ATM Tamil Romantic Novels

ஆடி அசைந்து வரும் தென்றல் – 2

2-ஆடி அசைந்து வரும் தென்றல்



பார்த்திருந்த அனிவர்த்கு கூட கீற்றலான புன்னகை.. மகனின் புன்னகையை பார்த்த கங்கா…

 

“அழகான குழந்தை இல்ல.. எப்படி பேசறா..”

 

ஆமாம் என்பதாக அனிவர்த்மும் தலை அசைத்தான்.

 

“நீயும் கல்யாணம் பண்ணிகிட்டா..நம்ம வீட்லயும் இப்படி ஒரு குழந்தை இருக்கும்ல..”

 

“எங்க சுத்தினாலும் கல்யாணத்துல தான் வந்து முடிப்பிங்களா.. வாங்க.. நான் ஆபிஸ்ல என் வேலை எல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன். ஆமாம் நீங்க எப்படி வந்திங்க..”

 

“வீட்டு காருல வந்திட்டு டிரைவர அனுப்பிட்டேன்..”

 

“உங்களை.. வாங்க வந்து சேருங்க.. வீட்ல டிராப் பண்ணிட்டு போறேன்..”

 

காரில் ஏறிய சில நிமிடங்கள் கழித்து அவனை பார்ப்பதும் முகத்தை திருப்பவுமாக இருக்க… 

 

“என்ன சொல்லுங்க..”என்றான் அனிவர்த்.

 

“இல்ல.. சின்ன டப்பாவுல தான் சாதம் கொண்டு வந்தேனா.. பசி அடங்கல..”

 

“அதுக்கு..” என்றான் எரிச்சலாக..

 

“போற வழில ஏடூபில மினி டிபன் வாங்கி கொடு..”

 

“வீட்டுக்கு தான போறிங்க.. வீட்ல போய் சாப்பிட்டுங்க..”

 

உடனே தலையை பிடித்துக் கொண்டு “தல சுத்தது.. சுகர் டவுனாயிடுச்சு போல..வீடு போற வரைக்கும் தாங்காது அனிவர்த்” இன்ஸ்டன்டா ஒரு டிராமாவை கிரியேட்  பண்ண..

 

“என்னை டார்ச்சர் பண்ணறிங்க..”

 

“அதுக்கு தான் சொல்றேன்.. எனக்கு ஒரு மருமக வந்தா அவள் டார்ச்சர் பண்ணுவேன். நீ நிம்மதியா இருக்கலாம்”

 

“உங்களையே டால்ரேட் பண்ண முடியல… இதுல  இன்னொருத்தியா…”

 

ஆஹா பயபுள்ள எப்படி பந்து போட்டாலும் சிக்சரா அடிக்கிறானே.. சோர்ந்து போயிடாத கங்கா.. உனக்கு மருமக வரனும்னா இன்னும் எஃபோர்ட் போடனும்..என தன்னை தானே தேற்றி கொண்டார்.

 

பணத்தை பணமாக மதிக்காமல்  பொழுதுபோக்கிற்காக லட்சங்களை ஒரே இரவில் செலவளிக்கும் விஐபிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நவீன கிளப் அது.

 

சனிக்கிழமை இரவு …. கைகளில் பொன்திரவம் அடங்கிய கண்ணாடி கோப்பையில் பனிகட்டிகள் மிதங்க.. ஒவ்வொரு மிடறாக ரசித்து ருசித்து கொண்டு இருந்தான் அனிவர்த்.

 

வாரம் முழுவதும் தொழிலின் பின் ஓடும் அனிவர்த் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு இரவு வரை அவனுக்கே அவனுக்கான பொழுதுகள்… அதில் அவன் அனுமதியின்றி யாரும் தலையிட முடியாது.

 

எதை மறைக்க உடை உடுத்துவோமோ.. அதை எல்லாம் தாரளமாக காட்டி கொண்டு கையில் மது கோப்பையுடன் நளினமாக நடந்து வந்த நவயுக நங்கை ஒருத்தி அனிவர்த் அமர்ந்திருந்த ஒற்றை சோபாவின் கை பகுதியில் அமரந்து…

 

“கேன் ஐ ஜாயின் வித் யூ டார்லிங்” என மிழற்ற…

 

அனிவர்த்தின் பார்வை அவளை மேலிருந்து கீழாக இஞ்ச் பை இஞ்ச்சாக அளந்து கொண்டு இருந்தது. அந்த பார்வை தான் இவளுக்கு கொடுக்கும் பணத்திற்கு இவள் ஒர்த்தா என ஆராயும் பார்வை..

