ஏகாந்த இரவில்… வா தேவதா
[5]
பஞ்சாயத்து நடந்து முடிந்த அதே இரவு!
என்ன தான் கொழும்பு மாநகரத்தில் அவள் மாடர்ன் பெண்ணாக திரிந்து கொண்டிருந்தாலும் கூட,
சொந்த ஊருக்கு வந்ததும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே அமைந்திருந்தது அவளது ஆடைகள் எல்லாம்.
கண்டியின் குளிரைத் தாக்குப் பிடிக்கும் வகையில் தன் மணிக்கட்டு வரை மறக்கும் கை நீண்ட டீஷேர்ட்டும், இடுப்புக்கு கீழே ஒரு பிலோசோபேன்ட்டும் அணிந்து, தன் சொந்த வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தவளுக்கோ,
ஏனோ முன்பின் தெரியாத அந்த அழகு வாலிபன், தன் வீட்டில் இருப்பது பிடிக்கவேயாமல் போனது.
இதிலும் அவளுக்கென்று இருக்கும் ஒரே சொந்தமான அண்ணனும், அண்ணியும் வேறு.. அவனுக்கு இராஜபோக விருந்து கொடுத்து விழுந்து விழுந்து கவனிப்பது..
அதிகபட்ச எரிச்சலை அவளுள் தூண்டி விடவே செய்தது.
அதிலும் அண்ணனுடையதும், அண்ணியுடையதுமான “மாப்ள” என்ற விழிப்பு வேறு.. அவளது காதுகளை வந்தடையும் நேரமெல்லாம்.. உள்ளுக்குள் பற்றியெரிந்தது யௌவனாவுக்கு.
முழுநேரமும் முகத்தை ‘உம்’ மென்று தூக்கி வைத்துக் கொண்டு சமையலறையைத் தாண்டி விரைந்த யௌவனாவை, சமையல் கட்டுக்கள் இருந்து அழைத்தது அவளது அண்ணியின் குரல்.
‘என்ன? ஏதென்று தெரியாமல் அவளும் அடுக்களைக்குள் நுழைய,
அவளது அண்ணி ‘வாசுகி’யும் அவசரம் கலந்த பதைபதைப்புடன், “ஏய் தமிழு.. இங்க வா.. இந்த பாலைக் கொண்டு போய் மாப்பிள்ளைக்கு கொடு..” என்று பால் குவளையினை, அவளின் கைகளில் வலுக்கட்டாயமாக திணிக்க சுருசுருவென்று கோபம் போனது அவளுக்கு.
அதிலும் சத்யனை அண்ணி, “மாப்பிள்ளை” என்று உரிமையோடு அழைத்த பாங்கு முற்றிலும் பிடிக்காமல் போக, அண்ணி மீதும் சற்றே சினம் கொள்ளவே செய்தாள் அவ் யௌவனப் பெண்.
தன் திரண்ட விழிகளை இன்னும் கொஞ்சம் பெரிதாக விழித்தவள், “எது மாப்பிள்ளைய்யாஆஆ? நானும் போனா போகுதுன்னு ‘விருந்தோம்பல் தமிழர் பண்பாடு’என்.. வீட்டுக்கு வந்தவனை கவனிக்கட்டும்னு சும்மா இருந்தால்.. என் சம்மதம் இல்லாமல் அந்தாளை… மாப்பிள்ளைன்னு முடிவே பண்ணிட்டீங்களாஆஆ? நான் சம்மதிக்காமல் ய்யாஆஆர்ருக்கு ய்யாஆஆர் ம்மாப்பிள்ளை? இன்னைக்கு வந்தவனுக்கு பிரியாணி, பாலு.. பத்திய்யெர்ர்ரிய்யுதூஊஊ”என்று அவள் கடுப்பில் பொறிந்து தள்ள, வாசுகி அண்ணிக்கோ.. அவளது வார்த்தையாடல்கள் கவலையைக் கொடுத்திருக்க வேண்டும் போலும்.
வாசுகி அண்ணியின் தெளிந்திருந்த முகம் அடுத்து இருண்டு வாடிப் போனது.
கவலை அப்பிய குரலில் அவளைப் பார்த்தவர், “எந்த ஜென்மத்துல.. யாருக்கு பண்ண பழிபாவமோ இப்பவரைக்கும்.. என் வயித்துல ஒரு புழுபூச்சி தரிக்கலை.. ஆனா அந்த குறை இதுவரைக்கும் தெரியாம.. எனக்கும் அவருக்கும் குழந்தையா வந்தவ நீ.. இங்கேபாரு… நான் உன் அண்ணியா சொல்லல.. அம்மாவா சொல்றேன்.. உன் அண்ணா உனக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து… எது பண்ணாலும் நல்லத தான் பண்ணுவாரு.. அதே மாதிரி மாப்பிள்ளையும் நல்லவரா தான் இருப்பாரு…”என்று சொல்ல, யௌவனாவின் இதயமெல்லாம் அவரது வேதனை சுமந்த மொழிகளில் உறைந்து போயிற்று.
அவனை அவள் மணவாளனாக ஏற்றுக் கொள்ள மறுப்பதில் யாருக்கு மனவேதனையோ இல்லையோ? அண்ணிக்கு மனவேதனை என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டவள்,
அண்ணியைத் தேற்றி விடும் முகமாக, “ஆ.. அது.. அது இல்லை அண்ணி..”என்று இழுக்க, அவளை அதற்கு மேலும் பேச விடவேயில்லை வாசுகி அண்ணி.
அவளது சிவந்த இதழ்களில், தன் சுட்டுவிரலை வைத்து ‘பேசவேண்டாம்’ என்பது போல தடுத்தவர்,
“உஷ்.. இப்போ ஒண்ணும் பேசாதே.. ஒரு உதவி மட்டும் பண்ணு.. இந்த பாலை கொண்டு போய் மாப்பிள்ளைக்கிட்ட கொடு” என்று நிதானமாக சொல்ல, தமிழ்ச்செல்வியினால் அண்ணி சொல்வதனை மறுக்கவே முடியாமல் போயிற்று.
முகம் கருத்து வாட அரைமனதாக ஏற்றுக் கொண்டவள், “அவனுக்காகலாம் இல்லை அண்ணி.. உங்களுக்காக போறேன்..”என்றவளாக,முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே அவனது அறை நோக்கி நடந்தாள்.
அவள் வீடு பாரம்பரிய கண்டி மக்களைப் போன்ற.. கொஞ்சம் பரந்த வீடு தான். கூரைத்தகட்டின் அலங்காரம் கூட பழைய சிங்களவர்களின் பாணியில் அமைந்திருக்க,
வீட்டின் நடுக்கூடத்தில் உச்சிவெயில் சூரியனும், நடுநிசி பூரணையும் கொஞ்சி மகிழ இடைவெளி விட்டு, நாற்பக்கமும் அறைகள் கொண்டு,
புராதன பாணியில் அமைக்கப்பட்ட வீடேயாயினும் கூட, ரொம்பவும் கலைநுணுக்கம் வாய்ந்த வீடு அவர்களினுடையது.
அதிலும் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறையோ, அவள் வீட்டிலேயே இருந்த வெகு சொகுசான அறையாக இருக்க, அண்ணியின் கைப்பக்குவத்திலான பிரியாணியை வயிறு முட்ட தின்று விட்டு,
அசதியில் மஞ்சத்தில் மல்லாக்காகப் படுத்திருந்தான் அவன்.
அவளைக் காண வேண்டும் என்று காதலுடன் இலங்கை வந்து, அவளை அடைந்து கொள்ளத் தேவையான அத்தனை வழிவகைகளை செய்தவனுக்கு, தாயை நினைக்கும் போது தான் உள்ளுக்குள் மனநெருடலாக இருந்தது.
‘இலங்கை செல்லக்கூடாது’ என்று சத்தியம் வாங்கிய பின்னரும் கூட, அதை துறந்தெறிந்து விட்டு இலங்கை வந்திருப்பதை தாய் அறிந்தால்.. அவனை அவர் மன்னிக்கவும் கூடுமா?
நிச்சயம் மன்னிப்பது என்பது அரிது தான். இருப்பினும் அவன் உள்ளங்கவர்ந்த அழகு மருமகளை காட்டியதும், தாயின் கோபம் எல்லாம் நீர்த்துப் போகும் என்று தீர்மானமாக எண்ணிக் கொண்டே.. விழிகள் மூடிப் படுத்திருந்தான் அவன்.
அந்த நேரம் பார்த்து பால் கப்புடன் அவனது அறைக்குள் நுழைந்தவளுக்கு, கண்கள் மூடி படுத்திருப்பவனைக் கண்டதும் தோன்றிய முதல் எண்ணம்,
“பணம் பாதாளம் வரை பாயும்’ என்பது அவன் விடயத்தில் எத்தனை உண்மை?” என்பதேயாம்.
பஞ்சாயத்தில் நின்றிருந்த அனைவரையும் ‘பணம்’ என்ற மூன்றெழுத்தை வைத்து சமாளித்து விட்டானே? என்ற ஆச்சரியமும் அவன் மீது எழத்தான் செய்தது.
அதிலும்,பஞ்சாயத்து முடிந்ததும் யாருக்கு தொடர்பு கொண்டானோ?
இலங்கைக்கு வந்ததும் அவன் தங்கியிருந்த நவீனரக ஐந்துநட்சத்திர.. கொழும்பு விடுதியில் இருந்த அவனது அத்தனை லக்கேஜூம் கண்டிக்கு வந்து இறங்கியுமிருந்தது.
எந்த உடையைக் காட்டி ஊரெல்லாம் ‘ஹிந்தி ஹீரோ கணக்கா இருக்காப்டி” என்று சொல்ல வைத்தானோ? அந்த கோர்ட் சூட்டை களைந்து.. வெறும் டீஷேர்ட், ஷோர்ட்ஸூக்கு மாறியவன்.. தன் சொந்த வீட்டில் படுத்திருப்பது போல, சொகுசாகப் படுத்திருப்பதைக் காணவும்… சின்னக் கோபம் எழுந்தது அவளுக்கு.
