கும் ‘சற்றே’ எளிமையான இல்லத்தில் இருக்கிறான்.
சத்யாதித்தனின் பாஷையில் ‘சற்றே’ எளிமையான இல்லமே, டெராஸூடன் நீச்சல் தடாகமும் இருக்குமாயின், அப்படியானால் அவனது அகராதியில் ‘ஆடம்பரமான’ இல்லம் என்பது எவ்வாறு இருக்கும்???
நினைத்துப் பார்க்கும் யாவருக்கும் மலைப்பாகவே இருக்கும்.
இங்கே, ‘சத்யாதித்தன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறான்’ என்பதை பறைசாற்றும் முகமாக, அவனுடைய வலிமையான பரந்து விரிந்த மார்புகளில் இருந்தும்,
ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தது சீரான மூச்சு.
அந்த கணம் பார்த்து, துயின்று கொண்டிருந்த சத்யாதித்தனின் நாசி..
சுண்டியிழுக்கும் ஒரு மெல்லிய மல்லிகை மணத்தை தன்னைச் சூழ உணர…
கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்திலிருந்து விழிப்பு தட்டினாலும் கூட… அவன் தன் விழிகளைத் திறவாமலேயே படுத்திருந்தான்.
அவனுடைய மஞ்சத்தில் ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்படுவது புரிய, கண்களை அரைக்கண்ணாகத் திறந்து பார்த்தவனுக்கு, ஒரு உருவம்… தன்னை நோக்கி மஞ்சத்தில் தவழ்ந்து வருவது புரிந்தது.
சிவப்பு நிற மிடி அணிந்து… தன் பருத்த தொடைகளின் முட்டி மஞ்சத்தில் ஆழப் பதியப் பதிய.. சத்யாதித்தனை நோக்கி தவழ்ந்து வந்து கொண்டிருந்தது என்னமோ ஒரு பெண்ணுருவமே தான்.
‘இன்னாள்’ தான் என்று இனங்காண முடியாதளவுக்கு, அவளுடைய அடர்ந்த கூந்தல் அந்தப் பெண்ணின் முகத்தை மறைத்திருக்க,
சின்ன சப்தம் கூட எழுப்பாமல்.. சத்யாதித்தனை நோக்கி முன்னேறியது அந்தப் பெண்ணுருவம்.
மெல்ல மெல்ல அந்த உருவத்துக்கும், அவனுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வர,
வெகு வெகு அருகாமையில் வந்த அப்பெண்ணுருவம் அவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன், ஓரிரு நாழிகைகள் இமைக்காமல் பார்த்திருந்தது.
கண்கள் மூடி துயின்று கொண்டிருந்த போதும் கூட.. அழகான கிரேக்கசிற்பம் போலவே படுத்திருந்தான் சத்யாதித்தன்.
அவன் மூடியிருந்த விழிகளின் இமை நிறமும், கேசத்தின் நிறமும் செம்பட்டையாக இருந்ததும் சரி..
அவனுடைய திண்மையான முறுக்கேறிய கைகளில் ஒன்று.. அவனது பின்னந்தலைக்கு அடியில் அடைக்கலமாகியிருந்ததும் சரி,
அவ்வாறு அவன் கையுயர்த்திப் படுத்திருந்தது.. திண்ணிய மார்புகளையும், விலாக்களையும் இறுக்கிக் காட்டியதும் சரி.. என எல்லாமே அவனது அழகை இன்னும் கூட்டுவதாகவே இருந்தது.
அவனைக் கண்டதும்.. அவளது கவர்ச்சியான விழிகளில் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற…
அவள் கைகள்.. அவன் வயிற்றில் ஊர, அப்போதும் அவன் துயில் கலையாமல் இருப்பதைக் கண்ட அவ்வுருவம் தைரியமாக.. கொஞ்சம் அதிகப்படியாகவே உரிமை எடுத்துக் கொண்டன.
அவனது உரமேறிய வயிற்றைத் தடவிய.. அக்கைகள், மெல்ல மெல்ல மேலேறி அவனது கழுத்தை நெருங்கிப் போனது.
அப்பெண்ணுருவின் தனங்கள் ஏகத்துக்கும் ஏறி இறங்க… மூச்சும் தாறுமாறாக வெளிவரத் தொடங்கியது.
கழுத்தை நெருங்கிப் போனவளின் கைகளை.. பட்டென எதிர்பாராத விதமாக.. பற்றியிழுத்தவன்,
அந்தப்பெண்ணை.. தன் மார்போடு சாய்த்துக் கொண்டான்.
அவனது உரமேறிய மார்போடு.. அவளது செந்தனங்கள் சென்று ‘பச்சக்’ என்று மோதியவாற்றில்,
புன்னகைத்த வண்ணமே.. அப்பெண்ணுரு தன்னை விட்டும் நீங்கி சென்று விடவே கூடாது என்ற நப்பாசையில்,
அவளிடையோடு தன் கரங்களை இட்டு.. கட்டியணைத்த வண்ணம், கண் திறந்தான்.
அந்த வாலிப வர்த்தகன்.. எந்நொடியும் பார்க்க ஆசைப்படும் அழகு முகம்.. அந்தப் பெண்ணுருவினுடையது என்னும் போது…அவனால் புன்னகைக்காமலும் இருக்க முடியுமோ?
தன் முகத்துக்கு எதிராக.. அவன் மனதுக்கு உகந்த பெண்ணின் மதிமுகம்.
அதிலும் கார் மேகக் குழல்கள் அவளது மதிமுகத்தை மறைத்திருக்க, மெல்ல அவற்றை விலக்கி, அவள் காதுக்குப் பின் சொருகிய வண்ணம்,
காதல் சொட்டச் சொட்ட அவள் முகத்தையே பார்த்தவன்,
“மாட்டிக்கிட்டீயா? .. ஹவ் லோங் ஆர் யூ ட்ரையின் டு ப்ளே வித் மீ?”என்று கேட்க, அந்தப் பெண்ணிடம் எந்த பதிலும் இல்லை.
மாறாக.. எதிரில் இருக்கும் ஆண்மகன், தன் மீது உன்மத்தம் கொள்ளச் செய்யும் அளவுக்கு, அவனது முரட்டு அதரங்களை கிறக்கத்துடன் பார்த்த வண்ணமே,
தன் இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு.. கீழுதட்டைத் தாபத்துடன் கடித்தாள் பெண்.
அவளது சிறு செய்கையில்.. எத்தனையோ பேரழகுப் பெண்களை கடந்து வந்திருக்கும் சத்யாதித்தனின் இதயம்.. உருகிப் போனது.
