ATM Tamil Romantic Novels

ஆடி அசைந்து வரும் தென்றல் – 3

3 -ஆடி அசைந்து வரும் தென்றல் 



                   தனது ப்ளாட்டிற்கு செல்லப் பிடிக்காமல் வீட்டிற்கு சென்றான்.இவன் போன நேரம் சிதம்பரமும் கங்காவும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். கங்கா தான் இவனை முதலில் கவனித்தார்.

தனது தட்டில்இருந்த மட்டன் பிரியாணியை படுமும்மரமாக சாப்பிட்டு கொண்டு இருந்த சிதம்பரத்திடம்…

 

“ஏங்க மழை வருதானு பாருங்க..” என்றார் கங்கா.

 

அப்போதும் மகனை கவனிக்கவில்லை சிதம்பரம்.

 

“ஏன் கங்கா வெளியே துணி காயப் போட்டு இருக்கறியா..வள்ளிய விட்டு எடுக்க சொல்லு..”

 

“ம்ம்ம.. நீங்க மழைல கரைஞ்சிடுவிங்களானு செக் பண்ணனும்”என்றார் கடுப்புடன்..

 

“என்னது..” கங்காவை பார்க்க…

 

கங்கா இவரை கண்டு கொள்ளாமல் “அனிவர்த்… இன்னைக்கு சன்டே மறந்துட்டு வீட்டுக்கு வந்துட்டியா.. அச்சச்சோ..” என நக்கலாக கேட்க…

 

அனிவர்த்  கடுப்பாகி தனது அம்மாவை பார்த்து முறைத்தவாறு.. 

 

“தெரிஞ்சு தான் வந்துருக்கேன்… ஏன் இந்த வீட்டுக்கு நினைச்ச நேரம் வர எனக்கு உரிமையில்லயா…”

 

“அப்போ உன்னோட உருப்படாத பழக்கவழக்கத்தை எல்லாம் விட்டு ஒழிச்சிட்டியா.. அப்ப பொண்ணு பார்க்கவா..” என்றார்.

 

கங்காவிற்கு தெரியும் தன் மகன் பிடிவாதக்கரன். அப்படி எல்லாம் உடனே மாறி விடமாட்டான்என…

 

“எப்ப பாரு இதே பேச்சு தானா… எனக்கு மேரேஜ் பண்ணி வச்சு ஒருத்தி வந்து என் தலைல ஏறி உட்கார்ந்து என்னை ஆட்டி படைக்கனும்… அத பார்த்து ரசிக்கனும் உங்களுக்கு அதானே..”

 

“ஆமாம்டா மகனே… வர வர லைப் திங்க தூங்கனு ரொம்ப போரிங்கா போகுது.. உங்கப்பாவும் என் கூட சண்ட போடமாட்டேங்கறாரு.. நான் எது பேசினாலும் வாயை கப்னு மூடிக்கிறாரு.. இப்ப நீ கல்யாணம் பண்ணிகிட்டேனு  வை..பகல்ல உன் பொண்டாட்டி கூட சண்ட போடுவேன். அப்படியே ஜாலியா பொழுது போயிடும். இராத்திரி நீ வந்ததும் உன் பொண்டாட்டி என்னை பத்தி புகார் வாசிப்பா.. நானும் என் மருமகளும் உனக்கு நாட்டாமை பதவி எல்லாம் கொடுப்போம். நீயும் பஞ்சாயத்து பேச.. அப்படியே நைட் சாப்பாட்டு நேரம் வந்திடும். சாப்பிட்டு நிம்மதியா தூங்கிடுவேன்..” என கங்கா சிரிக்காமல் பேச…

 

சிதம்பரத்தால் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினார். ஏற்கனவே கங்காவின் பேச்சால் அனிவர்த் கடுங்கோபத்தில் இருக்க.. தானும் சிரித்தால் சிவபெருமானைப் போல நெற்றிகண்ணை திறந்து பஸ்பமாக்கிடுவான் என உதடுகளை மடித்து சிரிப்பை அடக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டார்.

 

“உங்களுக்கு பொழுது போக… எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு…  என்னை நிம்மதி இல்லாம பண்ணனும்  அப்படி தான..” என்று கத்த…

 

“அது அப்படி இல்லடா மகனே..”

 

“கங்கா..போதும் அவன் சாப்பிட்டானா என்னனு தெரியல..அதப்பாரு முதல்ல..” சிதம்பரம் அப்போதைக்கு மகனையும் மனைவியையும் விலக்கிவிட்டார்.அப்போதைக்கு அமைதியாகிவிட்டார் கங்கா. ஆனால் அதற்காக எப்போதும் அமைதியாகவா இருப்பார். தனக்கு ஒரு மருமகளை கொண்டு வராமல் ஓய்வதில்லை என உறுதியாக இருந்தார்.