கையில் இருக்கும் சூடான பாலை அவன் முகத்துக்கே ஊற்றினால் தான் என்ன? என்ற கொடிய எண்ணமும் சேர்ந்தே பிறந்தது அவளுக்கு.
சூடான பால் முகத்தில் ஊற்றப்பட்டதும், இவன் அலறும் அலறலில்.. திரும்பவும் ஒரு பஞ்சாயத்தே கூடினாலும் கூடிவிடும் என்று தோன்ற.. அந்த கொடிய எண்ணத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டே,
பாலைக் கொண்டு வந்து டிராயரில் வைத்தவள், சுவரில் ஓடும் கடிகாரத்தைப் பார்த்தாள்.
நேரம் ஒன்பதரை என்று காட்டியது அது.அதிலும் ஒன்பது மணிக்கெல்லாம், ‘பள்ளிப் பையன் மாதிரி தூங்கிட்டானா?’ என்ற எண்ணம் மீதூற,
இவனைக் கட்டிக் கொண்டால் இராத்திரி வேளைகளில் ரொம்பவும் சிரமம் என்று போகிற போக்கில் மனம் “புருஷனாகவும்” எண்ணிக் கொண்டதை ஏனோ அவள் ஆராயவில்லை.
ஆனால் அந்த யௌவனப்பெண்ணின் நெஞ்சு நிறைய பற்பல கேள்விகள் நிறைந்திருந்தன.
யார் இவன்? நிஜமாகவே இந்தியாவிலிருந்து வந்தவனா? திடுதிப்பென்று அவள் கண் முன்னாடி வந்து நின்றவன், அவள் பெயரை எங்கணம் அறிந்தும் வைத்திருக்கிறான்? அதுவும் யௌவனத்தமிழ்ச்செல்வி என்னும் முழுப்பெயருடன்? நிஜமாகவே இரண்டு மாதங்களாக பின்தொடர்ந்து காதலித்தானா அவன்?
அவனது வதனத்தையே சிந்தனை வயப்பட்டவளாக அவள் பார்த்துக் கொண்டிருந்த கணம், அவனது மூடியிருந்த விழிகளுக்குப் பின்னாலும் கூட, அவனது கருமணிகள் ஆடுவது போல ஒரு தோற்றமயக்கம் தோன்ற..
இவன் நிஜமாலுமே தூங்குகிறானா? இல்லை தூங்குவது போல நடிக்கிறானா? என்ற எண்ணம் சிறுகச் சிறுக வலுத்தது அவளுள்.
அதனை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காக, அவள் மெல்ல நகர்ந்து எட்டிப் பார்த்த போது, அவளது கூந்தலோ.. அவன் மார்புகள் மேல் கேடயமாக விழ,
சற்றும் எதிர்பார்த்திராத விதமாக.. மெல்ல மேலெழுந்த அவன் கைகளில் ஒன்று, அவள் இடையூடு கையிட்டுத் தன்னை நோக்கி.. இழுத்து தன் மார்போடு சாய்த்துக் கொண்டது.
கனவைப் போலவே நனவிலும் நிகழ்ந்த கூத்தில், அந்த அழகிய ஆடவனின் முத்து மூரல்கள் விகசித்திருந்தன.
அவனது பரந்த மார்பில், அவளது பஞ்சன்ன தனங்கள் ‘பச்சக்’ என்று போய் மோதிக் கொண்ட சுகத்தை அனுபவித்துக் கொண்டே,
காதல் மயக்க விழிகளுடன் கண் திறந்தவன், மந்தகாசமான குரலில், “மாட்டிக்கிட்டீயா? எத்தனை மணிநேரமா என்னை சைட் அடிச்சிட்டிருக்க?”என்று கேட்டான்.
அதிலும் அவன் நாசி முகர்ந்து கொண்டிருந்த கூந்தலில் இருந்து வந்த மல்லிகை மணம் வேறு அவனை உன்மத்தம் கொள்ளச் செய்யும் போலிருந்தது.
அவனது கிறங்கும் பார்வையும், அடாவடித்தனமும் சிறிதும் இரசிக்கமாட்டாதவள், “உன்னை சைட் அடிக்குறேனா?? .. லூசு.. நீ எத்தனை மணிநேரமா தூங்குற மாதிரி பில்டப் கொடுத்துட்டு இருக்கே?.. முதல்ல விடு என்ன..முதல்ல வ்விடு என்ன.. …” என்று அவனிடமிருந்து கழன்று கொள்ள, திணறித் திமிறி ஆயிரம் பிரயத்தனங்கள் செய்திருப்பாள் அவள்.
ஆனால் அதற்கெல்லாம் பிடி கொடுத்தானா கள்வன்?
அவளை தன் ஏக மனைவியாகவே இதயத்தில் வடித்திருப்பவனுக்கு, அவளது அருகாமை, கோபப் பேச்சு.. பேச்சினிடையில் அவன் தாடை மோதும் அவன் மூச்சு.. இதிலும் அவளது பஞ்சுத் தேகம் தரும் சுகம் என அனைத்தும் பிடித்திருந்தது அவனுக்கு.
அவளை விட்டுவிட மனமேயற்றவன், தாபம் சிந்தும் குரலில், “ம்ஹூஹூம் ம்முடியாது..” என்று மறுப்பாகத் தலையாட்டினான்.
“முடியாது?” – தலைசரித்து விழிகள் அகல கோபத்துடன் கேட்டாள் அவள்.
செக்கச் செவேலென சிவந்திருந்த அவள் அதரங்கள் அசையுமாற்றை பார்த்துக் கொண்டே, கிறங்கித் தவிக்கும் குரலில், மீண்டும் “ம்முடியாது”என்றான் சத்யன்.
அவளது வாய் மணம் வேறு, குழந்தைகளின் பால்மணத்தை ஒத்திருக்க, அதில் தன் முரட்டு அதரங்கள் பதித்து.. அவள் உமிழ்நீருடன் தன் உமிழ்நீரைக் கலந்திட..ஆசை பெருகி வழிந்தது அவனுள்.
மெல்ல மெல்ல.. அந்த கள்ளூறும் அதரங்களை நோக்கி அவன் ஈர்க்கப்பட்ட காந்தம் போல நகர, அவனது அத்துமீறலைத் உணரத் தொடங்கியவள்,
வேறுவழியின்றி அவனது உரேமறிய கழுத்துவளைவுக்குள் முகம் புதைக்கும் சாக்கில்.. அவனுடைய தோள்புஜத்தினை அழுத்தமாகக் கடித்து வைத்தாள்.
அவளது பற்தடம் பதிந்த அழுத்தம் தாளமாட்டாமல், வலியில் அலறியவன், அவளைத் தன் பிடியில் இருந்தும் விட்டான்.
அவனது வலி மிகுந்த தோள்புஜத்தை தடவிக் கொடுத்த வண்ணம், அவளை நோக்கி, “கனவில் மாதிரி.. அப்பிடி கட்டிப்பிடிச்சதும்.. நேர்லேயும் முத்தம் கொடுப்பேன்னு பார்த்தா.. இப்படி கடிச்சு வைக்குறீயேடீ ராட்சசீஈஈ…”என்று இரைந்த குரலில் கத்தினான் அவன்.
அவன் சொன்னதை எல்லாம் அவ்வளவாக கவனத்தில் கொள்ளாதவள், அவனை எச்சரிக்கும் தோரணையில், விழிகள் உயர்த்தி,
“தங்கமும் பணமும் கொடுத்து பஞ்சாயத்தைத் தான் உன்னால கணக்கு பண்ண முடியும்.. இந்த யௌவனாவை முடியாது.. உனக்கு இன்னைக்கு ராத்திரி மட்டும் தான் டைம்.. ஒழுங்கு மரியாதையா.. நாளை காலையிலே வாலை சுருட்டுட்டு ஓடிப் போயிரு..”என்று விட்டு அங்கிருந்து நகர,
அவனது சிந்தனையில் யௌவனாவின் எச்சரிக்கை மொழிகள் யாவும் பதியவேயில்லை.
கோபத்தில் அவள் வாங்கிய மேல்மூச்சு, கீழ்மூச்சு காரணமாக ஏறி இறங்கிய கொங்கைகளும், வீராப்பு வசனம் பேசிவிட்டு திரும்பி சென்ற போது அளவுக்கு அதிகமாக அசைந்தாடிய பிருஷ்டங்களுமே தான் அவன் சிந்தனையை முழுதாக ஆக்கிரமிக்கலானது.
கனவில் கண்ட அதே அங்க அளவுகளுடன் நிஜத்திலும் ஒரு பெண்ணால் இருக்க முடியுமா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவனுக்கு, இன்னும் தோள்புஜத்தில் வலியெடுப்பது போலவே இருந்தது.
தோள்புஜத்தை நீவி விட்டுக் கொண்டே, “இர்ருடீஈ.. கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை எங்கேயெல்லாம் கடிச்சு வைக்குறேன்னு பாரு” என்று கறுவிக் கொண்டே,
அவள் கொண்டு வந்து வைத்த பாலை அருந்தியவனுக்கு, கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இயற்கையாகவே கண்களைச் சுழற்றும் போல இருக்க,
மீண்டும் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டவனுக்கு, எப்போது ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றான் என்றே புரியாமல் போனது.
****
அன்றைய இரவு வானில் பௌர்ணமி நிலா… அன்றும் போல இன்றும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இருநூறு வருஷங்களுக்கும் மேலாக பழிவெறி நீர்த்துப் போகாத பதிவிரதையோ.. இந்நடுநிசியில் அரங்கேற்றப் போகும்.. ஒரு நரபலியை எண்ணி எண்ணி உச்சிகுளிர்ந்து போயிருந்தாள்.
ரௌத்திரத்துடன் கூடிய ஆனந்த தாண்டவம் ஆடி முடித்தவளுக்கு, அடுத்து செய்ய வேண்டிய முக்கிய வேலையொன்று பாக்கியிருந்தது.
அவளுடைய ஆத்மா சுமந்திருக்கும் பலநாள் வெறி.. இன்று தீரப்போகும் நாள்.
அவளது தேவதாவை அவளிடம் இருந்து பிரித்து, குழந்தையையும் அவளிடம் இருந்து பறித்த இராஜசிங்கனின் கடைசி வாரிசு கண்டியின் தம்பதிவனத்தை மிதித்த நாள்.