‘பெண்’ என்னும் எதிர்பாலினத்தையே இன்று தான் அவனியில் கண்டது போலவே.. அவளையே அணுஅணுவாகப் பார்த்து இரசித்தான் சத்யாதித்தன்.
சின்னக்குழந்தைகள் போல பால்வடியும் முகம் அவளுக்கு.
ஆனால் அந்த பால்வடியும் முகமா இத்தனை தாபத்தையும் சிந்துவது? என்று ஆச்சரியமாகவும் இருந்த அதே வேளை.. சத்தியாதித்தனுக்கு அது பிடித்திருந்தது.
மேலிமையும், கீழிமையும் அடர்ந்து.. இமை மயிர்கள் கொண்ட.. திரண்ட கண்கள்.
கைதேர்ந்த சிற்பியொருவன் செதுக்கி செதுக்கி அச்சு பிசகாமல் செய்தது போன்ற மூக்கு!!
அதிலும் கீழிதழ் சற்றே திரட்சியாகவும், மேலிதழ்கள் குவிந்தும் என பார்த்ததும் தாவிக் கடிக்கத் தோன்றும் செர்ரிப்பழச் சிவப்பு கொண்ட இதழ்கள்!!
எல்லாமே.. எல்லாமே சத்யாதித்தன் வாழ்நாளில் எவ்வளவு முறை சுகித்தும் அலுத்துப் போகாத வண்ணம், அத்தனையும் ‘பர்ஃபெக்ட்’ என்று அவன் சிலாகிக்கும் படியிருக்க,
அந்தப் பெண்ணை படைத்ததில் பிரம்மனுக்கும் ‘இது என் படைப்பு’ என்ற தலைக்கனம் வரும் வண்ணம்… ‘இனி இல்லை’ என்ற அழகு அந்தப் பெண்!!
சத்யாதித்தனுக்கு அந்தப் பெண் மீது தாபம் மட்டும் தான் உண்டு என்றால் தவறு.
அந்தப் பெண்ணுக்காக எதையும் துச்சமாக தூக்கியெறியும்.. ஆத்மார்த்தமான காதலும் அவனில் உண்டு.
பணம் என்றாலே.. ஆயிரம் பெண்களின் சகவாசம் இயல்பிலேயே இருக்க.. இவன் இன்னும் ‘ஏகபத்தினி விரதனாக’ இருக்கக் காரணம் இந்த தேவலோகத்து சுந்தரியே தான்.
அவளது இடையை.. அவளுக்கு வலிக்குமோ என்றஞ்சி மெல்ல தழுவிய வண்ணம், ஹஸ்கி குரலில்,
“உனக்காகஹ்.. எவ்வளவுஹ்… நேரம் வெயிட் பண்றது? எல்லாரும் என் அப்பாயின்மென்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டிருக்க.. நீ என்னையே வெயிட் பண்ண வைக்குறீயாஹ்?”என்றவன்,
அவளது இதழில் தன் மூச்சை மோதச் செய்த வண்ணம், “என்னை காக்கஹ்.. வைச்சதுக்.. குகுஹ்.. என்ன தண்டனை கொடுக்கலாம்?”என்று அவன் கிறக்கத்துடன் கேட்க, அவள் அப்போதும் எதுவுமே பேசவில்லை.
தான் அழகி என்ற கர்வமேயற்ற அவள் முகம்.. அவள் அழகுக்கு இன்னும் அழகு சேர்ப்பதாக இருக்க.. தலைவனின் பேச்சில் அப்படியே முகம் சிவந்து போனாள் பெண்.
புன்சிரிப்பு சிந்தும் முகத்துடன்… கூச்சம் பிடுங்கித் தின்ன அவனையே பார்த்திருந்தாள் அவள்.
அவனோ மெல்ல மெல்ல நெருங்கி.. அந்த தாபமூட்டும் இதழ்களைக் கவ்வ அவன் முயற்சி செய்த அந்த விநாடி, அவன் கைவளைவில் இருந்த பெண்.. ‘எங்கே?’ என்று தேடும் வண்ணம், அவனிலிருந்தும் மாயமாக மறைந்து விட்டிருந்தாள் அவள்.
இத்தனை நேரம் இருந்தவள், கண் கட்டு வித்தை காட்டியது போல மாயமாக மறையவும் அப்படியே பதறிப் போனான் சத்யாதித்தன்.
‘எங்கே அவள்? இத்தனை நேரமும் கைவளைவில் இருந்த அவள் எங்கே?’ பதற்றத்துடன் எழுந்து .. தேடலானான் அவன்.
அவனது அறை முன்பிருந்தது போல.. நிசப்தமாக.. யாரும் வந்து போன எந்தத் தடயமுமின்றி அமைதியாக இருந்தது.
அவள் எங்கே? அறையின் மத்தியில் நின்று கொண்டு தவிப்புடன் நாலாபுறமும் திரும்பி சுற்றுமுற்றும் ‘தன் மனைவியைத்’ தேடினான் அவன்.
மனைவியா?
ஆம், அந்த தேவலோக மங்கைக்கு சொந்தக்காரன் அவன். அவளைத் தொட்டு தாலி கட்டியிருக்கிறான்.
மலையடர்ந்த இறப்பர் கானகம் தன்னிலே.. காதல் ஆசைகள் அடங்க மறுக்க மறுக்க.. அவளோடு இரண்டறக் கலந்து தேன்னிலவும் கொண்டாடியிருக்கிறான்.
இரண்டு வயதில்.. சுருண்ட சுருண்ட முடி கொண்ட.. அவளைப் போலவே அழகான ஒரு குறும்புக்கார பெண்குழந்தைக்கு, அவளால் தகப்பனும் ஆகியிருக்கிறான்.
விழிகளில் அகப்படாத மனைவியை.. அவளது பெயர் சொல்லி.. அழைத்து தேடியிருக்கலாம் அல்லவா அவன்?
அது தான் முடியாதே?
அவனது இதயம் கொண்டாடும் பெண்ணின் முதலெழுத்துக் கூட அவனுக்குத் தெரியாதே!!
இது என்ன விந்தை? மனைவியின் பெயர் தெரியாத கணவனா? ஆம், சத்யாதித்தனுக்கு நடந்தது பலவுமே விந்தை தான்.
நிஜமெது? நிழலெது? என்று அவனுமே குழம்பித் தவிக்கும் விந்தை அது.
அவள் இல்லை என்ற தவிப்பில்.. இதயத்தில் வலி எழ நின்றவனின் கண்களில் இருந்தும்.. அவன் நின்றிருந்த அறையின் சுவர்கள் எல்லாம் மறையத் தொடங்கி.. முழுதும் வெண்மையாக காட்சி தரலானது.
