ATM Tamil Romantic Novels

ஏகாந்த இரவில் வா தேவதா! – 3&4 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா! 

[3]

 

அன்று மதியம் உணவினை முடித்து விட்டு அப்படியே வாஷ் ரூம் சென்றவள், தன்னுடைய உடையினை இலேசாக சரி செய்த வண்ணம், 

ஆடையின் நேர்த்தி பிசகாமல் வெளியே வந்த போது.. அலுவலகமே பரபரப்பாக இருப்பதை உணர்ந்தாள். 

அதிலும் குறிப்பாக அவளுடன் பணி புரியும் பெண் அலுவலகர்கள், அந்த வெண்மையான டைல்ஸ் தரையில் ஹீல்ஸ் பாதங்களை தடதடவென பதித்த வண்ணம், 

இவளொருத்தி இருப்பதைக் கூட கணக்கில் எடுக்காமல், போகிற போக்கில் யௌவனத்தமிழ்ச்செல்வியையும் தள்ளி விட்டுக் கொண்டே செல்ல,, 

அவர்களின் தள்ளலில் சமநிலை தடுமாறி.. அந்த டைல்ஸ் தரையில் குப்புற விழப் போனவள், வாஷ்ரூம் கதவைப் பிடித்துக் கொண்டு சமாளித்துத் தான் நின்றாள். 

நெஞ்சு மத்தியில் கைவைத்து பெருமூச்சு விட்டு நின்றவளுக்கு, ‘இந்தப் பெண்களுக்கு ஏன் இத்தனை அவசரம்?’ என்று தோன்ற, 

மெல்ல வாஷ்ரூமுக்குள் தலை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள் யௌவனா. 

அங்கே வாஷ்பேஸின் கண்ணாடி முன்னின்று, “நீ நான்” என்று போட்டி போட்டுக் கொண்டு, உதடுகளுக்கு ‘உதட்டுச்சாயம்’ மற்றும் கன்னங்களுக்கு இலேசாக, ‘டச்சப்’ என்று மாறி மாறி பூசி… தன் அழகை இன்னும் மெருகேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு மெல்ல அதரங்கள் சுளித்தவளின் புருவங்கள் அவளையும் மீறி இடுங்கியது. 

இந்த மெருகேற்றத்துக்கும் மேலான மெருகேற்றத்துக்கு காரணம் யாதோ என்று கேட்க நாடியவள், 

அவர்களின் புறமுதுகுக்குப் பின்னாடி வந்து நின்று மார்புக்கு குறுக்காக கை கட்டிய வண்ணம் வாஷ்பேஸின் கண்ணாடியைப் பார்த்தவளாக, 

“என்.. என்னாச்சு கேர்ள்ஸ்? ஏன் எல்லாரும் பரபரப்பா இருக்கீங்க?”என்று காரணம் புரியாமல் கேட்க, 

கண்ணுக்கு மஸ்காரா அடித்துக் கொண்டே கண்ணாடியில் தெரியும் யௌவனத்தமிழ்ச்செல்வியின் விம்பத்தைப் பார்த்த அவளுடைய சக பணியாளினியில் ஒருத்தி, 

வியப்புடன் விழிகளை அகல விரித்தவளாக, “யூ நோவ்.. ஹூ கேம் டுடே?”என்று பரபரப்புடன் சொல்லிக் கொண்டிருந்த நேரம், அவளை முழுதாக சொல்லி முடிக்கக் கூட விடாமல், சட்டென்று திறந்தது வாஷ்ரூம் கதவு. 

இரு பெண்களும் கண்ணாடியில் தெரிந்த திறக்கப்பட்ட கதவையே விழிகளை அகலத் திறந்து பார்த்து வைக்க, 

அதிலிருந்து எட்டிப் பார்த்தது அந்த அலுவலகத்தின் மேனேஜர். அதுவும் ஒரு பெண்மணியே தான். 

சிங்களவர்கள் பாணியில் “ஒஸரி” அணிந்திருந்த மேனேஜர் பெண்மணியோ, நம் தமிழ்ச்செல்வியை நோக்கி, 

“மிஸ். தமிழ்.. உங்களை எங்கே எல்லாம் தேடுறது?.. கம் கம்”என்று கையாட்டி அவளை அருகே அழைத்தவராக வாஷ்ரூமை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்க, என்ன எதேன்று புரியாமல்.. 

கழுத்தில் ஃபேஷனிற்காக.. யௌவனா மாட்டியிருந்த சின்ன கர்ச்சீப் டையை சரிசெய்த வண்ணமே, மேனேஜர் பெண்மணியின் பின்னால் ஓடினாள் யௌவனா. 

வாஷ்ரூமை விட்டு வெளியே வந்ததும், சரியாக அலுவலகத்தின் லிப்ட் கதவின் முன்னாடி வைத்து, 

யௌவனாவின் கையில் ஒரு சின்ன கோப்பினைத் திணித்த மேனேஜர் பெண்மணி, 

தன்னுள் ஓடும் பதற்றத்தையும், பரபரப்பையும் நூலிழையளவேனும் மறைக்க முயலாமல், அப்படியே அதை வெளிக்காட்டியவராக, 

“யூ ஸீ தமிழ்.. டூடே வீ ஹேவ் அ பிரிசியஸ் கஸ்டமர்.. ஹீ இஸ் வெயிட்டிங் ஒன் த போர்த் ப்ளோர்.. இருக்குற டெம்ப்ரவரி பேக்கேஜஸ்.. அத்தனையையும் சொல்லி புரிய வைங்க..”என்று சொல்லிக் கொண்டிருந்த கணம் அந்த லிப்ட்டின் கதவுகள் திறக்கப்பட, 

எதிர்பாராத தருணத்தில் யௌவனாவின் முதுகைப் பிடித்து, லிப்ட்டினுள் தள்ளி விட்டாள் மேனேஜர் பெண்மணி. 

இவள் சற்றே தடுமாறிய வண்ணமே லிப்ட்டினுள் விழாத குறையாக நுழைய, 

மேனேஜர் பெண்மணியோ அவளை வெளியில் இருந்து நோக்கிய வண்ணம், “பளைட்டான முறையில நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.. சின்ன மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்க் கூட வரக்கூடாது” என்று சொன்னவள், இறுக்கமான முகத்துடனேயே புன்னகைக்க,

 இவளோ யார் அந்த பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர் என்று கேட்கப்போன.. அடுத்த கணம் மூடிக்கொண்ட கதவுகள்.. அவளை ஏந்திக் கொண்டு மேலே செல்லவாரம்பித்தது லிப்ட். 

யௌவனாவுக்கோ.. இன்று ஏன் இந்த மேனேஜர் பெண்மணி இத்தனை வித்தியாசமாக நடந்து கொள்கிறாள்? அப்படி பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளராக யார் இருக்கக் கூடும்? 

யாராவது உள்நாட்டு அரசியல்வாதிகள், மந்திரிகள் என்று வந்திருக்கின்றனரோ? 

அப்படி வரும் வாடிக்கையாளர்களுக்கு தான் நாலாம் மாடியில் இருக்கும்..சகல வசதிகளும் கொண்ட ஏசி ரூமில் இடம் ஒதுக்கப்படும். 

அதிலும் இந்தப் பெண்கள் வேறு அதிகப்படியாக ஒப்பனை செய்து கொள்வதைப் பார்த்தால் அரசியல் வாதிகளாகத் தோன்றவேயில்லையே? 

ஒருவேளை யாதேனும் நடிகர்கள் வந்திருக்கக் கூடுமோ?

 அவனுக்குக் காட்டத் தான் இந்தப் பெண்களின் ஒப்பனைகளும், அலப்பறைகளுமோ?? என்று பலவாறு சிந்தித்துக் கொண்டே நாலாம் மாடியை அடைந்து, 

வெல்வட் கார்ப்பட் விரிக்கப்பட்ட காரிடோரில் தன் ஹீல்ஸ் பாதங்கள் சந்தமாக ஒலியெழுப்ப, நடந்த வண்ணமே சிந்திக்கலனாள். 

 பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர் இருக்கும் அறைக்கதவின் முன்னாடி நின்று, 

பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டே.. தன்னை சமனப்படுத்தியவளாக, “மே ஐ கம் இன் சார்?” என்று அனுமதி கோரிக் கொண்டே.. கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள் யௌவனத்தமிழ்ச்செல்வி. 

அங்கே அறையில் போடப்பட்டிருந்த சொகுசான உயர்ரக சோபாவில் கோர்ட் சூட் சகிதம் ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் கணக்காய் அமர்ந்திருந்தான் ஓர் வாலிபன். 

பளபளக்கும் சிவப்பு நிறத்தில் கோர்ட்டும், வெள்ளை நிறத்தில் பேன்ட்டும் அணிந்து.. “க்ளாஸிக் கட்” தலையலங்காரத்துக்கு இன்னும் அழகு சேர்ப்பதாக.. அவனுடைய செம்பட்டை நிற கேசம் காற்றில் ஆட.. 

எதிரில் வந்து நின்ற பெண்ணைக் கூட கணக்கில் கொள்ளாது.. செல்லில் தலைபுதைத்த வண்ணம் இருந்தான் அந்த ஆடவன். 