சத்யனின் உயிரை எடுத்து .. அவள் அவன் வம்சத்தையே வேரோடு கருவறுக்கப் போகும் நாள்.
அந்த தீய ஆத்மாவுக்குள் என்றுமேயில்லாமல் இன்று ஓர் சந்தோஷம் குடிகொண்டது.
பௌர்ணமி நிலவை.. இருள் மேகங்கள் மறைத்து, வெளிக்காட்ட, எங்கோ காட்டில் இருந்த ஓநாய்கள் கூட்டமொன்று.. அந்த பௌர்ணமி நிலவைப் பார்த்து.. ஆக்ரோஷமாக ஊளையிடத் தொடங்கியிருந்த நேரம்..
மரஞ்செடிகொடிகளும் கூட ஓரிரு கணங்கள் அமைதியாகி நின்றிருந்த வேளை..
இருநூறு வருஷங்களாக.. இராஜசிங்கனின் பொக்கிஷங்கள் அடங்கிய நிலவறையிலேயே நிறைந்து கிடந்த நந்தினியின் ஆத்மா நிலவறையை விட்டும்.. வெளியே வந்தது.
நிலவறையின் ஒளி ஊடுருவும் இண்டு இடுக்குளில் இருந்து.. ஒரு கரும்புகை மெல்லக் கிளம்பி.. ஒரு மனிதனின் உயரத்துக்கு மேலெழும்பி நிற்க…
மகாசேனரையே உயிராகக் கொண்டிருந்த பதிவிரதையான நந்தினி… ஆக்ரோஷத்துடன் வெளியே வந்தாள்.
அந்த ஆத்மா வெளியே வந்ததும், இருள் மேகங்கள் அசுர காற்றுக்கு வேகமாக அடித்துச் செல்லப்பட்ட,
ஸ்தம்பித்து நின்ற மரஞ்செடி, கொடிகள் எல்லாம் அந்த சூறைக்காற்றுக்கு பேய்த்தனமாக ஆடவாரம்பித்தது.
அந்தக் கற்திடலே.. அதிரும் படியாகக் கேட்டது.. கண்களில் பழிவெறி ததும்ப.. மூசு மூசு என்று மூச்சு விட்டுக் கொண்டே.. இடிஇடியென அவள் நகைத்த வெற்றிக் களிப்புச்சிரிப்பு!!
சத்யன் தம்பதிவனத்தின் எல்லையைத் தொட்டதை தன் ஆத்ம வல்லமையால் உணர்ந்து கொண்டவள் நகைத்த கொடூரச் சிரிப்பு.. இப்போது வரை அடங்கவுமில்லை; ஓயவுமில்லை.
வெகுநாள் பட்டினியாகக் கிடந்தவன், சாப்பாட்டைக் கண்டதும் பாய்ந்து உணவருந்துவது போல.. வெகுகாலம் பழிவெறியுடன் ஓலமிட்டபடியே நிலவறையின் இருளில் காலம் தள்ளியவள் இன்று பாய்ந்து சிரித்தாள்.
முடிவில்லாமல் சிரித்தாள்; அளவில்லாமல் சிரித்தாள்;சிரித்துக் கொண்டேயிருந்தாள்.
உடல் தான் மரித்துப் போகும். அழிந்து போகும்.
ஆனால் ஆன்மா? அது அழிவில்லாததது.
அதிலும் நந்தினியைப் போல தீராத பழிவெறி கொண்டிருக்கும் சாந்தியடையாத ஆன்மா… இந்த இருநூறு வருடங்களில் பார்க்கவே சகிக்க முடியாத கொடூரத்துடன் மாறிப் போயிருந்தது.
இருநூறு வருடங்களாக முடிந்திராத.. தலைவிரி கோலமாகத் தொங்கும் தலைமுடி அவளுடையது.
அதே சேலை.. இருநூறு வருடங்கள் கழிந்த பின்னும் அதே சேலையில் இன்னும் கூட.. ஜனிக்காமல் மரித்துப் போன குழந்தையின் இரத்தக்கறையும், இரத்த துர்வாடையும் பயங்கரமாக அவளைச் சூழ வீசிக் கொண்டே இருந்தது.
இராஜசிங்கனின் வாரிசு.. கண்டியின் தம்பதிவன எல்லையில் கால் பதிக்கும் வரை.. இந்த இருநூறு வருடங்களாக.. அதே நிலவறையில்.. தன்னைத் தானே அடைத்திருந்தவளுக்கு.. அந்த இருளிலேயே இருந்தவளுக்கு,
நிலவறையை விட்டும் மேற்பரப்பான கற்திடலுக்கு வந்ததும் பழைய நினைவுகள்.. கொழுந்து விட்டெரியலானது.
அதிலும் அவளது சுட்டெரிக்கும் கண்கள்..அன்று அவளது காதல்க் கணவனான… மகாசேனரின் பிரேதம்.. மன்னனின் கைக்கூலிகளால் அறுக்கப்பட்டு..
வீழ்ந்து கிடந்த இடத்தைக் கண்டதும், நந்தினியின் கண்களில்…. இரத்தம் வந்து கரை தட்டலானது.
ஆம், அந்த பிரேதாத்மாவின் விழிகளில் இருந்தும் ததும்பியது.. பலவீனமான இதயம் உடையவர்கள் பார்க்கக் கூடாதளவுக்கு கொடூரமான இரத்தக்கண்ணீர்.
கணவன் வீழ்ந்த இடத்தைக் கட்டியணைத்துக் கொண்டவள், மூச்சிரைக்கும் பெருங்குரலில் இரைந்து இரைந்து.. ஓலமிட்டுக் கொண்டு கதறி கதறி.. நிலத்தை அடித்து அடித்து அழுதாள் நந்தினி.
அவளது ஓலமிடும் அழுகைச் சத்தம் அந்த ஊரில் இருக்கும் மனிதக்காதுக்களைத் தவிர பிற ஜந்துக்களின் காதுகளை அடையவே செய்தது.
அதிலும் இரவில் உணவு தேடி கூட்டமாக அலையும் வௌவால்களுக்கு.. அவளின் ஓலம் பதற்றத்தைக் கொடுக்க, வானில் அலறியடித்துக் கொண்டே வேறு இடம் தேடி பறந்தன அவை.
மரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று அமைதித் தவம் யாசிக்கும் ஒன்றிரண்டு கோட்டான்களுக்கும் கூட.. நந்தினியின் ஓலத்தில் இதயம் குறுகுறுக்கலானது.
அதிலும் அவளைச் சுற்றி முப்பொழுதும் வீசும் இறந்த குழந்தையின் இரத்த வாடை.. அந்த இனிய இராட்சசனின் மென்மையான அன்பில் விளைந்த… ஒரே சொந்தமான குழந்தையும்.. இல்லாமல் ஆக்கப்பட்டதை.. நினைவு கூற,
சேலையைப் பிடித்துக் கொண்டு ..இதழ்கள் வளைய வளைய ஓங்கார ஓசையெழுப்பிக் கொண்டு அழுதாள் அவள்.
அவளது ரௌத்திரக் குரலில் இதயம் கிடுகிடுங்க காட்டுமுயல்கள் எல்லாம் புதர்களோடு பதுங்கவாரம்பித்தன.
தன் அகோரப் பற்களைக் கடித்துக் கொண்டு, “ப்பாவ்வீஈஈ.. .. ந்நாஆஆன்.. ப்பாவ்வீஈஈ.. என் தேவதாவின் உயிரைக் கொன்றவனின் வம்சாவளியை இதுகாறும்.. வ்வளரவிட்ட ந்நாஆஆன் ப்பாவ்வீஈஈ.. இராஜசிங்கனின் நேரடி வாரிசான சத்திய்யாஆஆதித்தன் இன்றோடு அழியப்போகிறாஆஆன். அதுவும் என்னால் அழியப் போகிறாஆஆன். ஹஹ்ஹஹ்ஹாஆஆஆ.. ஹஹ்ஹஹ்ஹாஆஆஆ”என்று அழுகையோடு வெடிச்சிரிப்புடன்.. சப்தமிட்டு நகைத்தாள் நந்தினி.
பழிவெறி ஊறித் திளைத்துப் போன பிரேதாத்மா அல்லவா? அந்தக் கொடூர எண்ணமே அவள் முகத்தில்.. முன்பிருந்த ஒளியை மறக்கடித்திருந்தது.
அவளது பழிவெறியில் மூழ்கி முக்குளித்திருக்கும் பாழும் கண்கள் குழிவிழுந்து, முகமும், இதழ்களும் கூட… பாளம் பாளமாக வெடித்து… நகக்கண்கள் கூட அருவெறுத்துத் தெரியுமளவுக்கு மாறிப் போயிருந்தது.
மகாசேனர் அணுஅணுவாக இரசித்து மகிழ்ந்த நந்தினி இவளல்ல.
இவள் குரோதமும், பழிவெறியும், வன்மமும், வஞ்சமும் என தீய எண்ணங்களில் இரண்டறக் கலந்து போயிருக்கும் ஒரு தீய ஆத்மா.
நந்தினி மனித சஞ்சாரமேயற்ற அந்த கற்திடலில் நின்றும்.. சந்தோஷ ஆவேசத்துடன் ஊரை நோக்கி நடந்தாள்.
அவள் வாழ்நாளில் இதுவரை சந்தித்திராத உச்சபட்ச சந்தோஷத்துடன் நடந்தாள்.
சாதாரண வெற்றுக்கண்களுக்கு.. ஒரு கரும்புகை.. கிளம்பி வருவது போல மட்டும் தெரிய, சூறைக்காற்றையும் கூட தன் நடையின் வேகத்தோடு ஈடுகட்டிய வண்ணம்… சிரிப்புடனேயே நடந்தாள் அவள்.
ஒரு தீய ஆத்மா கோபத்துடனும், நெடுநாள் கனவு நிறைவேறப் போகும் சந்தோஷத்துடனும் சிரிக்கிறது. அந்தக் குரலில் அகங்காரமும், திமிரும் கூடவே சேர்ந்தொலிக்கிறது.