ஒ.. ஒருவேளை சத்யாதித்தன் மரித்து விட்டானா?
மரித்ததும் சுவர்க்கம் வந்து விட்டானா? அ.. அதனால் தான் எங்கும் வெண்மை.. எதிலும் வெண்மையாக காட்சி தருகிறதா?
இல்லை. அவன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை சான்றுபகரும் வகையில்.. அவன் உடல் குளிர் காற்றை உணரத் தொடங்கியது.
வானத்திலே எந்த நட்சத்திரங்களும் அற்று, நிலா மட்டும் தனியாக காய்ந்து கொண்டிருந்தது. மேகங்கள் கூட இல்லாது கறுத்து இருந்தது வானம்.
இப்படியும் அடர் இருளில் வானம் இருக்கக் கூடுமோ? என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே, அவன் கண்கள் எதேர்ச்சையாக பூமியை நோக்கி திரும்பியது.
அவன் கண்களில் ஒரு புராதன வணக்கஸ்தலமொன்று விரிந்தது.
அழகான ஓட்டுக் கூரையுடன்.. அலங்கார குறுமதில்கள்.. வெள்ளை வெளேரென்ற நிறத்தில் சென்றிருக்க..
இரவு வானில்.. சின்னச் சின்ன மின்குமிழ்களின் கைவரிசையில் மிளிர்ந்து கொண்டிருந்தது அந்த இடமே!!
அது அவன் எப்போதுமே வந்திராத இடம்!! இப்படியான இடத்திற்கு அவன் தன் வாழ்நாளில் வந்ததே இல்லை!!
ஒரு சின்ன கூடாரம் போன்ற.. தூண் வைத்துக் கட்டப்பட்ட கண்ணாடி பெட்டகத்துள்.. பத்மாசனத்தில் அமர்ந்து கண்கள் மூடி தியானம் செய்து கொண்டிருந்தது வெள்ளை வெளேரென்ற புத்தர் சிலை.
அப்படியானால் இது ஓர் பௌத்த விகாரையா??
ஆம், அது இலங்கை மக்களின் பெரும் அபிமானம் கொண்ட புத்தரின் புனித பற்தாதுவை வைத்து கட்டப்பட்டிருக்கும் கண்டியிலுள்ள “தலதா மாளிகை” என்று அழைக்கப்படும் ஓர் புத்த விகாரை.
அந்த விகாரை பற்றி இதுநாள் வரை அறிந்திராதவன், சிலையையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு.. அப்போதும் கூட நெஞ்சு முழுக்க மனைவியின் ஞாபகமாகவே இருந்தது.
பதற்றத்துடன் கண்களைச் சுழற்றி.. அவள் கிடைக்க மாட்டாளா? என்று நப்பாசையுடன் தேடிய போது,
அவனது ஒட்டுமொத்த தவிப்பும் தீர்ந்து, இதயம் ஆசுவாசம் கொள்ளும் வண்ணம்… அவன் கண்கள் அவளைக் கண்டு கொண்டது.
தலதா மாளிகையை அண்மித்திருக்கும் பாரிய குளத்தின் அருகாமையில்… கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு.. அவனுக்கு புறமுதுகிட்டு நின்றவாறு,
தூரத்தே தெரியும் விகாரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
தான் நேசம் வைத்திருக்கும் பெண்ணை கண்டு கொண்டதும், அவன் இதழ்களில் அழகான குறுநகை விரிய, அவளை நோக்கி ஓடோடிச் சென்றவன்..
இத்தனை நேரம் தவித்த தவிப்பினை எல்லாம் அவளுக்கு உணர்த்திக் காட்டி விடும் வேகத்தில்…
அவளைப் பின்னிருந்து கட்டியணைத்துக் கொண்டான் சத்யாதித்தன்.
அவனது கைகள், அவளது மெல்லிய வயிற்றை கட்டிக் கொள்ள, அவளது பின்னங்கழுத்தில் தவிப்புடன் முகம் புதைத்தவன்,
அவளது மணத்தை முகர்ந்த வண்ணமே, “என்னை விட்டு எங்கே போன? கொஞ்சம் நேரம் உன்னை பிரிஞ்சிருந்தாலும்… எனக்கு கோபம் வரும்னு உனக்குத் தெரியாதூஹ்? இனி எங்கே போறதுன்னாலும் என்னையும் கூட்டிப்போஹ்..” என்றவனின் கைகள்.. அவளது சின்ன வயிற்றை இன்னும் கட்டியணைத்தது.
அவ்வேளையில்.. அவள் வயிற்றை அவன் அழுத்தியதில் அவன் கைகளிலெல்லாம் பிசுபிசுவென்று திரவம் ஒட்டிக் கொள்வது போல இருக்க,
மெல்ல கையெடுத்துப் பார்க்க, கையில் இரத்தக்கறை மிகுந்திருப்பது புரிந்தது.
ஏதோ அசம்பாவிதம்.. அவனையும் மீறி நடந்திருக்கிறது என்று புரிய, கண்களால் கலங்க.. மனைவியின் தோளைத் தொட்டுத் திருப்ப,
அவளோ.. அதற்கு மேலும் நின்றிருக்க முடியாமல்.. கணவனின் முகத்தை கண்ணீர் மல்கப் பார்த்தவளாக, அவனது கைவளைவிலேயே சரிந்தாள்.
அவள் முகம் ரொம்ப ரொம்ப சோர்ந்து, கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேல் சொருக எத்தனிக்க, வயிற்றிலோ.. யாரோ கத்தியால் குத்திய அடையாளம்!!
அந்த இடத்திலிருந்து.. குபுகுபுவென இரத்தம் பாய்ந்து வந்து கொண்டிருக்க.. இரத்தக்கறை தோய்ந்த கைகளுடன.. மன்னவனின் கன்னத்தைப் பற்றியவள்,
பேசவே கடினப்பட்ட குரலில்,
“ஏஏஹ்… ஏன் வர.. வ்வஹ்..ரலை? உனக்.. காஆகஹ் எத்தனை நாள் காத்திருந்தேன்?? .. நீ நீ வருவே வருவேன்னு காத்திருந்தேன்… வாழ்க்கையில ஒ.. ஒரு தடவை கூட என்னை தேடி வரணும்.. பார்க்கணும்னு தோணலையா உனக்குஹ்??.. என் மேல நீ வைச்.. ச்ச.. க்காக்.. காதல் அவ்வளவு தானா?.. நீ வந்திருந்தா என் உயிரைக் காப்பாத்தியி… ருக்கலாம் ஆதிஈஈஹ்..”என்று கேட்டவள், தன் இறுதி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கோ.. அவளோடு அவன் வாழ்ந்த வாழ்க்கை கண்களில் நிழலாடி விட்டுச் சென்றது. தாயின்றி தவிக்கப் போகும் அவனது குழந்தையின் ஞாபகம் வந்து போனது.