யௌவனாவுக்கு அந்த வாலிபனின் ஆடைகளின் நேர்த்தியே.. அவன்பால் சின்ன மரியாதையை உண்டு பண்ணுவதாக இருக்க, 

மார்புக்கு குறுக்காக கேடயம் போல மேனேஜர் தந்த ஃபைலை அணைத்துப் பிடித்துக் கொண்டே உள்ள வந்தவள், 

தன் குரலை செருமியவளாக, “மே ஐ ஹெல்ப் யூ சார்?..” என்று கேட்டாள். 

இத்தனை நேரமும் செல்லிலேயே தலைபுதைத்து அமர்ந்திருந்தவனுக்கு, தன்னெதிரே வெகுவெகு அருகாமையில் கேட்ட குரல்.. ரொம்ப ரொம்ப பரிச்சயமானதாகவே இருக்கிறதே என்று புருவங்கள் இடுங்க..சிந்தித்தவனாக கண்கள் உயர்த்தியவன், 

தன்னெதிரே வந்து நின்றவளைக் கண்டு ஆடித்தான் போனான்.

அப்படி ஆடி நின்றவன் யாராக இருக்கக் கூடும்? ஆம், அவன் சாக்ஷாத் சத்யாதித்த ராஜசிங்கனே தான். 

அவன், தன் கண்ணெதிரே கண்டுகொண்ட பெண்ணும் அதே கனவுமங்கை “யௌவனத்தமிழ்ச்செல்வியே” தான். 

அதிர்ச்சியில் மெல்ல எழுந்தவன் தான் கண்களில் அணிந்திருந்த கூலர்ஸைக் கழற்ற… அந்த கண்களின் நீலத்தில் இருந்து வந்த கதிர்வீச்சு அவளையும் ஆட்கொள்ளும் போல இருக்க, அவனையே வைத்த கண்வாங்காமல் பார்த்த படி நின்றாள் யௌவன மங்கை. 

குரூரக் கனவு கண்டு விழித்த… அடுத்த நாள் காலை.. இலங்கையின் சத்திரிய வம்சத்தில் பிறந்த ஆண்மகன், 

ஓர் ஆன்மா.. கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கும் மேலாக.. ‘சாந்தி அடையாமல்’ அவனது உயிரைக் காவு வாங்க காத்திருக்கிறது என்பதை அறியாதவனாக, 

தன்னைப் பெற்ற தாய் வாங்கிய சத்தியத்தைக் கூட துச்சமாக துறந்தெறிந்தவனாக, 

கனவில் தன்னோடு வாழ்ந்து மரித்த பெண்ணை நனவிலும் கண்டு விடும் ஓர் வெறியுடன் இலங்கை வந்திருந்தான் அவன்.அவன் சத்யாதித்த ராஜசிங்கன். 

இலங்கை.. நாற்பக்கமும் கடலால் சூழப்பட்ட, இந்தியாவுக்கு அருகாமையில் இருக்கும் குட்டித்தீவு என்னும் அளவிலேயே தெரிந்து வைத்திருப்பவனுக்கு, 

“இலங்கை” தான் தன்னுடைய பூர்வீகம் என்று அறிந்திருக்க வாய்ப்பேயிருக்கவில்லை.

 பூர்வீகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய தாயோ.. அதைப்பற்றி அவனிடம் வாயும் திறந்திருக்கவில்லை. 

அவனது நாடி நரம்பெங்கும் தன் மனையாள் “யௌவனத்தமிழ்ச்செல்வி”யைக் கண்டுவிடும் ஆவல் முகிழ்த்திருக்க, 

இலங்கை வந்த மறுவிநாடியே.. தன்னுடைய “டூரிஸ்ட் கைட்”டை அழைத்து, புத்தரின் புனித பற்தந்த தாதுவை வைத்துக் கட்டப்பட்டிருக்கும் தலதா மாளிகையைக் காட்டி, அது அமைந்திருக்கும் “கண்டிக்கு” பிரயாணப்பட ஏற்பாடுகள் செய்யச் சொல்லி வலியுறுத்தி விட்டே.. இங்கு வந்திருந்தான் அவன். 

சத்யாதித்தனின் வாழ்க்கையில் நடந்தேறிய ஒவ்வொரு நொடியும் கூட ‘விதி எத்தனை வலியது?’ என்று புடம் போட்டு விளக்கிக் கொண்டிருக்க…அவனே அவளைத் தேடிப் போக வேண்டிய தேவை கிஞ்சித்தும் இராது, 

விதியே.. அவனைத் தேடி அவளை வரவழைத்தது என்று சொல்வது தான் சாலப்பொருந்தும். 

இலங்கை வந்து சேர்ந்தவன், கண்டிக்கு செல்வதற்கான பயண ஏற்பாட்டை செய்யச் சொல்லி விட்டு.. அடுத்த வேலையாக சென்றது இலங்கைக்கு என்று சொந்தமான ஒரு தற்காலிக செல் நம்பரை வாங்குவதற்காக.. டயலாக்கின் தலைமை அலுவலகத்திற்கே வந்து சேர்ந்திருந்தான் அவன். 

டயலாக்கின் நான்காம் மாடியில் இருக்கும்.. குளிரூட்டப்படப்பட ஏசி அறையில், சோபாவில் அமர்ந்து செல்லை நோண்டிக் கொண்டிருந்த போது, 

வெள்ளை வெளேரென்ற டைல்ஸ் தரையில் ஹீல்ஸ் காலடித்தடம் கேட்க, அதனைத் தொடர்ந்து அவன் எஞ்ஞான்றும் விரும்பும் அதிமதுரமான குரலும் கேட்க

கைகால் புரியாத ஓர் பரவசமும், தவிப்பும் சேர்ந்து கொள்ள, கண்களில் நீர் துளிர்க்க, நிமிர்ந்தவன் அதிர்ந்து போனான். 

ஏனெனில்.. அவனது கண்ணெதிரே நின்றிருப்பது யௌவனா. அவன் தொட்டுத் தாலி கட்டிய கனவு மங்கை யௌவனா. 

கண்களில் கூலர்ஸூடனே.. தலை உயர்த்தி அண்ணாந்து பார்த்தவனின் உள்ளம்.. தான் இத்தனை நாளாக கனவில் வாழ்ந்த பெண்ணை.. நனவிலும் கண்டு விட்டதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றது. 

பட்டென்று எழுந்து கொண்டவன்.. அவளை அணுஅணுவாக கனவில் இரசித்து மகிழ்ந்ததைப் போல நேரிலும் இரசித்து மையலுற நாட்டங்கொண்டான் போலும். 

அந்த இளங்காளையின் முகத்தில் ஆயிரம் சூரியன் பளிச்சிட்டது போல ஓர் பிரகாசம் தோன்ற, அவன் அவளையே இமைக்க மறந்து பார்த்து நின்றான். 

அவளது வெண்ணைய்யில் குழைத்து குழைத்து செய்தாற் போன்றிருக்கும் தேகத்தின் வெண்மையை குறைத்துக்காட்டும் கூலர்ஸ் வேறு.. அவனுக்கு கடுப்பை உண்டுபண்ண சட்டென கூலர்ஸைக் கழற்றியவன் யௌவன சுந்தரியின் விம்பத்தை தன் கண்களுக்குள் திகட்டத் திகட்ட நிறைத்துக் கொண்டான். 

கனவில் வருவதைப் போல.. வெள்ளை மலரை மொய்க்கும் கருவண்டு விழிகள் அவளுடையது.

அவனைக் கண்டதில் சற்றே அதிர்ந்து.. அவை விரிந்து கிடந்ததில்.. அந்த நீள இமைமயிர்களும் விரிய… அதன் அடர்த்தியை வேறு உன்னிப்பாக கவனித்தான் சத்யாதித்தன். 

அதிலும்.. சீஸ் தடவி செய்தது போன்ற செழுமை மிக்க கன்னங்களும், அதனோடு ஒட்டி வெட்டி வைத்த இரு ரோஜா இதழ்களின் மேலே பனித்துளி சிந்தியது போல கள்வெறியூட்டும் அதரங்களைக் கண்டதும்.. கனவைப் போலவே நனவிலும் அதை சுவைத்துப் பார்க்கும் எண்ணம் எழ, 

தன் அதரங்களைத் தானாகவே சுவைத்துக் கொண்டு.. ஓரெட்டு முன்னே நகர, அவளும் அவனது செய்கையில் தடுமாற்றத்துக்கு உள்ளாகி ஓரெட்டு பின்வாங்கவே செய்தாள். 

மீண்டும் அவளை நோக்கி நகர்ந்தவனின், உரமேறிய மார்போடு திமிறிக் கொண்டு சண்டைக்கு வரும் போல விறைத்து நின்றன அவள் இரட்டைத் திமில்கள்!! 

வெண்சங்குக் கழுத்தைத் தாண்டி இறங்கிய அவன் கண்கள், இலேசாகத் தெரிந்தும் தெரியாதது போல இருந்த அவளுடைய மார்புக்குழியை அதிகப்படியான ஆர்வத்துடன் ஆராய, 

தன் ஷேர்ட்டின் திறந்திருந்த சட்டை பட்டன்களை இருகைகளாலும் மறைத்துப் பிடித்த வண்ணம் இரண்டெட்டு பின்னே நகர்ந்தவள், “இவன் கஸ்டமரா? காமுகனா?” என்பது போல அரண்டு போனவளாக பார்த்து வைத்தாள் யௌவனா. 