அவள் ஒவ்வொரு தெருவைக் கடக்கும் போதும் கூட, தம்பதிவனத்தின் மனிதர்கள்.. நடக்கப் போகும் விபரீதம் அறியாமல் அசந்து தூங்கிக் கொண்டிருக்க, வீட்டுக் காவல்கள் பட்டென கண்விழித்து..
ஒரே நேரத்தில் கோரஸாக ஊளையிடத் தொடங்கியது.
அவள் தம்பதிவனத்தின் ஊர்க் கோயிலைத் தாண்டி ஆக்ரோஷமாக புறப்பட்டுக் கிளம்ப,
கோயில் மணிகள் எல்லாம் பேய்க்காற்றுக்கு தாறுமாறாக தானாக அடித்து அடித்து ஆடத் தொடங்க, சுழன்றடித்தது பேய்க்காற்று.
கோயில் வேப்பமரத்தடியில்.. ஒருக்களித்துப் படுத்திருந்த துறவறம் பூண்டிருந்த.. பொசுபொசுவென தாடி மயிர் அடர்ந்து வளர்ந்திருக்கும் ஒரே ஒரு துறவி மட்டும் சட்டென விழித்துக் கொண்டான்.
ஊரில் இருக்கும் அனைவராலும் ‘பைத்தியம்’ என்று விழிக்கப்படும் அவனுக்கு மட்டும்… அந்தப் பிரேதாத்மாவின் வஞ்சமும், கோபமும்.. அவள் விடும் உஷ்ணப்பெருமூச்சின் சத்தத்தில் தெரிய,
ஊரார்களோ… தம்மை நோக்கி வரும் தீவினை அறியாமல் சீராக துயின்றுகொண்டிருந்தனர்.
ஒரு சிறிதும் அஞ்சாமலேயே நின்ற அந்த பைத்தியக்காரத் துறவி… தன் இத்துப்போன துணிப்பையில் இருந்த உடுக்கையை எடுத்து… ஓயாமல் “திம்திம்” என்று அடித்துக் கொண்டே,
சங்கை எடுத்து.. இழுத்து ஊதவாரம்பித்தான்.
பௌர்ணமி இராத்திரிகளில் இந்த பைத்தியத்தின் “உடுக்கையும், சங்கும் சகஜம்” என்பதை ஏற்கனவே அறிந்திருந்த ஊரார்கள், அதை அசட்டை செய்தவர்களாக புரண்டு படுக்கவாரம்பித்தனர்.
அவளது அசுரத்தனமான வேகத்துக்கு.. பித்துப் பிடித்த துறவியின் உடுக்கை ஒலியும், சங்குச் சத்தமும்.. அவளது பழிவெறியை தெய்வீகத்தனமாகக் காட்ட,
அகன்ற விழிகளுடன் துறவியைப் பார்த்து.. சிரித்து மகிழ்ந்து கொண்டே போனாள் யௌவனாவின் வீட்டை நோக்கி.
யௌவனாவின் வீட்டு வாசலில் நின்றிருந்த போதே.. இராஜசிங்கனின் வாரிசின் இரத்தவாசனையை முகர்ந்தது அவளுடைய நாசி. அதில் அவளது கண்களில் கத்தி போல மின்னியது பழிவெறி.
சிறிதும் தாமதியாமல்… வீட்டின் கதவுத்துவாரம் விழியாக… ஒரு கரும்புகை போக உள்ளே நுழைந்த நந்தினி… அடுத்த சொற்ப விநாடிகளில்.. அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் சத்யனின் முன் நின்றிருந்தாள்.
அவளது கண்கள்… அதிமிதமான ரௌத்திரத்துடன் துயிலும் இராஜசிங்கனின் வாரிசைத் தான் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தது.
விலாக்களோ.. அவள் விட்ட பெரும் மூச்சில் ஆக்ரோஷமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
அதிலும் சத்யன் வேறு.. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் நேரடி வாரிசு வம்சாவளியில் வந்தவன் ஆதலால், ஸ்ரீ விக்கிரமனின் ஜாடை.. சத்யாதித்தனுக்கும் இருந்தமையானது.. சத்யனின் துரதிர்ஷ்டமே தான்.
இதோ அவன்!! தன் கணவனை.. உலகியல் செல்வத்தை பாதுகாக்க வேண்டி.. வெட்டிக் கொன்றவன்!! அதே ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்!!!
ஆயினும் இவன்??? இவன் அந்த குடிகார மன்னன் இல்லை என்றான போதும் கூட… அவள் இதயத்தில் ஊறிக் கொண்டிருந்த பழிவெறி.. அவனைக் கொன்று விடவே உந்தியது.
அவனை கொலைவெறி சிந்தும் கண்களுடன், தனங்கள் ஏறி இறங்க மூச்செடுக்க விளைந்து கொண்டே பார்த்தவள்,
ஆங்காரமான தொனியில் “என் ம்மகாசேனனை.. ஈஈஈவிரக்கமேயின்றி.. வெட்டிக் கொன்றவனின் வ்வம்சத்தில் வ்வந்து உதித்தவன்!! இன்னும் சொற்ப நாழிகைகளில் அவன் கதை முடியப் போகிறதூஊ… இராஜசிங்கனின் வம்சம் அழியப் போகிறதூஊஊ… என் சபதம் நிறைவுறப் போகிறதூஊஊ ”என்று கத்தியவளாக அவனை நெருங்கினாள்.
சத்யனின் வலிமையான கழுத்தை நோக்கி நந்தினியின் கைவிரல்களில் நகங்கள் நீள… அவள் சத்யனை நெருங்கிப் போனாள்.
அவளது குழிவிழுந்த பாழும் கண்கள்.. ரௌத்திரத்துடன் அகல விரிந்தது.
தனங்களோ ஏறி இறங்க.. மூசு மூசு என்று மூச்சுவாங்கியது. முடிந்திராத தலைக்கேசம் ஆக்ரோஷமனா காற்றில் பறந்து கொண்டிருந்தது.
ஆனால் ஒரு பிரேதாத்மா.. தன்னை பழிதீர்க்க வந்திருப்பதை அறிந்திராத அப்பாவி சத்யனோ… எதுவுமே அறியாதவனாக ஆழ்ந்த நித்திரையின் வசம் ஆட்பட்டிருந்தான்.
அவன் கழுத்தை நெருங்கி..நெரிக்கப் போன அந்த அணுவளவு இடைவெளியில்.. நந்தினியால் ஏதோ ஒரு காரணத்தால் சத்யனைத் தொடவே முடியாமல் போனது.
சத்யனின் உடலில் இருந்து வந்த ஒரு வகையான அமானுஷ்ய சக்தி, அவள் விரல்களில் மின்சாரத்தைப் பாய்ச்ச.. அவனை மேற்கொண்டு நெருங்க விடாமல்.. அது அவளைத் தள்ளிவிடலானது.
சத்யனை விட்டும் ஓரெட்டு பின்னாடி வந்து நின்றவளுக்கு, ஒரு நிமிடம் அதிர்ச்சியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
ஓரிரு முறைகள் தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு.. சத்யனை மீண்டும் மீண்டும்… அவள் பழைய ஆக்ரோஷத்தோடு நாடிப்போன போது… அவனுள் இருந்து வந்த ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி.. அவளைத் திரும்பத் திரும்ப தள்ளிவிடலானது.
கோபத்தில் அதிர்ந்து விழித்தவள், சத்யனையே கொலைவெறி கிஞ்சித்தும் குறையாமல்.. வெறிக்க வெறிக்கப் பார்த்தபடி சொற்ப நாழிகைகள் நின்றாள் நந்தினி.
ஓராயிரம் மைல் தொலைவில் இந்தியாவில் சத்யன் இருந்த போது.. அவன் கனவில் புகுந்து, அவன் மனதை யௌவனாவின் பால் சாய்த்து இலங்கை அழைத்து வர முடிந்தவளுக்கு,
சத்யன் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தும் அவனது சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாமல் போனது.
சட்டென தன் முயற்சிகளை நிறுத்தியவள், வானை நோக்கி.. காளி மாதாவை மனமார நினைத்த வண்ணம், “வத்ரகாளீஈஈஈ.. இது தான் உன் பக்தைக்கு நீ தரும் மரியாஆஆதைய்யாஆ.. இத்தனை கால தவம்.. என் பக்தியை உனக்கு உணர்த்தவில்லையாஆஆஆ?? எனக்கு நேர்ந்த கதியை கண்ட சாட்சியாக நீயிருந்தும்.. இவனை பாதுகாப்பது உத்தமமாஆஆ?? நான் கொண்ட பக்தி உண்மையாகில்.. என் சபதத்தை நிறைவேற்ற வல்லமை தந்துவிடூஊஊ”என்று இரைந்து பிரார்த்திக்க,
முழு தம்பதிவனமே கிடுகிடுங்கச் செய்த வண்ணம் பேரிடியாக முழங்கியது ஓர் இடிமுழக்கம்.
அந்த இடிச்சத்தத்துக்கும் கூட விழிப்புத்தட்டாதளவுக்கு.. அத்தனை ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றிருந்தான் அப்பாவி சத்யன்.
அந்த இடிமுழக்கத்தையே காளிமாதாவின் அருளாகக் கொண்டவள், மீண்டும் ஒருமுறை சத்யனை நாடிச் சென்றாள்.
இம்முறையோ.. அவனை நெருங்கவே முடியாத வண்ணம் சத்யனைச் சுற்றி ஒரு பனிவளையம் மிளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்கூடாகக் கண்டாள் அவள்.
அதையும் தாண்டி காளிமாதாவின் அருள் பெற்ற தன்னை எந்த சக்தியும் ஒன்றும் செய்து விட முடியாது என்ற மமதையுடன்.. தன் எதிராளியின் சக்தியைத் துச்சமாக நினைத்துக் கொண்டு.. சத்யனை அவள் நெருங்க நாடிய போது தான் அச்சம்பவம் நடந்தேறியது.
சத்யனின் பாதுகாப்பு வளையமான.. சாமானிய கண்களுக்குத் தெரியாத.. அந்தப் பனிவளையத்தை அவள் நெருங்கிய போது, அது அவளது உடலை எரித்தது.