 

ஒரு வாரம் பிரச்சனை இல்லாமல் சென்றது. மகனை ரொம்ப படுத்த வேண்டாம் ஒரு வாரம் கேப் விட்டு செய்யலாம் என விட்டுவிட்டார். 

 

அடுத்த வாரத்தின் மத்தியில் ஒரு நாள் கங்கா அனிவர்த்கு போன் பண்ணி மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார் ஒரு ஹோட்டல் பெயர் சொல்லி அங்கு வந்திருப்பதாகவும் உடனே கிளம்பி வா.. என சொன்னார்.

 

அனிவர்த் தனது தொழில் துறை மீட்டிங் ஒன்றிற்காக அசோக் கூட காரில் சென்று கொண்டு இருந்தான். அப்போது அனிவர்த் போன்அடிக்க.. பாக்கெட்டில் இருந்து எடுத்தவன் தனது தாய் தான் என தெரிந்ததும் சைலண்ட் மோடில் வைத்துவிட்டான்

 

அனிவர்த்கு கங்கா எதற்கு அழைக்கிறார்  என தெரியும். காலையில அனிவர்த் அலுவலத்துக்கு செல்லும் முன் சாப்பிட வந்தவனிடம் …

 

“அனிவர்த்…. சாயங்காலம்  நாம ஒரு இடத்துக்குபோகனும்… சீக்கிரம் வந்துடு…”என இட்லியை தட்டில் வைத்துசாம்பார் ஊற்றிக் கொண்டே கூறினார்.

 

உடனே உஷாராகிய அனிவர்த்”எதுக்கு.. எனக்கு ஈவ்னிங் ஒரு மீட்டீங் இருக்கு…”

 

“எந்த மீட்டிங்கா இருந்தாலும் கேன்சல் பண்ணிடு.. உன்னை மாப்பிள்ள.. பார்கக வராங்க..”

 

“என்னது மாப்பிள்ள பார்க்க வராங்களா.. எல்லாம் பொண்ணு தான பார்ப்பாங்க…”

 

“நீ ஒரு பொண்ணப் பார்த்து ஓகே சொல்லி.. கல்யாணம் பண்ண முடியுமானு..எனக்கு தெரியல… அதான் பொண்ணு ஓகே சொன்னா கல்யாணம் தான்..” கங்கா சொல்ல.. சொல்ல..அனிவர்த்கு கோபம் ஏறிக் கொண்டே போனது.

 

“என் பெர்மிஷன் இல்லாம மேரேஜ் எப்படி பண்ணுவிங்க.. நான் தான் வேணாம்னு சொல்றேன்ல.. புரிஞ்சுக்கவே மாட்டிங்களா..

எப்ப பாரு கல்யாணம்..கல்யாணம் இதை தவிர வேற பேசமாட்டிங்களா..இட்லிய தட்டுல போட்டுட்டு இடியை தலைல போடறிங்க..”

 

“இனி இட்லிக்கு பதிலா இடியாப்பம் போடறேன்..”

 

“என்னது..” என ஒரு நிமிடம் புரியாமல் விழித்தான்.

 

“இட்லிய தட்டுல போட்டு இடியை தலைல போடறே..ஏ..ஏ.. னு சொன்னில்ல..ல..ல.” என இழுக்க..



“அதுக்கு..” என்றான் இன்னும் புரியாமல்..

 

“இல்ல.. இனி இட்லிக்கு பதிலா.. இடியாப்பம் போடறேன்.. இட்லி மாதிரி இல்லாம இடியாப்பம் சாப்ட்டா இருக்கும்..”

 

“ச்சே.. உங்ககிட்ட மனுசன் பேசுவானா..”என கோபமாக கத்தி விட்டு சாப்பிடாமல் கிளம்பி சென்றுவிட்டான்.

 

அதை கண்டு கொள்ளாத கங்கா தட்டில் அரை டஜன் இட்லிகளை வைத்து சாப்பிட ஆரம்பித்தவர் சிதம்ரம் சாப்பிடாமல் தன்னையே பார்ப்பதை பார்த்தவர்….

 

“என்னை பார்க்காம நல்லா தட்டு நிறையா வச்சு சாப்பிடுங்க.. இந்த வீட்டுக்கு மருமக வரனும்னா இவன்கிட்ட காவடி எடுத்து நடையா நடக்கனும்.. அதுக்கு தெம்பு வேணாம்.. ம்.. நல்லா சாப்பிடுங்க..”