ஏதோ அவளைத் தன்னுடன் நிறுத்தி வைத்துக் கொள்ளும் வேகத்தில், பைத்தியக்காரத்தனமாக.. இரத்தம் வெளிவந்து கொண்டிருக்கும் காயத்தை மறைத்த வண்ணம்,
அவளை நோக்கி கண்களில் அமைதியாக நீர் வழிய, “நோஓஓ. நோநோஓஓ.. யூ கான்ட் டூ திஸ் டு மீஈஈ… க்கமாஆன்… வேண்டாஆஆ.. வேண்டாஆ… நமக்கு ஒரு குழந்தை இருக்கு.. யோசிச்சுப் பாரூஊஊ… என்னை.. தனியாஆஆ விட்டுட்ட்உ.. போ.. காஆதே…நோ..நோஓ..ஸ்டே வித் மீஈஈ.. எ.. என்னால நீயில்லாஆஆ.. மல்.. இருக்க முடியாதுமாஆஆஹ்.. ப்ளீஸ்ஸ்..” என்று ஏதேதோ பிதற்ற,
அவளின் மூச்சு நின்று நின்று வரத் தொடங்கியது.
இறுதியாக தலைவனைப் பார்த்தவள், காதலுடன், “எ..என்..ன் பே.. பேஹ்.. பேர் என்னான்னு தெரிஞ்.. சிக்க்..கஹ்.. ஆ.. ஆசைப்பட்றீயா..??” என்று கேட்க, அவனோ மௌனமாக ஆமாம் என்று தலையாட்ட,
அவன் காதோரம் கிசுகிசுப்பாகத் தன் பெயர் சொன்னாள்.
“யௌ..வனாஹ்….. யௌவனத்தமிழ்ச்செல்விஹ்” என்று இறுதியாக தன் பெயரைச் சொன்னவள் கைகள், பிடிமானமின்றி நிலத்தில் வீழ்ந்தது.
அவளது திரட்சியான விழிகளில் இறுதியாக அவன் விம்பம் விழுந்தது. மூச்சு வெளிவருவதும் அப்படியே தடைப்பட்டு நின்றும் போனது.
மனைவி தன்னை விட்டுச் சென்றதை சில நொடிகள் கழித்த பின்னரே அவனுடைய முட்டாள்தனமான இதயத்துக்குப் புரிய,
“அவள் இனி இல்லை” என்ற நினைவையே தாங்க மாட்டாது, அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, இரத்தம் தோய்ந்த முகத்துடன், “யௌவனாஆஆஆஆ..” என்று உயிர் போகும் வண்ணம் வானம் பார்த்துக் கத்தினான் அவன்.
அவனது வலியைத் தாங்க மாட்டாத வானமும்.. அவனோடு இணைந்து அழ நாடி.. பெரும் பெரும் துளிகளாகத் தூறத் தொடங்க, தண்ணீர் முகத்தில் பட்டதும்.. சட்டென்று விழிப்புத் தட்டியது சத்யாதித்தனுக்கு.
பதறியடித்துக் கொண்டு எழுந்தான் அவன்.
இன்னும் அந்தக் கொடூரக் கனவின் தாக்கத்தில் இருந்து வெளிவந்திருக்காதவனின் கைகளோ, தன் கனவு மனைவி ‘யௌவனா’ என்றெண்ணி,
அருகில் இருந்த தலையணையை..அவள் வயிறு என்று எண்ணி இரத்தம் வராமல் இறுக்கிப் பிடித்திருந்தது.
இதழ்களோ திரும்பத் திரும்ப, “நோஓஓ. நோநோஓஓ.. யூ கான்ட் டூ திஸ் டு மீஈஈ… க்கமாஆன்… வேண்டாஆஆ.. வேண்டாஆ… நமக்கு ஒரு குழந்தை இருக்கு.. யோசிச்சுப் பாரூஊஊ…” என்று சொன்னதையே உளறிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தின் பின் தான், சுயநினைவுக்கு வந்தவனுக்கு ‘தலையணையின் ஒரு பகுதியை கையால் பொத்திக் கொண்டே’கண்டது உளறவதும்,
கண்டது அனைத்தும் கனவு என்பதும் புரிய, நெடுமூச்சொன்றை விட்டுக் கொண்டே அலைக்கழிப்புடன், நெற்றியில் கைவைத்துக் கொண்டே.. உட்கார்ந்திருந்தவனின் இதழ்களோ,
அனிச்சை செயல் போல, “யௌவனா… என் யௌவனா.. அவளைக் காப்பாத்தணும்.. ஐ ஹேவ் டு சேவ் மை வைப்” என்றே முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
அவள் பெயர் “யௌவனா.. யௌவனத்தமிழ்ச்செல்வி”என்று அவள் வாயாலேயே கேட்ட கனவு.. இப்படி கொடூரமாகவே முடிய வேண்டும்?
கடந்த இரண்டு மாதங்களாக கனவில் வரும் பெண்..
அவளோடு வாழ்ந்து, தாலி கட்டி, ஒரு குழந்தைக்கு அவனைத் தகப்பனும் ஆக வைத்த அந்த மர்மமான காதல்ப்பெண்ணின் பெயர் என்றேனும் தெரிய வராதா என்று நனவிலும் அவன் ஏங்கியதுண்டு.
எப்போதும் மணமான ஆண்கள்.. இன்னொரு பெண்ணை பார்க்கும் போது, “நம்மை நம்பி வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள்” என்று எண்ண..
ஆனால் இவனுக்கோ, பிற பெண்களைப் பார்க்கும் போது, “நம்மை நம்பி கனவில் ஒரு பெண் இருக்கிறாள்” என்றே தோன்றும்.
அவள் யாரென்று தெரியாது! ஊர் தெரியாது. பேர் தெரியாது!! ஆனால் நித்தமும் கனவில் வந்து அவனோடு வாழ்பவள்.. அவனுக்கு தன் தாயைப் போலவே இன்னோர் சொந்தமாகவே ஆகிவிட்டிருந்தாள்.
அந்த அழகு மங்கையுடன்.. தூக்கத்தில் தரும் தொடர் கனவுக்காக..
அவளோடு அவன் வாழும் கனவு வாழ்க்கையின் இன்பத்துக்காக,
இன்னும் தாய் பார்க்கும் ‘பெண்களை’ எல்லாம் வேண்டாம் என்பவனுக்கு… இன்று மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்து வந்த நாள்.