கைகளில் எல்லாம் தீக்காயம் பட்டது போல எரிந்து..அந்தக் காயங்களில் இருந்து ஆவி பறந்து..உடலெல்லாம் தகித்தது நந்தினிக்கு.
சத்யனை ஏதோ ஓர் சக்தி பாதுகாப்பதை உணர்ந்தாள் அவள்.
அந்த சக்தி மகோன்னத சக்தி என்பதை அறியாதவள், கைக்கருகில் நிற்கும் இருநூறு வருட சபதத்தை, பழிவெறியை தீர்த்துக் கொள்ளத் தடையாக இருக்கும் அந்த அமானுஷ்ய சக்தியைக் கண்டு விடும் வெறியில் கத்தினாள் நந்தினி.
அவளது கோபாவேசத்தின் காரணமாக, அவள் குரல் எல்லாம் இரட்டை பெண்கள் பேசுவது போல அட் அ டைமில் எதிரொலிக்க, “ய்யாரதூஊஊ?? என் சபதத்தை நிறைவேற்ற வ்விடாமல் தடுப்பதூஊஊ? ய்யாரதூஊ? இவன் உயிர் என் கையில் தான் போக வேண்டும் என்பது வ்விதீஈ… ய்யார் குறுக்கே நிற்பதூஊஊ?”என்று கத்தியவளின் கண்கள் எந்தவிதமான சக்தியையும் கண்டுகொள்ளவேயில்லை.
அந்த அமானுஷ்ய சக்தி, அவள் கண்ணெதிரே வராமல் ஒளிந்து நின்று சடுகுடு ஆடுவது போலத் தோன்ற.. நந்தினியின் சீற்றம் இன்னும் அதிகமானது.
அந்த சினத்தில், “ம்முகத்துக்கு ந்நேராக நின்று எதிர்க்கத் தெரியாத கோழையே.. ஒதுங்கிப் போய் விடு”என்று எச்சரித்தவள், அந்த அமானுஷ்ய சக்தியின் பிரசன்னத்துக்காக ஓரிரு கணங்கள் நிதானித்து நின்றாள்.
அவளது கண்களில் எந்த அமானுஷ்ய சக்தியும் தோன்றாமல் போகவே.. அந்த அமைதியையே.. அந்த சக்தி ஒதுங்கிப் போய் விட்டதாகக் கொண்டவள்,
நிதானமேயின்றி.. சத்யனைக் கொன்றுவிடும் வெறியுடன் மீண்டும் முன்னேறலானாள்.
இம்முறையோ.. ஓரடி எடுத்து வைக்கும் போதே.. சத்யனின் உடலில் இருந்து ஒரு நெருப்பு வளையம் எழுந்து.. அவளைத் அடித்துத் தள்ளிவிட, இரண்டெட்டுத் தள்ளிப் போய்.. நிலத்தில் வீழ்ந்தாள் நந்தினி.
இத்தனை பெரிய சக்தி?? அதுவும் சத்யனின் உடலில் இருந்து வருவது எப்படி? காரணம் அறியாமல் குழம்பிப் போனவளுக்கு, இது தன் அமானுஷ்ய சக்தியை விடவும் ஓர் மகோன்னத சக்தி என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது.
இந்த மகோன்னத சக்தியை வெளிக் கொண்டு வர தன் கோபம் சரிவர மாட்டாது என்று புரிந்து கொண்ட மாய நந்தினி,வேண்டுமென்றே கற்திடலில் அழுதது போல பெரும் ஓலமிட்டு மீண்டும் அழத்தொடங்கினாள்.
தேம்பித் தேம்பியழுத வண்ணம், “இரு… நூறு வருடங்களுக்கு முன்.. இவன் மூதா.. தையால் என் காதல்க்க… ணவனை இழந்தேன்.. நான் என் கணவன் மீது காட்டிய அன்பில் விளைந்த குழந்தை.. யையும் இழந்தேன்.. என் ப.. பதியைக் கொன்றவனின் வாரிசை அழி.. க்க..வத்ரகாளியே.. எனக்கு இவனைக் கொல்ல வல்ல.. மை தந்திருக்கும் போது என்னை தடுப்பது ய்யாஆஆர்??என் பழிவெறி தீர்க்க விடாமல் தடுப்பதும் ய்யாஆஆர்?” என்று அவள் இரத்தக் கண்ணீருடன் கேட்க,
அங்கணம் வரிவடிவமாகத் தோன்றிய ஓர் முகத்தில் அதிர்ந்து தான் போனாள் நந்தினி.
அந்த வரிவடிவத்துக்கு சொந்தக்கார முகம் இவளுடைய ஏகபத்தினி விரதன் மகாசேனரின் முகம்.
அது அவளது தேவதாவின் முகம்.
அவளது தேவதா ரொம்பவும் மாறிப் போயிருந்தான். அவன் முகத்தில் தெய்வீகக்களையாம்சம் ஜெகஜோதியாக மிளிர்ந்து கொண்டிருந்தது.
ஜடாமுடியுடனும், கழுத்தில் உருத்திராட்ச கொட்டையுடனும், மார்பு, கழுத்து, கைச்சந்து, பரந்த நுதல் எங்கனும் பட்டையுடனும்.. அருள் ததும்பும் முகத்துடனும் அப்படியே பார்ப்பதற்கு ஈசனை ஒத்திருந்தது அவன் முகம்.
என்ன சத்யனை பாதுகாத்தது அவளது கணவனா? அதிர்ச்சியில் உணர்வுகள் மறுத்தவளாக நின்றாள் அவள்.
அவனைக் கண்டதில் காதலும், அதிர்ச்சியும், ஏமாற்றமும் போட்டி போட அவள் நிற்க,
கண்களில் காதல் ததும்ப, மிக மிக நிதானமாக அவன் சொன்னான், “இங்கேயிருந்து சென்று விடு நந்தினி” என்று.
அவன் உதிர்த்த சொற்களில் அதிர்ந்து விழித்தாள் தீய எண்ணம் கொண்ட நந்தினி.
தேவதா வருவான்.
ஏகாந்த இரவில்…வா தேவதா!
[6]
இருநூறு வருடங்கள் பழைமையான… தன் கணவனால் வடிவமைக்கப்பட்ட.. இராஜசிங்கர்களின் பரம்பரைப் பொக்கிஷங்கள் அடங்கிய,
ஒளி ஊடுபுகாத.. இருள் அடர்ந்த… பாழும் நிலவறைக்கே, கோபமும், ஆவேசமும்… காதலுடன் சரிவிகிதசமனாகப் போட்டி போட…
வந்திருந்தவள்.. தன் சபதம் நிறைவேறாது போக தன் கணவனே காரணம் என்றானதும்.. அந்த நிலவறை முழுவதும் சற்றே அதிர, அடித்தொண்டையிலிருந்து குரலெழுப்பி, “ஆஆஆஆஆஆஆ!!!” என்று கத்திய வண்ணம்.. இயலாமையில் வெடித்து அழுதாள் நந்தினி.
ஓலமிட்டுக் கொண்டு அழுது கொண்டேயிருந்தாள் நந்தினி.
முன்னாடி காளி சிலையோ, அவளது அழுகைக்கும் கூட,தன் உணர்ச்சியை மாற்றாது.. பழைய மாறாத ரௌத்திரத்துடன்.. விழிகள் அகல அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தது.
நிறைவேறாத சபதத்துடன் திரிந்து கொண்டிருக்கும் பிரேதாத்மாவுக்கோ..நெஞ்சமெல்லாம் எரிதழல் மூட்டியது போல எரிந்து கொண்டேயிருக்க, கால்கள் தள்ளாடி.. நிலத்தில் இரண்டாக மடிந்தமர்ந்தவள்,
தன் அகோர ஆன்மாவில் இருந்து வரும் உஷ்ணப்பெருமூச்சை ‘மூசுமூசு’ என்று எடுத்து விட்டுக் கொண்டே.. கண்ணீர் விட்டாள்.
அவள் இத்தனை நாளாகக் கொல்லத் துடிதுடித்துக் கொண்டிருந்த.. ‘ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் வாரிசு’ அவள் கண் முன்னால் இருந்தும்… அவளால் அவனை ஒன்றுமே செய்ய முடியாமல் போனது
எல்லாம் அவனால். எல்லாம் அவளது தேவதாவால்!!.
மண்டியிட்டமர்ந்திருந்தவளின் கூந்தல்.. அவளது வதனத்தை மறைத்து விழ,
கேட்பார் நெஞ்சம் திடுக்கிட்டுப் போகும் வண்ணம் அகோர ஒலியுடன், மூச்சை இழுத்து இழுத்து… தேம்பித் தேம்பியழுது கொண்டிருந்தவளின் கண் மடல்கள் சிவந்து வீங்கிப்போயிருந்தது.
சட்டென தலை உயர்த்தி காளிமாதாவைப் பார்த்தவள், சுட்டுப் பொசுக்கும் விழிகளுடன் காளியை நோக்கி,
ஒவ்வொரு வார்த்தைக்கும் பழிவெறியுடன் இணைந்த அழுத்தம் கொடுத்தவளாக,
“க்காளீஈஈஈ… என் சபதத்துக்கு குறுக்கேஏஏ.. அவ்வரே வந்து நின்றால் ந்நான் என் செய்வ்..வ்வேன்? உன் பக்தையும் தான் என் செய்..வ்வாள்? இந்தப் பதிவிரதையும் என் செய்வ்வாஆள்?”என்று அவள் கேட்க, அந்த பாழும் நிலவறையில் மயான நிசப்தம் நிலவிய வண்ணமே இருந்தது.
காளிச்சிலையின் ரௌத்திரமும் தணியவில்லை; நந்தினியின் எரிமலை சீற்றமும் அது போலவே கிஞ்சித்தும் குறையவேயில்லை.
ஆனால் அவள் விட்ட மூச்சுக்கள் மட்டும் பெருந்தொனியில் அந்த நிலவறை முழுவதையும் நிறைத்துக் கொண்டேயிருந்தது.
அக்கணம், நந்தினியின் ஒட்டுமொத்த சிந்தனையைக் கலைக்கும் வண்ணம் கேட்டது ஒரு ஏகாந்தக் குரல்!!