 

“ஏன் கங்கா கொஞ்சம் விட்டு புடிக்காலாம்ல..”

 

“ரொம்ப விட்டாச்சுங்க… அதான் புடிக்க முடியாத தூரத்துக்கு போயிட்டான். இனிமே விட்டா நமக்கு அப்புறம் அவனுக்கு குடும்பம்னு ஒன்னு இருக்கவே இருக்காது.. நான் கண்ணை மூடறதுக்குள்ள அவன் குடும்பமா வாழறத  பார்த்துடனும்..” என்ற கங்கா கண்களில் சிறு துளி கண்ணீர்…

 

“கங்கா அழுகறாளா.. என் கங்காவுக்கு அழுக கூட தெரியுமா..” கங்காவின் மனதை மாற்றும் விதமாக சிதம்பரம் சிறு கிண்டலுடன் பேச…

 

“அதானே கங்கா.. நீ இதுக்கே அழுகளாமா..இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கு.. செய்ய வேண்டி இருக்கு..” தன்னை தானே தேற்றிக் கொள்ள…

 

பார்த்து இருந்த சிதம்பரம்  கங்காவின் கையை ஆறுதலாக பிடித்து “சாப்பிடு..” என்றார்.கணவரின் ஆறுதலில் இன்னும் கொஞ்சம் திடமாக உணர்ந்தார்.

 

மீண்டும்.. மீண்டும் கங்கா அழைக்க.. ஒரு கட்டத்தில் வழக்கம்போல் சுவிட்ச்ஆப் பண்ணிவிட்டான். உடனே அசோக் போனையும் அணைத்து வைக்க சொல்லிவிட்டான்.

 

இரண்டு மணிநேரம் கழித்து மீட்டிங் முடிந்து கார் பார்க்கிங் வந்தான். இவனின் கார் அருகில் கங்கா நின்று கொண்டு இருந்தார்.

 

அனிவர்த் அம்மாவை பார்த்தவன் இவங்க எங்க இங்க..என பார்த்தவன்.. திரும்பி அசோக்கை பார்த்து முறைத்தான்.

 

“நோ பாஸ்.. அம்மா தான்..”

 

தனது அம்மாவை பார்ததவன் “ இங்க எதுக்கு வந்திங்க..”

 

“நீ வரல.. அதான் நான் வந்துட்டேன்..”

 

சற்று தள்ளி நின்று இருந்தவர்களை “இங்க வாங்க” என கூப்பிட்டார் கங்கா..

 

 ஒரு இளம்பெண் அந்த பெண்ணின் பெற்றோர் வந்தனர். அவர்களிடம் கங்கா..

 

“இது தான் என் மகன்.. நல்லா பார்த்துக்குங்க..”

 

அந்த பெண்ணோ அனிவர்த்தை விடாமல் பார்த்தது மேலிருந்து கீழாக… அந்த பார்வையில் அனிவர்த்கு தான் கூச்சமாகி போனது. அந்த பெண் ரொம்பவே சுமாரான ரகம். 

 

ஐயோ இது தான் பொண்ணா.. எங்க பாஸ் அழகென்ன.. அறிவென்ன..  அவர் கூட வீக் என்ட்ல பார்ட்டி பண்ண வரவளுகங்க கூட மாடல் ரேஞ்சுக்கு இருப்பாளுக..இந்த கங்காம்மாவுக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ..  என அசோக்கின் மைண்ட் வாய்ஸ்..

 

அசோக் நினைப்பது போல தான் அனிவர்த் நல்ல கலராக… அடர்த்தியான அலை அலையாக அவனை போலவே அடங்காமல சிலிர்த்து கிட்டு நிற்கும் கேசம்… பட்டை மீசை.. தினமும உடற்பயற்சி செய்வதால் உறுதியான பரந்த தோள்களை கொண்ட ஆறடி உயர தேகம்… பார்த்தவுடன் யாரையும் ஈர்க்கும் வசீகரமான முகம்.. அதுவும் ஜெர்மன வாசம் அவனை இன்னும் வசீகரனாக்கி இருந்தது.

 

கங்கா “ பார்த்துட்டிங்கல்ல்.. ஏம்மா உனக்கு என் பையனை பிடிச்சருக்குல்ல…” என கேட்க..

 

அந்த பொண்ணு எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தது. 

 

“சரி வாங்க..” என தான் வந்த காரிலேயே அவர்களை கூட்டி கொண்டு சென்றுவிட்டார்.