அதுவெல்லாம் சத்யாதித்தனின் கவனத்தை இம்மியளவேனும் கலைக்கவேயில்லை. 

எதையும் சட்டை செய்யாதவன், திரும்பத் திரும்ப அவளது மார்புக்குழியையே பார்த்தான். சட்டை பட்டன்களைத் தாண்டி அவன் தேடும் பொருள் கண்களில் அகப்படாதா? என்ற ஆவலுடனேயே பார்த்தான். 

அவளுக்கு அது நாகரகீமற்ற காமமாகத் தெரியலாம். ஆனால் அவனுக்கோ இவள் தன் மனைவியே தான் என்று நிரூபிப்பதற்கு தேவையான ஆதாரம் ஒழிந்து கிடந்தது அங்கேயே தான். 

அது அறியாத யௌவன மங்கையோ, “ஹேய் மிஸ்டர்.. வேர் ஆர் யூ ஸ்டேரிங் அட்?” என்று கத்திக் கேட்க, 

அந்த சுந்தரக்குரலில் அவள் கண்களை ஏறிட்டவனுக்கு காதல் தலைக்கடித்துப் போயிருந்தது. 

வயிற்றில் கத்தி குத்தப்பட்டு இரத்தம் சிந்தச் சிந்த அவன் முன் உயிர் நீத்த அவன் மனைவி.. தற்போதும் உயிருடன் அவன் கண்முன். 

அவளுக்காகவே இலங்கை வந்திருந்தவனுக்கு, அவள் ஆபத்து எதுவுமின்றி நலமாக இருக்கிறாள் என்றதும் உடல் முழுவதும் விரவிப் பரவிய ஆசுவாசம்.. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத ஒன்று. 

அவளே சுதாரித்து நிமிரும் முன்னம், பதற்றத்துடன் அவளிரு கன்னங்களையும் பட்டென்று ஏந்திக் கொண்டவன், 

இத்தனை நாளாக தேடிய பொக்கிஷத்தை கண்டு விட்ட பேரானந்தத்தில் விளைந்த ஹஸ்கி குரலில், “யௌவனா.. யௌவனா…எ.. என் யௌவனாவுக்கு ஒண்ணும் ஆகலை.. ஷீ இஸ் ஃபைன்.. ஷீ இஸ் ஃபைன்.. “என்ற வண்ணம் பாய்ந்து, 

அவள் திமிறத் திமிற அதையெல்லாம் பொருட்படுத்தாதவனாக, 

நெற்றி, மூக்கு, கன்னங்கள்.. இன்னும் ஏன் இதழ்கள் எங்கனும் கூட.. இடைவிடாமல் முத்தமழை பொழிந்து.. அவளைப் பேசக்கூட இடங்கொடுக்காது திக்குமுக்காடச் செய்தான் அவன். 

அடுத்த கணம் கனவைப் போலவே நனவிலும்.. அவள் வதனத்தை இழுத்து தன் பரந்து விரிந்த மார்போடு புதைத்து.. அவன் ஆக்ரோஷமான காதலோடு கட்டித்தழுவ ஒரு நிமிடம் திகைப்பூண்டை மிதித்தது போலானாள் யௌவனா. 

அவனது முத்தம் தந்த எச்சிலின் ஈரமே முகம் முழுவதும் இன்னும் காயாத வேளையில்.. இப்படியான ஓர் அதிரடி அணைப்பை அவள் எஞ்ஞான்றும் எதிர்பார்த்திருக்கவேயில்லை. 

அவனது நெஞ்சு மத்தியில் கை வைத்து அவள் தள்ளிவிட எத்தனித்த போதெல்லாம், அதற்கு விடவேயாமல் இன்னும் இன்னும் அவளைத் தன்னோடு புதைத்துக் கொண்டான் சத்யா. 

அவளோ.. ஒருவித அலைக்கழிப்பான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

 பாலியல் வன்முறை என்றால் கத்திக் கூப்பாடு போட்டு முழு அலுவலகத்தையுமே அவ்வறைக்குள் இட்டு வந்திருக்க அவளால் முடியும்? 

ஆனால் இந்த முன்பின் அறியாத ஆடவனின் அனைத்துச் செயல்களும் அதிரடியாக இருந்தாலும், அவன் கண்களில் வழிந்த அவளுக்கான காதல் அவளைக் கட்டிப் போடச் செய்தது. 

இருந்தாலும் அவன் அத்துமீறுவதில் உள்ளூற சுருசுருவென்று கோபம் முளைக்க, அவன் மார்புக் கூட்டிலிருந்தும் வெளிவர முயன்றவளாக, 

“வ்வாஆஆ… வாட்? என்.. என்ன ப்பண்றீங்க மிஸ்டர்?என்னை வ்வ். விவி.. டுங்க.. நா.. நான் ஒரு குரல் கொடுத்தேன்னாஆ ம்மொத்த ஆபிஸூம் இங்கே இர்.. ருக்கும்.. ம்.. மரியாதையா வ்விடுங்க.. ”என்று அவள் திணறித் திமிறியவளாக தள்ளிவிட எத்தனிக்க, அவனுக்கோ அவளது கோபம் எல்லாம் சரியாக மூளையைச் சென்றடையவேயில்லை. 

அவனோ தன்னவள் இன்னும் உயிரோடு இருப்பதில் மகிழ்ந்தவனாக அவளை இன்னும் இன்னும் இறுக்கிக் கொண்டான். 

அந்த இறுக்கமான அணைப்பில் மூச்சு கூட எடுக்க சிரமப்பட்டபடி நின்றவளுக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்தது ஒரு விஷயம். 

அவன் அணைப்பில் குரல் வெளிவராது போக, அவனது உயர்ரக பர்பியூம் வாசனையே அவளை ஏதோ செய்து ஒரு ஆழ்ந்த மயக்கத்தில் தள்ளும் போலிருக்க.. பல விநாடிகள் கழித்தே அவள் மூளையைச் சென்றடைந்தது.. 

அவன் உச்சரித்த அவளது பெயர். 

அதிலும் அவள் இன்னும் அவனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாத இந்நிலையில், சரியாக அவன் தன் பெயர் மொழிவது எப்படி என்று அறியாமல் குழம்பிப் போனாள் அவள். 

அவளைத் தன் மனைவியாக வரித்திருந்தவனுக்கு, அவளின் மறுப்பு மொழிகள் எல்லாம் காதை அடையாமல் போனது கூட எல்லாமே காதல் செய்யும் மாயம். 

அவளது காதோரம் குனிந்து கூந்தலில் வாசம் முகர்ந்தவனாக, “யௌவனா.. மை யௌவனா..”என்று அவன் மையலில் கிறங்கித் தவிக்க, 

அவனை அருவெறுப்பு மீதூறப் பார்த்தவள்.. அவனைத் தள்ளிவிட எத்தனித்துக் கொண்டே பின்னாடி நகர்ந்தாள். 

அப்படி பின்னாடி நகர்ந்தவள், தடுமாறி சோபாவில் விழ,அவளோடு இவனும் சேர்ந்து விழ நேர்ந்தது. 

அவள் கீழே இவன் மேலே என்று இருவரும் எக்குத்தப்பாக ஒருவர் மேல் ஒருவர் நின்றிருந்த அந்த வேலையில் தான் 

படாரென்று திறக்கப்பட்டது அறைக் கதவு. 

அந்தக் கதவுப்பக்கம் யாராவது அலுவலகத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ பணியாளர்களோ அதிர்ச்சியுடன் நின்றிருந்திருப்பர் என்று நீங்கள் கணித்திருப்பின் அது தவறு. 

மாறாக அங்கே நடுத்தர நாற்பது வயது கொள்ளத்தக்க ஓர் ஆடவன் வெள்ளை வேஷ்டி, சட்டை சகிதம் அக்மார்க் கிராமத்தான் தோற்றத்தில், 

அங்கு இருவரும் இருக்கும் காட்சியைக் கண்டு செக்கச்செவேலென சிவந்து போன விழிகளுடனும், சீற்றத்தில் கைமுஷ்டி மடக்கியதால் நரம்போடிய கைகளுடனும் நின்றிருப்பதைக் கண்டனர் இருவரும். 

அவனது ரௌத்திரபாவத்தைக் கண்டதும் உடலெல்லாம் வெளவெளத்துப் போனது யௌவனத்தமிழ்ச்செல்விக்கு. 

மனைவியின் உடல் துணுக்கத்தை அவளோடு அணைத்த படி விழுந்தமையால் கண்டுணர்ந்தவன், அவளை புருவங்கள் இடுங்கப் பார்க்க, 

இவளோ.. அவனைத் தன்னிலிருந்தும் விலக்கியவனாக எழுந்து நின்று கொண்டாள். 

யார் இவன்? இவனைக் கண்டதும் அவனுடைய அன்பு மனைவி ஏன் பதறுகிறாள்? இவன் எங்கிருந்து வந்தான்?என்பதறியாமல் குழம்பிப் போனான் அவன். 