“நந்தினி!!!”என்றழைக்கும் காதல் தலைவனின் மந்தகாசம் சிந்தும் குரல்!!
அந்தக் குரலில்.. நெஞ்சமெல்லாம் சிலிர்த்தடங்க.. இதுகாறும் பொங்கிய சீற்றம் போய்.. காதல் கிளர்ந்தெழுந்தது நந்தினியின் நெஞ்சத்துக்குள்.
சட்டென தன் பார்வையை நிமிர்த்திப் பார்த்தாள் நந்தினி.
அங்கே அகன்ற கால்களுடன்.. இடுப்பில் இரு கைகளை வைத்த வண்ணம், அதே உரமேறிய தோள்புஜங்களும், பரந்து விரிந்த திண்ணிய மார்போடும் நின்றிருந்தான் அவளுடைய இனிய தேவதா!!
அவளுடைய ஏகபத்தினி விரதன் ‘மகாசேனன்’!!
கழுத்தைத் தாண்டி வளர்ந்த ஜடாமுடியும், உருத்திராட்ச மாலையும் கொண்டு.. பார்ப்பதற்கு ‘திரிபுரம் எரித்த பெருமான்’ சிவனைப் போலவே காட்சி தரும் மகாசேனன்!!
அவன் ஜனித்து இருந்த போதினும் பார்க்க, மரித்த பிறகு அவன் கொள்ளை அழகாக மாறிப் போயிருந்தான்.
முகத்திலே ஒரு சாந்தமும், ஒளிவட்டமும் அவனைச் சூழ வீசிக் கொண்டேயிருந்ததை அவதானித்தாள் நந்தினி.
கூடவே, அவனது வாகனம் போல.. நெற்றியிலே ஒற்றைக் கொம்பு வைத்த.. வெள்ளை வெளேரென்ற… இரு இராட்சத இறக்கைகள் கொண்ட ஒரு வெண்புரவி அவன் அருகாமையில் நின்றிருப்பதையும் கண்டாள் அவள்.
தன் மனைவியான நந்தினியையே…இமைக்காமல் காதலுடன் பார்த்துக் கொண்டேயிருந்தவனின் கண்களோரம் நீர் ததும்பியிருந்தது.
அவன் முன்னாடி இருப்பது அவனது பத்தினி அல்லவா?
கண்களில் காதல் தழும்ப தழும்ப, மிருதுவாக, “நந்.. தி… னீஈ” என்றான் மீண்டுமொருமுறை.
அந்த ஒற்றை அழைப்பில் கரைபுரண்டு போனது ஓர் காட்டாற்று வெள்ளம்.
எங்கிருந்து தான் கணவன் மீது இத்தனை பாசத்தை ஒளித்து வைத்திருந்தாளோ அவளும்?
பழைய வன்மம் எல்லாமும், ‘அனல் மேல் இட்ட பனித்துளி போல’ அவள் இதயத்தில் இருந்த இடம் தெரியாமல்.. காணமலாகிப் போக,
ஓடோடி வந்து.. அந்த ஈசனின் மறு அம்சமான தன் கணவனை.. மார்போடுக் கட்டித் தழுவி கொண்டாள் நந்தினி.
இத்தனை வருடகாலங்களாக.. காணாதிருந்து கண்ட தலைவனிற்காக துளிர்தத அன்பு…
இருநூறு வருட கால பிரிவு என எல்லாமும் அவன் பால் ஊற்றெடுத்த கோபத்தை இல்லாமலாக்கியது.
காலம் காலமாக அவன் மேல் அவள் வைத்திருக்கும் காதல்… ஒட்டுமொத்தமாக.. அவளை வாட்டிய தினுசில் கணவனின் மார்போடு இன்னும் இன்னும் ஒன்றியவளின் கண்கள் வடித்த கண்ணீர் அவனது வெற்று மார்பை நனைக்கத் தொடங்கியது.
அவன் நெஞ்சம் அவளுக்காகக் கனியத் தொடங்கியது.
அதிலும் தன் ஆருயிர் நந்தினி விசும்புவது தாங்கமாட்டாத தேவதா,தன் நந்தினியை இதயத்திலிருந்து பிரித்து எடுத்தவன், அவள் கண்ணீரைத் துடைக்க நாடி… அவள் கன்னம் தொட்டான்.
தொட்டதும் இதுவரை நேர்ந்திராத ஓர் அதிசயம் நிகழ்ந்தேறியது.
பாளம் பாளமாக வெடித்திருந்த அவளது முகம், முன்பிருந்ததிலும் பார்க்க யௌவனமாக மாறத் தொடங்கியது.
பழிவெறியில் திளைத்துப் போறியிருந்த அவளது குழிவிழுந்த கண்களில், கருணையும், அன்பும், காதலும் ஒருசேர அழகாக மிளிரலானது.
ஒரு பெண்ணுக்கு அழகு சேர்ப்பதே அவள் கண்களில் ஒளிரும் கருணையும், அன்பும் அல்லவா??
நந்தினி.. தேவதாவின் எதிரில் ஓர் பெரும் பேரழகியாகத் தெரியலானாள்.
இதுவரை தலைவிரி கோலமாக இருந்த கூந்தல் எல்லாம்.. பளபளப்பாக மாறி… அவளில் இருந்தும் ஒரு தெய்வீக ஒளி வீசவும் செய்தது.
அவள் உடுத்தியிருந்த கையில்லாத மார்புக் கச்சை கொண்ட கந்தலான சீலை.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறி.. உயர்ரக பட்டுச்சீலையாக மாறத் தொடங்கியது.
அவளது நகக்கண்களில் இருந்த அலங்கோலம் சிறுகச் சிறுகப் போய்.. சிவந்த வெண்ணிற நகங்களும்..புஷ்டியான விரல்களும் என… சுரூபினியாக மாறத் தொடங்கினாள் அவள்.
அவளுக்குமே.. கணவனின் நெருக்கமும்.. தன் உயர்ந்த செப்பினை போன்ற அழகிய தனங்கள்.. அவன் திண்ணிய மார்போடு அழுந்துப்பட்டதில்.. ஒரு கிறக்கமும் சேர்ந்து தோன்ற, கணவனின் கழுத்தோடு கையிட்டுத் தன்னை நோக்கி இழுத்தவள்,
அவன் கொவ்வைச் செவ்வாயை.. காதலுடன் கௌவிக் கொண்டாள்.
அவளது ஆருயிர் தேவதாவின் இதழ்கள்.. மனைவி காட்டிய காதலில் மெல்ல விகசித்தது.
இத்தனை ஆண்டுகள் ஆகியும்.. இன்னும் மாறாத அவள் நேசத்தில் உள்ளம் பூரிப்படைய,
அவளது சிற்றிடையூடு.. தன் அகன்ற கைகளை இட்டு தன்னோடு இன்னும் சேர்த்து அணைத்துக் கொண்டவன், மனைவியின் இதழ்களில் ஏகபோக உரிமை காட்டத் தொடங்கினான்.
இனிய இராட்சசனின் உமிழ்நீர், அந்த யௌவனப் பெண்ணான நந்தினியின் உமிழ்நீருடன் கலக்கத் தொடங்கியது.காதல் கொண்ட இரு உள்ளங்களின் நாவுகளும் சுழன்று ஒன்றை ஒன்றைத் தழுவி… நாவுச்சண்டை போட, நந்தினியின் கண்களில் ஒரு காதல் மயக்கம் குடிகொண்டது.
மகாசேனனோ.. மனைவி காட்டிய உன்னத அன்பில் சர்வமும் மறந்து.. அவள் வேண்டும்.. இன்னும் வேண்டும் என்று உருகிப் போனவனாக, கண்கள் மூடி தலை சரித்து.. அவள் இதழ்களில் சுரந்த கள்ளினை சொட்டுவிடாமல் பருகிக் கொண்டேயிருந்தான்.
காதலோடு கணவனுடன் ஒன்றிக் கொண்டிருந்த வேளை, காதல் ஏக்கம் அவளுள் பெருந்துயரத்தைக் கொடுக்க, அவனில் நின்றும் தன் அதரங்களை பட்டென்று விடுவித்துக் கொண்டாள் நந்தினி.
அந்த அதரங்களின் துண்டிப்பில் என்ன ஏதென்று தெரியாமல் பதறிப் போன காதல்க் கணவன் அவளது முகத்தையே பதற்றத்துடன் ஏறிட்டான்.
கணவனின் உச்சபட்ச பதற்றத்தைக் காணும் போதே.. மையலுடன் வானில் பறந்தாள் தையல்.
கண்மை அஞ்சன விழிகளை பெரிதாகச் சுழற்றிக் காட்டியவள், மனம் மயக்கும் இனிய குரலில்,
தன் அத்தனை ஆற்றாமையையும் தலைவனுக்கு வெளிப்படுத்தி விடும் ஏக்கத்துடன், “உங்கள் நந்தினியைக் காண இப்போது தான் மனம் வந்ததா? இருநூறு வருடங்களாக ஏங்கித் தவித்தேனே? இது போல.. எத்தனை கண்ணீர் வடித்திருப்பேன்? அப்போதெல்லாம் எங்கு சென்றீர் நீர்? ஏன் என்னை விட்டும் பிரிந்திருந்தீர்?”என்று கேட்டவள், முகத்தை சற்றே தூக்கி வைத்துக் கொள்ளவும் செய்தாள்.
மனைவியின் பாராமுகம்.. அந்த இனிய இராட்சசனின் இதயத்தில் முள்ளென தைத்தது.
அவனை விட்டும் திரும்பிய அவள் முகத்தை.. தன்னிரு கைகளிலும் ஏந்திக் கொண்டான் தேவதா.
அப்போதும் மன்னவனைப் பாராமல் குனித்தே இருந்தது அவள் கண்கள்.
அதில் வேதனை கொண்டவன், ஏகாந்தக் குரலில் அவளை அழைத்தான்.
“நந்தினி.. என்னைப் பார்.. தயவு செய்து என் கண்களைப் பார்”என்று அவன் காதல் பித்து அதிகமாகி வலியுறுத்திச் சொல்ல, அந்த காந்தக் குரலில் கட்டுப்பட்டவளாக மெல்ல விழியுயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள் தலைவி.
அந்தக் கண்களில் அப்படி என்ன தெரிந்ததோ?