 

அவனின் பார்வையை சரியாக படித்தவளோ.. அவனிடம் நெருக்கத்தை கூட்டி.. தாரளமாக தன் உடல் உரசுமாறு அவனை லேசாக அணைத்து அவன் முகம் பார்க்க..

 

“ம்ம்ம்.. ஓகே..” என்றான். என்னவோ அடிமைக்கு வாழ்வளிக்கும் ராஜாவை போல ராஜதோரணையில்…

 

“லெட்ஸ் கோ..”என அனிவர்த் எழுந்து கை நீட்ட அவளோ அவனின் தோளில் தொத்திக் கொண்டாள். அவளை தனது காரில் ஏற்றி கொண்டு இந்த மாதிரியான மன்மத லீலைகளுக்கென வாங்கி இருந்த ப்ளாட்டிற்கு பறந்தான்.

 

அனிவர்த்தின் கார் அந்த அபார்ட்மென்ட் வளாகத்திற்குள் நுழைந்தது. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என தெரியாத.. தெரிந்து கொள்ள விரும்பாத.. தனிதீவுகளாக வாழும் ஹை சொசைட்டி பீப்புள் வாழும் பகுதி.

 

கார் பார்கிங்கில் காரை நிறுத்தி அனிவர்த் காரை விட்டு இறக்கியதும்.. அவளும் காரை விட்டு இறங்கி காரை சுற்றி கொண்டு ஓடி வந்து அனிவர்த்தை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளின் இடுப்பில் கை போட்டு நெருக்கத்தை அதிகப்படுத்தியவாறே… லிப்ட்டுக்குள் நுழைந்தான்.

 

லிப்ட் கதவு மூடும் வரை கூட பொறுக்காமல் தன்உடல் அங்கங்கள் அவன் மேல் அழுந்துமாறு இறுக்கி அணைத்தவள் வாயோடு வாய் பொருத்தினாள்.  அந்த இதழ் முத்தம் லிப்ட் பதினெட்டாவது மாடியில் போய் நிற்கும் வரை நீடித்தது. அவள் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் தொடை வரை மட்டுமே இருந்த பாடிகான் டிரஸ் அவனின் கைகளின் அந்தரங்க அத்துமீறலுக்கு வசதியாக இருந்தது.

 

தனது ப்ளாட்டிற்கு வந்ததும் நேராக தனது படுக்கையறைக்குள் அவளோடு சென்றவன் அவளை அங்கிருந்த இருக்கையில அமர வைத்து விட்டு ஏசியை ஆன் பண்ணி அதனின் குளிரை அதிகப் படுத்தினான்.

 

அவளோ அந்த பெரிய படுக்கையறையே கண்களால் அளந்து கொண்டு இருந்தாள். கிங் சைஸ பெட்.. பெட்கு நேரேதிர் சுவற்றில் அறுபத்தைந்து இஞ்ச் டிவி.. வலதுபுறம் ஒரு மினி பார். இடதுபுறம் ஜக்குஸியோடு கண்ணாடி கதவுகள் கொண்ட குளியலறை.. என எங்கும் பணத்தின் செழுமை.. அவனின் மன்மதலீலைக்கென அழகாக வடிவமைத்து கொண்ட அந்தபுரம் தான் அந்தப்ளாட்.

 

கண்களால் அளந்து கணக்கீடு செய்தவள்இன்று பெரியதாக தேறும் என எண்ணி மகிழ்ந்து போனாள். அனிவர்த் இரண்டு பெரிய கண்ணாடி கோப்பைகளில் பனிகட்டிகள் மிதங்க வைன் எடுத்து வந்து அவள் கைகளில் ஒன்றை கொடுத்து விட்டு அவளை இடித்தாற் போல் கொஞ்சம் பெரியதாக இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தான்.