அந்த கிராமத்தானைக் கண்டதும் யௌவனாவுக்கோ தானாகவே எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டது தொண்டை. வெடவெடத்தது இதயம். நடுக்குற்றது கைகால்கள். 

அவளே அவனை மறுப்பாக தள்ளிவிட்டு எழ, பற்களை நறுநறுவென கடித்தவன், , “ஏய் என்னடாஆஆ ப்பண்ண? என் யௌவனாவ்வைய்ய்ய்…..”என்று கத்திக் கேட்க, 

அவன் இடும் சத்தத்தையெல்லாம் கணக்கில் கொள்ளாதவன், அவளை உரிமையுடன் தன் கையணைவில் அணைத்தவனாக, “ஷீ இஸ் மை ஃவைஃப்.. எனக்கும், என் பொண்டாட்டிக்கும் , மத்தியில் ஆயிரம் இருக்கும் அதைக் கேட்க நீ ய்யார்ருஉ?”என்று கேட்டான் சத்யாதித்தன். 

கனவுக்கும், நனவுக்கும் வித்தியாசமறியாத காதலோடு.. அவளிடம் மையலுற்றுத் தவிப்பவனுக்கு, அவனையும் மீறி “பெண்டாட்டி”என்று வந்திருந்தாலும் கூட, சத்யன் அதை உணர்ந்தே சொன்னான். 

அவள் தன் மனைவி என்ற உரிமையுடனேயே சொன்னான். 

“பொண்.. டாட்டியாஆஆ? – அந்தக் கிராமத்தானும், யௌவனத்தமிழ்ச்செல்வியும் அவன் உரைத்த மொழி கேட்டு, ஒரே நேரத்தில் கோரஸாகக் கேட்க, அந்த ஆடவனின் ரௌத்திரப் பார்வை அப்படியே யௌவனாவின் பக்கம் தாவியது. 

அவளை சுட்டெரிப்பது போல.. அவன் பார்த்து வைத்த பார்வையில் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நீரும் ஆவியாகி, நா வரண்டு விடும் போல இருந்தது அவளுக்கு. 

இந்நொடி மாத்திரமே நேரில் கண்ட ஓர் ஆடவன் தன்னை “மனைவி” என்று பகர்வதில் விறைத்துப் போனவள், 

தன்னையே முறைத்துப் பார்க்கும் அந்த ஆடவனை நோக்கி, “ஐ.. ஐ கேன் எக்ஸ்ப்ளேன்”என்று சொன்னாளே ஒழிய, இருந்த பதற்றத்தில் தன்னை அணைத்துப் பிடித்திருக்கும் சத்யனின் கையை உதறக்கூட சிந்தனை வரவில்லை அவனுக்கு. 

ஆனால் அந்த கிராமத்தானின் பொசுக்கும் விழிகள், தமிழ்ச்செல்வியின் தோள் மீது கிடக்கும் அவன் கையை எரித்து விடுவது போல பார்க்க, அப்போது தான் தான் இன்னும் அவன் கைவளைவில் இருந்து வெளியேறக் கூட யோசனையற்று நிற்பதை உணர்ந்தாள் யௌவனா.

சட்டென அவன் கையை அவள் உதறிவிட எத்தனிக்க, அவள் தோளில் இரும்புப் பிடியாகப் பதிந்திருந்தது சத்யனின் கைகள். 

தன் தோள்புஜங்கள் ஏறி இறங்க கர்ணகொடூரமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவன், எரிமலை சீற்றத்துடன் சத்யனை நோக்கி ஓரெட்டு எடுத்து வைக்க முயல, அதைத் தடுக்கும் வண்ணம் ஒலித்தது அவனுடைய சட்டை பாக்கெட்டில் இருந்த செல். 

அவளோ, இன்னும் பேர் கூட தெரிந்திராத சத்யனை தன்னிலிருந்தும் விலக்கி விட, தமையன் அறியாமல் பல பகீரதப் பிரயத்தனங்களை எடுத்த வண்ணம் நிற்க, அதை வெறித்துப் பார்த்த வண்ணமே பேசலானான் அந்த புது ஆடவன். 

தன் முன்னிலையிலேயே யௌவனாவை உரிமையுடன் அணைக்கும் சத்யனின் விழிகளை ஏறிட்ட வண்ணமே, செல்லில், 

கறாரான குரலில் , “ஆலமரத்து திண்ணையை தூசுதட்டி கூட்டி வை..”என்றான். 

“ஏன்ணே?”- மறுமுனையில் கேட்டது இன்னோர் குரல். 

தன்னுடைய புதர் போன்று அடர்ந்து வளர்ந்திருக்கும் மீசையை நீவி விட்டவனாக,

 “ஒரு ஃப்ரஷ் பஞ்சாயத்து.. ம்மாட்டியிருக்குல!நாஞ்சொல்றத மட்டும் செய்யி!” என்று சொல்லியபடி, மீண்டும் அவர்களையே வெறித்துப் பார்த்தான் அந்த புது ஆடவன். 

 

ஏகாந்த இரவில் வா தேவதா! 

[4]

மலையும், மலை சார்ந்த இடமும் என காட்சியளிக்கும்.. குறிஞ்சி நில எழில் சொட்டும்.. கண்டி மாவட்டத்திலே அமைந்திருக்கும்… ரொம்பவும் சின்ன சிற்றூர் தான் “தம்பதிவனம்”. 

டயலாக்கின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் நான்காம் மாடியில் அரங்கேறிய காதல் கூத்துப் பற்றி.. தம்பதிவனம் முழுவதும் “தம்பட்டம்” அடித்துச் சொல்லாத குறையாக, 

தகவல் சொல்லப்பட்டிருக்க… ஊர் பஞ்சாயத்து நடைபெறும் ஆலமரத்து திண்ணையை நோக்கி கூட்டம் கூட்டமாக கூடவாரம்பித்தனர் ஊர்மக்கள். 

இது இருபத்தோராம் நூற்றாண்டாக இருக்கலாம். நன்றாக தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து சகல இடத்திலும் வலையமைப்புக்கள் அனைவருக்கும் பேதமின்றி கிடைக்கும் வசதியும் இருக்கலாம். 

இன்னும் ஏன்? இலங்கை அரசு ஒவ்வொரு கிராம வலயத்துக்கும் காவல் நிலையங்களை உருவாக்கியும் வைத்திருக்கலாம். 

இருந்த போதிலும் “தம்பதிவனம்” என்னும் பழமை வாய்ந்த அச்சிற்றூரில் “பஞ்சாயத்து வழக்காடும்” முறை என்பது, தொன்று தொட்டு இருந்து வரும் முறையாகவே இருக்கிறது. 

அது அவர்களைப் பொறுத்தவரை சின்ன வயதில் இருந்தே தலைமுறை தலைமுறையாக சொல்லி சொல்லி வளர்க்கப்படும் ஒரு சம்பிரதாயமாகவே போனதில், 

“பஞ்சாயத்து கூடுவது, கலைவது, வழக்காடுவது, தீர்ப்பு வழங்குவது” என எல்லாமே அம் மக்கள் முக்கியமானவர்களாகவே கொண்டார்கள். 

அப்பேர்ப்பட்ட பஞ்சாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊரில் தான் வந்தியிறங்கியிருந்தான் சத்யாதித்தன். 

அந்த ஊருக்கும், தனக்குமான தொடர்பு யாது? 

அந்த பூமி எப்பேர்ப்பட்ட பதிவிரதையின் பழிவெறி நீர்த்துப் போகாத ஓர் சத்தியத்தை ஏந்தி நிற்கிறது என்று எதையுமே அறியாதவன், 

தன் கனவுக்காதலி ஒருத்தியையே திகட்டத் திகட்டப் பார்த்துக் கொண்டே இருந்தான் சத்யன். 

ஒருபக்கம் ஆலமர விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அவசரமாக கூட்டப்பட்ட பஞ்சாயத்தைக் காண வேண்டி, 

“என்னமோ? ஏதோ?” என்ற பதகளிப்புடன் ஊரார் கூடி தமக்குள் குசுகுசுத்துக் கொண்டிருக்க, 

பஞ்சாயத்துத் தலைவர்களோ ஆலமரத்து திண்ணையில் அமர்ந்திருக்க, 

தலைவனும், தலைவியுமோ வலமும் இடமுமாக ஒருவரை ஒருவர் எதிர் எதிராக நோக்கிய வண்ணம் நின்றிருந்தனர். 

அவன் கண்களோ.. அவளையே தான் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தது. 

அவள் கண்களோ, “மதியம் கொழும்பில் இருந்த என்னை பொழுது சாய்வதற்குள் ஊருக்கே இழுத்து வந்துவிட்டாயே பாவீஈஈ??? ” என்ற சாடலுடன்.. அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. 

ஆம் இலங்கை என்பது நாற்பக்கமும் கடலால் சூழப்பட்ட குட்டித்தீவு என்பதால்.. தலைநகரான கொழும்பில் இருந்து கண்டியை நோக்கி பயணிக்க வெறும் மூன்று மணித்தியாலங்களே தேவைப்பட்டிருந்தது. 