ஒரு கணம்.. இருநூறு வருட காலமாக அவள் வளர்க்கும் பழிவெறி யாகம் மறந்தவளாக, அவன் விழிகளோடு தன் விழிகள் கலந்தவளாக ஸ்தம்பித்து நின்று போனாள் மங்கை.
அவன் கண்களில் அவளுக்கான காதல்.. மலையளவு கொட்டிப் போயிருப்பதைக் கண்ணுற்ற பின்னரும் கூட.. அவளால் எங்கணம் பேச முடியும்?
அவன் வலி சுமந்த விழிகளுடன் பின்வருமாறு சொன்னான்.
“என்ன? நானுன்னை விட்டுப் பிரிந்திருந்தேனா? சொல்? நீ தான் என்னை விட்டும் பிரிந்திருந்தாய் நந்தினி.. நீ இங்கிருக்க வேண்டியவளா என்ன? நானும், நீயும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த.. அபரிமிதமான காதலால்…. அர்த்தநாரீஸ்வரரின் அம்சமாக.. இரண்டறக்.. கலந்திருக்க வேண்டிவர்கள்.. நான் சிவனின் அம்சமாகக் கலந்தது போல… பார்வதியின் அம்சமாக கலந்து என்னோடு சேர்ந்திருக்க வேண்டியவள் நீ!!…” என்று சொன்ன போதிலும் கூட அவன் கைகள்.. அவளது கன்னங்களை விடவேயில்லை.
மெல்ல அந்தக் காளிச்சிலையைக் கண்களால் காட்டியவன், சிறு புன்னகையுடன், “உன் சபதத்தால்.. இதோ இருக்கிறாளே ரௌத்திரப் பார்வதி!! இந்த ரௌத்திரப் பார்வதியாகவே முழுநேரமும் மாறி விட்டாய்.. நீ சுமந்த பழிவெறியை ஒரு நாள் துறப்பாய்.. தூய உள்ளத்துடன் என்னைத் தேடி வருவாய் என்று காத்திருந்தேன்.. ஆனால் நான் உன் மேல் வைத்திருந்த காதலினால்.. உன்னைத் தேடி வந்திருக்கிறேன் நந்தினி.. இப்போதேனும் சாந்தமாகு..” என்று மனைவியின் கோபம் தணிக்க, அழகுறவே எடுத்துச் சொன்னான் அவன்.
இதுவரை.. கணவனின் அண்மையில் பழிவெறி பற்றி சுத்தமாக மறந்து விட்டிருந்த நந்தினிக்கு, “நீ சுமந்த பழிவெறி” என்று சொன்னதும் பழையன எல்லாம் ஞாபக இடுக்கில் வந்து செல்லலானது.
அதிலும் அனைத்தும் கைகூடி வரும் நேரம் வெண்ணெய் தாழியை உடைத்தாற் போன்ற கணவனின் செய்கையில், கோபம் பொத்திக் கொண்டு வந்தது அவளுக்கு.
தன் கன்னம் தாங்கும் அவன் கைகளை ஆத்திரத்தில் தள்ளிவிட்டவள்,
அகன்ற விழிகளுடன், கோபத்துடன், “ஏன் அவ்வாறு செய்தீர்கள்? இத்தனை வருட சபதமும், வன்மமும், பழிவெறியும் தீரும் தருவாயில் ஏன் அவ்வாறு செய்தீர்கள்? நீங்கள் குறுக்கிட்டிருக்கா விட்டால் இந்நேரம் என் ரௌத்திரம் தணிந்திருக்கும்.. நீர் சொன்னதைப் போலவே சாந்தமாகியிருப்பேனேஏஏ?” என்று சொன்னவள், கணவனின் முகம் பாராமல் புறமுதுகிட்டு நின்று கொண்டாள்.
மனைவியின் கோபம்.. அது சிறுபிள்ளைக்கு ஒப்பானது. எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வாள் என்று தோன்ற.. அந்த ஜடாமுடிக் காரன்.. வரட்டுக் கௌரவம் பாராமல்.. அவளை நாடியே போனான்.
அவளது மெல்லிய தோள் தொட்டு தன்னை நோக்கி திருப்பியவனாக, “தவறு நந்தினி” என்று மட்டும் சொன்னான்.
“எது த்தவறூஊஊ?”-சீற்றம் மாறாமலேயே உடல் திருப்பாமல்.. தலையை மட்டும் அவனை நோக்கி திரும்பியவள் கேட்டாள்.
இப்போது பழிவெறி ததும்பிக் கொண்டிருக்கும் கண்கள், முன்னொரு கால் முப்பொழுதும் கருணையில் நிறைந்து கிடந்ததை நினைவு கூர்ந்தவனாக,
“உன் பழிவெறி.. அது தவறு!! .. இருநூறு வருடங்களாக வன்மம் சுமந்திருப்பது அதுவும் தவறு!!! .. ஈ, எறும்புக்குக் கூட தீங்கிழைக்காத என் காதல் நந்தினியா இது? என்று எண்ணவும் தோன்றுகிறது?” என்றான் அவன்.
தன் செயலை தவறென்று சொல்லும் தேவதாவின் மேல் கோபம் பிறக்க, மீண்டும் தலை திருப்பிக் கொண்டவள், அவன் முகத்தைப் பார்க்கவில்லை.
அவனது முகம் கண்டால்.. தன் சபதம் கலைந்து விடும் என்ற பயமோ? அப்படித் தான் போலும்.
விட்டத்தை வெறித்துப் பார்த்தவளாக இரைந்த குரலில், “ஆஆஆம்.. ஈ, எறும்பு கூட தீங்கு இழைக்காத உங்கள் நந்தினீஈஈ.. அந்த இராஜசிங்கனுக்கும் தான் என்ன தீங்கிழைத்தாள்?? அவனின் கொடூர செயலால் உங்களை இழந்தேன்.. என் குழந்தையை..இழந்தேன்..என் வாழ்க்கையையும் இழந்தேன்!! ”என்றவள் இறுதியில் துக்கம் தொண்டையை அடைக்க, மௌனமாக கண்ணீர் விடலானான்.
மனைவியைத் தேற்றும் வழிவகை அறியாது நின்றவனுக்கு, கண்கள் துக்கத்தில் பனித்தது.
ஆக்ரோஷ விழிகளுடன் திரும்பியவள், “என் வ்வம்சத்தை அழித்த, இராஜசிங்கர்களின் வ்வம்சமும் அழிய வேண்டும்.அவனை நான்.. உங்களை இழந்த போது.. என் ஆத்மா எப்படி துடிதுடித்ததோஓஒ.. அதே வலியுடன் என் கைகளால் துடிக்கத் துடிக்க கொல்ல வேண்டும்… அப்போது தான் என்னுள் வ்வெந்து தணியும் கோபமும் நீர்த்துப் போகும்..”என்றாள் அவன்.
அந்தப் பேச்சே அவனுக்கு அத்தனை உவப்பாக இல்லை என்பதை.. தேவதாவின் மெல்ல மெல்ல விறைத்த முகம் காட்டிக் கொடுக்கலானது.
யாராலும் அசைத்துப் பார்க்காத திடகாத்திரமான குரலில், “அது நான் இருக்கும்வரை ந்நடக்காது ந்நந்தினி… இராஜசிங்கர்களின் விசுவாசி..அவர்களுடன் இருக்கும் வ்வரை நடக்காது.. இந்த மகாசேனன்.. அதற்கு விட மாட்டேன்..” என்று சொல்ல திடுக்கிட்டுத் திரும்பினாள் நந்தினி.
அவனுக்காக அவள் சபதம் ஏற்று நிற்க, அந்த சபதத்துக்கு இடையூறாக இருப்பது கூட அவனே தானா?
உணர்ச்சியற்ற முகத்துடன் மனைவியைப் பார்த்தவன், கட்டளை இடும் தொனியில்,
நெற்றிக்கண் திறக்காத குறையாக, சினத்துடன்,
“என் ம்மன்னர் சத்யாதித்த இராஜசிங்கரின் காலடிப்பட்டு இம்மண்ணில் புதைந்திருக்கும் பொக்கிஷங்கள் வ்வெளிவர வ்வேண்டும் என்பது வ்விதி!!அது நடந்தே த்தீர வ்வேண்டும்.!! அவருக்கு தீயசக்திகளால் சின்ன தீங்கு நேர்ந்தாலும் வ்விட ம்மாட்டேன்!!! என் மனைவியாக நான் காதல் கொண்ட பெண்ணாக இருந்ததில் அவரை.. நீ நெருங்க விடாமல் செய்து வேடிக்கை பார்த்தேன்.. இதே இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தாஆஆல்…”என்றவன் சற்றே தன் கோபத்தை மட்டுப்படுத்தி ஒரு கணம் நிறுத்தி விட்டு,
ஆசுவாசமான குரலில், “அந்த இடமே… பஸ்பமாகியிருக்கும்.”என்று அவன் சொல்ல,தேவதாவின் சீற்றத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் நந்தினி.
அவன் மீது பொல்லாத கோபம் மீதூறியது அவளுக்கு. அவனுக்காக அவள் பழிவெறி கொண்டிருக்க,, கணவன் இராஜசிங்கர்களின் பக்கம் சாய்வது எவ்வகையில் ஞாயம்?
கணவனின் மொழிகள் தனக்கு எதிராகிப் போனதில்.. கண்களில் இருந்தும் வழிந்தது உஷ்ணமான கண்ணீர்.
விழித்திரை கலங்கி மங்கலாகித் தெரிய, இயலாமை மிகுந்த ஸ்வரத்தில், வயிற்றைத் தொட்டவளாக,
“நீங்… கள் காட்டிய அன்பில் விளை.. ந்த உன்னதக்குழந்தை… என் குழந்தையும், நீங்களுமே..உலகென்று எண்ணி வாழ்ந்தே… னே?? என் வாழ்க்கையை அழித்த கயவர்.. கள் இராஜசிங்கர்கள்..அவன் வாரிசுக்கு நீங்கள் துணைநிற்பதா??”என்று ஆற்றாமையுடன் கேட்டாள் நந்தினி.