அவளின் பெயர் தெரிந்ததில் ஓர் மகிழ்ச்சி என்றால்.. அவள் தன்னை விட்டுப் பிரிந்ததில் ஓர் துக்கம் அவனுக்கு.
இறுதியாக அவன் சொன்ன வார்த்தைகள் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது.
கடைசித் தருணத்தில் மூச்சை இழுத்துப் பிடித்த வண்ணம், “நீ வருவே வருவேன்னு காத்திருந்தேன்… வாழ்க்கையில ஒ.. ஒரு தடவை கூட என்னை தேடி வரணும்.. பார்க்கணும்னு தோணலையா உனக்கு??.. என் மேல நீ வைச்ச காதல் அவ்வளவு தானா?.. நீ வந்திருந்தா என் உயிரைக் காப்பாத்தியிருக்கலாம் ஆதிஈஈஹ்..”என்ற அவளது வார்த்தைகள் அவனை ஒரு பைத்தியக்காரன் போலாக்கியது.
ஏன் அவள் அவ்வாறு இறுதியாக சொன்னாள்?? அப்படியானால் அவள் தன்னை இவன் தேடி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறானா?
அவன் உள்ளம் திடமாக நம்பியது.
கனவுப்பெண்ணுக்கு ஆபத்து. அவனது மனைவிக்கு ஏதோ ஆபத்து.
அதே சமயம் அது வெறும் கனவல்ல. அவளது ஆபத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஒரு தகவல் அது.
‘அவள் இந்த உலகத்தில் தான் இருக்கிறாள்’ என்பதற்கு ஆதாரமாக புத்தவிகாரை ஞாபகம் வர,
‘அந்த புத்த விகாரை எங்கிருக்கிறது?’ என்று பார்த்து விடும் ஆவல் பிறந்தது அவனுக்கு.
சட்டென டிராயர் மீதிருந்த மடிக்கணினியை எடுத்தவன், கூகுளில் ஆங்கிலத்தில், “உலக பிரபலமான புத்த விகாரைகள்” என்று அடித்துப் பார்த்தான்.
அதிலோ ஆயிரத்தெட்டுப் புகைப்படங்கள் வரிசையாக வந்து கொட்டது தொடங்க… அப்படியே ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டு போகும் போது.. அவன் கனவில் கண்ட விகாரையும் வந்தது.
அதன் பெயர் “தலதா மாளிகை” புத்தரின் புனித பற்தாது வைத்துக் கட்டப்பட்டிருக்கும் ஒரு விகாரை.. இருப்பது இலங்கையில்.. என்று தெரிய வர,
இருக்கும் வேலைப்பளு எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இலங்கை போனால்.. இந்த தொடர் கனவுகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று தோன்றியது அவனுக்கு.
ஆனால் அந்த புத்த விகாரை இருந்தது இலங்கையில். “இலங்கை”. சீதையை இராவணன் கவர்ந்து சென்ற இடம் என்றளவில் மாத்திரமே இலங்கையைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தவனுக்கு,
அவள் இருப்பது இலங்கை என்பதில் தான் சிக்கலே தொடங்கியது.
அவனுக்கென்றிருக்கும் ஒரே உறவான தாயோ.. அவனுக்கு பொறுப்பு வந்த இருபத்தோராவது பிறந்த நாளில் ,
அவனை நாடி வந்து எதையுமே சரிவர சொல்லாமல், “ஸ்ரீ லங்கா பக்கம் எக்காரணம் கொண்டும்.. போக மாட்டேன்னு சத்யம் பண்ணிக் கொடு சத்யா”என்று சம்பந்தமே இல்லாமல் சத்தியம் வாங்கிய நினைவு வர,
தாயின் சத்தியத்தை மீறி இலங்கை போக வேண்டுமா என்ற எண்ணம் வலுத்தது.
ஆனால் அவன் கைகளிலேயே இறந்து போன அவனது கனவு மனைவியின் முகம் வந்து போக தாயின் சத்தியம் எல்லாம் எம்மாத்திரம் போலானது.
அவன் அங்கே கண்டி தலதா மாளிகைக்கு போகா விடின், அவளைத் தேடி கண்டுபிடிக்காவிடின்… அவளுக்கு உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடின்??
மனைவியின் உயிரா? தாய்க்கு செய்து கொடுத்த சம்பந்தமேயில்லாத சத்தியமா??
மனைவியின் உயிரே கண் முன்னாடி உயர்ந்து தெரிய, சட்டென்று தன் அலைபேசியை எடுத்தவன்..
தன் செயலாளருக்கு அழைத்து இலங்கைக்கு அவசரமாக டிக்கெட் முன்பதிவு செய்யச் சொன்னான் சத்யாதித்தன்.
***
கொழும்பு 02, ‘யூனியன் ப்ளேஸ்’ என்ற இடத்தில்… ஏழு மாடிக் கட்டிடத்தையும், அதில் ஏழாவது மாடி கட்டிடத்தில் ‘டயலாக்’ என்று ஆங்கில பெரும் எழுத்துக்களால் ஆன பதாகை கொண்டிருக்கும் ,
அது இலங்கையின் முதல் தர செல்பேசி வலையமைப்பு நிறுவனத்தின் தலைமையகம்!!
அந்த இடமும், இடத்தில் இருக்கும் மாந்தர்களும்.. ஏதோ அமெரிக்கா, லண்டன் மாந்தர்களைப் போல பெரும் ஹைடெக் குடிமகன்களாக இருக்க..
அங்கே தான் பணிபுரிந்து கொண்டிருந்தாள், நம் சத்யாதித்தனால் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் அழகு மங்கை ‘யௌவனத்தமிழ்ச்செல்வி’.
தன்னுடைய நிறுவனத்தின் ஏசியூட்டப்பட்ட பேருந்து “டயலாக் அக்ஸயாட்டா” கட்டிடத்தின் முன்னாடி வந்து நிற்க..
அதிலிருந்து .. பணியாளர்களோடு பணியாளராக இறங்கி, நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவளின் ஆடை நேர்த்தி பார்ப்பவர் கண்களை நிச்சயம் கவரும்.
“ரின், சர்ப் எக்ஸெல்” ஆட்’டிற்கு வரும் நேர்த்தி குறையாத ஆடைகளை அணியும் மாடல் போலவே இருப்பாள் யௌவனத்தமிழ்ச்செல்வி.
முழங்கையிலே ஒரு கைப்பைத் தொங்க, அழகான ஸ்கேர்ட்டும், அலுவலகப் பெண்கள் அணியும் ஷேர்ட்டுமென.. ஆங்கில சேனலில் செய்தி வாசிக்கும் பெண்ணின் கம்பீரத்துடன் அலுவலகத்திற்குள் அவள் நுழைய முற்பட்ட நேரம்.. அவள் கண்களில் விழுந்து தொலைத்தான் அவன்.