இந்த மூன்று மணித்தியால இடைவெளியில் தன்னிலையை விளக்க, தன் தமையனான “வேல்பாண்டியனிடம்” ஆயிரத்தெட்டு முறை பேச வாயெடுத்திருப்பாள். 

அதை எல்லாவற்றையும் அவன்.. அந்த ஆடவன்.. அவளுடன் கூடப்பிறந்த தமையன் கேட்டானா என்ன? 

ஆம் அந்த முரட்டு மீசைக்காரன் இவளுடன் பிறந்த தமையனே தான். 

தமையனுக்கும், அவளுக்கும் இடையில் கிட்டத்தட்ட பதினாறு வருட இடைவெளிகள் உண்டேயானாலும் கூட, அவள் தமையன் “வேல்பாண்டி” அவளுக்கு இன்னோர் தந்தையுமாகிப் போனான். 

இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம்.. இருவரையும் நெருக்கமாக விடாமல், ஒரு ஸ்ட்ரிட்டான தந்தை- மகள் உறவுக்கே இட்டுச்சென்றிருக்க, யௌவனாவை ஆள்விட்டு கவனிக்கும் அளவுக்கு.. ஒரு கொடூரமான காவலனாகவும் ஆகிப் போயிருந்தான் அவன். 

எப்போதும் அவளை சீண்ட வரும் போக்கிரிகளிடம் இருந்து.. தமையனே கேடயம் போல காத்தாலும், அதுவும் ஒருவகை அன்பு என்று சாந்தமாக இருப்பவளுக்கு, இந்த விடயத்தில் ஏனோ அப்படி இருக்க முடியவேயில்லை. 

பஞ்சாயத்து தலைவராக நின்றிருந்தவர்கள் வேறு பஞ்சாயத்துக்கு ஆரம்பமாகி விட, அந்த இடமே சற்று அல்லோகல்லோலப்பட்டது. 

அவளைக் காணவென்று இலங்கைக்கு ஓடி வந்தவனுக்கு, 

அவளை முதன் முறையாக நனவிலும் கண்டதும்.. இதுநாள் வரை முழுமையாக கனவிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தவனுக்கு, 

தன் யௌவனத்தமிழ்ச்செல்வி நிஜமா? நிழலா? என்று பிரித்தறியக் கூட முடியாத படி, காதல் பித்து அவனைத் தாக்கியிருந்தது அவனது துரதிர்ஷ்டமே தான். 

அந்தக் காதல் கனவில் இருந்து வெளியே வந்து, சற்றே நிதர்சனம் புரியலானதும், 

தன் கனவு மனைவியைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டவனாக, அப்படி நடந்து கொண்டது தவறு என்பதை காலம் கடந்து உணர்ந்து கொண்டான் அவன். 

பஞ்சாயத்து என்றதும் கொஞ்சம் கூட தொடைநடுங்காமல்.. தன் திண்ணிய நெஞ்சு நிமிர்த்தி, கைகளை முதுக்குப் பின்னே கட்டிய வண்ணம் சத்யன் நின்றிருந்தது கூட இராஜதோரணையாகவே இருந்தது. 

இருந்தாலும் அவனுடைய பார்வை இருக்கிறதல்லவா?அது பொல்லாத பார்வை?? 

அது தன்னைச் சூழ ஆயிரம் பேர் நின்றிருந்தாலும் கூட, அதையெல்லாம் அசட்டை செய்தவனாக, அணுஅணுவாக.. தன்னெதிரே நின்றிருப்பவளின் அழகு வதனத்தை அளவிடுவதிலேயே நிலைத்திருந்தது. 

அவளுக்கோ பஞ்சாயத்து கூடியதால் ஒரு நடுக்கம் என்றால், சொந்த தமையனே தன் பேச்சை கேட்காமல் இந்த எல்லை வரை தன்னை இட்டுவந்திருப்பதில் ஒரு கோபம்.. 

அதிலும் அத்தனை பேர் முன்னிலையிலும் அவன் தன்னை ஓயாமல் தாபப் பார்வை பார்ப்பதில் ஒரு சின்ன எரிச்சல் மீதூற, 

அவனையே அடிக் கண்ணால் முறைத்துப் பார்த்த வண்ணம், தனக்கு மட்டுமே கேட்கக் கூடிய மெல்லிய குரலில், 

“ப்பொண்டாட்டி”ன்னு நாக்கூசாமல் பொய் சொல்லிட்டு பஞ்சாயத்து முன்னாடி ஒண்ணும் தெரியாத அப்பாவி போல நிற்குறதை பாரு.. குரங்கு”என்று திட்ட, அப்போதும் விடாமல் அவளையே மேய்ந்தது அவனுடைய விழிகள். 

அந்த நேரம் இருவரின் கவனத்தையும் கலைக்கும் முகமாக கேட்டது ஊர் பஞ்சாயத்தின் பிரதான தலைவரின் குரல்

 காற்றைக் கிழித்து ஊடுருவிச் செல்லும் கணீர்க்குரல்!! 

“எல்லாருக்கும் வணக்கம், நம்ம தமிழோட அண்ணன்.. வேல் பாண்டி.. நம்ம தமிழ்ச்செல்வியைப் பார்க்க.. அவ ஆபீஸூக்கு போயிருக்காப்டி.. அங்க நம்ம தமிழு.. இந்த வாட்டசாட்டமான பையன் கூட.. ஒண்ணும மண்ணா இருக்குறதை.. பாண்டியும் பார்த்திருக்காப்டி.. அதிரெச்சியாகி விசாரிக்கவும் இவரும் நம்ம தமிழை.. பொண்டாட்டின்னு..”என்று அங்கு நடந்ததை எல்லாம்,

”வேல்பாண்டி”யின் கண்ணோட்டத்தில் இருந்து அறிந்து வைத்த தகவல்களை எல்லாம் ஊரார் முன்னிலையில் எத்திவைத்துக் கொண்டே போக, 

பஞ்சாயத்து தலைவர் பேச்சையே குலைக்கும் வண்ணம் இடையூறாக கேட்டது ஓர் பெண்குரல். 

அது நம் யௌவனத்தமிழ்ச்செல்வியே தான். 

அதிலும் இந்த பஞ்சாயத்துத் தலைவர், “அங்க நம்ம தமிழு.. இந்த வாட்டசாட்டமான பையன் கூட.. ஒண்ணும மண்ணா இருக்குறதை பார்த்திருக்காப்டி” என்று வேறு சொன்னதில்.. உச்சபட்ச கோபத்தில், 

சுருசுருவென சிவந்து போனது நாசிநுனி. 

அந்த கோபத்துடனேயே தனங்கள் ஏறி இறங்க மூச்சு வாங்கிக் கொண்டே, “ஐய்யோஓஓ.. இவன் ய்யாருனே எனக்குத் தெரியாதூஊ?”என்று எரிச்சலில் அவள் கத்தத் தொடங்க, 

அவள் பக்கத்திலே நின்றிருந்த வயது மூத்த தமையன் அவளை ஊரார் முன்னிலையிலேயே அதட்டத் தொடங்கினான். 

வேல்பாண்டியனுக்கு தங்கை இன்னும் சிறுகுழந்தை என்று நினைப்பு போலும். சின்னக் குழந்தைகளை அதட்டுவது போல, 

வாயில் விரல் வைத்து, அதட்டும் தொனியில், “ஏய் ஸூ.. சும்மாயிரு.. பெரியவங்க தான் அங்கன பேசிட்டிருக்காங்கல?”என்று அதட்டி வைக்க, ஒரு நிமிடம் தடைப்பட்டு நின்ற பஞ்சாயத்து மீண்டும் தொடங்கியது. 

விட்ட இடத்திலேயே தொடங்க நாடிய பஞ்சாயத்து தலைவரும், “பொண்டாட்டின்னு சொல்லியிருக்காப்டி.. இது சம்பந்தமா விசாரிக்கத்தான் இந்த பஞ்சாயத்தே.. கூடியிருக்கு இது சம்பந்தப்பட்டவங்க ரெண்டு பேரும் என்ன சொல்றாங்கன்னு கேட்போம்..”என்று அவர் சத்யனையும், யௌவனாவையும் தன்னிலை விளக்கம் கூற சந்தர்ப்பமும் வழங்கவே செய்தார். 

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் முன்பின் அறியாத அந்த “பிரிசியஸ் கஸ்டமரை” பேஜாராக்கி விடும் நன்னோக்கதோடு யௌவனா.. மனதளவில் காத்திருக்க, வாய்ப்பு வழங்கப்பட்டது என்னமோ சத்யனுக்குத் தான். 

ஆனால் அவன் இத்தனைக்கும்.. அவையோர் முன்னிலையில் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசவில்லை. 

தன்னளவில் எந்தத் தப்பும் இல்லை என்பவன் போல.. தெளிந்த முகத்துடன் மிதப்பாகவே நின்றிருந்தான் அவன். 