தேவதா உடனடியாக எந்தப் பதிலுமே சொல்லிவிடவில்லை. ஆயினும், மனைவியின் கண்ணீர்.. அவன் மனதைச் சுட்டது.
நந்தினியோ தொடர்ந்து சொன்னாள்.
அழுகை தொண்டையை அடைத்ததால் திக்கித் திணறிய குரலில், “அ.. அப்படியானால் என் வா.. வாரிசை.. அழித்தவனின் வாரிசு வாழ்… வதையும்.. என் வம்சம் அழிந்து, அவன் வம்சம் இன்னமும் தொடர்வதையும் நீரும் ஏற்கிறீரா? என் மேல் நீங்கள் கொண்டிருக்கும் காதல்ப்பற்றை விட காவல்ப்பற்று சிறந்ததாகி விட்டதாஆஆ?”என்று அவள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நிலைகுலைந்தான் அவன்.
ஆனால் தேவதா தன் தீர்மானத்தில் இருந்து ஒருசிறிதும் தளராமல் உறுதியுடனே நின்றான்.
பரம்பரை பரம்பரையாக இராஜசிங்கர்கள் போட்ட சோற்றை உண்டு, அவர்களுக்கே சேவை செய்யவென உதித்த வம்சம் அல்லவா அவனுடையது??
அவனும் சத்யாதித்தனுக்கு தீங்கு செய்வது.. தன் ஆருயிர் மனைவியே ஆனாலும் கூட.. அப்படியே விடுவானா என்ன??
கணவனே தனக்கு எதிராளியாகிப் போனதில் கண்களில் உடைப்பெடுத்த அழுகையுடன், அந்த நிலவறையில் திறந்து வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்கள் அடங்கிய பலநூற்றுக்கணக்கான பெட்டகங்களை கைகளால் சுட்டிக் காட்டினாள் நந்தினி.
அத்தனையிலும் தங்கமும், வைரமும், இரத்தனிக் கற்களும் பளபளத்துக் கொண்டிருந்த தினுசில்.. ஒரு பக்க நிலவறை முழுவதும் சொர்க்காபுரி போல விகசித்துக் காட்சியளிக்கலானது.
அத்தனையையும் வேண்டா வெறுப்புடன் சுட்டுக் காட்டியவள், “ இதோ.. இதோஓஓ.. ந்நீர் சொன்ன புதைந்து கிடக்கும் பொக்கிஷம்!!.. இது வெளிப்பட்டதும் நல்லது நடக்கும் என்றே நீர் கருதுகிறீராஆஆஆ? இல்லை.. சர்வநிச்சயமாக இல்லைய்ய்.. அற்ப உலகியல் செல்வங்களுக்காக அடித்துக் கொள்ளும் மானிட ஜந்துக்கள் இதற்காக பல கபடநாடகங்கள் ஆடும்… சமர் புரியும்.. இதற்காக பல மனிதத் தலைகள் வ்வீழும்.. பல இரத்தத் துளிகள் இம்மண்ணில் சிந்தப்படும்!! இதற்காக.. இந்த அற்ப செல்வங்களுக்காக.. என் உயரிய சபதத்துக்கு குறுக்கே நீரே நிற்பதாஆஆ..?” என்று சொல்ல, இதுவரை அமைதியாக இருந்த தேவதா வாய் திறந்தான்.
அவள் அழுகையைத் தேற்ற வேண்டும் என்று பரபரத்த கைகளை அடக்கிக் கொண்டவன்,
மிகமிக உறுதியான குரலில், “ந்நானும், என் வ்வம்சமும் பிறந்ததும், இறந்ததும் இராஜசிங்கர்களுக்காகத் தான்.. என் வாரிசு.. இருந்திருந்தாலும் கூட அந்தக் கடமையையே தான் செய்திருக்கும் என்பதை ஏன் உணர மறுக்கிறாய் நந்தினி?? .. உன் சபதத்தை விட்டு விட்டு… என்னோடு வந்து விடு..”என்று தன் அதிரடியை விட்டு விட்டு.. இறுதியாக அன்புடன் கெஞ்சிப் பார்த்தான் அவன்.
வாளுக்கு பணிந்திராத பல மனங்களும், அன்புக்கல்லவா பணிந்து போகும்? அதனால் அன்பு என்னும் அஸ்த்திரத்தையே கையாண்டான் தேவதா.
ஒன்றல்ல இரண்டல்ல.. இருநூறு வருஷங்கள்!! இருநூறு வருஷங்களுக்கு மேலாக பழிவெறியில் ஊறி திளைத்துப் போனவளா அதை கேட்பாள்?
தெளிவான குரலில் திட்டவட்டமாக குரலில், அந்த நிலவறை முழுதும் எதிரொலிக்க அலறி மறுத்தவளாக, , “ம்முடியாதூஊஊ.. உமக்காக வாழ்ந்து இறந்த… நான் இருக்க என்னை விட.. என் காதலை விட.. காவல் பற்று முக்கியமாகப் போய் விட்டதல்லவா உமக்கு?”என்று கண்ணீரோடு கேட்டாள் அவள்?
தன் கண்ணீரைக் கண்ட பின்னும்.. கணவன் மனம் இளக மாட்டானா? என்று அவள் வடித்த நீலிக் கண்ணீர் அது.
மனைவியை நன்கு அறிந்து வைத்திருப்பவனுக்கு, அவளது மயக்கும் மாயக்கண்ணீரை அளவிடுவதா கடினம்?
அவன் சரியாகவே அனுமானித்துக் கொண்டான். அதில் சீற்றம் பிறக்க, எச்சரிக்கும் தொனியில்,
“அப்படியானால்.. என் மறுமுகத்தை நீஈஈ பார்க்க வ்வேண்டியிருக்கும்!! .. உனக்கு மட்டும் இனிய ராட்சசனாக காட்சி தந்த நான்.. ஊரே கிடுகிடுங்கச் செய்யும் மக்கள் கண்ட கொடூர ராட்சசனாக மாற வேண்டியிருக்கும்!!! என் இன்னொரு முகத்தைப் பார்ப்பாஆஆய் நந்தினீஈஈ..” என்று அச்சுறுத்தவே செய்தான் அவன்.
அந்த அச்சுறுத்தல் தொனிக்கு ஊர் நடுங்கலாம். அவனின் மனைவியாகிய நந்தினியா நடுங்குவாள்?
இறுமாப்புடன் கணவனை ஏறிட்டுப் பார்த்தவள், “பார்க்கிறேன் காதல்ப்பற்றா??.. காவல்ப்பற்றா.??. எது ஜெயிக்கிறது என்று???” என்று விழிகளாலே சவால் இட்டவள்,
சட்டெனத் திரும்பி.. இத்தனைக்கும் சாட்சியாக நிற்கும் காளிமாதாவையும் பார்த்தாள்.
வத்ரகாளியை மனமார எண்ணிக் கொண்டவள், காளியின் கொலைவெறி கமழும் விழிகளையே இமைக்காமல் பார்த்தவளாக, “எனக்கு காளி துணை நிற்பாள்!!” என்று கணவனுக்கே சவால் விட்டாள் அவள்.
மனைவி தன் பார்வை பதித்த.. அதே காளிச்சிலையின் மீது தன் பார்வையையும் பதித்தவனுக்கு, காளியின் ரௌத்திரத் தோற்றத்தில் ஓர் நமுட்டுச் சிரிப்பு வெளிவந்தது அவனிடமிருந்து.
எத்தனை காலம் தான் காளியும் சீற்றத்துடனேயே நிற்கக் கூடும்? அந்தக் காளிக்குள் ஒளிந்திருக்கும் சாந்தமான.. அன்பே உருவான பார்வதி தான்.. அவளின் உண்மை வடிவம் அல்லவா?
முற்றும் உணர்ந்த சிவனின் அம்சமான தேவதாவுக்கு.. அந்த மிகப்பெரும் இரகசியம் புரிய.. வெளிப்பட்டது தான் இந்த நமுட்டுச்சிரிப்பு.
கண்களில் காதல் சொட்டச் சொட்டப் பார்த்தவன், உணர்ச்சி மறுக்கப்பட்ட குரலில், “காலம் கடந்து வருந்துவாய் நந்தினி.. ‘என் தேவதா வந்த வேளை.. அவனோடு இரண்டறக் கலக்கும் பாக்கியத்தை இழந்தோமே.. அந்தோ கைசேதமே!’என்றழுவாய் நந்தினி.”என்று சொன்னான் அவன்.
அதைக்கேட்டதும், ‘அப்படியும் நடந்து விடுமோ?’ என்று அவளையும் மீறி.. ஒரு மனக்கவலை.. அவளுள் தோன்றி மறைந்தது எல்லாம் சொற்ப நாழிகைக்குத் தான்.
அதன் பின் அவள் முகம் அப்படியே விகாரமாக மாறிப் போயிற்று.
சீறிப்பாயும் குரலில், கண்களை அகல விரித்து, தொண்டைக்குழி தாறுமாறாக ஏறி இறங்க, “ஒருநாளும் நடக்காதூஊ!!! .. என் சபதம் நிறைவ்வேஏறும்!!.. சத்யாதித்தனின் இரத்தத்தை காளிக்கு ப்பழியாக்குவேன்.. இது என் காளிமாதா மீது சத்தியம்!!!..”என்று அவள் சொல்ல, அதன் பின் ஏதுமே பேசவில்லை அவன்.
அவன் பார்வை.. காதலோடு அவளை ஊடுருவிப் பார்த்தது. அதே சமயம் அது சீற்றத்தையும் கக்கிக் கொண்டிருந்தது.
அந்தப் பார்வை.. அவனது உயிர் கரைக்கும் காதல் பார்வை சகிதம் கோபப் பார்வை, ‘நடப்பதை மட்டும் பார்’என்று சொல்லாமல் சொல்வது போல இருக்க, எதுவும் பேசாமல்.. அவளைப் பார்த்துக் கொண்டே.. தன் வெண்புரவியோடு அங்கிருந்து மறைந்து போனான் தேவதா.
தேவதா வருவான்.
please next episode
Semma super sis
Super🔥🔥🔥
Wowww🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
YyBexHAIrQVSjZT
tpXydAfmNjF
Pls upload the next episode
Very interesting sis