 

ஒருவருக்கொருவர் மதுரசத்தோடு இதழ் ரசமும் பருகி உடையை நெகிழ்த்தி நெகிழ்ந்து படுக்கைக்கு வந்திருந்தனர். மென்மையாக ஆரம்பித்தவன் வன்மையாக கையாண்டும் உடலின் தேடல் தீர்ந்த போதும்.. அவனின் மனதின் தேடல் தீரவில்லை.

 

அன்றொரு பனிக்காலத்தில் இரவு பகல் பாராமல் காரிகை ஒருத்தியோடு கொண்ட கூடல் போல நிறைவை இதுவரை யாரும் தரவில்லை. காதலோடு இணைந்தவளிடம் காமத்தோடு கூடியவன்.. அவளை மறந்தும் போனான். ஆனால் லயிப்போடு கொண்ட உறவு என்பதாலோ  என்னவோ… அவனின் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.

 

பொருளுக்காக காமத்தை விலை பேசும் மாதரிடம் எதை தேடுகிறோம் என தெரியாமல் உடல்பசி தான் தணிந்தது.. அதன் பின் ஆழ்மனம் விழித்துக் கொள்ள.. மனம் எங்கும் தோன்றும் எண்ணச் சிதறல்கள் அவனை அமைதி கொள்ள விடுவதில்லை. எதை தேடுகிறோம்.. எதை நாடுகிறோம்… என புரியவில்லை.

 

அந்த தேடல் தான் காதலின் ஆரம்பபுள்ளி என்பதையும் அறியவில்லை அனிவர்த். வந்தவளோ போதையின் தயவில் உறங்கி விட.. எதற்காக மனம் அலைப்புறுகிறது என அறியாமல் உறக்கம் பிடிபடவில்லை. இப்படி உறவு கொள்ளும் நாள் எல்லாம் உறக்கம் கொள்வதில்லை. தன் மனதின் போக்கும் அவனுக்கு புரியவில்லை.

 

வர வர இந்த உறவுகளின் பிடித்தமும் குறைந்து கொண்டே வருகிறது. உறக்கம் கொள்ள.. மதுவை நாடியவனுக்கோ தன்னை மறக்கடிக்கும் போதையும் பிடிக்கவில்லை. மது மாது பந்தம் பாசம் 

என்று யாரும் எதுவும் தன்னை அடிமைப் படுத்தக்கூடாது.

 

மூன்று வருட ஜெர்மன் வாசம் அவனை அப்படி மாற்றி இருந்தது. எல்லா ஆண்பிள்ளைகள் போலவே அனிவர்த்துக்கும் அம்மா என்றால் அலாதி பிரியம் தான். அம்மா மகன் உறவை மீறிய நட்பு அவர்களுக்குள் இருந்தது. சிதம்பரம் ஒரு கடமை தவறாத சராசரி தந்தை அவ்வளவு தான்.

 

மேற்படிப்புக்காக சென்றவன் யாரும் யாருக்கும் கட்டுபடாத சுகந்திர வாழ்க்கை பிடித்து போய் அதில ஊறி திளைத்துப் போய் வந்தான்.  கட்டுகடங்காத களரியாக தான் மாறி போனான் மகனின் பிரிவும் மாற்றமும் கங்காவின் நோய்களுக்கு காரணமாகி போனது..

 

விடிய விடிய பலவித யோசனையில் தூங்காமல் விழித்து இருந்தவன் எங்கேயாவது வெளியே சென்று வந்தால் நல்லா இருக்கும் என நினைத்து குளித்து தயாராகி தன்னோடு வந்தவள் விழிப்பதற்காக காத்திருந்தான்.

 

பதினொருமணி வாக்கில் விழித்தவள் உடல் மொழியால் அழைப்பு விடுக்க.. அதை புறகணித்து தான் அமர்ந்து இருந்த சோபாவை விட்டு எழாமல் தனது வாட்ச்சில் மணி பார்த்தவன்…

 

“உனக்கான கவர் அதோ..” படுக்கையின் அருகே இருந்த டேபிளை காண்பித்தவன்…

 

“நீ கிளம்பலாம்..” என கை அசைத்து சொல்ல.. அவளோ இன்று முழுவதும் இவனோடு இருந்து பெருத்த தொகை பார்த்துவிடலாம் என நினைத்திருந்தாள். அவனின் உதாசீனத்தில் முகம் அஷ்டகோணலாகிவிட..  நினைத்து வந்தது நடக்கவில்லை என்ற கோபத்தில் கிளம்பிவிட்டாள்.