என்ன தான் மிதப்பாக வெளிக்கு அவன் காட்டிக் கொண்டாலும் கூட, டயலாக் வலையமைப்பின் தலைமை அலுவலகத்தில் இருந்த போதும் சரி, 

இப்போது ஊர்தலைவர் பேசிய போதும் சரி.. சட்டென இடையிட்டவள், “இவன் யாருன்னே எனக்குத் தெரியாது”என்றது பெரும் மனக்கவலையைக் கொடுத்தது அந்த சத்திரியனுக்கு. 

அப்படியானால் அவனுக்கு கனவில்.. அவள் மனைவியாக வந்தது போல.. இவளுக்கு கனவில் அவன் கணவனாக என்ன? சாதாரண மனிதனாக கூட வந்ததில்லை. 

அவன் கனவில் உருகி உருகி காதலித்த காதல் எதுவுமே.. கனவிலும் சரி.. நனவிலும் சரி அணுவேனும் அவளை பாதிக்கவில்லை. 

மொத்தத்தில் அவன் எதிரே நின்றிருக்கும் ஆடவன் யாரென்று கூட அவளுக்குத் தெரியாது. 

ஒரு நொடி கவலையில் இமைகள் தாழ்ந்த போதினும், அவளை கனவில் அடைந்தது போல நனவிலும் அடைந்து, அவளைப் பெண்டாள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது ஆண்மனம். 

அந்த நேரம் பஞ்சாயத்து செயலாளர் சட்டென திண்ணையில் இருந்து எழுந்து, தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து, “அவர் சார்பா ஒரு லெட்டர் பஞ்சாயத்துக்கு..” என்று அவையோர் முன்னிலையில் காட்ட, யௌவனாவின் சுந்தர விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

தம்பதிவனத்துக்கு வந்து சேர்ந்த சொற்பநாழிகைகளில்.. பஞ்சாயத்துக்கு எப்படி ஓர் கடிதமும் தயார் செய்தான் அவன்? 

கண்டவுடன் “பொண்டாட்டி” என்றவன்.. இம்முறை ஊரார் முன்னிலையில் என்ன தகிடுதத்தம் பண்ணப்போகிறானோ? என்று பதைபதைப்பாக வேறு இருந்தது அந்த யௌவனப் பெண்ணுக்கு. 

அவனோ அந்தக் கடிதம் அவையோருக்கு வாசித்து முடிக்கும் வரை கூட ஒரு வார்த்தை பேசவில்லை. 

ஏதோ தான் இதில் சம்பந்தமே படாதது போல.. வேடிக்கை பார்ப்பது போல அசிரத்தையாக நின்றிருந்தான் அவன். 

ஆயினும் அங்கிருக்கும் ஆடவர்களுக்கும் சரி, பெண்டிருக்கும் சரி.. சத்யனின் முகத்தில் எஞ்ஞான்றும் ஒளி விட்டுக் கொண்டிருந்த தேஜஸ்.. 

அவனை ஒரு பாட்டுடைத்தலைவன் போலவே அவர்களுக்கு காண்பித்தது. 

அவன் தம்பதிவனத்துக்கு வந்து சேர்ந்த உயர்ரக கறுப்பு நிற பென்ஸூம், அவனது கோர்ட், சூட்டும் கண்களில் இருந்த கூலர்ஸூம் என இவன் “மேல்தட்டு வர்க்க ஆம்படையான்”என்று சொல்லாமல் சொல்ல, 

அவனைக் காணவென்று அருகாமையில் இருக்கும் சிற்றூர்களில் இருந்தும்..இன்னும் இன்னும் வருகை தந்து கொண்டிருந்தனர் மக்கள். 

உண்மையிலேயே சத்யன் அழகன்.

அடர்ந்த புருவங்களும், இயற்கையான செம்பட்டை கேசமும் அவனுக்கு வனப்பு என்றால், திரண்ட புஜங்களும், திண்ணிய மார்பும், முறுக்கேறிய கைச்சந்துகளும் இன்னும் வனப்பு சேர்ப்பதாகவே இருக்கும். 

அதிலும் அவனது ஆடை வேறு அவனை “வேற லெவல்” என்பது போல காட்சிப்படுத்த, அனைவரும் அவன் தோற்றத்திலேயே சொக்கித் தான் நின்றிருந்தனர். 

பஞ்சாயத்து செயலாளர் தன்னருகே இருந்த சாமானிய குடியானவனிடம், சத்யனின் கடிதத்தை ஒப்படைக்க,

 சாமானியனும் கூட்டத்தினருக்கு,காகிதத்தில் உள்ளதை உரத்து வாசிக்கலானான். 

சத்யன் அந்தக் காகிதத்தில் அனைவர் மனங்களையும் ஈர்க்கும் வகையில் சுத்தத் தமிழையே கையாண்டிருந்தான். எந்தவிதமான பேச்சு வழக்கும் அற்று அழகாக இருந்தது கடிதம். 

“மேன்மை தங்கிய பஞ்சாயத்து தலைவர்களுக்கு, 

நான் சத்யாதித்த இராஜசிங்கன்.. இந்தியாவின் சென்னையை பிறப்பிடமாகக் கொண்டவன். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு ஒரு வியாபார விடயமாக வந்த போது யௌவனாவைக் கண்டதும் காதல் கொண்டேன்.. கடந்த இரு மாதங்களாக அவளை என் மனைவியாக இதயத்தில் வடித்து.. ஆத்மார்த்தமாக காதலித்துக் கொண்டிருக்கிறேன். இதன் மூலம் சபையோருக்கு அறியத்தருவது என்னவென்றால், என் காதல் ஒருதலைபட்சமானது என்பதுவும் யௌவனாவுக்கு இப்படியொரு ஆடவன் அவளை காதலிப்பதே தெரியாது என்பதுவுமே உண்மையாகும். 

வெகுநாள்க்காலத்திலிருந்து என் காதலை இங்கிதமாக சொல்ல எத்தனித்து, இன்று சொல்லிவிட நாடியபோது தான்.. இந்த தகராறு நடந்தேறியது. 

அந்த நேரம் எதிர்பார்த்திராத விதமாக அறைக்குள் நுழைந்தது யௌவனாவின் சகோதரன் என்பதை நானறியேன். ஒருவேளை அவர் யௌவனாவின் சகோதரன் என்பதை அறிந்திருப்பின் அப்போதே.. அங்கணமே.. முறைப்படி பெண்கேட்டிருப்பேன். 

இருப்பினும் நடந்ததையெல்லாம் மன்னிக்க வேண்டி, உங்களிடம் ஒரு மனமார்ந்த ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். அதாவது ஊரார் சாட்சியாக பாண்டியனின் சகோதரியான யௌவனத்தமிழ்ச்செல்வியை எனக்கே மணம் முடித்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

யௌவனாவை மட்டுமே நான் வேண்டிநிற்க, வரதட்சணையையோ, அவள் மூலம் கிடைக்கப் போகும் சொத்து சுகத்தையோ நான் வேண்டி நிற்பதில்லை. 

அவளை எனக்கே மணம் முடித்து தரும் பட்சத்தில், பஞ்சாயத்து நலனை கருத்தில் கொண்டு பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா பத்துகிராம் தங்கமும், ஊர் நலனுக்கு ஐந்து கோடியும், ஊர்க்கோயில் முன்னேற்றுத்துக்கு ஐந்து கோடியும் தானமாக ஈய்ந்தளிப்பேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். 

இவண், 

சத்யாதித்த ராஜசிங்கன்.”என்று முடிந்திருந்தது அந்த செந்தமிழ் நடையில் அமைந்த காகிதம். 

அந்தக் கடிதம் வாசித்து முடித்ததும் கூட்டம் முழுவதிலும் ஓர் சலசலப்பு எழுந்து பரவியது. 

சாதாரண ஊர்மக்களுக்கோ, “யம்மாஆ ஊருக்கும், ஊர்க்கோயிலுக்கும் ஐந்து கோடியா? அதுக்கு எத்தன சைபர்னு கூட தெரியாதேஏ”என்றிருக்க, 

பஞ்சாயத்தை விசாரணைக்கு எடுத்த தலைவர்களுக்கோ அவன் தருவதாக வாக்களித்த, “பத்துகிராம் தங்கம் அது பிஸ்கட்டாக இருக்குமோ? அல்லது நகையாக இருக்குமோ?”என்றே யோசனை செல்லவாரம்பித்து. 

யௌவனாவை விடவும் பதினாறு வருடங்கள் மூத்தவனான தமையனுக்கோ, “யௌவனாவை மட்டுமே நான் வேண்டிநிற்க, வரதட்சணையையோ, அவள் மூலம் கிடைக்கப் போகும் சொத்து சுகத்தையோ நான் வேண்டி நிற்பதில்லை.”என்று சொன்ன ஒற்றை வசனம் பிடித்துப் போக, 

சத்யனின் மேல் இருந்த “தங்கை மீது அத்துமீறி விட்டானே?”என்ற மனஸ்தாபம் மறைந்து, சின்ன மரியாதையும் கூட மெல்ல மெல்ல ஊற்றெடுக்கவாரம்பித்தது.

ஆனால் குழம்பிய மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது என்னமோ அப்பாவி யௌவனாவே தான். 