அவன் பகீரதன்!! அவளது ஊரான அதே கண்டியைச் சேர்ந்தவன்.
“காதலி காதலி.. என்னைக் காதலி”என்று கண்டியிலிருந்து கொழும்பு வரை விடாது வந்து காதல் நச்சரிப்பு விடுப்பவன்.
மனதுக்குள் பெரும் ரோமியோ என்று நினைப்பு ஆளுக்கு.
அதனாலோ என்னவோ இந்தப் பகீரதனை காணும் போதெல்லாம் “பகீர் பகீர்” என்கிறது அவளுக்கு.
வேலை நிமித்தம் ஊர் விட்டு ஊர் வந்திருப்பவளுக்கு.. கொழும்பில் ஒரு இடத்தை நிம்மதியாக சுற்றிப் பார்க்க முடியுமா? கொஞ்சம் மூச்சு விட்டுத் தான் இருக்க முடியுமா?
அவள் செல்லும் இடங்களில் கண்களை அங்குமிங்கும் சுழற்றிப் பார்த்தால்..
சரியாக அரை காத தூரத்தில் ஒரு வாட்ச்மேன் போல அவளையே பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருப்பான் இந்தப் பகீரதன்.
அவனைக் கண்டதுமே, அவளையும் மீறி எழுந்த எரிச்சலில்.. ஒரு நிமிடம் நடை தடைப்பட்டு நிற்க,
பெருமூச்சு எறிந்த வண்ணம், கண்களை சுழற்றிய வண்ணம் “அட ராஆஆமாஹ்.. இங்கேயும் வந்துட்டானா?”என்று தெள்ளத் தெளிவாகவே தொணதொணத்துக் கொண்டாள் அவள்.
அவள் தன்னை பார்க்கிறாள் என்று கண்டதுமே, இதயத்துக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அட் அ டைமில் பறப்பது போல குளுகுளுவென்று இருக்க,
முகம் மலர அவளைப் பார்த்து கையாட்டினான் அவன்.
கொஞ்ச நாளாக அவனைப் புறக்கணித்தால் ஒதுங்கி சென்று விடுவான் என்று எண்ணியவள்,
அவன் ஒதுங்கி செல்லாமல் ஓரமாக நின்று கவனிப்பது எரிச்சலைக் கொடுக்க, அனைத்தையும் பேசி இன்றோடு முற்றுப்புள்ளி வைக்க நாடி அவளை நோக்கி நடந்தாள் அவள்.
அவனுக்கோ.. அவனது அன்புக்காதலி தன்னைக் காண வருவதில்..
பனிமழை வானத்தில் இருந்து அவனுக்கு மட்டும் நேரடியாக பொழிவது போல இதமாக இருந்தது.
அவனது இளிப்பைக் கண்டு.. முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டே அவளை நோக்கி வந்தவள்,
மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு, “இங்கே பாருங்க மிஸ்டர். பகீரதன்.”என்று அழைக்க, சட்டென இடையிட்ட பகீரதனோ, அவள் அழைத்த தன் பெயரைத் திருத்தலானான்.
“நோ செல்லாக்குட்டி… பகீரதன்ல இருக்க “கீ”யை விட்டுரு.. என் இதயத்துக்கான கீ.. அது உன்கிட்ட தான் இருக்கு.. அதை நீ தொலைச்சாலும், பத்திரப்படுத்திக்கிட்டாலும் என் கீய உன்கிட்ட தந்துட்டேன்.. அதனால இப்போ உன் மாமன் பேரு.. பரதன் அலைஸ் பரத்.. நீ என்னை பரத்னே கூப்பிடுக்க”என்று சொல்ல…
“இது ஒண்ணு தான் குறைச்சல்?”என்று வேண்டாவெறுப்பாக சத்தமாகவே முணுமுணுத்தாள் அவள்.
அவன் பெயரை வேண்டுமென்றே அழுத்தி அழைக்க நாடி, “ ப்பரத்த்.. ப்ளீஸ் என் பின்னாலே வராதே.. ப்பட்டுத் தொலைச்சிரக்கூடாதவங்க.. ய்யாஆஆர் க்கண்ணுல பட்டுத் தொலைச்சிட்டேன்னாஆஆ.. உன் உயிருக்குத் தான் ஆபத்து.”என்று சுற்றுமுற்றும் பார்த்த வண்ணம் பரிதவிப்புடன் சொன்னாள் அவள்.
ஆமாம்.. அவனும் அவள் பின்னால் வந்து.. எத்தனை தரம் தான் அடிவாங்கியிருக்கிறான்?
ஒன்றா? இரண்டா?? எல்லாம் எண்ணவே ஓர் நாள் போதுமா?
அத்தனை அடிவாங்கிய பின்னும் விடாமல் பின்தொடரும் உத்தமபுத்திரன் அவன்!!
அதனால், ‘ஒரு ஹீரோ போல’ வானத்தை பார்த்து போஸ் கொடுக்க முயன்றவனாக,
“தமிலு பரவாயில்லை தமிலு.. நான் செத்தாலும்.. அந்த உசுரு உனக்காக போனா ஐம் வெரி ஹேப்பி.”என்றான்.
அவள் பெயர் “தமிழ்”… அவன் அழைப்பில் “தமில்” ஆகிப் போனதில்.. ஹார்ட் அட்டாக் வராத குறையாக…. நின்றவளுக்கு.. அவன் நடுமண்டையிலேயே ‘நச்சு நச்சு’ என்று போட வேண்டும் போல இருந்தது.
பெருமூச்சு விட்டு கோபம் சமாளித்தவள் கண்கள் கள்ளத்தனமாக யாராவது நம்மை நோட்டமிடுகிறார்களா? என்று ஆராய்ந்தது.
திரும்பவும் ஒரு முறை அவன் முன்னிலையில் கை கூப்பி நின்றவள், பல்லைக் கடித்துக் கொண்டு“ப்ளீஸ்டா ப்போயிர்ர்ருஉஉ..”என்று அமைதியாக சொல்லிப் பார்த்தாள்.