 

அந்த பெரிய ஷாப்பிங் மாலில் தனது பேவரிட் பிராண்டட் ஷோருமில் தனக்கான உடைகளை தேர்வு செய்து கொண்டு இருந்தான் அனிவர்த்.

 

“ஹாய் அங்கிள்..” என தனதருகே குரல் கேட்க.. திரும்பி பார்த்தவனுக்கு யார் என தெரியவில்லை.

 

“என்னை தெரியலையா.. ஐயம் ஷாஷிகா..” என்றது பெரிய மனுசி தோரணையில்..

 

சத்தியமாக அனிவர்த்கு  யார் என தெரியவில்லை. அந்த குட்டி பொண்ணு அவனின்  ஞாபகத்தில் இல்லை. அறிமுகம் இல்லாத  பார்வை பார்க்க..

 

“ம்ப்ச்.. டூ பேட்.. உங்களுக்கு மறந்து போச்சா.. மென்டேக்ட்  டெய்லி டூ டைம்ஸ் சாப்பிடுங்க.. ரித்தீஷ் சாப்பிடுவான்”

 

ஷாஷிகாவின் பேச்சு அவனின் தாளம் தப்பிய மனதிற்கு லயம் சேர்த்தது. மனதில் கூடிய இதம் இதழில் புன்னகையாக மலர… ஷாஷிகாவின் நினைவு மின்னலாக ஒளிர…



“ஹேய் பேபி டால் நீ அந்த கோவிலில் பார்த்த பாப்பா தான..”

 

“ஹப்பாடா  ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டிங்களா.. ரித்தீஷ் மாதிரி இல்லை..” என தன் கையை உதறி கிளுக்கி சிரித்தது.

 

ஷாஷிகாவின் பேச்சும் செயலும் பிடித்திருக்க… விரும்பியே பேச்சை வளர்த்தான்.

 

“யாரு அந்த ரித்தீஷ்..”

 

“என் சுவாதி சித்தி சன்”

 

“ஓகே பேபி டால்.. நீ யார்கூட வந்த.. உன்னை தேட போறாங்க..”

 

“அச்சோ…சித்தி தேடுவாங்க..  பை..“ நெற்றியில் தட்டி கொண்டு இரண்டு அடி வைத்தவள் திரும்பி ஓடி வந்து அனிவர்த்திடம்

 

“அந்த பாட்டிக்கு கால்வலி இப்ப பரவாயில்லையா..”

 

“ம்ம்..இப்ப அவங்க ஓகே பேபி டால்”

 

“டோன்ட் கால் பேபி டால்… கால் மீ ஷாஷிகா..” என்றது உத்தரவாக… 

 

“உத்தரவு ஷாஷிகா அவர்களே..”கொஞ்சம் பணிவாக.. நிறைய சிரிப்போடு அனிவர்த் சிரம் தாழ்த்தி சொல்ல…

 

“வெரி குட்..” ஷாஷிகா சொல்லி கொண்டிருக்கும்போதே ஒரு பெண் ஷாஷிகாவை தேடி கொண்டு வந்தவள்.

 

“ஷாஷி..ஷாஷி.. இங்க  என்ன பண்ற..”என கையை  பிடித்து அழைத்து சென்றாள்.

 

“முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட பேசாதேனு சொல்லி இருக்கோம்ல..”

 

“அந்த அங்கிள்ல நான் கோயில்ல பார்த்து இருக்கேன்”

 

“முதல்ல தொண தொணனு பேசறத நிறுத்து..”

 

எப்படி க்யூட்டா பேசற குழந்தையை போய் இப்படி திட்டறாளே.. என்ன பெண்இவள் என அனிவர்த் நினைத்தவன் மனதிற்கு ஒரு மாற்றமாக இருக்க ஷாப்பிங் வந்தவனுக்கு வந்த வேலை சிறப்பாக முடிய.. வாங்கிய வரை போதும் என கிளம்பிவிட்டான்.

 

1 thought on “ஆடி அசைந்து வரும் தென்றல் – 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top