‘என்ன இவன் கடந்த இரு மாதங்களாக அவளை பின்தொடர்ந்து காதலிக்கிறானா?”என்ற அதிர்ச்சியில் அவள் ஸ்தம்பித்து நின்றிருக்க, 

கடிதத்தில் சொன்ன “கண்டதும் காதல்” அப்பட்டமாக பொய் என்பதை அறிந்த ஒரே இதயம். சாக்ஷாத் சத்யனுடையதே தான். 

ஆம். இது தான் அவனுடைய முதல் இலங்கைப் பயணமாக இருக்க, அவனெப்படி இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்டதும் காதல் கொண்டிருக்கக் கூடும்? 

அவள் பற்றிய தொடர்கனவுகள் வந்த இரண்டு மாதத்தைத் தான், “கண்டதும் காதல்”கொண்ட இரண்டு மாதம் என்று பூடகமாக சொல்லியிருந்தான் அவன். 

அவனோடு கனவில் வாழ்க்கை நடத்தி.. இரண்டு வயதில் சுருள் சுருள் கேசம் கொண்ட ஒரு பெண்குழந்தையை பரிசளித்த.. அதே காதல் யௌவனா.. நனவிலும் அவனுக்கு வேண்டும். 

அவளை அடைவதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவனாக இருந்தான் சத்யன். 

சும்மாவே அவனுடைய ஆணழகத் தோற்றம் வேறு அவனை எல்லாருக்கும் பிடித்தம் கொள்ள வைக்க, “தங்கமும், பத்துகோடி நன்கொடையும்” என்றதும்.. ஒரு கன்னிப் பெண்ணின் தன்னிலை விளக்கத்தைக் கூட கேட்க மனமற்று, ஊரே அவன் பால் சாயத்தொடங்கியது. 

பஞ்சாயத்து தலைவருக்கு, கண்ணின் கருமணிகள் மறைந்து, தங்கமணியாக காட்சியளிக்கும் போல இருந்தது சத்யன் காட்டிய தங்க ஆசையில். 

அதனால் வேல்பாண்டியனை நோக்கியவர், சமரசம் செய்யும் குரலில், 

“அப்புறம் என்ன பாண்டி? நீயே தேடினாலும் இப்படியொரு மாப்பிள்ளை நம்ம தமிழுக்கு கிடைக்குமா சொல்லு? .. அவர் முகத்த பாருய்யா.. ராஜகளை தெரியுது.. சுத்திவர பதினெட்டு பட்டியில தேடினாலும் இப்படியொரு பையன் கிடைப்பானா?”என்று அவளது தமையனை, 

சத்யனின் வேண்டுகோளுக்கு இணங்க வைக்க முயல, யௌவனாவுக்கோ உள்ளே அணைக்கவே முடியாமல் பற்றியெரிந்தது. 

அதிலும் இத்தனை பேர் இருக்கையில் அவன் பார்த்து வைத்த சொக்கும் பார்வையில் எரிச்சல் முளைக்க, தெளிவாக வாயசைத்து, அவன் உணரும் படியான குரலில், “ப்ராடு” என்று முணுமுணுக்கவே செய்தாள் அவள். 

அதில் தன் முத்துமூரல்கள் அழகாக தெரிய.. உள்ளம் தடுமாறும் வகையில் மௌனமாக இதழ்கள் திறந்து புன்சிரிப்பு சிந்தினான் ஆணழகன்.

இவர்களின் கூத்தை அறியாத… திண்ணையில் அமர்ந்திருந்த இன்னொரு தலைவரோ, “நம்ம தமிழுக்கும் தான் என்ன குறை? அழகில்லையா? அறிவில்லையா? அவ அழகுக்கு.. சுத்திவர பதினெட்டு பட்டியில மாப்பிள்ளை தேடினாலும் ஈடாகுமா? அவ அழகுக்கு.. வெளிநாட்டு ராஜகுமாரன் தான்யா தோது..”என்றவர்,

சத்யனை கண்களால் சுட்டிக்காட்டிய வண்ணம், “அவர் முகத்த பாருய்யாஆஆ.. ஹிந்தி ஹீரோக்கணக்கா இருக்காரு..இவர் முகத்த யாருக்குய்யா பிடிக்காம போகும்?.. இவர் மட்டும் நம்ம தமிழ் மேல ஆசை வைக்கலைன்னா.. என் பொண்ண கட்டிக் கொடுத்து.. என் வீட்டு மாப்பிள்ளையாக்கிக்கிடுவேன்யாஆஆ.. பேசாம அவனுக்கே கட்டி வைச்சிடு”என்று சொல்ல, 

அதிமிதமான எரிச்சலுடன் தன் தமையனின் முகத்தைப் பார்த்தாள் யௌவனா. 

இதுகாறும் சத்யனின் மேல் கோபப்பட்டுக் கொண்டிருந்த வேல்பாண்டியனின் முகமோ, முன்பிருந்த ரௌத்திரம் முற்றிலுமாக மறைந்து, சிந்திக்கும் சாந்தமான முகமாக மாறியிருப்பதைக் கண்டாள் அவன். 

தமையன் எந்நேரமும் கட்சி தாவலாம் என்று புரிந்து விட, அடங்கே மாட்டாத கோபத்தில் தாறுமாறாக கத்தத் தொடங்கினாள் யௌவனா. 

“என்ன பேசிட்டிருக்கீஈஈஈங்க எல்லாரும்? இது உங்க வ்வாழ்க்கைய்யாஆ? என் வ்வாழ்க்கைய்யாஆ? உங்க பாட்டுக்கு… என் இஷ்டம் கேட்காம.. நீங்களே முடிவெடுத்துட்டிருக்கீங்க? அவன் கூட வாழப் போறது நானூஊஊ.. என் சம்மதம் வேண்டாமா?..” என்றவள், 

ஆறரையடி உயர ஆஜானுபாகுவான அவனது தோற்றத்தை சுட்டிக் காட்டியவளாக, “இவன் ய்யாருன்னே த்தெர்ரியாதூஊஊ??.. இவனை.. இன்னைக்கு தான் முதன் முறையாக பார்க்கிறேன்.. இவன் பேர்கூட முழுசாஆஆ தெரியாது..தங்கமும், காசும் தர்றேன்னதும்.. இவன் நல்லவனா? கெட்டவனா? ன்னு தெரியாமல்.. எனக்கு இவனை கட்டிவைக்கப் போறீங்களாஆஆ?”என்று சொல்ல, 

யௌவனாவை உயிர்மூச்சாக கொண்டிருப்பவனுக்கு, அவளது அந்நியத்தனமாக பேச்சு காயத்தைக் கொடுக்கவே செய்தது. 

உண்மையில் அவளுக்கு, சத்யன் அந்நியன் தானே? 

அவனைத் தன் மாப்பிள்ளையாக்கிக் கொள்ள எண்ணம் வைத்திருந்த வேல்பாண்டியனுக்கோ தங்கையின் பேச்சில் நல்ல சம்பந்தம் கைவிட்டுப் போயிடுமோ என்று நெஞ்சமெல்லாம் பதறத் தொடங்கியது. 

அதனால் தங்கையிடம் நாசூக்காக பேசி பார்த்து விடும் நோக்கில், “அதான் சொன்னாரே.. இவர் பேரூஊஊ”என்று இழுத்த போதே.. இடையில் கேட்டது அவனது கம்பீரக் குரல். 

அந்தக் குரல்.. அதில் இருக்கும் ஏதோவொன்று, அவனை பழைய கால அரசர்களின் இராஜகம்பீரத்தை நினைவுறுத்தாட்டுவது போலவே இருந்தது பலருக்கும். 

அவளது திரண்ட விழிகளையே தெளிவாகப் பார்த்த வண்ணம், “சத்யாதித்த இராஜசிங்கன்.. எனக்கு ஒரே ஒரு அம்மா மட்டும் தான்.. அதுவும் சென்னையில் இருக்காங்க.. பேரு வசுந்தராதேவி.. என் சம்பந்தத்துக்கு குறுக்கா அவங்க நின்னதில்லை.. நிற்கவும் மாட்டாங்க.. என் சந்தோஷம் தான் அவங்க சந்தோஷம்” என்று என் பக்கத்தில் இருந்து திருமணத்துக்கு எந்த தடையும் வராது என்று நாசூக்காகச் சொன்னான் அவன். 

“பீகாக் ஏர்லைன்ஸ் விமான சேவை.. பல இன்ஜினியரிங் காலேஜஸ், பல ரெஸ்டாரென்ட்ஸ்க்கு சொந்தக்காரன் நான்.. என்னைப் பற்றி மேலதிக விவரம் வேணுமுன்னா இந்த வெப்சைட்ல சர்ஸ் பண்ணிக்குங்க”என்றவன் அவளது விழிகளை விட்டும் தன் பார்வையை திருப்பாமலேயே, 

தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கார்டினை எடுத்து, வேர்பாண்டியனுக்குக் கொடுத்தான். 

அவன் வாயால் சொன்ன அவனுக்குச் சொந்தமான தொழில்களிலேயே பலரும் மலைத்துப் போய் நின்றிருக்க, நிதானித்த குரலில் இடையிட்ட பஞ்சாயத்து தலைவர்,

யௌவனாவை நோக்கி, “அப்புறம் என்னமாஆஆ? .. தம்பி தான் இவ்வளவு சொல்றாரே? உன்னை என்ன வைச்சுக்கவோ..இல்லை.. இரண்டாம் தாரமாகவோவா கேக்குறாரு.. இல்லைல? பொண்டாட்டின்ற அந்தஸ்த்தில் வாழலாம்னு தானே கேட்கிறாரு.. சரின்னு சொல்லுமா”என்று சொல்ல அப்போதும் தணியவில்லை அவள் மனம். 