தன் ஒருதலை காதலி தன்னை விரட்டுவது பிடிக்காதவன்.. இல்லாத கண்ணீரை வரவழைத்துக் கொண்டு,
“பத்து வருஷத்துக்கு முன்னாடி.. பத்தாமாண்டு படிக்கும் போது எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு டேரி மில்க் சாக்லேட்டோட.. “ஐ லவ் யூ க்ரீட்டிங்” கார்ட் குடுத்தேன்..”என்று பழைய கதையை இழுக்க,
அவளது சாந்தசொரூபமான முகமோ, நிமிட நேரத்தில் பத்ரகாளி போல மாற, கண்களை அகல விரித்துக் காட்டியவளாக
அதியுச்ச கோபத்தில், “ந்நாஆஆன்.. நாஆஆன் வ்வாங்கினேனாஆஆஆ? ந்நாஆஆன் வ்வாங்கினேனாஆஆஆ?”என்று கேட்க, அவள் கோபத்தில் இலேசாக எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான் பகீரதன்.
தன் ஒருதலைக் காதலியை மலையிறக்குவதற்காக, கெஞ்சும் குரலில், “க்கூல்மா கூஊஊல் கூஊல்.. நீயும் சாக்லேட்ட மட்டும் எடுத்துட்டு ‘தேங்க்ஸ்’ஸூன்னுட்டுப் போன… அதை.. மறந்துட்டீயா..? மேத்ஸ் டீச்சர் உன்னை முட்டி போட வைச்சாங்கன்னு…”என்று திரும்பவும் ஏதோ சொல்லத் தொடங்க,
சட்டென கையுயர்த்தி அவனை நிறுத்தியவள், மீதியை அவளே சொல்லத் தொடங்கினாள்.
“ஹோம்வர்க் எழுதிக் கொடுத்த.. அந்த வேலன்டைன் அன்னைக்கு.. உன் வீட்டுல மொளைச்ச ரோஸாப்பூவை..” என்று மீதி விபரங்களை எல்லாம் இவள் சொல்லத் தொடங்க, மீண்டும் இடையிட்ட பகீரதன்,
“அதுவும்..”என்று ஏதோ சொல்ல வர.. அவனை முறைத்துப் பார்த்து தடுத்தவள்,
அழுத்தமாக “த்தெரியும்.. அதுவ்வூஊஊம் ரெட்ரோஸ்..”என்று சொல்ல, அவன் முகம் பட்டென்று மலர்ந்தது.
“பார்த்தீயா? ஒண்ணுவிடாம ஞாபகம் வைச்சுருக்க.. மாமன் மேல அம்புட்டு லவ்ஸூ? ..” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல, காண்டானவள் தாறுமாறாக கத்தத் தொடங்கினாள்.
நாலு பேர் பரபரப்பாக சென்று வரும் நடைபாதை என்பதை மறந்து போனவள்,
“ட்டேஏஏய் லூஊஊசு.. நான் எங்கேடா ஞாபகம் வைச்சிருக்கேன்?? .. நீ தான்டா நான் போற இடத்துக்கெல்லாம் பின்னாடியே வ்ந்து வ்ந்து.. பழைய டேப்ரிக்கார்டர் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப… சொல்லி சொல்லி பாடமாக்க வைச்சுட்ட?? .. அப்போ எனக்கு பதினைந்து வயசு.. அந்த மேத்ஸ் டீச்சர் மூஞ்சு கூட ஞாபகமில்லைடா தடிய்யாஆஆ..”என்று திட்ட திட்ட,
அவளின் திட்டையெல்லாம் அநாயசமாக வாங்கிக் கொண்டவன், அவள் கன்னத்தைக் கிள்ளுவது போல கைகளைக் கொண்டு வந்து,
“அப்படிலாம் சொல்லாதே தமிலு..” என்றபடி ஓரடி முன்னாடி வர, அவளோ பயந்து போய் ஈரடி பின்னாடி போனாள்.
அவளது மல்கோவா கன்னத்தையேனும் தொடமுடியாமல் போனதே என்று கவலை மீதூற நிற்க, அவனது ‘தமிலு’ வேறு எரிச்சலைக் கொடுத்தது அவளுக்கு.
பத்தாம் வகுப்பு வரை.. கண்டி பாடசாலையிலேயே படித்தவளை,
அதற்கு மேலும் அங்கு படிப்பை தொடர முடியாமல் கொழும்பு பாடசாலை, கொழும்பு காலேஜ் என எல்லாமும் அவள் கொழும்பிலேயே படிக்கக்காரணம்..
பதினைந்து வயதிலேயே காதல் என்ற பெயரில் தொல்லை கொடுத்த கிளாஸ்மேட் பகீரதனே தான்.
காலேஜ் முடித்து விட்டு ஊர் திரும்பியவளுக்கு, எல்லாவற்றையும் அவன் மறந்திருப்பான் என்று பார்த்தால், இந்த இரு வருடங்களாக மீண்டும் தொடர்கிறது காதல் தொல்லை.
சரியென்று வேலை என்ற போர்வையில் கொழும்புக்கே மீண்டும் ஓடி வந்தாலும் கூட.. இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் தொடர்ந்தே வருகிறது இந்தக் காதல் தொல்லை.
அவனது கண்களை குத்துவது போல கைகளை எடுத்துச் சென்று சுட்டிச் சுட்டிக் காட்டியவளாக, “ட்டேய் என் பின்னாடீ வந்து.. எத்தன அடி வாங்கிருப்ப? .. அப்போ கூட த்திருந்த ம்மாட்டியா நீனு..?”என்று கேட்க,
அவனோ மீண்டும் ஒரு ஹீரோ போல தன்னை எண்ணிக் கொண்டவனாக, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிய வண்ணம் வானத்தைப் பார்த்தவனாக,
“எத்தனை அடிவாங்கினாலும் திரும்ப வருவேன்.. ஏன்னா என் காதல் ஃபீனிக்ஸ் பறவை மாதிரி தமிலு..”என்றான் அவன்.
கைகளை மீண்டும் கட்டிக் கொண்டு முறைத்துப் பார்த்தவள், அவன் திரும்பத் திரும்ப “தமிலு.. தமிலு” என்பதைப் பொறுக்க மாட்டாதவளாக,
நெடுமூச்சு விட்டுக் கொண்டே, “என் ப்பேர்ரு “ த்தமி“ழ்ழ்”என்றான் “ழ”கரத்தை சரியாக உச்சரித்து.
“லகர”, “ழகர” வேறுபட்ட உச்சரிப்பு சரியாக வராதவனோ, “அதான் நானும் சொல்றேன் தமில்.. பின்ன இங்கிலீஷ்னா சொல்றேன்??.”என்றான்.
அதில் இன்னும் கொஞ்சம் காண்டானவள், இதழ்களை அழுந்த மூடியவளாக, அவளை வெறித்துப் பார்த்தவளாக,
“என் ப்பேர்ரு “ய்யௌ.. வ்வனத்.. தமிழ்ச்செல்வி”.. எங்கே சொல்லு பார்ப்போம்?” என்று கேட்க,
இது எல்லாம் பெரிய மேட்டரா என்பது போல காலரை உயர்த்தி விட்டுக் கொண்டே, “யவுணதமில் செல்வி..”என்றான் பகீரதன்.