 

கங்காவின் செயலை அனிவர்த்தால் ஜீரணிக்க முடியவில்லை. அசோக்கோ என்னடா நடக்குது என முழித்தான். வந்தாங்க.. பார்த்தாங்க.. போயிட்டாங்க..  அந்த பொண்ணு இருக்கற லட்சணத்துக்கு பாஸை பார்த்து போனா போகுது கட்டிங்கற மாதரி மண்டைய ஆட்டுது.. பாஸ்க்கு சம்மதமானு கேட்கல.. போயிட்டாங்க..  கேட்டாலும் இவரு சம்மதிக்க போவதில்லை.. அதான் அதிரடியாக கங்காம்மா களத்துல இறங்கிட்டாங்க போல.. என நினைத்தவாறே நின்று கொண்டு இருந்தவனை அனிவர்த்தின் கார் ஹாரன் சத்தம் கலைக்க..

 

“இப்ப காருல ஏறியா.. இல்ல உன் டீரிம் எல்லாம் முடிச்சிட்டு கேப்ல வந்துடு..” என அனிவர்த்தின் மிரட்டலில்… அடித்து பிடித்து ஏறினான். அசோக் ஏறியதும் கார் தாறுமாறாக பறந்தது. அன்னை மேல் இருக்கம் கோபத்தை எல்லாம் காரை ஓட்டுவதில் காண்பித்தான்.

 

அனிவர்த் வீடு வந்தவன்  ஒன்றும் தெரியாத சாது போல அமைதியாக உட்கார்ந்து இருந்த கங்காவை  பார்த்ததும் தன் கைகளில் இருந்த கார்கீ மொபைல் இரண்டையும் விசிறி அடித்தான். மொபைல் தரையில் சிதறி விழுந்தது.

 

அவனின் கோபம் கண்டு சிதம்பரம் தான்  பதறினார். கங்காவோ அமைதியாக “ வாங்க வந்து படுங்க.. இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.. நாளைக்கே போய் பாலப்பட்டி ஜோசியர பார்த்து நாள் குறிச்சிட்டு வரனும்..” என சிதம்பரத்தை கூப்பிட..

 

சிதம்பரமோ மகனையும் மனைவியையும் பார்த்துக் கொண்டே நின்றார்.

 

“மாம்.. என்னை கட்டாயப்படுத்தி எல்லாம் மேரேஜ் பண்ணி வைக்க முடியாது..”

 

“கண்டிப்பா உன் கல்யாணம் ஜோசியர் சொல்லற தேதில நடக்கும்.. நடத்தி காட்டுவேன்”

 

“நான் இருந்தா தான கல்யாணம் பண்ணுவிங்க.. நீங்க இத ஸ்டாப் பண்ணல நான் வீட்டுக்கே வரமாட்டேன்..”

 

அவன் பேசும் வரை அமைதியாக இருந்த கங்கா எதுவும் சொல்லாமல் தங்கள் அறைக்கு சென்றுவிட…தன் பேச்சில் பயந்து போய்விட்டார் கங்கா.. இத்தோடு கல்யாண பேச்சை விட்டுவிடுவார் என நினைத்தான். அப்படி எல்லாம் விட முடியாது என காலையிலேயே  நிருபித்தார் கங்கா

 

காலையில் அனிவர்த் தனது ஜிம்மில் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவன்…

 

“மாம் காபி..”

 

பேப்பர் படித்துக் கொண்டு இருந்தவனிடம்.. “தம்பி காபி “ என வள்ளி நீட்ட..

 

“அம்மா.. எங்க க்கா..” என கேட்டுக் கொண்டே வாங்கியவன்…

 

“அம்மாவும் அப்பாவும் பாலப்பட்டி ஜோசியர பார்க்கப் போயிருக்காங்க தம்பி..” சொல்லி விட்டு அவர் சென்று விட..

 

காபியை குடிக்காமல் வைத்து விட்டு தனது அறைக்கு சென்று குளித்து கிளம்பி சாப்பிடாமலேயே ஆபீஸ்கு கிளம்பிவிட்டான்.

 

அன்று சென்றவன் தான் இரண்டு நாட்களாகியும் வீட்டிற்கு வரவில்லை. ஜோசியரை பார்த்து விட்டு  மாலை தான் வந்தனர். வந்ததும் வள்ளி மூலம் அனிவர்த் சாப்பிடாமல் சென்றதை அறிந்தவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை அப்போது.. ஆனால் இரண்டு நாட்களாகியும் வீடு வராமல் போகவும் மெல்ல கவலை எட்டிப் பார்த்தது.

 

1 thought on “ஆடி அசைந்து வரும் தென்றல் – 3”

  1. அடுத்த எபி எப்ப போடுவீங்க சீக்கிரம் போடுங்க 🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top