டயலாக் கட்டிடத்தின் நான்காம் மாடியிலுள்ள நான்குபக்க அறைச்சுவர்கள் சொல்லும், இவள் முன்னாடி நின்றிருக்கும் அரக்கனின் காமவெறியை. 

முன்பின் அறியாமல்.. அவள் மறுக்க மறுக்க எப்படி ஆக்ரோஷமாக, ஆவேசமாக முத்தமிட்டான் அவன். 

அவனது இச்சையைத் தீர்த்துக் கொள்ள, இத்தனை விலைகொடுப்பனவுகளா? என்றே எண்ணத் தோன்றியதே ஒழிய, ஓர் ஆண்மகனின் உண்மை நேசம் புரியவில்லை அவளுக்கு. 

எகிறும் குரலில், தமையனை நோக்கியவள், “ஏதோ.. ப்பெர்ரீஈய்ய.. ப்பணக்காரன்னதும்… முன்னபின்னே தெரியாதவனுக்கு என்னை தூக்கி கொடுக்க சம்மதிச்சிட்டீங்கள்ல? ஏன் இதே நாள்கூலிக்கு வேலை செய்ற ‘பகீரதன்’ என் பின்னாடியே லோலோன்னு சுத்தி.. உங்க கிட்ட அடி வாங்கி என்னை கேட்டு வ்வந்தான்ல? அவனுக்கும் என்னை தூக்கி கொடுக்க வ்வேண்டியது தானேஏஏ? அவனை மட்டும் ஏன் வ்விரட்டியடிச்சீஈஈங்க? பணம் உங்க கண்ணை மறைக்குதுல்ல?..”என்றவள்,

இறுதியாக பஞ்சாயத்தையும் ஊர் மக்களையும் நோக்கி, “ஐ கான்ட் டேக் திஸ் எனிமோர்.. நீங்க என்னை ஊர விட்டு ஒதுக்கி வ்வைச்சாலும் சரி.. தண்டனை கொடுத்தாலும் சரி.. இந்தாள் மனைவியாக என்னால ம்முடியாதூஊ .. நான் போறேன்..”என்று காச்மூச் என்று கத்திவிட்டு, யார் பேச்சையும் கேட்காமல் அவ்விடத்தை விட்டும் விரையத் தொடங்கினாள் அவள். 

தங்கையின் அதிரடியை எதிர்பார்த்திராத வேல்பாண்டியோ, “ஏய் தமிழு? .. தமிழு??..”என்று அவளை நிறுத்த முயற்சி செய்து முடியாமல் போகவே, 

பஞ்சாயத்து தலைவரை நோக்கி, “அது சின்னப்பொண்ணுங்கய்யா… நான் சொல்லி புரிய வைக்குறேன்.. எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம்” என்று சொல்ல, 

சத்யனின் முகமோ பல்பு போட்டது போல பிரகாசமாக எரியவாரம்பித்தது. 

எத்தனையோ பிஸினஸ் டீல்களில், எதிராளிகளின் பேராசையைத் தூண்டிவிட்டு, தேவைக்கு அதிகமாகவே கொடுத்து தனக்கு வேண்டியதை சாதித்து பழகியிருப்பவனுக்கு, பஞ்சாயத்தை வீழ்த்துவது ஒன்றும் பெரிய விஷயமாக படவில்லையாயினும், 

யௌவனாவின் மனதை தன் பால் வீழ்த்துவது தான் பெருங்காரியமாகத் தோன்றலானது. 

அதிலும் அவள் உரைத்த “பகீரதன்” என்ற பெயரில் இதயம் பகீர் என்றாக, ‘யார் அந்த பகீரதன்?’ என்ற சின்ன பொறாமையும் உள்ளுக்குள் ஓடி மறைந்தது. 

அடுத்த பிரச்சினையாக பஞ்சாயத்து தலைவர் ஊராரை நோக்கி, பலத்த சிந்தனையுடன், “அதுவரைக்கும் தம்பியை எங்க தங்கவைச்சிக்குறது..?” என்று கேள்வியெழுப்ப, அந்த முழு பிரச்சினைக்கும் காரணமான முன்கோபி தமையனான ‘வேல்பாண்டி’ சட்டென்று குரல் கொடுக்கலானான். 

“அவர் தான் எங்க வீட்டுல மாப்பிள்ளை ஆகிட்டாருல்ல?.. நம்ம வீட்டுல தங்க வைச்சுக்குறேன்யா..”என்று பஞ்சாயத்து முன்னிலையில் பணிவாக சொல்ல, சத்யனுக்கோ “ஆஹாஆஆ யௌவனா வீட்டில் தங்கும் வாய்ப்பாஆஆ”என்று குளுகுளுவென்று இருந்தது உள்ளுக்குள். 

அந்தப் பஞ்சாயத்து இனிதாகவே முடிந்து, திருப்தியுடனேயே கலைந்து போகத் தொடங்கியது. 

அன்றிரவு நடுநிசி பன்னிரண்டுமணி. 

சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன்னால், மகாசேனரால் தோண்டப்பட்டு, கல் கொண்டு புதைக்கப்பட்டு மறைக்கப்பட்ட, 

இராஜசிங்கர்களின் பொக்கிஷங்கள் கொண்ட.. மனித சஞ்சாரமேயற்ற அந்த நிலவறையில் இருந்து எழுந்தது பொல்லாத சிரிப்பு. 

அது ஒரு வெற்றிக் களிப்புச் சிரிப்பு!! 

பழிவெறியும், கோபமும் கொண்ட ஒரு பெண்ணின் ஈர்க்கும் வகையிலான ஓர் சிரிப்பு. 

அது இருநூறு வருஷங்களுக்கு முன்னால், நெஞ்சில் ஒரு தீவிர வன்மத்துடனும், நாவில் ஒரு குரூர சத்தியத்துடனும் செத்துப் போன பதிவிரதையான நந்தினியின் சிரிப்பு!! 

அந்த இருண்ட நிலவறையில்.. ஒரு காளிதெய்வத்தின் சிலை.. அந்த ஆத்மா போலவே தலைவிரி கோலத்துடனும், இரத்தம் சொட்டச் சொட்ட நாக்கினை வெளித் தள்ளிய வண்ணம், 

கைகளில் ஆயுமும் ஒரு கையில் கொடியவனின் தலையுடனும் ஆக்ரோஷமாக நின்றிருந்தது. 

மேல் தரைமட்டத்தில் இருந்து சிறு துவாரம் வழியாக, நிலவறைக்கு.. நிலாவின் ஒளி வந்து சரியாக காளிச்சிலையின் ஆக்ரோஷமான கண்களில் விழ..

 இன்னும் இன்னும் பயங்கரமாகத் தெரிந்தது.. இருநூறு வருடங்களாக பூஜிக்கப்படாத தூசு மண்டிக் கிடக்கும் காளிச்சிலை. 

கண்டியின் தம்பதிவன எல்லையில் மட்டுமே தன் சக்திகளைக் கொண்டிருக்கும் நந்தினி, 

இரண்டு மாதங்கள் விடா முயற்சியூடாக சத்யனின் கனவில் புகுந்து.. அவன் மனதை மயக்கி.. கண்டிக்கு வரவழைக்க அவள் போட்ட மாயத்திட்டம் பலித்ததில்… அந்த நிலவறை முழுதும் அலற வெடிச்சிரிப்பு சிரித்தாள். 

சிவனோடு இணைந்தாடும் ரௌத்ரமான பார்வதி அவதாரமான காளியும் இவள் தானோ? என்று ஆத்மாவைக் கண்களால் காணும் சக்தி பெற்றவர்கள் ஐயுறுமறளவுக்கு, 

அந்த நிலவறையில் ஒரு சூறாவளிக் கிளம்பக் கிளம்ப ரௌத்திரத்தோடு ஆனந்த தாண்டவம் ஆடினாள் நந்தினி. 

ஒரு கரும்புகை.. காளி தெய்வத்தை சுற்றி சுற்றி வந்து அந்த தாண்டவத்தை அவளுக்கு அர்ப்பணிக்க, 

அப்போதும் கூட ஓயாத சிரிப்புடன், பழிவெறி ததும்பும் வன்மும் சேர்ந்த கொடூரக் குரலில், “ஹஹஹா இராஜசிங்காஆஆ.. உன் வம்சம் அழியப் போகிறதூஊ.. என் சபதம் நிறைவுறப் போகிறதூஊஊ.. என் இருநூறு வருட தவம் நிறைவேறப் போகிறதூஊஊஊ”என்று கத்திக் கத்தி உரைத்த வண்ணம் சந்தோஷத்துடனேயே ஆடினாள் நந்தினி. 

தேவதா வருவான். 

 

6 thoughts on “ஏகாந்த இரவில் வா தேவதா! – 3&4 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top