அவளது அழகிய பெயரை இவ்வளவு மோசமாக உச்சரித்து விட்டு, புன்னகைத்த படி ஜொள்ளு விடும் அவன் வதனம் கண்டதும், உள்ளுக்குள் கடும் கோபம் எழ.. படாரென்று அவன் கன்னத்தில் விழுந்தது ஒரு அறை.
தமிழ்ச்செல்வி அறையக் கூடும் என்று எதிர்பார்த்திராதவன், கன்னத்தை அப்பாவியாக பிடித்துக் கொண்டு பரிதாபமாக ஒரு பார்வை அவளைப் பார்த்தவனாக, “என்ன தமிலுஹ்? நீயும் அவனுங்க மாதிரி அடிக்கெல்லாம் செய்யுற? கல்யாணத்துக்கு முன்னாடின்றதுனால ச்சும்மா விடுறேன்.. இதே கல்யாணத்துக்கு பின்னாடி புருஷனை இப்படிலாம் அடிக்கக் கூடாது சரியாம்மாஹ்” என்று சொல்லிக் கொண்டிருந்த வேளை, மீண்டும் ஒரு அறை விழுந்தது பகீரதனின் கன்னத்தில்.
எரிச்சலுற்றவள்.. சட்டென இடையிட்டு, ஒரு குட்டி சொர்ணாக்கா போல மாறியவளாக, “அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல என் பெயரை.. அழகா சொல்லூஊ??”என்று அதட்ட,
அவனோ திரும்பவும் சொன்னான் அதே போல அச்சு பிசகாமல் அணுபிரளாமல், “யவுணதமில் செல்வி”என்று.
சொல்லி முடித்த கணம், திரும்பவும் விழுந்தது ஓர் அறை.ஆனால் இம்முறை விழுந்தது கொஞ்சம் மாற்றமாக மறுகன்னத்தில்.
எப்போதுமே ‘பகீரதனின் காதல் தொல்லையால்’ சுதந்திரமாக நடமாட முடியாமல் உள்ளுக்குள் நொந்து நூடில்ஸாகி இருப்பவள், இது தான் சமயம் என்று அவனை ஆசை தீர வைத்து செய்தாள்.
சுட்டுவிரலால், ‘வா வா’ என்பது போல சைகை காட்டியவளாக, “திரும்ப சொல்லு. திரும்ப சொல்லு”என்று அவள் ரௌத்ர முகத்துடன் கத்த,
அந்த மிரட்டலுக்கு பயந்தே பகீரதனும், “யவுணதமி..”என்னும் போதே.. அவள் கையை மீண்டும் அவனது மறுகன்னத்தை நோக்கி கொண்டு வர,
இரு கன்னத்தையும் பிடித்துக் கொண்டவன், அச்சத்தில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளாக, “இல்லை.. வேண்டாம்.. எனக்கு “செல்வியே” போதும்.. போம்மா.. “செல்வி”.. ஆபிஸ்க்கு டைமாச்சு.. நீ ஹாட்டா இருக்க.. கூலானப்பறம் வரேன்”என்று சொன்னவன்,
இரு கன்னத்தைப் பிடித்த வண்ணமே.. அவளைப் பார்த்துக் கொண்டே ரிவர்ஸில் நடக்கத் தொடங்க, அவளுக்கு அப்போதும் கூட கோபம் மட்டுப்படாமலேயே போனது.
அவளோ அதன் பின்னும் விடாது.. எச்சரிப்பது போல சுட்டு விரல் காட்டி, இரைந்த குரலில்,
“என்னைக்கு என் ப்பேர்ர… அழகாஆஆ சொல்றீய்யோஓ.. அன்னைக்கு என் கூட வந்து பேசூஊஊ”என்று சொன்னவள், அந்த கோபத்தை மறைக்க, நெடுமூச்சு விட்ட வண்ணம், வலிய வரவழைக்கப்பட்ட, திரும்பி அலுவலக வளாகத்தை நோக்கிப் புன்னகையுடன் நடந்தாள்.
“யௌவனத்தமிழ்ச்செல்வி”.. பகீரதனை கன்னத்துக்கு அறைந்த வீடியோவை,
தமிழ்ச்செல்வியை கண்காணிக்க அவன் நியமித்திருக்கும் “அவனது” அடியாள் “அவனுக்கு” அனுப்பி வைக்க, சந்தோஷம் தாளாமல் வாய் விட்டு பலமாக இடிஇடியென நகைத்தான் “அவன்”
அந்த சந்தோஷத்துடனேயே தன் பணியாளுக்கு அழைப்பெடுத்தவன்,
“அந்த ஸ்டைலிஷ் பரத்தை அப்படியே தூக்குங்கடாஆ..”என்று சொல்ல,
யௌவனாவிடம் அடிவாங்கிய அப்பாவி ரோமியோ.. அப்போதும் கூட திருந்தாமல்..
யௌவனா செல்லும் போது தாறுமாறாக ஆடி அசையும் பின்னழகையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க,
அந்த அழகு தரிசனத்தை மறைக்கும் வண்ணம்.. அவன் முன்னாடி மலைமாடு போல வந்து நின்றான் “வேஷ்டி சட்டை” அணிந்து வந்த ஒரு மாமிசப் பர்வதம்.
அந்த பர்வதம் நன்கு பரிச்சயமான ஆள் என்பதை.. பகீரதனின் அச்ச முகபாவம் காட்டிக் கொடுக்க,
மேற்கொண்டு அங்கு நில்லாமல்.. அவன் அங்கிருந்து ஓட முயல, பகீரதனின் சட்டையை இழுத்துப் பிடித்துக் கொண்டான் இராட்சதன்.
தாயின் சொல்லைத் துறந்து ஒரு ஆடவன்.. நாடு கடந்து தன்னைப் பார்க்க வருவது அறிய மாட்டாது,
இங்கே இன்னொரு ஆடவன் தன்னை முழுநேரமும் கண்காணிக்க ஆள் போட்டதையும்.. தன்னைப்பற்றியே முழுநேரம் சிந்தித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும் சட்டை செய்யாது…
தன் ஐடியை மிஷினில் ஸ்வைப் செய்த வண்ணம் , தன் வரவைப் பதிவு செய்து விட்டு உள்ளே நுழைந்தாள் யௌவனத்தமிழ்ச்செல்வி.
SEMMA SUPER .. WAITING FOR NEXT EPISODE
DmGWdyZuboFaV
BPWfLZXzcMrSH
Super sis 💞